Nov 28, 2008

வ‌லையுல‌க‌ த‌ர்பார் (2)


முத‌ல் ப‌குதி

(மன்னர் மற்றும் குழு வேட்டைக்காக காட்டுக்குள் சென்ற போது அங்கே ஒரு குழுவை பார்க்கிறார்கள்)

மன்னர்: யார் நீங்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன வேலை உங்களுக்கு?

சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.

குசும்பன்: அதற்கேன் காட்டுக்குள் வர வேண்டும்? எனக்கு சந்தேகம் வலுக்கிறது மன்னா.

மன்னர்: குசும்பன் சொன்னால் சரிதான். உங்கள் மேல் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் யார்? பூச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நந்து: நான் அவற்றை பார்த்து படம் வரைகிறேன் மன்னா. நான் ஒரு ஓவியன்.

மன்னர்: என்ன ஓவியனோ? ஒரு முறையாவது அரசு நடத்தும் பிட் ஓவியப் போட்டியில் வென்றிருக்கிறாயா?

நந்து: (தலையை சொறிந்துக் கொண்டே)இல்லை மன்னா.

(வீர‌ன் ஒருவ‌ன் ஓடி வ‌ந்து புலி ஒன்றைப் பார்த்தாக‌ சொல்கிறான். உட‌னே அனைவ‌ரும் வாரி சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்ற‌ன‌ர்.)

ம‌றுநாள் ச‌பையில்..

ம‌ன்ன‌ர்: நேற்று நான் வேட்டைக்கு சென்ற‌ போது புலியுட‌ன் ச‌ண்டை போட‌ நேர்ந்த‌து. அதில் என் வ‌ல‌து கையில் ஆறு அங்குல‌ நீள‌த்திற்கும் ஒன்ற‌ரை அங்குல‌ ஆழ‌த்தில் வெட்டு ஒன்று ஏற்ப‌ட்ட‌து.

செந்த‌ழ‌ல் ர‌வி : என்ன‌.. புலிக‌ளுட‌ன் சண்டையா? மான‌ங்கெட்ட‌ ம‌ன்னா.. இன‌ உண‌ர்வு அற்ற‌ மூட‌னே.. உன் ட‌வுச‌ர் அவுக்கிறேன் பார்

ம‌ன்னர்: இவ‌ன் ஏன் பித‌ற்றுகிறான்? இவ‌னை சுவீட‌ன் தேசத்துக்கு நாடு க‌ட‌த்துங்க‌ள்.

குசும்ப‌ன் : ம‌ன்னா. நம் நாட்டு சோம‌பான‌த்தின் பெருமைக‌ளை வ‌ரலாற்றில் ப‌திய‌ "சோம‌பான் சிறுக‌தைக‌ள்" என்று இவ்ர் எழுத‌ ஆசைப்ப‌டுகிறார்.

கார்க்கி: ஆம்.அர‌சே. நீங்க‌ள் அவ்வ‌ போது சோம‌பான‌ம் அருந்தி விட்டு புரியும் சாக‌ச‌ங்க‌ளை தொகுக்க‌ ஆசைப்ப‌டுகிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் ச‌தித் திட்ட‌ம் குசும்ப‌னுக்கு தெரியாது. நான‌றிவேன். மேலை நாட்டு ட‌க்கீலாவையும் கேர‌ள‌ நாட்டு ஷ‌க்கீலாவையும் இணைத்து எழுதியவ‌ன‌ல்லவா நீ.

வால்பையன்: மன்னா. புலியுடன் போரிட்ட உமது வீரத்தை முன்னிட்டு இன்று சோமபான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ம‌ன்ன‌ர்: நீர் பேசாதே. நான் ஒரு நாள் உற‌ங்கும் போது கொசு ஒன்றை அடித்துக் கொண்றேன் என‌க் கூறி சோம‌பான விருந்து வைத்த‌வ‌ன‌ல்ல‌வா நீ.. அர‌ண்ம‌னை ம‌ருத்துவ‌ர் உன‌க்காக‌ உன் வீட்டிற்கு அடிக்க‌டி வந்தும் மாற‌வில்லையா?    

      மந்திரிகளே உங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்.

டோண்டூ: மன்னா.. ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌..

ம‌ன்ன‌ர்: உங்க‌ள் ச‌மீப‌ம் எதுவென்று ஊர‌றியும். அம‌ருங்க‌ள்.

உண்மைத்த‌மிழ‌ன்: ம‌ன்னா..

ம‌ன்ன‌ர்: ஒரு நிமிட‌ம். சொல்ல‌ வ‌ருவ‌தை இன்று மாலைக்குள் முடிப்ப‌தென்றால் சொல்லுங்க‌ள்.

உ.த‌மிழ‌ன்: அது க‌டினம். ம‌ன்னா. நான் அம‌ர்ந்து விடுகிறேன்

குசும்ப‌ன்: ம‌ன்னா ந‌ம் அர‌ச‌வையில் உங்க‌ள் ஓவிய‌ம் ஒன்றை..

ம‌ன்ன‌ர்: என்ன‌ செய்வாய் என‌த் தெரியும் குசும்பா. என்னிட‌ம் வேண்டாம் உன் விளையாட்டு.

(யாரையும் பேச‌ விடாம‌ல் தின‌மும் அவ‌ரே அதிக‌மாக‌ பேசிகிறார் ம‌ன்ன‌ர்)

முற்றும்

34 கருத்துக்குத்து:

பாபு on November 28, 2008 at 12:58 PM said...

நல்ல கற்பனை,ரசிக்க முடிந்தது

நான் on November 28, 2008 at 1:01 PM said...

me the 2nd

விஜய் ஆனந்த் on November 28, 2008 at 1:02 PM said...

சூடு கொஞ்சம் கம்மியா இருக்க மாதிரி இருக்கே...

பயணக்களைப்பா சகா???

தமிழ் பிரியன் on November 28, 2008 at 1:14 PM said...

நல்லா இருக்கு... ஆனா கம்மியா இருக்கு..:)

அருண் on November 28, 2008 at 1:19 PM said...

ஜூப்பர்!

முரளிகண்ணன் on November 28, 2008 at 1:25 PM said...

சகா, நாட்டாமை தீர்ப்பு மாதிரி பாரபட்சமில்லாம எல்லோரையும் கலாய்சுட்டீங்க

வித்யா on November 28, 2008 at 1:40 PM said...

போன பதிவுக்கு இது கொஞ்சம் கம்மி தான். ஆனாலும் சூப்பர்:)

பரிசல்காரன் on November 28, 2008 at 1:41 PM said...

சூப்பர் சகா.

நேத்து நம்ம செட்டை கலாய்ச்ச நீ, இன்னைக்கு டோண்டு, உ.த, செ.ரவி-ன்னு பெரிய க்ரூப்பைக் கலாய்ச்சிருக்க.

ரொம்ப தைரியமாய்டுச்சுப்பா ஒனக்கு!

உ.தமிழன் மேட்டர் சூப்பர்..

(ஐயையோ.. தப்பர்த்தம் வருது.. உ.தமிழன் பற்றிய உன் கலாய்ப்பு சூப்பர்!!!)

புதுகை.அப்துல்லா on November 28, 2008 at 2:01 PM said...

அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..

:)))

SK on November 28, 2008 at 2:30 PM said...

என் ரெண்டு பகுதியோட முடிச்சீங்க கார்க்கி..

இன்னும் கொஞ்சம் பகுதி எழுதலாமே. :-)

சனி, ஞாயிறு நேரம் இருந்த முயற்சி பண்ணுங்க. நல்ல இருந்தது.. நல்ல கற்பனை . வாழ்த்துக்கள்.

அத்திரி on November 28, 2008 at 2:49 PM said...

முதல் பாகத்துக்கே பின்னூட்டம் இட்டிருப்பேன். ஆனால் கும்மிகள் அதிகம் இருந்ததால் பின் வாங்கிவிட்டேன்.

சகா சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. ஆஸ்பத்திரி செலவுக்கு காசு கொடுப்பா.

இன்னும் இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன்( காதல் பட வசனம்)

அத்திரி on November 28, 2008 at 2:49 PM said...

முதல் பாகத்துக்கே பின்னூட்டம் இட்டிருப்பேன். ஆனால் கும்மிகள் அதிகம் இருந்ததால் பின் வாங்கிவிட்டேன்.

சகா சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. ஆஸ்பத்திரி செலவுக்கு காசு கொடுப்பா.

இன்னும் இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன்( காதல் பட வசனம்)

SUREஷ் on November 28, 2008 at 3:13 PM said...

ன்னா ந‌ம் அர‌ச‌வையில் உங்க‌ள் ஓவிய‌ம் ஒன்றை..

ம‌ன்ன‌ர்: என்ன‌ செய்வாய் என‌த் தெரியும் குசும்பா. என்னிட‌ம் வேண்டாம் உன் விளையாட்டு.////
copy paste than

அத்திரி on November 28, 2008 at 3:18 PM said...

//டோண்டூ: மன்னா.. ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌..

ம‌ன்ன‌ர்: உங்க‌ள் ச‌மீப‌ம் எதுவென்று ஊர‌றியும். அம‌ருங்க‌ள். //

யாரையும் விட்டு வைக்கிற மாதிரி தெரியலை

அத்திரி on November 28, 2008 at 3:21 PM said...

//கார்க்கி: ஆம்.அர‌சே. நீங்க‌ள் அவ்வ‌ போது சோம‌பான‌ம் அருந்தி விட்டு புரியும் சாக‌ச‌ங்க‌ளை தொகுக்க‌ ஆசைப்ப‌டுகிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் ச‌தித் திட்ட‌ம் குசும்ப‌னுக்கு தெரியாது. நான‌றிவேன். மேலை நாட்டு ட‌க்கீலாவையும் கேர‌ள‌ நாட்டு ஷ‌க்கீலாவையும் இணைத்து எழுதியவ‌ன‌ல்லவா நீ.//

டக்கீலா,ஷகீலா

எதுகை ,மோனை புகுந்து விளையாடுது.


எத்தனை ரவுண்டு உள்ள போச்சு

முத்துலெட்சுமி-கயல்விழி on November 28, 2008 at 3:29 PM said...

தர்பார் ஏன் இரண்டு பாகத்துல கலைஞ்சுடுச்சு.. ? :)
நல்லா இருந்தது இந்த தர்பாரும்..

கார்க்கி on November 28, 2008 at 3:36 PM said...

நன்றி பாபு..

ந‌ன்றி நான்..

//விஜய் ஆனந்த் said...
சூடு கொஞ்சம் கம்மியா இருக்க மாதிரி இருக்கே...

பயணக்களைப்பா சகா???//

ரெண்டையும் ஒரே நாள்ல‌தான் ச‌கா எழுதினேன். என‌க்கே இன்த‌ பாக‌த்தில் காமெடி கொஞ்ச‌ம் க‌ம்மியா தெர்ஞ்ச‌தால‌தான் பிரிச்சு போட்டென். இதுல‌ பெரிய‌ த‌லைங்க‌ இல்லையா.. அதான் அட‌க்கி வாசிச்சிருக்கேன்.

கார்க்கி on November 28, 2008 at 3:39 PM said...

நன்றி தமிழ் பிரியன்

நன்றி அருண்.

//முரளிகண்ணன் said...
சகா, நாட்டாமை தீர்ப்பு மாதிரி பாரபட்சமில்லாம எல்லோரையும் கலாய்சுட்டீங்க//

உங்கள அப்பப்போ நடுவுல் சினிமா வசனம் சொல்ர மாதிரி யோசிச்சேன். ஏனோ விட்டுட்டேன்.

நன்றி அப்துல்லா அண்ணே

கார்க்கி on November 28, 2008 at 3:43 PM said...

நன்றி பரிசல். நம்ம கடைக்கு வர மாட்டாங்கனு ஒரு தைரியம்தான்..

// SK said...
என் ரெண்டு பகுதியோட முடிச்சீங்க கார்க்கி..

இன்னும் கொஞ்சம் பகுதி எழுதலாமே. :-)

சனி, ஞாயிறு நேரம் இருந்த முயற்சி பண்ணுங்க. நல்ல இருந்தது.. நல்ல கற்பனை . வாழ்த்துக்கள்.//

இந்த வாரம் ஒரு நிகழ்ச்சி இருக்கு. நிச்சயம் முயற்சி செய்கிறேன் நன்றி எஸ்.கே


நன்றி அத்திரி

கார்க்கி on November 28, 2008 at 3:45 PM said...

//டக்கீலா,ஷகீலா

எதுகை ,மோனை புகுந்து விளையாடுது.


எத்தனை ரவுண்டு உள்ள போச்சு//

அது மட்டுமில்லாமல் நான் ரென்டையும் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதியிருக்கேன். ஆராய்ச்சி கட்டுரை என்ற லேபிள் இருக்கும் படிங்க..

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தர்பார் ஏன் இரண்டு பாகத்துல கலைஞ்சுடுச்சு.. ? :)
நல்லா இருந்தது இந்த தர்பாரும்..//

நன்றிங்க..

அத்திரி on November 28, 2008 at 5:36 PM said...

அந்த கட்டுரைக்கு மேட்டர் கட்டுரை இல்லைனா சரக்கு கட்டுரைனு பேர் வச்சிருக்கலாம் சகா.

ஆனாலும் போதை இருந்தது

நானும் ஒருவன் on November 28, 2008 at 6:12 PM said...

என்ன மச்சி? கூட்டத்தையே கானோம்? மழையா?

விலெகா on November 28, 2008 at 6:13 PM said...

ரொம்ப நல்லா இருக்குங்க:))))

விலெகா on November 28, 2008 at 6:14 PM said...

சிம்புதேவனுக்கு தம்பியா இருப்பாரோ!!
ரொம்ப நல்லா இருக்குங்க:))))

கோவி.கண்ணன் on November 28, 2008 at 7:47 PM said...

//முரளிகண்ணன் said...
சகா, நாட்டாமை தீர்ப்பு மாதிரி பாரபட்சமில்லாம எல்லோரையும் கலாய்சுட்டீங்க
//

Repeatuuuuuuuuuuuu

கும்க்கி on November 28, 2008 at 7:58 PM said...

புதுகை.அப்துல்லா said...
அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை..

:)))

Ripeeeeeeeetttu.

தமிழ்ப்பறவை on November 29, 2008 at 1:54 AM said...

//டோண்டூ: மன்னா.. ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌..

ம‌ன்ன‌ர்: உங்க‌ள் ச‌மீப‌ம் எதுவென்று ஊர‌றியும். அம‌ருங்க‌ள். //
நல்ல கலாய்த்தல் திணை... தொடருங்கள் கார்க்கி..

Anonymous said...

எல்லாரையும் கலாய்ச்சுட்டீங்க. ரெண்டாவது பகுதில கொஞ்சம் அடக்கியே வாசிச்சிட்டீங்க.

வெண்பூ on November 29, 2008 at 3:58 PM said...

கலக்கிட்ட சகா.. சூப்பர்..

ஸ்ரீமதி on November 30, 2008 at 5:44 PM said...

:))))))))))Superb.. :))))))

கார்க்கி on December 1, 2008 at 8:35 AM said...

நன்றி அத்திரி

நன்றி விலேகா

நன்றி கோவியாரே

நன்றி கும்க்கி

நன்றி தமிழ்பறவை

நன்றி அம்மினி

நன்றி வெண்பூ

நன்றி ஸ்ரீமதி

Raj on December 1, 2008 at 10:37 AM said...

நல்லா இருந்துச்சு

rapp on December 2, 2008 at 5:03 AM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் இல்லையா?

கார்க்கி on December 2, 2008 at 1:37 PM said...

//Raj said...
நல்லா இரு//

நன்றி நண்பரே..

//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் இல்லையா?//

போன பார்ட்ல வந்தவ்ங்க யாருமே இல்லையே ராப்

 

all rights reserved to www.karkibava.com