Apr 29, 2009

முத்தங்கள் பலவகை


பக்கத்து வீட்டு குழந்தையின் கன்னத்தில் குழி விழுகிறதென பொறாமைக் கொண்டாய். இன்றிலிருந்து துவங்குகிறேன். நாளொன்றுக்கு ஆயிரம் முத்தங்கள் வீதம் ஒரு மாதக் காலத்தில் சரியாய் 10 மிமீ ஆழமுள்ள பள்ளம் நிச்சயம்.

உன்னைக் காதலிப்பதை முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருந்தபோது என் மாமா என் வீட்டிற்கு ஒருநாள் வந்தார். என்னடா செய்ற? என்று அதட்டியபோது தைரியமாக "லவ் பண்றேன்" என்றேன்.சன்னமான குரலில் கேட்டார் "எவ்வளவுடா தினக்கூலி?".உன்னிடம் சொல்லி வருத்தப்பட்டப் போது என் கன்னங்களிலும் உதடுகளிலும் மாறிமாறி பலமுறை முத்தமிட்டாய். பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாய் "அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"

எனக்கு வாழ்க்கை முழுமைக்கும் ஒரே ஒருத் திருமணம் என்பதில் உடன்பாடில்லை என்றேன். எரித்து விடுவது போல் பார்த்தாய். ஆயிரம் திருமணம் வேண்டும் ஒரு நிபந்தனையோடு, அனைத்து முறையும் நீயே மணப்பெண்ணாக என்றேன். அந்நியன் விக்ரம் போல‌ சட்டென மாறி முத்தமழைப் பொழிந்தாய். அப்போதும் எரிந்துக் கொண்டிருந்தேன்.

என்னை மணந்துக் கொண்டால் பணம், நகையென வரதட்சணைக் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன் என உன் தந்தையிடம் சொல் என்றேன். அவருக்கு இருக்காது, ஆனால் உன் காதல் அதை விட‌க் கொடுமையானதாய் இருக்குமே எனச் சொல்லி புன்னைகைத்தாய். இடம்,பொருள் பார்க்காமால் அங்கேயே கொடுமைப்படுத்தத் தொடங்கினேன்.

நம் வருங்கால சந்ததியினர் நிலவுக்கு சென்றெல்லாம் வாழக்கூடுமாம். நடக்கட்டுமே. எனக்கு நிலவுக்கு சென்று வாழ்வதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் நிலவோடே வாழ நினைப்பவன் என்றேன். என் நிலா சூரியனாய் மாறிக் கொண்டிருந்தது.

மற்றப் பெண்களைப் போல் கன்னத்துக்கு வண்ணப்பூச்சு செய்வதில்லை நீ.என்னை பார்த்த அடுத்த நொடி வெட்க்கத்தால் சிவந்து விடுகிறது. அதை பார்க்கும் பொழுதுதான் ராமராஜன் போல் எனக்கும் உதட்டுச்சாயம் பூச வேண்டுமென ஆசை வருகிறது.

***********************************************

பி.கு:- ரொம்ப நாள் ஆச்சுங்க இந்த மாதிரி காதல் பதிவு எழுதி. மீண்டும் எழுதுவதற்கு முன் ஒரு மீள்பதிவு. ட்ரெய்னிங்கில் இருப்பதால் கொஞ்சம் பிசி.

36 கருத்துக்குத்து:

narsim on October 26, 2008 at 1:12 PM said...

கலக்கல் சகா..

தீவாவளிக்கு கடையடைப்பு இல்லையா சகா...


நம்ம கடை 3 நாளைக்கு லீவு..(விட வச்சுட்டாங்க சகா வச்சுட்டாங்க.. கல்யாணம் பண்ணாதீங்க.....)

நர்சிம்

விஜய் ஆனந்த் on October 26, 2008 at 1:18 PM said...

// ராமராஜன் போல் எனக்கும் உதட்டுச்சாயம் பூச வேண்டுமென ஆசை வருகிறது //

ஆப்பீசர்....இதையும் நோட் பண்ணுங்க...மன்றத்து உறுப்பினர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு...ஆனா நம்ம தலைய quote பண்ணாம வேற பேர போட்டு example குடுக்குறாரு...நீங்க தட்டிக்கேட்டே ஆகணும்...

:-)))...

விஜய் ஆனந்த் on October 26, 2008 at 1:20 PM said...

கார்க்கி,

பதிவு கலக்கல்...

காதலும் முத்தங்களும் பொங்கி வழியுது!!!

கார்க்கி on October 26, 2008 at 1:21 PM said...

//narsim said...
கலக்கல் சகா..

தீவாவளிக்கு கடையடைப்பு இல்லையா சகா...
//

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை சகா.. இதுவும் ராப்பின் வேண்டுகோளுக்கு.. என்னைப் பொறுத்த‌வரை என் தகுதிக்கு இது ஒரு நல்லப் பதிவு. இன்று போட்டால் நான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது எனத் தெரியும்.

கார்க்கி on October 26, 2008 at 1:25 PM said...

//ஆப்பீசர்....இதையும் நோட் பண்ணுங்க...மன்றத்து உறுப்பினர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு...ஆனா நம்ம தலைய quote பண்ணாம வேற பேர போட்டு example குடுக்குறாரு...நீங்க தட்டிக்கேட்டே ஆகணும்...//

தலைவி யாரு தலைய கிண்டல் பண்றாருனு நோட் பண்ணுங்க..


//விஜய் ஆனந்த் said...
கார்க்கி,

பதிவு கலக்கல்...

காதலும் முத்தங்களும் பொங்கி வழியுது!!!

October 26, 2008 1:20 ப்ம்//

இதத்தான் எதிர்பார்த்தேன் சகா..

Bleachingpowder on October 26, 2008 at 1:36 PM said...

//இன்று போட்டால் நான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது எனத் தெரியும்.
//

நாங்கலெல்லாம் இருக்கும் போது இந்த மாதிரி சொல்லகூடாது. இப்ப நான் உங்க பதிவ ரயில்ல உக்காந்து படிச்சிட்டிருக்கேன் (reliance data cad புண்ணியத்துல). ரெண்டு மூனு நாளா உங்க பதிவ படிக்க முடியல. இப்ப தான் ஒன்னு ஒன்னா படிச்சிட்டிருக்கேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள் கார்க்கி.

கார்க்கி on October 26, 2008 at 2:08 PM said...

//
நாங்கலெல்லாம் இருக்கும் போது இந்த மாதிரி சொல்லகூடாது. இப்ப நான் உங்க பதிவ ரயில்ல உக்காந்து படிச்சிட்டிருக்கேன் (reliance data cad புண்ணியத்துல). ரெண்டு மூனு நாளா உங்க பதிவ படிக்க முடியல. இப்ப தான் ஒன்னு ஒன்னா படிச்சிட்டிருக்கேன்.//

நன்றி சகா.. நானும் நேத்துதான்reliance data சட் வாங்கினேன். ட்ரெயினல் வேலை செய்ய்தா?

//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள் கார்க்கி.//


நன்றி சகா.. உங்களுக்கு குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தீபாவள் வாழ்த்துக்கள்..

கார்க்கி on October 26, 2008 at 2:11 PM said...

நன்றி அனானி.. சித்துதானே இது? சொல்லிடு மச்சி

மின்னுது மின்னல் on October 26, 2008 at 3:23 PM said...

கலக்கல் கவிதை..!!!


அனுபவிச்சி எழுதினதோ...:)

Karthik on October 26, 2008 at 3:32 PM said...

Karki,

Guess what Im going to say...
.
.
.
.
Someones' getting Romaaaaaaaaantic!
:)

Aruna on October 26, 2008 at 3:50 PM said...

நல்ல காதல் பதிவு....கூட்டத்துக்காக இப்பிடித் தலைப்பு வச்சீங்களா?
அன்புடன் அருணா

வெண்பூ on October 26, 2008 at 5:24 PM said...

கலக்கல் கார்க்கி.. உங்க காதலோட அளவுக்கு ஒரு இதயம் உங்களுக்கு பத்தாதுன்னு நெனக்கிறேன்.. :)))

புதுகை.அப்துல்லா on October 26, 2008 at 5:55 PM said...

வெண்பூ said...
கலக்கல் கார்க்கி.. உங்க காதலோட அளவுக்கு ஒரு இதயம் உங்களுக்கு பத்தாதுன்னு நெனக்கிறேன்.. :)))

//

ஒன்ன வச்சுகிட்டே இந்தாள் படுத்துறபாடு தாங்க முடியல?? :)))))

தாமிரா on October 26, 2008 at 6:38 PM said...

Perfect.!

கார்க்கி on October 26, 2008 at 10:37 PM said...

//
Someones' getting Romaaaaaaaaantic!
:)//

நன்றி கார்த்திக்..

//aruna said...
நல்ல காதல் பதிவு....கூட்டத்துக்காக இப்பிடித் தலைப்பு வச்சீங்களா?
//

இல்ல.. அருணா.. முதல் முத்தம்னு ஒன்னு எழுதினேன்.. அதோட‌ sequel :))))))))

கார்க்கி on October 26, 2008 at 10:39 PM said...

//வெண்பூ said...
கலக்கல் கார்க்கி.. உங்க காதலோட அளவுக்கு ஒரு இதயம் உங்களுக்கு பத்தாதுன்னு நெனக்கிறேன்.. //

சந்தோஷமா இருக்கு சகா..நன்றி..

//புதுகை.அப்துல்லா said...
வெண்பூ said...
கலக்கல் கார்க்கி.. உங்க காதலோட அளவுக்கு ஒரு இதயம் உங்களுக்கு பத்தாதுன்னு நெனக்கிறேன்.. :)))

//

ஒன்ன வச்சுகிட்டே இந்தாள் படுத்துறபாடு தாங்க முடியல?? :)))))//

இன்னும் ஃபோன் பண்ணல.. இருங்க பண்ணிடுறேன்

கார்க்கி on October 26, 2008 at 10:42 PM said...

//தாமிரா said...
Perfeச்ட்.!//

மொத தடவ சொல்றீங்க சகா.. பெருமையா இருக்கு.. அதுவும் நீங்க சொன்னா... ஏன்னு புரியும் உங்களுக்கு

// sivam said...
அருமையான எழுத்து.//

நன்றி சகா

புகழன் on October 27, 2008 at 12:19 AM said...

//எனக்கு நிலவுக்கு சென்று வாழ்வதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் நிலவோடே வாழ நினைப்பவன் என்றேன். என் நிலா சூரியனாய் மாறிக் கொண்டிருந்தது.
//

கிரேட்
உவமைகளும் உவமானங்களும் தூக்கலாக இருக்கின்றது.


//
என் நிலா சூரியனாய் மாறிக் கொண்டிருந்தது.
//


உச்சக்கட்ட இலக்கியம்.

தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளை எதிர்பார்த்து


புகழன்

மாதவராஜ் on October 27, 2008 at 1:00 AM said...

தீபாவளி வாழ்த்துக்கள் !

கார்க்கி on October 27, 2008 at 9:27 AM said...

//கிரேட்
உவமைகளும் உவமானங்களும் தூக்கலாக இருக்கின்றது.//

நன்றி நண்பரே..

////
என் நிலா சூரியனாய் மாறிக் கொண்டிருந்தது.
//


உச்சக்கட்ட இலக்கியம்.

தொடர்ந்து இதுபோன்ற கவிதைகளை எதிர்பார்த்து
//

மிக்க மகிழ்ச்சி. முயற்சி செய்கிறேன்

கார்க்கி on October 27, 2008 at 9:29 AM said...

// மாதவராஜ் said...
தீபாவளி வாழ்த்துக்கள் !//

நன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் தீபாவளி வாழ்த்துகள் சகா

கும்க்கி on October 28, 2008 at 8:27 AM said...

புதுகை.அப்துல்லா said...
வெண்பூ said...
கலக்கல் கார்க்கி.. உங்க காதலோட அளவுக்கு ஒரு இதயம் உங்களுக்கு பத்தாதுன்னு நெனக்கிறேன்.. :)))

//

ஒன்ன வச்சுகிட்டே இந்தாள் படுத்துறபாடு தாங்க முடியல?? :)))))

சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடறாங்கப்பா....

தமிழ்ப்பறவை on October 29, 2008 at 11:34 AM said...

கார்க்கி கலக்கல்..ராமராஜன் மேட்டர் சூப்பர்

கார்க்கி on October 29, 2008 at 11:42 AM said...

//சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடறாங்கப்பா..//

:)))

//தமிழ்ப்பறவை said...
கார்க்கி கலக்கல்..ராமராஜன் மேட்டர் சூப்பர்//

அதுவும் சூப்பர்னு சொன்னா பரவாயில்ல.. மேற்கோள் காட்ட வேற வரி கிடைக்கலையாண்ணே ..

கயல்விழி நடனம் on April 29, 2009 at 10:26 AM said...

Nalla irukku....konjam thabhu shankar style la irukku.... :)

MayVee on April 29, 2009 at 11:44 AM said...

இது மீள்பதிவு ன்னு சொல்லிடிங்க .....
அப்ப நானும் மீள்-பின்னோட்டோம் போடலாமா??????

MayVee on April 29, 2009 at 11:46 AM said...

ப்ரோபிலே போட்டோ ஸ்கூல் படிக்கும் போது எடுத்தத?????
சின்ன வயசு போட்டோ எல்லாம் போட்டு நீங்க யூத் ன்னு காட்டிக்க வேண்டாம்

MayVee on April 29, 2009 at 11:48 AM said...

"கார்க்கி said...
என் தகுதிக்கு இது ஒரு நல்லப் பதிவு. இன்று போட்டால் நான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது எனத் தெரியும்."

comedy pannathinga saga

MayVee on April 29, 2009 at 11:49 AM said...

nalla irukku padivu

MayVee on April 29, 2009 at 11:49 AM said...

me th 30

கார்க்கி on April 29, 2009 at 2:57 PM said...

நன்றி கயல்விழி

நன்றி மேவீ

தீப்பெட்டி on April 29, 2009 at 6:22 PM said...

உங்கள பாத்தா கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு
;-))

கார்க்கி on April 30, 2009 at 12:26 PM said...

ஏன் தீப்பெட்டி??????

" உழவன் " " Uzhavan " on April 30, 2009 at 3:54 PM said...

கலக்கல்ணா..

//ஆயிரம் திருமணம் வேண்டும் ஒரு நிபந்தனையோடு, அனைத்து முறையும் நீயே மணப்பெண்ணாக என்றேன்//

மிக ரசித்த வரிகள்.

ஆதிமூலகிருஷ்ணன் on April 30, 2009 at 10:21 PM said...

இப்போது படிக்கும்போதும் மிக ரசனையாக உள்ளது.. ஒவ்வொரு பாராவும் ஒரு அழகான கவிதை. அதுவும் இரண்டாவது பாராவின் இறுதி வரிகள் அற்புதம்.!

(பின்னூட்டங்களோடு சேர்த்தே மீள்பதிவு போடலாமா? அடடே..)

King... on May 1, 2009 at 3:16 PM said...

ஆனா அப்படியே இருக்கய்யா பல வரிகள் அதை மீள் பதிவா வேற போடுறிங்க...?

 

all rights reserved to www.karkibava.com