Oct 1, 2008

உலக யுத்தம்


 

    "எதையோ நான் கிறுக்கிட்டு இதுவும் கவிதை என்பேன். அதையும் நீ படித்து விட்டு புரிந்துக் கொள்ள பட்ட சிரமங்கள் எத்துனை அழகு தெரியுமா?

    கடற்கரை சாலையில் நாம் நடை பயின்ற போது வானம் தூறியது. உனக்கு குடை விரித்தாய். தூறல் மழையான போது எனக்குப் பிடித்தாய். இருந்தும் நான் நனைந்தேன், உன் அன்பில்.

     மழையில் நனைந்துக் கொண்டே நாம் ஐஸ்கீரிம் உண்டோம். அதிலென்ன ஆச்சரியம்? அந்தக் குச்சியை உன் தோட்டத்தில் நட்டு வைத்தாயே, அது?

   மழையோடு மழையாக நாமும் பூங்காவிற்கு சென்றோம். எதிர்பாராதவிதமாய் நீ அளித்த முத்தத்திற்கு நாள் முழுவதும் ஒரு ஆனந்த மெளனம் காத்தேன். நீயோ இனிமேல் என்னைப் பேச வைக்காமல் இருப்பதிலே கண்ணாய் இருந்தாய்.

     ஒரு நாள் உன் வீட்டில் விருந்தாளிகள் வந்திருந்தார்கள். நான் அழைத்தபோது ஏதோ ஒரு பரபரப்பில் எடுக்காமல் விட்டுருப்பாய்.

    அடுத்த நாள் நான் குளியலறையில் இருந்த போது நீ அழைத்தாய். அடித்தடித்து ஓய்ந்தது. அன்றே நான் உன்னை அழைத்தபோது பழிக்குப் பழி வாங்குவதாய் நினைத்து துண்டித்தாய்.

     மாலையில் நீ என்னைப் பார்த்த போது தீப்பிடித்த திமிர் என்னைத் திசை திருப்பி விட்டது. அதன் பின் ஆண்டுகள் பல உருண்டு விட்டன.

    இன்று வரை நாம் எந்த வித தொடர்புமின்றி கிடப்பதை நினைக்கும் போது "மனித இனப் பரிணாமத்தில் மிருகம் என்ற ஒன்று கலையப்பட்ட ஒன்றல்ல, கரைக்கப்பட்ட ஒன்று".

27 கருத்துக்குத்து:

Kalai M on October 1, 2008 at 4:02 PM said...

Good. Will b continue?

கார்க்கி on October 1, 2008 at 4:06 PM said...

இது ஒரு புனைவுதான் கலை.. உண்மையல்ல..

Sundar on October 1, 2008 at 4:13 PM said...

தூறலாய் ஆரம்பித்து புயலாய் அடித்து மனசை கனமாக்கிவிட்டீர்கள்!

சுபாஷ் on October 1, 2008 at 4:16 PM said...

அபாரம்
வாழ்த்துக்கள்

நானும் ஒருவன் on October 1, 2008 at 4:34 PM said...

புனைவு? நம்பிட்டோம்.. ஆனா நல்லாயிருக்கு..

Raam on October 1, 2008 at 4:45 PM said...

I lost my first love due to Ego only..

ஞாபகப்படுத்தியமைக்கு கண்டனங்கள்....

ராம்ஜி

Anonymous said...

Ego vaala neenga enna neraya paer lovera tholaichirukanga, but
silar freindsayei tholaikurangalei..........
ithukku enna panrathu?????

Anonymous said...

அருமையான படைப்பு

கார்க்கி on October 1, 2008 at 5:07 PM said...

//Ego vaala neenga enna neraya paer lovera tholaichirukanga, but
silar freindsayei tholaikurangalei..........
ithukku enna panrathu?????/

அது ஈகோவால இல்லைங்க.. நீங்க யாருனு தெரியும்.

கார்க்கி on October 1, 2008 at 5:07 PM said...

@தூயா,

நன்றி.

கார்க்கி on October 1, 2008 at 5:11 PM said...

@சுந்தர்,

வருகைக்கு நன்றி..

@சுபாஷ்,

நன்றி சகா..

@ ரமேஷ்( நானும் ஒருவன்)

தாங்க்ஸ் மச்சி

கார்க்கி on October 1, 2008 at 5:11 PM said...

//raam said...
I lost my first love due to Ego only..

ஞாபகப்படுத்தியமைக்கு கண்டனங்கள்....
//

கண்டனத்திற்கு நன்றி..

வால்பையன் on October 1, 2008 at 5:54 PM said...

//"எதையோ நான் கிறுக்கிட்டு இதுவும் கவிதை என்பேன். அதையும் நீ படித்து விட்டு புரிந்துக் கொள்ள பட்ட சிரமங்கள் எத்துனை அழகு தெரியுமா?//

இதுவே ஒரு கவிதை மாதிரி இருக்கே

வால்பையன் on October 1, 2008 at 5:55 PM said...

//அந்தக் குச்சியை உன் தோட்டத்தில் நட்டு வைத்தாயே, அது? //

அப்புறம் ஐஸ்கிரீம் செடி முளச்சதா

வால்பையன் on October 1, 2008 at 6:00 PM said...

//நீயோ இனிமேல் என்னைப் பேச வைக்காமல் இருப்பதிலே கண்ணாய் இருந்தாய். //

நல்ல ரொமான்ஸ், ஆனா நிஜத்துல யாரும் அப்படி இல்லையே.
வழ வழன்னு அவுங்க பேசிகிட்டே நம்மள பேச விடாம பண்றாங்க

வால்பையன் on October 1, 2008 at 6:01 PM said...

//இன்று வரை நாம் எந்த வித தொடர்புமின்றி கிடப்பதை நினைக்கும் போது//

நியாயமாக இந்த தொலைபேசிகளையே அழித்துவிடலாம் என்று தானே தோன்றி இருக்க வேண்டும்

வால்பையன் on October 1, 2008 at 6:02 PM said...

//"மனித இனப் பரிணாமத்தில் மிருகம் என்ற ஒன்று கலையப்பட்ட ஒன்றல்ல, கரைக்கப்பட்ட ஒன்று".//

அதென்னப்பா பாவம் பண்ணுச்சு, நம்மள மாதிரி ஐஸ்கிரீம் சாப்பிட்டுச்சா, இல்ல அலைபேசியில் கடலை போட்டுச்சா

கும்க்கி on October 1, 2008 at 6:28 PM said...

எங்கப்போனாலும் வாலூ ரொம்ப நீலூது... மனுசன் தேறிட்டாரா?

Aruppukkottai Baskar on October 1, 2008 at 7:42 PM said...

நல்லா இருக்கு கார்க்கி !!1

Balachander said...

அருமை அருமை ...

Kalai M on October 1, 2008 at 7:56 PM said...

Not tat Karki. I asked will ter b the continue (part 2) of this 'story'?

கார்க்கி on October 2, 2008 at 9:41 AM said...

@வால்பையன்,

வாங்க வால்.. உன்களுக்கு பதில் சொன்னாலே சதமடித்து விடலாம்..

@கும்க்கி,

வாங்கண்ணா...

@ பாஸ்கர்,

நன்றி சகா..

@பாலசந்தர்,

தொடர் ஆதரவுக்கு நன்றி..

விஜய் ஆனந்த் on October 2, 2008 at 10:10 AM said...

வாவ்வ்வ்!!!

சூப்பரா இருக்கு!!!

Bleachingpowder on October 2, 2008 at 11:00 AM said...

//"எதையோ நான் கிறுக்கிட்டு இதுவும் கவிதை என்பேன்.//

அப்ப இதுவும் கவிதையா????

//அதையும் நீ படித்து விட்டு புரிந்துக் கொள்ள பட்ட சிரமங்கள் எத்துனை அழகு தெரியுமா? //

நாங்க படற கஷ்டத்தை விடவா!!!

//நான் உன்னை அழைத்தபோது பழிக்குப் பழி வாங்குவதாய் நினைத்து துண்டித்தாய்.//

எங்களுக்கும் இந்த டவுட் ரொம்ப நாளா இருக்குது :))

கார்க்கி on October 2, 2008 at 12:37 PM said...

நன்றி விஜய்.. வாய் திறந்து பாராட்டுவது இதுதான் முதல் முறையோ?

ப்ளீச்சிங், நக்கலு...... நடுத்துங்க..

rapp on October 2, 2008 at 1:28 PM said...

அய்யய்யோ எத்தனை நாளா இப்படி??????????

கும்க்கி on October 3, 2008 at 11:22 AM said...

அய்யய்யோ.. அன்னாவா?
(போன் பன்னது தப்பாபோச்சோ)

 

all rights reserved to www.karkibava.com