Feb 14, 2009

காதல் தேவதையின் பிறந்த நாள்
    முன்பொரு நாள்
    உன்
   முந்தானைத் தீண்டலில் உடைந்த‌
   வெற்றுக்கோப்பை நான்...

   உடைந்ததை
   ஒட்ட வைத்த போதும
   முன் போலில்லை..

*************************************************
  
         என் கனவில் நீ வருவதே இல்லை என்று பல நாட்கள் கவலைப்பட்டதுண்டு. நீ ஒரு பொழுதும் என் கனவாக முடியாது என்பதுதான் அதன் பொருளோ?

    என்னை தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதே. என் காதலை தாங்கும் சக்தி உனக்கு இருக்குமென எனக்குத் தோண்றவில்லை.

      உன் பிறந்த நாளுக்கு  புடவை எடுக்க சென்று ஒரே ஒரு புடவையோடு திரும்பினாய். உன் அழகைப் பற்றிக் கேட்க நான் அங்கு சென்றேன். நீ வேண்டாமென சொன்ன‌ப் புடவையெல்லாம் அழுதுக் கொண்டிருந்தன. பேசாமல் வந்துவிட்டேன்.நான் ஆண்மகன் அல்லவா?

      உன் பிறந்த நாளன்று அதிகாலை முதலே உன் வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன். எழுந்தவுடன் ஜன்னல் கதவைத் திறந்தாய். அன்றுதான் நீ குளிப்பதே உன் அழகையெல்லாம் அழிக்கத்தான் என்று தெரிந்துக் கொண்டேன்.

     புதுப் புடவையில் நீ அழகாய் நடந்து வந்தாய்.பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?

   எல்லோர் வீட்டுப் பெண்களும் பூக்களை சூடி அழகாகிறார்கள். நீ மட்டும்தான் தினம் ஒரு வகை பூவெனச் சூடி பூக்களை அழகாக்கிறாய்.

     உன்னை சில நிமிடங்கள் பார்த்த எனக்கே இருப்புக் கொள்ளவில்லை. எப்படித்தான் அன்று உன்னை முழுவதுமாய் பார்த்தும் உடையாமலிருக்கிறது உன்  வீட்டுக் கண்ணாடி?

     அன்று மாலை நீயும் கோவிலுக்கு வந்தாய். "யார் பேருக்குப்பா அர்ச்சணை" என்ற அய்யரிடம் " சாமி பேருக்கு" என்றேன். அவரும் சரியாய் உன் பெயருக்கு அர்ச்சணை செய்தார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அந்தக் கோவில் சாமிக்கும் உன் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்.

    காலை முதலே உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன் என்பதை நீ அறிந்தும், இரவு வீட்டுக்குள் நுழையும்முன் தான் ஒரு பார்வைப் பார்த்தாய். இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்.


பி.கு: காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))

50 கருத்துக்குத்து:

வால்பையன் on October 8, 2008 at 10:30 AM said...

//உடைந்ததை
ஒட்ட வைத்த போதும
முன் போலில்லை.. //

இந்த வார்த்தைகள் சாதாரனமானவைகள் அல்ல,
உறவுகளின் முறிவுகள் காதலில் மட்டுமல்ல,
நட்பில் கூட உண்டு.
ஆனாலும் வேதனைகள் ஒன்றே.

வால்பையன் on October 8, 2008 at 10:32 AM said...

//நீ குளிப்பதே உன் அழகையெல்லாம் அழிக்கத்தான் என்று தெரிந்துக் கொண்டேன்.//

மக்கா என்ன இது!
புகழுறதுக்கும் ஒரு அளவில்லையா

வால்பையன் on October 8, 2008 at 10:33 AM said...

சகா உங்க காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வால்பையன் on October 8, 2008 at 10:34 AM said...

அவுங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சகா

வால்பையன் on October 8, 2008 at 10:36 AM said...

உங்கள் காதலை பார்த்தால்,
நானெல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லவே வெட்க்கமாக இருக்கிறது

வால்பையன் on October 8, 2008 at 10:37 AM said...

ரெண்டு ஓட்டும் போட்டுட்டேன் சகா

வால்பையன் on October 8, 2008 at 10:38 AM said...

உடம்பை பார்த்துகோங்க
காதலால் கசிந்துருகிராதிங்க

rapp on October 8, 2008 at 10:54 AM said...

present மட்டும் போட்டுக்கறேன், இது என்னமோ பெரிய மேட்டர் பதிவு போல:):):)

கார்க்கி on October 8, 2008 at 11:11 AM said...

வாங்க வால்..

/வால்பையன் said...
//உடைந்ததை
ஒட்ட வைத்த போதும
முன் போலில்லை.. //

இந்த வார்த்தைகள் சாதாரனமானவைகள் அல்ல,
உறவுகளின் முறிவுகள் காதலில் மட்டுமல்ல,
நட்பில் கூட உண்டு.
ஆனாலும் வேதனைகள் ஒன்றே.

//

சரியாய் சொன்னீர்கள்.. நட்பு என்பதில் ஒரு வழி உன்டு.. வேறு நல்ல நண்பனை தேடலாம்.. காதலில் அது அவ்வளவு சுலபமில்லை என்பது உங்க்ளுக்கு தெரியாமலில்லை..

narsim on October 8, 2008 at 11:11 AM said...

//இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்//

பரவாயில்ல தல .. நேத்து பார்த்ததுக்கு இன்னிக்கி ட்ரீட் ஓகே..

நல்லா பதிஞ்சிருக்கீங்க மனச..

நர்சிம்

கார்க்கி on October 8, 2008 at 11:13 AM said...

//
மக்கா என்ன இது!
புகழுறதுக்கும் ஒரு அளவில்லையா//

உண்மை சகா.. :)))

//சகா உங்க காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

சரியா சொன்னிங்க.. அதான் இந்த வாரம் முழுக்க காதல் பதிவுகள்..

//வால்பையன் said...
அவுங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சகா

//

ஆமாம் சகா.. அதான் என்னை விட்டுட்டு வேற நல்ல பையன கல்யானம் பண்ணிக்கிட்டாங்க‌

கார்க்கி on October 8, 2008 at 11:15 AM said...

//வால்பையன் said...
உங்கள் காதலை பார்த்தால்,
நானெல்லாம் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லவே வெட்க்கமாக இருக்கிறது
//

என்னால இப்படி எழுதத்தான் முடியும்.. நீங்க கல்யாணம் பண்ணி இருக்கிங்க.. அதுக்கு மேல என்ன செய்யனும்? வாழ்த்துகள் சகா..

கார்க்கி on October 8, 2008 at 11:16 AM said...

//வால்பையன் said...
ரெண்டு ஓட்டும் போட்டுட்டேன் சகா//

நன்றி...

//வால்பையன் said...
உடம்பை பார்த்துகோங்க
காதலால் கசிந்துருகிராதிங்க
//

ஹிஹிஹிஹி

கார்க்கி on October 8, 2008 at 11:16 AM said...

//rapp said...
present மட்டும் போட்டுக்கறேன், இது என்னமோ பெரிய மேட்டர் பதிவு போல:):):)
//

அட அதெல்லாம் இல்ல ராப்..

கார்க்கி on October 8, 2008 at 11:18 AM said...

////இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்//

பரவாயில்ல தல .. நேத்து பார்த்ததுக்கு இன்னிக்கி ட்ரீட் ஓகே..

நல்லா பதிஞ்சிருக்கீங்க மனச..

நர்சிம்
//

வாங்க தல.. நான்தான் உங்கள தலனு சொல்லனும்.. நீங்க சகானே சொல்லுங்க..

Anonymous said...

your writing style is good. keep writing.

காதலை காதலிக்காதவன் said...

எப்ப பார்த்தாலும் ஒரே சுடுகாடு வாசனைப்பா இங்க. திருந்துங்கடா.

காதலை காதலிக்காதவன் said...

//என்னை தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதே. என் காதலை தாங்கும் சக்தி உனக்கு இருக்குமென எனக்குத் தோண்றவில்லை/

ஆமாமா. அது எங்களுக்கே இல்ல‌

Anonymous said...

பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?

excellent lines. congrats

தாமிரா on October 8, 2008 at 1:45 PM said...

பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?// புரில கார்க்கி.! பிற வரிகள் பிரமாதம். தபூசங்கர் ரொம்ப பிடிக்குமா?

கார்க்கி on October 8, 2008 at 1:54 PM said...

//பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?// புரில கார்க்கி.! பிற வரிகள் பிரமாதம். தபூசங்கர் ரொம்ப பிடிக்குமா//

ரொம்ப சகா.. ஆங்காங்கே என்னையுமறியாமல் அவர் வரிகள் வரக்கூடும்..

அந்த வரிக்கான அர்த்தம் யாராவ்து சொல்றாங்களானு பார்க்கலாம். நான் உங்களுக்கு மின்னஞ்சலில் சொல்கிறேன்

sridhar said...

dei antha varikku artham enakku theriyum.

Sundar on October 9, 2008 at 5:40 AM said...

ஹலோ! enough denial. move on and deal with it !

Ŝ₤Ω..™ on October 9, 2008 at 11:39 AM said...

தல.. என்னமோ இருக்கு உங்க பதிவுல.. என்னன்னு தான் சரியா சொல்லத்தெரியல..
வாழ்த்துக்கள் சொல்லாமான்னு தெரியல.. இருந்தாலும், வாழ்த்துக்கள்.. (யாருக்குன்னு கேட்காதீங்க..)

கார்க்கி on October 9, 2008 at 1:27 PM said...

அக்கறைக்கு நன்றி ஜோசப்.. நான் தொடர்கதையை நிறுத்த காரணம் அது உண்மை சம்பவங்கள். இவையெல்லாம் புனைவுகள்.. அவள் படித்தாலும் புரிந்து கொள்வாள்..

//
ஆமாம் சகா.. அதான் என்னை விட்டுட்டு வேற நல்ல பையன கல்யானம் பண்ணிக்கிட்டாங்க////

இதன் அர்த்தம் எனக்கு மட்டும்தான் விளங்கும்.. அதை இங்கே சொன்னது நீங்கள் சொன்ன மாதிரி தவறோ?????

//
என்னக் காரணத்தால் உங்கள் காதலி வேறொருவரை திருமணம் செய்தாரோ எனக்கு தெரியாது. ஆனால் வேறொருவருக்கு மனைவியாகிவிட்டவரை நினைத்து இன்னும் நீங்கள் கவிதையும், கதையும் , காவியமும் எழுதுவது நன்றாக இல்லை என்பது என் கருத்து. //

வெறொருவரின் காதலியை மனைவியாக்கி கொன்டது மட்டும் சரியா சகா? அது மட்டுமில்லாமல் அவையெல்லாம் நான் எப்போதோ எழுதியது.. இப்போது எழுதுவதில்லை..

//உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனால் உங்களை ஒரு நல்ல நண்பணாக கருதுவதால் இதை எழுதுகிறேன்./

நல்ல எண்ணத்தோடு கேட்டிருக்கிறீகள்.. நன்றி நான் தான் சொல்லனும் சகா..

கார்க்கி on October 9, 2008 at 1:30 PM said...

@சுந்தர்,

சரி சகா..

@சென்,


வாழ்த்துக்கு நன்றி சகா.. யாருக்கிருந்தா என்ன, நான் நன்றி சொல்ல்றேன்..

Anonymous said...

//காலை முதலே உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன் என்பதை நீ அறிந்தும், இரவு வீட்டுக்குள் நுழையும்முன் தான் ஒரு பார்வைப் பார்த்தாய். இதை காலையிலே செய்திருந்தால் என் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட்டாவது கிடைத்திருக்கும்.//

:)

ஜோசப் பால்ராஜ் on October 9, 2008 at 9:29 PM said...

//வெறொருவரின் காதலியை மனைவியாக்கி கொன்டது மட்டும் சரியா சகா? //

தோழா, இது குறித்து நாம் நமது வலையுரையாடலில் பேசுவோம்.

பரிசல்காரன் on October 9, 2008 at 9:43 PM said...

கொஞ்சம் பிஸிப்பா. ஒன்னோட நல்ல ஒரு பதிவை கவனிக்காமப் போக இருந்தேன்!

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின் உதிப்பதும் மரபானது
கடல்தனில் விளையாடும் அலையானது
எழுவதும் பின் விழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி
இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும்
வெளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல்மூடி
மறு வாசல் வைப்பான்
இறைவன்

-கவிஞர் ‘கிரேட்' வாலி!

:-(

p on October 9, 2008 at 11:18 PM said...

appadi ippadiyellam yosikkireenga boss enakku en ippadiyellam thonala pls tell me

கார்க்கி on October 10, 2008 at 8:38 AM said...

//தோழா, இது குறித்து நாம் நமது வலையுரையாடலில் பேசுவோம்//

ஓக்கே சகா..

//பரிசல்காரன் said...
கொஞ்சம் பிஸிப்பா. ஒன்னோட நல்ல ஒரு பதிவை கவனிக்காமப் போக இருந்தேன்//

நன்றி சகா...

// p said...
appadi ippadiyellam yosikkireenga boss enakku en ippadiyellam thonala pls telல் மெ//

வருகைக்கு நன்றி நண்பரே.. உங்கள் பெயர்?

விஜய் on February 14, 2009 at 2:33 PM said...

ok k aanathu aachu, adutha kathaliya hteda arambinga,........

லவ்டேல் மேடி on February 14, 2009 at 3:00 PM said...

ஸ்டார்டிங் எல்லாம் சிறப்பாத்தான் இருக்கும் பினிஷிங்தான் கப்பு அடிக்கும் ...........


// முன்பொரு நாள்
உன்
முந்தானைத் தீண்டலில் உடைந்த‌
வெற்றுக்கோப்பை நான்... //

ரெக்ஸ்சொனா செண்டுக்கே இப்புடி கவுந்துபுட்டியே ராசா........

உடைந்ததை
ஒட்ட வைத்த போதும
முன் போலில்லை.. //அதுதான் லவ்வுங்குற பாதாளத்துல உளுந்துட்டியே ............ பின்ன எப்புடி ஓட்டும் .......// என் கனவில் நீ வருவதே இல்லை என்று பல நாட்கள் கவலைப்பட்டதுண்டு. //யார சாமி ???? நமிதாவையா ........????// நீ ஒரு பொழுதும் என் கனவாக முடியாது என்பதுதான் அதன் பொருளோ? //


29 '' இஞ்சா ஸ்க்ரீன பெருசு பண்ணிக்கோ .... எல்லா நல்லா வரும் .............// என்னை தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதே. என் காதலை தாங்கும் சக்தி உனக்கு இருக்குமென எனக்குத் தோண்றவில்லை. //


அட சாமி .... அங்க தாங்குதோ.... இல்லையோ .. !!! கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டைனா ..... அதுக்கப்புறம் உனக்கு வாழ்க்கையே இருக்காது ... அத யோசிச்சியா ......?????// உன் பிறந்த நாளுக்கு புடவை எடுக்க சென்று ஒரே ஒரு புடவையோடு திரும்பினாய். //


உம்பட பர்சோட வெயிட்டு முன்னாடியே தெருஞ்சிருக்கும் .........// உன் அழகைப் பற்றிக் கேட்க நான் அங்கு சென்றேன். //


உனகெதுக்கப்பா இந்த வேண்டாத வேல ...........// நீ வேண்டாமென சொன்ன‌ப் புடவையெல்லாம் அழுதுக் கொண்டிருந்தன. //


எதுக்கு ... கிரேட்ட் எஸ்கேபுன்னா ..............// பேசாமல் வந்துவிட்டேன் . //


பேசீர்ந்தீனா .... நீ காலி மாப்ள .........


/// நான் ஆண்மகன் அல்லவா? //இந்த எடத்துலதான் நெம்ப சிறப்பா இருக்குது .....// உன் பிறந்த நாளன்று அதிகாலை முதலே உன் வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் உச்சியில் மறைந்திருந்தேன். //


ஏன் ... கேக்கு குடுப்பங்குன்னா ...... இதெல்லாம் நெம்ப சிறுபுள்ளதனமா இல்ல ....// எழுந்தவுடன் ஜன்னல் கதவைத் திறந்தாய். //


அப்போ மேகப் இல்லாம மூஞ்சிய பாத்திருப்பையே .... தெருச்சு ஓடிட்டயா ...????!!??// அன்றுதான் நீ குளிப்பதே உன் அழகையெல்லாம் அழிக்கத்தான் என்று தெரிந்துக் கொண்டேன். //


ஆமா .... ஆமா ... குளுச்ச்சா மேகப் எல்லாம் போயிரும் பாத்துக்கோ ......// புதுப் புடவையில் நீ அழகாய் நடந்து வந்தாய். //


பின்னோ ..... நீ வாங்கி குடுத்ததாச்சே .. நல்லாத்தே இருக்கும் ........// பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன? //


நெம்போ சொருஞ்சுபோட்ட .... முடியல ... மொக்கைய தாங்க முடியல ......
// எல்லோர் வீட்டுப் பெண்களும் பூக்களை சூடி அழகாகிறார்கள். நீ மட்டும்தான் தினம் ஒரு வகை பூவெனச் சூடி பூக்களை அழகாக்கிறாய். //


அவிங்க ஊட்டுல தோட்டந் தொரவுல பூச்செடிகீது நெறையா இருக்கும் ........

// உன்னை சில நிமிடங்கள் பார்த்த எனக்கே இருப்புக் கொள்ளவில்லை. ///


என்னது ... கிறுகிறுப்பு வந்துருச்சா ........ அட பாவமே ......// எப்படித்தான் அன்று உன்னை முழுவதுமாய் பார்த்தும் உடையாமலிருக்கிறது உன் வீட்டுக் கண்ணாடி? //


அந்த புள்ள கண்ணாடிய பாக்கும்போது ... நீ பாத்ததில்லையே ... அத்தான் பேசுற ......// அன்று மாலை நீயும் கோவிலுக்கு வந்தாய். "யார் பேருக்குப்பா அர்ச்சணை" என்ற அய்யரிடம் " சாமி பேருக்கு" என்றேன். அவரும் சரியாய் உன் பெயருக்கு அர்ச்சணை செய்தார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அந்தக் கோவில் சாமிக்கும் உன் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். //அட என்ன தம்பி நீ... !!! கோயில்ல பொங்கலும் சுண்டலும் வாங்குனியா ......???/!!!???

அட போ தம்பி நீ ..........
// காலை முதலே உன்னைப் பின்தொடர்ந்து வருகிறேன் என்பதை நீ அறிந்தும், இரவு வீட்டுக்குள் நுழையும்முன் தான் ஒரு பார்வைப் பார்த்தாய். //


எப்புடியோ .... சுண்டலும் .. பொங்கலும் கெடக்சுதுல்ல......


// இதை காலையிலே செய்திருந்தால் .... //


மத்தியானம் மேட்டுனி சோவுக்கு ரெண்டு பேரும் போயிருக்கலாம் ..........இப்படிக்கு ,,


காதலினால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் சங்கம் .

ஈரோடு .

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ......

ஆனால் இது போன்ற கம்பெனிகள் நிறைய உண்டு ........

குசும்பன் on February 14, 2009 at 3:07 PM said...

:))

கைகள் பர பரங்குது இருந்தாலும் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆகிக்கிறேன்.

கார்க்கி on February 14, 2009 at 3:45 PM said...

// விஜய் said...
ok k aanathu aachu, adutha kathaliya hteda arambinga,.//

அப்படியா சொல்றீங்க?

*********

@லவ்டேல்மேடி,

போதுமாப்பா???????

*********
/ குசும்பன் said...
:))

கைகள் பர பரங்குது இருந்தாலும் ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு எஸ் ஆகிக்கிறேன்//

ஏன் தல? அடிச்சு ஆடுங்க

gayathri on February 14, 2009 at 4:30 PM said...

wish u happy velatinesday

gayathri on February 14, 2009 at 4:32 PM said...

ஆமாம் சகா.. அதான் என்னை விட்டுட்டு வேற நல்ல பையன கல்யானம் பண்ணிக்கிட்டாங்க.

ippadi ella feel panna kudathu

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Priya Kannan on February 14, 2009 at 10:39 PM said...

:)

ஸ்ரீதர்கண்ணன் on February 15, 2009 at 6:05 AM said...

:(

MayVee on February 15, 2009 at 8:29 AM said...

நல்ல இருக்கு

சென்ஷி on February 15, 2009 at 9:02 AM said...

//பி.கு: காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))//

Kalakkl.... :-)))

(same blood)

கார்க்கி on February 15, 2009 at 12:00 PM said...

/ gayathri said...
wish u happy velatinesday/

நன்றிங்க. உங்களுக்கும்.

*********

// Priya Kannan said...
:)/

:))))

************
// ஸ்ரீதர்கண்ணன் said...
:(//

:((((((

***********
/ MayVee said...
நல்ல இருக்//

நன்றி சகா

**********
// சென்ஷி said...
//பி.கு: காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))//

Kalakkl.... :-)))

(same blood//

அப்படியா தல????????

Thusha on February 15, 2009 at 1:47 PM said...

"காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))"

வாசிக்கும் போதே எங்கோ பார்த்த ஞபாகம அப்புறமா தன் புரிந்தது

கசப்பான இனிய பதிவு

Thusha on February 15, 2009 at 1:48 PM said...

"என்னை தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதே. என் காதலை தாங்கும் சக்தி உனக்கு இருக்குமென எனக்குத் தோண்றவில்லை"

அதால தன் விட்டுட்டு போய்யிட்டன்களோ

prakash on February 16, 2009 at 10:53 AM said...

மீள் பதிவு அருமை...

prakash on February 16, 2009 at 10:56 AM said...

//பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?//

ஹேய் நோ நோ பேட் வேர்ட்ஸ் :)))
தயவு செய்து அர்த்தம் சொல்லிடுப்பா. எனக்கு என்னன்னவோ அர்த்தம் எல்லாம் வருது..

கார்க்கி on February 16, 2009 at 12:09 PM said...

/Thusha said...
"காதலர் தின சிறப்பு பதிவெழுதிய பின் படித்துப் பார்த்தால் ஒரே சுடுகாடு வாச னை. அதனால் மீள்பதிவாய நமஹ.. :))))"

வாசிக்கும் போதே எங்கோ பார்த்த ஞபாகம அப்புறமா தன் புரிந்தது

கசப்பான இனிய பதி//

பரவாயில்லையே. நல்ல ஞாபக சக்தி

*************

/ prakash said...
//பூக்களைத்தானே காம்புகள் தாங்கும். உனக்கு மட்டும் ஏன் காம்புகளை பூக்கள் சுமக்கின்றன?//

ஹேய் நோ நோ பேட் வேர்ட்ஸ் :)))
தயவு செய்து அர்த்தம் சொல்லிடுப்பா. எனக்கு என்னன்னவோ அர்த்தம் எல்லாம் வருது.//

ஹிஹிஹி..அதேதான்..

Pattaampoochi on February 17, 2009 at 12:07 PM said...

கார்க்கி அண்ணே....நெசமாவே இந்த பதிவு மனசை தொடர மாதிரி இருக்கு.
காதலோட வலிய அப்படியே கூடாம கொறையாம வார்த்தைகள்ல சொல்லி இருக்கீங்க.
உங்கள கலாய்க்கனும்னுதான் வந்தேன்.ஆனா பதிவ படிச்ச பிறகு அது முடியாது போல இருக்கு.ஒரே பீலிங்க்ஸ் யா.
இந்த கதை நிஜமாக இருப்பின் வருத்தப்படாதீர்கள்.எதிர்பார்த்ததை விட அருமையான காதல் நிரம்பிய வாழ்வு காத்திருக்கலாம்.
தபூ சங்கர் வாசனை ரொம்ப வருதே உங்க கவிதைல.எனக்கும் அவரோட கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.

விஜய் on February 17, 2009 at 3:08 PM said...

half century by me

 

all rights reserved to www.karkibava.com