Oct 16, 2008

பரிசலை தொடர்ந்து அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்


      பரிசலை தொடர்ந்து இன்னும் பலப் பதிவர்கள் அச்சு ஊடகத்தில் நுழையப் போவதாக உளவுத்துறை செய்திகள் சொல்கின்றன.  அவர்கள் யார் யார்  என்பது ஒருபுறம் இருக்கட்டும்.இப்படியே எல்லோரும் போனால் என்ன ஆகும் என கழிப்பறையில் அமர்ந்து யோசித்த கண நேரத்தில் உதயமான‌து இந்த பதிவு.

   ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல்.

  முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30 பக்கம் விளம்பரங்கள் போட வேண்டும். 30 பக்கமா என்று வாயைப் பிளப்போர் இந்த வார குமுதத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

   பின் 5 பக்கம் நடிகைகளின் படங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  பின் ஒரு 5 பக்கத்திற்கு சினிமா பற்றிய செய்திகள் போட வேண்டும். அதில் ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் செய்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் "வில்லு படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதில் விஜய் சந்தோஷமாக இருக்கிறார்" என்ற துணுக்காவது இருக்க வேண்டும். இது போன்ற செய்திகளை அவர்களும் மறுக்க போவதில்லை. முரளிகண்ணனின் பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மற்ற செய்திகளுக்கு தமிழ்சினிமா என்ற வலையில் வரும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருப்பது 60 பக்கங்களே.

  சமீபத்தில் வந்த இரண்டு படத்தின் விமர்சன‌த்திற்கு நான்கு பக்கங்கள். லக்கி மற்றும் அதிஷாவின் விமர்சனத்தை போட்டு விடலாம்.யாராவது ஒருவரின் கேள்வி பதிலுக்கு நான்கு பக்கங்கள். நம்ம டோண்டு அவர்களின் கேள்வி பதில்களை இதற்கு பயன்படுத்திக் கொள்லலாம்.கடைசிப் பக்கத்தை பயோ டேட்டாவிற்கு ஒதுக்க வேண்டும். இருக்கவே இருக்கு கோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா. ஒரு தலையங்க பக்கம். நர்சிம்மிடம் விட்டால் ஏதாச்சும் செய்வார்.அவசரப்பட்டு உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம். மீதம் இருப்பது 50தான்.

   கார்ட்டூன் கமெண்ட்டுக்கு இரண்டு பக்கங்கள். அதுக்கு யாருடைய பதிவு என்று சொல்லவும் வேண்டுமா? யாராவ்து ஒருவர் இன்னொருவருக்கு எழுதும் பகிரங்க கடிதத்திற்கு 3 பக்கங்கள். இதற்கு பல பதிவுகள் உண்டு. அந்த சூழ்நிலைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது. கவிதைகளுக்கு ஐந்து பக்கங்கள். ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சுகுணா என அதுக்கும் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆக பத்து பக்கங்கள் மீதம் இருப்பது 40 தான் சகா.

    ஆறுப் பக்கங்களை ஒருப் பக்க கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒதுக்க வேண்டும். வெண்பூ, ச்சின்னப்பையன் என இதுக்கும் ஏகப்பட்ட போட்டியாளர்கள். ஒரு தொடர்கதைக்கு ஐந்து பக்கங்களென இரண்டு தொடர்கதைக்கு பத்துப் பக்கங்கள். இதற்கு செந்தழல் ரவி மற்றும் வெட்டிப்பயல் சரியாக இருப்பார்கள். லூஸுப்பையன், ஜாலிகிளப் என மிமிக்ரி தொடருக்கு நான்கு பக்கங்கள். டீ.ஆரின் இந்தப் பதிவு அதற்கு பொருத்தமாய் இருக்கும். மீதம் இருப்பது வெறும் 20 தான் மக்கா.

   புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். வலையுலக ஜோசியர் சுப்பையா எழுதும் ராசிபலனுக்கு 3 பக்கங்கள். வீட்டுக்கார அம்மாவின் ஷாப்பிங் லிஸ்ட் அல்லது பட்ஜெட் அல்லது சமையல் ஐடியா என தங்கமணிகள் மேட்டருக்கு 3 பக்கங்கள். இருக்கவே இருக்கிறார் தாமிரா. ஆக 10 பக்கம் ஆச்சா? மீதம் பத்தே பத்துதான்.

     ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா? ஒரு சாமியாரின் கட்டுரை நான்கு பக்கங்கள். அதற்கு வலையுலகில் சரியான ஆளில்லாததால் அது நீக்கப்படுகிறது. ஜோசப் பாலராஜ் போன்று அவ்வபோது எழுதும் பதிவர்களின் வேலைக்காவத‌ விடயங்களுக்கு இரண்டு பக்கம். பின்னூட்டம் மட்டுமே இடும் கும்க்கி, விஜய் இன்னபிற வாசகர்களின் கடிதததிற்கு இரண்டு பக்கங்கள். நிச்சயம் இதில் ரிப்பீட்டேய் இடம் பெறக்கூடாது.முதல் பக்கத்தை ராப்பிற்கு கொடுக்காவிட்டால் அந்த‌ வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா? மீதம் இருப்பது இரண்டே இரண்டு பக்கங்கள்தான்.

  என்னங்க மறந்துட்டிங்களா? சிந்தனை சின்னசாமி இருக்காரில்ல? அவருக்கு ஒருப் பக்கம். அந்த மீதி ஒரு பக்கம்தான் நம்ம புத்தக்த்தின் USP. நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. ஆக மொத்தம் 100.இப்போது நம்ம பத்திரிக்கை தயார்.

    அவ்வபோது பக்கம் அதிகமானால் PITல் வென்ற புகைப்படங்கள், அய்ய‌னாரின் உலக சினிமா, வாலுதான் ப்ளீச்சிங் ஆதாரத்துடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் என எதற்கும் நம் வலையில் சரக்குள்ளது.

54 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 10:03 AM said...

:-))))...

புக்குக்கு பேரு???

கார்க்கி on October 16, 2008 at 10:06 AM said...

எல்லாத்தையும் நானே செய்யனுமா? நீங்க ஏதாவது சொல்லுங்க..

விஜய் ஆனந்த் on October 16, 2008 at 10:20 AM said...

// கார்க்கி said...
எல்லாத்தையும் நானே செய்யனுமா? நீங்க ஏதாவது சொல்லுங்க.. //

அப்புறம்??? எடிட்டர்ன்னா சும்மாவா???

கார்க்கி on October 16, 2008 at 10:23 AM said...

சரி எப்படி இருக்கு சகா? முழுசா படிச்சிங்களா?

நந்து f/o நிலா on October 16, 2008 at 10:32 AM said...

//கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு //

நக்கலபாரு. சாரு மட்டும் படிச்சா சாமியாடி தீத்துடுவாரு...

பரிசல்காரன் on October 16, 2008 at 10:48 AM said...

SUPER CREATIVITY THOZHAR! super!!

கோவி.கண்ணன் on October 16, 2008 at 10:52 AM said...

I டியா நல்லா இருக்கு, பேசாமல் நீங்களே அச்சு இதழுக்கு தலை ஆசிரியர் ஆகுங்கள்.

:)

கார்க்கி on October 16, 2008 at 11:06 AM said...

//நந்து f/o நிலா said...
//கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு //

நக்கலபாரு. சாரு மட்டும் படிச்சா சாமியாடி தீத்துடுவாரு..//

வாங்க சகா. போட்டிக்கு நீங்க சொன்ன மாதிரி படமெடுத்து அனுப்ப முடியல. கடைசி நேரத்தில் முதலில் எடுத்ததையே அனுப்பி விட்டேன். எனக்கு இது முதல் போட்டி என்பதால் அனுப்ப வேண்டும் என்பதே நோக்க‌ம்.

கார்க்கி on October 16, 2008 at 11:06 AM said...

நன்றி பரிசல் மற்றும் கோவியாரே..

Thiyagarajan on October 16, 2008 at 11:10 AM said...

Super :)

முரளிகண்ணன் on October 16, 2008 at 11:23 AM said...

super :-)))))))))))))))))

narsim on October 16, 2008 at 11:23 AM said...

சகா.. கலக்கல்..

மிக நல்ல புத்தகமாக வரும் என்பதில் ஐயமில்லை.. தலையங்கம் பகுதி மட்டும் நல்லா இல்லனு வாசகர் கடிதம் வரும்.. அதையும் சந்திப்போம்..

கலக்குங்க..சகா..

நர்சிம்

குசும்பன் on October 16, 2008 at 11:24 AM said...

எனக்கு இருபக்கம் வேண்டாம் ஒரு பக்கம் எனக்கு ஒரு பக்கம் உங்களுக்கு!

குசும்பன் on October 16, 2008 at 11:25 AM said...

//நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். //

புத்தகத்தின் பெயர் மருதமா!

குசும்பன் on October 16, 2008 at 11:26 AM said...
This comment has been removed by the author.
VIKNESHWARAN on October 16, 2008 at 12:18 PM said...

:)) நல்லா இருக்கு...

rapp on October 16, 2008 at 12:19 PM said...

குமுதானந்தம்னு பேர் வெக்கலாமா?

rapp on October 16, 2008 at 12:22 PM said...

ஸ்டார் அட்ராக்ஷனுக்கு நம்ம தலயோட ஒரு சின்ன பேட்டியும், ஸ்டைல் போட்டோவும்(மோகனப் புன்னகை புரிவாரே, அந்தப் போஸ் ரொம்ப முக்கியம்) போதுமே, பத்திரிகை அள்ளிடுமே.

இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

rapp on October 16, 2008 at 12:24 PM said...

//கோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா//

இப்போ இளா எழுதறாரே, அவரை விட்டுட்டீங்களே:):):)

rapp on October 16, 2008 at 12:24 PM said...

me the 20th

rapp on October 16, 2008 at 12:26 PM said...

//முரளிகண்ணனின் பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்//


ஏன்னா, அவர் டீசண்டா மட்டும்தான் எழுதுவார். குமுதம் மாதிரி ஜாலி பத்திரிக்கைல அதைப் பாக்கறவங்கக் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிடுவாங்க:):):)

rapp on October 16, 2008 at 12:28 PM said...

//முதல் பக்கத்தை ராப்பிற்கு கொடுக்காவிட்டால் அந்த‌ வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கருப்பனின் காதலி டிவிடி உங்களுக்குத்தான் மொதோ பார்சல்

rapp on October 16, 2008 at 12:30 PM said...

//ஞானி//

ஞாநின்னு மாத்துங்க, ஏன்னா இன்னொரு எழுத்தாளர் பேர் ஞானி

rapp on October 16, 2008 at 12:34 PM said...

//உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம்//அவர்கிட்டயே சொல்லி உங்களைப் பத்தி சிறுகுறிப்பு வரையச் சொல்லனும், அப்போதான் சரிவரும்:):):)

rapp on October 16, 2008 at 12:34 PM said...

me the 25th:):):)

கார்க்கி on October 16, 2008 at 1:16 PM said...

நன்றி தியாகராஜன்

நன்றி முரளி. என்ன கொஞ்ச நாளா அமைதியா இருக்கீங்க?

//narsim said...
சகா.. கலக்கல்..

மிக நல்ல புத்தகமாக வரும் என்பதில் ஐயமில்லை.. தலையங்கம் பகுதி மட்டும் நல்லா இல்லனு வாசகர் கடிதம் வரும்.. அதையும் சந்திப்போம்..
//

உருப்படியா எழுதினா நல்லா இல்லைன்னுதான் வரும் தல..

கார்க்கி on October 16, 2008 at 1:18 PM said...

//குசும்பன் said...
எனக்கு இருபக்கம் வேண்டாம் ஒரு பக்கம் எனக்கு ஒரு பக்கம் உங்களுக்கு!//

அதான் தல.. நன்றிங்கண்ணா. ஆனா போட்டோ மேட்டர்ல இதே மாதிரி உங்க்ளுக்கு கொடுப்பேன்னு நினைக்காதீங்க...:))))

//புத்தகத்தின் பெயர் மருதமா!//

சரோஜா தேவி

கார்க்கி on October 16, 2008 at 1:19 PM said...

நன்றி விக்கி....

நன்றி ராப்.. இந்தப் பதிவின் நூறாவது (ஆசை) பின்னூட்டமும் நீங்கதான் போடனும்..

ஜோசப் பால்ராஜ் on October 16, 2008 at 1:25 PM said...

தமிழ்மணம்ணே பெயர் வைச்சுடலாம் தோழா. எனக்கு நடுவுல பக்கத்த ஒதுக்கிட்டு எங்க சிங்கை மூத்த சிங்கம் கோவியாருக்கு கடைசி பக்கத்த ஒதுக்குனத வன்மையா கண்டிக்கிறேன்.

தோழா, குழந்தைகள் மேட்டர் கொஞ்சம் இருக்கணும் அப்பதான் விளம்பரத்துல குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் விரும்பும் பத்திரிக்கைனு போட்டுக்கலாம். இந்தப் பகுதிக்கு பேரண்ட்ஸ் கிளப்ல ஆளு புடிச்சுக்கலாம்.

பப்பூ பக்கம்னு ஒன்னு ஒதுக்கி சந்தன முல்லை அக்காகிட்ட குடுத்த கலக்கிடுவாங்கப்பா.

rapp on October 16, 2008 at 1:29 PM said...

//பப்பூ பக்கம்னு ஒன்னு ஒதுக்கி சந்தன முல்லை அக்காகிட்ட குடுத்த கலக்கிடுவாங்கப்பா//

வழிமொழிகிறேன்:):):)

Anonymous said...

super comedy.good

கார்க்கி on October 16, 2008 at 2:54 PM said...

//தமிழ்மணம்ணே பெயர் வைச்சுடலாம் தோழா. எனக்கு நடுவுல பக்கத்த ஒதுக்கிட்டு எங்க சிங்கை மூத்த சிங்கம் கோவியாருக்கு கடைசி பக்கத்த ஒதுக்குனத வன்மையா கண்டிக்கிறேன்//

நீங்கதானே அப்படி செய்ய சொன்னீங்க.. இப்ப நீங்களே இப்படி பச்டி அடிச்சா எப்படி?

//பப்பூ பக்கம்னு ஒன்னு ஒதுக்கி சந்தன முல்லை அக்காகிட்ட குடுத்த கலக்கிடுவாங்கப்பா.//

அவங்க கலக்குவாங்கனு தெரியும். அப்படி நல்ல மேட்டர் போடனுமா? அப்புறம் எப்படி இத ஆ.வி குமுதம் மாதிர்னு சொல்ல முடியும சகா?

கார்க்கி on October 16, 2008 at 2:55 PM said...

//anonymous said...
super comedy.கோட்//

நன்றி அனானி

நானும் ஒருவன் on October 16, 2008 at 4:07 PM said...

' புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் '

சாருவ சீண்டலைனா உனக்கு தூக்கம் வராதே

நானும் ஒருவன் on October 16, 2008 at 4:09 PM said...

' ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா'

அதுக்கு கவிதைனு நீ எழுதறத போட்டா பொருத்தமா இருக்கும்

நானும் ஒருவன் on October 16, 2008 at 4:10 PM said...

"நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. "


நான் கிளிக்கலப்பா.நீ என்ன செஞ்சிருப்பனு தெரியாதா?

புதுகை.அப்துல்லா on October 16, 2008 at 4:46 PM said...

நல்ல கற்பனை.

அப்புறம் வீட்ல சொல்லி சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் பண்ண சொல்லனும் :)

அனுஜன்யா on October 16, 2008 at 5:02 PM said...

மருத்துவக் குறிப்புகள் - புருனோ; ஆலய தரிசனம் - வல்லிசிம்ஹன்; குறுக்கெழுத்து - இலவச கொத்ஸ்; பங்குவணிகம் - சரவணக்குமார்; மகளிர்பக்கம் - ராமலக்ஷ்மி; புதுநூல்கள் அறிமுகம்: அவன்-அது=அவள், நாடற்றவனின் குறிப்புகள்; சிற்றிதழ்கள் அறிமுகம்: 'வினையான தொகை', 'திணை இசை சமிக்ஞை', 'சிதைவுகள்', 'மொழியும் நிலமும்'

இவ்வளவு இருக்கு கார்க்கி. இது தவிர 'வளரும் கவிஞருடன் நேர்காணல்' (ஹி ஹி) இதெல்லாம் இருக்கு. பாத்துப் பண்ணுங்க.

அனுஜன்யா

கார்க்கி on October 16, 2008 at 5:18 PM said...

//சாருவ சீண்டலைனா உனக்கு தூக்கம் வராதே///

ஹிஹிஹி.. அவரு யாரு? சாருடா சாரு... சாரு சார்

கார்க்கி on October 16, 2008 at 5:18 PM said...

//புதுகை.அப்துல்லா said...
நல்ல கற்பனை.

அப்புறம் வீட்ல சொல்லி சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் பண்ண சொல்லனும் :)
//

நன்றிண்ணே.. ஆனா ஏன் கல்யானம் பண்ணனும்?

கார்க்கி on October 16, 2008 at 5:19 PM said...

//அனுஜன்யா said...
மருத்துவக் குறிப்புகள் - புருனோ; ஆலய தரிசனம் - வல்லிசிம்ஹன்; குறுக்கெழுத்து - இலவச கொத்ஸ்; பங்குவணிகம் - சரவணக்குமார்; மகளிர்பக்கம் - ராமலக்ஷ்மி; புதுநூல்கள் அறிமுகம்: அவன்-அது=அவள், நாடற்றவனின் குறிப்புகள்; சிற்றிதழ்கள் அறிமுகம்: 'வினையான தொகை', 'திணை இசை சமிக்ஞை', 'சிதைவுகள்', 'மொழியும் நிலமும்'

இவ்வளவு இருக்கு கார்க்கி. இது தவிர 'வளரும் கவிஞருடன் நேர்காணல்' (ஹி ஹி) இதெல்லாம் இருக்கு. பாத்துப் பண்ணுங்க.
//

இனும் நிறைய இருக்குங்க.. எனக்கு தெரிஞ்சத போட்டேன்.. அப்புறம் அந்த 'வளரும் கவிஞர்" ஹிஹிஹிஹி.. என்ன ரொம்பத்தான் புகழறீங்க..

Anonymous said...

good creativity.all the best to you karki

கார்க்கி on October 16, 2008 at 7:02 PM said...

thanks friend

தாமிரா on October 16, 2008 at 8:48 PM said...

எத்தனை எத்தனை லிங்க்ஸ்.! பிரமாதம்.!

கிரி on October 16, 2008 at 9:28 PM said...

உங்க கற்பனை நல்லா இருக்கு :-))))

வெண்பூ on October 16, 2008 at 10:16 PM said...

நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க கார்க்கி..

இந்த பதிவில இருந்து ஒண்ணு தெரியுது.. இத்தனை இத்தனை பதிவையும் நீங்க படிக்கிறீங்க.. ஆச்சர்யமா இருக்கு.. எப்படி டைம் கிடைக்குது?

புதுகை.அப்துல்லா on October 17, 2008 at 1:11 AM said...

நன்றிண்ணே.. ஆனா ஏன் கல்யானம் பண்ணனும்?
/

அது வேற ஓன்னும் இல்ல..யாராவது ஃபீரியா சந்தோசமா திங் பண்ணிகிட்டு இருந்தா நம்க்கு புடிக்காது..ஹி...ஹி...ஹி..

கார்க்கி on October 17, 2008 at 9:23 AM said...

வாங்க தாமிரா.. எப்போ ட்ரெய்னிங் முடியுது?

நன்றி கிரி

வாங்க வெண்பூ... அட அதுக்குத்தானே நாங்க ஆஃபீஸ் போறோம்.

கார்க்கி on October 17, 2008 at 9:25 AM said...

/அது வேற ஓன்னும் இல்ல..யாராவது ஃபீரியா சந்தோசமா திங் பண்ணிகிட்டு இருந்தா நம்க்கு புடிக்காது..ஹி...ஹி...ஹி..
//

அப்துல்லாவை பாராட்டூவோர் கவனிக்க.. இவருக்கு சதி செய்யத் தெரியும்..

அடுத்து 50ப்பா... யாராவ்து அடிங்க.. நானே அடிச்சா அது சாதா குத்தமில்லையாம்.. ஸ்பெஷல் சாதாவாம்

நிலா on October 17, 2008 at 9:27 AM said...

50

நிலா on October 17, 2008 at 9:27 AM said...

ஓகே வா கார்க்கிமாமா?

கார்க்கி on October 17, 2008 at 9:38 AM said...

மாமாவா? அப்ப்டியெல்லாம் சொல்லப்படாது.. நானும் உன்னை மாதிரி சின்னபுள்ளதான்.. அண்ணானு சொல்லனும்..

நிலா on October 17, 2008 at 9:41 AM said...

ஸ்கூல் படிச்சா அண்ணா. இல்லைன்னா மாமாதான்

கார்க்கி on October 17, 2008 at 9:51 AM said...

அப்படியா? நான் இன்னும் ஸ்கூல் சேரலையே.. மம்மிகிட்ட சொல்லி இந்த வருஷம்தான் சேரனும்..

 

all rights reserved to www.karkibava.com