Nov 29, 2008

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"

14 கருத்துக்குத்து

    அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன்.

************************************************      சென்னையில் ஒரு வீக் எண்ட்ட தனியா எப்படி கழிக்கிறதுன்னு நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அவர்களும் பல யோசனைகள் சொல்லியிருந்தார்கள். நான் போன பதிவில் எழுதியிருந்தவாறு, அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jokes apart, I really thank them all. Thank you friends!
சனிக்கிழமை காலையில் நான் எழுந்தேன். எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்த என் நண்பன் Good afternoon என்றான். What?
Oops! மணி 11:50.
     சடாரென்று எழுந்தேன். காலையில் செய்ய வேண்டியவைகளை செய்து முடித்து, சாப்பிடும் போது கிட்டத்தட்ட சாயங்காலம் ஆகிவிட்டது. என்னுடைய ப்ளாக்கை திறந்து நண்பர்கள் சொன்ன யோசனைகளை மறுபடி ஒருமுறை படித்தேன். பெசன்ட் நகர் பீச் போவதுதான் ஒரே வழி என்று தெரிந்தது.
பெசன்ட் நகர் பீச்...மெரினா போலவே இங்கேயும் கூட்டமாகத்தான் இருந்தது. என்ன கொஞ்சம் வேறு மாதிரியான கூட்டம். கைகளை பாக்கெட்டில் விட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தேன்.
என்னைப்போல் யாரும் கைகளை பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு பிடித்துக்கொள்ள யாராவது இருந்தார்கள்.
Seems, Remaining single is a sin.
   கூட்டத்தை விட்டு விலகி நடந்தேன். தனியாக ஓரிடத்தில் நின்று கொண்டு கடலை பார்க்க ஆரம்பித்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். கடலுக்கு நம் எண்ணங்களை கிளரும் சக்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரொம்ப நேரம் நின்று கொண்டே இருந்திருப்பேன் போல. மனதுக்குள் கவிதை ஒன்று உருவாவதுபோல் இருந்தது. பயம் பற்றிக் கொள்ள இடத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன்.
     சட்டென்று என் பேண்ட்டை யாரோ பிடித்தார்கள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். சிரித்துக் கொண்டிருந்த ஒரு சின்னக் குழந்தை ஏதோ மொழியில் என்னவோ சொன்னது. எனக்கு அது சிரித்த மொழி மட்டும் தான் புரிந்தது. பேசிய மொழி? ம்ஹும்....
நான் குழம்பிப் போய் பார்க்க, சற்று பெரிய சைஸில் அந்த குழந்தையின் அம்மா ஓடிவந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு என்னை பார்த்து ஏதோ மொழியில் என்னவோ சொன்னார்கள். நான் ஏதும் சொல்வதற்க்குள் போய்விட்டார்கள். குழ்ந்தையை மணலில் நடக்கவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். எனது முதல் போட்டோ எப்போது எடுத்தது என்று யோசித்தேன். 6 வயது இருக்கும்.
    ஒரு காபி குடித்து விட்டு போகலாம் என்று கிளம்பினேன். Barista நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்திற்க்குள் போக மனமில்லாமல் பார்த்தேன். சற்று தொலைவில் Coffee Day தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். நான் மட்டும்தான் தனியாக நடப்பது போல் இருந்தது.
நிறுத்தப்பட்டிருந்த கார்களை சுற்றி சுற்றி கடந்து வந்தால் Coffee Dayம் சந்தைக்கடை மாதிரி தான் இருந்தது. காபி மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்தேன்.
ரொம்ப அமைதியாக ஃபீல் பண்ணினேன். வேறு எதுவும் செய்ய தோன்றவில்லை. வீட்டுக்கு போன் செய்தபடியே திரும்பி நடந்தேன்.
  என் தங்கை போனை எடுத்தாள்.

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"

***********************************************

   இந்த பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்க இங்கே கிளிக்குங்கள்

Nov 28, 2008

வ‌லையுல‌க‌ த‌ர்பார் (2)

34 கருத்துக்குத்து

முத‌ல் ப‌குதி

(மன்னர் மற்றும் குழு வேட்டைக்காக காட்டுக்குள் சென்ற போது அங்கே ஒரு குழுவை பார்க்கிறார்கள்)

மன்னர்: யார் நீங்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன வேலை உங்களுக்கு?

சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.

குசும்பன்: அதற்கேன் காட்டுக்குள் வர வேண்டும்? எனக்கு சந்தேகம் வலுக்கிறது மன்னா.

மன்னர்: குசும்பன் சொன்னால் சரிதான். உங்கள் மேல் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் யார்? பூச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நந்து: நான் அவற்றை பார்த்து படம் வரைகிறேன் மன்னா. நான் ஒரு ஓவியன்.

மன்னர்: என்ன ஓவியனோ? ஒரு முறையாவது அரசு நடத்தும் பிட் ஓவியப் போட்டியில் வென்றிருக்கிறாயா?

நந்து: (தலையை சொறிந்துக் கொண்டே)இல்லை மன்னா.

(வீர‌ன் ஒருவ‌ன் ஓடி வ‌ந்து புலி ஒன்றைப் பார்த்தாக‌ சொல்கிறான். உட‌னே அனைவ‌ரும் வாரி சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்ற‌ன‌ர்.)

ம‌றுநாள் ச‌பையில்..

ம‌ன்ன‌ர்: நேற்று நான் வேட்டைக்கு சென்ற‌ போது புலியுட‌ன் ச‌ண்டை போட‌ நேர்ந்த‌து. அதில் என் வ‌ல‌து கையில் ஆறு அங்குல‌ நீள‌த்திற்கும் ஒன்ற‌ரை அங்குல‌ ஆழ‌த்தில் வெட்டு ஒன்று ஏற்ப‌ட்ட‌து.

செந்த‌ழ‌ல் ர‌வி : என்ன‌.. புலிக‌ளுட‌ன் சண்டையா? மான‌ங்கெட்ட‌ ம‌ன்னா.. இன‌ உண‌ர்வு அற்ற‌ மூட‌னே.. உன் ட‌வுச‌ர் அவுக்கிறேன் பார்

ம‌ன்னர்: இவ‌ன் ஏன் பித‌ற்றுகிறான்? இவ‌னை சுவீட‌ன் தேசத்துக்கு நாடு க‌ட‌த்துங்க‌ள்.

குசும்ப‌ன் : ம‌ன்னா. நம் நாட்டு சோம‌பான‌த்தின் பெருமைக‌ளை வ‌ரலாற்றில் ப‌திய‌ "சோம‌பான் சிறுக‌தைக‌ள்" என்று இவ்ர் எழுத‌ ஆசைப்ப‌டுகிறார்.

கார்க்கி: ஆம்.அர‌சே. நீங்க‌ள் அவ்வ‌ போது சோம‌பான‌ம் அருந்தி விட்டு புரியும் சாக‌ச‌ங்க‌ளை தொகுக்க‌ ஆசைப்ப‌டுகிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் ச‌தித் திட்ட‌ம் குசும்ப‌னுக்கு தெரியாது. நான‌றிவேன். மேலை நாட்டு ட‌க்கீலாவையும் கேர‌ள‌ நாட்டு ஷ‌க்கீலாவையும் இணைத்து எழுதியவ‌ன‌ல்லவா நீ.

வால்பையன்: மன்னா. புலியுடன் போரிட்ட உமது வீரத்தை முன்னிட்டு இன்று சோமபான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ம‌ன்ன‌ர்: நீர் பேசாதே. நான் ஒரு நாள் உற‌ங்கும் போது கொசு ஒன்றை அடித்துக் கொண்றேன் என‌க் கூறி சோம‌பான விருந்து வைத்த‌வ‌ன‌ல்ல‌வா நீ.. அர‌ண்ம‌னை ம‌ருத்துவ‌ர் உன‌க்காக‌ உன் வீட்டிற்கு அடிக்க‌டி வந்தும் மாற‌வில்லையா?    

      மந்திரிகளே உங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்.

டோண்டூ: மன்னா.. ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌..

ம‌ன்ன‌ர்: உங்க‌ள் ச‌மீப‌ம் எதுவென்று ஊர‌றியும். அம‌ருங்க‌ள்.

உண்மைத்த‌மிழ‌ன்: ம‌ன்னா..

ம‌ன்ன‌ர்: ஒரு நிமிட‌ம். சொல்ல‌ வ‌ருவ‌தை இன்று மாலைக்குள் முடிப்ப‌தென்றால் சொல்லுங்க‌ள்.

உ.த‌மிழ‌ன்: அது க‌டினம். ம‌ன்னா. நான் அம‌ர்ந்து விடுகிறேன்

குசும்ப‌ன்: ம‌ன்னா ந‌ம் அர‌ச‌வையில் உங்க‌ள் ஓவிய‌ம் ஒன்றை..

ம‌ன்ன‌ர்: என்ன‌ செய்வாய் என‌த் தெரியும் குசும்பா. என்னிட‌ம் வேண்டாம் உன் விளையாட்டு.

(யாரையும் பேச‌ விடாம‌ல் தின‌மும் அவ‌ரே அதிக‌மாக‌ பேசிகிறார் ம‌ன்ன‌ர்)

முற்றும்

Nov 27, 2008

வலையுலக தர்பார்

131 கருத்துக்குத்து

   அரசராக கோவி.கண்ணன், தலைமையமைச்சராக குசும்பன், மற்றும் உங்கள் அபிமான பதிவர்கள் வீற்றிருக்கும் தர்பாரில் ஒரு நாள்

*************************************************

   ராஜாதி ராஜ‌
   ராஜ மார்த்தாண்ட‌
   ராஜ கம்பீர‌
   ராஜ குலத்துலோத்துங்க‌
   மாமன்னன் ஆவி.கண்ணன் ச்சே.. பாவி.கண்ணன்..    ச்சேசே.. கோவி.கண்ணன் பராக்..பராக்..ப்ராக்..

அரசர்: என்ன குசும்பரே.. கவனித்தீரா?

குசும்பன்: ஆம். மன்னா.இவன் தலை வகிடை வலப்பக்கம் எடுத்துள்ளான். நுட்பமான விதயங்களையும் கவனிப்பதுதான் எனக்கு கை வந்த கலையாச்சே..ஹிஹிஹி

அர‌ச‌ர்: உன்னைப் போய் த‌லைமைய‌மைச்ச‌ராக‌ வைத்தால் இவ‌ன் இப்ப‌டித்தான் செய்வான். வாரும்.

குசும்ப‌ன்: (வீர‌னிட‌ம்) கேட்டாயா? அர‌ச‌ரே வாரும் என‌ சொல்லிவிட்டார். இதோ இப்பொதே உன‌க்கு இட‌ப்ப‌க்க‌ம் வ‌கிடெடுத்து வாரி விடுகிறேன். சீப்பு இருக்கிற‌தா?

(மன்னர் அரியணையில் அமர சபை தொடங்குகிறது)

மன்னர்: குசும்பா.. இன்றைய திட்டம் என்ன?

குசும்பன்: மன்னா. அந்த உடை விவகாரம்.

மன்னர்: ஆம். அமைச்சர்களே!!!நான் ஒரு மாபெறும் வீரன் என்பது ஒரு புறமிருக்க, சமீப காலமாக அபரிதமாக வளர்ந்து வரும் என் தொப்பை அந்த கம்பீரத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே இனிமேல் அனைவரும் தொளதொளவென உடை அணிய வேண்டும்.கழுத்திலிருந்து கால் வரைக்கும் ஒரே உடையாக இருக்க வேண்டும்.எவருக்கு தொப்பை என்பது தெரியாத அளவுக்கு அது இருக்க வேண்டும்.

நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே.

மன்னர்: அரசரையே எதிர்த்து பேசும் தைரியம் யார் தந்தது நர்சிம்மரே? உங்களுக்கும் மாறவர்மனுக்கும் தொடர்பு உண்டு என்று வந்த தகவல் உண்மை போல உள்ளதே?அமைதியாக அமரும்.

 குசும்பர்: மன்னா உங்களை வாழ்த்திப் பாட அய்யணார் என்ற புலவர் வந்துள்ளார்.

 மன்னர்: புலவரா? வரச்சொல்லும். வந்து பாட சொல்லும்.

 அய்யணார்: திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள்
                  மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது
                  பெரும்திரையெனக் கவிழ்கிறது
                  தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
                  பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
                  இன்னும் ஒருதரம்
                  சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.

 மன்னர்: என்ன சொல்கிறான் இவன்? தமிழ்நாட்டு மண்ணில் தமிழிலே கவி பாடலாமே? இவன் ஏன் பிராகிருத மொழியில் பாடிகிறான்.

குசும்பன்: மன்னா உங்களுக்கு பிராகிருத மொழி கூடத் தெரியுமா?

மன்னர்: உங்களுக்குத் தெரியுமா?

குசும்பன்: இல்லை மன்னா

மன்னர்: அப்படியென்றால் எனக்குத் தெரியும்

முரளி: (நடுவில்) இது தில்லிமுல்லுவில்..

மன்னர்: படம் காட்டாமல் அமரும்.

குசும்பன்: இவர் வேண்டாம் மன்னா. இன்னொரு பெண்கவி வந்துள்ளார்

மன்னர்: ஆச்சரியம்? பெண் புலவரா? கவிதாயினி.. கவி தா இனி..

ராப் : பார் போற்றும் எங்கள் மன்னனே
      வானளாவிய புகழுடைய விண்னனே
      தங்கை துயர் துடைக்கும் அண்ணனே
      சிங்க நிகர் வீரன் கோவி.கண்ணனே

மன்னர்: ஆஹா.. அற்புதம்.. முதல் முறையாக எனக்குப் பிடித்த கவிதை சொன்ன புலவர் நீ.பிடியும் 1000 பொற்காசுகள்.

ராப்: ஹை.மீ த ஃப்ர்ஸட்டா?நன்றி மன்னா.

குசும்பன்: மன்னா.. நீங்கள் ஏன் மகாராணியைப் பார்த்து ஒரு கவி பாட கூடாது?

மன்னர்: அனைத்தும் அறிவான் கண்ணன். இதோ..

        மதி முக நாயகியே..

லக்கி: (குறுக்கிடுகிறார்) மன்னா..மன்னிக்க வேண்டுகிறேன். மகாராணி வைகோவின் ஆதரவாளரா?

மன்னர்: (கோவமாக) யார் சொன்னது?

லக்கி: நீங்கள்தான் அவரை ம.தி.மு.க நாயகி என்றீரே?

மன்னர்: ஆவ்வ்வ்வ்.நல்ல கவிதையை இழந்து விட்டோமே. குசும்பா மதிய உணவென்ன?

ஒருவர்: பிரியாணி மன்னா

மன்னர்: யாரது? வெண்பூவா?

வெண்பூ: ஆம் மன்னா. நானே ருசி பார்த்து தங்களுக்கு பிடிக்கும் வண்னம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

மன்னர்: ருசி பார்த்தீரா? பின் எங்களுக்கு எங்கே இருக்கப் போகிறது?

குசும்பன்: மன்னா.ஒரு பிரச்சனை. இளவரசர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறாராம். அவருக்கு உடனே திருமணம் செய்ய வேண்டுமாம்.

மன்னர்: என்ன திருமணமா? அவரை உடனே குருகுலத்திலிருந்து மாற்றி முனிவர் தாமிராவிடம் சில காலம் விட்டுவிடுங்கள். எல்லாம் சரியாய் போகும். தேர்வு எழுத வேறு ஆளை தயார் செய்யுங்கள்.

குசும்பர்: ஒருவர் இருக்கிறார் மன்னா. இதோ வரச் சொல்கிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் பெய‌ரென்ன‌ ?

அப்துல்லா: வணக்கம் மன்னா.நான் புதுகை.அப்துல்லா. பிறருக்காக தேர்வு எழுதுவது என் விருப்பமான பணி.

ம‌ன்ன‌ர்: என்ன‌ புதுகையா? அப்ப‌டியென்றால் உன் ப‌ழைய‌ கை என்ன‌ ஆன‌து? யார் வெட்டினார்க‌ள்?

குசும்ப‌ன்: ம‌ன்னா புதுகை என்ப‌து அவ‌ர் ஊரின் பெய‌ர்.

ம‌ன்ன‌ர்: அப்போ துல்லா என்றால்?

குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

ம‌ன்ன‌ர்: தெரியும் குசும்பா. அப் என்றால் இப்போது என்று பொருள். அத‌னால் தான் துல்லாவுக்கு ம‌ட்டும் அர்த்த‌ம் கேட்டேன்.

குசும்ப‌ன்: அய்யோ அய்யோ

ம‌ன்ன‌ர்: என்ன‌ துல்லா என்றால் அய்யோ என்று பொருளோ? என‌க்கு தெரியாதே..

 ஜோஸப் பால்ராஜ்: நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை.எங்கும் திருட்டு.பஞ்சம்.. பாவம் மக்கள்.

மன்னர்: போதும். பதிவர் சந்திப்பு சபையில் சம்மனமிட்டு அமர்ந்து சத்தம் போட்டு சங்கை முழங்கிவிட்டு, பின்புறம் போய் பீர் வேண்டுமென பிறரை பிறான்டி எடுப்பது நீர்தான் என்பது எனக்கு ஒற்றன் கொடுத்த தகவல். உண்மைதானே?

(தலையாட்டுகிறார்)

மன்னர்: குசும்பா. இவர்கள் என்னை கடுப்பேத்துகிறார்கள். வாரும் நாம் வேட்டைக்கு செல்வோம்.

குசும்பன் : நிஜமாகத்தான் சொல்கிறீர்களா அரசே?

மன்னர்: உம் நக்கலை சஞ்ச‌யிடமும், நந்துவிடமும் வைத்துக் கொள்.புறப்படு

(ஆற்றுகருகில்)

பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா?

மன்னர்: இவன் யாரடா. புறப்படும் போதே அபசகுனாமாக கேட்கிறான்?

குசும்பன்: இவருக்குத்தான் நாம் ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே.

மன்னர்: ஓ அவரா? இன்னொருவருக்கும் அனுப்பினோமே?

குசும்பன்: அவர் அந்தப்புரத்தில் இருப்பார்

மன்னர்: என்ன?

குசும்பன்: இல்லை மன்னா. கரைக்கு அந்த புறத்தில் இருப்பார் என்றேன்

***********************************************

டிஸ்கி: 1) ரொம்ப பெருசா இருக்கு. நீங்கள் விரும்பினால் அடுத்த பாகத்தையும் வெளியிடுவேன்.

       2) நேற்று மேட்ச் பார்த்துவிட்டு ஒரு மணி வரை கண் விழித்து எழுதிய பதிவிது.பிடித்திருந்தால் பதிவின் தலைப்பில் கிளிக்கி த‌மிழ்ம‌ண‌ ப‌ட்டையில் ஓட்டுக் குத்துங்கோ.

Nov 26, 2008

எல்லாம் வெளம்பரம்தான்

170 கருத்துக்குத்து

    விளம்பரங்கள் என்றால் எனக்கு ஒரு வயதில் இருந்தே புடிக்கும். எல்லாக் குழந்தைகளை போல நானும் சின்ன வயதில் விளம்பரங்களை மட்டும் தான் பார்ப்பேனாம். இப்போதும் நல்ல விளம்பரங்களை அவ்வபோது யுட்யூபில் பார்த்து ரசிப்பதுன்டு.

1) ஏர்டெல்.

   சமீபத்தில் என்னை கவர்ந்த பல விளம்பரங்கள் இவர்களுடையதே. நல்ல விளம்பரத்திற்கு பிரபலமானவர்கள் தேவை இல்லை என்றாலும், அவர்களை வைத்தும் பல நல்ல விள‌ம்பரங்களை எடுத்துள்ள‌னர். இவர்களுடைய பலமே ஏ.ஆர்.ரகுமான் போட்டு தந்த தீம் மீயூஸீக்.(இது ஒரு தமிழ் பாடலின் சாயலில் போடப்பட்டது. விடை இறுதியில்) பல இசைக் கருவிகளில் அதைக் கேட்கும்போது விளம்பரத்திற்கு அது மேலும் அழகு சேர்க்கிறது. மாதவன், வித்யா பாலன் வரும் விளம்பரங்களும், DTH சேவைக்காக பல பிரபலங்கள் வரும் விளம்பரமும், அப்பா மகனின் கையில் கயிறு கட்டி அழைத்து செல்லும் புதுவரவு வரை பல என் மனதை கொள்ளை அடித்திருக்கின்றன. ஆனால் அல்டிமேட் என நினைப்பது கீழிருக்கும் விளம்பரம்தான். சென்னை சத்யம் திரையரங்கில் முதன் முதலாக இது திரையிட்டபோது என்னையறியாமல் நான் கைதட்ட, கடைசியில் அரங்கம் அதிர கைதட்டல்கள் எழுந்தன‌.

2) வோடோஃபோன்

    ஏர்டெல்லிற்கு அடுத்தபடி இவர்கள் கலக்குகிறார்கள்.இதன் விளமபரத்தில் வரும் நாய்குட்டிக்கு ஆர்குட்டில் ஒரு கம்யூனிட்டியே உண்டு. இர்ஃபான் கான் வரும் இந்தி விளம்பரங்கள் நச்சென்று இருக்கும். அதை பிரகாஷ் ராஜ் வைத்து தமிழில் செய்த போது அந்த Impact  வரவில்லை. காலர் ட்யுனுக்காக நான்கு பெண்கள் கிடார் வாசிக்கும் விளம்பரமும், நாய்குட்டி வரும் அனைத்துமே அருமை என்றாலும் எனக்கு பிடித்தது இதுதான்.

3) ஃபெவிகால்

     இவர்களுக்கு கான்செப்ட் வெகு எளிதில் கிடைக்க கூடியது என்றாலும் அதை தவற விடாமல் அசத்துகிறார்கள். ஆனால் எல்லா விளம்பரமும் அதே மையக்கரு என்பது மைனஸே. அவர்கள் Product அப்படி . முட்டை உடையாமல் இருக்கும் விள‌மபரம், (ஃபெவிக்விக்)மீன் பிடிக்க ஒரு குச்சியில் நான்கு சொட்டு விட்டு பிடிக்கும் விள‌மபரம் என பல சாய்ஸ் இருந்தாலும் என் சாய்ஸ் இதுதான்

4) சரவணா ஸ்டோர்ஸ்

   பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஜெடி ஜெர்ரி இயக்கத்தில் ஸ்ரேயா வரும் அனைத்து விளம்பரங்களும் எனக்கு பிடிக்கும். ஏதோ மோகம் பாடலின் ரீமிக்ஸும் அருமை. இந்த விள‌மபரத்தை கணிணியிலோ தொலைக்காட்சியிலோ பார்ப்பதை விட திரையரங்கில் பார்ப்பது அலாதியானது.

   இவை மட்டுமல்லாமல் Happy dent பற்களை விளக்காக பயன்படுத்தும் விள‌ம்பரம், Sant gobain, HDFC என நிறைய நல்ல விள‌மபரங்கள் உண்டு. மக்களின் ஆதரவைப் பொறுத்து அவைப் பற்றியோ அல்லது உலக அளவில் சிறந்த விளமபரங்கள் பற்றியோ வேறொரு பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்த விளம்பரங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

ஏர்டெல் பாடலுக்கான விடை:  தேவதை படத்தில் வரும் "தீபங்கள் பேசும்.. திரு கார்த்திகை மாசம்" என்ற பாடலில் வரும் "முத்து முத்து விளக்கு முற்றத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்துல" என்ற வரியை பாடிப் பாருங்கள்.

Last but not least.Ever green .Woodwards gripe water.இந்த வீடியோவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறக்க முடியுமா? யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

Nov 25, 2008

புட்டிக்கதைகள்

119 கருத்துக்குத்து

மு.கு: இனி வாராவாரம் புட்டிக்கதைகளை தொடரலாம் என நினைக்கிறேன். புதிதாய் வந்த அன்பர்களுக்கு நம்ம ஏழுமலையை அறிமுகம் செய்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து ‘ஆட’ ஆரம்பிப்போம்.

**********************************************

   முதலாண்டில் இருந்து இரண்டாமாண்டில் காலடி எடுத்த வைத்த நேரம். நாங்களும் பெரியவங்கதான்னு காட்ட துடித்துக் கொண்டிருந்தோம் நானும் எனது நண்பர்களும். முதலாமாண்டு மாணவர்களும் அப்போது இல்லை. ஏதாவது செய்யனும் மச்சி என்று ஓவ்வொருவரும் சொல்லிக் கொண்டே இருந்தோமே தவிர ஒருவரும் என்ன செய்வதென்று சொல்லவில்லை. அப்போதுதான் ஏழுமலை அந்த "திட்டத்தை" சொன்னான். ஏழுமலையை பற்றி சொல்லிவிடுகிறேன். (துள்ளுவதோ இளமை) தனுஷ் உயரம் குறைவாய் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பான். அவன்தான் எங்கள் கேங்கிலே வயதில் "பெரியவன்". பிரம்மன், வெறும் நான்கு எலும்புகளும் ரெண்டு மீட்டர் தோலும் வைத்து கின்னஸ் முயற்சியாக செய்தது போலிருப்பான். அவனிடம் இருந்து அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

     "தண்ணியடிக்கலாம் மச்சி" என்று அவன் சொல்லியதும் அனைவரின் வயிற்றிலும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. துணைக்கு முன் அனுபவமிக்க ஒருவனை ( நடராஜ்) அழைத்துக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸை ( நல்லா வைக்கிறாங்கப்பா பேர்) நோக்கி நடக்க ஆரம்பித்தோம். தன் வீர தீர பராக்கிராமங்களை சொல்லிக் கொண்டே வந்தான் நடராஜ். முதன்முதலாக பத்தாவது படிக்கும் போதே குவார்ட்டர் மானிட்டரை ராவா அடிச்சேன் என்று அவன் சொன்னதை எல்லோரும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சும்மா கத விடாதடா. அப்படி அடிச்சா வயிறெரிஞ்சு போய்டும் என என்னுடைய பொது அறிவை சபையில் சமர்ப்பித்தேன். அவன் சொல்கிற மாதிரி அடிக்க வேண்டாம் என நண்பர்களுக்கும் கூறினேன். அவனோ அப்படி அடிச்சாதான்டா கிக்கு என் உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

      ஒரு வழியாய் பாருக்குள் நுழைந்தோம். அங்கே இருந்த சிறுவனிடம்(பாவம்!!) எல்லோரும் வேண்டியதை ஆர்டர் செய்தோம். நடராஜ், தனக்கொரு குவார்ட்டர் ஓல்ட் மன்க் என்றான். "மிக்சிங் சார்" என்றவனிடம் வேண்டாம் ஒரு ஊறுகாய் பாக்கெட் மட்டுமென்றான். அடுத்து ஏழுமலை சொன்னான் "எனக்கொரு பீரு, ஒரு வாட்டர் பாக்கெட்". எல்லோரும் அவனை ஒரு மாதிரியாய் பார்க்க அவ‌ன் என்னைப் பார்த்து பாவமாய் சொன்னான் " ராவா அடிச்சா என் உடம்பு தாங்காதில்ல மச்சி"

***********************************************          இந்த முறை ஏழுமலையின் "நீர்ப்பாசனத்திற்கு" சுதர்சன் வழி செய்தான். அவனுடைய அக்காவின் திருமணத்திற்காக (அப்படி சொல்லித்தான் போனோம்) பாண்டிச்சேரி சென்றோம். மலிவு விலை மதுவையும் அட்டகாசாமன "ராம் இன்டெர்னேஷனல்" ரூமையும் பார்த்த ஏழுமலை, அன்று மலை ஏறுவது என‌ முடிவு செய்தான். வழக்கமாய் "சொட்டு நீர்ப் பாசனமே" செய்யும் அவன், அன்று பம்ப் செட்டைப் போல அடிக்க போவதாக சபதமிட்டான்.

    அதற்கு முதல் நாள்தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பார்த்திருந்தான். 8 PM ஆஃபை பார்த்தவுடன் அவன் மனதும் படத்தின் பெயரைப் போல ஆனது. மணிவண்ணன் ஞாபகம் வர, கொடுடா நான் திறக்கிறேன் என்றான். "மச்சி இத எப்படி திறக்கனும் தெரியுமா? கீழ‌ ஒரு தட்டு இப்படி..மேல ஒரு தட்டு" அவ்ளோதான் தட்டின வேகத்தில் பாட்டில் கீழே விழ மொத்த க்ரூப்பும் அவனை குரூரமாக பார்த்தது. வேறு வழியில்லாமல் அவனை அடிக்க முடிந்த அளவு அடித்து விட்டு , சரக்கடிக்க நல்ல பாரை தேடி வெளியே வந்தோம்.   

       உள்ளே நுழைந்தவுடன் என காதை கடித்தான் "மச்சி, நான் நிறைய அடிக்க போறேன். எவ்ளோ அடிக்கிறேனு கணக்கு வச்சிக்கோ. காலைல கேட்பேன்" என்றான்.

     எனக்கு அநியாயத்திற்கு சிரிப்பு வர, அதற்குள் சரக்கு வந்த்தால் அடக்கிகொண்டேன். நாலு பேருக்கு ஒரு ஃபுல் வாங்கினோம். "மச்சி போதுமா, நான் நிறைய அடிக்க போறேன் என்றான். எங்கள் ரியாக்ஷனை கண்டு மூடிக்கொண்டான். முதல் ரவுண்ட் முடியுமுன்னரே அவன் சவுண்ட் அதிகமானது. அவன் அந்த முதல் க்ளாசையே மூக்கை மூடிக்கொண்டு ஒரு முறை, கண்ணை மூடிக்கொண்டு ஒரு முறை, வழக்கம் போல் சொட்டு சொட்டாய் ஒரு முறை அடித்தும் மீதி இருந்தது. மீதி மூவரும் ஒரு வழியாய் ஃபுல்லை முடித்தோம். "மச்சி கிளம்பலாமா?" என்றேன் ஏழுமலையிடம். "எதுக்கும் ஒரு குவார்ட்டர் வாங்க்கிகலாம் மச்சி. ரூமுக்கு போய் அடிப்பேன்" என்றான்.

  வெளியே வரும்போது ஆடிகொண்டே வந்தான். அந்த பார் கட‌ற்கரைக்கு அருகில் இருந்ததால் அதனால்தான் ஆடுகிறான் என்று நினைத்துக் கொண்டோம். அவ்வழியே சென்ற ஒரு பெரியவரிடம் "பொட்டி இருக்கா தாத்தா" என்றான் ஏழுமலை. அவரும் "என்ன பெட்டிப்பா?" என்றார். 

உன் உருவத்துக்கு ரயில் பொட்டியா தூக்குவ?தீப்பொட்டிதான்.

  ஏன்ப்பா உன் வயசு பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. என் பேரன் பேரு கூட போனா வாரம் புக்ல எல்லாம் வந்தது என்று அவர் பேச ஆரம்பித்தார். (ஒரு வேளை பரிசலை சொல்லியிருபாரோ)

"போ பெருசு நான் ஸ்கூல் படிச்சப்பா கூடத்தான் எல்லா புகலயும் என் பேரு இருந்தது" என்று பதிலடி தந்து கிளம்பினான்.

   அடுத்து நேராக ஒரு ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றான். "ஆட்டோக்கார், வண்டி ராம் இன்டெர்னேஷனலுக்கு போவுமா?

    போகும் என்ற அவ‌ரிடம், "அப்ப போக வேன்டிதானே? இங்க ஏன் வெட்டிய இருக்கீங்க" என்றான். சும்ம விடுவாரா ஆட்டோக்கார், பின் அவரிடம் கெஞ்சி மண்ணிப்புபக் கேட்டு அவ‌னை மீட்டு வந்தோம். ஒரு வழியாய் அவனை ரூமில் அடைத்தோம். நள்ளிரவில் எழுந்து வாந்தி எடுத்தான். உண்மையாக அவன் அடித்த்தை விட அதிகம் எடுத்தான்.

     மறு நாள் காலை அனைவரும் திருமணத்திற்கு சென்றோம். ஏழுமலை மட்டும் பாதி மப்பிலே வந்தான். மண்டபத்தில் வாசலில் நின்று கொன்டிருந்த அவனிடம் ஒரு பாட்டி " தம்பி தள்ளுப்பா" என்றார்.

"நான் தள்ளுனா நீ விழுந்துடுவ பாட்டி" என்றான். சொன்னது மட்டுமில்லாமல் ஒரு வில்ல சிரிப்பு சிரித்தான்.

    " ஃபேன் காத்து இப்படி வருது, பறந்துடிவியே சொன்னேன். அப்புறம் உன் இஷ்டம் " என்று பதிலடித்துவிட்டு சென்ற பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தவன் திடிரென்று கேட்டான்.

"நைட் எவ்ளொ மச்சி அடிச்சேன். இன்னும் சுத்துது"

Nov 24, 2008

காக்டெய்ல் (கண்டிப்பாக‌ ஆண்களுக்கு மட்டும்)

123 கருத்துக்குத்து

    நான் சிங்கையில் இருந்தபோது நண்பன் ஒருவன் ச்சுவிங் கம் நிறைய வாங்குவான். ஒரு நாள் அவனிடம் ஏன் என்று கேட்ட‌போது சொன்னான், "வெங்காயம் வெட்டும்போது இத மென்னுகிட்டே இருந்தா கண்ணுல தண்ணி வராதுடா". உண்மைதான். வெண்பூ,பரிசல்,தாமிரா போன்றவர்களுக்கு உபயோகமா இருக்குமே என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

**********************************************           பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கண்ணிமைப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாவம் ஆண்கள், ஒரு கண் மட்டும் இமைப்பது இயற்கை என்று புரிந்துக் கொள்ளாமல் கண்ணடிப்பதாக மாட்டிக் கொள்கிறார்கள். (என்னது.. பாதின்னா ஒரு கண் இமைப்பது இல்லையா?)

**********************************************          இது கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர். என நண்பனுடைய நண்பன் ஒருவன் ஜகஜ்ஜால கில்லாடி. நிறைய பெண் நண்பிகள் உண்டு அவனுக்கு. ஒரு நாள் அலுவலக பார்ட்டி முடிந்து லேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ஹிஹிஹி) என்ற‌ பெண்ணுடன் வீட்டுக்கு வந்தானாம். மறுநாள் அந்தப் பெண் அழைத்து "what we did is not right dear" என்றாளாம். அதற்கு அவன் சொன்னது "yeah. i too think about that honey. come..today we will do it in proper way ".

பி.கு: உன் நண்பனுடைய நண்பன் நீ தானே என்று தவறாக நினைப்பவர்கள் சட்டக் கல்லூரி வாசலில் படுக்க வைக்கப்படுவார்கள்.

**********************************************          திருமணம் வரை பெண்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை அதிகம் இருக்குமாம். ஆனால் மனைவி என்ற ஒருவள் வந்த பிறகுதான் ஆண்களுக்கு எதிர்காலம் என்பதைப் பற்றிய கவலை வருமாம்.

  ஆண்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெண்கள் திருமண‌த்திற்கு சம்மதிக்கிறார்கள். ஆனால் மாறுவதில்லை. பெண்கள் மாற மாட்டர்கள் என்ற நம்பிக்கையில் தான் ஆண்கள் இருக்கிறார்கள். அய்யகோ மாறிவிடுகிறார்களே.

   திருமணத்திற்கு பின் செய்யும் சின்ன சின்ன தவறையெல்லாம் ஆண்கள் எளிதில் மறந்துவிடுகிறார்களாம். ஒரு ஆய்வு சொல்கிறது இதை. அதுசரி, எதற்கு ஒரே விஷயத்தை இரண்டு பேர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்?

பி.கு: என்னதிது? திருமணம் பற்றி இவ்வளவு விவரங்கள் சொல்கிறேன்!! தாமிரா அண்ணே!!!சீக்கிரம் வந்து என் மனச மாத்துங்க..

*************************************************

  எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு சமயத்தில் மட்டும் தான் ஆண்கள் பெண்களை சரியாக புரிந்துக் கொள்வதில்லை.

--

--

--

--

--

--

--

--

--

--

1) திருமணத்திற்கு முன்

2) திருமணத்திற்கு பின்

*************************************************

ஒரு ஜோக்:

     பெரிய சண்டைக்குப் பின் மனவி சொன்னாள் " உங்கள கல்யாணம் பண்ணப்ப நான் லூஸா இருந்திருக்கிறேன்". கன‌வன் சொன்னான் "ஆமாம் செல்லம். அப்போ நான் உன்னை லவ் பண்ணிக்கிட்டு இருந்ததால கவணிக்கல.

*************************************************சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

   ஆண்கள் உடுத்தும் சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கம் இருக்கும் என்பது நாமறிந்ததே. பெண்கள் சட்டையில் அது ஏன் இடது பக்கம் இருக்கிறது?

Nov 23, 2008

பிரவாகத் தமிழும்.. திராவிட கழகங்களும்.. இன்று???

22 கருத்துக்குத்து

    அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன். இந்த பதிவு நம்ம தல நர்சிம்மின் பதிவென்பதால் உரிமையுடன் போடுகிறேன். 

************************************************

    "பேஷா" பண்ணிடலாம், "ஷரத்து" வாபஸ், மெட்ராஸ் மாகணம்...என்று இருந்த ஆட்சிமொழியையும் மக்களையும்.. தங்கள் பிரவாகத் தமிழால்,துள்ளல் மொழியால், இலக்கியத்தால்,எதுகை மோனையால் தன்பால் வசீகரித்து திருப்பிக் கொண்டது அன்றைய பேச்சாற்றல். ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது அவர்களின் தமிழ். அந்தத் துள்ளல் தமிழில் அவர்களின் கொள்கை முழக்கங்கள் மக்களை எளிதாக சென்றடைந்தது. தந்தை பெரியார் விதைத்த விதை வேர்விட்டு பெருமரமாகி உருமாறியிருக்கிறது..

அறிஞர் அண்ணா :

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..

கலைஞர் கருணாநிதி : எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
     இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்.

காளிமுத்து : "மயிலுக்கு தோகை கன‌க்கிறது என்று குயிலுக்கு என்ன கவலை?" என்று இவர் தமிழ் பேச ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்ததெல்லாம் கூட்டம் சேர்ந்துவிடும்..
உலகத்தமிழ் மாநாட்டில் இவர் மூச்சுவிடாமல் பேசிய பேச்சைக் கேட்டு மூர்ச்சையாய்போய் நின்றது மாநாடு. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை இவர் பட்டியல் இட்டதை பார்த்து நெடுநேரம் தட்டிக்கொண்டிருந்தது முதல்வர் எம்ஜிஆரின் கரங்கள்.. "கருவாடு மீனாகாது,கறந்த பால் மடி புகாது" இன்றும் வழக்கில் உள்ள இவரது வார்த்தைகள்.

நாவலர் : எதைப்பற்றி பேசினாலும் அதன் முழு விபரத்தையும் கொடுக்கும் பாங்கு நாவலரின் தமிழ். நிதானமாக ஆனால் அழுத்தமாக இவர் பதிந்த பேச்சுக்கள் இவரை " நாவலர்" ஆக்கியது.

வைகோ : "ஏதென்ஸ் வீதியிலே... என்று ஆரம்பித்து.. பின் கர்ணனின் நட்பைத்தொட்டு,கலைஞரின் தலைமை பற்றி..என்று இவரின் தமிழ், தமிழ் நாட்டையே வசப்படுத்தி இருந்தது ஒரு காலம்.இவரின் ஆவேசப் பேச்சினால் உணர்ச்சிவயப்படாதவர் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.. ஆழ்ந்த இலக்கிய அறிவும்,வரலாற்று செய்திகளையும் இணைத்து இவர் முழங்கினால் மணிக்கணக்கில் கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

    மேலும் அன்றைய வட்ட,மாவட்ட, நகர பதவிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சும் கட்டிப் போட்டது.. ஏனெனில் அவர்கள் தங்களின் தலைவர்களை பின்பற்றி பேசியதால்...
ஆனால் இன்று...
   மாணவரணியையோ..இளைஞரணியையோ தங்களின் தமிழால் கட்டிப்போட இன்று அடுத்த கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை...

ஸ்டாலின் : ஓரளவு பேசினாலும் பெரிய ஈர்ப்பு இல்லை.. வரலாற்று குறிப்புகளில் தவறுகள் தென்படும்

கனிமொழி : இவரின் எழுத்தில் இருக்கும் ஆழம் பேச்சில் இல்லை..

தயாநிதி: இவர் தமிழ் பேசினால் அஜித் ஐஸ் விற்பது போல் இருக்கிறது..

விஜயகாந்த் : தமிள் அல்லது தமில் பேசுகிறார்.

T.ராஜேந்தர் : இவர் தமிழ்.. விடுங்க..உங்களுக்குத்தான் தெரியுமே..

    இப்படி தமிழ் பேச்சு ஆறாகத் தொடங்கி இன்று வாய்க்கால் அளவு கூட இல்லை..

   இன்றும் திருச்சி சிவா,கம்பம் செல்வேந்திரன் போன்ற நல்ல பேச்சாளர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.. தமிழச்சி தங்கபாண்டியனின் தமிழும் அவையைக் கட்டிப்போடும் திறன் கொண்டதே... ஆனால் கயல் விழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைப்பதில்லை.. தலைவர்களும் அடுத்த கட்ட தலைமுறையில் இலக்கிய பிரவாக மேடைப்பேச்சிற்கு முக்கியதுவம் கொடுத்து வாய்ப்பளிக்கவில்லை..
நல்ல தமிழையும் இலக்கியத்தமிழையும்,எதுகைமோனையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.. ஏனெனில்
"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி"

    இந்த பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்க இங்கே கிளிக்குங்கள்.

Nov 21, 2008

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டேன்

555 கருத்துக்குத்து

   காது கிழியும் சத்தத்தின் நடுவே மகிழ்ச்சியாக வேலை செய்திருக்கிறேன். என்னை நானேத் தொட்டுக் கொள்ள யோசிக்கும்படி உடையும் உடலும் அழுக்கான போது வெற்றிப் புன்னகை பூத்திருக்கிறேன். ஓடாத இயந்திரத்தை சரி செய்கிறேன் பேர்வழி என நேரத்தை கடத்தும் போது "கொஞ்சம் நகருங்கள்” என்பேன். "நாங்க பார்த்துக்குறோம் சார்" என்பதை அலட்சியம் செய்து முடித்து காட்டியிருக்கிறேன்.எந்த‌ நாளும் வேலை முடிந்து திரும்பும்போது நிறைவாக உண‌ர்ந்தே சென்றிருக்கிறேன்.

     எது என்னை மாற்றியது எனத் தெரியவில்லை. தகவல் தொழில்நுடபம் என்ற மாயை உலகுக்குள் நுழைய ஏதோ ஒன்று என்னை செலுத்தி இருக்க வேண்டும். சரியாய் ஒரு வருடம்தான் ஆகிறது. இனி என் வாழ்க்கை இங்கேதானோ என்று நினைக்கும் போதுதான் எவ்வ்ளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று புரிகிறது.

     உற்பத்தி துறையை சேர்ந்த என்னை தகவல் தொழுநுட்பத்திற்கு தத்துக் கொடுத்தவிட்டது காலம். தெரிந்தோ தெரியாமலோ இதுவே என் சபையென்று உறுதி வளர்த்தலைந்தேன். அவ்வபோது தேவைப்படுமென கார்கோ பேன்ட்டின் ஏதோ ஒரு பாக்கெட்டில் ஒரு தூக்கத்துடன் தான் அலுவலகம் நுழைகிறேன்.வேலையின் வேலையை பின்னுக்குத் தள்ளிவிட்டு மின்னஞ்சல்கள் படிப்பதை தலையாய வேலையாக செய்கிறேன். இணையத்தளத்தின் இன்ச் இடுக்குகளில் எல்லாம் போய் தகவல்கள் சேமிக்கிறேன். எந்திரமாகி விட்ட வாழ்க்கையை மறைக்க எந்திரனின் புகைப்படங்கள் தேடுகிறேன்.

    எனக்கு இடப்பட்ட பணியை முடிப்பதற்கு முகமறியாத மனிதன் கான்ஃப்ரன்ஸ் காலில் மிரட்டுகிறான். பத்துக்கு பத்து அறைக்கு நான் வாடகை கொடுத்தாலும் இலவச விருந்தாளியா வாழும் கொசுவுக்கு பயந்து ஓவர்டைம் என்ற பெயரில் அலுவலக நாற்காலியில் குடியிருக்கிறேன். சத்தத்தை வைத்தே மிஷினில் என்ன பிரச்சனை என்று சொல்ல்த் தெரிந்த எனக்கு எத்துணை முறை படித்தும் பிஸ்னஸ் ரிக்வையர்மென்ட்ஸ் புரிவதில்லை.

   இந்த முகமூடி என் மூச்சையே நிறுத்துகிறது. மென்பொருள் தேடும் நான் மெய்ப்பொருள் காண்பது எப்போது?எலியை கையில் பிடித்து நான் பொறியில் சிக்கிக் கொண்டேன். பொட்டித் தட்டும் வேலையிலிருந்து பொட்டி கட்டும் நாளுக்காக காத்திருக்கிறேன்.நான் படித்ததுதான் இயந்திரவியல். ஆனால் இங்கே வாழ்க்கையே இயந்திரவியல்.

Nov 20, 2008

பதிவர்கள பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?

108 கருத்துக்குத்து

    நல்லாயிருக்கீங்களா மக்கா? இந்த வாரம் முழுக்க நம்ம டவசர் டேமேஜர் கையில நல்லா மாட்டிக்கிச்சு. நகர முடியல. அதான் நேத்து மீள்பதிவு. இன்னைக்கு ஆள்பதிவு. புரியலையா? நம்ம பதிவர்கள் வச்சு ஒரு புதிர். ஆள் யாருன்னு ஈஸியா கண்டுபுடிச்சிடுவீங்க. ஆனா எல்லா வரிக்கும் அவருக்கும் என்ன தொடர்புன்னு சொல்லுங்க.    

1) சம்சார சமாச்சரத்தால புகழ் பெற்றாரு இவரு
   மின்கடத்தும் இவர் பேரை திருடிட்டாரு அவரு
   ரெண்டு பேர்ல முதல்ல எழுத வந்தவரு எவரு
   கண்டுபிடிச்சா கிடைக்கும் 100  யூனிட் பவரு

2) இவர் பெய‌ரில் இருப்ப‌து நேரில் தெரிய‌வில்லை
    நேரில் அவ‌ர் சொல்வ‌து எளிதில் புரிய‌வில்லை.
   மேனாமினுக்கும் இவ‌ர் வ‌லைக்குத்தான் புதுசு
   பேனாமினுக்கும் இவர் எழுத்துக்குண்டு தனி ம‌வுசு.

3) அம்மாவாலத்தான் இவருக்கு கிடைச்சது பேரு
    நம்ம நாட்டுக்காரு இல்லை வெளிநாட்டுக்காரு
    இவர் பேர்ல இவன் எழுதறது எல்லாம் போரு
    இந்த மொக்கையெல்லாம் எழுதவிட்டது யாரு?

4) இந்த‌ இசை அத்த‌னை ப‌ரிச்ச‌ய‌மில்லை த‌மிழ‌ருக்கு
    பதிவில் முத‌லிட‌ம் பெற‌ இவ‌ருக்கு ம‌ட்டும் வ‌ழியிருக்கு
    இவர் பெயரை முத‌லில் க‌ண்டுபிடிக்கும் வாய்ப்பு யாருக்கு?

5) ம‌ன‌சு நிற‌த்தில் ச‌ட்டைப் போடுவாரு
    யாருக்கு உத‌வி தேவைனு தேடுவாரு
    இந்த‌ அண்ண‌ன் அம்ச‌மா பாடுவாரு
    அசைவ‌ சாப்பாட்ட‌ பார்த்தா  ஓடுவாரு.

6) இளைஞர்களுக்கு அந்த மாமி
    இளைஞிகளுக்கு இந்த சாமி
    யார் இவர்னு கொஞ்ச‌ம் காமி..

7) மரியாதையாகத்தான் தொடங்கும் இவரு ஊரு
    '..ப்பூ' இந்த ஊரான்னு முடியும் அதன் பேரு
   சிந்திக்கும் சிறிய கடவுளாக இவரு மாறிட்டாரு
   குட்டி இதழில் எழுதற அளவுக்கு தேறிட்டாரு

8) வேறு மொழிக்கு தமிழர்த்தம் அறிய தேவை அகராதி
    தமிழிலே புரியாமல் எழுதும் ஒரு பின்நவீனத்துவவாதி
    கதர் சட்டைகளை விற்பதற்கு இருக்கவே இருக்கு காதி
    இவர படிச்ச நக்கல் மன்னனுக்கு ரெண்டு நாளா பேதி..

 

    அப்படியே மேலே தமிமண பட்டை தெரிஞ்சா(?) என் முதுகுல குத்துறதா  நினைச்சு ஒரு குத்து குத்துங்க. நீங்க பெரிய ஆளு இல்லையா? அதனால் கட்டை விரலு மேல இருக்கிற இட‌த்துல குத்துங்க. அப்படியே போன பதிவுல க்மெண்ட் போட்ட எல்லோருக்கும் ஒரு தபா தாங்க்ஸ் சொல்லிக்கிறேன். ரெடி..ஸ்டார்ட்..ஜூட்.. இதோ வந்துட்டேன் டேமேஜர்...

Nov 19, 2008

பரிசலும் குசும்பனும் ஒரு மீள்பதிவும்

61 கருத்துக்குத்து

பரிசல் : ஏன் குசும்பா, பதிவுலகம் மாறிடுச்சுப்பா.. எல்லோரும் ஏதாவது நல்ல விஷயங்கள எழுதுறாங்க.. நீயும் எழுதலாம் இல்ல?

குசும்பன் : ட்ரெயின் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பொட்டி கடைசியாத்தான் வரும்

பரிசல்: அய்யணார் உன் நண்பன்தானே? அவரும்தான் வலை வச்சிருக்காரு.. அதுல அவர் எழுதுற மாதிரி நீ ஏன் எழுத மாட்டற?

குசும்பன் : லன்ச் பேக்ல லன்ச் இருக்கும், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா?

பரிசல்: அவரு கூட சேர்ந்தா உனக்கும் அறிவு வள‌ருமில்ல?

குசும்பன் : ப‌ஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னா பஸ் வரும்.ஃபுல் ஸ்டாப் பக்கத்துல நின்னா ஃபுல் இல்ல,ஆஃப் கூட வராது

பரிசல் : நான் அவியல் எவ்ளோ நல்ல எழுதறேன்.அது மாதிரி நீ பொரியல்னு எழுதனா நல்ல இருக்குமில்ல?

குசும்பன் : சைக்கிள் ஓட்டுறது cycling..அப்போ ட்ரெயின் ஓட்டுறது training?

பரிசல்: மத்தவங்க நல்ல எழுதினா மறக்காம பாராட்டுற இல்ல..அப்புறம் ஏன் நீ அது மாதிரி எழுத கூடாது?

குசும்பன் : மண்டை உடையாம இருக்க ஹெல்மெட் போடலாம்.ஹெல்மெட் உடையாம இருக்க மண்டைய போட முடியுமா?

பரிசல்:  இவ்ளோ நக்கல் பிடிச்சவனா இருந்தாலும் உனக்கு ரொம்ப இளகன மனசுனு சென்ஷி சொன்னாரு..

குசும்பன் : காக்கா என்ன‌தான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைதான்

பரிசல்: ஆனா போன மாசம் நீ எழுதின இரங்கல் பதிவ படிச்சேன். அதுல கூட குசும்புதானா?

குசும்பன் : முட்டை என்னதான் வெள்ளயா இருந்தாலும் அதுல இருக்கிற காக்கா கருப்புதான்..

_______________________________________________________

குசும்பன்:   என்னை இத்தணை கேள்வி கேட்ட இல்ல..இப்போ நான் கேட்கிறேன்... கோவியாருடைய பதிவுக்கு எதிர் பதிவு எழுத முடியுமா உன்னால?

பரிசல்: ஏம்ப்பா, டேங்கர் லாரியோடு டிவிஎஸ் 50 ய மோத விடனும்?

குசும்பன்: சரி,அப்போ கார்க்கியோட பதிவுக்கு எதிர் பதிவு எழுது

பரிசல்:  தக்காளி மேல பூசணிக்காய உருட்டினா நசுங்கிடும் குசும்பா..

குசும்பன்: அய்யனார படிச்சிருக்கியா?

பரிசல்:   இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்னப்பா வேல?

குசும்பன்: சரி, லக்கிய விட்டு உனக்கு எதிர்பதிவு எழுத வைக்கலாமா?

பரிசல்:  எறும்ப அடிக்க எதுக்குப்பா ஏ.கே.47 ?

குசும்பன்:  அப்போ நீ லக்கிக்கு எதிர்பதிவு எழுதி ஒரு விளம்பரம் கொடு..

பரிசல்:   சூரியனுக்கு எதுக்குப்பா டார்ச்?

குசும்பன்: அப்போ எனக்கு கொடு

பரிசல்:    நிலாவுக்கு எதுக்குப்பா ஏ.ஸி?

குசும்பன்:  அப்போ இனிமேல எதிர் பதிவே எழுத மாட்டியா?

பரிசல்  : உப்பு இல்லாம உப்புமாவா?

குசும்பன்:  இந்த பதிவுக்கும் போய் எதிர்பதிவு போடுவியா?

பரிசல்: பொங்கலுக்கே வெடி வெடிப்பேன்.தீபாவளின்னா விடுவேனா?

Nov 18, 2008

பதிவர் சந்திப்பு புகைப்படங்களும் சில உண்மைகளும்

44 கருத்துக்குத்து

 

 

வெண்பூ : எட்டணா கொடுத்து பயாஸ்கோப்பு பொட்டிய பார்த்தா மாதிரியே பார்க்கிறார். கேமிரா புடிக்க தெரியாத தாமிரா..

தாமிரா: என்னப்பா.. ஹீரோவே படம் எடுத்தா எப்படி? என்ன யாராவ்து எடுங்களேன்..

அதிஷா : நான் இன்னும் ஃபிலிம் ரோலே போடல. அதுக்குள்ள இந்த அலப்பறையா? பின்னாடி நின்னு இவரு டவுசர கிழிக்காம விட மாட்டேன்.

கும்க்கி: எனக்கு எதையவாது கீழ போட்டாதான் எடுக்க தெரியும். ஃபோட்டோ எடுக்கவா? கிழிஞ்சது கிருஷ்னகிரி..


கேபிள் சங்கர் : இவருதான் லக்கியா? டிக்கிய காணோம்..

லக்கி : பார்த்தா ஆட்டோ சங்கர் மாதிரி இருக்காரு. அமுக்கியே வாசிப்போம்.

டோண்டூ : சமீபத்தில் 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது......

 

 

பரிசல்காரன்: வேற ஒன்னும் இல்லைங்க.. நம்ம நர்சிம்ம அவங்க ஜே.கே.ரித்தீஷ்னு தப்பா நினைச்சு பந்தோபஸ்து கொடுக்கறாங்க..

நர்சிம் :அப்படியா? நான் இவர தனுஷ்னு நினைச்சு கொடுக்கறாங்கனு இல்லை நினைச்சேன்.

ரமேஷ் வைத்யா: நான் பரிசல்தான் குசும்பன் சொன்ன மாதிரி பரோல்ல வந்திருக்காரு. அதுக்குதான் பாதுக்காப்புனு நினைச்சேன்.

(உண்மையில் பிரபல பதிவர் கார்க்கி வருகிறார் என்ற‌ தகவல் உளவுத்துறைக்கு கிடைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தவே அங்கு போலீஸார் குவிக்கப்பட்டன்ர்)

 

வெண்பூ : எத போட்டாலும் தொப்பையை மறைக்க முடியலையே!!!

புதுகை.அப்துல்லா: நல்லாப் பாருங்க எனக்கு மீசையே இன்னும் வரல. அதனால் எல்லோரும் எனக்கு அண்ணே தான்..

கும்க்கி : 52 வயசாச்சு.எனக்கு கூடத்தான் வரல. என்ன செய்யுறது?

புரூனோ : என் கையில சிகரெட் இல்லை. நல்லாப் பார்த்துக்கோங்க.

குட்டிப்பிசாசு : நான் ஊதியே காட்டுறேன்..

(ந‌டுவில் இருப்பவர் அக்னிபார்வை)

 

 

பாலபார‌தி: நடுவுல இருப்பவருதான் 'அந்த' படத்தோட ஹீரோ. கூட இருக்கிறவங்க சைடு ஆர்ட்டிஸ்ட்.

கார்க்கி : ண்ணா.. ரமேஷ்தான் சைடு ஆர்டிஸ்ட். நான் இன்னும் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் தாண்ணா..

வலது ஓரத்தில் இருப்பவர் : மீசையெல்லாம் முறுக்கி காட்டுறேன். நம்மள கணக்குல எடுத்துக்க மாட்டறாங்களே!!!

_______________________________________________________

பி.கு: புகைப்படங்கள் பரிசலின் வலையில் சுட்டது. யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கனு நம்பி போடுறேன்..

Nov 17, 2008

காக்டெயில்

60 கருத்துக்குத்து

    

   தமிழ்மணம் சூடான இடுகைகள் என்பதை 20 வாசகர் பரிந்துரை என மாற்றியது நல்லதே. ஆனால், எனக்கு நல்லதல்ல. நான் ஏற்கனவே புலம்பியது போல் எதிர் வாக்குகள் அதிகம் விழுகின்றன. அப்படி என்ன என் மேல் கோவம் எனத் தெரியவில்லை. இன்னமும் நான் அனானிகளுக்கு பெட்டியைத் திறந்தே வைத்திருக்கிறேன். வாக்களிப்பவர்கள் காரணத்தை சொன்னால் மகிழ்ச்சியடைவேன். அது மட்டுமல்லாமல் பரிந்துரையில் 2 வாக்குகள் பெற்ற பதிவெல்லாம் இருக்கும் போது 7 வாக்குகள் வாங்கிய என் பதிவு இல்லை. தமிழ்மணம் கூட எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லையே!!! பார்த்து செய்யுங்கப்பா...

_______________________________________________________

  பதிவர் சந்திப்பில் ரமேஷ் வைத்யா(கிழஞ்செழியன்),பரிசல், நர்சிம், கும்க்கி,முரளிகண்ணன், குட்டிப்பிசாசு, அத்திரி, வெண்பூ, அக்னிபார்வை,Sri ஆகியோருடன் அதிக நேரம் பேச முடிந்தது. இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலருடன் சில நிமிடங்கள் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் என் பெயரை சொன்னவுடன் அடையாளம் கண்டது மட்டுமல்லாமல் "சகா" என்று சொன்னது நினைத்து இன்னமும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

_______________________________________________________

     வாசிக்கும் பழக்கம் இருக்கும் யாரையாவது சந்தித்தால் புத்தகம் கொடுப்பது என் வழக்கம். ஆனால் பதிவர் சந்திப்புக்கு வரும் அத்தனை பேருக்கும் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால் யாருக்கும் கொடுக்க முடியவில்லை. ஆனால் பரிசலுக்காக சுஜாதாவின் "திரைக்கதை எழுதுவது எப்படி" என்ற புத்தகத்தை வாங்கி முதல் பக்கத்தில் "பரிசல்காரன்" என்றெழுதி அதனடியில் இப்படி எழுதி தயாராய் வைத்திருந்தேன்.

"பரிசல்காரன்"

விரைவில்

திரையில்...

நட்புடனும் நம்பிக்கையுடனும்,

சகா கார்க்கி..

   சந்திப்புக்கு மறுநாள் அவரைக் காண அவர் த‌ங்கியிருந்த இடத்திற்கு சென்றால் அவர் ஜாகை மாறியிருந்தார். அலைபேசியபோது அவர் இருந்த இடத்திற்கு வர சொன்னார். என்னுடன் என் நண்பனும்(நானும் ஒருவன்) இருந்தான். மேலும் எனக்கு மாலை ஐந்து மணிக்கே ட்ரெய்ன் என்பதால் அவரை சந்திக்க முடியவில்லை.அடுத்த முறை பார்க்கும்போது தரணும்.

_______________________________________________________

   மதியம் கும்க்கி அழைத்தார். நல்ல வேலை அவர் இருந்த இடத்திற்கு அருகில்தான் நான் சென்று கொண்டிருந்தேன். உடனே அவரைச் சென்று பார்த்துவிட்டு அவரிடம் இருந்து முத்தான மூன்று புத்தகங்களை களவாடினேன். நர்சிம் சொன்னதைப் போல வாசிப்பை சுவாசிப்பாக கொண்டவர் அண்னன் கும்க்கி. என்னிடம் அவர் காட்டிய நெருக்கம் எனக்கு பெருமை தந்தது.

   கும்க்கி மட்டுமல்ல, அனைத்து பதிவர்களுமே நான் நினைத்ததை விட மேலாய் என்னை நடத்தினார்கள். ஒரு மொக்கைப் பதிவராய் தான் என்னை நடத்துவார்கள் என நினைத்துதான் சென்றேன். ஆனால் தலைகள் எல்லாம் என்னிடம் காட்டிய அன்பு... நன்றி என ஒரு வார்த்தையில் சொல்ல முடியவில்லை.ஒவ்வொருவரை பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. ஒரே பதிவில் எழுதாமல் ஒரு காக்டெயில் கலக்கும்போது ஒரு பதிவர் என‌ எழுதலாம். அடுத்த வாரம் நர்சிம்...

_______________________________________________________

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

   வன்முறைக்கு எதிரான வன்முறையும் அஹிம்சைதான் என்று சொல்லும் சிலர் கொலை குற்றத்திற்காக வழங்கப்படும் மரண தண்டனையை மட்டும் ஏன் தவறென்கிறார்கள்?

தமிழ் வலையுலகமே தூங்குகிறதா?

268 கருத்துக்குத்து

  

     தமிழ்மணம்தானே தூங்குகிறது? அதனால் என்ன மொத்த தமிழ் வலையுலகமே தூங்குகிறதா? என்னால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சனிக்கிழமை காலை சென்னை வந்து இறங்கியவுடன் தான் அதைப் பார்த்தேன். எப்படி இதை நம் பதிவர்கள் விட்டார்கள்? ஒரு வேளை பதிவர் சந்திப்பைப் பற்றிய நினைவுகளில் இருந்து விட்டார்களோ?

   அது சென்னைப் பதிவர்களுக்கு மட்டும்தானே? மற்றப் பதிவர்கள் போட்டிருப்பார்களே? என்ன இருந்தாலும் இப்படி ஒரு வரலாற்றுப்ப் பிழை நடந்ததை எண்ணி இன்னமும் நான கவலையில் இருக்கிறேன்.

   அச்சு ஊடகங்கள் காசு வாங்கிக் கொன்டு சில விதயங்களை இருட்டட்டிபு செய்வதுப் போல் பதிவர்களுமா? நினைக்கவே பயமாக‌ இருக்கிறது.

    இவர்கள் நினைத்தாலும் இந்த செய்தியை நான் என்னால் முடிந்தவரை பரப்புவேன். இதைப் பார்த்ததும் இன்னும் பல பதிவர்கள் இச்செய்தியை போட முன்வருவார்கள்.

    அட, என்ன செய்தி என்றே சொல்லவில்லையா?

  இன்றைய தமிழகம்

  நாளைய பாரதம்

  நாளை மறுநாளைய உலகம்

  அடுத்த அமெரிக்க அதிபர்

  வெள்ளை உள்ளம்

  குள்ள உருவம் கொண்ட‌

  வீரத்தளபதி

ஜே.கே.ரித்திஷ் அண்ணன்(தம்பி) நடித்த(?) " நாயகன்" 100வது நாள் சுவரொட்டியைத்தான் பார்த்தேன்.

   நான் கானல் நீரின் 1000வது நாளைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் 100வது நாளை சங்க‌த்து சிங்கங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிட்டேன். இப்படி பண்ணிட்டிங்களே மக்கா...

    தலைவியும் மற்ற முக்கிய பொறுப்பாளர்களும் எங்கிருந்தாலும் உடனே விளக்கம் சொல்ல வேண்டும். கொண்டாட வேண்டிய தருனம்..

ஸ்டார்ட் மீஸீக்..

"இருந்தாக்கா அள்ளிக் கொடு

தெரிஞ்சாக்கா சொல்லிக் கொடு"

Nov 14, 2008

காதலியோடு எங்கெல்லாம் போயிருக்கிங்க?

122 கருத்துக்குத்து

   உன்னுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என நான் எப்போதும் விரும்பியதில்லை. உன் விருப்பத்திற்கு இணங்கி ஊருக்கு வெளியே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றோம்.செவ்வாய் கிழமை என்பதால் நல்ல கூட்டம். பெண்கள் வரிசையில் மெல்ல நீ நகரும்போது உன்னை இடித்துக் கொண்டே வந்தவரிடம் "இப்படித் தள்ளினா நான் எங்க நிக்கறது?" எனக் கேட்டாய். அடுத்த நிமிடம் உள்ளேயிருந்த அம்மன் எழுந்து ஓடிவந்து சொன்னது " உள்ள போய் உட்காரும்மா"

    அடுத்த வாரம் கோயில் வேண்டாமென தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம். குழந்தைகள் எல்லாம் உன்னைச் சுற்றி சுற்றியே வந்தார்கள். எத‌ற்காக எனத் தெரியாமல் நாமும் தள்ளி தள்ளி சென்றோம். பின் தொடர்ந்த அவர்களை ஏனெனக் கேட்ட போது உன் பின்னாலே வந்த பட்டாம்பூச்சியைக் காட்டினார்கள். அதனிடம் சென்றுக் கேட்டேன். அது என்னைத் திருப்பிக் கேட்டது "இந்த பூ ஏன் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது?"

    திருவிழாக்கள் நகர வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதால் கண்காட்சிக்கு சென்றோம். ஒரு பொம்மைக் கடைக்கு சென்று அழகாய் ஒரு பொம்மை வேண்டுமெனக் கேட்டேன். எப்படி வேணும் சார் என்ற அவனிடம் உன்னைக் காட்டி இந்த பொம்மை போல அழகாய் என்றேன். வெட்கப்பட்டு ஓடிவிட்டாய். தேடாமலே சொன்னான் அவன் "அவ்ளோ அழகா இல்லை சார்".

   காதலர்களின் சொர்க்கமான கடற்கரைக்கு சென்றோம். நல்லதொரு இரவு நேரமது. இருன்ட வானில் எரிந்து விழுந்த கல்லைப் பார்த்து  நட்சத்திரம் விழுகிறது என்றேன். நட்சத்திரம் விழாது என்றாய். நீ சொன்னால் சரிதான். ஒரு நட்சத்திரத்தைப் பற்றி இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே தெரியும் என்றேன். வெட்கப்படத் தொடங்கினாய். என்னைப் பார்த்து கொதித்துக் கொண்டிருந்த கடல் கேட்டது "அப்போ இது நிலா இல்லையா?"

    நீ என்னை காதலிக்கிறாய் எனத் தெரிந்து அழத் தொடங்கியது வானம். அது சத்தம் போட்டு அழுவதைக் கண்டு பயந்து நடுங்கினாய் நீ. "இடின்னா எனக்கு பயம். இன்னைக்கு அதிகமா இடிச்சது இல்ல?" என்றாய். ஆம் மொத்தம் 12 என்றேன். அதைக் கூடவா எண்ணினாய் என்பது போல் பார்த்தாய். இடி வரும்போதெல்லாம் உன் முகத்தை என் தோளில் புதைத்துக் கொண்டாய். அதை எண்ணினேன் என்றேன். ச்சீ.. போடா என வெட்கப்பட்டு கைகளில் முகம் புதைத்தாய். இதற்கு மட்டும் உன் கைகளா என்றேன். என்னைப் பார்க்காமலே சொன்னாய் "உன் தோளில் புதைந்தால் வெட்கம் அதிகாமாகிவிடாதா?"

  நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக அழகு நிலையம் சென்றோம். அங்கு இருந்த அழகு சாதன‌ங்கள் எல்லாம் சத்தம் போட்டன "அய் அழகு வருது". சத்தம் கேட்டு வெளியே வந்த நீ அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தாய். எந்த நகை வேண்டுமோ வாங்கிக் கொள் என்றேன்.எனக்கா இந்த நகை என்றாய். அந்த வைர கம்மல் என் காதோரம் சொன்னது. "அய் எனக்கா இந்த சிலை"

   உன் காதலை நீ சொல்லும்முன் உனக்காக நான் காத்திருந்த பேருந்து நிலையம் சென்றோம்.நீ என்னைக் கடக்கும் ஒரு சில நிமிடத்திற்காக ஒரு மணி நேரம் நான் காத்திருந்தக் கதையை கேட்டாய். தலை சாய்த்து, விழி கோணி, உதடு சுழித்து "லூஸாப்பா நீ" என்றாய். ஒரு நாள் வாங்கும் சம்பளத்திற்காக மாதம் முழுவதும் வேலை செய்வதில்லையா என்றேன்.  நீ கேட்ட அழகைப் பார்த்து அதற்காகவே இன்னும் பல லூஸு வேலைகளை செய்யலாம் என முடிவு செய்தேன்.

Nov 12, 2008

தொட்டால் ஒட்டிக் கொள்ளும் புத்த"கம்"

280 கருத்துக்குத்து

   அழைத்த‌தோடு நில்லாமல் "சகா ஜமாய்" என ஊக்கம் கொடுத்த நர்சிம்முக்கு நன்றியையும் மன்னிப்பையும் முதலிலே சொல்லி விடுகிறேன்

   பத்து பன்னிரெண்டு வயது வரை படக்கதைகளிலும், சிறுவர் புத்தகங்களிலும் எல்லோரையும் போலவே ஈர்ப்புடையவனாகத்தான் இருந்திருக்கிறேன். அடுத்த கட்டமெனில் பாக்கெட் நாவல்கள்தான். ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள் ஒரு நூறையாவது படித்துத் தொலைத்திருப்பேன்.அவைகளும் நாவல்கள் என்றபோதும் திருப்தி தந்த முதல் நாவல் மோகமுள்.இன்னமும் பாபுவும் ரங்கண்ணாவும் என் முன் நிழலாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து அம்மா வந்தாள்.

    அதன்பின் நான் ஒரு கவிதையை காதலிக்கத் தொடங்கியதால் கவிதை புத்தகங்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினேன். முத‌லில் கிடைத்த அறிவுமதியின் புத்தகங்கள் மூலம் அறிமுகமான தபூ சங்கர் என்னுள் நிறைந்து இன்றளவும் அவர் செய்யும் தொல்லைகளை நீங்கள் படித்திருக்க கூடும். எந்தக் கவிதையும் அவள் போல் இல்லாததால் குறைந்தக் காலத்திலே அதற்கு மூடு விழா நடத்திவிட்டேன்.

    நான் சிங்கையில் பணிபுரிந்த (2003-2005) காலத்தில்தான் வாசிப்பை சுவாசிப்பாக கொண்டேன் எனலாம். இந்தியாவிலிருந்து வருபவர்கள் என்ன வேண்டும் என்று கேட்டால் ஒரு பட்டியலே சொல்லுவேன். அனைத்தும் புத்தகங்கள். என் பத்து வயதில் எனக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம்தான் "கார்க்கியின் வாழ்க்கை வரலாறு". ஆனால் இதை என் 20வது வயதில்தான் படித்தேன்.என்னை முழுமையாய் மாற்றிய புத்தகமென இதைக் கூறுவேன். பாதி படித்ததும் ஓரங்கட்டிவிட்டு கார்க்கியின் தாய் நாவலை தேடிப் (ப‌)பிடித்தேன். அதைத் தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்கள் மீதான என் தீராக் காதல் தொடங்கியது.

  சிங்கிஸ் ஐத்மதேவ் இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் மரணமடைந்தார்.தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இவரின் முதல் ஆசிரியர் மற்றும் ஒரு லாரி டிரைவரின் கதை இரண்டையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்க்கிக்கு அடுத்தப் படியாக என்னைக் கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி இவர்.

  தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த காதல் கதை என்ற அறிமுகத்தோடுதான் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை முடித்த மறுநாளே துர்கனேவின் ஆஸ்யா என் கையில் கிடைக்க, வெண்ணிற இரவுகளை மறக்கும் அளவுக்கு என்னுள் அழுத்தமாய் பதிந்தது.ரஷ்ய நாவல்களை எப்படி மொழி மாற்றம் செய்தாலும் பிரச்சனை இல்லையோ எனத் தோண்றும். இதுவரை நான் வாசித்த ரஷ்ய கதைகள் எதுவும் எனக்கு பிடிக்காமல் இருந்ததில்லை. இன்றும் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் ரஷ்ய இலக்கியம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதே என் முதல் வேலை.

    பின் தமிழ் நாவல்கள் அதிகம் படிக்கத் தொடங்கினேன். மா.வே.சிவக்குமாரின் மரிக்கொழுந்து மங்கை, உமா சந்திரனின் முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள். லா.ச.ராவின் சுயசரிதையான சிந்தா நதிக்கு சாஹிதிய அகாதெமி விருது கிடைத்தது என அறிந்து அதை வாங்கிப் படித்தேன். தொடர்ந்து அவரின் பச்சைக்கனவு என்ற அற்புத படைப்பை படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. ஏனோ அதன்பின் அவரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழவில்லை எனக்கு.(முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாததால் இருக்கலாம்)

    2007ஆம் ஆண்டு புத்தக சந்தைக்கு போகும்போது என் அக்கா அவரின் கடனட்டையைக் கொடுத்து சுஜாதா எழுதிய எந்த புத்தகமாக இருந்தாலும் வாங்கிட்டு வா என்று சொன்னார். அள்ளிக் கொண்டு வந்து ஆசை தீர அவரின் எழுத்துக்களோடு சினேகம் வளர்த்தேன். இன்றும் மொழி நடைக்காக நான் வாசிக்கும் ஒரே எழுத்தாளர் சுஜாதாதான். பிரிவோம் சந்திப்போமில் அவர் வருணித்த அமெரிக்காவை நேரில் பார்த்ததில் இருந்து என் அக்காவிற்கு சுஜாதா மீது கொள்ளைப் பிரியம். பார்க்காமலே எனக்கும். நான் பதிவெழுத தொடங்கும்போது அவருக்கு நன்றிகள் கூறிவிட்டுதான் எழுதவே ஆரம்பித்தேன்.

    எந்தப் புததகம் என்றாலும் படிப்பேன், அது தமிழில் இருந்தால் எனபதை நான் அடிக்கடி சொல்லுவேன். இடையிடையே சில ஆங்கில புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் மிக முக்கியமானது  பாலோ கோய்லேவின் The Alchemist.அவரின் மாஸ்டர் பீஸ் அதுதான் போலும். அதன் தாக்கத்தில் அவரின் veronika decides to die வாங்கி முப்பதே பக்கங்களை படித்து தலையைச் சுற்றித் தூக்கி எறிந்து விட்டேன். பின் கிரடி கார்டில் கிடைத்த புள்ளிகள் மூலம் சேத்தன் பகத்தின் five point someone, one night at call cenrtre வாங்கிப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை. என் கவனம் தியானம் பக்கம் திரும்பியது. இந்தக் காலக்கட்டத்தில் ஓஷோவின் புத்தகங்களை படிக்க நேர்ந்தது.ஜென் கதைகளிலும் ஹைக்கூவிலும் நாட்டம் ஏற்ப்பட்டது. ஹைக்கூ கவிதைகளின் பிதாமகர் பாஷேவின்  சுயசரிதை Traveling through a narrow crooked path அதில் முக்கியமானது. பின் ஆந்தோனி டி மெல்லோவின prayer of the frog என்னை ஒரு விநோத உலகிற்கு அழைத்து சென்றது. மேலும் அவரின் the song of the bird என்ற புத்தகத்தை பாதி படித்துவிட்டு தொலைத்து விட்டேன். இப்போது அதன் மேலும் ஆர்வம் குறைந்து விட்டது.

  இப்போதெல்லாம் ஹைதராபாத்திற்கு ட்ரெயின் ஏறும் முன் ஏதாவ்து ஒரு புத்தகம் வாங்குவது வழக்கமாகி விட்டது. அங்கிருக்கும் கடையில் திரையுலகம் சார்ந்த புத்தகங்களே அதிகம் இருக்கின்றன. சுஜாதாவின் "திரைக்கதை  எழுதுவது எப்படி", அபூர்வ ராகங்கள், பருத்தி வீரன்,சேது ஆகியப் படங்களின் திரைக்கதை வசனம் புத்தஙக்ள்தான் நான் சமீபத்தில் படித்துக் கொண்டிருப்பது.

   இவை அனைத்தையும் விட தற்போது நான் உயிர்ப்பாய் வாசிப்பது வ்லையில்தான். அய்யனாரின் பதிவு ஒனறை தினமும் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். நர்சிம்மின் குறுந்தொகை, கவிதைக்கு ஜ்யோவ்ராம் சுந்தர்,அனுஜன்யா மற்றும் கென், என எல்லாவற்றிர்க்கும் இங்கே வழி இருக்கிறது.

   படிக்கும் பழக்கம் இன்னமும் இருந்தாலும் முன்பு போல் வாசிக்கும் பழக்கம் இப்போது என்னை ஆட்கொள்ளவில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஆரம்பம் முதலே விகடன் மட்டுமே படிப்பேன்.குமுதமும் குங்குமமும் எனக்கு அலர்ஜி. கிளுகிளுப்புக்காக‌ அவ்வபோது ரிப்போர்ட்டரைப் படிப்பதுண்டு.

இதைத் தொடர நான் அழைப்பது:

1) கும்க்கி (எப்பவாது எழுதினா முதல்ல இத எழுதுங்க)

2) ராப்

3) மற்றும் எல்லோரும்.(நல்ல மேட்டர். எல்லோரும் எழுதனும்னு விரும்பறேன்.)

Nov 11, 2008

தல எழுந்திருக்குமா?

214 கருத்துக்குத்து

 

டிஸ்கி 1:  இது தமிழ் மசலாப் பட ரசிகர்களுக்கு மட்டும். உலக சினிமா பார்ப்பவர்கள் இந்தப் பதிவை படிக்காமல் இருப்பது நலம்.   

      ஒரு மாஸ் ஹீரோவாகத்தான் அஜித்திற்கு மவுசு உண்டு. அவரும் அந்த வரிசையில்தான் படங்களை கொடுத்துக் கொண்டி இருக்கிறார். விக்ரம்,சூர்யா வரிசையில் அவரை சேர்க்க முடியாது. அதன்படி ஒரு சராசரி தல ரசிகன் ஏமாற்றம் அடைவது எதனால் என எனக்குத் தெரிந்த சில விஷயங்கள்.

1) ஒப்பனிங் சாங்: படம் எப்படி இருந்தாலும் முதல் பாடலில் அரங்கம் அதிர ஆடித் தீர்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால் அஜித்தின் படங்களில் ஒப்பனிங் சாங் என்பது அடிக்கடி காணாமல் போவதுண்டு. அதைக் கூட ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் அந்தப் பாடலுக்கு வேறு யாராவது ஆடினால் சாமி ஆடி விடுகிறார்கள். உதாரணம் பரமசிவனில் ரகஸியா, ஏகனில் நவ்தீப்,பில்லாவில் யாரோ ஒருவர். அவரால் ஆட முடியாவிட்டாலும் தலையை திரையில் பார்ப்பதற்கே அவர்கள் விரும்புகிறார்கள்.

2) ரிலீஸ் தேதி : படம் நடித்து முடித்தவுடன் தன் பங்கு முடிந்து விட்டாதாக தல நினைக்கிறார். அது உண்மையென்றாலும் அவர் ரசிகர்கள் அப்படி நினைக்கவில்லை. ஏறத்தாழ இரண்டில் ஒரு தலப் படம் இதுப் போன்ற சிக்கலில் மாட்டுவதும் என்று வெளியாகும் எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்புவதும் சரியில்ல தலை.

3)இசை: பாடல்கள் ஹிட்டானாலே படத்தின் வெற்றி பாதி உறுதி செய்யப்படுவதாக கோடம்பாக்கம் சொல்கிறது. அது மட்டுமில்லாமல் படம் ஊத்தினாலும் தொலைக்காட்சிகளில் சில மாதங்களுக்கு கொடிகட்டும் பாடல்கள் நடிகர்களுக்கு போனஸ் மாதிரி. விஜய்க்கு இது நன்றாக கைகொடுக்கிறது. உதாரணம் டுர்ரா டும்முனு(ஆதி), மதுரைக்கு போகாதடி. (ATM). இதிலும் தலை கவனம் செலுத்த வேண்டும்.

4)கதைக்களங்கள் : அஜித் பேசமாலோ அல்லது குறைவாகப் பேசியோ அல்ல்து ஒரு விதமாக குரல் மாற்றிப் பேசியோ நடித்தப் படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. வாலியில் ஊமை, வில்லனில் சரியாக பேச முடியாது, வரலாறில் குரல் மாற்றிப் பேசியது, பில்லாவில் அதிக‌ம் பேசாதது. எனவே அதுப் போன்ற கதைக் களங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பது அவருக்கு கைகொடுக்கக் கூடும்.

5) இமேஜ்: காக்டெயிலில் ஏகனைப் பற்றி சொல்லும்போது "வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு" சொல்லியிருந்தேன். இந்த வாரம் ஆ.வி. விமர்சணத்திலும் அதேப் போல "காமெடி படம் எடுக்கலாம். படத்தையே காமெடியா எடுத்தா" எனக் கேட்டிருக்கிறார்கள். தல தன்னையே நக்கலடித்துக் கொள்ளும் மேட்டர்களை ரசிகர்கள் மட்டுமல்ல, யாருமே ரசிப்பதில்லை. எனவே தனக்கான இமேஜை தக்க வைத்துக் கொள்வது ஒரு மாஸ் ஹீரோவுக்கு முக்கியமான ஒன்றாகும்.

டிஸ்கி 2: இதற்கு மொக்கைசாமி என‌ லேபிள் போட்டது தற்செயலாக நடந்த‌ ஒன்று.

Nov 10, 2008

டீ.ஆரும் சிலப் பதிவர்களும்

127 கருத்துக்குத்து

    தனக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றி கவுஜ பாடுகிறார் தன்னம்பிக்கையின் தலைமகன், லட்சியத்திற்காக மற்றதை அலட்சியம் செய்யும் வெற்றிமகன் விஜய.டீ.இராஜேந்தர் அவர்கள். (விசிலடிக்காதீங்க. உங்க பாஸ் பார்த்துடப் போறாரு)

தாமிரா:

    அண்னனுக்கு புடிச்ச விஷயம் தங்கமணி
    அதனால பேச்சலர்ஸுக்கு இவர் இதயக்கனி..

    நைன்ட்டியை விரும்பும் தாமிரா
    கவிதையும் எழுதுவாரு சூப்பரா..

    உருகி உருகி வெளிச்சம் கொடுக்கும் மெழுகு
    அதப்போலவே எங்க தலையும் ரொம்ப அழகு

   ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

பரிசல்காரன்:

        துப்பாக்கியில் பவர்ஃபுல் வரிசை ஏ.கே
        ப‌திவுலகில் வெயிட்டான பேரு கே.கே

        டாக்டர் ருத்ரன்னே இவருக்கு ஃபேன்
        அந்தளவுக்கு இவரு ஜென்டில்மேன்..

        எப்போதும் தருவாரு சுவாரஸ்யமான எழுத்து
        தங்க செயின் போடனும் எங்க‌ப்பா உன்  கழுத்து

     ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

ராப்:

    இவங்க பட்டப்பேரு பின்னூட்ட சுனாமி
    "மீ த ஃபர்ஸ்ட்டுக்கு " இவங்க பினாமி..

    இவங்க பதிவெழுதுனா 200 பின்னூட்டம் நிச்சயம்
    எல்லோருக்கும் மீ த ஃப்ர்ஸ்ட்டு  இவங்க லட்சியம்

    வெட்டிஆபிஸருன்னு சொல்லிப்பாங்க ராப்பு
    ஆனா யாருக்கும் வைக்க மாட்டாங்க ஆப்பு..

   ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

குசும்பன்:

       போட்டோவ கொடுத்தா கலாய்ப்பாரு
       பர்ஸ ம‌ட்டும் தல தொலைப்பாரு..

       இவருக்கு எம்மாம் பெரிய உடம்பு
       ஆனா இவரு உடம்பு முழுக்க குசும்பு..

      தன்ணிய குடிச்சா நிக்கும் விக்கலு
      எதக் கொடுத்தா அடங்கும் இவர் நக்கலு?

      ஹே டண்டணக்கா டணக்கு டக்கா

 

பி.கு: இவர்களைப் போலவே நீங்களும் ரூபாய் 100க்கான டிடியை அனுப்பினால் அண்ணன் டீ.ஆர். உங்களைப் பற்றியும் கவுஜ வாசிப்பார்.

அனுப்ப வேண்டிய முகவரி:

விஜய.டி.இராஜேந்தர்,
10,உஷா அபார்ட்மென்ட்ஸ்,
சிலம்புத் தெரு,
குறளக நகர்,
வெண்ணை - 42

Nov 9, 2008

சென்னைவாசியா நீங்கள்? ஒன் நிமிட் ப்ளீஸ்

61 கருத்துக்குத்து

   ஒரு வாரமாக சென்னையிலேக் குப்பைக் கொட்டியதன் விளைவாக சென்னையைப் பற்றிக் கவிதை எழுதிவிட்டேன். (என்னது அதுக் கவிதையா??). இன்று சிலப் புதிர் கேள்விகள். அனைத்திற்கும் சரியாய் பதில் சொல்பவர்கள் "நான் மெட்ராஸ்காரன்டா" என போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க)

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

7) இங்கே பஞ்சாமிர்தம் கிடைக்காது.

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

9) உப்புக் கொட்டிய இடம்.கடலல்ல.

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

Nov 8, 2008

HOT JOBS

0 கருத்துக்குத்து

 

send ur CV’s to karki.mass@gmail.com

1) QA Engineer

Client           : TI Metal formings,Pune

Education    : B.E mechanical/industrial

Experience :  above 3 yrs

CTC              : 3.5 lacs

************************************************************************************************************8

2) Section manager (Quality)

Client           : John Deere,Pune

Description

Should have expereince in Transmisson Assembly Quality. Knowledge of in-process quality. Knowledge of cast, iron and forging/foundary.

Major Duties

1)Warranty failure analysis & CAPA

2)Disciplined problem solving appraoch to improve FPY and internal customer PPM

3)Participate in QIT

4)ECN trials and implementation

5)Conducting Process and System Audit for Transmission assembly

6)Explore possibility of implementing technological improvement in transmission assembly

7)Improve transmission assembly robustness by implementing Poka Yoke solution

8)Responsible for implementation of JDQPS requirements

Education

BE(Mechanical)/Diploam(Mechanical) with 5- 7 years of expereince

******************************************************************************************************************

3) Infra Admin- System management

Description

Work with U.S. IT Senior Technician to identify resource requirements for India-based resources • Coordinate the India-based team resources • Be responsible for project and support task tracking, process execution and metrics for India-based resources • Provide guidance and recommendations regarding technical processes and procedures • Schedule technical meetings with the appropriate members of the U.S. Team • Be responsible for individual team member technical education plans • Identify learning opportunities for TCI team through projects • Assist a global team in the administration of the company's Systems Management Tools team • Participate in a 24 hour, 7 day per week, on-call support rotation • Respond to support requests received via shared

Major Duties

Technical project management experience

UNIX Administration skills, Windows Administration skills

Understanding of, or strong desire to learn about, a wide range of Systems Management components including HP Service Manager, HP Asset Manager, Kayako SupportSuite, HP Openview, BMC Patrol, HP Network Node Manager

Ability to work with infrastructure such as databases, networking, DNS, and firewalls

Ability to troubleshoot in a distributed environment

Ability to participate and contribute to a strong, supportive team environment

Ability to operate in a multi-platform, multi-operating system, multi-component environment utilizing a large number of server builds and configurations.

Solid analytical skills and the desire to gain further experience in multiple technologies

Qualification

Education

Degree in an Information Technology, Engineering discipline or equivalent experience

Required Skills

Six to Eight year of total IT experience

Distributed tool support

Monitoring tool support

Distributed OS system administration

Desired Skills

Familiarity with change management in a complex hosting environment

Scripting experience in PERL, PHP, and ASP

Experience supporting tools such as HP Service Manager, HP Asset Manager, Kayako SupportSuite, HP Openview, BMC Patrol, HP Network Node Manager

Excellent verbal and written skill

Project management skills and the demonstrated ability to drive for results.

Nov 7, 2008

ராப் விருப்பப்படி ஒரு பதிவு

223 கருத்துக்குத்து

    உடல்நல‌மில்லாமல் நான் படுத்து விடும்போதெல்லாம் ஊரார் கண்பட்டுவிட்டதாக என் அம்மா சொல்வார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை உன் கண்படாததால்தான் அப்படி ஆனதென்று.

   ஒருநாள் உன் வீட்டுக்குள் திருடன் நுழைந்துவிட்டதாக கூறி நானும் என் நண்பர்களும் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்து விஷயத்தைக் கேட்ட நீ மனதுக்குள் "என்னை நீ திருடாம போனாப் போதும்" என்று சொன்னது இன்னமும் என் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    சுரிதாரிலே உன்னைப் பார்த்து பழகிய எனக்கு உன்னைத் தாவனியில் பார்த்தபோது கோவம் தலைக்கேறியது. உன்னைக் கட்டிக் கொள்ள நான் ஏங்கிக் கொண்டிருக்கும்போது அது உன்னைத் தழுவிச் சென்றால் கோவம் வராதா?

    நல்லதொரு மழைநாளில் குடையுடன் ஒருத் துளி நீர் கூட உன் மேல் படாமல் சென்றுக் கொண்டிருந்தாய். எப்படியாவது உன்னைத் தொட்டுவிட வேண்டுமென வீறு கொண்டு பெய்த மழை இறுதியில் வென்றுவிட்டது. விரக்தியில் உன் உதட்டை ஒரு சுழி சுழித்தாய். அந்த சுழலில் இன்னொரு புயல் உருவாகிக் கொண்டிருந்தது.

"ஓரிரு வார்த்தைகள் தப்பாய் போனால்
  உதடு கடிப்பாய் அதுவா அதுவா?"
என்றார் வைரமுத்து.

நீயும் அப்படித்தான். தவறாய் பேசும்போதெல்லாம் தணடனையாக உதட்டைக் கடித்துக் கொள்கிறாய். இனிமேல், தவறை மட்டும் நீ செய்.. தண்டனையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

பி.கு: வீக் எண்ட் காதல் பதிவைத் தவறாமல் எதிர் நோக்கும் பின்னூட்ட சூறாவளி ராப் அவர்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி கும்மியை ஆரம்பியுங்கள்.

   வீர தீர கலைவாணி
   கும்மிசங்க மகாராணி
   ரித்தீஷ் சங்க யுவராணி
   கருத்து காமாட்சி ராப் பராக்..பராக்..பராக்..

Nov 6, 2008

காக்டெயில்

52 கருத்துக்குத்து

    சமீபத்தில் நான் எழுதிய சென்னை மெட்ராஸ் பட்டணம் என்ற பதிவு வாசகர் பரிந்துரையில் 12 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. அந்த வரிசையில் வந்த என் முதல் பதிவு இதுதான். விஷயம் என்னவென்றால், அதில் 12/20 என்று இருப்பது 12 வாக்குகள் அதரவாகவும் 8 வாக்குகள் எதிராகவும் விழுந்திருப்பதாக அர்த்தமாம். பொதுவாக வாக்களிப்பவர்கள் பிடித்திருந்தால் ஆதரவாக போட்டுவிட்டு சென்றுவிடுவார்களாம். வாக்குகள் எதிராக விழுவது என் பதிவு அந்த வரிசையில் இருப்பதை பிடிக்காதவர்கள் செய்வதாம். அதுவும் 8 வாக்குகள் எதிராக இருப்பது கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என  என் நலம் விரும்பும் ஒரு மூத்தப் பதிவர் எனக்கு அலைபேசி கூறினார்.  ஒரு வேளை யாருடனவாது கருத்து மோதலில் ஈடுபட்டு இருந்தால் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிறகுதான் கவ்னித்தேன்.. என் பதிவுக்கு மட்டும்தான் எதிர் வாக்குகள் விழுந்துள்ளன. நல்லாயிருங்கப்பூ.

*************************************************    வடபழனி சிக்னலில் விடுதலை சிறுத்தைகள் வைத்திருந்த ஒரு தட்டியைப் பார்த்தேன். "ஈழத் தமிழர்கள் வெடி வைத்துக் கொல்லப்படும் நேரத்தில் ,ஈனத் தமிழன் வெடிவைத்து தீபாவளி கொண்டாடுவதாக" எழுதப் பட்டிருந்தது. பல ஆண்டுகளாக ஈழத்தில் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது. அப்போதெல்லாம் திருமா தன் பிறந்தநாளைக் கொண்டாடவே இல்லை போலும். இதுப் போன்றப் போலிகளின் உணர்வால்தான் நம் நண்பர்கள் பலரும் ஈழ விடயத்தில் எதிர்நிலையில் உள்ளார்கள். இவனுக மூடிட்டு இருக்கறதே மேல்னு ஈழமக்களை சொல்லவைத்துவிடுவார்கள். 

*************************************************   தீபாவளி அன்று வீட்டருகே இருந்த சின்னப்பையன் ஒருவனை அழைத்தார் எதிர் வீட்டு அக்கா. அவன் போக மறுத்தான். ஏன்டா என்றேன். அவங்க பட்டாசு தர கூப்பிடறாங்க. எனக்கு எங்க வீட்டுல தந்ததேப் போதும்.அவங்க வேனும்னா வெடிக்கட்டும் எனக்கு வேண்டாம் என்றான். அவன் வயது வெறும் 7. அசந்துப் போனேன் நான். இது ஆரோக்கியமான விடயம் போல் தோண்றினாலும் எனக்கென்னவோ குழந்தைகள் மனதிலும் ஏற்றத்தாழ்வு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இந்த புத்திக்கூர்மை என்பது குழந்தைததனம் காணாமல் போய்விட்டதற்கான அறிகுறிதானே?

*************************************************   ஏகன் பார்த்து வெளியே வந்தவுடன் நண்பன் ஒருவன் அழைத்து படத்தைப் பற்றிக் கேட்டான். "வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு" சொன்னேன். புரியாமல் முழித்தவன படத்தைப் பார்த்ததும் அலைபேசி சிரித்தான். நீங்க படம் பார்த்துட்டிங்க இல்ல? சங்கம் வளாகத்தில்  முதல் வாரமே பத்மம்(சின்னது) அரங்கிற்கு மாற்றப்பட்டது கிங் ஆஃப் ஒப்பனிங் தல படம். இப்போது சரோஜா சங்கத்தோடு சங்கமம்.

*************************************************சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

கிரிக்கெட் தெரியுமில்ல? கடைசி விக்கெட். ஏழு ரன்கள் எடுத்தால் வெற்றி. ஒருவர் 95. அடுத்த முனையில் இருப்பவர் 94. ஆட்டத்தின் கடைசிப்பந்து. ஆட்ட முடிவில் இருவரும் சதமடித்து விட்டனர். ஜெயித்தும் விட்டனர். இது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?

Nov 4, 2008

கமலுடன் என் நண்பன்.....

53 கருத்துக்குத்து

என் நண்பன் ஒருவனுக்கு நடிகர் கமலின் மகல் ஸ்ருதியை தெரியும்.ஒரு நாள் அவர் என் நண்பனை தன் தந்தையிடம் அறிமுகம் செய்து வைத்திருககிறார். ஒரிரு வாரங்கள் கழித்து அவனுக்கு கமலிடம் இருந்து அழைப்பு வந்தது.அவனை பார்க்க விரும்புவதாய் அவர் சொன்னதாக சொன்னான்.தொப்புள் பற்றி "பாண்டி" மயில்சாமி விளக்கம் சொன்ன அளவிற்கு இல்லை என்ற போதும் அவ்வபோது சின்ன சின்ன "கதைகள்" சொல்லுவான்.அப்படி ஏதாவது சொல்கிறானா என்று கேட்டதற்கு கோபமடைந்து விட்டான்.சொல்வதை கேள்டா என்றான். அவனும் துள்ளல் நடையும் தூள் பறக்கும் ஸ்டைலுமாய் அவரை காண அவர் இல்லத்திற்கு சென்றிருக்கிறான்..

அங்கே சென்ற அவனுக்கு மேலும் ஒரு ஆச்சரியம்."உலக தர" இயக்குனர் K.S. இரவிக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.தன் அளப்பரியா ஆனந்தத்தை கட்டுப்படுத்தி கொண்டு அவர்கள் முன்னால் அமர்ந்தானாம்.எடுதத உடனே, கமல் அடுத்த படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடுவதாக சொல்லி இருக்கிறார்.இவனிடம் பள்ளி அல்லது கல்லூரியில் நடித்த அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்றாராம் ஹே ராம்...இவன் சிறு வயதில் கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறான்.அதையும் ஒரு டாகுமென்ட்ரி படத்தில் குழந்தை நட்சித்தரமாக நடித்ததையும் சொல்லி இருக்கிறான்

இயக்குனர் அவர்கள் இவனிடம் நடிக்க விருப்பமா என்று கேட்டு ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் நடந்து இருக்கிறது.பின் ஒரு காட்சி ஒன்றை விளக்கி இவனை நடிக்க சொல்லி இருக்கிறார்கள்.அது ஒரு காதல் படமாம்.அதனால் நல்ல ஒரு ரொமான்ஸ் சீனைத்தான் தந்தாராம் ரவிக்குமார்.ஒரு பெண்ணிடம் எப்படி எல்லாம் அவளை காதலிப்பதாக சொல்வதை போல் காட்சியும் வசனமும் இருந்ததாம்.அவன் இதை சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் உண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்தோம்.அவனும் அங்கு இருந்த ஸ்ருதியை பார்த்து தன் காதலை சொல்வது போல் நடிக்க முயற்சி செய்திருக்கிறான்.இவன் சொல்லி முடித்த பின் எழுந்து வந்த கமல் இவனை கட்டிபிடித்து பாராட்டி இருக்கிறார்.இவன் கண்கள் கலங்கி இருக்கிறது.நாங்கள் கூட கமலின் வாயால் பாராட்டைப் பெற்றதால் வந்த ஆனந்த கண்ணீரா என்று கேட்டோம்.

கமல் இவனிடம் என்ன, எதற்கு அழுகிறாய் என் கேட்டதற்கு நான் நடிக்கவில்லை ,உண்மையாகவே ஸ்ருதியை காதலிக்கிறேன் "EVERY ONE IS ACTING IN THIS WORLD NOT ONLY IN FRONT OF CAMERA BUT REAL LIFE TOO THE BODY ACTS N THE MIND DIRECTS !!!" என்றானாம்.நாங்கள் மிரண்டு போய் அவனை பார்த்தோம்.இவனுக்கு ஸ்ருதி மீது ஆசை உன்டு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இத்தனை தைரியமாய் கமலிடமே சொல்வான் என்று நாங்கள் நினைக்கவில்லை..
அப்புறம் என்னடா ஆச்சு என்று கேட்ட போது அவன் சொன்னதை இப்போது நினைத்தாலும் என் மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது.
சீ...அந்த நேரம் பார்த்து எங்க அம்மா காபி கொடுக்க எழுப்பிடாங்கடா " என்ற அவனை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன்.ஏதாவது ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கள் நண்பர்களே.....

Nov 1, 2008

காக்டெயில்

38 கருத்துக்குத்து

    சென்ற வாரம் நம்பிக்கை என ஒருப் புனைவு எழுத முற்பட்டேன். தனி ஈழம் உருவாகும் என நம்பிக்கை ஏற்படும் வகையில் அதை எழுத நினைத்து டிராஃப்ட் தயாரித்து வைத்திருந்தேன். அன்று மெட்ராஸ் ஐ போல என் கண்கள் சிவந்து விட்டதால் நண்பன் ஒருவனை வேறு ஒருப் பதிவை பதிவேற்ற சொன்னேன். அவன் இதை பதிவேற்றிவிட்டான்.‍ நானே பின்னூட்டத்தில் இதை இன்னும் மெருகேற்ற வேண்டுமென சொல்ல, தொடர்ந்து பல நண்பர்கள் அழுத்தியும், அதட்டியும் அதையேச் சொன்னார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது "இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது?"

*************************************************

   நடிகர்கள் உண்ணாவிரதம் நல்லபடியாய் முடிந்தது. எதற்காக இருந்தோம் எனத் தெரியாமலே அஜித்தும் சாப்பிடாமல் இருந்து தன் முறை வரும்போது விளக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார். ஈழத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இறுதியாக தேசியகீதம் வாசிக்கப்பட்டபோது ஆளுக்கொரு திசையில் வசதிக்கேற்ப நின்றனர். பத்திரிக்கையாளர்களுக்கு இதிலும் சிறப்பு சலுகைப் போல. அவர்கள் அப்போதும் படமெடுக்கும் பணியைத் தொடரலாம். அப்போதுதானே தேசியகீதத்தை அவமதித்த முன்னனி நடிகரென கிசுகிசு எழுத முடியும்.

*************************************************

   கடந்த மாதம் எனக்கு நல்லபடியாய் போனது. 22,000 ஹிட்ஸ் என்பது மட்டுமல்ல காரணம். 2 மீள்பதிவைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான் எழுதியுள்ளேன். அதிலும் தாமிராவின் கட்டளைக்கேற்ப மொக்கைகள் குறைக்கப்பட்டன.வெண்பூ போல பலர் உரிமையுடன் குறைகளை சொல்லி வருகின்றனர். வீக் எண்ட் காதல் பதிவு வரவில்லையெனில் ராப் எங்கே எனக் கேட்கிறார். அனைத்துப் ப‌திவிற்கும் த‌வ‌றாம‌ல் வ‌ந்து க‌ருத்துச் சொல்லும் த‌ல‌ ந‌ர்சிம்.இன்னும் நிறைய‌ ந‌ண்ப‌ர்க‌ள். ஒரு அங்கீகாரம் கிடைத்ததுப் போல் உணர்கிறேன். புதுகை. அப்துல்லா என்ற மாமனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வயதில் மட்டுமல்ல உருவத்திலும் அவர என்னை விட பெரியவர் என்றபோதும் உரிமையுடன் அணைத்து பேசிய விதம் வெகுவாய் கவர்ந்தது. இவரைவிட பெரியவரான தாமிரவை எப்படி சொல்லலாம். மாமாமனிதர் என்றால் தவறாகி விடுமோ? விடுங்க சகான்னே சொல்லிக்கலாம்.

*************************************************

  வலைச்சரத்தில் அப்துல்லா அண்ணே எழுதிய இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் உடனே படிக்கவும். நானும் என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் இதைப் ப‌ற்றி பேசினேன். எப்ப‌டியாவ‌து ஒரு த‌ட‌வையாவ‌து எழுத‌னும். சொந்த‌மா எழுத‌ற‌துதான் உருப்ப‌டியாய் இல்லை. இதையாவ‌து உருப்ப‌டியாய் எழுதுவோம். தொட‌ங்கி வ‌ச்ச‌ எஸ்.கேக்கும் ப‌திவாய் போட்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

*************************************************

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

  என்னோட பெரியப்பாவோட மனைவியின் மைத்துனனின் மூத்த மகனின் இளையத்தம்பி தான் நான். அப்படியெனில் என் அண்ண‌னின் அப்பாவோட அண்ணியின் கனவனின் தம்பியோட இளைய மகன் மகன் யார்?

 

all rights reserved to www.karkibava.com