Oct 11, 2008

டீஆரின் புதிய படம்‍--வெளிவராத தகவல்கள்


     மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர்(சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

  டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம்  புதுசு
           எனக்கு பழசு எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
         எங்கிட்ட இருக்கறது கதை
         வில்லனுக்கு விழும் உதை
         நீதான் கொடுக்கனும் அதை..

         வில்லனுக்கு ஒரு தங்கச்சி
        ஆனா அவளோ உன் கட்சி
        அவள தூக்கிட்டுபோய் வச்சி
        பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத்       துவங்குகின்றார்)
        உன் தங்கச்சியை கண்டேன்
        என் கட்சியில் இழுத்தேன்
        அழைத்ததும் வந்துவிட்டாள்
        அவளுடன் வருவேன்
        வேண்டியதை தருவேன்
        ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல  12 பேக்
            பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
             வாலி ஆசையெல்லாம் உன் பழைய வரலாறு
         இன்னமும் இருக்கு உனக்கும் தமிழுக்கும் தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார்.  அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர்  : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
         என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
         இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
         ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

         க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
         இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
         அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
         கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்:  ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவ்ங்களையே ஆடிட சொல்ங்க. நான் ஆட்னா பில்லா ஹிட்டானதால‌ அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
         எனக்கும் இனி அதுதான் பழக்கம்
       பரமசிவன்ல ஆடினங்க ரகஸியா
   இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

    இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....."(இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
         அதுக்கு வேற டைரக்டர நீ பாரு
         திரையுலகத்தில நான் தான் சாரு
        என் ஹீரோ தயிறு நீ வெறும் மோரு

    கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன்.அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.(போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்)

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
           தமிழ்சினிமால இப்ப உங்க டைம்
            டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
            நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
         எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
         எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
         ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
        அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
        எனக்கு இன்னும் ஆகல வயசு
        34 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

38 கருத்துக்குத்து:

narsim on October 11, 2008 at 10:51 AM said...

//தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர்//

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்திதானய்யா.. இந்த நிலம..


கலக்கல் சகா..

நர்சிம்

கார்க்கி on October 11, 2008 at 12:38 PM said...

நன்றி தல.. சனிக்கிழமை இல்ல.. அதான் காத்து வாங்குது.. இல்லைன்னா தலைவர் பேருக்கே சூடாயிருக்கும்

இராம்/Raam on October 11, 2008 at 12:47 PM said...

கலக்கல்.... :))

கார்க்கி on October 11, 2008 at 1:53 PM said...

நன்றி ராம்..

balachander said...

super :-)

சாரு ரசிகர் said...

சாருவை இழுவுப்படுத்தும் கார்க்கிக்கு கண்டனங்கள்.

இப்படிக்கு,

சாருவின் ரசிகர்கள்

அஜித் ரசிகர் said...

//உன் வயித்துல இருக்கு பாரு தல 12 பேக்
பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்//

தலடா.. யாருகிட்ட மோதுற?

விஜய் ரசிகர் said...

//எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
தமிழ்சினிமால இப்ப உங்க டை//

தளபதி விட்டாரு கொடி
அஜித் ஃபேன்ஸ் இத படி

Bleachingpowder on October 11, 2008 at 3:43 PM said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா....மொக்க பதிவா இது??? தலைப்ப பாத்துட்டு நிஜமாவே படமெடுக்க வந்துட்டாரோனு பயந்துட்டேன்.

கே.டிவியில வீராச்சாமி பாத்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் வெளியே வரல, அதுக்குள்ள அடுத்ததா...நாடு தாங்காது.

Rajaraman on October 11, 2008 at 4:02 PM said...

தலைப்பை பார்த்து பிடிச்ச பீதி பதிவை படிச்சு முடிச்சதும் தான் போயிந்தி.. வீராசாமியோட போதும் சாமி.. இனிமேல் நாடு தாங்காது.

கார்க்கி on October 11, 2008 at 7:09 PM said...

நன்றி பாலசந்தர்..

நன்றி ரசிகர்களே..

@ப்ளீச்சிங்,

அட உண்மையிலே அடுத்த படம் எடுக்க போறாருங்க..

@ராஜாராமன்,

தாங்கிதான் ஆகனும்.. சக்கரகட்டி, கா.வி, இதுக்கெல்லாம் அவரு படம் எவ்ளோ மேலுங்க.. சிரிக்கலாம்..

Anonymous said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.. வயிரு வலிக்க சிரிச்சேன்

நானும் ஒருவன் on October 11, 2008 at 7:58 PM said...

மச்சி இருக்கியா? ஒரு கும்மி போடலாமா?

நானும் ஒருவன் on October 11, 2008 at 7:59 PM said...

" தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர்"

அப்போ இளையமகன் யாரு ஜே.கே.ரித்திஷா?

நானும் ஒருவன் on October 11, 2008 at 8:00 PM said...

'' உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை.''


நீ டீ.ஆர விடு மொத...

நானும் ஒருவன் on October 11, 2008 at 8:01 PM said...

"உன் தங்கச்சியை கண்டேன்
என் கட்சியில் இழுத்தேன்
அழைத்ததும் வந்துவிட்டாள்
அவளுடன் வருவேன்
வேண்டியதை தருவேன்
ஆப்பை அவளே வைத்திடுவாள்"

சூப்பரப்பூ

நானும் ஒருவன் on October 11, 2008 at 8:02 PM said...

"
அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்."

அதானே.. அஜித்த வாரலன்னா உனக்கு தூக்கம் வராதே.. ஏகன் பாட்டுக் கேட்டியா? நீ கேட்காத.. அதையும் கலாய்ப்ப‌

நானும் ஒருவன் on October 11, 2008 at 8:05 PM said...

"விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறே"

பாட்டு மட்டும் வருமாக்கும்?

கார்க்கி on October 11, 2008 at 8:49 PM said...

//நானும் ஒருவன் said...
" தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர்"

அப்போ இளையமகன் யாரு ஜே.கே.ரித்திஷா?
//

டேய்.. ஜாக்கிரதை.. தலைவர பத்தி உன்ன பேச வுட்டதுக்கே ஆட்டோ என் வீட்டுக்கு வரும்..

கார்க்கி on October 11, 2008 at 8:50 PM said...

//நானும் ஒருவன் said...
'' உங்கிட்ட இல்லாதது சதை
எங்கிட்ட இருக்கறது கதை
வில்லனுக்கு விழும் உதை
நீதான் கொடுக்கனும் அதை.''


நீ டீ.ஆர விடு மொத...
//

நீ சொல்லாத அத..

கார்க்கி on October 11, 2008 at 8:51 PM said...

//அதானே.. அஜித்த வாரலன்னா உனக்கு தூக்கம் வராதே.. ஏகன் பாட்டுக் கேட்டியா? நீ கேட்காத.. அதையும் கலாய்ப்ப//

மனசாட்சி தொட்டு சொல்லு.. பாட்டு நல்லா இருக்கா? மவனே சங்குதான் இந்த தடவ உங்களுக்கு.. ஏகன் மைக்கில்லா மோகன்(வேலைக்காவாது)

விஜய் ஆனந்த் on October 12, 2008 at 12:11 AM said...

:-)))...

எதுகையும் மோனையும் துள்ளி விளையாடுது!!!

"current affair"s-ல வேற பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கீங்களே!!!!

விஜய் ஆனந்த் on October 12, 2008 at 12:14 AM said...

// ஏகன் மைக்கில்லா மோகன் //

ஹாஹாஹாஹா!!!!

ஹைதராபாத்துக்கு ஒரு 'சுட்ட பழம்' DVD பார்சேல்ல்ல்!!!

கார்க்கி on October 12, 2008 at 12:19 AM said...

தலைவர் மேட்டர் இல்ல..

சுட்டப்பழமா????? யாரு லக்கி அனுப்புவாரா?

கார்க்கி on October 12, 2008 at 12:21 AM said...

தூங்கலையா சகா????????/

தமிழன்... on October 12, 2008 at 2:37 AM said...

:))

தமிழன்... on October 12, 2008 at 2:38 AM said...

ரணகளம்...:)

குசும்பன் on October 12, 2008 at 11:15 AM said...

கார்கி மிகவும் அருமையாக இருக்கு! கீப் இட் அப்!

சான்சே இல்லை!

கார்க்கி on October 12, 2008 at 11:37 AM said...

தாங்க்ஸ் தல...

Karthik on October 12, 2008 at 3:53 PM said...

கலக்கல்ஸ் கார்க்கி. Again. As usual.

முரளிகண்ணன் on October 12, 2008 at 4:59 PM said...

super kaarkki asaththal

கார்க்கி on October 12, 2008 at 6:25 PM said...

நன்றி முரளிகண்ணன். டீ.ஆரை பற்றிய உங்கள் பதிவைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

கார்க்கி on October 12, 2008 at 6:26 PM said...

நன்றி கார்த்திக்

Sundar on October 12, 2008 at 11:55 PM said...

//நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும். //
அஜித் version எல்லாம் சூப்பர்!

சரவணகுமரன் on October 13, 2008 at 6:25 PM said...

ஹா...ஹா...ஹா... கலக்கல்

கார்க்கி on October 14, 2008 at 9:19 AM said...

நன்றி சகா..

வால்பையன் on October 14, 2008 at 8:18 PM said...

நல்ல நகைச்சுவை!
ஆனந்த விகடனில் இதே போல் வந்து கொண்டிருந்தது.
இப்போது இல்லை. நீங்கள் இடம் மாறிவிட்டதாலா

கிழஞ்செழியன் on October 25, 2008 at 3:59 PM said...

கருப்பனின் காதலி. 9 எழுத்து!

 

all rights reserved to www.karkibava.com