Oct 29, 2008

வால்பையனல்ல வால்பொண்ணு


     நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

   என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

  தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

  தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

  உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

  உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

   அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

   அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

   வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

  'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

44 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on October 29, 2008 at 11:05 AM said...

:-)))...

அருமை!!!

// 'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். //

நீங்க புறப்பட்டதுக்கப்புறமும் நிகழ்த்த வேண்டாம்னு சொல்லுங்களேன்...

Anonymous said...

நானும் இப்படி உணர்ந்திருக்கிறேன். ஆனால் வால்தனத்துக்கும் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது பெற்றோர்களின் கடமையும் கூட

கார்க்கி on October 29, 2008 at 11:13 AM said...

//// 'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். //

நீங்க புறப்பட்டதுக்கப்புறமும் நிகழ்த்த வேண்டாம்னு //

சொன்னாக் கேட்கவா போறாங்க..
// // இந்த மேற்கோளுக்குள்ள அங்கிள்னு பார்த்ததும் என்னை அங்கிள்னு கிண்டல் பண்ணப்போறிங்களோனு நினைச்சேன்.. நான் அண்ணன்தானே..

கார்க்கி on October 29, 2008 at 11:14 AM said...

// சின்ன அம்மிணி said...
நானும் இப்படி உணர்ந்திருக்கிறேன். ஆனால் வால்தனத்துக்கும் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது பெற்றோர்களின் கடமையும் கூட//

அதுக்கான எல்லையில்தான் பிரச்சனை.. வருகைக்கு நன்றி அம்மணி

narsim on October 29, 2008 at 11:21 AM said...

//உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள். //

அருமையான வரிகள் சகா! ரசித்"தேன்"

நர்சிம்

Anonymous said...

hi karki, you are writing well nowadays. i enjoyed all your posts which u wrote this month.keep it up.

ramesh

நானும் ஒருவன் on October 29, 2008 at 11:25 AM said...

நச்..
மச்சி

Bleachingpowder on October 29, 2008 at 11:27 AM said...

குழந்தைகளோட உலகமே தனி. அருமையான நடை. கலக்குங்க...

அப்புறம் எப்ப ஏகன் படத்திற்கு விமர்சணம் எழுத போறீங்க. உங்களோட விமர்சணத்தை பார்த்துட்டு தான் படம் பார்க்கனும் இருக்கேன் சீக்கிரம் போய் படத்த பாருங்க ;)

தமிழ்ப்பறவை on October 29, 2008 at 11:28 AM said...

கார்க்கி(சகாவை விட நெருக்கமாய் உணர்கிறேன்)...
அழகுப் பதிவு... வேறென்ன சொல்ல....

கார்க்கி on October 29, 2008 at 11:30 AM said...

//அருமையான வரிகள் சகா! ரசித்"தேன்"

நர்சிம்//

நன்றி தல...

// anonymous said...
hi karki, you are writing well nowadays. i enjoyed all your posts which u wrote this month.keep it up.

raமெஷ்//

thanks ramesh

கார்க்கி on October 29, 2008 at 11:31 AM said...

//நானும் ஒருவன் said...
நச்..
மச்சி//

ராஜேஷுக்கு ஃபோன் பண்ணு.இல்லைன்ன எனக்கு பண்ணு(ஹைதராபாத் நும்பருக்கு)

கார்க்கி on October 29, 2008 at 11:39 AM said...

//bleachingpowder said...
குழந்தைகளோட உலகமே தனி. அருமையான நடை. கலக்குங்க..//

நன்றி சகா..

//அப்புறம் எப்ப ஏகன் படத்திற்கு விமர்சணம் எழுத போறீங்க. உங்களோட விமர்சணத்தை பார்த்துட்டு தான் படம் பார்க்கனும் இருக்கேன் சீக்கிரம் போய் படத்த பாருங்க ;)//

விமர்சணமா??? ஒரே வரில சொல்றேன்.. நீங்க அஜித் ஃபேனை இருந்தாலும் போவாதிங்க..


//தமிழ்ப்பறவை said...
கார்க்கி(சகாவை விட நெருக்கமாய் உணர்கிறேன்)..//

அப்போ அப்படியே கூப்பிடுங்க..

//அழகுப் பதிவு... வேறென்ன சொல்ல.//

:))))

Tambi said...

Kalkkal Kaarkki !

தமிழ்நெஞ்சம் on October 29, 2008 at 12:17 PM said...

vow... good post

anand on October 29, 2008 at 12:48 PM said...

//வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!!//

வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் கார்கியாய் இருந்துவிட்டால் நாம் கர்ஜிக்க அவசியம் ஏற்படாதே கார்கி.

//உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள். //

உயர்தரமான வரிகள். அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

சென்னை வரும்போது போன் செய்வதாக சொன்னாயே!! எதிர்பார்த்திருந்தேன்.

rapp on October 29, 2008 at 1:06 PM said...

கலக்கலா இருக்குங்க:):):) இப்போல்லாம் நெறைய பெற்றோர் இந்த விஷயத்தில் ஓவராக்ட் செய்யாம நல்லா அழகா இயல்பா குழதைகளை விட்டுடராங்கன்னு நினைக்கிறேன்:):):)

வெண்பூ on October 29, 2008 at 1:08 PM said...

அருமையான வரிகள் கார்க்கி.. உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மேம்படுகிறது..

rapp on October 29, 2008 at 1:08 PM said...

ஆனா என்னை மாதிரி பிஞ்சில பழுத்த குழந்தைகளை என்ன செய்யறது:):):)

கார்க்கி on October 29, 2008 at 1:09 PM said...

// tambi said...
Kalkkal Kaarkகி !//


நன்றி சகா..

//தமிழ்நெஞ்சம் said...
vow... good பொச்ட்//

நன்றி தமிழ்

கார்க்கி on October 29, 2008 at 1:12 PM said...

// anand said...
//வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!!//

வீட்டிற்கு வருபவர்கள் எல்லாம் கார்கியாய் இருந்துவிட்டால் நாம் கர்ஜிக்க அவசியம் ஏற்படாதே கார்கி.//

ஹிஹிஹி

//உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள். //

உயர்தரமான வரிகள். அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.//

நன்றி.

//சென்னை வரும்போது போன் செய்வதாக சொன்னாயே!! எதிர்பார்த்திருந்தேன்.//

சாரின்னா.. அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.. அப்படி இப்படினு நாட்கள் போனதே தெரியவில்லை.... சார்ஜர் எடுத்துக் கொண்டு போகவில்லை. மூனு நாளும் சுவ்ட்ச்ட் ஆஃப்தான்.. அடுத்த வாரமும் வ‌ருவேன். நிச்சயம் சந்திக்க வேண்டும்.

கார்க்கி on October 29, 2008 at 1:14 PM said...

// rapp said...
கலக்கலா இருக்குங்க:):):) இப்போல்லாம் நெறைய பெற்றோர் இந்த விஷயத்தில் ஓவராக்ட் செய்யாம நல்லா அழகா இயல்பா குழதைகளை விட்டுடராங்கன்னு //

அபப்டியா? எனக்கு தெரியல..

// rapp said...
ஆனா என்னை மாதிரி பிஞ்சில பழுத்த குழந்தைகளை என்ன செய்யறது:):):)//

ஹிஹிஹி.. நம்மல மாதிரினு சொல்லுங்க..

அப்புறம் உங்களுக்காகவே வீக் எண்ட் காதல் பதிவு போட்டேன்.. பார்த்திங்களா?

கார்க்கி on October 29, 2008 at 1:15 PM said...

// வெண்பூ said...
அருமையான வரிகள் கார்க்கி.. உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மேம்படு//

நன்றி சகா.. இந்த மாதிரி ஊக்கங்களும் , பதிவுலகத்திலே கிடைக்கும் நல்ல எழுத்துக்களும் காரணம் எனலாம், நீங்கள் சொல்வது உண்மையென்றால் :)))))

Karthik on October 29, 2008 at 1:50 PM said...

சூப்பர் கார்க்கி.
:)

Anonymous said...

great

anand on October 29, 2008 at 2:30 PM said...

//அடுத்த வாரமும் வ‌ருவேன். நிச்சயம் சந்திக்க வேண்டும்.//

கண்டிப்பாக. நம்மோட ஊர் நண்பர்கள் சிலரும் இங்கேதான் [வேளச்சேரியில்] இருக்கிறார்கள்.

We can arrange a small meet for our convenient.

தாமிரா on October 29, 2008 at 2:50 PM said...

மிக நல்ல பதிவு. வெரைட்டியாக கலக்குகிறீர்கள். என்னையும் சிந்திக்க வைக்கிறீர்கள், நமது வெரைட்டி பத்தாது என.! (ஆனால் தலைப்பு சொதப்பல்)

கார்க்கி on October 29, 2008 at 3:33 PM said...

நன்றி கார்த்திக்

நன்றி அனானி

//கண்டிப்பாக. நம்மோட ஊர் நண்பர்கள் சிலரும் இங்கேதான் [வேளச்சேரியில்] இருக்கிறார்கள். //

தெரியும். செய்வோம்.

கார்க்கி on October 29, 2008 at 3:40 PM said...

// தாமிரா said...
மிக நல்ல பதிவு. வெரைட்டியாக கலக்குகிறீர்கள்.//

நன்றி சகா.. மொக்கைய குறைச்சுட்டோமில்ல..

//(ஆனால் தலைப்பு சொதப்பல்)//

அது தெரிஞ்சு செய்யறுதுதான்..

விலெகா on October 29, 2008 at 5:11 PM said...

அருமை, சிந்திக்கவேண்டிய ஒன்று!

வால்பையன் on October 29, 2008 at 8:03 PM said...

குழந்தைகளின் அழகே அவர்கள் செய்யும் குறும்பு தானே!

ச்சின்னப் பையன் on October 29, 2008 at 9:16 PM said...

சூப்பர். சூப்பர்.. நல்லா இருந்தது பதிவு...

ஜோசப் பால்ராஜ் on October 29, 2008 at 9:45 PM said...

சகா,
சின்னப் புள்ளைங்கள சின்னப்புள்ளைங்களா இருக்க விடாம, குழந்தையா இருக்கப்பவே அவுங்கள ஒரு மருத்துவராவோ, பொறியாளரவோ மாத்தி தங்களோட கனவுகள அவங்க மேல திணிக்கிற எல்லாப் பெற்றோருக்கும் ஓங்கி ஒரு அடி போட்டது மாதிரி இருக்கு இந்தப் பதிவு. நெம்ப நல்லா எழுதியிருக்கீங்க தோழா.

கார்க்கி on October 29, 2008 at 10:59 PM said...

// விலெகா said...
அருமை, சிந்திக்கவேண்டிய ஒன்று!//

நன்றி விலெகா..


// வால்பையன் said...
குழந்தைகளின் அழகே அவர்கள் செய்யும் குறும்பு தானே!//

சரியா சொன்னிங்க சகா.. நான் குறும்பு செஞ்சா எங்கம்மா திட்டறாங்க.. கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

கார்க்கி on October 29, 2008 at 11:00 PM said...

// ச்சின்னப் பையன் said...
சூப்பர். சூப்பர்.. நல்லா இருந்தது பதிவு...//

நன்றி சகா..

//ஜோசப் பால்ராஜ் said...
சகா,
சின்னப் புள்ளைங்கள சின்னப்புள்ளைங்களா இருக்க விடாம, குழந்தையா இருக்கப்பவே அவுங்கள ஒரு மருத்துவராவோ, பொறியாளரவோ மாத்தி தங்களோட கனவுகள அவங்க மேல திணிக்கிற எல்லாப் பெற்றோருக்கும் ஓங்கி ஒரு அடி போட்டது மாதிரி இருக்கு இந்தப் பதிவு. நெம்ப நல்லா எழுதியிருக்கீங்க தோழா.//

நன்றி தோழரே..

தமிழ்ப்பறவை on October 29, 2008 at 11:01 PM said...

இந்த வயசுல பண்றதுக்குப் பேரு குறும்பு அல்ல. இதுக்கு உங்க அம்மா மட்டுமில்லை ஊரே திட்டும்

ஜி on October 30, 2008 at 12:22 AM said...

:)) Gud one...

Anonymous said...

ஒரு குழந்தையை போலவே அழகாக உள்ளது உங்கள் பதிவு..

கார்க்கி on October 30, 2008 at 9:34 AM said...

//தமிழ்ப்பறவை said...
இந்த வயசுல பண்றதுக்குப் பேரு குறும்பு அல்ல. இதுக்கு உங்க அம்மா மட்டுமில்லை ஊரே திட்டும்//

ஹிஹிஹிஹ்

// ஜி said...
:)) Gud oநெ..//

நன்றி ஜி

// thooya said...
ஒரு குழந்தையை போலவே அழகாக உள்ளது உங்கள் பதிவு.//

நன்றி தூயா

Aruna on October 30, 2008 at 11:11 AM said...

//வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.//

எவ்வ்ளோ உண்மை? அழகான பதிவு
வாழ்த்துக்கள்...அன்புடன் அருணா

கார்க்கி on October 30, 2008 at 11:23 AM said...

நன்றி அருணா.. உங்கள் பதிவின் டெம்ப்ளேட் அழகு..

பாபு on October 31, 2008 at 9:17 AM said...

எல்லோரும் சொல்லிட்டாங்க ,நான் என்ன சொல்ல
மிக அருமை

கார்க்கி on October 31, 2008 at 1:55 PM said...

நன்றி பாபு

கோபிநாத் on October 31, 2008 at 2:21 PM said...

அருமை ;)

கார்க்கி on November 1, 2008 at 10:01 PM said...

கோபிநாத் said...

அருமை ;)//

ந‌ன்றி கோபினாத்..

 

all rights reserved to www.karkibava.com