Oct 15, 2008

காக்டெயில்


    பதிவர் அபிஅப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று படித்தேன். அவரது வலையிலும் 20 நாட்களுக்கு மேலாக எந்த பதிவும் இல்லை. விவரம் தெரிந்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று சொல்லவும். லக்கியின் வலையிலும் சில நாட்களாக புதிதாய் எதுவும் இல்லை. மீள்பதிவும் இல்லை.என்ன ஆச்சு சகா?

************************************************

     கிரிக்கு அவரது பதிவிலே வாழ்த்துகள் சொன்னாலும் மீண்டும் ஒரு முறை சொல்வதில் தப்பில்லை.சின்ன கிரிக்கு வாழ்த்துகள் சின்ன ரஜினி. அவரது பதிவைப் பார்த்ததும் நான் எழுதிய ஹைக்கூ ஒன்று நினைவுக்கு வந்தது.

தங்க குழந்தை

வெள்ளி மலர் காட்டியது

பவள வாய் திறந்து.

   என் அக்காப் பையன் என்னோடுதான் ஒரு வருடம் இருந்தான். அப்போது என் அக்கா அமெரிக்காவிலும் மாமா பெங்களூரிலும் வேலை நிமித்தம் இருந்தார்கள். நான், என் அம்மா, மற்றும் அவன் மட்டும்தான். அவனை எங்கள் வீட்டருகே இருந்த பள்ளியில் சேர்க்க க்யூவில் நிற்பதில் இருந்து எல்லா வேலைகளும் நான் தான். அப்போது திடிரென தோண்றிய ஒரு ஹைக்கூ.

தாய்மாமன் பலருக்குண்டு

மாமனே தாயானது

உனக்கு மட்டும்தான்..

************************************************

   ஒரு வாரமாகவே என் வலையில் உள்ள கருத்துப் பெட்டியில் ஒரு பெண்ணின் பெயரில் யாரோ ஒரு நண்பர் என்னை கலாய்த்து வருகிறார். அந்த சம‌யத்தில் ரமேஷ் என்பவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப அதுவும் இவரின் வேலையாகத்தான் இருக்குமென நினைத்து அதை பதிவேற்றிவிட்டேன். அன்று இரவே ரமேஷ் என்னை அழைத்து உண்மையை சொல்ல, அசடு வழிந்தேன். அவரிடமே எனக்கு எல்லாம் யார் பாராட்டுக் கடிதம் எழுதப் போறாங்கனு நினைத்தேன் என்று சொல்ல ஒரு மாதிரியாக இருந்தது. நல்ல வேளை அவர் புரிந்துக் கொண்டார். இன்னும் யாரும் இது ஒரு நாடகம் என்று பதிவு போடாமலிருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி ரமேஷ்.

   அந்த பெண்ணின் பெயர் srinithi.தமிழெழுதியில் 'sri' என்ற எழுத்தை எப்படி தட்டச்சு செய்வது? தெரிந்தவர்கள் சொல்லவும்.

************************************************

    இன்றோடு நான் பதிவெழுத தொடங்கி 100 நாட்கள் ஆகின்றது(எதுகெதுக்குதான் கண‌க்கு எடுக்குறுதுனு ஒரு விவஸ்தை இலையா). தனிமையில் சிக்கி தவித்த நேரத்தில் வகையாய் மாட்டிக்கொண்டீர்கள். 100 நாட்களில் எத்தணை நண்பர்கள்..எத்தணை விடயங்கள்.. அது மட்டுமில்லாமல் என் வாழ்க்கை போக்கையே மாற்றிவிட்டது வலையுலகம். வரும் நாட்களில் இதற்கெல்லாம் நேரம் இல்லையென்றால் என்ன ஆவேன் என்று தெரியவில்லை. அடிக்ட் என்று சொல்ல மாட்டேன். ஆனால் வருத்தமிருக்கும். உங்களை பதிவெழுதி வருத்தமடைய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான். சிரிக்காதீங்க மக்கா இன்னும் இரண்டு மாசம் ஹைதராபாத்தான். அது வரைக்கும் பிரச்சினையில்லை. எனக்கு.

************************************************

சாருவின் தளத்தின் கண்ணன் என்பவரது மடல் வெளியிடப்படுள்ளது. அதில் சாரு, சுஜாதாவிற்கு அடுத்து அதிக‌ பிரபலாமாகி கொண்டிருக்கும் எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமில்லாமல் வலையில் தினமும் குறந்தது 3 இடுகைகளாவது சாருவைப் பற்றி வருவது அவரது செலிப்ரிட்டிதண்மையை ஸ்திரப்படுத்துகிறதாம். மேலும் இப்படி கேட்கிறார் அந்த அன்பர்.

  "நம் கருத்தோடு முரண்பட்டு நிற்கிறார் என்பதற்காக படைப்பை விமரிசிக்காமல் கண்மூடித்தனமாக தனிநபர் தாக்குதல் நடத்துவது என்ன பண்பு?"

   அண்ணே இதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவிற்கு தனி நபர் தாக்குதல் நடுத்தியதில் சாருவை மிஞ்ச ஆளில்லை என்பதை உலகறியும்.

  " பாரதியிலிருந்து ஆரம்பித்து சுஜாதாவரை ஒரு படைப்பாளி உயிரோடு இருக்கும்போது குட்டிக்கொண்டே இருந்துவிட்டு இறந்தபிறகு வாழ்த்துப்பா பாடுவது இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது?"

    சுஜாதா அவர்களை பாராட்டுவோர் அவர் இருந்த போதும் அதைத்தான் செய்தார்கள். தூற்றுவோரும் அப்படியே. வலையில் கமலை விட ஜே.கே.ஆர் பற்றிய பதிவுகள் அதிகம் வந்த நாட்கள் உண்டு. அதற்காக ஜே.கே.ஆர் கமலை மிஞ்சுவாரா? எனக்கு 7ஜி ரெயின்போ காலனியில் வந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

மச்சி அவ என்ன பார்த்தா இல்ல.

என்னடா பார்த்தா. ஏதோ பிச்சைக்காரன பார்க்கிற மாதிரி இல்ல பார்த்தா.

அப்படி கூட உன்னைப் பார்க்கலை இல்ல.

40 கருத்துக்குத்து:

கிரி on October 15, 2008 at 2:10 PM said...

கா(ர்க்கி)க்டெயில் :-)

நல்லா இருக்குங்க உங்க காக்டெயில் ..கலக்குங்க. உங்களோட வாழ்த்துக்கு என் நன்றிகள். உங்களோட 100 வது நாளுக்கு என் வாழ்த்துக்கள்.

//வெள்ளி மலர் காட்டியது//

கொஞ்சம் அட்வான்சா வாழ்த்திட்டீங்கன்னு நினைக்கிறேன் ;-) நன்றி

Anonymous said...

தாய்மாமன் பலருக்குண்டு

மாமனே தாயானது

உனக்கு மட்டும்தான்..

class.superb lines karki.

narsim on October 15, 2008 at 2:43 PM said...

சகா 100வது நாளுக்கு வாழ்த்துக்கள்.. ஒரு பீர ஆத்திவிடுறது??

கடைசி வரிகளில் 100 நாட்களுக்கான மெச்சூரிட்டி தெரிகிறது..

நடத்துங்க சகா..

நர்சிம்

ஜோசப் பால்ராஜ் on October 15, 2008 at 2:52 PM said...

சகா,
நமக்கு பல ஒற்றுமைகள் இருக்கு .
நானும் என் அக்கா மகன ஆரம்பக் காலத்துல இருந்து வளர்த்துருக்கேன். அவன் கைக்குழந்தையா இருந்தப்ப எங்க அக்கா வீட்டுக்காரர் பணியிடம் ரொம்ப தூரம்ங்கிறதால வாரம் இரு நாட்கள் தான் வீட்டுக்கு வந்துட்டு போவார். அவர் இல்லாத நாட்களில் கை குழந்தையுடன் தனியாக இருக்கும் என் சகோதரிக்கு துணையாக நான் இருப்பேன். அப்போ எல்லாம் என் மாப்ள என் நெஞ்சுல படுத்துத்தான் தூங்குவாரு.

அதே போல அவரு எல் கே ஜி படிச்சப்ப நான் தான் தினமும் மதிய சாப்பாடு கொண்டு போயி ஊட்டி விட்டுட்டு வருவேன். அக்காவும் வேலையில இருந்ததால எனக்கு அந்த வேலை. இன்னமும் என் மாப்ள எனக்கு நெம்ப செல்லம்.

Karthik on October 15, 2008 at 3:03 PM said...

CONGRATS again.
:)

Bleachingpowder on October 15, 2008 at 3:06 PM said...

//இன்னும் யாரும் இது ஒரு நாடகம் என்று பதிவு போடாமலிருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்//

உன்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சுனு நினைக்குறேன்...

Bleachingpowder on October 15, 2008 at 3:06 PM said...

சரி வுடுங்க இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்

புதுகை.அப்துல்லா on October 15, 2008 at 3:15 PM said...

அட செஞ்சுரி நாளா?
வாழ்த்துகள் அண்ணே. அப்படியே சென்னை வரும் போது சொல்லிட்டு வாங்க. :))))

Anonymous said...

"NOORAVATHU NAAL"

Vaazhthukkal........

நானும் ஒருவன் on October 15, 2008 at 3:27 PM said...

"இன்னும் இரண்டு மாசம் ஹைதராபாத்தான். அது வரைக்கும் பிரச்சினையில்லை. எனக்கு"

சரியா சொன்ன மச்சி. உனக்கு பிரச்சினை இல்லை. எங்களுக்குத்தான்

"7ஜி ரெயின்போ காலனியில் வந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது. மச்சி அவ என்ன பார்த்தா இல்ல. என்னடா பார்த்தா. ஏதோ பிச்சைக்காரன பார்க்கிற மாதிரி இல்ல பார்த்தா. அப்படி கூட உன்னைப் பார்க்கலை இல்ல."

உன் நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. விழுந்து விழுந்து

நானும் ஒருவன் on October 15, 2008 at 3:27 PM said...

உன் நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. விழுந்து விழுந்து சிரிச்சேன்.

நானும் ஒருவன் on October 15, 2008 at 3:29 PM said...

தாய்மாமன் பலருக்குண்டு
மாமனே தாயானது
உனக்கு மட்டும்தான்.

சூப்பர். உண்மைன்னு எனக்கும் தெரியும்.

கார்க்கி on October 15, 2008 at 3:45 PM said...

//கிரி said...
கா(ர்க்கி)க்டெயில் :-)

நல்லா இருக்குங்க உங்க காக்டெயில் ..கலக்குங்க//

நன்றி கிரி..

நன்றி அனானி.

கார்க்கி on October 15, 2008 at 3:46 PM said...

@நர்சிம்

நன்றி தல. நைட் ஆத்திடலாம்.
@நர்சிம்

@பால்ராஜ்,

அப்படியா? மதிய சாப்பாடு மட்டுமில்ல முழு நேரமும் நான் தான் அவனுக்கு


Thanks karthik

கார்க்கி on October 15, 2008 at 3:48 PM said...

@ப்ளீச்சிங்,

ஆமாம். உண்மையா இருந்தாலும் கொஞ்ச நாள் சொல்லாதிங்கப்பா.. :)))

@புதுகை,

முதல்ல என்னை அண்ணேனு சொல்றத நிறுத்துங்க. நான் ரொம்ப சின்னப்பையன். என் இமேஜ டேமேஜ் பண்ணாதீங்க.

அப்புறம் சகா, தீபாவளி விடுமுறைக்கு சென்னையா இல்லை புதுகைக்கா?

கார்க்கி on October 15, 2008 at 3:50 PM said...

//anonymous said...
"NOORAVATHU NAAL"

Vaazhthukkal.......//

நன்றி யுவா

தாங்க்ஸ் மச்சி..

Anonymous said...

why are you always against charu?

சரவணகுமரன் on October 15, 2008 at 5:30 PM said...

கலக்கிடீங்க...

கார்க்கி on October 15, 2008 at 5:43 PM said...

வாங்க சரவணன்..

அனானி, அதுக்காக ஒரு மாதம் ஆதரிச்சும் ஒரு மாதம் எதிர்த்தும் பேச முடியுமா?

ஜோசப் பால்ராஜ் on October 15, 2008 at 6:00 PM said...

புதுகை அப்துல்லா அண்ணண் உங்கள அண்ணண்ணு கூப்பிடுறது விட்ருங்கன்னு நீங்க அவர கேட்டா அண்ணண் நிறுத்திடுவாரா?
நம்ம கிரிக்கு போன் செஞ்சு பையன் புறந்ததுக்கு விசாரிச்சுருக்காரு, அப்ப கிரி அண்ணே, சின்ன அண்ணே எப்டியிருக்காருன்னு கேட்டாராம். கிரிக்கு கொஞ்ச நேரம் கிர்ர்ர்ர்ர்னு ஆகி யார சின்ன அண்ணண்ணு சொல்றீங்கன்னு கேட்ருக்காரு, அதுக்கு அப்துல்லா அண்ணண் சொன்னப் பதில கேட்டு கிரி இன்னும் புலம்பிக்கிட்டு இருக்காரு தெரியும்ல.

என்னங்ணா இப்டி கேட்டீங்க, உங்க பையனத்தான் சின்ன அண்ணண்ணு சொன்னேன்னு நெம்ப கூல சொல்லிருக்காரு அப்துல்லா அண்ணே.

rapp on October 15, 2008 at 6:23 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எவ்ளோ நக்கல் இருந்தா எங்க தலய இவரோட எல்லாம் கம்பேர் பண்ணுவீங்க? உங்களை மன்றத்திலே இருந்து நீக்கப் போறதா தீர்மானம் போடப்போறோம்.
இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

rapp on October 15, 2008 at 6:25 PM said...

நான்கூட எங்கக்கா பயனை வளர்த்தேன். ஆனா, இதுல மிகப்பெரிய குறை என்னன்னா, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துல நாம அவங்களை விட்டு பிரிஞ்சி இருக்க வேண்டிய காலக்கட்டாயம்:(:(:(

rapp on October 15, 2008 at 6:26 PM said...

நூறு அடிச்சி ஸ்டடியா இருக்கும் அண்ணன் கார்க்கி வாழ்க வாழ்க:):):)

rapp on October 15, 2008 at 6:28 PM said...

//நானும் என் அக்கா மகன ஆரம்பக் காலத்துல இருந்து வளர்த்துருக்கேன். அவன் கைக்குழந்தையா இருந்தப்ப எங்க அக்கா வீட்டுக்காரர் பணியிடம் ரொம்ப தூரம்ங்கிறதால வாரம் இரு நாட்கள் தான் வீட்டுக்கு வந்துட்டு போவார். அவர் இல்லாத நாட்களில் கை குழந்தையுடன் தனியாக இருக்கும் என் சகோதரிக்கு துணையாக நான் இருப்பேன். அப்போ எல்லாம் என் மாப்ள என் நெஞ்சுல படுத்துத்தான் தூங்குவாரு.

அதே போல அவரு எல் கே ஜி படிச்சப்ப நான் தான் தினமும் மதிய சாப்பாடு கொண்டு போயி ஊட்டி விட்டுட்டு வருவேன். அக்காவும் வேலையில இருந்ததால எனக்கு அந்த வேலை. இன்னமும் என் மாப்ள எனக்கு நெம்ப செல்லம்.
//


:):):)

rapp on October 15, 2008 at 6:28 PM said...

me the 25th

கார்க்கி on October 15, 2008 at 6:42 PM said...

//புதுகை அப்துல்லா அண்ணண் உங்கள அண்ணண்ணு கூப்பிடுறது விட்ருங்கன்னு நீங்க அவர கேட்டா அண்ணண் நிறுத்திடுவாரா?
நம்ம கிரிக்கு போன் செஞ்சு பையன் புறந்ததுக்கு விசாரிச்சுருக்காரு, அப்ப கிரி அண்ணே, சின்ன அண்ணே எப்டியிருக்காருன்னு கேட்டாராம். கிரிக்கு கொஞ்ச நேரம் கிர்ர்ர்ர்ர்னு ஆகி யார சின்ன அண்ணண்ணு சொல்றீங்கன்னு கேட்ருக்காரு, அதுக்கு அப்துல்லா அண்ணண் சொன்னப் பதில கேட்டு கிரி இன்னும் புலம்பிக்கிட்டு இருக்காரு தெரியும்ல.

என்னங்ணா இப்டி கேட்டீங்க, உங்க பையனத்தான் சின்ன அண்ணண்ணு சொன்னேன்னு நெம்ப கூல சொல்லிருக்காரு அ//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கி on October 15, 2008 at 6:43 PM said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எவ்ளோ நக்கல் இருந்தா எங்க தலய இவரோட எல்லாம் கம்பேர் பண்ணுவீங்க? உங்களை மன்றத்திலே இருந்து நீக்கப் போறதா தீர்மானம் போடப்போறோம்.
இராப் //

அவசரப்படாதீங்க தலைவி... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

//நூறு அடிச்சி ஸ்டடியா இருக்கும் அண்ணன் கார்க்கி வாழ்க வாழ்க:):):)

//

ஹேய்ய்ய்ய்ய் தாங்க்ஸ்க்கா

நல்லதந்தி on October 15, 2008 at 7:04 PM said...

NHM ல் sri ஐ அப்படின்னுட்டு அடிங்க “ஸ்ரீ” ன்னு விழும்! :)

கார்க்கி on October 15, 2008 at 7:12 PM said...

நன்றி வால்பையன் ஆவ்வ்வ் ப்ளீச்சிங் மறுபடியும் ஆவ்வ்வ்வ்வ் நல்லதந்தி

Anonymous said...

haikoo super

Srinithi said...

ஸ்ரீநிதி en perai type panna theriyaatha. very bad.

chat box ai thookkiaachchu.. ippo comments ayum thookiduveengala... :(

விஜய் ஆனந்த் on October 15, 2008 at 10:06 PM said...

100-வது நாள் வாழ்த்துக்கள் நண்பரே!!!

மணி 10 ஆச்சே....பீர் வுட்டாச்சா???

பரிசல்காரன் on October 16, 2008 at 8:36 AM said...

100வது நாளுக்கு வாழ்த்துக்கள்! (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கய்யா! நமக்குத் தோணாமப் போச்சே!)

பரிசல்காரன் on October 16, 2008 at 8:38 AM said...

//விஜய் ஆனந்த் said...

100-வது நாள் வாழ்த்துக்கள் நண்பரே!!!

மணி 10 ஆச்சே....பீர் வுட்டாச்சா???//

ஏன்யா பச்சப்புள்ளைய கெடுக்கறீங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவரே காக்டெய்ல்-னுருக்காரு. அவருகிட்ட பீர், பீர்ன்னு சங்கடப்படுத்தறீங்க?

பரிசல்காரன் on October 16, 2008 at 8:39 AM said...

சந்தோஷமா இருக்கு கார்க்கி. வர வர உங்க எழுத்துல நல்ல முதிர்ச்சியும், சுவாரஸ்யமும் கூடியிருக்கு!

பரிசல்காரன் on October 16, 2008 at 8:40 AM said...

//பரிசல்காரன் said...

சந்தோஷமா இருக்கு கார்க்கி. வர வர உங்க எழுத்துல நல்ல முதிர்ச்சியும், சுவாரஸ்யமும் கூடியிருக்கு!//

இது ஒரு டெம்ப்ளேட். காப்பி, பேஸ்ட் பண்ணி அடுத்தவங்களுக்கு போட்டீங்கன்னா, நீஙகளும் பெரிய ரைட்டருன்னு நெனைச்சுக்குவாங்க! ஹையோ.. ஹையோ..!

கார்க்கி on October 16, 2008 at 9:15 AM said...

//anonymous said...
haikoo sஉபெர்//

நன்றி அனானி..

//srinithi said...
ஸ்ரீநிதி en perai type panna theriyaatha. very bad.

chat box ai thookkiaachchu.. ippo comments ayum thookiduveengala... :(//

நான் பாவமில்லையா.. விட்டுடுங்கண்னே..

கார்க்கி on October 16, 2008 at 9:17 AM said...

/விஜய் ஆனந்த் said...
100-வது நாள் வாழ்த்துக்கள் நண்பரே!!!

மணி 10 ஆச்சே....பீர் வுட்டாச்சா???
//

ஆமாங்க பீர வுட்டுட்டேன். நன்றி சகா..

//பரிசல்காரன் said...
100வது நாளுக்கு வாழ்த்துக்கள்! (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கய்யா! நமக்குத் தோணாமப் போச்சே!)///

ஹிஹிஹி....

//பரிசல்காரன் said...
சந்தோஷமா இருக்கு கார்க்கி. வர வர உங்க எழுத்துல நல்ல முதிர்ச்சியும், சுவாரஸ்யமும் கூடியிருக்கு!//

நிஜமாவா? நன்றி சகா..

கார்க்கி on October 16, 2008 at 9:19 AM said...

//பரிசல்காரன் said...

சந்தோஷமா இருக்கு கார்க்கி. வர வர உங்க எழுத்துல நல்ல முதிர்ச்சியும், சுவாரஸ்யமும் கூடியிருக்கு!//

இது ஒரு டெம்ப்ளேட். காப்பி, பேஸ்ட் பண்ணி அடுத்தவங்களுக்கு போட்டீங்கன்னா, நீஙகளும் பெரிய ரைட்டருன்னு நெனைச்சுக்குவாங்க! ஹையோ.. //

கார்க்கி said...

சந்தோஷமா இருக்கு பரிசல். வர வர உங்க பின்னூட்டத்துல நல்ல நகைச்சுவையும், நையான்டியும் கூடியிருக்கு.

இது ஒரு டெம்ப்ளேட். காப்பி, பேஸ்ட் பண்ணி அடுத்தவங்களுக்கு போட்டீங்கன்னா, நீஙகளும் பெரிய மொக்கைன்னு நெனைச்சுக்குவாங்க! ஹையோ..ஹையோ..

புதுகை.அப்துல்லா on October 16, 2008 at 4:13 PM said...

நான் ரொம்ப சின்னப்பையன். என் இமேஜ டேமேஜ் பண்ணாதீங்க.
//

சரிண்ணே :)

// சகா, தீபாவளி விடுமுறைக்கு சென்னையா இல்லை புதுகைக்கா//

எப்படின்னு தெரியல? கொஞ்சம் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்லுங்க :)

 

all rights reserved to www.karkibava.com