Oct 31, 2008

சென்னையில் புயல்...


என் பக்கத்து வீட்டு சிறுமி நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுவதால் வாயாடி என்கிறார்கள். நீ நொடிக்கு நூறு வார்த்தை பேசுகிறாய். வாயால் அல்ல, கண்களால். எனவே உன்னைக் கண்ணாடி என்று சொல்லலாமோ?

யாரையும் உற்றுப் பார்த்து பேசாதே. உன் கண்ணை வைத்தே என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

   கூட்டத்தில் நடக்கும்போது உன் நிழலை யார்யாரோ மிதிப்பதாக வருத்தப்பட்டாய். உன்னை இடிப்பவர்களை விட்டு நிழலை மிதிப்பவர்களை ஏன் திட்டுகிறாய் என்றேன்.

 நான் தானே நடக்கிறேன்
அது என்ன என் பின்னால்
உன் நிழல்?

என்று நீ எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தினாய்.

    சுத்தமாய் நன்றி இல்லாதது இந்த இதயம்.இத்தணை நாள் வளர்த்த நன்றி மறந்து உன்னைப் பார்த்ததும் பழகிய நாய்க்குட்டியைப் போல உன் பின்னால் வந்துவிட்டது.

    ஒரு நாள் நான் நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தேன். மாடியில் இருந்து நீ பார்த்துக் கொண்டிருந்ததை நானறிவேன். இருந்தாலும் இப்படி எல்லாம் நீ எழுதுவாய் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

அனைத்துக் கண்களும்
வாலிபாலை ரசிக்க‍-உன்
வாலிபத்தை ரசித்துக்
கொண்டிருந்தேன் நான்.

    உன்னை வருடும் எண்ணத்தோடுதான் வங்கக்கடலில் புயல் சென்னைக்கு அருகில் மையம் கொள்கிறது. என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ ஒவ்வொரு முறையும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது.

31 கருத்துக்குத்து:

வால்பையன் on October 31, 2008 at 8:12 PM said...

me the first

வால்பையன் on October 31, 2008 at 8:13 PM said...

//என் பக்கத்து வீட்டு சிறுமி நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுவதால் வாயாடி என்கிறார்கள்.//

நீங்க அதுக்கு மேல பேசுவிங்களாமே

Anonymous said...

http://cimss.ssec.wisc.edu/tropic/real-time/indian/images/xxirmet5n.GIF

வால்பையன் on October 31, 2008 at 8:13 PM said...

//வாயால் அல்ல, கண்களால். எனவே உன்னைக் கண்ணாடி என்று சொல்லலாமோ? //

காதால் பேசினால் காத்தாடியா?

வால்பையன் on October 31, 2008 at 8:14 PM said...

அட காதல் பதிவா
அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் on October 31, 2008 at 8:16 PM said...

//என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ ஒவ்வொரு முறையும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது.//

அய்யா சாமி
சுனாமி வரும்போது கடற்கரையில நில்லப்பா
அதுவும் பயந்து காணாம போகட்டும்

வால்பையன் on October 31, 2008 at 8:18 PM said...

அட யாருப்பா அந்த அனானி
புயல் வர்ரத அப்படியே படம் புடிச்சி வச்சிருக்காரு

rapp on October 31, 2008 at 8:19 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அய்யயோ, வீக்கென்ட் ஆனா இப்டி ஆகிடரீங்கலே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

Anonymous said...

கார்க்கி,

உங்கள் காதல் பதிவு ஒவ்வொன்றும் அருமை. பொறாமயாக இருக்கிறது.

நானும் ஒருவன் on October 31, 2008 at 8:24 PM said...

ஸப்பா.. ஆஸ்பிட்டல் போனாலும் அடங்க மாட்டியா? இப்போ எப்படி மச்சி இருக்கு?

கார்க்கி on October 31, 2008 at 8:24 PM said...

நன்றி வால்..

//நீங்க அதுக்கு மேல பேசுவிங்களாமே//

நான் ரொம்ம்ம்ம்ப அமைதி வால்..

//காதால் பேசினால் காத்தாடியா?//

:)))))))))

கார்க்கி on October 31, 2008 at 8:25 PM said...

//Anonymous said...

கார்க்கி,

உங்கள் காதல் பதிவு ஒவ்வொன்றும் அருமை. பொறாமயாக இருக்கிறது.//

நன்றி நண்பரே..

கார்க்கி on October 31, 2008 at 8:26 PM said...

// rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அய்யயோ, வீக்கென்ட் ஆனா இப்டி ஆகிடரீங்கலே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........//

என்னங்க எழுதலைனா ஏன்னு கேட்கறீங்க. எழுதினா இப்படி சொல்றீங்க.. என்ன செய்யட்டும்? :)))))

கார்க்கி on October 31, 2008 at 8:28 PM said...

//நானும் ஒருவன் said...

ஸப்பா.. ஆஸ்பிட்டல் போனாலும் அடங்க மாட்டியா? இப்போ எப்படி மச்சி இருக்கு?//

4 பாட்டல் ட்ரிப்ஸும் 8 ஊசியும் போட்டு இருக்காங்க. நாளைக்கு காலைல சென்னை வந்துடுவேன். ஒரு வாரம் லீவு.. ப்ளாக்குக்கு இல்ல.. ஆஃபிஸுக்கு

நானும் ஒருவன் on October 31, 2008 at 8:29 PM said...

//கார்க்கி said...
நன்றி வால்..

//நீங்க அதுக்கு மேல பேசுவிங்களாமே//

நான் ரொம்ம்ம்ம்ப அமைதி வால்..

//

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. பொய் சொல்ல ஒரு அளவு இல்ல?

நானும் ஒருவன் on October 31, 2008 at 8:31 PM said...

//4 பாட்டல் ட்ரிப்ஸும் 8 ஊசியும் போட்டு இருக்காங்க. நாளைக்கு காலைல சென்னை வந்துடுவேன். ஒரு வாரம் லீவு.. ப்ளாக்குக்கு இல்ல.. ஆஃபிஸுக்கு//

viral feverதானா? கூட யாராவது இருக்காங்களா? flightஆ train ஆ?

விலெகா on October 31, 2008 at 8:39 PM said...

மொக்கை கார்க்கியின் பக்கா காதல் பதிவு:‍)))))‍‍

Anonymous said...

எங்கள் தலைவரை மொக்கை என்று சொல்வதை கண்டிக்கிறோம். அவரின் காதல் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லுங்கள்.

இவன்,

இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்.

Anonymous said...

நான் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் வாழும் ஒரு தமிழன். என் நிலை

இந்தியா இனி ஒரு முறை இலங்கை பிரச்சனையில் தலையிடகூடாது. ஏற்கனவே ஒரு முறை தலையிட்ட போது இந்திய அரசாங்கம் செலவழித்த தொகை 3400 கோடி, இது ரானுவ செலவுகள், தேர்தல் நடத்த செலவழிக்கபட்ட செலவுகள், இலங்கையில் வட கிழக்கு மாநிலங்களுக்கு கட்டமைப்பு செய்ய செலவழிக்கபட்டது இன்ன பிற செலவுகள்.

அன்றே புலிகள் இந்தியாவின் சமரசத்தை ஏற்று கொண்டு இருந்தால்

ஒரு லட்சத்துக்கும் மேலான மனித உயிர்களை காபாற்றி இருக்கலாம்
கூடவும் ஒருங்கினைந்த வட கிழக்கு மகாணத்தில் ஜனநாயக தேர்தல் மூலம் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்தி தமிழர்களுக்கு உரிமையும் வாங்கி கொடுத்துஇருக்கலாம்

ஆனால் நடந்தது என்ன?

தற்போது நடப்பது என்ன?

இந்திய வரிபணம்கூடவே மக்களின் பணம் இந்திய மக்களுக்கே செலவழிக்கபடவேண்டும்.

Anonymous said...

தூயாவிற்க்கு மனித பிணங்களை காட்டி பணம் சம்பாதிக்கும் வேலை அவள் குடும்பத்தை இங்கே கேட்டால் தெரியும். புலி பேரை சொல்லி உடம்பு வளர்க்கும் கூட்டம். ஏ தூயா நீ உண்மையில் தமிழ் உணர்வு கொண்டவளாக இருந்தால் தற்கொலை படையாக போகலாமே

Anonymous said...

plz anonymous, stop this.if u are against to his comment say it in proper manner.this is not the way

Anonymous said...

//நானும் ஒருவன் said...

//4 பாட்டல் ட்ரிப்ஸும் 8 ஊசியும் போட்டு இருக்காங்க. நாளைக்கு காலைல சென்னை வந்துடுவேன். ஒரு வாரம் லீவு.. ப்ளாக்குக்கு இல்ல.. ஆஃபிஸுக்கு//

viral feverதானா? கூட யாராவது இருக்காங்களா? flightஆ train ஆ?'

what happened karki? are u ok now? plz update. whatz ur contact number?

கார்க்கி on November 1, 2008 at 4:52 AM said...

// viral feverதானா? கூட யாராவது இருக்காங்களா? flightஆ train ஆ?

October 31, 2008 8:3//

flight தான் மச்சி

கார்க்கி on November 1, 2008 at 4:54 AM said...

// விலெகா said...

மொக்கை கார்க்கியின் பக்கா காதல் பதிவு:‍)))))‍‍//\\

மொக்கைனே முடிவுப் பண்ணிட்டிங்களா?

//இவன்,

இளைய நிலா கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்.//

ரசிக கண்மனிகளே அப்படியே ஒரு blogger அக்கவுன்ட் open செய்து அதில் கமெண்ட் போடவும்

narsim on November 1, 2008 at 11:17 AM said...

சகா.. தபூ சங்கர விட மேல போய்ட்டீங்க காதல் கவிதைகளில்.. உடம்பு சரியில்லையா..?(இரண்டையும் தனித்தனியாக படிக்கவும்)

நம்பர் கொடுத்தேனே சகா.. கூப்பிடுங்க..

நர்சிம்

Karthik on November 1, 2008 at 11:39 AM said...

கார்க்கி,

கவிதையாக காதலிக்கிறீங்க. கலக்கல்.
:)

வெண்பூ on November 1, 2008 at 2:17 PM said...

நல்ல கவிதை(?) கார்க்கி.. ஆனால் பெரும்பாலானவற்றில் தபூ சங்கரின் பாதிப்பு தெரிகிறது.. முடிந்தால், விரும்பினால் தவிர்க்கலாம். உங்களுக்கான தனி நடை மட்டுமே உங்களை தனித்துக் காட்டும்.. தவறாக நினைக்கவேண்டாம்.

கார்க்கி on November 1, 2008 at 4:43 PM said...

//சகா.. தபூ சங்கர விட மேல போய்ட்டீங்க காதல் கவிதைகளில்.. //

உங்களுக்கு நக்கல் அதிகம் தல :))))))

//உடம்பு சரியில்லையா..?(இரண்டையும் தனித்தனியாக படிக்கவும்)//


ஆமாம் 106 டிகிரி காய்ச்சல்..

கார்க்கி on November 1, 2008 at 4:47 PM said...

//Karthik said...

கார்க்கி,

கவிதையாக காதலிக்கிறீங்க. கலக்கல்.//

நன்றி கார்த்திக்..


//வெண்பூ said...

நல்ல கவிதை(?) கார்க்கி.. ஆனால் பெரும்பாலானவற்றில் தபூ சங்கரின் பாதிப்பு தெரிகிறது.. முடிந்தால், விரும்பினால் தவிர்க்கலாம். உங்களுக்கான தனி நடை மட்டுமே உங்களை தனித்துக் காட்டும்.. தவறாக நினைக்கவேண்டாம்.//

இதில் தவ‌றாக நினைக்க என்ன இருக்கு சகா? ஆனால் காதல் பதிவுகளில் தபூவின் சாயல் நான் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டது.. கவிதைகளை விட இந்த உரைநடை எனக்குப் பிடித்தமானது.. அடுத்த முறை நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கிறேன் தோழரே.. இதுப் போன்ற கருத்துக்களைத்தான் யாவரும் எதிர்ப்பார்க்கிறார்கள். மிக்க நன்றி சகா..

தமிழ்ப்பறவை on November 1, 2008 at 8:23 PM said...

'கண்ணாடி','நிழல்','நாய்க்குட்டியான இதயம்' எல்லாம் அருமை கார்க்கி...
வெண்பூ சொன்னது போல் தோன்றினாலும்,இது நன்றாகத்தான் இருக்கிறது.கவிதையில் நன்றாகக் காலூன்றிவிட்டால்,பின் உங்களின் தனி(ராஜ) நடையில் கலக்க வாழ்த்துக்கள்.
உடல்நிலை தற்போது தேவலையா?

கார்க்கி on November 1, 2008 at 9:56 PM said...

தமிழ்ப்பறவை said...

'கண்ணாடி','நிழல்','நாய்க்குட்டியான இதயம்' எல்லாம் அருமை கார்க்கி...
வெண்பூ சொன்னது போல் தோன்றினாலும்,இது நன்றாகத்தான் இருக்கிறது.கவிதையில் நன்றாகக் காலூன்றிவிட்டால்,பின் உங்களின் தனி(ராஜ) நடையில் கலக்க வாழ்த்துக்கள்.//

ந‌ன்றி ச‌கா.. இனிமேல் க‌விதைக‌ள் எழுதினால் அது காத‌ல் க‌விதையாக‌ இருக்க‌க் கூடாதென்ப‌து என் விருப்ப‌ம்.


// உடல்நிலை தற்போது தேவலையா?//


சென்னை வந்த‌வுட‌ன் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம்.. உண்மையிலே அவ்வ‌ள‌வு காய்ச்ச‌லா என‌ யாரும் நம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள்.. அக்க‌றைக்கு ந‌ன்றி ச‌கா..

November 1, 2008 9:54 PM

 

all rights reserved to www.karkibava.com