Oct 2, 2008

முதல் முத்தம்


 

   முதன்முறை எப்போது..

   ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

    அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு.

      மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

     மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம்  சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரிய்வில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

     மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்று உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடிரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

     உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருனத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சினுங்கினாய்.

      நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

     அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன்.  “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய். நீ சென்ற பின் அமைதியாய்த்தான் இருந்தது ஃப்ரெஞ்சு வீதி. என் மனம்தான் ஏனோ, அதிவேக ரயில் ஒன்று சற்று முன் கடந்த தண்டவாளம் போல் அதிர்ந்து கொண்டே இருந்தது. இன்னமும்தான்.

     இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது..

‘‘குழந்தையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...

சிரிக்கும் குழந்தையை
தேடித்தேடி ரசிக்கிறேன்...

நீதானடி என் தெய்வம்..’’

47 கருத்துக்குத்து:

rapp on October 2, 2008 at 1:24 PM said...

me the first

rapp on October 2, 2008 at 1:27 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்..................இது ஏதோ இலக்கிய பதிவாட்டும் இருக்கு? அப்போ நான் அப்பீட்டாகிறேன்

விஜய் ஆனந்த் on October 2, 2008 at 1:50 PM said...

:-))))...

கலக்கறீங்க!!!! புட்டிக்கதை கார்க்கியா இது???

ஆ.வியின் காதலர் தின புக்குல வரும் தபூ சங்கர் பக்கங்களை படிச்ச ஃபீலிங்!!!!

Hari said...

en varanda muththa kaala ninaivugalai usupeththi vitu vittergal.... ippothu udane muththamida vendume... enna seiyaa

super saaaaaaaaaaaarrrrrrrrr

Anonymous said...

பதிவுலகில் எத்தனையோ படித்திருக்கிறேன். சில சமயம் சிரித்திருக்கிறேன். சில சமயம் தலையை பிய்த்ததுண்டு. முதன் முதலாக இதயத்தை வருடிய பதிவு இது.

Anonymous said...

//ippothu udane muththamida vendume... enna seiyaa //

போய் காஸ் அடுப்ப ஆன் பண்ணி வாய வய்யி

Dravidian on October 2, 2008 at 3:53 PM said...

அருமையான பதிவு, இது கற்பனையா அல்ல சொந்த நிகழ்வுகளா?

Aruppukkottai Baskar on October 2, 2008 at 5:31 PM said...

:-)

Saravana Kumar MSK on October 2, 2008 at 5:55 PM said...

கலக்கீடீங்க.. அருமையா இருந்துச்சு.. கவிதைகளை இடையிடையே சேர்த்ததும் அருமை.

விலேகா on October 2, 2008 at 6:27 PM said...

ஒரு முத்ததிற்காக எத்தின தடவை நீங்களும் கடற்கரைக்கு போய் இருக்கீங்க!!! கன்னத்தில் விழும் குழியின் அழகே தனிதான்.(நான் சொல்றது கிழவியின் குழியை)

தாமிரா on October 2, 2008 at 6:37 PM said...

என் வலைப்பூவின் தலைப்பை லவுட்டியதோட மட்டுமில்லாமல் இலக்கியப்பதிவு மாதிரி ஜல்லியடிச்சிக்கினுருக்கியா? அடுத்து கையில சிக்காமயா போயிருவ.. இருடி..!

Kalai M on October 2, 2008 at 6:41 PM said...

//அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. //

Excellent lines.

தாமிரா on October 2, 2008 at 6:57 PM said...

சாளரம்‍ எவ்வளவு ரசனையான தலைப்பு, அதை விடுத்து 'கலக்கல் சபையாம்' என்ன ரசனைய்யா என்னோடது இதை தேர்தல் வேற வச்சு கேக்குறியா.?

வால்பையன் on October 2, 2008 at 8:46 PM said...

//"வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு.//

அருமையான, ரோமாண்டிசான, கிச்சுகிச்சு மூட்டும் வசனங்கள்

வால்பையன் on October 2, 2008 at 8:47 PM said...

நல்ல பதிவு நண்பரே இதில் கும்மி குத்த மனம் வரவில்லை

வால்பையன் on October 2, 2008 at 8:47 PM said...

முத்த கதைகள் என்ற பெயரில் பெரிய தொடர் எழுதும் அளவுக்கு உங்களின் முத்தங்கள் நீளுகிறதே

ஜோசப் பால்ராஜ் on October 2, 2008 at 9:11 PM said...

உணர்வுப் பூர்வமான பதிவு. வேறு எதுவும் சொல்ல மனசு வரல தோழா.

Balachander said...

good one..!

கார்க்கி on October 2, 2008 at 10:52 PM said...

நன்றி ராப்..

//விஜய் ஆனந்த் said...
:-))))...

கலக்கறீங்க!!!! புட்டிக்கதை கார்க்கியா இது???

ஆ.வியின் காதலர் தின புக்குல வரும் தபூ சங்கர் பக்கங்களை படிச்ச ஃபீலிங்!!!!//

அப்படியா??? எனக்கும் மிகப் பிடித்த கவிஞர் அவர்..

கார்க்கி on October 2, 2008 at 10:53 PM said...

//hari said...
en varanda muththa kaala ninaivugalai usupeththi vitu vittergal.... ippothu udane muththamida vendume... enna seiyaa

super saaaaaaaaaaaarrrrrrrrr//

thanks hari


//anonymous said...
பதிவுலகில் எத்தனையோ படித்திருக்கிறேன். சில சமயம் சிரித்திருக்கிறேன். சில சமயம் தலையை பிய்த்ததுண்டு. முதன் முதலாக இதயத்தை வருடிய பதிவு இது.

//

நன்றி அனானி..

கார்க்கி on October 2, 2008 at 10:55 PM said...

//dravidian said...
அருமையான பதிவு, இது கற்பனையா அல்ல சொந்த நிகழ்வுகளா?
//

நன்றி நண்பரே.. 50 50

கார்க்கி on October 2, 2008 at 10:56 PM said...

நன்றி பாஸ்கர்..

//saravana kumar msk said...
கலக்கீடீங்க.. அருமையா இருந்துச்சு.. கவிதைகளை இடையிடையே சேர்த்ததும் அருமை.

//

நன்றி சரவனன்

நன்றி விவேகா..

கார்க்கி on October 2, 2008 at 10:58 PM said...

//என் வலைப்பூவின் தலைப்பை லவுட்டியதோட மட்டுமில்லாமல் இலக்கியப்பதிவு மாதிரி ஜல்லியடிச்சிக்கினுருக்கியா? அடுத்து கையில சிக்காமயா //

அதுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி சகா.. நல்ல பேரு.. இத விட இந்தப் பதிவுகு வேற எந்த பேர வைக்கிறது.. உங்க பேரையே திருடுறாங்க.. இது தப்பா? :)))))))))

கார்க்கி on October 2, 2008 at 10:59 PM said...

//kalai m said...


Excellent lines.//


thanks kalai

கார்க்கி on October 2, 2008 at 11:00 PM said...

//தாமிரா said...
சாளரம்‍ எவ்வளவு ரசனையான தலைப்பு, அதை விடுத்து 'கலக்கல் சபையாம்' என்ன ரசனைய்யா என்னோடது இதை தேர்தல் வேற வச்சு கேக்குறியா.?//

முடிவெடுத்தாச்சு தல.. சாளரம்தான்..

கார்க்கி on October 2, 2008 at 11:02 PM said...

@வால்பையன்,

//அருமையான, ரோமாண்டிசான, கிச்சுகிச்சு மூட்டும் வசனங்கள்//

நன்றி தல..

//முத்த கதைகள் என்ற பெயரில் பெரிய தொடர் எழுதும் அளவுக்கு உங்களின் முத்தங்கள் நீளுகிறதே//

ஹிஹிஹி..


//நல்ல பதிவு நண்பரே இதில் கும்மி குத்த மனம் வரவில்லை
//

அபப்டியா?

கார்க்கி on October 2, 2008 at 11:08 PM said...

//ஜோசப் பால்ராஜ் said...
உணர்வுப் பூர்வமான பதிவு. வேறு எதுவும் சொல்ல மனசு வரல தோழா.
//

அது போதும் ச்கா...


நன்றி பாலசந்தர்

கடைசி பக்கம் on October 3, 2008 at 7:08 AM said...

:-)))

so identify myself in some area.

sridhar said...

ஏன்டா? நீ திருந்தவே மாட்டியா? நீயும் கஷ்டப்பட்டு மத்த்வங்களையும் கஷ்டபடுத்தி.... போடா போ.. போய் அந்தக் கடல்ல விழுந்து சாவு...

Dambi said...

Karki, It's excellent !

கும்க்கி on October 3, 2008 at 11:07 AM said...

நெனச்சேன் 50:50..
கொஞ்சம் அப்பிடியே டெவலப் பன்னா கோடம்பாக்கத்துல குடியேறிராமில்ல?

கும்க்கி on October 3, 2008 at 11:26 AM said...

தொலை தூரத்துல பைஜாமா குர்த்தாவோட., பைல புத்தகக் கட்டும் ., கைல பேனா கட்டுமா யாரோ வர்ராப்பில தெரியுது........!

கார்க்கி on October 3, 2008 at 9:43 PM said...

நன்றி கடைசிப் பக்கம்..

நன்றி டம்பி

//கும்க்கி said...
நெனச்சேன் 50:50..
கொஞ்சம் அப்பிடியே டெவலப் பன்னா கோடம்பாக்கத்துல //

அண்ணே... அது எல்லாம் ரொம்ப ஒவருண்ணே எனக்கு..

கார்க்கி on October 3, 2008 at 9:45 PM said...

//கும்க்கி said...
தொலை தூரத்துல பைஜாமா குர்த்தாவோட., பைல புத்தகக் கட்டும் ., கைல பேனா கட்டுமா யாரோ வர்ராப்பில தெரியுது........//

கண்ணாடில பார்த்த அப்படித்தான் தெரியும்.. வடிவேலு சொல்றா மாதிரி சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு..

Cherankrish on October 3, 2008 at 11:05 PM said...

very nice..

தமிழ்ப்பறவை on October 3, 2008 at 11:09 PM said...

தல உங்ககிட்ட இப்படியொரு பதிவை எதிர்பார்க்கலை...
கலாய்க்கிறது கார்க்கியோட வேலை மட்டும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.. உங்களையே முத்தத்தால கலாய்ச்சிட்டுப் போயிட்டாங்களே ஒரு உ(மு)த்தமி...
(ச்சும்மா ட்டமாஸ்)...
நல்லா இருந்தது கார்க்கி...
என் ஏரியா பக்கம் வந்துட்டுப் போங்க...முத்தம் பத்தி ஒரு சின்ன எச்சரிக்கைப்பதிவு போட்டிருக்கேன்...
http://thamizhparavai.blogspot.com/2008/10/blog-post.html

கார்க்கி on October 4, 2008 at 2:57 AM said...

நன்றி சென்கிருஷ்..

நன்றி தமிழ்ப்பறவை.உங்கள் பதிவில் பின்னூட்டமும் போட்டாச்சு..

Kalai M on October 4, 2008 at 1:44 PM said...

Kaadhal endra ondrum natpu endra ondrum
Ondru thaane penney nee mutham kodukkum varaikkum

Remember these lines?

Karthik on October 4, 2008 at 4:52 PM said...

"முத்தம்? Is it a Big Deal?" என்று இனி நினைக்க மாட்டேன்.

Really Nice!
:)

கயல்விழி on October 10, 2008 at 9:22 AM said...

:(

மனதின் பாரம் அதிகரித்த மாதிரி இரூக்கிறது

கார்க்கி on October 10, 2008 at 9:26 AM said...

//கயல்விழி said...
:(

மனதின் பாரம் அதிகரித்த மாதிரி இரூக்கிறது
/

வருகைக்கு நன்றி.

நான் மட்டும் on October 10, 2008 at 10:09 AM said...

super bosss..........

என்ன சொல்றதுன்னே தெரியல...ஆனாலும் மனசுல ஏதோ ஒரு feeling...

கார்க்கி on October 10, 2008 at 10:25 AM said...

//நான் மட்டும் said...
super bosss..........

என்ன சொல்றதுன்னே தெரியல...ஆனாலும் மனசுல ஏதோ ஒரு feeling...//

உங்கள் பின்னூட்டங்களை பார்க்கும் போது எனக்கும் நெகிழ்வாஉ இருக்கு நண்பரே.. மிக்க நன்றி..

ரோஜா காதலன் on October 13, 2008 at 5:47 PM said...

அருமையான பதிவு நண்பா !

கார்க்கி on October 13, 2008 at 5:56 PM said...

முதல் வருகைக்கு நன்றி ரோஜா காதலன்..

Arunz on September 30, 2010 at 12:56 PM said...

Really nize. . .

itsmy blog on November 5, 2011 at 4:40 PM said...

ipdikuda neenga ezhuthuvingalaa??

 

all rights reserved to www.karkibava.com