Oct 12, 2008

தற்கொலைகள்...

    பிறப்பை தான் நம்மால் முடிவு செய்ய முடியாது , இறப்பையாவது நம் விருப்பப்படி செய்துக் கொள்ளலாம் என்று முட்டாள்த்தனமாக முடிவு செய்பவர்கள் பலர்.இன்று காலை இதுப் போன்ற ஒரு செய்தியை கேட்டப் போது அவர் எனக்கு தெரியாதவர் என்ற போதும் ஓர் அரை நாள் என் மனதை கவலைக் கொள்ள செய்து விட்டார்.என் அக்காவின் நிறுவனத்தில் பணிபுரியும் அவரின் பெயர் அசோக். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் அவருக்கு காதல் தோல்வியும் இல்லை,பண நெருக்கடியும் இல்லை,தெரிந்த வரை எந்த தொல்லையும் இல்லை என்றே சொல்கிறார்கள் அவரது நண்பர்களும் உறவினர்களும். கடைசியாக எழுதி வைத்த கடிதத்தில் உடல்நிலை தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார். அமெரிக்கா போன்ற தேசத்தில் அத்துனை பெரிய நோயோடு நுழையவே முடியாது.அங்கே சென்றும் அவருக்கு பெரிதாய் எதுவும் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம் எதுவோ,மீண்டும் ஓர் வாய்ப்பு அவருக்கு வர போவதில்லை.

    இது போன்ற முடிவை எடுக்கும் பலர் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமாக அவசரப்பட்டே இதை செய்கிறார்கள். ஆனால்,அசோக் போன்ற சிலர்,தெளிவாக தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தனது கடைசி செய்தியாக ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டே போகிறார்கள்.அசோக்கும் தனது நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். ஒருவருக்கும் இந்த திடீர் செய்தியின் அர்த்தம் புரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கு கூடப் பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் சொல்லியே பழகிய நமக்கு இது புரிவது கொஞ்சம் சிரமம்தான். அதுமட்டுமில்லாமல் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று விளக்குவதற்காகவே இருக்கும் சில இணையதளங்களை பார்த்து விட்டுதான் இந்த அசட்டுத்தனத்தை செய்திருக்கிறார் இந்த நண்பர். இத்தனைக்கும் படிப்பிலும் வேலையிலும் முதன்மையாகவே இருந்து இருக்கிறார். நமது கல்வி முறையில் இருக்கும் பெரிய குறையாக நாம் கருதுவுது இதைதான்.புரியாத பல விஷயங்களை சொல்லி தரும் நம் கல்வி முறை வாழ்க்கை குறித்த பல விஷயங்களை சொல்லி தருவதில்லை. மாவட்டத்திலே முதல் மதிப்பெண் பெற்ற ஒருப் பெண்ணுக்கு நமது அரசாங்க ஊழியர்கள் தவறு செய்பவர்கள் என்பது தெரியவில்லை.அவர் தோல்வி அடைந்ததாக வந்த செய்தியை பார்த்ததும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இவர் உண்மையிலே மாவட்ட அளவில் முதலாக வர முற்றிலும் தகுதி அற்றவர் என்பதே என் கருத்து.என்ன செய்ய,இந்த கல்வி முறையில் அவர்தான் முதலாவது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வாழ்க்கையே வெறுத்துப் போய் சாகத் துணியும் இவர்கள் அந்த முயற்சியும் தோற்று போனால் சட்டத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டும்.சாகத் துணியும் அவர்களின் வார்த்தைகளுக்கு காது கொடுக்காமல் மேலும் அவர்களை நோகடிக்கும் இந்த சட்டத்தின் மீது எனக்கு வரும் வெறுப்பிற்கு அளவே இல்லை.நல்ல வேலை,தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று சொல்ல வில்லை.

     இந்த பூமியில் நமக்கென ஒரு உயிர் இல்லை என்பதே பெரும்பாலான தற்கொலைக்கான காரணம் என்பது என் கருத்து.வேறெதுவும் செய்ய வேண்டாம் ,நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் போதும். சொல்வது எளிது செய்வது கடினம் என்ற பேச்செல்லாம் இதில் எடுபடாது.இது சுலபமாக செய்ய கூடிய ஒன்றுதான்.உங்களால் ஒரு அசோக்கை காப்பாற்ற முடிந்தால் போதும் உங்கள் வாழ்கை முழுவதும் வாழ்ந்ததற்கான வசந்தம் உங்களை வந்து சேரும்.அதை அனுபவத்திவன் என்ற முறையில் உங்களை வேண்டி கேட்பதெல்லாம்,கேளுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களோடு பேச ஆசைப்படும் போதெல்லாம் காது கொடுத்து கேளுங்கள்.அது போதும்.அப்படி ஒருவர் இருந்திருந்தால் அசோக் இன்று நம்மோடு இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

     அசோக்கின் மறைவுக்கு ஐந்து நாள் அஞ்சலி செய்வதை விட அவர் சொல்லிவிட்டுப் போன பாடத்தை புரிந்துக் கொள்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.உலகம் சுருங்கி விட்ட பின்னும் ஒவ்வொரு மனிதனும் அந்நியனாக இருக்கும் அபத்தத்தை உணர்ந்து நடப்போம்.இதைப் புரிய மறுக்கும் யாரும் மற்றொரு நாள் அசோக்காக மாறும் நிலை ஏற்படுவது விதியென நினைப்பது அறியாமையே.

( இந்த பதிவு 7-5-2008 அன்று பதிவிடப்பட்டது)

17 கருத்துக்குத்து:

Anonymous said...

good post.i have written a mail to you.

கார்க்கி on October 12, 2008 at 2:58 PM said...

thanks for ur mail friend

பரிசல்காரன் on October 12, 2008 at 8:47 PM said...

:-(

கார்க்கி on October 12, 2008 at 9:19 PM said...

வாங்க பரிசல்.. கடைசி பதிவை மட்டும்தான் படிப்பேன் என்றால் தினமும் வர வேண்டுன்.. இதுக்கு முன்னாடி போட்ட டீ.ஆர் மேட்டர தயவு செய்து படிங்க. :)

Bleachingpowder on October 13, 2008 at 12:55 PM said...

என்ன தல மண்டே மார்னிங் மூட் அவுட் பண்ணிட்டீங்க :(

நவநீதன் on October 13, 2008 at 3:51 PM said...

"தற்கொலை என்பது கோழைகள் செய்யும் ஒரே ஒரு தைரியமான காரியம்" - என்று எங்கோ, எப்போதோ, எதிலோ படித்திருக்கிறேன். "அசோக்" சம்பவமும் அப்படிப்பட்டதுதான்.

"தன்னம்பிக்கையும், முன் முனைப்பும், உற்சாகமும் கொண்ட நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார் விவேகானந்தர். அந்த தன்னம்பிக்கை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. தன்னம்பிக்கையுள்ள எவரும் தற்கொலை வரை போகமாட்டார்கள்.

கார்க்கி on October 13, 2008 at 4:21 PM said...

ப்ளீச்சிங் இது நான் நேற்றே போட்டது..

@நவநீதன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

narsim on October 13, 2008 at 4:51 PM said...

//உங்கள் நண்பர்கள் உங்களோடு பேச ஆசைப்படும் போதெல்லாம் காது கொடுத்து கேளுங்கள்.அது போதும்.//

நட்பின் கடைசிபட்ச கோரிக்கை.. நல்ல பதிவு சகா..

உங்கள மலரும் நினைவுகள தொடரசொல்லி பதிவு போட்டிருக்கேன்.. போட்ருங்க..

நர்சிம்

கார்க்கி on October 13, 2008 at 4:58 PM said...

பார்த்து அங்கேயே நன்றியும் சொல்லியிருக்கேன் சகா.. நிச்சயம் நாளைக்குள் எழுதிடுவேன்..

கவிநயா on October 13, 2008 at 5:28 PM said...

//இந்த பூமியில் நமக்கென ஒரு உயிர் இல்லை என்பதே பெரும்பாலான தற்கொலைக்கான காரணம் என்பது என் கருத்து.//

அதென்னவோ தற்கொலை பற்றி அடிக்கடி இப்போ காதுல விழுது. நீங்க சொல்வது மிகவும் உண்மை.

கார்க்கி on October 13, 2008 at 5:33 PM said...

உண்மைதான் கவிநயா. வருகைக்கு நன்றி

வால்பையன் on October 14, 2008 at 8:03 PM said...

உலகில் நிறைய அசோக்குகள் இருக்கிறார்கள்.
வாழ்வியல் சிதறி கொண்டிருக்கிறது

sinthu on December 15, 2008 at 4:05 PM said...

"இந்த பூமியில் நமக்கென ஒரு உயிர் இல்லை என்பதே பெரும்பாலான தற்கொலைக்கான காரணம் என்பது என் கருத்து.வேறெதுவும் செய்ய வேண்டாம் ,நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் போதும்."
I do anna........

"உங்களால் ஒரு அசோக்கை காப்பாற்ற முடிந்தால் போதும் உங்கள் வாழ்கை முழுவதும் வாழ்ந்ததற்கான வசந்தம் உங்களை வந்து சேரும்.அதை அனுபவத்திவன் என்ற முறையில் உங்களை வேண்டி கேட்பதெல்லாம்,கேளுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களோடு பேச ஆசைப்படும் போதெல்லாம் காது கொடுத்து கேளுங்கள்"
அண்ணா கொஞ்சம் புரிகிறது கொஞ்சம் புரியவில்லை.
நண்பி ஒருத்தி சொல்வதை ஒரே ஒரு நாள் கேட்காததால் இப்பொழுதும் அதற்கான விழாவை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறேன்.
i just read before....

sinthu on December 15, 2008 at 4:06 PM said...

sinthu on December 15, 2008 at 4:08 PM said...

sinthu on December 15, 2008 at 4:10 PM said...

all rights reserved to www.karkibava.com