Oct 17, 2008

காதல் கடிதம்


     வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

        சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

         மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

        சந்திர சூரியனகளை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

         கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

        பாறையாய் நான்.பசுமரமாய் நீ.வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன? வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க? பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

     உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

      உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னை காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

       ஆரம்ப காலங்களில் உன்னைக் கானும் பொதெல்லாம் என் காதல்,  புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டி பார்க்கும்.

      உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களை பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

       என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

    அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள்(எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதை படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

   ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கி பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

    இதற்கு முன்னமும் சில பெண்களோடு பழகி இருக்கிறேன்.அப்போதெல்லம் பரிமாறும் முன்னமே வெறும் இலையை தின்றுவிட்டு ருசியில்லை என்றேன். இன்று உன்னால் வயிறு நிரம்பி மனசும் நிறைந்துவிட்டது

    நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்து போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

   இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

     அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோண்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

     சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்தத்வள் நீ.பாரமல்ல.

    இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள். புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.ஆனால் எந்த விரல் கொண்டு சொரிந்து கொள்வது? இப்படியாக எத்தனை இரவுகள்?

    சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

    அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது.

27 கருத்துக்குத்து:

Srinithi said...

நல்ல இருக்குப்பா... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

rapp on October 17, 2008 at 12:10 PM said...

me the second

rapp on October 17, 2008 at 12:11 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர் ஆரம்பிச்சிட்டீங்களா?

Bleachingpowder on October 17, 2008 at 12:29 PM said...

அது என்ன வீக்கெண்ட் ஆனா இப்படி ஃபீல் பண்ண ஆரம்பிச்சிரீங்க.

Bleachingpowder on October 17, 2008 at 12:29 PM said...

என் பேருல வேற யாரும் இன்னும் வரலையே???

Bleachingpowder on October 17, 2008 at 12:32 PM said...

உங்க முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்த Irreversible படத்தை டவுன்லோட் செஞ்சு பார்த்தேன், தூக்கமே போச்சு :((

கார்க்கி on October 17, 2008 at 12:35 PM said...

// bleachingpowder said...
என் பேருல வேற யாரும் இன்னும் வரலையே???
//

இன்னும் இல்ல சகா..

கார்க்கி on October 17, 2008 at 12:35 PM said...

//bleachingpowder said...
உங்க முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்த Irreversible படத்தை டவுன்லோட் செஞ்சு பார்த்தேன், தூக்கமே போச்சு :((
//

ஆங்ங்ங்ங்ங்ங்.. நான் தான் சொன்னேன் இல்ல.. என்கிட்டய்யும் சி.டி. இருக்கு. உடைச்சு போடனும்..

கார்க்கி on October 17, 2008 at 12:36 PM said...

//rinithi said...
நல்ல இருக்குப்பா... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//

ஆஹா.. ஆரம்பிச்சிட்டாங்க..

//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர் ஆரம்பிச்சிட்டீங்களா?//

கிகிகிகிகி.. (ந‌ன்றி தூயா)

விஜய் ஆனந்த் on October 17, 2008 at 12:53 PM said...

ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஹைதராபாத்தா இருக்கே...

எமோஷனைக்குறைங்கப்பூ...

:-))))...

கார்க்கி on October 17, 2008 at 1:10 PM said...

//விஜய் ஆனந்த் said...
ஒரே பீலிங்ஸ் ஆஃப் ஹைதராபாத்தா இருக்கே...

எமோஷனைக்குறைங்கப்பூ...

:-))))...//

ஓக்கே சகா..

Anonymous said...

கார்க்கிக்கு இப்படியும் எழுத வருமா?!! :) நல்லாயிருக்கு..

கார்க்கி on October 17, 2008 at 5:37 PM said...

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க.. போய் காதல்னு லேபிள் இருக்கிரத எல்லாம் முதல்ல அப்டிங்க.. அதான் உங்களுக்கு தண்டனை..

வெண்பூ on October 17, 2008 at 5:50 PM said...

எனக்கு உங்களோட இந்த ரைட்டிங் கொஞ்சம் டிரையா இருக்கு.. ஆனா அந்த கடைசி வரி சூப்பர்.. பாராட்டுக்கள்.

வெண்பூ on October 17, 2008 at 6:03 PM said...

கார்க்கி,

உங்கள் "காதல்" லேபிளில் இருப்பதை படிக்க ஆரம்பித்தேன். அருமை.. ஒவ்வொன்றும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. உங்க சோகத்தை எழுதி இருக்கீங்க, அதனால நல்லா இருக்குன்னு பாராட்டுனா அது தப்பா போயிடும்.. என்ன சொல்றதுன்னு தெரியல.. என்னை இந்த பதிவுகள் ஆக்ரமிச்சி இருக்குன்னு சொன்னா சரியா இருக்கும்னு நெனக்கிறேன்.


எப்படி இத்தனை நாள் இந்த பக்கம் வராம இருந்தேன்னு ஆச்சரியமா இருக்கு.. :(

கார்க்கி on October 17, 2008 at 6:20 PM said...

/எனக்கு உங்களோட இந்த ரைட்டிங் கொஞ்சம் டிரையா இருக்கு.. ஆனா அந்த கடைசி வரி சூப்பர்.. பாராட்டுக்கள்.
//

உனைமையான கருத்துக்கு நன்றி சகா..

//உங்கள் "காதல்" லேபிளில் இருப்பதை படிக்க ஆரம்பித்தேன். அருமை.. ஒவ்வொன்றும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. உங்க சோகத்தை எழுதி இருக்கீங்க, அதனால நல்லா இருக்குன்னு பாராட்டுனா அது தப்பா போயிடும்.. என்ன சொல்றதுன்னு தெரியல.. என்னை இந்த பதிவுகள் ஆக்ரமிச்சி இருக்குன்னு சொன்னா சரியா இருக்கும்னு நெனக்கிறேன்.


எப்படி இத்தனை நாள் இந்த பக்கம் வராம இருந்தேன்னு ஆச்சரியமா இருக்கு.. :(
//

இரன்டு பின்னூட்டத்துக்கு நடுவே 15 நிமிட இடைவெளி.. முதலில் ட்ரை என்ற சொன்னவர் மீதியை படித்து இப்போது ஆக்ரமிச்சு இருக்குனு சொன்னா உண்மையாத்தான் இருக்கும். நன்றி சகா. அடிக்கடி வாங்க.. என்ன அடிக்கடி மொக்கைத்தான் போடுவேன். எப்பாவாச்சுத்தான் இப்படி.

Karthik on October 17, 2008 at 6:31 PM said...

Someone getting Romaaaaaaaaaaaaaantic!
:)

kalakkals karki!

வால்பையன் on October 17, 2008 at 7:03 PM said...

//சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.//

கவிதை கவிதை

வால்பையன் on October 17, 2008 at 7:03 PM said...

//மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.//

அப்படியே கட்டடம் எதால் கட்டப்பட்டதுன்னு ஆராய்ச்சி பண்ணிருங்க

வால்பையன் on October 17, 2008 at 7:09 PM said...

20

கார்க்கி on October 17, 2008 at 7:44 PM said...

//karthik said...
Someone getting Romaaaaaaaaaaaaaantic!
:)

kalakkals kaர்கி!//

நன்றி கார்த்திக்..

கார்க்கி on October 17, 2008 at 7:45 PM said...

//கவிதை கவிதை//

எங்க? எங்க?

/வால்பையன் said...
//மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.//

அப்படியே கட்டடம் எதால் கட்டப்பட்டதுன்னு ஆராய்ச்சி பண்ணிருங்க//

அவ்ளோ அறிவில்லைங்க..

தாமிரா on October 17, 2008 at 8:07 PM said...

அய்யய்யோ.. இவங்கிட்டயும் விஷயம் இருக்குது போலயிருக்குதே.! (கிளாஸ் பதிவு). ரொம்ப நல்லா வந்திருக்குது. வெண்பூவின் கமென்டைப்பாத்தீங்கள்ல.. சீரியஸா சொல்றேன். மொக்கையை குறைச்சுக்கலாம், அதுதான் சரியா வரமாட்டேங்குதுனு நான் நினைக்கிறேன்)

கார்க்கி on October 17, 2008 at 8:13 PM said...

//தாமிரா said...
அய்யய்யோ.. இவங்கிட்டயும் விஷயம் இருக்குது போலயிருக்குதே.! (கிளாஸ் பதிவு). ரொம்ப நல்லா வந்திருக்குது. வெண்பூவின் கமென்டைப்பாத்தீங்கள்ல.. சீரியஸா சொல்றேன். மொக்கையை குறைச்சுக்கலாம், அதுதான் சரியா வரமாட்டேங்குதுனு நான் நினைக்கிறேன்)
//

ஒக்கே தல.. ஆனா இந்த மாதிரி தினமும் எழுத நம்மால முடியாது.. அதனால இருப்பை தக்க வைத்துக் கொள்ள மொக்கை பதிவுகள்.. குறைச்சுக்கிறேன் சகா..

நான் மட்டும் on October 20, 2008 at 10:05 AM said...

superappu...

me the last.....

கார்க்கி on October 20, 2008 at 10:43 AM said...

ஆமாங்க.. வருகைக்கு நன்றி நண்பரே..

கவிப்ரியன் on September 1, 2011 at 1:32 PM said...

கடிதம் நன்றாக இருக்கிறது. இதற்கு என் பதிவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன். தவறில்லையே!

 

all rights reserved to www.karkibava.com