Nov 1, 2008

காக்டெயில்


    சென்ற வாரம் நம்பிக்கை என ஒருப் புனைவு எழுத முற்பட்டேன். தனி ஈழம் உருவாகும் என நம்பிக்கை ஏற்படும் வகையில் அதை எழுத நினைத்து டிராஃப்ட் தயாரித்து வைத்திருந்தேன். அன்று மெட்ராஸ் ஐ போல என் கண்கள் சிவந்து விட்டதால் நண்பன் ஒருவனை வேறு ஒருப் பதிவை பதிவேற்ற சொன்னேன். அவன் இதை பதிவேற்றிவிட்டான்.‍ நானே பின்னூட்டத்தில் இதை இன்னும் மெருகேற்ற வேண்டுமென சொல்ல, தொடர்ந்து பல நண்பர்கள் அழுத்தியும், அதட்டியும் அதையேச் சொன்னார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"

*************************************************

   நடிகர்கள் உண்ணாவிரதம் நல்லபடியாய் முடிந்தது. எதற்காக இருந்தோம் எனத் தெரியாமலே அஜித்தும் சாப்பிடாமல் இருந்து தன் முறை வரும்போது விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். ஈழத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இறுதியாக தேசியகீதம் வாசிக்கப்பட்டபோது ஆளுக்கொரு திசையில் வசதிக்கேற்ப நின்றனர். பத்திரிக்கையாளர்களுக்கு இதிலும் சிறப்பு சலுகைப் போல. அவர்கள் அப்போதும் படமெடுக்கும் பணியைத் தொடரலாம். அப்போதுதானே தேசியகீதத்தை அவமதித்த முன்னனி நடிகரென கிசுகிசு எழுத முடியும்.

*************************************************

   கடந்த மாதம் எனக்கு நல்லபடியாய் போனது. 22,000 ஹிட்ஸ் என்பது மட்டுமல்ல காரணம். 2 மீள்பதிவைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் எழுதியுள்ளேன். அதிலும் தாமிராவின் கட்டளைக்கேற்ப மொக்கைகள் குறைக்கப்பட்டன.வெண்பூ போல பலர் உரிமையுடன் குறைகளை சொல்லி வருகின்றனர். வீக் எண்ட் காதல் பதிவு வரவில்லையெனில் ராப் எங்கே எனக் கேட்கிறார். அனைத்துப் ப‌திவிற்கும் த‌வ‌றாம‌ல் வ‌ந்து க‌ருத்துச் சொல்லும் த‌ல‌ ந‌ர்சிம்.இன்னும் நிறைய‌ ந‌ண்ப‌ர்க‌ள். ஒரு அங்கீகாரம் கிடைத்ததுப் போல் உணர்கிறேன். புதுகை. அப்துல்லா என்ற மாமனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வயதில் மட்டுமல்ல உருவத்திலும் அவர என்னை விட பெரியவர் என்றபோதும் உரிமையுடன் அணைத்து பேசிய விதம் வெகுவாய் கவர்ந்தது. இவரைவிட பெரியவரான தாமிரவை எப்படி சொல்லலாம். மாமாமனிதர் என்றால் தவறாகி விடுமோ? விடுங்க சகான்னே சொல்லிக்கலாம்.

*************************************************

  வலைச்சரத்தில் அப்துல்லா அண்ணே எழுதிய இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் உடனே படிக்கவும். நானும் என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் இதைப் ப‌ற்றி பேசினேன். எப்ப‌டியாவ‌து ஒரு த‌ட‌வையாவ‌து எழுத‌னும். சொந்த‌மா எழுத‌ற‌துதான் உருப்ப‌டியாய் இல்லை. இதையாவ‌து உருப்ப‌டியாய் எழுதுவோம். தொட‌ங்கி வ‌ச்ச‌ எஸ்.கேக்கும் ப‌திவாய் போட்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

*************************************************

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

  என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ண‌னின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?

38 கருத்துக்குத்து:

Anonymous said...

இந்த முறை கிக் கம்மி

Anonymous said...

// நடிகர்கள் உண்ணாவிரதம் நல்லபடியாய் முடிந்தது. எதற்காக இருந்தோம் எனத் தெரியாமலே அஜித்தும் சாப்பிடாமல் இருந்து தன் முறை வரும்போது விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். //

"நம்ம பக்கத்திலே தொட்டுவிடும் தூரத்தில் நடக்கிற ஈழத் தமிழர் படுகொலைகளைப் பற்றி என்ன நினைக்-கிறீங்க? தமிழனா, தமிழ் நடிகனா, உங்க உணர்வு என்ன?"

"நிச்சயம் சொல்லியாகணும். அங்குள்ள தமிழ் மக்களின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். 'ஏகன்' தயாரிப்பாளர்கூட இலங்கையைச் சேர்ந்த--வர்தான். அவரோட சோகங்கள், அடி-பட்டு மேலே வந்த விதம் பற்றியெல்லாம் அவர் சொன்ன விஷயங்கள் என்னை உலுக்-கிப்-போட்-ருச்சு. மத்த விஷயங்களை விடுங்க... குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்னு அப்பாவிகளோட உயிர்கள் போறதை நினைச்சா தூக்கம் வர மாட்டேங்குது. ஈழத் தமிழ் மக்க-ளோடு துயரங்-களைப் பகிர்ந்துகொள்-கிறேன். இந்த பிரச்னை-களைக் கையாள்வதற்கு நம்மை-விட கைதேர்ந்த, அனுபவமுள்ள தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை நல்லபடியாகப் பார்த்துக்-கொள்வார்கள் என்கிற நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்!"

- அஜீத் (விகடனில்.)

Anonymous said...

"அவங்களுக்காக நான் ஏங்க உண்ணாவிரதம் இருக்கனும்"?

நக்கிரனில் அஜித்

நானும் ஒருவன் on November 1, 2008 at 6:17 PM said...

'இந்த முறை கிக் கம்மி'

ரிப்பீட்டெய்ய்ய்

நானும் ஒருவன் on November 1, 2008 at 6:18 PM said...

"இதை எல்லாம் பார்க்கும் போது "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"'

அவங்கத் தெளிவுதான்டி.. நீதான் நம்பினிருக்கிற‌

நானும் ஒருவன் on November 1, 2008 at 6:20 PM said...

"தாமிராவின் கட்டளைக்கேற்ப மொக்கைகள் குறைக்கப்பட்டன."

கடும் கண்டங்கள் தாமிரா..

இப்படிக்கு,

மொக்கைசாமிகள் சங்கம்.

Anonymous said...

நானும் ஒருவன் said...

'இந்த முறை கிக் கம்மி'

ரிப்பீட்டெய்ய்ய


தலைவரை விமர்சிக்கும் யாருக்கும் இங்கே இட‌மில்லை.


இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவ‌ன‌ம்

Anonymous said...

:)

கார்க்கி on November 1, 2008 at 7:02 PM said...

//Anonymous said...
இந்த முறை கிக் கம்//

உண்மைதான்..

//நானும் ஒருவன் said...
"இதை எல்லாம் பார்க்கும் போது "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"'

அவங்கத் தெளிவுதான்டி.. நீதான் நம்பினிருக்கிற‌
November 1, 2008 6:18 ப்ம்//

அப்படியா??????

கார்க்கி on November 1, 2008 at 7:04 PM said...

//thooya said...
:)//

வாங்க தூயா

Anonymous said...

//"அவங்களுக்காக நான் ஏங்க உண்ணாவிரதம் இருக்கனும்"?

நக்கிரனில் அஜித்//

நடிகர் விஜய் தற்கொலை முயற்சி. திருமணம் செய்ய இருந்த பெண் நிராகரித்ததால் விஷம் குடித்தார்

- நக்கீரன் (விஜய் திருமணத்திற்கு முன்பு)

நாளை நக்கீரன் தமிழர் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தில் இணைந்தார் என்று கூறினாலும் நம்புவீர்களா ? யோசிக்க மாட்டீர்கள் ?

Anonymous said...

http://in.youtube.com/watch?v=LQKbMWuAxTw

ராதாரவி கூறுகிறார்.
இதற்கு அப்புறம் நக்கீரனை நீங்கள் நம்பினால் எனக்கு சந்தோசம் தான். உரக்கப் பேசி உணர்ச்சியை வெளிப்படுத்துவது மட்டும் ஆதரவன்று. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இல்லை என்று கூறி, கருத்துக்கணிப்புகளைப் பார்த்து வெட்கித்தலைகுனிபவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை.

Anonymous said...

அஜீத்தைப் பற்றி எழுதிய பத்திரிக்கைக்கு உடனே நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த உண்ணாவிரத்தில் முழுமையாக பங்குகொள்வேன் என்று கூறிய முதல் நடிகர் அர்ஜூன். அதேபோல் இந்த அஜீத் இருக்கும் நிலையிலே அவர் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, எந்த காரணத்திலும் நான் உண்ணாவிரத்திற்கு வராமல் இருக்க மாட்டேன் என்று கூறியவர் அஜீத் .

அதற்கும் பிறகு இந்த செய்தியை போடுகிறார்கள் அந்த பத்திரிக்கை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எங்களுக்கு உணர்விருக்கிறது.

விலெகா on November 1, 2008 at 7:49 PM said...

என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ண‌னின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?
யார்? யார்? யார்?

தமிழ்ப்பறவை on November 1, 2008 at 8:35 PM said...

மொக்கையைக் குறைக்கச் சொன்னவருகிட்டேயே 'மாமாமனிதர்'ன்னு மொக்கையை ஆரம்பிச்சுருக்கியே கார்க்கி...

தாமிரா on November 1, 2008 at 9:14 PM said...

இவரைவிட பெரியவரான தாமிரவை எப்படி சொல்லலாம். மாமாமனிதர் என்றால் தவறாகி விடுமோ? // அப்துலை விட எந்த விதத்திலும் நான் பெரியவனில்லை என்றுதான் நினைக்கிறேன். வயது (நிஜமாப்பா. என்னை விட 1 மாசம் 13 நாள் மூத்தவரு அவரு), உருவம், தங்கமான மனசு, என அனைத்திலும் அவரே உயர்ந்தவர்.

தாமிரா on November 1, 2008 at 9:15 PM said...

சந்தேகப்பகுதி : வுட்ருங்கடா சாமீ...

கார்க்கி on November 1, 2008 at 9:42 PM said...

//அதற்கும் பிறகு இந்த செய்தியை போடுகிறார்கள் அந்த பத்திரிக்கை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எங்களுக்கு உணர்விருக்கிறது.//

தல, எதை சொன்னாலும் என் பெயரில் என் பதிவில் போடும் தைரியம் எனக்கு இருக்கிறது.. சொந்தப் பெயரில் கூடப் போட தைரியமில்லாத உங்களுக்கு தல ரசிகன் என்ற உணர்வைத் தவிர வேற எந்த மயிறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ரசிகனாக இருக்கலாம். நானும் தான் ரஜினி ரசிகன். ஆனால் அது திரையில். மற்ற நேரத்தில் அவரது முடிவில் எனக்கு ஆட்சேபனை என்றால் உரக்க சொல்வேன். அதே மாதிரி விஜயின் நடன் எனக்குப் பிடிக்கும் என்பதால் அவரின் ஆதியையும் யையும் பிடிக்கும் என சொல்பவன் நானல்ல. இந்தத் தெளிவு உங்களுக்கு வரும்போது தல ரசிகனாக இருக்க மாட்டீர்கள். அது வரும் வரை தலையைப் போல் இப்படி பேரில்லாமல்தான் இருப்பீர்கள்.

அடுத்த முறை அனானியாக வந்து உங்கள் தலயைக் கேவலப்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்

நண்பன் கார்க்கி.

கார்க்கி on November 1, 2008 at 9:44 PM said...

//விலெகா said...

என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ண‌னின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?
யார்? யார்? யார்?//

நீங்கதான் சொல்லனும்..

கார்க்கி on November 1, 2008 at 9:46 PM said...

// தமிழ்ப்பறவை said...

மொக்கையைக் குறைக்கச் சொன்னவருகிட்டேயே 'மாமாமனிதர்'ன்னு மொக்கையை ஆரம்பிச்சுருக்கியே கார்க்கி...//

ஹிஹிஹி..

//தாமிரா said...

சந்தேகப்பகுதி : வுட்ருங்கடா சாமீ...//

அது எப்படி தல..இதுவே புரியலனா சிக்ஸ் சிக்மா எப்படி புரியும்?

வெண்பூ on November 1, 2008 at 10:49 PM said...

கார்க்கி, காக்டெய்ல் அருமையா இருந்தது.. 22000 ஹிட்டுக்கு வாழ்த்துக்கள்.. அதேமாதிரி தினமும் ஒரு பதிவாவது போடுறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும், அதற்காக ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

ஆமா உங்களுக்கு ஏன் தல மேல இவ்ளோ காண்டு? கலைஞர ஞாநி திட்டுற மாதிரி பதிவுக்கு பதிவு அவர கிண்டலடிச்சி ஒரு ரெண்டு வரியாவது போடுறீங்க? எல்லாரையும் கிண்டலடிங்க.. இல்லைன்னா உங்கமேல ஒரு முத்திரை விழுந்துடும்..

Anonymous said...

முன்னாள் நடிகை ரோஜாவிற்க்கு எய்ட்ச் என்று செய்தி போட்டதும் இதே நக்கீரன் தான். நக்கீரன் அதை போல செய்தி போட்ட்டு கூடவே வெட்ல்டிங் குமார் கூட ரோஜாவை கிசுகிசுத்தது.. செய்தி வந்து பல வரும் ( 15 வருட்ம ) ஆகி விட்டது. ம் நக்கீரன் என்றைக்கு தான் திருந்துமோ

Karthik on November 2, 2008 at 7:46 AM said...

இங்கே கரண்ட் போயிடிச்சு கார்க்கி. எனக்கு என்ன வருத்தம்னா ஜே.கே.ரித்திஷ் பேசறதை பார்க்க முடியலங்கிறதுதான்.
:)

கார்க்கி on November 2, 2008 at 10:04 AM said...

//வெண்பூ said...

கார்க்கி, காக்டெய்ல் அருமையா இருந்தது.. 22000 ஹிட்டுக்கு வாழ்த்துக்கள்.. அதேமாதிரி தினமும் ஒரு பதிவாவது போடுறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும், அதற்காக ஸ்பெஷல் பாராட்டுக்கள்.//

நன்றி சகா..

//ஆமா உங்களுக்கு ஏன் தல மேல இவ்ளோ காண்டு? கலைஞர ஞாநி திட்டுற மாதிரி பதிவுக்கு பதிவு அவர கிண்டலடிச்சி ஒரு ரெண்டு வரியாவது போடுறீங்க? எல்லாரையும் கிண்டலடிங்க.. இல்லைன்னா உங்கமேல ஒரு முத்திரை விழுந்துடும்..//

அடடா... நீங்க சொன்னவுடனேதான் நானே கவணிச்சேன்.. முன்னாடி யெல்லாம் பரிசல்தான் சிக்குவாரு.. அது மட்டுமில்லாமல் குசும்பன்னும் ப்ரிசலும் அப்புறம் ரஜினியுடன் வலைபதிவாளர்கள்னு எல்லோரையும்தான் கலாய்ப்பேன்.. நேரமிஉந்தால் அதைப் படியுங்கள். தாமிராவை சில முறை நேரில் பார்த்ததால் அதிக உரிமை.. விடுங்க அடுத்து வாரம் வண்பூ வாரம்..சரிதானே?

கார்க்கி on November 2, 2008 at 10:06 AM said...

//Karthik said...

இங்கே கரண்ட் போயிடிச்சு கார்க்கி. எனக்கு என்ன வருத்தம்னா ஜே.கே.ரித்திஷ் பேசறதை பார்க்க முடியலங்கிறதுதான்.
:)//

ராப்.. இதோ புது உறுப்பிணர்... என் வேலையை நான் செவ்வனே செய்கிறேன் தலைவி..

கிழஞ்செழியன் on November 3, 2008 at 11:35 AM said...

கார்க்கி,
அது நீங்கதான்.

கார்க்கி on November 3, 2008 at 11:39 AM said...

இந்தாங்க 1000 பாயிண்ட்ஸ்.. எவ்ளோ நேரம் யோசிச்சிங்க சகா? வேற யாரும் முயற்சி கூட செய்யல... சூப்பரப்பு

rapp on November 3, 2008 at 1:53 PM said...

// இந்த வார சந்தேகம்: என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ண‌னின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?
//

இதுக்கு மொதல்ல நீங்க உங்க குடும்ப விவரத்தை தெளிவா சொல்லுங்க. ஒருவேளை உங்களுக்கு இன்னொரு தம்பி இருந்தா, எண்ணப் பண்றதாம்?:):):)

rapp on November 3, 2008 at 1:54 PM said...

//ராப் எங்கே எனக் கேட்கிறார்.//

ஏன்னா அது ஒன்னுத்துக்குத்தான் நான் நிம்மதியா படிக்காமலயே கமென்ட் போடலாம், அதான்:):):)

rapp on November 3, 2008 at 1:58 PM said...

//புதுகை. அப்துல்லா என்ற மாமனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது//

பாத்தவுடனே, உங்கக்கிட்டையும் மகேஷ் சாரை பார்த்ததும் கொடுத்த ஒரு அமானுஷ்ய ரியாக்ஷனான 'ஆஆஆஆ' அப்டின்னு ஒரு ரியாக்ஷனக் கொடுத்தாரா?


//வயதில் மட்டுமல்ல உருவத்திலும் அவர என்னை விட பெரியவர் //

அதான என்னடாது இவர் அண்ணனை மாமனிதர்னு சும்மா சொல்லமாட்டாரேன்னு பார்த்தேன், உடனே அடுத்த வரியில் விளக்கிட்டீங்க:):):)

கார்க்கி on November 3, 2008 at 2:01 PM said...

//இதுக்கு மொதல்ல நீங்க உங்க குடும்ப விவரத்தை தெளிவா சொல்லுங்க. ஒருவேளை உங்களுக்கு இன்னொரு தம்பி இருந்தா, எண்ணப் பண்றதாம்?:):):)//

ரொம்பத் தெளிவுதான் நீங்க.. மீ த லார்ஸ்ட் (how is it)

கார்க்கி on November 3, 2008 at 2:03 PM said...

//ஏன்னா அது ஒன்னுத்துக்குத்தான் நான் நிம்மதியா படிக்காமலயே //

படிக்க மாட்டிங்களா??????

//கமென்ட் போடலாம், அதான்//

கமெண்ட் போட்டா போதும்.. படிச்சா என்ன படிக்கலைனா என்ன... :))))))))))))))

கார்க்கி on November 3, 2008 at 2:04 PM said...

//பாத்தவுடனே, உங்கக்கிட்டையும் மகேஷ் சாரை பார்த்ததும் கொடுத்த ஒரு அமானுஷ்ய ரியாக்ஷனான 'ஆஆஆஆ' அப்டின்னு ஒரு ரியாக்ஷனக் கொடுத்தாரா?//

அண்ணே சொல்லிடவா??????????


//அதான என்னடாது இவர் அண்ணனை மாமனிதர்னு சும்மா சொல்லமாட்டாரேன்னு பார்த்தேன், உடனே அடுத்த வரியில் விளக்கிட்டீங்க:):):)//

அது நம்ம கடமை பாருங்க...

வால்பையன் on November 3, 2008 at 10:15 PM said...

சந்தேகத்த்ற்க்கு பதில்
அது நீங்க தான்.

கார்க்கி on November 3, 2008 at 11:07 PM said...

// வால்பையன் said...
சந்தேகத்த்ற்க்கு பதில்
அது நீங்க தான்.//

ச‌பாஷ்.. ச‌ரியான‌ ப‌தில் ச‌கா..

மங்களூர் சிவா on November 12, 2008 at 9:57 PM said...

//
//தாமிரா said...

சந்தேகப்பகுதி : வுட்ருங்கடா சாமீ...//

அது எப்படி தல..இதுவே புரியலனா சிக்ஸ் சிக்மா எப்படி புரியும்?
//

:)))))))))))
சூப்பரப்பு!!

dharshini on November 12, 2008 at 10:55 PM said...

உங்க பெரியப்பாவோட தம்பி பையன் நீங்க...
"தல" யோட வம்புக்கு நான் வரல.....

கார்க்கி on November 13, 2008 at 9:26 AM said...

//மங்களூர் சிவா said...
//
//தாமிரா said...

சந்தேகப்பகுதி : வுட்ருங்கடா சாமீ...//

அது எப்படி தல..இதுவே புரியலனா சிக்ஸ் சிக்மா எப்படி புரியும்?
//

:)))))))))))
சூப்பரப்பு!//

வாங்க மாப்பிள்ளை. ஆளையே பார்க்க முடியறதில்ல..

/dharshini said...
உங்க பெரியப்பாவோட தம்பி பையன் நீங்க...
"தல" யோட வம்புக்கு நான் வரல..//

நானும் வரலைங்க..

 

all rights reserved to www.karkibava.com