Oct 14, 2008

மலரும் நினைவுகளில் இதுதான் பெஸ்ட்


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

    நினைவு தெரிஞ்சுன்னா விடுதலை. அந்த படம் வெளியான‌ நேரத்தில்தான் எங்கள் வீட்டிற்கு வீ.சி.ஆர். வந்தது. அந்த ஒரே கேஸட்தான் இருந்தது என்பதால் பல முறை பார்த்தேன். திரையரங்கில் பார்த்தது தள‌பதி.படத்தை விட அரங்கின் வெளியே ரசிகர்கள் செய்திருந்த கலாட்டா என்னை வெகுவாக கவர்ந்தது. (அப்பவே அப்படியானு நினைக்க‌னும். நினைச்சீங்களா)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

     சரோஜா.நேற்றுத்தான் பார்த்தேன். சினிமா என்றால் எப்படி வாயைப் பிளந்து பார்ப்பேன் என்பதற்கு ஒரு உதாரணம். சரோஜாவில் அடிக்கடி நேரத்தை காட்டிக்கொண்டே இருப்பார்கள். 10:35 PM , 11:35 PM என்று வந்தவர்கள் கவணக்குறைவாக 12.15 PM என்று போட்டு விட்டார்கள். அடுத்த முறை பார்ப்பவர்கள் நான் சொல்வது சரியா என சொல்லவும். இதுவரை வேறு யாரும் இதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த இடத்தில் நீங்கள் லேசாக புன்னகைக்க வேண்டும். செய்தீர்களா?)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

     தமிழ்படம் வசீகரா. இந்தப் படம் ஏன் ஓடவில்லை என புரியவில்லை. நல்ல நகைச்சுவை. பல முறை பார்த்திருக்கிறேன். கைவசம் ஒரிஜினல் சி.டி. இருக்கிறது.

     ஆங்கிலப் படம்: ஜான் ட்ரவோல்டாவின் க்ரீஸ்.. அருமையான மீயூஸிகல். நம்ம ஊர் பருவராகத்தின் மூலம். 1978 ஆம் ஆண்டு வந்தப் படம். அவரது நடனமும் இசையும் தான் படத்தின் பலம். .. கண்டிப்பாக பார்க்க வேன்டிய படம், பொழுதுபோக்கிற்கு மட்டும்.(இப்போது, ஹாலிவுட்டிலும் இந்த மாதிரி படங்களைத்தான் பார்ப்பியாடா நீ என்று என்னைத் திட்டனும். திட்டினீங்களா?)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

       நான் சொல்ல நினைத்த படங்களையெல்லாம் நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். மகாநதி, அன்பே சிவம், சேது... யாரும் சொல்லாதது, ரெட். என்னை மட்டுமில்லாமல் பார்த்த அனைவரையும் தாக்கு தாக்கு என்று தாக்கியது. அதை தொடர்ந்து ராஜா, ஜனா, ஜி, ஆழவார் எனப் பல படங்கள் தாக்கினாலும் ரெட் அளவிற்கு இல்லை என்பது அடிபட்ட என் கருத்து. (இதுல கூட வித்தியாசமா சொல்றான்டா இவன்னு நீங்க பிரம்மிக்கணும். பிரம்மிச்சிங்களா?)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

    ரிக்ஷாகாரன் படத்திற்காக‌ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட தேசிய விருது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருது. எம்.ஜி.ஆருக்கு கொடுக்கனும்னு முடிவு செய்தாலும் வேற படமா கிடைக்கல? நல்ல வேளை சிவாஜிக்கு கடைசி வரை அந்த விருதை தந்து அவமதிக்கவில்லை. ( நான் பிறக்குமுன்னே நடந்த நிகழ்ச்சி என்றாலும் ஞாபகம் வைத்து சரியான நேரத்தில் சொன்னதுக்காக என்னை பாராட்டனும் தோண்ற வேண்டும். தோணுச்சிங்களா?)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

   அழகிய தமிழ் மகன் இரட்டை விஜய் தோண்றும் காட்சிகள். இயக்குனரின் 'திறமைக்கு' நல்லதொரு சான்று. (ஹிஹிஹி.. இப்போ என்ன நினைச்சிங்கணு நீங்களே பின்னூடட்த்தில் சொல்லுங்க)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

    பதிவுலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி அதான் டைம்பாஸே. இப்பவும் விவரங்கள் விரல் நுனியில்.

7.தமிழ்ச்சினிமா இசை?

   இந்தியாவிலே சிறந்தது என்பேன். ராஜ, ஏ.ஆர்.ஆர் இவர்களுக்கு இணை யாருமில்லை.  புதிய தலைமுறையிலும் யுவன், ஹாரிஸ், விஜய் ஆண்டனி என கலக்குகிறார்கள். தமிழ் சினிமாவை உலகத் தரத்தை நோக்கி எடுத்து செல்வதில் ஒளிப்பதிவாளர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் இசை அமைப்பாளர்கள்தான்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

     நேரமும் குறுந்தகடும் கிடைத்தால் எல்லாப் படங்களும் பார்ப்பேன். Irreversible என்ற படம். நான் சிங்கையில் இருக்கும் போது திரையரங்கில் சென்று பார்த்தேன். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இதுவரை நான் பார்த்த படங்களில் இதுதான் தி பெஸ்ட். அதில் வரும் கற்பழிப்பு காட்சிக்காகவே என்னுடன் வந்த நண்பன் அந்த காட்சியில் கண்களை மூடிக் கொண்டான். இந்த படம் முழுவதையும் திறந்த கண்களோடு பார்ப்பவர்கள் கல்நெஞ்சுக்காரர்கள். அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க பல நாட்கள் ஆனதால் அதுப் போன்ற படங்கள் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

   ஒன்னுஒன்னா கேளுங்கப்பு. பரவாயில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் இல்லை. குறுமபடம் எடுக்கும் முயற்சியை நண்பர்களோடு தொடங்கியிருக்கிறேன். அதன்பின் வேண்டுமென்றால் நிகழலாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

பாலா, அமீர்(இயக்குனர்), முருகதாஸ், செல்வராகவன்,கார்க்கி ம்ம்ம். ஆரோக்கியமாத்தான் இருக்கு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

    எனக்கு ஒன்றும் ஆகாது. பார்க்க வேண்டிய பழைய படங்களின் சி.டிக்கள் நிறைய இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பார்ப்பேன்.

      வலையுலகம் வளரும். வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். லக்கி ஒரு கோடி ஹிட்ஸை பெறுவார். பரிசல் தினமும் 22 மணி நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார். நர்சிம் கன்னித்தீவு போல குட்டிகுட்டியாக‌ மாறவர்மன் எழுதிக் கொண்டிருப்பார். அப்துல்லா இன்னும் சில பேருக்கு உதவ வழிவகை செய்வார். கோவியார் மணிக்கு ஒரு பதிவு போடுவார். மங்களூர் சிவா ரிப்பீட்ட்டேய் என்பதை காப்பி செய்து எல்லாப் பதிவிலும் பேஸ்ட் செய்வார். ராப்பால் அனைவருக்கும் மீ த ஃப்ர்ஸ்ட் போட முடியாது. ஜே.கே.ஆரின் வலை ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சினிமா பற்றி இல்லாமல் அவரின் மீதி இரண்டு முகங்களை பற்றி அலசுவார்கள். தினம் ஒரு நட்சத்திர பதிவரை தமிழ்மணம் கொடுக்கும். தினமும் ஒருமுறை பதிவர் சந்திப்பு நிகழும். எல்லா சந்திப்பிலும் அதிஷா பங்கேற்பார். டர்மரிக் பவுடர் என புதிய பதிவர் வருவார். அதுவும் வால்பைய்ன்தானோ என்ற சந்தேகம் எழும். தங்கமணி தலைவன் தாமிரா என பாதிக்கபட்டவர்கள்(அதான் கல்யாணம் ஆனவுங்கோ) தாமிராவிற்கு பட்டம் கொடுப்பார்கள். இத்தணை களேபரத்திலும் தினம் ஒரு மொக்கை போட்டு உங்களை நான் சாகடித்துக் கொண்டுதானிருப்பேன்.

    என்னை எழுத சொல்லி அழைத்த நர்சிம்மையும், சென்னையும் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள். தவறு செய்தவனை விட தவறு செய்ய தூண்டியவர்களுக்குத்தானே அதிக தண்டனை?

    மேலும் நான் அழைப்பது இவர்களை

   1) வால்பையன்

   2) கார்த்திக் (தம்பி திண்னை கூடிய சீக்கிரம் எழுதறேன்)

   3) தாமிரா (நேரம் கிடைத்தால் தல)

   4) பரிசல் (சொன்னா இன்னொருதடவ எழுதுவாருங்க. அவ்ளோ நல்லவரு)

    5) ப்ளீச்சிங் பவுடர் (இப்போ மொத பேர படிங்க)

டிசுகி:  தலைப்பு பெரிதாய் இருப்பதால் பாதிதான் தலைப்பாக வைக்க முடிந்தது..முழுத்தலைப்பு இங்கே.

   "மலரும் நினைவுகளில் இதுதான் பெஸ்ட் என்று சொல்வதற்கில்லையென்றாலும் இதுதான் வொர்ஸ்ட் என்றும் சொல்ல முடியாது."

54 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on October 14, 2008 at 11:09 AM said...

முதல் குத்து.. என் குத்து..

Ŝ₤Ω..™ on October 14, 2008 at 11:11 AM said...

கலக்கிடீங்க தல..
எல்லாரும் ரொம்ப சீரியஸா எழுதி இருக்கும் போது.. அதயே லைட்டா எழுதி இருக்கீங்க...
உங்க நகைச்சுவை உணர்வுக்கு வாத்துக்கள்..

கார்க்கி on October 14, 2008 at 11:14 AM said...

நன்றி சகா..

பதிவை படிச்சு கடுப்பானவன் said...

//(இந்த இடத்தில் நீங்கள் லேசாக புன்னகைக்க வேண்டும். செய்தீர்களா?)//


உன் மேல புல்டோசர விட்டு ஏத்தனும்னு நினைச்சேன்

பதிவை படிச்சு கடுப்பானவன் said...

//(இப்போது, ஹாலிவுட்டிலும் இந்த மாதிரி படங்களைத்தான் பார்ப்பியாடா நீ என்று என்னைத் திட்டனும். திட்டினீங்களா?//

திட்டினத போட்டா நாறிடும் பர்வால்லையா?

பரிசல்காரன் on October 14, 2008 at 11:56 AM said...

நிஜமாகவே இது பெஸ்ட்தானோ என்று தோன்றுகிறது.

கடைசி கேள்வியின் பதிலில் சுஜாதா வாசம் - அருமை சகா!

ஒரு தடவை எழுதினதுக்கே, நிறைய பேர் திருப்பூருக்கு ட்ரெய்ன் டிக்கெட் எடுத்து, அரிவாளோட வந்துகிட்டிருக்காங்க.

இன்னொருக்கா எழுதவா? பார்க்கலாம். ரெண்டு, மூணு சந்திப்பு இன்னும் பாக்கியிருக்கு. பார்க்கலாம்!!

பதிவை படிச்சு கடுப்பானவன் said...

/(ஹிஹிஹி.. இப்போ என்ன நினைச்சிங்கணு நீங்களே பின்னூடட்த்தில் சொல்லுங்க/

எங்களுக்கு சனி உச்சத்தில இருக்க்னு நினைச்சோம்.

சரவணகுமரன் on October 14, 2008 at 12:09 PM said...

சூப்பருங்கோ!!!

சரவணகுமரன் on October 14, 2008 at 12:10 PM said...

//உங்க நகைச்சுவை உணர்வுக்கு வாத்துக்கள்..//

இதுல உங்க நகைச்சுவை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்...

கார்க்கி on October 14, 2008 at 12:12 PM said...

//பரிசல்காரன் said...
நிஜமாகவே இது பெஸ்ட்தானோ என்று தோன்றுகிறது.

கடைசி கேள்வியின் பதிலில் சுஜாதா வாசம் - அருமை சகா!
//

நன்றி பரிசல்..

கார்க்கி on October 14, 2008 at 12:17 PM said...

//ஒரு தடவை எழுதினதுக்கே, நிறைய பேர் திருப்பூருக்கு ட்ரெய்ன் டிக்கெட் எடுத்து, அரிவாளோட வந்துகிட்டிருக்காங்க.
//

அட அதுக்கு இல்லைங்க.. இது மாதிரி யாராவது வந்தா உங்களுக்கு பதிவெழுத மேட்டர் கிடைக்கும்னு தான்.. அவங்களுக்கு தெரியல பதிவெழுத மேடர் கிடைக்கலங்கிறதையே நீங்க பதிவா போட்டவர்னு..

முரளிகண்ணன் on October 14, 2008 at 12:19 PM said...

:-))))))))))))))))))))))

கார்க்கி on October 14, 2008 at 12:19 PM said...

//சரவணகுமரன் said...
சூப்பருங்கோ!!!
//

நன்றிங்கோ

//சரவணகுமரன் said...
//உங்க நகைச்சுவை உணர்வுக்கு வாத்துக்கள்..//

இதுல உங்க நகைச்சுவை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்...//

நன்றிய திருப்பி கொடுங்கோ

narsim on October 14, 2008 at 12:20 PM said...

நன்றி சகா நல்லா எழுதியிருக்கீங்க..

நர்சிம்

கார்க்கி on October 14, 2008 at 12:20 PM said...

@பதிவை படிச்சு கடுப்பானவன்,

நன்றி.

கார்க்கி on October 14, 2008 at 12:21 PM said...

@முரளி,

:))))))

@ நர்சிம்,

உங்க வரிகள்ல ஒரு கோவம் இருக்கு போல தல.. உன்னைப் போய் எழுத சொன்னேன் பார்றானு தானே? :))))))))

நானும் ஒருவன் on October 14, 2008 at 1:00 PM said...

"தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் பாலா, அமீர்(இயக்குனர்), முருகதாஸ், செல்வராகவன்,கார்க்கி ம்ம்ம். ஆரோக்கியமாத்தான் இருக்கு"

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு

நானும் ஒருவன் on October 14, 2008 at 1:02 PM said...

" கார்க்கி said...
//சரவணகுமரன் said...
சூப்பருங்கோ!!!
//

நன்றிங்கோ

//சரவணகுமரன் said...
//உங்க நகைச்சுவை உணர்வுக்கு வாத்துக்கள்..//

இதுல உங்க நகைச்சுவை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்...//

நன்றிய திருப்பி கொடுங்கோ"


நல்லா சிரிச்சேன்.

கார்க்கி on October 14, 2008 at 1:14 PM said...

//நானும் ஒருவன் said...
"தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் பாலா, அமீர்(இயக்குனர்), முருகதாஸ், செல்வராகவன்,கார்க்கி ம்ம்ம். ஆரோக்கியமாத்தான் இருக்கு"

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு//

ஏன்? அவங்க எல்லாம் என் கூட போட்டியிட முடியாதுன்னா.. ஆனாலும் உன் நண்பன் மேலதன் எவ்ளோ நம்பிக்கை மச்சி

விஜய் ஆனந்த் on October 14, 2008 at 1:17 PM said...

:-))))...

Anonymous said...

intersting

Bleachingpowder on October 14, 2008 at 2:22 PM said...

//கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜான் ட்ரவோல்டாவின் க்ரீஸ்.. அருமையான மீயூஸிகல்.//

ஓ... க்ரிஸ் தமிழ் படமா அதுல ஜான் ட்ரவோல்டா வேற நடிச்சிருக்காரா...சொல்லவே இல்ல

இதுவரை வேறு யாரும் இதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த இடத்தில் நீங்கள் லேசாக புன்னகைக்க வேண்டும். செய்தீர்களா?)

Bleachingpowder on October 14, 2008 at 2:24 PM said...

மேலும் நான் அழைப்பது இவர்களை
1) வால்பையன்
5) ப்ளீச்சிங் பவுடர் (இப்போ மொத பேர படிங்க)

இப்ப எந்த பேருல பதிவ போடறதுனு தான தெரியல ;)

கார்க்கி on October 14, 2008 at 2:29 PM said...

@விஜய்,

:)))))

@அனானி,

நன்றி

கார்க்கி on October 14, 2008 at 2:31 PM said...

//ஓ... க்ரிஸ் தமிழ் படமா அதுல ஜான் ட்ரவோல்டா வேற நடிச்சிருக்காரா...சொல்லவே இல்ல
//

நம்ம எழுத்து படிக்கிறவங்கள மயக்கி தப்ப பார்க்காம விடுவாங்களானு டெஸ்ட் பண்ணேன். மப்புல இருந்தாலும் வால்பையன் கரெக்டா சொல்லிட்டீங்க. ஆவ்வ்வ்வ் உளறீட்டேனோ?

குசும்பன் on October 14, 2008 at 2:33 PM said...

ஹி ஹி அண்ணே நீங்களும் நானும் அப்படியே ஒரே மாதிரி எழுதி இருக்கோம்.

அப்ப நானும் கார்க்கியாகிட்டேன்!

கார்க்கி on October 14, 2008 at 2:35 PM said...

அட அட அட.. என்ன ஒரு தன்னடக்கம்.. நான் குசும்பன் ஆக முயற்சி பண்றேன்.. உங்க பதிவ பார்த்ததும் உள்ளுக்குள்ள ஒரே சந்தோஷம். ஆனா மீ த ஃபர்ஸ்ட்..

rapp on October 14, 2008 at 2:58 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............அப்போதான் இன்னும் நெறைய மீ த பர்ஸ்ட் போடுவேன். இப்போ சினிமா சம்பந்தமா எக்கச்சக்கமா படிக்க வேண்டியது இருக்கறதாலதான் நடுநடுவுல பார்ம்ல இல்லாம போயிடறேன்.

rapp on October 14, 2008 at 3:01 PM said...

எனக்கும் வசீகரா படம் புடிச்சிருந்தது, இதோட தெலுங்கு(ஒரிஜினல்) படமும் நல்லா இருக்கும்

rapp on October 14, 2008 at 3:01 PM said...

//ரிக்ஷாகாரன் படத்திற்காக‌ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட தேசிய விருது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருது. எம்.ஜி.ஆருக்கு கொடுக்கனும்னு முடிவு செய்தாலும் வேற படமா கிடைக்கல? நல்ல வேளை சிவாஜிக்கு கடைசி வரை அந்த விருதை தந்து அவமதிக்கவில்லை// super:):):)

Karthik on October 14, 2008 at 3:04 PM said...

எழுதுனதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. சூப்பர்னு ஒரு கமென்ட் போட்டுட்டு போயிருப்பேன். என்னையும் மாட்டிவிட்டதுக்கு ..........
:)

கார்க்கி on October 14, 2008 at 3:04 PM said...

வாங்க ராப்.. இப்போ எல்லாம் என் பதிவுக்கு மீ த ஃபர்ஸ்ட் மட்டுமில்ல பின்னூட்டமே போட மாட்டறீங்க.. ஜே.கே.ஆர் பத்தி ரொம்ப நாள எழுதலைனு கோபமா தலைவி?

கார்க்கி on October 14, 2008 at 3:06 PM said...

//எனக்கும் வசீகரா படம் புடிச்சிருந்தது, இதோட தெலுங்கு(ஒரிஜினல்) படமும் நல்லா இருக்கும்
//

அத நான் பார்க்கல.. இந்தப் படம் ஓடியிருந்தா ஒழுங்கா விஜய் 2 3 காமெடி படமாவாது பண்ணியிருப்பாரு..

கார்க்கி on October 14, 2008 at 3:07 PM said...

@கார்த்திக்,

எழுதுப்பா.. உன்கிட்ட இருந்து வித்தியாசமான கோணத்துல வரும் எனக்கொரு நம்பிக்கை.

இயக்குனர் அமீர் said...

//பாலா, அமீர்(இயக்குனர்), முருகதாஸ்,//

அடைப்புக்குள் இயக்குனர் என்று போட்டதன் பின்புலம் என்னவோ?

கார்க்கி on October 14, 2008 at 4:08 PM said...

வாங்க அமீர்.. நீங்களும் நடிக்க தொடங்கியதால் அப்படி செய்தேன்.. அதுவும் அந்த அப்ப‌டத்தின் இயக்குனர்..... சப்பா.........

vikki said...

hi how are u?

வால்பையன் on October 14, 2008 at 7:44 PM said...

//இந்த இடத்தில் நீங்கள் லேசாக புன்னகைக்க வேண்டும். செய்தீர்களா?//

இல்ல எனக்கு அழுக அழுகையா வந்துருச்சு

வால்பையன் on October 14, 2008 at 7:45 PM said...

//இதுல கூட வித்தியாசமா சொல்றான்டா இவன்னு நீங்க பிரம்மிக்கணும். பிரம்மிச்சிங்களா?//

நீங்கள் அஜித் ரசிகரா
அமர்களத்துக்கு பிறகு ரசிக்கும் வகையில் ஒரு படமும் இல்லை

வால்பையன் on October 14, 2008 at 7:48 PM said...

//இந்த படம் முழுவதையும் திறந்த கண்களோடு பார்ப்பவர்கள் கல்நெஞ்சுக்காரர்கள்.//

அந்த காட்சியை மட்டும் நெஞ்சை கல்லாகி கொண்டு பார்த்தேன்.
(அது நடிப்பு மட்டுமே)
அந்த காட்சியில் வரும் சில வசனங்கள் எதிராளி பெண்ணை வெகுவாக ரசிப்பவன் இல்லை என்பதை காட்டும்.

வால்பையன் on October 14, 2008 at 7:50 PM said...

//தினம் ஒரு மொக்கை போட்டு உங்களை நான் சாகடித்துக் கொண்டுதானிருப்பேன். //

நீங்கள் செய்வது கொலை முயற்சி மட்டுமே
நாங்களாகவே வந்து இங்கே தற்கொலை செய்து கொண்டிருக்கிறோம்

வால்பையன் on October 14, 2008 at 7:52 PM said...

//மேலும் நான் அழைப்பது இவர்களை
1) வால்பையன்
5) ப்ளீச்சிங் பவுடர் (இப்போ மொத பேர படிங்க)//

நல்லதந்தியை சேர்க்காமல் விட்டதற்கு கண்டனங்கள்

கும்க்கி on October 15, 2008 at 7:47 AM said...

//ஒரு தடவை எழுதினதுக்கே, நிறைய பேர் திருப்பூருக்கு ட்ரெய்ன் டிக்கெட் எடுத்து, அரிவாளோட வந்துகிட்டிருக்காங்க.
//

அட அதுக்கு இல்லைங்க.. இது மாதிரி யாராவது வந்தா உங்களுக்கு பதிவெழுத மேட்டர் கிடைக்கும்னு தான்.. அவங்களுக்கு தெரியல பதிவெழுத மேடர் கிடைக்கலங்கிறதையே நீங்க பதிவா போட்டவர்னு..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கும்க்கி on October 15, 2008 at 7:51 AM said...

வலையுலகம் வளரும். வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். லக்கி ஒரு கோடி ஹிட்ஸை பெறுவார். பரிசல் தினமும் 22 மணி நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார். நர்சிம் கன்னித்தீவு போல குட்டிகுட்டியாக‌ மாறவர்மன் எழுதிக் கொண்டிருப்பார். அப்துல்லா இன்னும் சில பேருக்கு உதவ வழிவகை செய்வார். கோவியார் மணிக்கு ஒரு பதிவு போடுவார். மங்களூர் சிவா ரிப்பீட்ட்டேய் என்பதை காப்பி செய்து எல்லாப் பதிவிலும் பேஸ்ட் செய்வார். ராப்பால் அனைவருக்கும் மீ த ஃப்ர்ஸ்ட் போட முடியாது.
எப்படி..எப்பிடி..எப்பாடி...இப்பிடில்லாம்.......ஆச்சர்யம்...உங்களால் மட்டும்தான் முடியுது.

கும்க்கி on October 15, 2008 at 7:52 AM said...

உங்களால் மட்டும்தான் முடியும்...

கார்க்கி on October 15, 2008 at 10:51 AM said...

//நீங்கள் அஜித் ரசிகரா
அமர்களத்துக்கு பிறகு ரசிக்கும் வகையில் ஒரு படமும் இல்லை
///

இது மாதிரி யாருமே என்ன அசிங்கபடுத்தினது இல்ல சகா.. நான் உங்க பேச்சு டூ

கார்க்கி on October 15, 2008 at 10:52 AM said...

//கும்க்கி said...
உங்களால் மட்டும்தான் முடியும்...///

இதுவாது உண்மையா?இல்ல ஏதாவ்து உள்குத்து இருக்காண்ணே?

கார்க்கி on October 15, 2008 at 10:53 AM said...

//அந்த காட்சியை மட்டும் நெஞ்சை கல்லாகி கொண்டு பார்த்தேன்.
(அது நடிப்பு மட்டுமே)
அந்த காட்சியில் வரும் சில வசனங்கள் எதிராளி பெண்ணை வெகுவாக ரசிப்பவன் இல்லை என்பதை காட்டும்.
//

ஆமாம்.. கதைப்படி அவன் ஓரின சேர்க்கையில் இன்புறுபவன்..

கார்க்கி on October 15, 2008 at 10:53 AM said...

அடுத்த கமெண்ட் 50வது.. நானே போட்டா நல்லா இருக்காது யாராவ்து போடுங்கப்பா..

வால்பையன் on October 15, 2008 at 10:54 AM said...

50

வால்பையன் on October 15, 2008 at 10:54 AM said...

சந்தோசமா

கார்க்கி on October 15, 2008 at 11:05 AM said...

50 நீங்கன்ற போது டபுள் சந்தோஷம் சகா.. என்ன பொடியன் இப்படி போட்டாரு? உண்மையா அப்ப?????????

வால்பையன் on October 15, 2008 at 11:07 AM said...

//என்ன பொடியன் இப்படி போட்டாரு? உண்மையா அப்ப????????? //

ஹீ ஹீ ஹீ

Karthikeyan Tamilmani on June 9, 2009 at 5:47 PM said...

நீங்கள் அஜித்தை இன்னும் ஆயிரம் கரை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.... ஆனால் விஜயை பாராட்டி அஜித்தை குறை சொல்லாதீர்கள்..... பதிவை படிக்கும் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் வெறுப்பு வர கூடும்...... நீங்கள் கூறிய ரெட், ராஜா, ஜனா, ஆழ்வார் திரைப்படங்கள் மட்டம்தான்....... ஆனால் விஜயிடம் ஒரு வாலி/அமர்க்களம்/முகவரி/கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்/வில்லன்/ஜி/வரலாறு/கிரீடம்/பில்லா இல்லையே......... அவருக்கு தமிழ் தாய் மொழி அல்ல..... அதனால் அவருடைய வாய்ஸ் மாடுலேஷன் முன்பு அப்படி இருந்தது..... இப்பொழுது எவ்வளோவோ பரவாயில்லை......... ஒரு நடிகனாக நிறைய சாதித்து விட்டார்..... இதெற்கெல்லாம் மேல் அவர் ஒரு நல்ல மனிதர்......... அவரை பலமுறை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...... மற்றபடி என்னையும் அஜித் ரசிகன்னாக அல்லது தல வெறியனாக நினைத்தால் அதற்கு நன் பொறுப்பல்ல..... சூர்யா அல்லது விக்ரம் படங்களை ஒப்பிட்டு அஜித்தின் படங்களிலி இருக்கும் சில குறைகளை கூறுங்கள் நியாயமாக இருக்கும்...... ஆனால் அதற்கான முக்கிய காரணம் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காது......... ஒன்று மட்டும் சொல்ல முடியும்...... உங்களை போன்றவர்கள் எழுதும் பதிவுகலால்தான் அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கை கூடுகிறது என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.............

நன்றி........

 

all rights reserved to www.karkibava.com