Oct 7, 2008

காக்டெயில்


   பரிசலின் அவியல், வடகரை வேலனின் கதம்பம், லக்கியின் கூட்டாஞ்சோறு போன்றவற்றை படிக்கும் போது அவையெல்லாம் அவ்வபோது நாம் சொல்ல நினைக்கும் சிறுசிறு விஷயங்களை சொல்ல வசதியாக இருப்பதை கவணித்திருக்கிறேன்.அது போல் நான் எழுதினால் பரிசல் உப்யோகப்படுத்திய " நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்" என்ற தலைப்பை அவரிடம் இருந்து ஒரு விலைக்கு வாங்கி விடுவது என்று முடிவு செய்திருந்தேன். திடிரென நேற்று இரவு(அட, ட்ரெயினல வரும்போதுங்க) காக்டெயில் என்பதும் பொருத்தமாக இருக்கும் எனத் தோண்றியது. பாவம் பரிசலுக்குதான் சில ஆயிரம் நட்டம்.

*************************************************  "சாளரம் என்ற பெயரை மாத்துடானு" என் நண்பன் சொன்னதைக் கேட்டு ஓட்டுப் பொட்டியெல்லாம் தொறந்தா நாலாப்பக்கத்தில் இருந்தும் அம்புகள் பாய்ந்தன. சாளரமே இருக்கட்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. அப்படி சொல்லியப் பிறகும் தேர்தலை மதித்து வாக்கும் அளிக்க அவர்கள் மறக்கவில்லை. கிட்டத்தட்ட் 80வாக்குகள் பதிவாயின. அதிலும் என் பெயர் கார்க்கிக்கு 20 வாக்குகள் பதிவாயிருக்கின்றன. நெஞ்சார்ந்த நன்றி நண்பர்களே.. சத்தியமாய் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

*************************************************

     சென்னை பதிவர் சந்திப்பை பற்றிய‌ விரிவான விவரங்கள் ஏற்கனவே பலரால் தரப்பட்டுள்ளது. பல மூத்த பதிவர்களையும் என்னைப் போன்ற புதிய பதிவர்களையும் நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியே. இருந்தும் இன்னும் கொஞ்சம் தெளிவான திட்டத்தோடு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோண்றியது.(எதையும் ப்ளான் பண்ணி பண்ணனுமோ) அதிலும் ஞானி அவர்கள் வந்தவுடன் அனைவரும் அவரிடம் சென்று கைகுலுக்கி தங்களை அறிமுகம் செய்துக் கொள்வதில் காட்டிய ஆர்வம் ஏனோ எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல் அவரிட‌ம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் "சரியான" பதில் தர இன்னும் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தேன். பாலபாரதி சொன்னது போல் பதிவர் சந்திப்பில் வேற என்ன நடக்கும் மொக்கைதான் என்பது தெரியாமல் வேறு மாதிரி எதிர்பார்த்து போனது என் தவறோ?

*************************************************

     சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிஷா என்னிடம் எப்படி ஒரு நாளைக்கு நாலு பதிவு போடுறப்பா என்றார். இந்தக் கேள்வியை தாமிர உட்பட சிலர் ஏற்கனவே கேட்டிருந்ததால் ஆச்சரியப்படவில்லை. நிஜமாக சொன்னால் என் பிறந்த நாள் அன்று மட்டும்தான் நாலு பதிவு போட்டேன். அதுவும் அன்று முழுவதும் வேலையே செய்யக் கூடாதென்ற முடிவு எடுத்திருந்ததால் வேறு வழியில்லாமல்(?) செய்த ஒன்று அது.சில நாட்கள் இரண்டு பதிவு போட்டதுண்டு என்றாலும் அதற்கு மேல் போட்டதில்லை. இனிமேல் ஒன்றுதான். பயப்பட வேண்டாம்

*************************************************

     என் வலையை என் அண்ணனும் அக்காவும் படிப்பதுண்டு. ஏதோ எழுதுகிறேன் என்று என் அம்மாவிற்கு தெரிந்தாலும் படித்ததில்லை.  ஐரோப்பாவில் உள்ள என் அண்ணனுடன் நாங்கள் வீட்டில் இல்லாத போது சாட்டிங் செய்ய கற்றுக் கொண்டார். ஜிடாக்கில் என் பெயருக்கு நேராக www.iamkarki.blogspot.com என்று இருப்பதை பார்த்து அதை கிளிக்கி படித்திருகிறார். என் நேரம், அன்று நான் எழுதியிருந்தது "டக்கீலாவும் ஷகீலாவும்‍ ஒரு ஆய்வுக் கட்டுரை”

33 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on October 7, 2008 at 11:04 AM said...

மீ த ஃபஸ்ட்..

Ŝ₤Ω..™ on October 7, 2008 at 11:05 AM said...

என்ன தல, மாட்டிகிட்டீங்களா??

கார்க்கி on October 7, 2008 at 11:13 AM said...

வாங்க சென்..

ஆமாம் :((((

Bleachingpowder on October 7, 2008 at 11:14 AM said...

// என் பெயருக்கு நேராக www.iamkarki.blogspot.com என்று இருப்பதை பார்த்து அதை கிளிக்கி படித்திருகிறார். என் நேரம், அன்று நான் எழுதியிருந்தது "டக்கீலாவும் ஷகீலாவும்‍ ஒரு ஆய்வுக் கட்டுரை”//

இது பரவாயில்லை கார்க்கி, உங்க டி.ராஜேந்தர் கவிதையை படிச்சா,computerரை நாலா ஒடச்சு அடுப்புல போட்டுவாங்க

narsim on October 7, 2008 at 11:19 AM said...

கார்க்கி முடிவு பஞ்ச் சூப்பர்..
நர்சிம்

கார்க்கி on October 7, 2008 at 11:24 AM said...

@ப்ளீச்சிங்,

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்படியா?

@ ந‌ர்சிம்,

ஆமாம் சகா.. எனக்கு ப‌ன்ச்தான் அது..

விஜய் ஆனந்த் on October 7, 2008 at 11:59 AM said...

:-)))...

காக்டெயில்ல கடைசி ஷாட் டகீலாவா???

அடி ஒண்ணும் படலியே???

பரிசல்காரன் on October 7, 2008 at 12:00 PM said...

நல்லாயிருக்கு.

ஆனா ஒரு மேட்டர். போன வாரம் நான் காக்டெய்ல் வித் க்ருஷ்ணா-ன்னு ஒண்ணு எழுதியிருந்தேன். அன்னைக்கே வால்பையன் என்னைக் கூப்ட்டு காக்டெய்ல்-ன்னு நான் எழுதப் போறேன்னார். (ஆனா என் பதிவை அவர் பார்க்கல!!)

முந்திகிட்டீங்க!!

புதுகை.அப்துல்லா on October 7, 2008 at 12:10 PM said...

ஏ ஃபார் ஆப்பிள் தொடர்ல நான் சைட் அடிச்ச பொண்ணுங்க பேரை எழுதி இருந்தேன். அன்றைக்குத்தான் எங்க அப்பா படிச்சாரு. படிச்சுட்டு அம்மாட்ட சொன்னாராம்..."ரொம்ப நல்ல பய!என்னயவிட லிஸ்டு கம்மியா இருக்கு"

கார்க்கி on October 7, 2008 at 12:22 PM said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

காக்டெயில்ல கடைசி ஷாட் டகீலாவா???
//
இப்படியா சபைல கேட்கிறது? போங்க சகா..

கார்க்கி on October 7, 2008 at 12:25 PM said...

@பரிசல்,

ஆஹா.. அப்படியா??????? வாலு என்ன சொல்ல்ப் போறாரோ?

@அப்துல்லா,

என்னால எழுத முடியாது சகா.. ஏன்னா நான் சைட் அடிக்கிற பொண்ணுங்க கிட்ட பேரு கேட்கிற பழக்கமில்ல.. அப்புறம் எத்தனை பேரு ஞாபகம் வைக்கிற‌து..?

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Balachander said...

http://www.karkibava.com/
congrats dear...

Balachander said...

"காக்டெயில்" supper...

"காக்டெயில் of Karki" how is it.

கார்க்கி on October 7, 2008 at 2:48 PM said...

hi balachader,

i got u..

Anonymous said...

அண்ணா படிச்சாரா? உங்களுக்க்கு நேரம் சரியில்லை..வேற என்னத்த சொல்ல //கிகிகிகி

கார்க்கி on October 7, 2008 at 3:18 PM said...

அவர் படிப்பாரு.. ஆனா எதுவும் சொல்ல மாட்டாரு.. பின்னூட்டமும் போட மாட்டாரு..

sridhar said...

சூப்பரப்பூ.

வால்பையன் on October 7, 2008 at 5:51 PM said...

//காக்டெயில் என்பதும் பொருத்தமாக இருக்கும் எனத் தோண்றியது.//

நம்மை போன்ற குடிமகன்களுக்கு அது தானே சிறந்த தலைப்பு

வால்பையன் on October 7, 2008 at 5:52 PM said...

//சாளரமே இருக்கட்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. //

அப்பவே சொல்லியாச்சு, எந்த பெயரில் இருந்தாலும் மொக்கை, மொக்கை தானே

வால்பையன் on October 7, 2008 at 5:53 PM said...

//அதிலும் என் பெயர் கார்க்கிக்கு 20 வாக்குகள் பதிவாயிருக்கின்றன.//

முதல் வாக்கு என்னுடையது மறந்து விட வேண்டாம்

வால்பையன் on October 7, 2008 at 5:54 PM said...

//அதிலும் ஞானி அவர்கள் //

அநேகர் செய்யும் தவறு
அவரது பெயர் ஞாநி
இந்த ஞானி கோவையில் இருக்கிறார்

வால்பையன் on October 7, 2008 at 5:55 PM said...

//பதிவர் சந்திப்பில் வேற என்ன நடக்கும் மொக்கைதான் என்பது தெரியாமல் வேறு மாதிரி எதிர்பார்த்து போனது என் தவறோ?//

ஈரோடாக இருந்தால் கண்டிப்பாக நடப்பது வேறு தான்

வால்பையன் on October 7, 2008 at 6:04 PM said...

//எப்படி ஒரு நாளைக்கு நாலு பதிவு போடுறப்பா என்றார்.//

நாலு பெக்கு போட்டா தப்பா,
நாலு பேரு நாலு வாட்டி நாலு பெக்கு போட்டா தப்பா

தாமிரா on October 7, 2008 at 6:05 PM said...

காக்டெய்ல்தானே, இன்னும் ரெண்டு ரவுண்டு ஊத்தியிருக்கலாமே.!

வால்பையன் on October 7, 2008 at 6:06 PM said...

//என் பிறந்த நாள் அன்று மட்டும்தான் நாலு பதிவு போட்டேன்.//

எத்தனை பெக்கு போட்டிங்க அதையும் சொல்லுங்க

வால்பையன் on October 7, 2008 at 6:07 PM said...

//என் வலையை என் அண்ணனும் அக்காவும் படிப்பதுண்டு. //

ஏன் அவர்களுக்கு இந்த தண்டனை

வால்பையன் on October 7, 2008 at 6:08 PM said...

//அன்னைக்கே வால்பையன் என்னைக் கூப்ட்டு காக்டெய்ல்-ன்னு நான் எழுதப் போறேன்னார். (ஆனா என் பதிவை அவர் பார்க்கல!!)
முந்திகிட்டீங்க!!//

படைக்கு பிந்து
பாருக்கு முந்துன்னு
பெரியவங்க சொல்லிருக்காங்க

வால்பையன் on October 7, 2008 at 6:09 PM said...

//படிச்சுட்டு அம்மாட்ட சொன்னாராம்..."ரொம்ப நல்ல பய!என்னயவிட லிஸ்டு கம்மியா இருக்கு"//

அப்போ நீங்க எனக்கு அனுப்பிய லிஸ்ட அவரு பாக்கலையா,
எனக்கு படிக்கவே ரெண்டு நாலு ஆச்சே

வால்பையன் on October 7, 2008 at 6:10 PM said...

30

கார்க்கி on October 7, 2008 at 6:25 PM said...

வாங்க வால்பையன்.. காலைல இருந்து காணோமேனு பார்த்தேன்..

வாங்க‌ தாமிரா..

Karthik on October 10, 2008 at 3:16 PM said...

மைன்ட்ல வெச்சுக்கிறேன்.
:)

கார்க்கி on October 10, 2008 at 3:28 PM said...

@கார்த்திக்,

எத மைன்ட்ல வச்சிகிறா? ஷகீலாவையா?

 

all rights reserved to www.karkibava.com