Oct 23, 2008

நம்பிக்கை


   பேரிரைச்சலுடன் அந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது. மக்கள் கூட்டம் ஒரே திசையில் வேகமாய் நகர்ந்துக் கொண்டிருந்தது.'சிங்கள ராணுவம் நம்மட ஊருப் பக்கமாத்தான் வருகிறன். எல்லோரும் கெதியாப் போங்க'. பெரியவர் கத்திக் கொண்டிருந்தார். ஆனந்தி அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு  ஓடிக்கொண்டிருந்தாள்.

  "எங்கம்மா  போறோம்" கிட்டத்தட்ட அழுதுக் கொண்டே கேட்டாள் ஆனந்தி.

   "உங்கட மாமா வீடு மாங்கொல்லையில் உண்டு" என இழுத்துக் கொண்டு ஓடினாள் அவள் அம்மா.

    களைத்துப் போய் ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்கள். புழுதியும், தழைகளும் மறைக்க ஒரு உடல் அங்கே. மூக்கில் ஈ. மீண்டும் ஓடத் துவங்கினார்கள். ஷெல்கள் தூரத்தில் வெடிக்க, கூட்டம் கிழக்குப் பக்கம் நோக்கி திரும்பியது. இவர்கள் மட்டும் மாங்கொல்லைக்கு போக வேண்டி மேற்கேப் போவதென முடிவு செய்தார்கள்.

    ஒரு டிராக்டர், நாலு டிராக்டர், பத்து டிராக்டர், லாரி, மாட்டுவண்டி, சைக்கிள் என கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு மக்கள் திரளாக வெளியேறிக் கொண்டிருந்தனர். எதிர்புறமாக போகும் இவர்களை வித்தியாசாமாய் பார்த்துக் கொண்டே "அங்கட போக வேணாம்" "என்ன விசரா" என்றக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சைக்கிள்கக்ல் பாரம் ஏற்றி ஒருப் பகுதியினர் தள்ளாடிக் கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகள் சுமை தாளாமல் கடகடத்தபடி சென்றுக் கொண்டிருந்தது. சுமையேற்றிய வண்டிகளின் உச்சாணியில் வயதானவர்கள் பொக்கை வாய்களை மென்றுக் கொண்டு கண்மூடி ஆடிக்கொண்டிருந்தார்கள். பலப் பெண்கள் தம் அத்தனை சொத்துக்களையும் மூட்டைக் கட்டி தலையில் சுமந்து சென்றனர்.

   ஒரு வழியாய் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கொஞ்சம் பாதுகாப்பான இடமாக தெரிந்தது. கொஞ்சம் தூரத்தில் இருந்தவர்கள் என்றாலும் இதுவரை மாமா வீட்டிற்கு வந்ததில்லை ஆனந்தி. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருவரும் ஓடி வந்தது அவர்கள் குடித்த தண்ணியிலே தெரிந்துக் கொண்டான் ஆதி. ஆனந்தியின் மாமா மகன். அவர்கள் வீட்டிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்தத் தோட்டத்து வீட்டில இவர்களை தங்க வைத்தார் மாமா.

   புது வாழ்வை துவங்கியது போல் உணர்ந்தாள் ஆனந்தி. தோட்டத்தில் ரோஜா செடிகளை பராமரிக்கும் பணியை விருப்பத்துடன் செய்தாள். அவள் வந்தப்பிறகு செடிகள் அதிகமாகி கொண்டே சென்றன. அவ்வபோது கிழக்கு பக்கம் போனவர்கள் எங்கேப் போனார்களோ என்ன ஆனார்களோ எனத் துடித்து போவாள். வாரம் ஒருமுறை அங்கே வருவார் மாமா. ஆதியும்தான். ஆறுதலாய் உணர்வாள்.

   ஆதி... ஆனந்தி.. ஆனந்தியின் சுருக்கம்தான் ஆதி.. ஆதியின் நீட்சிதான் ஆனந்தி என நம்பினான் ஆதி.ஒருநாள் ஆதி த‌ன்னைக் காத‌ல் செய்வ‌தாய் சொன்ன‌தைக் கேட்டு உடைந்துப் போனாள் ஆனந்தி. அவ‌னைத் த‌விர்க்க‌ தொட‌ங்கினாள். உயிர் பிழைத்ததே பெரிய‌ விட‌ய‌ம். இதுக்கெல்லாம் நாம் ஆசைப‌ப்ட‌க்கூடாதென‌ சொல்லிக் கொண்டாள். ஒவ்வொரு முறை அவ‌ள் வ‌ள‌ர்த்த‌ ம‌ஞ்ச‌ள் ரோஜா பூக்கும்போதும் தொலைபேசி சொல்வாள். ஆதியின் அம்மாவிற்கு ம‌ஞ்ச‌ள் ரோஜா என்றால் உயிர் என்ப‌தால் ஆதி சைக்கிளில் வ‌ந்தே வாங்கிச் செல்வான். பூ வாங்க‌ வ‌ருப‌வ‌ன‌ல்ல‌ அவ‌ன். ஒரு நாள் பூவோடு காத‌லும் ம‌ல‌ரும் என‌க் காத்திருந்தான்.‌ஆனால் அன்றிலிருந்து ஆனந்தி மஞ்சள் பூ பூத்ததென சொல்வதில்லை. அவனும் அங்கே போவதில்லை.

   நாட்களும் கடந்தன. போரும் நிறுத்தப்பட்டது. நம்பிக்கைகள் பிறந்தன. அந்த நாளும் வந்தே விட்டது. ஐ.நாவின் தலையீட்டால் தமிழீழம் அறிவிக்கப்பட்டது. துள்ளி ஓடினாள் ஆனந்தி. மொத்தம் ஐனூறு ரோஜாச் செடிகளும் ஒன்றாய் பூத்திருந்தன அன்று. மஞ்சள் ரோஜாவைத் தவிர்த்து.

   தொலைபேசி அடித்தது. ஆதிதான் எடுத்தான்.

மாமா இல்லையா?

இல்ல.

அத்தை?

இல்ல.என்ன வேணும்?

மஞ்சள் பூ பூத்திருக்கு.

*************************************************

நன்றி : சுஜாதா, தூயா (சில வரிகள் இவர்களின் படைப்பில் இருந்து எடுத்தமைக்கு)

28 கருத்துக்குத்து:

Karthik on October 23, 2008 at 10:45 AM said...

me the first?

Karthik on October 23, 2008 at 10:45 AM said...

great!

Anonymous said...

சகோதரா....பதிவை படிக்க முதலே ஒரு நன்றி சொல்லி வைக்கின்றேன்..

எம் சகோதரர்கள் நீங்கள் பேசினால் தான் எமக்கு விடிவு...

நல்ல ஆரம்பம்..

பதிவை படித்துவிட்டு வருகின்றேன்...

கார்க்கி on October 23, 2008 at 11:14 AM said...

நன்றி கார்த்திக்.. இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து எழுத நினைத்தேன். ஏதோ ஒரு வேகத்தில் பதிவேற்றிவிட்டேன்.

நானும் ஒருவன் on October 23, 2008 at 11:20 AM said...

இன்னும் கொஞ்சம் காதலை சொல்லியிருக்கலாம். முடிவு அழகு. அதை மேலும் விளக்காமல் விட்டதுதான் அழகு.

நானும் ஒருவன் on October 23, 2008 at 11:22 AM said...

விமர்சண‌ங்களை விட்டுவிடு. புனைவிலும் இந்தப் பிரச்சனையை தொட நினைச்சதுக்கும், நம்பிக்கையை கொடுக்கும்படி கதை அமைச்சதும் சுப்பர்.

அருண் on October 23, 2008 at 11:48 AM said...

கார் கீ , அற்புதமான பதிவு. கும்மி அடிக்க முடியவில்லை.

கார்க்கி on October 23, 2008 at 12:54 PM said...

நன்றி அருண் ,ஒருவன்

கார்க்கி on October 23, 2008 at 1:06 PM said...

//thooya said...
சகோதரா....பதிவை படிக்க முதலே ஒரு நன்றி சொல்லி வைக்கின்றேன்..

எம் சகோதரர்கள் நீங்கள் பேசினால் தான் எமக்கு விடிவு...

நல்ல ஆரம்பம்..

பதிவை படித்துவிட்டு வருகின்றேன்...

October 23, 2008 10:53 ஆம்//

நன்றி தூயா

narsim on October 23, 2008 at 1:16 PM said...

//இல்ல.என்ன வேணும்? மஞ்சள் பூ பூத்திருக்கு. //

நச் டச் சகா..

நர்சிம்

நான் மட்டும் on October 23, 2008 at 1:47 PM said...

அருமையான பதிவு...நன்றி

கார்க்கி on October 23, 2008 at 2:21 PM said...

//narsim said...
//இல்ல.என்ன வேணும்? மஞ்சள் பூ பூத்திருக்கு. //

நச் டச் சகா..

நர்சிம்//

நன்றி தல.. இருந்தாலும் எனக்கே திருப்ப்தியில்லாத கதை.. கொஞ்சம் நேரமெடுத்து எழுதியிருக்கலாமில்ல?

கார்க்கி on October 23, 2008 at 2:21 PM said...

//நான் மட்டும் said...
அருமையான பதிவு...நன்றி

October 23, 2008 1:47 ப்ம்//

நன்றி சகா

Prosaic on October 23, 2008 at 2:26 PM said...

வெட்டிக்கதை பேசுறத விட்டுட்டு பதிவ மெருகேற்றி மறுபதிவு பண்ணு...

கார்க்கி on October 23, 2008 at 2:30 PM said...

//prosaic said...
வெட்டிக்கதை பேசுறத விட்டுட்டு பதிவ மெருகேற்றி மறுபதிவு பண்ணு...//

ரசிக கண்மணிகளே டென்ஷன் வேண்டாம்.. இவர்தான் என் அண்ணன். சரிங்கண்ணா....

நானும் ஒருவன் on October 23, 2008 at 2:31 PM said...

//வெட்டிக்கதை பேசுறத விட்டுட்டு பதிவ மெருகேற்றி மறுபதிவு பண்ணு...

யாருங்க இது.?

நானும் ஒருவன் on October 23, 2008 at 2:34 PM said...

அண்ணனா? அண்ணா நான் தான் sridhar .ஞாபகம் இருக்குங்களா?

Raj on October 23, 2008 at 2:41 PM said...

உங்கள் எழுத்துகளை வாசித்து வருகிறேன். அனைத்துமே அவசர எழுத்துகள். பத்து விஷயங்கள் எழுதவும். ஐந்தை தேர்வு செய்யவும். இரண்டை மெருகேற்றவும். ஒன்றை வெளியிடவும். அப்போதுதான் மனதில் நிற்கும் படைப்புகள் தர முடியும். அதிகம் எழுதுவதை விட, நச்சென்று ஒன்று போதுமே.

தவறாக சொல்லியிருந்தால் சாரி

கார்க்கி on October 23, 2008 at 2:57 PM said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.செய்கிறேன்

தாமிரா on October 23, 2008 at 4:05 PM said...

நன்று கார்க்கி.! (இன்னும் செதுக்கியிருக்கலாம் என்று சொல்ல நினைத்தேன், ஆனால் அதற்குள் பின்னூட்டத்தில் கலவரமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தவறை ஒப்புக்கொள்ளாதீர்கள். அப்புறம் நிறைய அறிவுரைகள் கிடைக்கும், ஜாக்கிரதை.!)

பரிசல்காரன் on October 23, 2008 at 6:14 PM said...

தாமிராவின் அறிவுரைக்கு ரிப்பீட்டேய் போட்டுக்கறேன்.

கும்க்கி on October 23, 2008 at 8:10 PM said...

தாமிராவின் அறிவுரைக்கு ரிப்பீட்டேய் போட்டுக்கறேன்.பரிசல்..
யானும் அவ்வண்ணமே கோரும்...

அத்திரி on November 1, 2008 at 6:09 PM said...

// மொத்தம் ஐனூறு ரோஜாச் செடிகளும் ஒன்றாய் பூத்திருந்தன அன்று. மஞ்சள் ரோஜாவைத் தவிர்த்து.

தொலைபேசி அடித்தது. ஆதிதான் எடுத்தான்.

மாமா இல்லையா?

இல்ல.

அத்தை?

இல்ல.என்ன வேணும்?

மஞ்சள் பூ பூத்திருக்கு.///


அருமை


சொல்லவந்த கருத்தை நறுக்குன்னு சொன்னா போதும்.
அந்த நறுக் இதுல இருக்கு.

கார்க்கி on November 1, 2008 at 7:06 PM said...

//சொல்லவந்த கருத்தை நறுக்குன்னு சொன்னா போதும்.
அந்த நறுக் இதுல இருக்//

நன்றி அத்திரி

தமிழ்ப்பறவை on November 1, 2008 at 8:33 PM said...

புனைவு நனவாக விரும்பும் பறவையின் குரல்...
நன்றாக இருக்கிறது கார்க்கி. இதற்கு மேலும் நீங்கள் மெருகேற்றினால் காதல்தான் மேலோங்கி நிற்கும் என்பது சாளரத்தில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் என் கருத்து...சரியா யோசித்துச் சொல்லுங்கள்..

கார்க்கி on November 1, 2008 at 9:52 PM said...

// தமிழ்ப்பறவை said...

புனைவு நனவாக விரும்பும் பறவையின் குரல்...//

என் ஆசையும்.. நம் ஆசையும் அதானே..

//நன்றாக இருக்கிறது கார்க்கி. இதற்கு மேலும் நீங்கள் மெருகேற்றினால் காதல்தான் மேலோங்கி நிற்கும் என்பது சாளரத்தில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் என் கருத்து...சரியா யோசித்துச் சொல்லுங்கள்..//


அதை யோசித்து சொல்கிறேன்.. அதற்கு முன் என் எழுத்தின் மூலம் இப்படி ஒரு புரிதலா? பாராட்டு ,புரிந்துக் கொண்ட உங்களுக்கா புரிய வைத்தா எனக்கா? பெருமையாக இருக்கு சகா..

Anonymous said...

எல்லோர் உள்ளங்களையும் பூத்துக்குளுங்கும் ரோஜா தோட்டமாக்கி விட்டீர்கள். :)

கலாட்டா அம்மனி on February 2, 2009 at 12:21 PM said...

\\போரும் நிறுத்தப்பட்டது
ஐ.நாவின் தலையீட்டால் தமிழீழம் அறிவிக்கப்பட்டது\\

கேட்கும்போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு..இது நடக்குமா??
நடந்தா கடவுளுக்குக் கோடி நன்றி.

 

all rights reserved to www.karkibava.com