Oct 3, 2008

மூக்கு கண்ணாடி


      அந்த ஒரு மழைக்கால மாலையில் கடைவீதியில் பார்த்தேன் அவளை. சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக, ஆர்ப்பரிக்கும் கடற்கரை சத்தத்தில் " விதியிருந்தா மறுபடியும் பார்ப்போம்" என்று சொல்லி விடைபெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது எனக்கு. அவள் பேரைக் கேட்டாலே மனம் கணக்கும். நேரில் பார்த்தால்.. விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவு. இந்த சந்திப்பை மறக்க இன்னும் எத்தனைக் காலமோ? அவள்தான் வீட்டிற்கு அழைத்தாள். என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது.

     விடாமல் பேசினாள். அவள் கணவனின் சமீபத்திய பதவி உயர்வு, மாமியாரின் கணிவு, பிள்ளையின் அறிவு என எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெருமைப்பட்டாள். அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை. லேசாக வலித்தது என் சிறு இதயம்.

     சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். தூறல் என்னை நனைத்தது. எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன். திரும்ப அவளின் வீட்டிற்குச் சென்றேன். என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு க‌ண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன். மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது.

26 கருத்துக்குத்து:

தாமிரா on October 3, 2008 at 8:30 PM said...

அய்ய‌ய்யோ.. இவ‌ஞ்சென்டிமென்டு தாங்க‌முடிய‌லியே சாமீ... (ந‌‌ல்லாருக்கு பிர‌த‌ர் க‌ன்டினியூ..)

தாமிரா on October 3, 2008 at 8:31 PM said...

ஹைய்.. மீ த பர்ஸ்ட்டா? மழை வரப்போகுது..

கார்க்கி on October 3, 2008 at 8:36 PM said...

ஒரே மாதிரி எழுதி போரடிக்கிறேனோ? எனக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்... இதுல உள்ளர்த்தம் இருக்கு சகா

வால்பையன் on October 3, 2008 at 8:48 PM said...

//அவள் பேரைக் கேட்டாலே மனம் கணக்கும். நேரில் பார்த்தால்.//

மனம் மணக்கும்

வால்பையன் on October 3, 2008 at 8:49 PM said...

//விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவு.//

பாத்து சகா, ஆஸ்துமா வந்துற போகுது

வால்பையன் on October 3, 2008 at 8:50 PM said...

சகா, எப்படியோ ஆரம்பிச்சாலும் முடிவுல கண்ணுல தண்ணி வர வச்சிர்ரிங்க

வால்பையன் on October 3, 2008 at 8:51 PM said...

காதல் மேலையே ஒரு மரியாதை வருது சகா

கார்க்கி on October 3, 2008 at 9:30 PM said...

//காதல் மேலையே ஒரு மரியாதை வருது சகா//

பெரிய வார்த்தைண்ணே.. ரொம்ப நன்றி.. சகாவும் ஒட்டிக் கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.. எப்படியாவ்து இந்த மாதிரி ஒரு காதல் பதிவு சூடாகி என்னைப் பத்தி எல்லோரும் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்.. நடக்க மாட்டது சகா..

நசரேயன் on October 3, 2008 at 10:04 PM said...

நெஞ்சை தொட்டுடீங்க

Balachander said...

supper continue!

Anonymous said...

நல்ல இருக்கு. பட் ஒரே மாதிர் தொடர்ந்து எழுதாதிங்க ....

Sundar on October 4, 2008 at 12:44 AM said...

//விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவு//
அருமை!

விஜய் ஆனந்த் on October 4, 2008 at 1:10 AM said...

sorry நண்பா...எங்கேயோ படித்த நினைவு....

உள்ளர்த்தம் எனக்கு புரியல...இருந்தாலும்....கலந்து கட்டி அ்டிக்கவும்...(தப்பா நினைக்க மாட்டீங்கங்கற நம்பிக்கையில்....)

அத்திரி on October 4, 2008 at 1:23 AM said...

அருமை.

கார்க்கி on October 4, 2008 at 2:37 AM said...

//நசரேயன் said...
நெஞ்சை தொட்டுடீங்க/

நன்றி நசரேயன்..

//balachander said...
supper contiநுஎ!//

நன்றி பாலசந்தர்..

//sundar said...
//விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவு//
அருமை!

நன்றி சுந்தர்...

கார்க்கி on October 4, 2008 at 2:39 AM said...

//உள்ளர்த்தம் எனக்கு புரியல...இருந்தாலும்....கலந்து கட்டி அ்டிக்கவும்...(தப்பா நினைக்க மாட்டீங்கங்கற நம்பிக்கையில்....)

//

தப்பா நினைக்க ஒன்னுமில்ல விஜய்.. என‌க்கே தெரிந்த்து.. நிச்சயம் மாறிடுவேன் அடுத்த பதிவில்..

@அத்திரி,

நன்றி சகா..

நானும் ஒருவன் on October 4, 2008 at 12:39 PM said...

என்னமோ பண்ணு..

Kalai M on October 4, 2008 at 1:33 PM said...
This comment has been removed by the author.
Kalai M on October 4, 2008 at 8:34 PM said...

Arummai Karki.

Vairamuthu'vin kavithai 'Elaiyil tangiyae tuligal' than ennaku ethai padikum pothu yabagem vantathu.

Nengga antha kavithai'a padichirikingala?

Tamil on October 4, 2008 at 10:20 PM said...

உங்களுக்கு நிஜமாவே காதல் தோல்வியோ ?

rapp on October 6, 2008 at 1:29 PM said...

// அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை.//

super

rapp on October 6, 2008 at 1:30 PM said...

ஆனா கிட்டத்தட்ட இதே மாதிரி எக்கச்சக்கமா படிச்சாச்சு, அதான்! பட் இந்த மேட்டருக்கு எப்பவுமே மவுசு இருக்கு.

கார்க்கி on October 6, 2008 at 1:48 PM said...

ஆமாம் ராப்.. என்ன செய்ய.. எழுதுடானு மனசு ரொம்ப நாளா நச்சரிக்குது..

ஜோசப் பால்ராஜ் on October 6, 2008 at 2:24 PM said...

தோழா, ரொம்ப நல்ல இருக்கு.

கார்க்கி on October 7, 2008 at 10:42 AM said...

நன்றி ஜோசப்

Balaji said...

நல்ல பாருப்பா மூக்கு கண்ணாடியின் மேல் கண்ணிர் துளியா அல்லது மழை துளியா !

 

all rights reserved to www.karkibava.com