Oct 20, 2008

காக்டெயில்


 

இந்த வார சாரு மேட்டர்:

     கடந்த ஜூலை அன்றுதான் இரண்டு லட்சம் ஹிட்ஸ்க்காக பெங்களூரில் வாசகர்களுடன் "உற்சாகமாக" கொண்டாடினார் அண்ணன்.செப்டம்பரில் அது நான்கு லட்சமானது.சென்ற வாரம் ஐந்து லட்சம் ஹிட்ஸை தொட்டுவிட்டார்.மூன்று மாதத்தில் மூன்று லட்சம்.வெறும் வாசகர் கடிதம் மற்றும் குட்டிக்கதைகள் மூலம் இதை சாதித்த சாரு நிச்சயம் செலிபிரிட்டிதான். வாழ்த்துகள் அண்ணே. ஆனா இன்னைக்கு மேட்டர் அதுவல்ல. தனது தளத்தில் விளம்பரம் வேண்டி அவர் கொடுத்துள்ள விளம்பரத்தில் தினம் பத்தாயிரம் பேர் படிக்கும் தளமென குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மாதம் 3 லட்சம். கணக்கு இடிக்குதே.இப்போதைய டிராஃபிக் நிலவரம் இதுவென‌ சாருவின் அல்லக்கைகள் யாராவது சொல்லக்கூடும். கடந்த‌ 15ஆம் தேதி ஐந்து லட்சத்தை தொட்டதுக்கு வாச‌கர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார் படத்துடன். இன்று தேதி 20. இப்போதைய நிலவரம் 513595. ஐந்து நாட்களில் 5,50,000 ஆகியிருக்க வேணாமா? 
   உனக்கு ஏன் இந்த வேலை என்பவருக்கு என் பதில். நான் ஜெயமோகனின் அல்லக்கை.

*************************************************

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது ஒரு நல்ல செயல்தானே நண்பர்களே?வருகிற புத்தான்டு முதல் விட்டு விட வேண்டுமென அதற்கான நடவடிக்கையில் இறங்கிய என்னை எல்லோரும் திட்டுகிறார்கள். என்ன, இதுவரை எனக்கு அந்தப் பழக்கமில்லை. இருந்தால்தானே விட முடியும் என்பதால் முதலில் புகைக்க வேண்டுமென முடிவு செய்தேன். அதற்குத்தான் திட்டுகிறார்கள். ச்சே ஒரு நல்லது செய்யலாம்னு பார்த்தால் விடமாட்டறங்கப்பா.

*************************************************

     ஒரு நாள் அம்மாவிடம் சண்டை போட்டு ரிமோட்டை வாங்கி சேனல் சேனலாக தாவினேன். ரகுவரன் வழக்கம்போல் தொலைபேசியில் ஏதோ ஒரு அதிர்ச்சிகரமான சேதியைக் கேட்டு டம்ளர் தண்ணியை விழுங்கினார். எந்தப் படமென நான் யோசித்துக் கொன்டிருக்கும்போதே சித்தாரா வந்து படத்தின் முகவரியை சொன்னார். குடும்பமே அழுது வடிய, ரகுவரனும் அழுது கொண்டே அவன் வந்தா யாரும் எதுவும் கேட்க கூடாதென்ற அர்த்தத்தில் ஏதோ சொன்னார்.அஜித் அழுவதை பார்த்து என்ஜாய் பண்ணலாம் என ஒரு சந்தோஷத்தில் பார்த்தால் நம்ம தல ஜோவோடு கடற்கரை மணலை எண்ணிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்தில் இருந்த ஒரு குழந்தையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சி கூட இல்லாமல் வயிறார உண்ட ஒருவன் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பது போல‌ இருந்தார் தல.

     பின் ஒரு சின்னைப்பையன் உயரமான ஒரு மணியை அடிக்க முயன்று கீழே விழ அவனைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். கொஞ்ச தூரம் சென்று மீண்டும் ஓடி வந்து அந்த மணியை அடித்து விடுவான் அந்தப் பையன். இப்போதும் தல தேமேவென இருக்க அவருக்கும் சேர்த்து நடித்துக் கொண்டிருப்பார் ஜோ. அடுத்து என்ன நடக்கும் என ஆர்வம் வர போட்டான் பாருங்க பாட்டு... ங்கொய்யால இப்போ நான் டம்ளர் தண்ணியை காலி செய்தேன். பாட்டு முடிந்த அடுத்த காட்சியே மணிவண்ணன் இவருக்காக உருகினார். அனைவரும் இவருக்காக அழும்போது தல மட்டும் ஜாலியா டூயட் பாடுவாராம். இந்தப் படத்தை நம்ம மங்களூர் அண்ணன் பிடித்த படம் என சொன்னதற்காக இன்னமும் தினம் ஒரு டம்ளர் தண்ணியை முழுங்கி கொண்டிருக்கிறேன்.

*************************************************

     வழக்கமாய் வாரயிறுதி நாட்களில் தமிழ்மணத்திலும் எல்லோர் கடைகளிலும் ஈயடிக்கும். நேற்று ஒரு மொக்கைப் பதிவை போட்டு தப்பிக்கலாமென ஒரு பதிவு போட்டேன். போட்ட இரண்டு மணி நேரத்தில் சூடாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் குசும்பன், பாலசந்தர், ஜ்யோவ்ராம் சுந்தர், நானும் ஒருவன், கார்த்திக் மற்றும் பலரின் பேராதரவில் 150 பின்னூட்டமும் கிடைத்தன. இதில் கும்மியர்கள் ராப்,பரிசல்,மங்களூர் அண்ணன், வெண்பூ, விஜய் ஆன்ந்த்,எஸ்.கே மற்றும் பல கும்மியர்களின் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பது குறிப்படத்தக்கது. இதன் மூலம் சொல்ல வருவது மொக்கைக்கு என்றுமே மவுசு உண்டு.

டிஸ்கி: தலைப்பில் வால்பையன் பெயர் வைத்ததால் அவரைத்தான் மொக்கை என்று நான் சொல்வதாக யாரும் நுண்ணரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள்.

*************************************************

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

      ட்ரெயின்ல கடைசிப் பெட்டி ரொம்ப தூரத்துல இருக்கே. கடைசி பெட்டி இல்லாம ரயில்வண்டி செய்ய முடியாதா? அப்படி இருந்துதான் ஆகனும்னா நடுவுல வைக்கலாம் இல்ல?

51 கருத்துக்குத்து:

Srinithi said...

innaikku naan firstaa irunthukirene

புதுகை.அப்துல்லா on October 20, 2008 at 11:46 AM said...

நான் கார்க்கியின் அல்லக்கை ஹி..ஹி..ஹி

LOSHAN on October 20, 2008 at 12:00 PM said...

நேற்று உங்க பதிவை சூடாக்கியவர்களில் ஒருவன் அடியேனும் தான்.. ;)
அப்போ அதை தான் மொக்கைனு சொல்லுவீங்களா?

அது சரி சாரு இதுக்கு ஒரு பதில் பதிவு போடுவாருனு நீங்க எதிர்பார்க்கிறீங்களா? ;)

narsim on October 20, 2008 at 12:03 PM said...

சகா.. அந்த புகை மேட்டர் சூப்பர்..

நல்லா இருக்கு சகா..

நர்சிம்

Karthik on October 20, 2008 at 12:04 PM said...

//அஜித் அழுவதை பார்த்து என்ஜாய் பண்ணலாம் என ஒரு சந்தோஷத்தில் பார்த்தால்

என்ன ஒரு வில்லத்தனம்?

கார்க்கி on October 20, 2008 at 12:40 PM said...

//srinithi said...
innaikku naan firstaa irunthukirene//

சந்தோஷம் நண்பி..

/புதுகை.அப்துல்லா said...
நான் கார்க்கியின் அல்லக்கை ஹி..ஹி..ஹி
//

அல்லக்கைக்கே அல்லக்கை கூடாது அண்ணே..

கார்க்கி on October 20, 2008 at 12:42 PM said...

//loshan said...
நேற்று உங்க பதிவை சூடாக்கியவர்களில் ஒருவன் அடியேனும் தான்.. ;)
அப்போ அதை தான் மொக்கைனு சொல்லுவீங்களா?//

ஆமாம்.. மண்ணிக்க நண்பரே..

அது சரி சாரு இதுக்கு ஒரு பதில் பதிவு போடுவாருனு நீங்க எதிர்பார்க்கிறீங்களா? ;)

அவரு என்ன அபப்டியா வேலை இல்லாம இருக்காரு. சாரு எப்பவுமே பாராட்டின்னதான் போடுவாரு.

கார்க்கி on October 20, 2008 at 12:43 PM said...

/narsim said...
சகா.. அந்த புகை மேட்டர் சூப்பர்..

நல்லா இருக்கு சகா..//

அப்ப மத்தது எல்லாம் புஸ்ஸா தல‌? :(((((

//karthik said...
//அஜித் அழுவதை பார்த்து என்ஜாய் பண்ணலாம் என ஒரு சந்தோஷத்தில் பார்த்தால்

என்ன ஒரு வில்லத்தனம்?//

ஹாஹாஹா.. நம்பியார் மாதிரி சிரிச்சேன் தம்பி

Anonymous said...

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

ட்ரெயின்ல கடைசிப் பெட்டி ரொம்ப தூரத்துல இருக்கே. கடைசி பெட்டி இல்லாம ரயில்வண்டி செய்ய முடியாதா? அப்படி இருந்துதான் ஆகனும்னா நடுவுல வைக்கலாம் இல்ல?//

சூப்பர்.

ப்ளீச்சிங் பவுடர் said...

//வால்பையன் பெயர் வைத்ததால் அவரைத்தான் மொக்கை என்று நான் சொல்வதாக யாரும் நுண்ணரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள்//

என் பேரை உபயோகிக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும்

நானும் ஒருவன் on October 20, 2008 at 12:59 PM said...

//உனக்கு ஏன் இந்த வேலை என்பவருக்கு என் பதில். நான் ஜெயமோகனின் அல்லக்கை.//


எண்ணிக்கை அதிகம் என்பதால் கடைசியில் இரண்டு சைபரை எடுத்து விட்டார் எங்க தல.5,13,585 அல்ல. 5,13,58,500 .. நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால் நான் சாருவின் அல்லக்கை அல்ல, நம்பிக்கை.

நானும் ஒருவன் on October 20, 2008 at 1:01 PM said...

//என்ன, இதுவரை எனக்கு அந்தப் பழக்கமில்லை. இருந்தால்தானே விட முடியும் என்பதால் முதலில் புகைக்க வேண்டுமென முடிவு செய்தேன்//

இதைத்தான் எங்க சாரு சார் படித்து விஷயம் கற்ற பின் எழுத வேண்டுமென்றார். உனக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா?

இப்படிக்கு,

சாருவின் தீவிர வாசகர் சதுரம்

நானும் ஒருவன் on October 20, 2008 at 1:03 PM said...

//ம் தல தேமேவென இருக்க அவருக்கும் சேர்த்து நடித்துக் கொண்டிருப்பார் ஜோ//

ஒரே வரியில் இருவருக்கும் பல்பா? கலக்கல்.

நானும் ஒருவன் on October 20, 2008 at 1:04 PM said...

////ங்கொய்யால இப்போ நான் டம்ளர் தண்ணியை காலி செய்தேன்////

நானா இருந்தா ஒரு பீரை காலி செய்திருப்பேன்.

நானும் ஒருவன் on October 20, 2008 at 1:04 PM said...

//இந்தப் படத்தை நம்ம மங்களூர் அண்ணன் பிடித்த படம் என சொன்னதற்காக இன்னமும் தினம் ஒரு டம்ளர் தண்ணியை முழுங்கி கொண்டிருக்கிறேன்//

அஜித்திற்கும் பிடித்த படமிது

நானும் ஒருவன் on October 20, 2008 at 1:05 PM said...

// குசும்பன், பாலசந்தர், ஜ்யோவ்ராம் சுந்தர், நானும் ஒருவன், கார்த்திக் மற்றும் பலரின் பேராதரவில் 150 பின்னூட்டமும் கிடைத்தன//

போதும்ப்பா. எனக்கு வெட்கமா இருக்கு.

நான் மட்டும் on October 20, 2008 at 1:30 PM said...

ரெயில் எஞ்சினை நடுவில் வைத்தால் என்ன?...
இத சொன்னா நம்மள பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க..என்ன பண்ண?..

கார்க்கி on October 20, 2008 at 1:33 PM said...

நன்றி அனானி..

நன்றி நானும் ஒருவன். சாருவை இனிமேல் சீண்ட மாட்டேன்.(ஹிஹிஹி இப்படி ஒரு நினைப்பு)

/நான் மட்டும் said...
ரெயில் எஞ்சினை நடுவில் வைத்தால் என்ன?...
இத சொன்னா நம்மள பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க..என்ன பண்ண?..
//

சரியா சொன்னிங்கண்ணே..

பரிசல்காரன் on October 20, 2008 at 1:54 PM said...

நேத்தே பின்னூட்டம் போட்டு பாராட்டணும்னு நெனைச்சேன். சூட்டுக்கும், 150க்கும். எனிவே.. கங்கிராட்ஸ்!

நேத்து, அதுக்கு பதிலா உங்களைப் பத்தி வேற ஒருத்தர்கிட்ட பேசிகிட்டிருந்தேன்.

காக்டெய்ல்ல எல்லாமே நல்லாயிருந்தது.

Anonymous said...

நீங்க இளையதளபதி விஜய் ரசிகர் என்பது உங்களுடைய பழைய பதிவின் ஸ்கிரீன் ஷாட் பார்த்து தெரிந்து கொண்டேன். அதுக்குன்னு இப்படி அஜீத்தை வார கூடாது.

கார்க்கி on October 20, 2008 at 2:39 PM said...

//பரிசல்காரன் said...
நேத்தே பின்னூட்டம் போட்டு பாராட்டணும்னு நெனைச்சேன். சூட்டுக்கும், 150க்கும். எனிவே.. கங்கிராட்ஸ்!
//

நன்றி சகா..

//நேத்து, அதுக்கு பதிலா உங்களைப் பத்தி வேற ஒருத்தர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். //

உங்க பதிவுல பத்த வச்சிங்க.. யாரு என்ன மேட்டர் சகா?

/காக்டெய்ல்ல எல்லாமே நல்லாயிருந்தது.//

அப்படியா?

கார்க்கி on October 20, 2008 at 2:40 PM said...

சிந்தனை சின்னசாமியின் பெரியப்பா மகன் வயித்து பேரனின் மாமாவுடைய மருமக பிள்ளை சந்தேக சந்திராசாமியைப் பத்தி எதுவும் சொல்லலையே!!!

கார்க்கி on October 20, 2008 at 2:42 PM said...

//anonymous said...
நீங்க இளையதளபதி விஜய் ரசிகர் என்பது உங்களுடைய பழைய பதிவின் ஸ்கிரீன் ஷாட் பார்த்து தெரிந்து கொண்டேன். அதுக்குன்னு இப்படி அஜீத்தை வார கூடாது.//

நான் விஜய் ரசிகன் இல்லைனு எப்பண்ணா சொன்னேன்? அது என்ன ஸ்கிரீன் ஷாட்?கொஞ்சம் காட்டுங்களேன்.. ஆனா இப்போ ஜே.கே.ஆருக்கு மட்டும்தான் ரசிகன்..

Balachander said...

//இந்த வார சாரு மேட்டர்:// அவர பிரிய வுடுங்க சாமி..

//புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது ஒரு நல்ல செய....// லாஜிக் சுப்பர்....

//ஒரு நாள் அம்மாவிடம் சண்டை போட்டு ரிமோட்டை வாங்கி சேனல் சேனலாக தாவினேன். ரகுவரன் வழக்கம்போல் தொலைபேசியில் ஏதோ ஒரு அதிர்ச்சிகரமான சே..//

உங்களை தண்ணி குடிக்க வச்சதே அவருடைய நடிப்பின் சாதனைதான் :-)..

//வழக்கமாய் வாரயிறுதி நாட்களில் தமிழ்மணத்திலும் எல்லோர் கடைகளிலும் ஈயடிக்கும். நேற்று ஒரு மொக்கைப் பதிவை போட்டு தப்பி....// காசு இன்னும் என் bank account ல் transfer ஆக வில்லை.... ;-(..

//சந்தேக சந்திராசாமியின் இடம். இந்த வார சந்தேகம்: ட்ரெயின்ல கடைசிப் பெட்டி ரொம்ப தூரத்...// சிக்கரம் எடத்த காலி பண்ணு ச.ச.சாமி .

Anonymous said...

http://www.karkibava.com/2008/09/much-better.html

intha pathiva aen raasa thookkittenga

tamilmanaththai vida tamilish betternnu oru pathivu vanthuchche... antha screen shottathaan sonnen

Karthik on October 20, 2008 at 3:24 PM said...

Karki,

சினிமா தொடர் பதிவு போட்டாச்சு. வந்து பாருங்க. பரவாயில்லையான்னு!

கார்க்கி on October 20, 2008 at 3:49 PM said...

//http://www.karkibava.com/2008/09/much-better.html

intha pathiva aen raasa thookkittenga

tamilmanaththai vida tamilish betternnu oru pathivu vanthuchche... antha screen shottathaan sonnen//

இந்த பதிவுக்கும் நீங்க என்னை விஜய் ரசிகனு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்? இது மட்டுமல்ல இது போன்று நான் எழுதிய பல வேலைக்காவாத பதிவுகளை நான் டெலீட் செய்தேன். அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? அப்படியே உங்க பேர சொன்னா பரவாயில்ல.

கார்க்கி on October 20, 2008 at 3:50 PM said...

நன்றி பாலசந்தர்

@கார்த்திக்,

இதோ வ்ர்றேன்டா கண்ணா..

வெண்பூ on October 20, 2008 at 3:51 PM said...

கலக்கலான செம கிக்கான காக்டெய்ல்.. இன்னும் சாரு, ஜொமோவிலிருந்து வெளியில வரலியா.. அந்த கடைசி கேள்வி ஆனாலும் சூப்பர். நீங்க ஏன் இந்த கேள்வியை லாலு பிரசாத்துக்கு அனுப்பக்கூடாது? அவர் இல்லைன்னா இணையமைச்சர் வேலுவுக்கு அனுப்பலாம். அவரும் இல்லைன்னா செகந்திரபாத் கோட்ட மேலாளருக்கு.. அவரும் இல்லைன்னா, ஹைடெக் சிட்டி ரெயில்வே ஸ்டேசன்ல ஒருத்தன் டிக்கெட் குடுத்துட்டு இருப்பான். அவன்கிட்ட குடு.. டாய்.. என்னை டென்சன் ஆக்காத, ஆமா சொல்லிட்டேன். :)))

கார்க்கி on October 20, 2008 at 4:00 PM said...

//கலக்கலான செம கிக்கான காக்டெய்ல்.. இன்னும் சாரு, ஜொமோவிலிருந்து வெளியில வரலியா..//

அது சும்மா லுல்லுலாயிக்குண்ணா..

// அந்த கடைசி கேள்வி ஆனாலும் சூப்பர். நீங்க ஏன் இந்த கேள்வியை லாலு பிரசாத்துக்கு அனுப்பக்கூடாது? அவர் இல்லைன்னா இணையமைச்சர் வேலுவுக்கு அனுப்பலாம். அவரும் இல்லைன்னா செகந்திரபாத் கோட்ட மேலாளருக்கு.. அவரும் இல்லைன்னா, ஹைடெக் சிட்டி ரெயில்வே ஸ்டேசன்ல ஒருத்தன் டிக்கெட் குடுத்துட்டு இருப்பான். அவன்கிட்ட குடு.. டாய்.. என்னை டென்சன் ஆக்காத, ஆமா //

நீங்க மூனு வருஷம் ஹைதராபாத்தில் இருந்தீங்க.ஒத்துக்குறேன். சிந்தனை சின்னசாமின்னா மட்டும் ஆஹா ஓஹோன்றீங்க.. இனிமேல் வாரம் இரண்டு சந்தேகம் கேளுடா சந்திராசாமி..

வால்பையன் on October 20, 2008 at 4:58 PM said...

//இந்த வார சாரு மேட்டர்: //

என்னது சாரு!!


மேட்டரா

வால்பையன் on October 20, 2008 at 5:00 PM said...

//உனக்கு ஏன் இந்த வேலை என்பவருக்கு என் பதில். நான் ஜெயமோகனின் அல்லக்கை.//

அல்லக்கை நலச் சங்க தலைவர் பரிசலிடம் உறுப்பினர் அட்டை வாங்கினீர்களா

வால்பையன் on October 20, 2008 at 5:05 PM said...

//தலைப்பில் வால்பையன் பெயர் வைத்ததால் அவரைத்தான் மொக்கை என்று நான்
சொல்வதாக யாரும் நுண்ணரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள்.//

அதெல்லாம் நடந்து கிட்டு தான் இருக்கு

கார்க்கி on October 20, 2008 at 5:10 PM said...

//வால்பையன் said...
//தலைப்பில் வால்பையன் பெயர் வைத்ததால் அவரைத்தான் மொக்கை என்று நான்
சொல்வதாக யாரும் நுண்ணரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள்.//

அதெல்லாம் நடந்து கிட்டு தான் இருக்கு//


அபப்டியா? யாரு யாரு?

நானும் ஒருவன் on October 20, 2008 at 6:44 PM said...

என்னடா ஏதோ மிரட்டல் வந்துதாமே? டெலிட் பண்ணிட்டியா?

Kalai M on October 20, 2008 at 6:52 PM said...

//என்ன, இதுவரை எனக்கு அந்தப் பழக்கமில்லை.//

Thats good.

//அதற்குத்தான் திட்டுகிறார்கள். ச்சே ஒரு நல்லது செய்யலாம்னு பார்த்தால் விடமாட்டறங்கப்பா.//

:))))

கார்க்கி on October 20, 2008 at 7:22 PM said...

வாங்க கலை. தேர்வுகள் எல்லாம் எப்படி இருந்தது?

Kalai M on October 20, 2008 at 7:27 PM said...

//வாங்க கலை. தேர்வுகள் எல்லாம் எப்படி இருந்தது?//

Quite good Karki. Thanks. I'm still following ur blog ..just didn't post comment. u doing well.

கார்க்கி on October 20, 2008 at 7:52 PM said...

தெரியும் கலை.tamilish.com வோட்டு கூட போட்டிங்க. உங்க ஆதரவு எப்போதும் இருக்கும்னு தெரியும். நன்றி..

கார்க்கி on October 20, 2008 at 7:53 PM said...

//நானும் ஒருவன் said...
என்னடா ஏதோ மிரட்டல் வந்துதாமே? டெலிட் பண்ணிட்டியா?//

மிரட்டலா? ஆஹா... சும்ம ஒருத்தன் வந்து கலாய்க்க பார்த்தான்.. டெலிட் பண்ணிட்டேன்.

Kalai M on October 20, 2008 at 8:19 PM said...

//தெரியும் கலை.tamilish.com வோட்டு கூட போட்டிங்க.//

Exam naleh ellam pathivugalum mulutaga padikavillai.
Athan matratukalam vote podehvillai.
Sorry. Will try 2 read them later.

Kalai M on October 20, 2008 at 8:24 PM said...

//தெரியும் கலை.tamilish.com வோட்டு கூட போட்டிங்க. உங்க ஆதரவு எப்போதும் இருக்கும்னு தெரியும். நன்றி..//

Unggalku enn support eppothum erukum Karki. Entha blog valarchi pakum pothu romba magalchiyaga eruku. Unggal eluthu,karuthu, teramey valipadateh ethu oru nalla vaipu. Unggal blog meendum meendum valareh enn vazhtukkal.

கார்க்கி on October 21, 2008 at 10:15 AM said...

//Exam naleh ellam pathivugalum mulutaga padikavillai.
Athan matratukalam vote podehvillai.
Sorry. Will try 2 read them later.//

do ur exams well.. we can read this at any time. moreover there is nothing special which u shud not miss. alla re mokkais only..heheheh

கார்க்கி on October 21, 2008 at 10:16 AM said...

/Unggalku enn support eppothum erukum Karki. Entha blog valarchi pakum pothu romba magalchiyaga eruku. Unggal eluthu,karuthu, teramey valipadateh ethu oru nalla vaipu. Unggal blog meendum meendum valareh enn vazhtukkal.//

tanx kalai

rapp on October 22, 2008 at 5:53 PM said...

// ட்ரெயின்ல கடைசிப் பெட்டி ரொம்ப தூரத்துல இருக்கே. கடைசி பெட்டி இல்லாம ரயில்வண்டி செய்ய முடியாதா? அப்படி இருந்துதான் ஆகனும்னா நடுவுல வைக்கலாம் இல்ல//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதே மாதிரி லட்சம் தடவ கேட்ட ஜோக்க போட்டீங்க, நான் உங்கள வாழ்த்தி ஒரு கவுஜ பாடிடுவேன், சொல்லிட்டேன்:):):)

rapp on October 22, 2008 at 5:55 PM said...

//இதில் கும்மியர்கள் ராப்,பரிசல்,மங்களூர் அண்ணன், வெண்பூ, விஜய் ஆன்ந்த்,எஸ்.கே மற்றும் பல கும்மியர்களின் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பது குறிப்படத்தக்கது//

நான் ஊர்ல இல்லைங்க, இல்லைன்னா கும்மி ஜோதியில் ஜெகஜோதியா ஐக்கியாமாகியிருப்பேன்:):):)

rapp on October 22, 2008 at 5:55 PM said...

// நான் ஜெயமோகனின் அல்லக்கை//

super:):):)

rapp on October 22, 2008 at 5:59 PM said...

//ச்சே ஒரு நல்லது செய்யலாம்னு பார்த்தால் விடமாட்டறங்கப்பா. //

ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

// ஒரு நாள் அம்மாவிடம் சண்டை போட்டு ரிமோட்டை வாங்கி சேனல் சேனலாக தாவினேன்.//

ரகுவரன் அழுமூஞ்சியா நடிச்சதால, நீங்க உங்கம்மாக்கிட்ட சண்டபோட்டத இங்கே எழுதிட்டீங்களா????????

//அவர் குடும்பத்தில் இருந்த ஒரு குழந்தையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சி கூட இல்லாமல் வயிறார உண்ட ஒருவன் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பது போல‌ இருந்தார் தல. //

super:):):)

ஜெயமோகனின் அல்லக்கைனு சொன்னாப்போல, சினிமாவுலயும் யாரோட அல்லக்கைன்னு சொல்லிடுங்க:):):)

rapp on October 22, 2008 at 6:01 PM said...

// இன்று தேதி 20. இப்போதைய நிலவரம் 513595. ஐந்து நாட்களில் 5,50,000 ஆகியிருக்க வேணாமா?
//

ஷபா, ஸ்கூல்லதான் உயிரெடுத்தாங்கன்னா, நீங்களுமா தளபதி?????????????

rapp on October 22, 2008 at 6:01 PM said...

me the 50th

கார்க்கி on October 23, 2008 at 3:14 PM said...

நன்றி ராப்.. உங்களுக்காகவே 50 விட்டு வச்சாங்க போல இருக்கு

 

all rights reserved to www.karkibava.com