Aug 8, 2008

இதற்கு பேரும் காதல்...


என் சமகால தோழர்களே,

மன்னித்து விடுங்கள்...இவை எதுவுமே கவிதைகள் அல்ல..ஒரு அப்பழுக்கற்ற ஆத்மார்த்தமான உறவின் அந்திமகால நிகழ்வை அதன் பரிபூரண முறிவுக்கு பின் பதிவு செய்யும் முயற்சி அவ்வளவே. இதை எந்த இடையூறுமின்றி சாத்திய படுத்தியமைக்கு என் தேவதை வாழும் திசை நோக்கி நன்றி கலந்த புன்னகையை காற்றின் கைகளில் கொடுத்தனுப்புகிறேன். உங்களை போலவே எங்களுக்கும் எங்கள் இடையே இருந்த உறவின் சரியான பெயர் தெரியவில்லை. தோழியாகவோ தாயாகவோ காதலியாகவோ என்னுள் அவள் விருப்பப்படி உலவி கொண்டுஇருக்கிறாள்.என் காதலை எழுத்துக்களாகவும் அவள் காதலை எண்ணங்களாகவும் கொண்டு எங்கள் காதலை சொல்ல போகிறேன்.

காற்றிற்கு பதிலாக

காதலை சுவாசிக்கும்

காதலர்கள் அனைவருக்கும்

காணிக்கை....

கார்க்கி.

---------------------------------------------------------------

மெல்ல கலைகிறது...
ஆன்ம வெளியெங்கும்
வியாபித்திருந்த என்
ஆதர்ச பிம்பம்
மெல்ல கலைகிறது...

---------------------------------------------------------------

எந்த குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?

---------------------------------------------------------------

விழிஎட்டும் தூரம் வரை
இலக்குகள் அற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னை தனியே நடக்க
விட்டு கைஅசைப்பவளே!!
உற்று பார்..
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம் . ..

---------------------------------------------------------------

எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை..

---------------------------------------------------------------

என் வாழ்க்கை குறித்த
என் அத்துனை
சந்தேககளுக்கும்
ஒட்டுமொத்தமாய் கிடைத்த
ஒரே பதில்
" நீ " !!!

---------------------------------------------------------------

ஓர்
மூங்கிலிருந்து வெளியாகும்
காற்று இசையாவதை போல்
என்னிலிருந்து
வெளிப்படும் நீ
கவிதையாகிறாய்...

---------------------------------------------------------------

நீ யொருத்தி மட்டும் தான்

என்வேரில் அமிலம் ஊற்றி

கிளையில் பூமலர செய்யும்

அதிசய கலை அறிந்தவள் ..

---------------------------------------------------------------

பி.கு: மறக்காம தமிழ்மண வோட்டு ஒன்னு குத்திடுங்க. ரொம்ப முக்கியம். என்னனு அடுத்த வாரம் சொல்கிறேன்.

121 கருத்துக்குத்து:

Ŝ₤Ω..™ on October 6, 2008 at 1:51 PM said...

***
என் வாழ்க்கை குறித்த
என் அத்துனை
சந்தேககளுக்கும்
ஒட்டுமொத்தமாய் கிடைத்த
ஒரே பதில்
" நீ " !!!
***

அருமையான அனுபவ வரிகள்..
வாழ்த்துக்கள்..

rapp on October 6, 2008 at 2:12 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னை இப்படி முந்திட்டீங்களே Ŝ₤Ω :(:(:(

rapp on October 6, 2008 at 2:13 PM said...

ஓகே, இந்த இடத்துல எல்லாம் நான் சுத்தறத பார்த்தா கண்டதும் சுட உத்தரவு போட்டிருக்காங்க(என் கவுஜ படிச்ச நல்ல மனசுக்காரங்கதான்), அதால நான் அப்பீட்டாகுரேன் :):):)

ஜோசப் பால்ராஜ் on October 6, 2008 at 2:30 PM said...

//நீ யொருத்தி மட்டும் தான்

என்வேரில் அமிலம் ஊற்றி

கிளையில் பூமலர செய்யும்

அதிசய கலை அறிந்தவள் ..//

நெம்ப அருமையான வரி தோழர், கலக்குறீங்க.

கார்க்கி on October 6, 2008 at 2:32 PM said...

//நெம்ப அருமையான வரி தோழர், கலக்குறீங்க/

கோவைத்தமிழா? நன்றி சகா..

கார்க்கி on October 6, 2008 at 2:33 PM said...

//அருமையான அனுபவ வரிகள்..
வாழ்த்துக்கள்..//

நன்றி சென்..


நன்றி ராப்..

நான் மட்டும் on October 6, 2008 at 2:40 PM said...

GREAT .......NICE LINES

நானும் ஒருவன் on October 6, 2008 at 5:47 PM said...

ம்ம்.தனித்தனியா போட்டத மொத்தமா போட்டியா...

விஜய் ஆனந்த் on October 6, 2008 at 9:13 PM said...

வாவ்!!!....சகா...கலக்கல்!!!

பலமான அனுபவம் போல!!!

கார்க்கி on October 7, 2008 at 10:40 AM said...

@ நான் மட்டும்,

நன்றி சகா..

@ நானும் ஒருவன்,

ஆமாம்..

@விஜய்,

ஹிஹிஹிஹி

Rajiv on October 7, 2008 at 1:23 PM said...

nice boss..........

கார்க்கி on October 7, 2008 at 1:31 PM said...

@ ராஜீவ்
நன்றி நண்பரே..

narsim on October 7, 2008 at 2:50 PM said...

//ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?//

நல்ல வரிகள்..

நர்சிம்

கார்க்கி on October 7, 2008 at 3:16 PM said...

நன்றி நர்சிம்

ஜி on October 30, 2008 at 12:56 AM said...

kavithaigal nandru.. innum neraya ezuthunga... :))

கார்க்கி on December 11, 2008 at 8:59 AM said...

சில முக்கியமான் காரணங்களால் இந்த மீள்பதிவு.

கும்க்கி on December 11, 2008 at 9:06 AM said...

வீட்ல அம்மா அவ்வப்போது ப்லோக் படிக்கறதா சொன்னதா கியாபகம்.....

கும்க்கி on December 11, 2008 at 9:08 AM said...

karuna4321@gmail.com

கும்க்கி on December 11, 2008 at 9:08 AM said...

மீள் பதிவா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

PoornimaSaran on December 11, 2008 at 9:11 AM said...

//என் வாழ்க்கை குறித்த
என் அத்துனை
சந்தேககளுக்கும்
ஒட்டுமொத்தமாய் கிடைத்த
ஒரே பதில்
" நீ " !!!

//

அண்ணா கலக்குரீங்கோ .. அந்த "நீ" யாருன்னு சொன்ன இன்னும் நல்லா இருக்குமே!!!

PoornimaSaran on December 11, 2008 at 9:13 AM said...

//எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை..

//

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))

PoornimaSaran on December 11, 2008 at 9:16 AM said...

//விழிஎட்டும் தூரம் வரை
இலக்குகள் அற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னை தனியே நடக்க
விட்டு கைஅசைப்பவளே!!
உற்று பார்..
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம் //

அவங்க கையில கண்ணாடி இருந்திருக்கும் போல!!!!!!!!!

PoornimaSaran on December 11, 2008 at 9:24 AM said...

//காற்றிற்கு பதிலாக

காதலை சுவாசிக்கும்

காதலர்கள் அனைவருக்கும்

காணிக்கை....

கார்க்கி.

//

(5)கா கா கா கா கா..
சரியா போட்டு இருக்கேனா???

கார்க்கி on December 11, 2008 at 9:41 AM said...

/கும்க்கி said...
வீட்ல அம்மா அவ்வப்போது ப்லோக் படிக்கறதா சொன்னதா கியாபகம்//

அவங்களுக்கு தெரியும் தல.

****************************

// PoornimaSaran said...
//என் வாழ்க்கை குறித்த
என் அத்துனை
சந்தேககளுக்கும்
ஒட்டுமொத்தமாய் கிடைத்த
ஒரே பதில்
" நீ " !!!

//

அண்ணா கலக்குரீங்கோ ..!!//

நன்றி..

*************

கும்க்கி அண்ணனோ பூரிணிமாவோ யாரோ ஒருத்தர்தான் வோட்டு போட்டு இருக்கிங்க. இன்னொருத்தர் போடனும்

அன்புடன் அருணா on December 11, 2008 at 9:45 AM said...

//குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?//

வார்த்தைப் பிரயோகம் நன்றாக இருக்கிறது.
அன்புடன் அருணா

விஜய் ஆனந்த் on December 11, 2008 at 9:50 AM said...

// கார்க்கி said...
சில முக்கியமான் காரணங்களால் இந்த மீள்பதிவு. //

காரணங்களா??? ஒய் பன்மை???

ஸ்ரீமதி on December 11, 2008 at 9:57 AM said...

//எந்த குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?//

ம்ம்ம் தெரிந்துமே தொலைகிறோம்.. :((

ஸ்ரீமதி on December 11, 2008 at 9:58 AM said...

//விழிஎட்டும் தூரம் வரை
இலக்குகள் அற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னை தனியே நடக்க
விட்டு கைஅசைப்பவளே!!
உற்று பார்..
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம் //

அழகு :)

ஸ்ரீமதி on December 11, 2008 at 9:58 AM said...

//எனக்கென மட்டும் எப்போதும் வைத்திருக்கிறாய் நீ பிரத்யேகமாய் ஓர் புன்னகையை... நானல்லாத யார்மீதும் பிரயோகிப்பதில்லை அந்த பிரம்மாஸ்திரத்தை.. //

ம்ம்ம்ம்ம் :)))))))

ஸ்ரீமதி on December 11, 2008 at 9:59 AM said...

//நீ யொருத்தி மட்டும் தான் என்வேரில் அமிலம் ஊற்றி கிளையில் பூமலர செய்யும் அதிசய கலை அறிந்தவள் .. //

ரொம்ப அழகு :))

prakash on December 11, 2008 at 10:14 AM said...

//ஒரு அப்பழுக்கற்ற ஆத்மார்த்தமான உறவின் அந்திமகால நிகழ்வை அதன் பரிபூரண முறிவுக்கு பின் பதிவு செய்யும் முயற்சி அவ்வளவே.//

பின்நவீனத்துவ எழுத்தாளர் கார்க்கி வாழ்க :))

கும்க்கி on December 11, 2008 at 10:17 AM said...

ஸ்ரீமதி said...
//எந்த குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?//

ம்ம்ம் தெரிந்துமே தொலைகிறோம்.. :((

அனுபவஸ்தங்க ... சொல்றாங்க...

கேட்டுகிறவேண்டியதுதான்.

கும்க்கி on December 11, 2008 at 10:21 AM said...

ப்ரகாஷ்...எங்க கோஷ்டிய காணோம்..?

prakash on December 11, 2008 at 10:30 AM said...

//என்வேரில் அமிலம் ஊற்றி
கிளையில் பூமலர செய்யும்
அதிசய கலை அறிந்தவள் ..//

இது சூப்பர்...

prakash on December 11, 2008 at 10:33 AM said...

வணக்கம் கும்கி :))

என்னன்னு தெரியல. கொஞ்சநாளா யாரையும் காணோம்.
நானும் ரொம்ப நேரம் கும்மியடிக்க முடியல..

prakash on December 11, 2008 at 10:38 AM said...

வோட்டு போட்டுட்டேன் கார்க்கி..

மணிகண்டன் said...

கவிதை மிகவும் அருமை கார்க்கி.. உங்கள் வலைப்பக்கத்தின் வழக்கமான வாடிக்கையாளனாகினும் உங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம் இது...

prakash on December 11, 2008 at 10:43 AM said...

//மெல்ல கலைகிறது...
ஆன்ம வெளியெங்கும்
வியாபித்திருந்த என்
ஆதர்ச பிம்பம்
மெல்ல கலைகிறது...//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .....

ஒரு முடிவோட இறங்கிட்ட போல :))

மின்னல் on December 11, 2008 at 10:47 AM said...

கார்க்கி சில‌ ச‌ந்தேக‌ங்க‌ள்.....

உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம்

ஏன் அவ‌ங்கிட்ட‌ கை க‌ண்ணாடி த‌ந்திட்டு வந்தீங்க‌ளா கிப்டா?

பிரத்யேகமாய் ஓர்
புன்னகையை...
நானல்லாத யார்மீதும்
பிரயோகிப்பதில்லை அந்த

ஓஹோ நீங்க‌ ஸ்மைல் பிளீஸ்ன்னு அடிக்க‌டி சொல்வீங்க‌ளோ. போட்டுக்ராபி உங்க‌ளுக்கு ஹாபியா?

ஒரே பதில்
" நீ " !!!

உங்க‌ டைவுட்ஸ் அவ்வள‌வு கொஞ்சூண்டுங்க‌ளா?

நீ யொருத்தி மட்டும் தான்
என்வேரில் அமிலம் ஊற்றி
கிளையில் பூமலர செய்யும்
அதிசய கலை அறிந்தவள் ..

ரசாவாத‌ம் ம்ம்ம்ம்ம்

ந‌ல்லா இருக்குங்க‌ ப‌திவு. சும்மா கொஞ்ச‌ம் மொக்கை போட்டேன் த‌ப்பா நினைச்சிகாதீங்க‌

கார்க்கி on December 11, 2008 at 10:53 AM said...

/வார்த்தைப் பிரயோகம் நன்றாக இருக்கிறது.
அன்புடன் அருணா//

நன்று அருணா..

*********************
/விஜய் ஆனந்த் said...
// கார்க்கி said...
சில முக்கியமான் காரணங்களால் இந்த மீள்பதிவு. //

காரணங்களா??? ஒய் பன்மை???//

சொல்ரேன் சகா..அடுத்த வாரம்

**************

@ஸ்ரீமதி,

நன்றி..

***********
/பின்நவீனத்துவ எழுத்தாளர் கார்க்கி வாழ்க :))//

பிரகாஷ் அண்னே, பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாமே!!

கும்க்கி on December 11, 2008 at 10:57 AM said...

பின்நவீனத்துவ எழுத்தாளர் கார்க்கி வாழ்க :))//

பிரகாஷ் அண்னே, பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாமே!!

ஹி..ஹி...

கார்க்கி on December 11, 2008 at 10:57 AM said...

/கும்க்கி said...
ப்ரகாஷ்...எங்க கோஷ்டிய காணோம்..//

/prakash said...
வணக்கம் கும்கி :))

என்னன்னு தெரியல. கொஞ்சநாளா யாரையும் காணோம்.
நானும் ரொம்ப நேரம் கும்மியடிக்க முடியல..//


அருணுக்கு ஆணி அதிகம்னு சொன்னாரு. நானும் ஒருவன் டேட்டா கார்டு புட்டுக்குச்சு.ஸ்ரீமதி , என்ன ஆச்சுனு தெரியல‌

//prakash said...
வோட்டு போட்டுட்டேன் கார்க்கி.//

நன்றி :))))

******************************************
/மணிகண்டன் said...
கவிதை மிகவும் அருமை கார்க்கி.. உங்கள் வலைப்பக்கத்தின் வழக்கமான வாடிக்கையாளனாகினும் உங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம் இது//

ரொம்ப நன்றி மணிகண்டன். அடிக்கடி பின்னூட்டம் இடுங்கள்.

*********************

//prakash said...
//மெல்ல கலைகிறது...
ஆன்ம வெளியெங்கும்
வியாபித்திருந்த என்
ஆதர்ச பிம்பம்
மெல்ல கலைகிறது...//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .....

ஒரு முடிவோட இறங்கிட்ட போல //

ஹிஹிஹிஹி..

அருண் on December 11, 2008 at 10:57 AM said...

கார் கீ, சூப்பர் அப்பு சூப்பர்.

கார்க்கி on December 11, 2008 at 10:59 AM said...

//ந‌ல்லா இருக்குங்க‌ ப‌திவு. சும்மா கொஞ்ச‌ம் மொக்கை போட்டேன் த‌ப்பா நினைச்சிகாதீங்க//

நன்றி மின்னல். நல்லாவே மொக்கை போடறீங்க..

********************

/கும்க்கி said...
பின்நவீனத்துவ எழுத்தாளர் கார்க்கி வாழ்க :))//

பிரகாஷ் அண்னே, பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாமே!!

ஹி..ஹி.//

இந்த பூனைக்கு மணி கட்டலாம்னு பார்த்தா முடியலையே.. சீக்கிரம் எழுந்துங மொத பதிவ‌

****************************

//ஜி said...
kavithaigal nandru.. innum neraya ezuthunga... :))//

நன்றி ஜி

அருண் on December 11, 2008 at 11:10 AM said...

// கார்க்கி said...
சில முக்கியமான் காரணங்களால் இந்த மீள்பதிவு.//

ஏதாவது பதிவுலக அரசியல் நடக்குதா?
என்ன மேட்டர் பாஸ்?

prakash on December 11, 2008 at 11:15 AM said...

//பின்நவீனத்துவ எழுத்தாளர் கார்க்கி வாழ்க//
பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாமே!!//

இதில் எது ஆபாச வார்த்தை?

பின்நவினத்துவம்?
எழுத்தாளர்?
கார்க்கி?
வாழ்க?

prakash on December 11, 2008 at 11:16 AM said...

//ஏதாவது பதிவுலக அரசியல் நடக்குதா?
என்ன மேட்டர் பாஸ்?//

அதை பத்தியெல்லாம் நமக்கென்ன அருண்
கும்மிக்கு வரீங்களா :))

அருண் on December 11, 2008 at 11:17 AM said...

//இதில் எது ஆபாச வார்த்தை?

பின்நவினத்துவம்?
எழுத்தாளர்?
கார்க்கி?
வாழ்க?//

prakash?

அருண் on December 11, 2008 at 11:17 AM said...

50

அருண் on December 11, 2008 at 11:17 AM said...

50?

அருண் on December 11, 2008 at 11:18 AM said...

50 அடிச்சாச்சு..

அருண் on December 11, 2008 at 11:19 AM said...

//
அதை பத்தியெல்லாம் நமக்கென்ன அருண்
கும்மிக்கு வரீங்களா :))//

வாங்க ப்ரகாஷ்.

prakash on December 11, 2008 at 11:35 AM said...

prakash?

செல்லாது செல்லாது...

prakash on December 11, 2008 at 11:37 AM said...

என்ன அருண் கார்க்கி கிட்ட ரொம்ப ஆணி ன்னு சொன்னிங்களாமே பொய்தானே?

Sundar on December 11, 2008 at 12:04 PM said...

//
நீ யொருத்தி மட்டும் தான்

என்வேரில் அமிலம் ஊற்றி

கிளையில் பூமலர செய்யும்

அதிசய கலை அறிந்தவள் ..//

சூப்பர்!

Chuttiarun on December 11, 2008 at 12:49 PM said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

தராசு on December 11, 2008 at 1:05 PM said...

அண்ணா, நீங்க இன்னாதான் நெனச்சுகுனிக்குறீங்கொ,

இத்தினி நாளா எங்க வெச்சுருந்தீங்கோ இந்த ஐட்டத்தையெல்லாம்.

நெறைய எழுதுங்கொ, கலக்கலாக்குது

அதிரை ஜமால் on December 11, 2008 at 1:23 PM said...

\\எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை..\\

நல்லாயிருக்கு.

அப்புறம் தமிழ் மனத்துல் ”ஓட்டியாச்சி”

narsim on December 11, 2008 at 1:38 PM said...

சகா மீள்பதிவா?? அந்த சுடுமணல் மேட்டர் ஞாபகம் இருக்குறதால கேட்டேன்.. அற்புத வரிகள் அவை!

ஸ்ரீமதி on December 11, 2008 at 1:56 PM said...

//கும்க்கி said...
ஸ்ரீமதி said...
//எந்த குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?//

ம்ம்ம் தெரிந்துமே தொலைகிறோம்.. :((

அனுபவஸ்தங்க ... சொல்றாங்க...

கேட்டுகிறவேண்டியதுதான்.//

அச்சச்சோ அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? :))

ஸ்ரீமதி on December 11, 2008 at 1:56 PM said...

ஹை நான் தான் 60 :):)

கார்க்கி on December 11, 2008 at 2:02 PM said...

/
ஏதாவது பதிவுலக அரசியல் நடக்குதா?
என்ன மேட்டர் பாஸ்//

அதெல்லாம் ஒன்னும் இல்ல சகா..

***********************

//Sundar said...

சூப்பர்//

நன்றி சுந்தர்

************

// தராசு said...
அண்ணா, நீங்க இன்னாதான் நெனச்சுகுனிக்குறீங்கொ,

இத்தினி நாளா எங்க வெச்சுருந்தீங்கோ இந்த ஐட்டத்தையெல்லாம்//

நன்றி தராசு.இவையெல்லாம் பழையவைதான். மீள்பதிவு

*****************

//அதிரை ஜமால் said...

நல்லாயிருக்கு.

அப்புறம் தமிழ் மனத்துல் ”ஓட்டியாச்//

நன்றி ஜமால்.
*****************

// narsim said...
சகா மீள்பதிவா?? அந்த சுடுமணல் மேட்டர் ஞாபகம் இருக்குறதால கேட்டேன்.. அற்புத வரிகள் அவை!//

ஆமாம் தல.ஞாபகம் இருக்கா???

கார்க்கி on December 11, 2008 at 2:03 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 60//

அப்படியா? நான் கூட ஒரு 35 40 வயசுதான் இருக்கும்னு நினைச்சேன்

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:13 PM said...

// கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 60//

அப்படியா? நான் கூட ஒரு 35 40 வயசுதான் இருக்கும்னு நினைச்சேன்//

நான் உங்க கூட டூக்கா.. :((

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:14 PM said...

ஹை நான் தான் 65 :):)

prakash on December 11, 2008 at 2:29 PM said...

இவ்விட யாரவது உண்டோ ?

prakash on December 11, 2008 at 2:30 PM said...

கும்மி அடிக்க?

prakash on December 11, 2008 at 2:37 PM said...

நான் உங்க கூட டூக்கா.. :((

அப்படின்னா?

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:41 PM said...

//prakash said...
நான் உங்க கூட டூக்கா.. :((

அப்படின்னா?//

பேசமாட்டேன்.. கோவம்ன்னு அர்த்தம்.. :)

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:42 PM said...

ஹை நான் தான் 70 :):)

prakash on December 11, 2008 at 2:49 PM said...

//பேசமாட்டேன்.. கோவம்ன்னு அர்த்தம்.. :)//

எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க :))

prakash on December 11, 2008 at 2:49 PM said...

ஹை நான் தான் 72 :):)

prakash on December 11, 2008 at 2:49 PM said...

ஹை நான் தான் 73 :):)

prakash on December 11, 2008 at 2:50 PM said...

ஹை நான் தான் 74 :):)

prakash on December 11, 2008 at 2:50 PM said...

ஹை நான் தான் 75 :):)

prakash on December 11, 2008 at 2:50 PM said...

இதுக்கு மேல நீங்க போடுங்க..

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:58 PM said...

//prakash said...
இதுக்கு மேல நீங்க போடுங்க..//

இனிமே இதுக்குமேல போட முடியாதுங்க.. கீழ தான் போட முடியும்..

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:59 PM said...

ஹை நான் தான் 78 :):)

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:59 PM said...

ஹை நான் தான் 79 :):)

ஸ்ரீமதி on December 11, 2008 at 2:59 PM said...

ஹை நான் தான் 80 :):)

prakash on December 11, 2008 at 3:13 PM said...

//இனிமே இதுக்குமேல போட முடியாதுங்க.. கீழ தான் போட முடியும்..//

அடடா.... நான் அப்பீட்டு...

prakash on December 11, 2008 at 3:15 PM said...

//prakash said...
இதுக்கு மேல நீங்க போடுங்க..//

இனிமே இதுக்குமேல போட முடியாதுங்க.. கீழ தான் போட முடியும்..//

கன்னாபின்னான்னு யோசிக்கிறீங்க. எப்படி அதுவா தோணுதா?

Karthik on December 11, 2008 at 3:25 PM said...

வாவ், கலக்கல்ஸ் கார்க்கி.
:)

பி.கு : ஓட்டு போட்டுவிட்டேன்.

Karthik on December 11, 2008 at 3:29 PM said...

//சில முக்கியமான் காரணங்களால் இந்த மீள்பதிவு.

முக்கியமான காரணங்கள்? வாழ்த்துக்கள்.

பழைய போஸ்ட்டையெல்லாம் கிளறி பார்க்கலாம் போலிருக்கே!

அருண் on December 11, 2008 at 3:34 PM said...

யாரவது இருக்கீங்களா?

அருண் on December 11, 2008 at 3:36 PM said...

//prakash said...
என்ன அருண் கார்க்கி கிட்ட ரொம்ப ஆணி ன்னு சொன்னிங்களாமே பொய்தானே?//

உண்மைதான் ப்ரகாஷ். கொஞ்சமா வேல இருக்கு.... :(

prakash on December 11, 2008 at 3:39 PM said...

//யாரவது இருக்கீங்களா?//

உள்ளேன் அய்யா...

prakash on December 11, 2008 at 3:40 PM said...

//உண்மைதான் ப்ரகாஷ். கொஞ்சமா வேல இருக்கு.... :(//

அதனால என்ன? சீக்கிரம் முடிச்சிட்டு வாங்க :))

prakash on December 11, 2008 at 3:43 PM said...

நானும் ஒருவனுக்கு டேட்டா கார்டு ப்ரோப்ளமாம்.

SK என்ன ஆனாருன்னு தெரியல.

அருண் on December 11, 2008 at 3:46 PM said...

// prakash said...

//யாரவது இருக்கீங்களா?//

உள்ளேன் அய்யா...//

100 அடிப்போமா?

அருண் on December 11, 2008 at 3:48 PM said...

//prakash said...
நானும் ஒருவனுக்கு டேட்டா கார்டு ப்ரோப்ளமாம்.//

அவருக்கு ஆபிஸ்ல இண்டர்நெட் இல்லயோ?

prakash on December 11, 2008 at 3:49 PM said...

//100 அடிப்போமா?//

அடிப்போம்

prakash on December 11, 2008 at 3:50 PM said...

//அவருக்கு ஆபிஸ்ல இண்டர்நெட் இல்லயோ?//
அது தெரியல
நானும் ஒருவன் வந்து விளக்கம் சொல்லவும் ...

அருண் on December 11, 2008 at 3:50 PM said...

94

அருண் on December 11, 2008 at 3:51 PM said...

95

அருண் on December 11, 2008 at 3:51 PM said...

96

prakash on December 11, 2008 at 3:51 PM said...

95

prakash on December 11, 2008 at 3:51 PM said...

100

அருண் on December 11, 2008 at 3:51 PM said...

100?

prakash on December 11, 2008 at 3:51 PM said...

100

அருண் on December 11, 2008 at 3:51 PM said...

100

prakash on December 11, 2008 at 3:51 PM said...

நான் முந்திகிட்டேன் அருண்

அருண் on December 11, 2008 at 3:51 PM said...

Congrats Prakash!

prakash on December 11, 2008 at 3:54 PM said...

நீண்ட நாட்களுக்கு பின் 100 அடித்த பிரகாஷ்க்கும் உதவிய அருணுக்கும் நன்றி
-கார்க்கி

prakash on December 11, 2008 at 3:54 PM said...

Thanks Arun

prakash on December 11, 2008 at 3:55 PM said...

அருண் கெளம்பலாமா?

கார்க்கி on December 11, 2008 at 5:57 PM said...

// Karthik said...
வாவ், கலக்கல்ஸ் கார்க்கி.
:)

பி.கு : ஓட்டு போட்டுவிட்டேன்//

நன்றி கார்த்திக்

//பழைய போஸ்ட்டையெல்லாம் கிளறி பார்க்கலாம் போலிருக்கே//

பாரு பாரு

*******************
// prakash said...
நீண்ட நாட்களுக்கு பின் 100 அடித்த பிரகாஷ்க்கும் உதவிய அருணுக்கும் நன்றி
-கார்க்கி//

ரிப்பீட்டேய்

RAMYA on December 11, 2008 at 6:13 PM said...

//
ஓர்
மூங்கிலிருந்து வெளியாகும்
காற்று இசையாவதை போல்
என்னிலிருந்து
வெளிப்படும் நீ
கவிதையாகிறாய்...
//

ச்ச்ச்சே!!
அருமைங்க நீங்க எங்கேயோ போய்ட்டீங்க
நல்லா இருக்கு கார்க்கி

ஒவ்வொரு வரிகளும்
நாடி நரம்பை மீட்டி
செல்லும் இதை
உங்களவள் படித்தால்...

கார்க்கி on December 11, 2008 at 6:18 PM said...

//
ஒவ்வொரு வரிகளும்
நாடி நரம்பை மீட்டி
செல்லும் இதை
உங்களவள் படித்தால்//

அதுக்காகத்தான் மீள்பதிவே.படிப்பா.. ரொம்ப நன்றி ரம்யா

Anonymous said...

//
ஒவ்வொரு வரிகளும்
நாடி நரம்பை மீட்டி
செல்லும் இதை
உங்களவள் படித்தால்//

அதுக்காகத்தான் மீள்பதிவே.படிப்பா.. ரொம்ப நன்றி ரம்யா
அப்ப இருக்கா சொல்லவே இல்லை >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Anonymous said...

//எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை..//


ரொம்ப ரசிச்சேன் கார்க்கி...

All the best

;))


Kathir.

Anonymous said...

கார்க்கி,

இது மீள் பதிவா??


Kathir.

செந்தழல் ரவி on December 12, 2008 at 12:04 AM said...

கம்பேனி கலக்கது சகா !!!!

Kalai M on December 12, 2008 at 12:11 AM said...

one of urs excellent kavithai

srinithi said...

//கார்க்கி said...
//
ஒவ்வொரு வரிகளும்
நாடி நரம்பை மீட்டி
செல்லும் இதை
உங்களவள் படித்தால்//

அதுக்காகத்தான் மீள்பதிவே.படிப்பா.. //


இத சொல்லவே இல்லையே.. :)

கார்க்கி on December 12, 2008 at 12:20 PM said...

// Anonymous said...
கார்க்கி,

இது மீள் பதிவா??


Kaதிர்//

ஆமாம். வருகைக்கி நன்றி கதிர்

***********************

//செந்தழல் ரவி said...
கம்பேனி கலக்கது சகா !!//

எத சொல்றீங்க தல? சுவீடன் கம்பெனியவா?

**********************

// Kalai M said...
one of urs excellent kavஇதை//

நன்றி கலை..

****************
//srinithi said...
//கார்க்கி said...
//
ஒவ்வொரு வரிகளும்
நாடி நரம்பை மீட்டி
செல்லும் இதை
உங்களவள் படித்தால்//

அதுக்காகத்தான் மீள்பதிவே.படிப்பா.. //


இத சொல்லவே இல்லையே//

மீள்பதிவுக்கு மீள்வருகையா?

srinithi said...

//மீள்பதிவுக்கு மீள்வருகையா?//

போட்டதே எனக்காக தானே.. :)

அத்திரி on December 12, 2008 at 3:37 PM said...

//விழிஎட்டும் தூரம் வரை
இலக்குகள் அற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னை தனியே நடக்க
விட்டு கைஅசைப்பவளே!!
உற்று பார்..
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம் //


ம்ம்ம்ம்ம்ம்ம்... நல்லாயிருக்கு

ஆம்மா சக நல்லாத்தானா இருந்தீங்க....எதுக்கு?

தாமிரா on December 12, 2008 at 7:43 PM said...

நல்லாருக்குதுபா.. ஆனா ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்குதே? அடிக்கவராதே.. உன்பதிவுலயே படிச்சாமாதிரி இருக்குதுன்னுதான் சொல்லவர்றேன். ஒண்ணுரண்டு வரிகளை ஏற்கனவே காதல்பதிவுகள்ல பயன்படுத்தியிருக்குறயா.?

தாமிரா on December 12, 2008 at 7:45 PM said...

இப்பதான் பிற பின்னூட்டங்களை பாக்குறேன். ஒத்துண்டியா? இதுவும் மீள்பதிவா? நெனச்சேன்.. சும்மாயிருக்குற நீயே மீள்பதிவ போடுறப்போ.. நான் போடக்குடாதா.? முதல்ல போட்னு வந்து பேசிக்குறேன்.

sinthu on December 13, 2008 at 10:19 PM said...

"உங்களை போலவே எங்களுக்கும் எங்கள் இடையே இருந்த உறவின் சரியான பெயர் தெரியவில்லை."
If u find tell me......................
Ok va?
Sinthu
bangladesh

 

all rights reserved to www.karkibava.com