Oct 31, 2008

சென்னையில் புயல்...

31 கருத்துக்குத்து

என் பக்கத்து வீட்டு சிறுமி நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுவதால் வாயாடி என்கிறார்கள். நீ நொடிக்கு நூறு வார்த்தை பேசுகிறாய். வாயால் அல்ல, கண்களால். எனவே உன்னைக் கண்ணாடி என்று சொல்லலாமோ?

யாரையும் உற்றுப் பார்த்து பேசாதே. உன் கண்ணை வைத்தே என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

   கூட்டத்தில் நடக்கும்போது உன் நிழலை யார்யாரோ மிதிப்பதாக வருத்தப்பட்டாய். உன்னை இடிப்பவர்களை விட்டு நிழலை மிதிப்பவர்களை ஏன் திட்டுகிறாய் என்றேன்.

 நான் தானே நடக்கிறேன்
அது என்ன என் பின்னால்
உன் நிழல்?

என்று நீ எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தினாய்.

    சுத்தமாய் நன்றி இல்லாதது இந்த இதயம்.இத்தணை நாள் வளர்த்த நன்றி மறந்து உன்னைப் பார்த்ததும் பழகிய நாய்க்குட்டியைப் போல உன் பின்னால் வந்துவிட்டது.

    ஒரு நாள் நான் நண்பர்களுடன் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தேன். மாடியில் இருந்து நீ பார்த்துக் கொண்டிருந்ததை நானறிவேன். இருந்தாலும் இப்படி எல்லாம் நீ எழுதுவாய் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

அனைத்துக் கண்களும்
வாலிபாலை ரசிக்க‍-உன்
வாலிபத்தை ரசித்துக்
கொண்டிருந்தேன் நான்.

    உன்னை வருடும் எண்ணத்தோடுதான் வங்கக்கடலில் புயல் சென்னைக்கு அருகில் மையம் கொள்கிறது. என்னைக் கண்டு பயந்ததோ என்னவோ ஒவ்வொரு முறையும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விடுகிறது.

Oct 30, 2008

ஏகன்..ஏகன்..ஏகன்...

141 கருத்துக்குத்து


Oct 29, 2008

வால்பையனல்ல வால்பொண்ணு

44 கருத்துக்குத்து

     நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

   என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

  தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

  தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

  உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

  உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

   அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

   அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

   வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

  'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

Oct 25, 2008

ஒன்பது என்பது சரியா?

32 கருத்துக்குத்து
நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

இதைப் பற்றி முன்னரே யாரவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

Oct 23, 2008

நம்பிக்கை

28 கருத்துக்குத்து

   பேரிரைச்சலுடன் அந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது. மக்கள் கூட்டம் ஒரே திசையில் வேகமாய் நகர்ந்துக் கொண்டிருந்தது.'சிங்கள ராணுவம் நம்மட ஊருப் பக்கமாத்தான் வருகிறன். எல்லோரும் கெதியாப் போங்க'. பெரியவர் கத்திக் கொண்டிருந்தார். ஆனந்தி அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு  ஓடிக்கொண்டிருந்தாள்.

  "எங்கம்மா  போறோம்" கிட்டத்தட்ட அழுதுக் கொண்டே கேட்டாள் ஆனந்தி.

   "உங்கட மாமா வீடு மாங்கொல்லையில் உண்டு" என இழுத்துக் கொண்டு ஓடினாள் அவள் அம்மா.

    களைத்துப் போய் ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்கள். புழுதியும், தழைகளும் மறைக்க ஒரு உடல் அங்கே. மூக்கில் ஈ. மீண்டும் ஓடத் துவங்கினார்கள். ஷெல்கள் தூரத்தில் வெடிக்க, கூட்டம் கிழக்குப் பக்கம் நோக்கி திரும்பியது. இவர்கள் மட்டும் மாங்கொல்லைக்கு போக வேண்டி மேற்கேப் போவதென முடிவு செய்தார்கள்.

    ஒரு டிராக்டர், நாலு டிராக்டர், பத்து டிராக்டர், லாரி, மாட்டுவண்டி, சைக்கிள் என கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு மக்கள் திரளாக வெளியேறிக் கொண்டிருந்தனர். எதிர்புறமாக போகும் இவர்களை வித்தியாசாமாய் பார்த்துக் கொண்டே "அங்கட போக வேணாம்" "என்ன விசரா" என்றக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சைக்கிள்கக்ல் பாரம் ஏற்றி ஒருப் பகுதியினர் தள்ளாடிக் கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகள் சுமை தாளாமல் கடகடத்தபடி சென்றுக் கொண்டிருந்தது. சுமையேற்றிய வண்டிகளின் உச்சாணியில் வயதானவர்கள் பொக்கை வாய்களை மென்றுக் கொண்டு கண்மூடி ஆடிக்கொண்டிருந்தார்கள். பலப் பெண்கள் தம் அத்தனை சொத்துக்களையும் மூட்டைக் கட்டி தலையில் சுமந்து சென்றனர்.

   ஒரு வழியாய் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கொஞ்சம் பாதுகாப்பான இடமாக தெரிந்தது. கொஞ்சம் தூரத்தில் இருந்தவர்கள் என்றாலும் இதுவரை மாமா வீட்டிற்கு வந்ததில்லை ஆனந்தி. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருவரும் ஓடி வந்தது அவர்கள் குடித்த தண்ணியிலே தெரிந்துக் கொண்டான் ஆதி. ஆனந்தியின் மாமா மகன். அவர்கள் வீட்டிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்தத் தோட்டத்து வீட்டில இவர்களை தங்க வைத்தார் மாமா.

   புது வாழ்வை துவங்கியது போல் உணர்ந்தாள் ஆனந்தி. தோட்டத்தில் ரோஜா செடிகளை பராமரிக்கும் பணியை விருப்பத்துடன் செய்தாள். அவள் வந்தப்பிறகு செடிகள் அதிகமாகி கொண்டே சென்றன. அவ்வபோது கிழக்கு பக்கம் போனவர்கள் எங்கேப் போனார்களோ என்ன ஆனார்களோ எனத் துடித்து போவாள். வாரம் ஒருமுறை அங்கே வருவார் மாமா. ஆதியும்தான். ஆறுதலாய் உணர்வாள்.

   ஆதி... ஆனந்தி.. ஆனந்தியின் சுருக்கம்தான் ஆதி.. ஆதியின் நீட்சிதான் ஆனந்தி என நம்பினான் ஆதி.ஒருநாள் ஆதி த‌ன்னைக் காத‌ல் செய்வ‌தாய் சொன்ன‌தைக் கேட்டு உடைந்துப் போனாள் ஆனந்தி. அவ‌னைத் த‌விர்க்க‌ தொட‌ங்கினாள். உயிர் பிழைத்ததே பெரிய‌ விட‌ய‌ம். இதுக்கெல்லாம் நாம் ஆசைப‌ப்ட‌க்கூடாதென‌ சொல்லிக் கொண்டாள். ஒவ்வொரு முறை அவ‌ள் வ‌ள‌ர்த்த‌ ம‌ஞ்ச‌ள் ரோஜா பூக்கும்போதும் தொலைபேசி சொல்வாள். ஆதியின் அம்மாவிற்கு ம‌ஞ்ச‌ள் ரோஜா என்றால் உயிர் என்ப‌தால் ஆதி சைக்கிளில் வ‌ந்தே வாங்கிச் செல்வான். பூ வாங்க‌ வ‌ருப‌வ‌ன‌ல்ல‌ அவ‌ன். ஒரு நாள் பூவோடு காத‌லும் ம‌ல‌ரும் என‌க் காத்திருந்தான்.‌ஆனால் அன்றிலிருந்து ஆனந்தி மஞ்சள் பூ பூத்ததென சொல்வதில்லை. அவனும் அங்கே போவதில்லை.

   நாட்களும் கடந்தன. போரும் நிறுத்தப்பட்டது. நம்பிக்கைகள் பிறந்தன. அந்த நாளும் வந்தே விட்டது. ஐ.நாவின் தலையீட்டால் தமிழீழம் அறிவிக்கப்பட்டது. துள்ளி ஓடினாள் ஆனந்தி. மொத்தம் ஐனூறு ரோஜாச் செடிகளும் ஒன்றாய் பூத்திருந்தன அன்று. மஞ்சள் ரோஜாவைத் தவிர்த்து.

   தொலைபேசி அடித்தது. ஆதிதான் எடுத்தான்.

மாமா இல்லையா?

இல்ல.

அத்தை?

இல்ல.என்ன வேணும்?

மஞ்சள் பூ பூத்திருக்கு.

*************************************************

நன்றி : சுஜாதா, தூயா (சில வரிகள் இவர்களின் படைப்பில் இருந்து எடுத்தமைக்கு)

Oct 22, 2008

ஆந்திராவிலும் ஜே.கே.ரித்திஷ் அலை

45 கருத்துக்குத்து

    எங்க தல ஜே.கே.ஆரின் மாஸ்டர் பீஸ் நாயகன் தமிழகத்தில் மாபெரும் வெற்றியடந்ததை உலகத் தமிழர்கள் யாவரும் அறிவர். இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்பினாராம் ஆந்திரா சூப்பர்ஸ்டார் ஒருவர். ஆனால் படத்தை பார்த்தபின் அப்படியே டப் செய்து வெளியிட்டாலே படம் பட்டய கிள‌ப்பும் என வேலைகளில் இறங்கிவிட்டார். அங்குஷம் என பெயரிட்டிருக்கிறார்கள்.இதன் மூலம் தல புகழ் அகில இந்திய அளவில் பரவியுள்ளது என்பதை நாமறியலாம். ஆந்திரா ஜே.கே.ஆர் ரசிகர் படையின் போர்படை தளபதி நான் என்பதால் இணையத்தளம் முழுவதுமாய் உருவாக்கும் முன்னே எனக்கு தகவல் கிடைத்தது. இங்கே க்ளிக்குங்கள்.

இதன் மூலம் ரசி கண்மணிகளுக்கு சொல்லிக் கொள்வது:

ப‌டம் வெளியாகும் நாளன்று ஹைதராபாத் வருபவர்களுக்கு குவார்ட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரப்படும்.
Posted by Picasa

Oct 21, 2008

தனி ஈழம்--புலிகளால் சாத்தியமா?

51 கருத்துக்குத்து

தூயா மூலம் எனக்கு வந்திருக்கிறது இந்தத் தொடர்.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

    அனுபவங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் காசி ஆனந்தனின் கவிதைகளை தேனிசை செல்லப்பாவின் இசையில் கேட்டு ஏதோ புரிந்தும் புரியாமலும் "என்னப்பா நடக்குது" என்று என் அப்பாவிடம் கேட்டு ஓரளவு தெரிந்துக் கொண்டேன். விவரமறியா வயதில், நாங்கள் திண்டிவனத்தில் இருந்தபோது IPKF நடத்திய கொடூரங்கள் வீடியோ கேசட்டாக வந்து, என் அப்பாவின் நண்பர் வீட்டில் (ரகசியமாகத்தான்)அதைப் பார்த்து அழுததுண்டு. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் என் அப்பா பிரபாகரனின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் பெருமையாக இருக்கும். என் அப்பாவின் மறைவுக்குப் பின் சிங்கப்பூர்  வேலைக்கு கல்லூரியிலே நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தேர்வாகி கடவு சீட்டுக்கு விண்ணப்பம் போட்ட போது, திண்டிவனம் நகர காவல்துறையினர் எனக்கு என் அப்பாவின் நண்பர்கள் மூலம் புலிகளின் தொடர்பு இருப்பதாக சொல்லிவிட எனக்கு கடவு சீட்டு கிடைக்காமல் போனது. ஆனால் அதற்கான காரணம் எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு என சொன்னபோது கொஞ்சம் ‘கெத்’தாகத்தான் உண‌ர்ந்தேன்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

தமிழீழத்திற்கு என் ஆதரவு எப்போதுமே உண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் வருத்தம் உள்ளது. 25 ஆண்டு காலத்தில் கைக்கு வந்த சில நல்ல வாய்ப்புகளை புலிகள் நழுவ விட்டதாக உணர்கிறேன். நடப்பவை யாவும் நமக்கு தெரிவதில்லை. ஊடகங்கள் வாயிலாக தெரிந்தவற்றை வைத்து இந்த முடிவுக்கு வருவது நியாயமில்லை. ஆனால் 25 ஆண்டு போராட்டத்தில்,இத்தணை உயிர்களை இழந்து என்ன சாதித்திருக்கிறார்கள் என்ற வருத்தமுண்டு. எனக்கு இப்போதெல்லாம் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கண்மூடித்தணமாக ஆதரிப்பதில் உடன்பாடில்லை. இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் தமிழீழம் வேண்டுமென்கிறேன். யார் மூலமாவது நல்லது நடக்க வேண்டுமென்ற தீராத அவா இருக்கிறது.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆர்வம் பெரிதாக இல்லை. ஏனெனில் ஒன்றும் பெரிதாக நன்மை நடக்கப் போவதில்லை. புலிகள் 30 பேரும் ரானுவத்தினர் 50 பேரும் கொல்லப்பட்டனர் என்ற செய்தியில் என்ன ஆர்வம் தேவையிருக்கிறது? என்னால் 30 புலிகளுக்காக மட்டும் அழ முடியாது. அந்த 50 பேரில் எல்லா சிங்கள‌ருமே கெட்டவர்களா? இந்த வீணாப்போன அரசியல்வாதிகள் நல்லதை நடக்க விட மாட்டார்கள்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

   எப்போதும் ஒலிக்கும் குரல்களை தவிர்த்து புதிதாக சேர்ந்துக் கொண்ட ஓனாய்கள் மீது வெறுப்புத்தான் வருகிறது. சிறுவயதில் சுப.வீ அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தார் என்றபோது இருந்தப் பெருமை இப்போது இல்லை. ஏதோ கலைஞரின் செயலினால்தான் தமிழர்கள் இப்போது இதற்குப் பெரும் ஆதரவு தருவதாக அவர் சொல்லியுள்ளது ஜெ.வின் அரசியலை விடப் பன்மடங்கு மலிவானது. இந்த விடயத்தில் எல்லோரும் அரசியல் செய்வதில் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் கலைஞர் செய்யும்போது வரும் கோவமே அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை சொல்லும்.நம்பிக்கையை அரசியலில் இழந்த பின்னும் வைகோ மீது ஈழத்து பிரச்சனையில் நான் நம்பிக்கை இன்னுமிழக்கவில்லை. உண்மை உணர்வு அவருக்குண்டு. கடல்தாண்டி வரும் மனிதர்களுக்காக(அகதிகள் என்று சொல்ல விருப்பமில்லை) ஒரு கிராமம் உருவாக்க வேண்டுமென்பதே என் ஆசையென சொன்ன செந்தழல் ரவி போன்றவரின் குரல்கள் நம்பிக்கையை தருகின்றன.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

   கேள்வியிலே சொன்னது போல் செத்து செத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நாம் என்ன சொல்ல? எனக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது " புலிகளை விட்டால் வேறு வழியில்லை என்ப‌து உணமையென்றாலும் அவர்களால் தனி ஈழம் காண முடியாது. ஐ. நா போன்று வலுவான ஒரு அமைப்பால் தான் இதை முடிக்க முடியும். தனி நாடோ அதிகாரமோ புலிகள் மூலம் குறைந்தபட்சம் இன்னும் சில வருடத்திற்கு முடியாது என்பது  வேதனையான ஒன்று என்றபோதும் அதுதான் நடக்ககூடும்"

--------------------------------------------------------------

    பதிவர்களில் பல நண்பர்கள் உண்டு என்ற போதும் இந்த விடயத்தில் அவர்களுடைய‌ கருத்து என்னவென்று எனக்கு தெரியாது. அதனால் அவர்களை எழுதும்படி அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல் குரலாக எனக்கு கேட்ட அண்ணன் பாலபாரதி அவர்கள் எழுதினால் இன்னும் பல விடயங்கள் நாமறிய முடியும். ஆனால் அவர் என் பதிவை படிப்பவரா எனத் தெரியவில்லை. அவர் எழுத‌ வேண்டுமென விழைகிறேன்.

  'தமிழனை எதிர்க்கும் பீரங்கி குண்டு
  சமையலறையின் முள்ளங்கி தண்டு"

இன்னமும் கணீர் கணீர் என ஒலிக்கிறது செல்லப்பாவின் குரலில் காசி. ஆனந்தனின் வரிகள். ஆனால் உண்மையா?

Oct 20, 2008

காக்டெயில்

51 கருத்துக்குத்து

 

இந்த வார சாரு மேட்டர்:

     கடந்த ஜூலை அன்றுதான் இரண்டு லட்சம் ஹிட்ஸ்க்காக பெங்களூரில் வாசகர்களுடன் "உற்சாகமாக" கொண்டாடினார் அண்ணன்.செப்டம்பரில் அது நான்கு லட்சமானது.சென்ற வாரம் ஐந்து லட்சம் ஹிட்ஸை தொட்டுவிட்டார்.மூன்று மாதத்தில் மூன்று லட்சம்.வெறும் வாசகர் கடிதம் மற்றும் குட்டிக்கதைகள் மூலம் இதை சாதித்த சாரு நிச்சயம் செலிபிரிட்டிதான். வாழ்த்துகள் அண்ணே. ஆனா இன்னைக்கு மேட்டர் அதுவல்ல. தனது தளத்தில் விளம்பரம் வேண்டி அவர் கொடுத்துள்ள விளம்பரத்தில் தினம் பத்தாயிரம் பேர் படிக்கும் தளமென குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மாதம் 3 லட்சம். கணக்கு இடிக்குதே.இப்போதைய டிராஃபிக் நிலவரம் இதுவென‌ சாருவின் அல்லக்கைகள் யாராவது சொல்லக்கூடும். கடந்த‌ 15ஆம் தேதி ஐந்து லட்சத்தை தொட்டதுக்கு வாச‌கர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார் படத்துடன். இன்று தேதி 20. இப்போதைய நிலவரம் 513595. ஐந்து நாட்களில் 5,50,000 ஆகியிருக்க வேணாமா? 
   உனக்கு ஏன் இந்த வேலை என்பவருக்கு என் பதில். நான் ஜெயமோகனின் அல்லக்கை.

*************************************************

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவது ஒரு நல்ல செயல்தானே நண்பர்களே?வருகிற புத்தான்டு முதல் விட்டு விட வேண்டுமென அதற்கான நடவடிக்கையில் இறங்கிய என்னை எல்லோரும் திட்டுகிறார்கள். என்ன, இதுவரை எனக்கு அந்தப் பழக்கமில்லை. இருந்தால்தானே விட முடியும் என்பதால் முதலில் புகைக்க வேண்டுமென முடிவு செய்தேன். அதற்குத்தான் திட்டுகிறார்கள். ச்சே ஒரு நல்லது செய்யலாம்னு பார்த்தால் விடமாட்டறங்கப்பா.

*************************************************

     ஒரு நாள் அம்மாவிடம் சண்டை போட்டு ரிமோட்டை வாங்கி சேனல் சேனலாக தாவினேன். ரகுவரன் வழக்கம்போல் தொலைபேசியில் ஏதோ ஒரு அதிர்ச்சிகரமான சேதியைக் கேட்டு டம்ளர் தண்ணியை விழுங்கினார். எந்தப் படமென நான் யோசித்துக் கொன்டிருக்கும்போதே சித்தாரா வந்து படத்தின் முகவரியை சொன்னார். குடும்பமே அழுது வடிய, ரகுவரனும் அழுது கொண்டே அவன் வந்தா யாரும் எதுவும் கேட்க கூடாதென்ற அர்த்தத்தில் ஏதோ சொன்னார்.அஜித் அழுவதை பார்த்து என்ஜாய் பண்ணலாம் என ஒரு சந்தோஷத்தில் பார்த்தால் நம்ம தல ஜோவோடு கடற்கரை மணலை எண்ணிக் கொண்டிருந்தார். அவர் குடும்பத்தில் இருந்த ஒரு குழந்தையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சி கூட இல்லாமல் வயிறார உண்ட ஒருவன் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருப்பது போல‌ இருந்தார் தல.

     பின் ஒரு சின்னைப்பையன் உயரமான ஒரு மணியை அடிக்க முயன்று கீழே விழ அவனைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். கொஞ்ச தூரம் சென்று மீண்டும் ஓடி வந்து அந்த மணியை அடித்து விடுவான் அந்தப் பையன். இப்போதும் தல தேமேவென இருக்க அவருக்கும் சேர்த்து நடித்துக் கொண்டிருப்பார் ஜோ. அடுத்து என்ன நடக்கும் என ஆர்வம் வர போட்டான் பாருங்க பாட்டு... ங்கொய்யால இப்போ நான் டம்ளர் தண்ணியை காலி செய்தேன். பாட்டு முடிந்த அடுத்த காட்சியே மணிவண்ணன் இவருக்காக உருகினார். அனைவரும் இவருக்காக அழும்போது தல மட்டும் ஜாலியா டூயட் பாடுவாராம். இந்தப் படத்தை நம்ம மங்களூர் அண்ணன் பிடித்த படம் என சொன்னதற்காக இன்னமும் தினம் ஒரு டம்ளர் தண்ணியை முழுங்கி கொண்டிருக்கிறேன்.

*************************************************

     வழக்கமாய் வாரயிறுதி நாட்களில் தமிழ்மணத்திலும் எல்லோர் கடைகளிலும் ஈயடிக்கும். நேற்று ஒரு மொக்கைப் பதிவை போட்டு தப்பிக்கலாமென ஒரு பதிவு போட்டேன். போட்ட இரண்டு மணி நேரத்தில் சூடாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் குசும்பன், பாலசந்தர், ஜ்யோவ்ராம் சுந்தர், நானும் ஒருவன், கார்த்திக் மற்றும் பலரின் பேராதரவில் 150 பின்னூட்டமும் கிடைத்தன. இதில் கும்மியர்கள் ராப்,பரிசல்,மங்களூர் அண்ணன், வெண்பூ, விஜய் ஆன்ந்த்,எஸ்.கே மற்றும் பல கும்மியர்களின் ஒரு பின்னூட்டமும் இல்லை என்பது குறிப்படத்தக்கது. இதன் மூலம் சொல்ல வருவது மொக்கைக்கு என்றுமே மவுசு உண்டு.

டிஸ்கி: தலைப்பில் வால்பையன் பெயர் வைத்ததால் அவரைத்தான் மொக்கை என்று நான் சொல்வதாக யாரும் நுண்ணரசியல் செய்ய வேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள்.

*************************************************

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

      ட்ரெயின்ல கடைசிப் பெட்டி ரொம்ப தூரத்துல இருக்கே. கடைசி பெட்டி இல்லாம ரயில்வண்டி செய்ய முடியாதா? அப்படி இருந்துதான் ஆகனும்னா நடுவுல வைக்கலாம் இல்ல?

Oct 19, 2008

வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின்

177 கருத்துக்குத்து

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

  4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில்  விளையும் முக்கியமான தாணியம் எது?

  5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

  6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

  7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

  8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார  இதழா மாத இதழா?

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச‌க்தி எது?

10) வால்பையன் என்ற‌ பெய‌ரில் ப‌திவெழுதும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ரின் புனைப்பெய‌ர் என்ன‌?

Oct 17, 2008

காதல் கடிதம்

27 கருத்துக்குத்து

     வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

        சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

         மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

        சந்திர சூரியனகளை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

         கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

        பாறையாய் நான்.பசுமரமாய் நீ.வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன? வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க? பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

     உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

      உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னை காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

       ஆரம்ப காலங்களில் உன்னைக் கானும் பொதெல்லாம் என் காதல்,  புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டி பார்க்கும்.

      உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களை பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

       என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

    அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள்(எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதை படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

   ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கி பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

    இதற்கு முன்னமும் சில பெண்களோடு பழகி இருக்கிறேன்.அப்போதெல்லம் பரிமாறும் முன்னமே வெறும் இலையை தின்றுவிட்டு ருசியில்லை என்றேன். இன்று உன்னால் வயிறு நிரம்பி மனசும் நிறைந்துவிட்டது

    நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்து போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

   இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

     அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோண்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

     சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்தத்வள் நீ.பாரமல்ல.

    இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள். புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.ஆனால் எந்த விரல் கொண்டு சொரிந்து கொள்வது? இப்படியாக எத்தனை இரவுகள்?

    சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

    அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது.

Oct 16, 2008

அடச்சே... இப்படி கூடவா பண்ணுவாங்க?

126 கருத்துக்குத்து

       மனுஷனுக்கு ரெண்டு பிரச்சனைங்க. அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா ஒன்னும் இல்ல. செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

    எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

     முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

    தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

    கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

     குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

     எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

    முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

    தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

     கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

    குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

    சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க...............................

பதிவின் நீதி : பிரச்சனைக்கு முடிவில்லை. எனவே என்ஜாய் த லைஃப்.. ஸ்டார்ட் மீஸிக். விண்ணைப் பிளக்கட்டும் கும்மி சத்தம். (ஒரு 50 100னு போட்டு மானத்த காப்பத்துங்கப்பு)

பரிசலை தொடர்ந்து அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்

54 கருத்துக்குத்து

      பரிசலை தொடர்ந்து இன்னும் பலப் பதிவர்கள் அச்சு ஊடகத்தில் நுழையப் போவதாக உளவுத்துறை செய்திகள் சொல்கின்றன.  அவர்கள் யார் யார்  என்பது ஒருபுறம் இருக்கட்டும்.இப்படியே எல்லோரும் போனால் என்ன ஆகும் என கழிப்பறையில் அமர்ந்து யோசித்த கண நேரத்தில் உதயமான‌து இந்த பதிவு.

   ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல்.

  முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30 பக்கம் விளம்பரங்கள் போட வேண்டும். 30 பக்கமா என்று வாயைப் பிளப்போர் இந்த வார குமுதத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

   பின் 5 பக்கம் நடிகைகளின் படங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  பின் ஒரு 5 பக்கத்திற்கு சினிமா பற்றிய செய்திகள் போட வேண்டும். அதில் ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் செய்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் "வில்லு படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதில் விஜய் சந்தோஷமாக இருக்கிறார்" என்ற துணுக்காவது இருக்க வேண்டும். இது போன்ற செய்திகளை அவர்களும் மறுக்க போவதில்லை. முரளிகண்ணனின் பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மற்ற செய்திகளுக்கு தமிழ்சினிமா என்ற வலையில் வரும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருப்பது 60 பக்கங்களே.

  சமீபத்தில் வந்த இரண்டு படத்தின் விமர்சன‌த்திற்கு நான்கு பக்கங்கள். லக்கி மற்றும் அதிஷாவின் விமர்சனத்தை போட்டு விடலாம்.யாராவது ஒருவரின் கேள்வி பதிலுக்கு நான்கு பக்கங்கள். நம்ம டோண்டு அவர்களின் கேள்வி பதில்களை இதற்கு பயன்படுத்திக் கொள்லலாம்.கடைசிப் பக்கத்தை பயோ டேட்டாவிற்கு ஒதுக்க வேண்டும். இருக்கவே இருக்கு கோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா. ஒரு தலையங்க பக்கம். நர்சிம்மிடம் விட்டால் ஏதாச்சும் செய்வார்.அவசரப்பட்டு உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம். மீதம் இருப்பது 50தான்.

   கார்ட்டூன் கமெண்ட்டுக்கு இரண்டு பக்கங்கள். அதுக்கு யாருடைய பதிவு என்று சொல்லவும் வேண்டுமா? யாராவ்து ஒருவர் இன்னொருவருக்கு எழுதும் பகிரங்க கடிதத்திற்கு 3 பக்கங்கள். இதற்கு பல பதிவுகள் உண்டு. அந்த சூழ்நிலைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது. கவிதைகளுக்கு ஐந்து பக்கங்கள். ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சுகுணா என அதுக்கும் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆக பத்து பக்கங்கள் மீதம் இருப்பது 40 தான் சகா.

    ஆறுப் பக்கங்களை ஒருப் பக்க கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒதுக்க வேண்டும். வெண்பூ, ச்சின்னப்பையன் என இதுக்கும் ஏகப்பட்ட போட்டியாளர்கள். ஒரு தொடர்கதைக்கு ஐந்து பக்கங்களென இரண்டு தொடர்கதைக்கு பத்துப் பக்கங்கள். இதற்கு செந்தழல் ரவி மற்றும் வெட்டிப்பயல் சரியாக இருப்பார்கள். லூஸுப்பையன், ஜாலிகிளப் என மிமிக்ரி தொடருக்கு நான்கு பக்கங்கள். டீ.ஆரின் இந்தப் பதிவு அதற்கு பொருத்தமாய் இருக்கும். மீதம் இருப்பது வெறும் 20 தான் மக்கா.

   புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். வலையுலக ஜோசியர் சுப்பையா எழுதும் ராசிபலனுக்கு 3 பக்கங்கள். வீட்டுக்கார அம்மாவின் ஷாப்பிங் லிஸ்ட் அல்லது பட்ஜெட் அல்லது சமையல் ஐடியா என தங்கமணிகள் மேட்டருக்கு 3 பக்கங்கள். இருக்கவே இருக்கிறார் தாமிரா. ஆக 10 பக்கம் ஆச்சா? மீதம் பத்தே பத்துதான்.

     ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா? ஒரு சாமியாரின் கட்டுரை நான்கு பக்கங்கள். அதற்கு வலையுலகில் சரியான ஆளில்லாததால் அது நீக்கப்படுகிறது. ஜோசப் பாலராஜ் போன்று அவ்வபோது எழுதும் பதிவர்களின் வேலைக்காவத‌ விடயங்களுக்கு இரண்டு பக்கம். பின்னூட்டம் மட்டுமே இடும் கும்க்கி, விஜய் இன்னபிற வாசகர்களின் கடிதததிற்கு இரண்டு பக்கங்கள். நிச்சயம் இதில் ரிப்பீட்டேய் இடம் பெறக்கூடாது.முதல் பக்கத்தை ராப்பிற்கு கொடுக்காவிட்டால் அந்த‌ வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா? மீதம் இருப்பது இரண்டே இரண்டு பக்கங்கள்தான்.

  என்னங்க மறந்துட்டிங்களா? சிந்தனை சின்னசாமி இருக்காரில்ல? அவருக்கு ஒருப் பக்கம். அந்த மீதி ஒரு பக்கம்தான் நம்ம புத்தக்த்தின் USP. நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. ஆக மொத்தம் 100.இப்போது நம்ம பத்திரிக்கை தயார்.

    அவ்வபோது பக்கம் அதிகமானால் PITல் வென்ற புகைப்படங்கள், அய்ய‌னாரின் உலக சினிமா, வாலுதான் ப்ளீச்சிங் ஆதாரத்துடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் என எதற்கும் நம் வலையில் சரக்குள்ளது.

Oct 15, 2008

காக்டெயில்

40 கருத்துக்குத்து

    பதிவர் அபிஅப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று படித்தேன். அவரது வலையிலும் 20 நாட்களுக்கு மேலாக எந்த பதிவும் இல்லை. விவரம் தெரிந்தவர்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று சொல்லவும். லக்கியின் வலையிலும் சில நாட்களாக புதிதாய் எதுவும் இல்லை. மீள்பதிவும் இல்லை.என்ன ஆச்சு சகா?

************************************************

     கிரிக்கு அவரது பதிவிலே வாழ்த்துகள் சொன்னாலும் மீண்டும் ஒரு முறை சொல்வதில் தப்பில்லை.சின்ன கிரிக்கு வாழ்த்துகள் சின்ன ரஜினி. அவரது பதிவைப் பார்த்ததும் நான் எழுதிய ஹைக்கூ ஒன்று நினைவுக்கு வந்தது.

தங்க குழந்தை

வெள்ளி மலர் காட்டியது

பவள வாய் திறந்து.

   என் அக்காப் பையன் என்னோடுதான் ஒரு வருடம் இருந்தான். அப்போது என் அக்கா அமெரிக்காவிலும் மாமா பெங்களூரிலும் வேலை நிமித்தம் இருந்தார்கள். நான், என் அம்மா, மற்றும் அவன் மட்டும்தான். அவனை எங்கள் வீட்டருகே இருந்த பள்ளியில் சேர்க்க க்யூவில் நிற்பதில் இருந்து எல்லா வேலைகளும் நான் தான். அப்போது திடிரென தோண்றிய ஒரு ஹைக்கூ.

தாய்மாமன் பலருக்குண்டு

மாமனே தாயானது

உனக்கு மட்டும்தான்..

************************************************

   ஒரு வாரமாகவே என் வலையில் உள்ள கருத்துப் பெட்டியில் ஒரு பெண்ணின் பெயரில் யாரோ ஒரு நண்பர் என்னை கலாய்த்து வருகிறார். அந்த சம‌யத்தில் ரமேஷ் என்பவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப அதுவும் இவரின் வேலையாகத்தான் இருக்குமென நினைத்து அதை பதிவேற்றிவிட்டேன். அன்று இரவே ரமேஷ் என்னை அழைத்து உண்மையை சொல்ல, அசடு வழிந்தேன். அவரிடமே எனக்கு எல்லாம் யார் பாராட்டுக் கடிதம் எழுதப் போறாங்கனு நினைத்தேன் என்று சொல்ல ஒரு மாதிரியாக இருந்தது. நல்ல வேளை அவர் புரிந்துக் கொண்டார். இன்னும் யாரும் இது ஒரு நாடகம் என்று பதிவு போடாமலிருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி ரமேஷ்.

   அந்த பெண்ணின் பெயர் srinithi.தமிழெழுதியில் 'sri' என்ற எழுத்தை எப்படி தட்டச்சு செய்வது? தெரிந்தவர்கள் சொல்லவும்.

************************************************

    இன்றோடு நான் பதிவெழுத தொடங்கி 100 நாட்கள் ஆகின்றது(எதுகெதுக்குதான் கண‌க்கு எடுக்குறுதுனு ஒரு விவஸ்தை இலையா). தனிமையில் சிக்கி தவித்த நேரத்தில் வகையாய் மாட்டிக்கொண்டீர்கள். 100 நாட்களில் எத்தணை நண்பர்கள்..எத்தணை விடயங்கள்.. அது மட்டுமில்லாமல் என் வாழ்க்கை போக்கையே மாற்றிவிட்டது வலையுலகம். வரும் நாட்களில் இதற்கெல்லாம் நேரம் இல்லையென்றால் என்ன ஆவேன் என்று தெரியவில்லை. அடிக்ட் என்று சொல்ல மாட்டேன். ஆனால் வருத்தமிருக்கும். உங்களை பதிவெழுதி வருத்தமடைய வைக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான். சிரிக்காதீங்க மக்கா இன்னும் இரண்டு மாசம் ஹைதராபாத்தான். அது வரைக்கும் பிரச்சினையில்லை. எனக்கு.

************************************************

சாருவின் தளத்தின் கண்ணன் என்பவரது மடல் வெளியிடப்படுள்ளது. அதில் சாரு, சுஜாதாவிற்கு அடுத்து அதிக‌ பிரபலாமாகி கொண்டிருக்கும் எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமில்லாமல் வலையில் தினமும் குறந்தது 3 இடுகைகளாவது சாருவைப் பற்றி வருவது அவரது செலிப்ரிட்டிதண்மையை ஸ்திரப்படுத்துகிறதாம். மேலும் இப்படி கேட்கிறார் அந்த அன்பர்.

  "நம் கருத்தோடு முரண்பட்டு நிற்கிறார் என்பதற்காக படைப்பை விமரிசிக்காமல் கண்மூடித்தனமாக தனிநபர் தாக்குதல் நடத்துவது என்ன பண்பு?"

   அண்ணே இதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவிற்கு தனி நபர் தாக்குதல் நடுத்தியதில் சாருவை மிஞ்ச ஆளில்லை என்பதை உலகறியும்.

  " பாரதியிலிருந்து ஆரம்பித்து சுஜாதாவரை ஒரு படைப்பாளி உயிரோடு இருக்கும்போது குட்டிக்கொண்டே இருந்துவிட்டு இறந்தபிறகு வாழ்த்துப்பா பாடுவது இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறது?"

    சுஜாதா அவர்களை பாராட்டுவோர் அவர் இருந்த போதும் அதைத்தான் செய்தார்கள். தூற்றுவோரும் அப்படியே. வலையில் கமலை விட ஜே.கே.ஆர் பற்றிய பதிவுகள் அதிகம் வந்த நாட்கள் உண்டு. அதற்காக ஜே.கே.ஆர் கமலை மிஞ்சுவாரா? எனக்கு 7ஜி ரெயின்போ காலனியில் வந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

மச்சி அவ என்ன பார்த்தா இல்ல.

என்னடா பார்த்தா. ஏதோ பிச்சைக்காரன பார்க்கிற மாதிரி இல்ல பார்த்தா.

அப்படி கூட உன்னைப் பார்க்கலை இல்ல.

Oct 14, 2008

மலரும் நினைவுகளில் இதுதான் பெஸ்ட்

54 கருத்துக்குத்து

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

    நினைவு தெரிஞ்சுன்னா விடுதலை. அந்த படம் வெளியான‌ நேரத்தில்தான் எங்கள் வீட்டிற்கு வீ.சி.ஆர். வந்தது. அந்த ஒரே கேஸட்தான் இருந்தது என்பதால் பல முறை பார்த்தேன். திரையரங்கில் பார்த்தது தள‌பதி.படத்தை விட அரங்கின் வெளியே ரசிகர்கள் செய்திருந்த கலாட்டா என்னை வெகுவாக கவர்ந்தது. (அப்பவே அப்படியானு நினைக்க‌னும். நினைச்சீங்களா)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

     சரோஜா.நேற்றுத்தான் பார்த்தேன். சினிமா என்றால் எப்படி வாயைப் பிளந்து பார்ப்பேன் என்பதற்கு ஒரு உதாரணம். சரோஜாவில் அடிக்கடி நேரத்தை காட்டிக்கொண்டே இருப்பார்கள். 10:35 PM , 11:35 PM என்று வந்தவர்கள் கவணக்குறைவாக 12.15 PM என்று போட்டு விட்டார்கள். அடுத்த முறை பார்ப்பவர்கள் நான் சொல்வது சரியா என சொல்லவும். இதுவரை வேறு யாரும் இதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த இடத்தில் நீங்கள் லேசாக புன்னகைக்க வேண்டும். செய்தீர்களா?)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

     தமிழ்படம் வசீகரா. இந்தப் படம் ஏன் ஓடவில்லை என புரியவில்லை. நல்ல நகைச்சுவை. பல முறை பார்த்திருக்கிறேன். கைவசம் ஒரிஜினல் சி.டி. இருக்கிறது.

     ஆங்கிலப் படம்: ஜான் ட்ரவோல்டாவின் க்ரீஸ்.. அருமையான மீயூஸிகல். நம்ம ஊர் பருவராகத்தின் மூலம். 1978 ஆம் ஆண்டு வந்தப் படம். அவரது நடனமும் இசையும் தான் படத்தின் பலம். .. கண்டிப்பாக பார்க்க வேன்டிய படம், பொழுதுபோக்கிற்கு மட்டும்.(இப்போது, ஹாலிவுட்டிலும் இந்த மாதிரி படங்களைத்தான் பார்ப்பியாடா நீ என்று என்னைத் திட்டனும். திட்டினீங்களா?)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

       நான் சொல்ல நினைத்த படங்களையெல்லாம் நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். மகாநதி, அன்பே சிவம், சேது... யாரும் சொல்லாதது, ரெட். என்னை மட்டுமில்லாமல் பார்த்த அனைவரையும் தாக்கு தாக்கு என்று தாக்கியது. அதை தொடர்ந்து ராஜா, ஜனா, ஜி, ஆழவார் எனப் பல படங்கள் தாக்கினாலும் ரெட் அளவிற்கு இல்லை என்பது அடிபட்ட என் கருத்து. (இதுல கூட வித்தியாசமா சொல்றான்டா இவன்னு நீங்க பிரம்மிக்கணும். பிரம்மிச்சிங்களா?)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

    ரிக்ஷாகாரன் படத்திற்காக‌ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட தேசிய விருது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருது. எம்.ஜி.ஆருக்கு கொடுக்கனும்னு முடிவு செய்தாலும் வேற படமா கிடைக்கல? நல்ல வேளை சிவாஜிக்கு கடைசி வரை அந்த விருதை தந்து அவமதிக்கவில்லை. ( நான் பிறக்குமுன்னே நடந்த நிகழ்ச்சி என்றாலும் ஞாபகம் வைத்து சரியான நேரத்தில் சொன்னதுக்காக என்னை பாராட்டனும் தோண்ற வேண்டும். தோணுச்சிங்களா?)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

   அழகிய தமிழ் மகன் இரட்டை விஜய் தோண்றும் காட்சிகள். இயக்குனரின் 'திறமைக்கு' நல்லதொரு சான்று. (ஹிஹிஹி.. இப்போ என்ன நினைச்சிங்கணு நீங்களே பின்னூடட்த்தில் சொல்லுங்க)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

    பதிவுலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி அதான் டைம்பாஸே. இப்பவும் விவரங்கள் விரல் நுனியில்.

7.தமிழ்ச்சினிமா இசை?

   இந்தியாவிலே சிறந்தது என்பேன். ராஜ, ஏ.ஆர்.ஆர் இவர்களுக்கு இணை யாருமில்லை.  புதிய தலைமுறையிலும் யுவன், ஹாரிஸ், விஜய் ஆண்டனி என கலக்குகிறார்கள். தமிழ் சினிமாவை உலகத் தரத்தை நோக்கி எடுத்து செல்வதில் ஒளிப்பதிவாளர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் இசை அமைப்பாளர்கள்தான்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

     நேரமும் குறுந்தகடும் கிடைத்தால் எல்லாப் படங்களும் பார்ப்பேன். Irreversible என்ற படம். நான் சிங்கையில் இருக்கும் போது திரையரங்கில் சென்று பார்த்தேன். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இதுவரை நான் பார்த்த படங்களில் இதுதான் தி பெஸ்ட். அதில் வரும் கற்பழிப்பு காட்சிக்காகவே என்னுடன் வந்த நண்பன் அந்த காட்சியில் கண்களை மூடிக் கொண்டான். இந்த படம் முழுவதையும் திறந்த கண்களோடு பார்ப்பவர்கள் கல்நெஞ்சுக்காரர்கள். அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க பல நாட்கள் ஆனதால் அதுப் போன்ற படங்கள் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

   ஒன்னுஒன்னா கேளுங்கப்பு. பரவாயில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் இல்லை. குறுமபடம் எடுக்கும் முயற்சியை நண்பர்களோடு தொடங்கியிருக்கிறேன். அதன்பின் வேண்டுமென்றால் நிகழலாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்

பாலா, அமீர்(இயக்குனர்), முருகதாஸ், செல்வராகவன்,கார்க்கி ம்ம்ம். ஆரோக்கியமாத்தான் இருக்கு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

    எனக்கு ஒன்றும் ஆகாது. பார்க்க வேண்டிய பழைய படங்களின் சி.டிக்கள் நிறைய இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பார்ப்பேன்.

      வலையுலகம் வளரும். வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். லக்கி ஒரு கோடி ஹிட்ஸை பெறுவார். பரிசல் தினமும் 22 மணி நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார். நர்சிம் கன்னித்தீவு போல குட்டிகுட்டியாக‌ மாறவர்மன் எழுதிக் கொண்டிருப்பார். அப்துல்லா இன்னும் சில பேருக்கு உதவ வழிவகை செய்வார். கோவியார் மணிக்கு ஒரு பதிவு போடுவார். மங்களூர் சிவா ரிப்பீட்ட்டேய் என்பதை காப்பி செய்து எல்லாப் பதிவிலும் பேஸ்ட் செய்வார். ராப்பால் அனைவருக்கும் மீ த ஃப்ர்ஸ்ட் போட முடியாது. ஜே.கே.ஆரின் வலை ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சினிமா பற்றி இல்லாமல் அவரின் மீதி இரண்டு முகங்களை பற்றி அலசுவார்கள். தினம் ஒரு நட்சத்திர பதிவரை தமிழ்மணம் கொடுக்கும். தினமும் ஒருமுறை பதிவர் சந்திப்பு நிகழும். எல்லா சந்திப்பிலும் அதிஷா பங்கேற்பார். டர்மரிக் பவுடர் என புதிய பதிவர் வருவார். அதுவும் வால்பைய்ன்தானோ என்ற சந்தேகம் எழும். தங்கமணி தலைவன் தாமிரா என பாதிக்கபட்டவர்கள்(அதான் கல்யாணம் ஆனவுங்கோ) தாமிராவிற்கு பட்டம் கொடுப்பார்கள். இத்தணை களேபரத்திலும் தினம் ஒரு மொக்கை போட்டு உங்களை நான் சாகடித்துக் கொண்டுதானிருப்பேன்.

    என்னை எழுத சொல்லி அழைத்த நர்சிம்மையும், சென்னையும் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள். தவறு செய்தவனை விட தவறு செய்ய தூண்டியவர்களுக்குத்தானே அதிக தண்டனை?

    மேலும் நான் அழைப்பது இவர்களை

   1) வால்பையன்

   2) கார்த்திக் (தம்பி திண்னை கூடிய சீக்கிரம் எழுதறேன்)

   3) தாமிரா (நேரம் கிடைத்தால் தல)

   4) பரிசல் (சொன்னா இன்னொருதடவ எழுதுவாருங்க. அவ்ளோ நல்லவரு)

    5) ப்ளீச்சிங் பவுடர் (இப்போ மொத பேர படிங்க)

டிசுகி:  தலைப்பு பெரிதாய் இருப்பதால் பாதிதான் தலைப்பாக வைக்க முடிந்தது..முழுத்தலைப்பு இங்கே.

   "மலரும் நினைவுகளில் இதுதான் பெஸ்ட் என்று சொல்வதற்கில்லையென்றாலும் இதுதான் வொர்ஸ்ட் என்றும் சொல்ல முடியாது."

Oct 12, 2008

தற்கொலைகள்...

17 கருத்துக்குத்து

    பிறப்பை தான் நம்மால் முடிவு செய்ய முடியாது , இறப்பையாவது நம் விருப்பப்படி செய்துக் கொள்ளலாம் என்று முட்டாள்த்தனமாக முடிவு செய்பவர்கள் பலர்.இன்று காலை இதுப் போன்ற ஒரு செய்தியை கேட்டப் போது அவர் எனக்கு தெரியாதவர் என்ற போதும் ஓர் அரை நாள் என் மனதை கவலைக் கொள்ள செய்து விட்டார்.என் அக்காவின் நிறுவனத்தில் பணிபுரியும் அவரின் பெயர் அசோக். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் அவருக்கு காதல் தோல்வியும் இல்லை,பண நெருக்கடியும் இல்லை,தெரிந்த வரை எந்த தொல்லையும் இல்லை என்றே சொல்கிறார்கள் அவரது நண்பர்களும் உறவினர்களும். கடைசியாக எழுதி வைத்த கடிதத்தில் உடல்நிலை தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார். அமெரிக்கா போன்ற தேசத்தில் அத்துனை பெரிய நோயோடு நுழையவே முடியாது.அங்கே சென்றும் அவருக்கு பெரிதாய் எதுவும் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம் எதுவோ,மீண்டும் ஓர் வாய்ப்பு அவருக்கு வர போவதில்லை.

    இது போன்ற முடிவை எடுக்கும் பலர் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமாக அவசரப்பட்டே இதை செய்கிறார்கள். ஆனால்,அசோக் போன்ற சிலர்,தெளிவாக தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தனது கடைசி செய்தியாக ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டே போகிறார்கள்.அசோக்கும் தனது நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். ஒருவருக்கும் இந்த திடீர் செய்தியின் அர்த்தம் புரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அடுத்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கு கூடப் பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் சொல்லியே பழகிய நமக்கு இது புரிவது கொஞ்சம் சிரமம்தான். அதுமட்டுமில்லாமல் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று விளக்குவதற்காகவே இருக்கும் சில இணையதளங்களை பார்த்து விட்டுதான் இந்த அசட்டுத்தனத்தை செய்திருக்கிறார் இந்த நண்பர். இத்தனைக்கும் படிப்பிலும் வேலையிலும் முதன்மையாகவே இருந்து இருக்கிறார். நமது கல்வி முறையில் இருக்கும் பெரிய குறையாக நாம் கருதுவுது இதைதான்.புரியாத பல விஷயங்களை சொல்லி தரும் நம் கல்வி முறை வாழ்க்கை குறித்த பல விஷயங்களை சொல்லி தருவதில்லை. மாவட்டத்திலே முதல் மதிப்பெண் பெற்ற ஒருப் பெண்ணுக்கு நமது அரசாங்க ஊழியர்கள் தவறு செய்பவர்கள் என்பது தெரியவில்லை.அவர் தோல்வி அடைந்ததாக வந்த செய்தியை பார்த்ததும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இவர் உண்மையிலே மாவட்ட அளவில் முதலாக வர முற்றிலும் தகுதி அற்றவர் என்பதே என் கருத்து.என்ன செய்ய,இந்த கல்வி முறையில் அவர்தான் முதலாவது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வாழ்க்கையே வெறுத்துப் போய் சாகத் துணியும் இவர்கள் அந்த முயற்சியும் தோற்று போனால் சட்டத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்க வேண்டும்.சாகத் துணியும் அவர்களின் வார்த்தைகளுக்கு காது கொடுக்காமல் மேலும் அவர்களை நோகடிக்கும் இந்த சட்டத்தின் மீது எனக்கு வரும் வெறுப்பிற்கு அளவே இல்லை.நல்ல வேலை,தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று சொல்ல வில்லை.

     இந்த பூமியில் நமக்கென ஒரு உயிர் இல்லை என்பதே பெரும்பாலான தற்கொலைக்கான காரணம் என்பது என் கருத்து.வேறெதுவும் செய்ய வேண்டாம் ,நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் போதும். சொல்வது எளிது செய்வது கடினம் என்ற பேச்செல்லாம் இதில் எடுபடாது.இது சுலபமாக செய்ய கூடிய ஒன்றுதான்.உங்களால் ஒரு அசோக்கை காப்பாற்ற முடிந்தால் போதும் உங்கள் வாழ்கை முழுவதும் வாழ்ந்ததற்கான வசந்தம் உங்களை வந்து சேரும்.அதை அனுபவத்திவன் என்ற முறையில் உங்களை வேண்டி கேட்பதெல்லாம்,கேளுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களோடு பேச ஆசைப்படும் போதெல்லாம் காது கொடுத்து கேளுங்கள்.அது போதும்.அப்படி ஒருவர் இருந்திருந்தால் அசோக் இன்று நம்மோடு இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

     அசோக்கின் மறைவுக்கு ஐந்து நாள் அஞ்சலி செய்வதை விட அவர் சொல்லிவிட்டுப் போன பாடத்தை புரிந்துக் கொள்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.உலகம் சுருங்கி விட்ட பின்னும் ஒவ்வொரு மனிதனும் அந்நியனாக இருக்கும் அபத்தத்தை உணர்ந்து நடப்போம்.இதைப் புரிய மறுக்கும் யாரும் மற்றொரு நாள் அசோக்காக மாறும் நிலை ஏற்படுவது விதியென நினைப்பது அறியாமையே.

( இந்த பதிவு 7-5-2008 அன்று பதிவிடப்பட்டது)

Oct 11, 2008

டீஆரின் புதிய படம்‍--வெளிவராத தகவல்கள்

38 கருத்துக்குத்து

     மீண்டும் ஒரு முறை தன்னை அழுத்தமாய் நிரூபிக்க காதல் கதைகள் கை கொடுக்காதென்று தெரிந்து அதிரடி மசாலா படங்கள் இயக்குவதென்று முடிவு செய்து சில உச்ச நடிகர்களை சந்திக்கிறார் தன்னம்பிக்கையின் தலைமகன் டீ.ராஜேந்தர்(சப்பா.. முடிச்சுட்டேன்).முதலில் சுள்ளான் தனுஷிடம் செல்கிறார்.

  டீஆர்: தம்பி தனுஷு உனக்குத்தான் திரையுலகம்  புதுசு
           எனக்கு பழசு எப்பவும் உண்டு எனக்கு தனி மவுசு

தனுஷ்: சார்.. கதைய சொல்லுங்க சார்.

டீஆர்: உங்கிட்ட இல்லாதது சதை
         எங்கிட்ட இருக்கறது கதை
         வில்லனுக்கு விழும் உதை
         நீதான் கொடுக்கனும் அதை..

         வில்லனுக்கு ஒரு தங்கச்சி
        ஆனா அவளோ உன் கட்சி
        அவள தூக்கிட்டுபோய் வச்சி
        பாட்டு ஒன்னு பாடுற மச்சி..

தனுஷ்: மெலடியா குத்துப் பாட்டா சார்?

டீ.ஆர்: (கையில் சிட்டிகை போட்டுக்கொன்டே பாடத்       துவங்குகின்றார்)
        உன் தங்கச்சியை கண்டேன்
        என் கட்சியில் இழுத்தேன்
        அழைத்ததும் வந்துவிட்டாள்
        அவளுடன் வருவேன்
        வேண்டியதை தருவேன்
        ஆப்பை அவளே வைத்திடுவாள்"னு உன் பாட்டையே ரீமிக்ஸ் பண்ணிடுவோம்...

(அதற்குள் கஸ்தூரிராஜா அங்கே வர ஏரியா சூடாகிறது. இது சிம்புவின் சதி என க.ராஜா சொல்ல தனுஷ் உஷாராய் எஸ்கேப்புகிறார்)

அடுத்து அஜித்திடம் செல்கிறார் டீ.ஆர்.

அஜித் : சார்.வாங்க சார். நான் உங்ள பத்தி பேஸ மாட்டேன். உங்க படம்தான் பேஸனும்.

டீ.ஆர் : உன் வயித்துல இருக்கு பாரு தல  12 பேக்
            பேசும்போதே வருது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
             வாலி ஆசையெல்லாம் உன் பழைய வரலாறு
         இன்னமும் இருக்கு உனக்கும் தமிழுக்கும் தகறாரு

அஜித் : என்ன சார் நீங்க. அத்திப்பட்டி தெர்யுமா ஸார்.  அது ஒரு கர்ப்பு சர்த்திரம். இன்னமும் வய்று எர்யுது ஸார்.

டீஆர்  : உடம்பு மேல ஓடு வச்சிருக்கும் ஆமை
         என் கதையில் வர்ற ஹீரோ ஒரு ஊமை
         இந்தப் படத்துல உனக்கு இல்ல டயலாக்
         ஓப்பனிங் ஸீன்லயே நடக்குது வெட்லாக்..

         க்ளோஸப்புல காட்டுறோம் மும்தாஜோட செஸ்டு
         இதுதான் இந்தக் கதையில வர்ற முதல் ட்விஸ்டு
         அதுக்குள்ள‌ இருக்கு ஒரு பர்ஸ்
         கதைப்படி அவங்க ஒரு நர்ஸ்

அஜித்:  ஸார் அப்டியே ஓப்பனிங் சாங்குக்கு அவ்ங்களையே ஆடிட சொல்ங்க. நான் ஆட்னா பில்லா ஹிட்டானதால‌ அஜித் ரொம்பத்தான் ஆட்றானு சொல்வாங்க.

டீஆர்: அதுதான் உன் படத்துல‌ வழக்கம்
         எனக்கும் இனி அதுதான் பழக்கம்
       பரமசிவன்ல ஆடினங்க ரகஸியா
   இதுல மும்தாஜ் ஆடனும் செக்ஸியா

    இதுதான் ஓப்பனிங் சாங். மை நேம் இஸ் பில்லாவ மறுபடியும் ரீமிக்ஸ் பண்றோம். ரீமிக்ஸையே ரீமிக்ஸ் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட்டு. இதாம்ப்பா பாட்டு. அதுக்கேத்தா மாதிரி உன் உடம்ப நீ ஆட்டு

"பே பே பே பேபே
பேபே பேபே
பே பே பேபே பேபே பேபே
பேபே பேபே
பேபேபே பேபேபே பேபே....."(இதை மை நேம் இஸ் பில்லாவின் ராகத்தில் பாட முடிந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டு வைத்துக் கொள்ளுங்கள்)

அஜித் : பாட்ல அப்பப்ப நான் திர்ம்பி திர்ம்பி பார்க்ற மாத்ரி செய்யலாம் ஸார். பேக்கிரவுண்ட் சவுண்ட்ல “i am back i am back”வச்சிடுங்க ஸார்.

டீஆர்: எனக்கே வேலை சொல்ல நீ யாரு?
         அதுக்கு வேற டைரக்டர நீ பாரு
         திரையுலகத்தில நான் தான் சாரு
        என் ஹீரோ தயிறு நீ வெறும் மோரு

    கோபமாக அங்கிருந்து வெளியேறி விஜயிடம் செல்கிறார் அடுக்குமொழி ஆண்டவன்.அஜித்திடம் கோபப்பட்டு வருவதை அறிந்து ஆவலுடன் வரவேற்கிறார் இளைய தளபதி.(போக்கிரியில் பிரபுதேவாவை அழைப்பது போல ராகத்துடன் அழைக்கிறார்)

விஜய் : அண்ணா... வாங்கண்ணா.. வாங்கண்ணா..

(பதிலுக்கு டீ.ஆர். ஆடுங்கடா பாடலின் பீட்டை வாயாலே போடுகிறார்.போதாதென்று ஒரு குட்டி ஆட்டமும் போடுகிறார்)

விஜய் : அப்புறம் என்னங்கண்ணா மேட்டரு. வீராசாமி மாதிரி ஏதாவது படம் எடுக்கிறீங்களா?

டீஆர்: எலுமிச்சைனா இங்கிலீஷ்ல லைம்
           தமிழ்சினிமால இப்ப உங்க டைம்
            டீஆரு பேச்சுல‌ எப்பவுமே ரைம்
            நாம ஒன்னா படம் பண்ண எய்ம்.

(டீ.ஆரின் சதியை "ககபோ" செய்து கொண்ட தளபதி உஷாராகிறார்)

விஜய்: அண்ணா உங்க படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கும் இன்னும் நடிப்பு வரலிங்கண்ணா. வேணும்னா உங்க பையன் சிம்புவ வச்சி எடுங்க. நான் ஒரு பாட்டு பாடுறேன்.

டீ.ஆர் : என் கையே எனக்கு ஒரு கம்பு
         எனக்கு இன்னுமிருக்கு தெம்பு
         எனக்கு பிடிக்காத பையன் சிம்பு
         ஏன்னா அவன் பொண்ணுங்க சொம்பு.

அதே வேகத்தில் திரும்பி வந்து பிரஸ் மீட் வைத்து அடுத்த படத்தின் பெயர் "கருப்பனின் காதலி" என‌ வெளியிடுகிறார் டீ.ஆர்.

நிருபர்: படத்தோட பேர பார்த்தா விஜய்காந்த் நடிக்கிற படம் மாதிரி தெரியுதுங்களே. யார் சார் ஹீரோ?

டீ.ஆர்: உங்க கேள்வி ரொம்ப நைஸு
        அவருக்கு வைக்கிறீங்க ஐஸு
        எனக்கு இன்னும் ஆகல வயசு
        34 தான் என் இடுப்பு சைஸு

(சிரித்துக் கொண்டே குறிப்பெடுக்க மறந்து செல்கின்றனர் நிருபர்கள்)

Oct 10, 2008

ஒரு பிட்டு படமும் குசும்பனாகும் முயற்சியும்

30 கருத்துக்குத்து

************************************************************************************


 பிட் (PIT) புகைப்படப் போட்டியை பார்த்தபின் நமக்கும் ஆசை வந்துச்சுங்க.. விளமபரம்னு தலைப்பாம்.. ஆனா சாரு அண்ணன் சொன்னமாதிரி எனக்கு இந்தக் கலையை பத்தி எதுவும் தெரியாமல் போட்டிக்கு போக வேண்டாம்னு தோணுச்சு. அதுக்காக‌ லூஸ்ல விட முடியுமா? நமக்குத்தான் சொந்த வீடு இருக்கேனு எடுத்துட்டேன்.. மொபைல் கேமிரா என்பதால் தெளிவாக இல்லை.

Oct 8, 2008

நான் நான் தான்....

26 கருத்துக்குத்து

         தன் வயதையொத்த சிறுவர்கள் எல்லாம் புழுதியில் புரண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்க பாபு மட்டும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். பன்னிரெண்டு வயதில் யாருக்கும் இயல்பாய் வராத பயம் பாபுவிற்கு வந்தது.அடுத்து வாழ்க்கைகயில் என்ன செய்யப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையில் இருந்தான்.பச்சாதாபமற்ற இவ்வுலகை எப்படி எதிர்கொள்வது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா, மாமா மற்றும் மாமன் மகள் இந்து மட்டும்தான்.இன்று அவர்களை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டான் பாபு.

         விளையாடிக்கொண்டிருந்த சிறுவனில் ஒருவன் இவனருகில் வந்து "யார் நீ?" என்றான்.

      "பாபு" என்ற ஒற்றை வார்த்தை பதிலை வெகு நேர யோசனைக்குப் பின் சொன்னான்.
       "இதுக்கு முன்னால ஒன்ன பார்த்தது இல்லையே.யார் வீடு" என்று தொல்லையை தொடர்ந்தான் அவன்.
      "நான் ஊருக்கு புதுசு"
     "புதுசுன்னா தனியாவா வருவாங்க.யார் கூட வந்த?உன் அம்மா அப்பா இல்லை"

      "த‌னியாத்தான் வந்தேன்.என‌க்கு இங்க‌ யாரையும் தெரியாது" என்றான் பாபு.

  ஏதொ ப‌ட‌மெடுத்த‌ நாக‌த்தை க‌ண்ட‌து போல் ப‌ய‌ந்து ஓடினான் அவ‌ன்.ஓடிய‌வ‌ன் த‌ன் ச‌காக்க‌ளிட‌ம் இவ‌னைப் ப‌ற்றி சொல்வ‌தை எந்த‌ ச‌ல‌ன‌முமின்றி பார்த்துக் கொண்டிருந்தான் பாபு.விளையாடுவ‌தை நிறுத்திவிட்டு இவ‌னை நோக்கி எல்லோரும் வ‌ந்தார்க‌ள்.வ‌ந்த‌வ‌ர்க‌ள் அவ‌னை சூழ்ந்து கொண்டு சிரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் முழித்தான் பாபு.

     "ஒனக்கு வீடே இல்லையா?" என்றான் ஒருவன்.இவன் இல்லை என்பது போல் தலையாட்ட சிரிப்பு பலமானது.

       "நீ யாருன்னு உனக்கே தெரியாதா?" என்ற அடுத்தவனின் கேள்வி இவனை நிலைத் தடுமாற செய்தது.இவன் முழிப்பதைக் கண்ட அவர்களின் சிரிப்பொலி இன்னும் சத்தமானது.அடுத்தடுத்து அவர்கள் கேட்பதும் இவன் முழிப்பதும் அவர்கள் இன்னும் பலமாக சிரிப்பதும் பாபுவை அசிங்கப்பட வைத்தது.சாரிடான் விளம்பரத்தில் வருவதைப் போல் பயங்கர உருவம் கண்ட பலர் இவன் தலைக்குள் அடிப்பதும் சிரிப்பதும் போல் உணர்ந்தான். வெறுப்பும் கோபமும் அவனுள் தோண்றியது.என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து ஒருவனின் தலையில் ஓங்கி அடித்தான். பறவைகள் கூட்டமாக பறக்கும்போது ஒரு பறவை மட்டும் வேடனின் குண்டுக்கு இரையாகினால் அக்கூட்டம் எப்படி சிதறுமோ அதுப்போல் ஆளுக்கொருப்பக்கம் தலைத்தெறிக்க ஓடினார்கள்.ஒரு கணம் பேயறைந்தது போல் நின்ற பாபு அவர்கள் ஒடுவதைக் கணடு புன்னகைத்தான்.மெல்லிய புன்னகை மெல்ல சிரிப்பாக மாறியது.வெகு தூரம் ஓடிய பின் ஒருவன் பாபுவைத் திரும்பிப் பார்த்தான்.செங்கல்லை இன்னமும் அவன் கையில் இருப்பதைக் கண்ட அவன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கினான். இதைப் பார்த்த பாபுவிற்கு உற்சாகம் தலைக்கேறியது.சத்தம் போட்டு சிரிக்க தொடங்கினான்.அவர்கள் அனைவரது மொத்த சத்தத்தை விட அதிக சத்தம் வேண்டுமென்று இன்னும் பலமாய் சிரிக்க தொடங்கினான் பாபு.

       சிறிது தூரத்தில் அடிவாங்கிய சிறுவனின் நண்பன் ஒருவன் இருவது வயது மதிக்கதக்க இரு வாலிபர்களோடு இவனை வழி மறித்தான்.பாபுவின் கையில் இன்னமும் அந்த செங்கல்லை கண்ட அவன் ஒரு வித பயத்துடனே இவன்தான் என்று கைக்காட்டினான்.

    "யார்ரா நீ?எதுக்கு அவன அடிச்ச?" என்றான் ஒருவன்.மறுபடியும் "யார் நீ?" என்ற கேள்வி பாபுவைக் கலவரப்படுத்தியது.

     "பாபு" என்றான் சன்னமான குரலில்.

     "பாபுன்னா பாரத பிரதமரா? யாருன்னு ஒழுங்கா சொல்லுடா.உங்க அப்பா எங்க இருக்காருனு சொல்லு" என் மிரட்டினான் இன்னொருவன்.மீண்டும் அதே கேள்வி அவனுக்கு வெறுப்பை தந்தது.

     "பாபுன்னு சொல்றேன் இல்ல.அப்புறம் யார் யார்னு கேட்டா என்ன சொல்றது" என்றான் சற்று சத்தமாக.இதை சொல்லும்போதே சற்று பெருமையாகவும் சந்தோசமாகவும் உனர்ந்தான்.

      "ஒழுங்கா பதில் சொல்லுடா பொடிப்பையா" என்ற படி அவனை அடிக்க எத்தனித்தான் ஒருவன்.சிங்கத்திடம் சிக்கிய மானின் கடைசிப் போராட்டத்தைப் போல அவனையும் செங்கல்லால் அடிக்க முயன்றான்.லாவகமாக இவன் கையை முறுக்கி முதுகில் குத்தினான்.வலித்தாங்காமல் கத்தினான் பாபு."சொல்லு,நீ யாருன்னு சொல்லு" என்றபடி அடிப்பதை தொடர்ந்தனர் இருவரும்.அவர்கள் அடிப்பதை விட அவர்கள் கேட்கும் "யார் நீ?" என்ற கேள்வியே அவனுக்கு அதிகம் வலித்தது.ஒவ்வொரு அடிக்கும் "நான் பாபுதான்..நான் பாபுதான்" என்று கத்த தொடங்கினான்.வலித்தாங்கி கொண்டு தன் பேர் சொல்வதில் இனம் புரியாத ஒரு வித இனபத்தை கண்டான்.மெல்ல சிரிக்க ஆரம்பித்தான்.இவன் சிரிப்பதைக் கண்டு அவர்கள் வேகமாக அடிக்க தொடங்க, இவனும் "நான் பாபுதான்" என்று சத்தமாய் சிரித்துக் கொண்டே சொன்னான்."பாபுனு நீயே பேர் வச்சிகிட்டியா?உங்க அம்மா அப்பாதானே வச்சாங்க? யாரு அவங்க?எங்க இருக்காங்கனு சொல்றா..அது வரைக்கும் உன்ன விட மாட்டோம்" என்று அவர்களும் அடிப்பதை நிறுத்தவில்லை.

       அவர்கள் அதை சொன்ன போது, அவன் பேரும் அவனுக்கு சொந்தமில்லை.அவன் அப்பா வைத்தது என நினைத்தான் பாபு.இப்போது அவனுக்கு "நான் பாபு தான் " என்று கத்த மனம் வரவில்லை.. " நான் நான் " என இழுத்தான்.அவர்களும் அடிப்பதை நிறுத்த இவன் என்ன சொல்வது எனத் தெரியாமல் "நான் நான் " என்று அழத்தொடங்கினான்.இவனது விசித்திர குண‌த்தைக் கண்ட அவர்களும் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.முதுகை விட அவனுக்கு மனசு வலித்தது.அவன் அம்மா இவனை எரிச்சலுடன் "டேய் பாபு" "பாபு நாய" என்று அழைத்ததை எண்ணினான்.இப்போது அவனுக்கு பாபு என்ற பேரே பிடிக்காமல் போனது.. நான்.. நான்.. பாபு.. இல்ல.." என்று முனகி கொண்டே கீழே சரிந்தான்.இமைகள் மெல்ல மூடத் தொடங்கின.உதடுகள் மட்டும் "நான் பாபு இல்ல" என்று முனகி கொன்டிருந்தது.

    அப்படியே மயக்குமுற்ற அவனின் உள்மனதில் அவனின் சிறுவயது ஞாபகங்கள் ஓடத் தொடங்கியது. மூன்றாவது படிக்கும் போது இவன் அப்பா வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போனது, அதன் பின் எல்லோரும் இவன் அப்பவின் செய்கையாலே அடையாளம் கண்டது, அவர் செய்த தவறு என்னவென்று அறியா வயதிலே அவர் மீதான வெறுப்பு, முதலில் பாசமாக இருந்த அம்மாவும் நாள‌டைவில் எரிச்சலுற்றது, இந்து அவனுக்கு நல்ல சாப்பாடு கொடுத்தாள் என்பதற்காக அவன் மாமா அவளுக்கு உதையும்,இவனுக்கு சூடும் போட்டது என எல்லாம் அவன் மனத் திரையில் மங்கலாக ஓடியது.தான் உண்மையாக சிரித்த நாள் அவன் நினைவில் இல்லவே இல்லை.உச்சகட்ட காட்சியாக ,ஆந்திராவிற்கு வேலை செய்ய இவன் அம்மாவும் மாமாவும் இவனை முரட்டு மீசைக்காரனிடம் விலை பேசியதை கண்டு லாரி ஏறி இந்த ஊருக்கு ஓடி வந்த காட்சியோடு முடிந்தது.

       நினைவு வந்து கண் திற‌ந்து பார்த்தான்.எதிரே ஒரு போலிஸ் நின்று கொண்டிருந்தார். இவன் கண் திறந்ததைக் கண்டவுடன் கையில் ஒரு பேப்பருடன் வந்த அவர் " யார்ரா நீ?உன் பேரென்ன?" என மிரட்டினார்.கண்விழித்த அடுத்த நொடியே அதே கேள்வியை எதிர் கொண்ட அவனுக்கு,அப்படியே கண் மூடியே போயிருக்கலாமென்று தோண்றியது.இந்த முறை கேட்டவர் போலிஸ் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தான்.அப்போது அங்கே வந்த டாக்டர் போலிஸை கடிந்து கொண்டு வெளியே இருக்குமாறு சொன்னார். அருகில் வந்த டாக்டர் "தம்பி பயப்படாதே.நான் இருக்கிறேன்" என்றார்.சற்றே ஆறுதலாய் உனர்ந்தான்.அவன் தலையில் கைவைத்து தடவிய அவர் அவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.அதை அவன் குடித்து கீழே வைக்கும்  போதே டாக்டர் அவனிடம் " இப்போ சொல்லுப்பா..யார் நீ?உன் பேரென்ன?" என்றார்.கண் மூடி ஒரு கணம் யோசித்த அவன் தீர்க்கமாக சொன்னான் "நான் நான் தான்..."..சொல்லிவிட்டு மீண்டும் படுத்தான்.அவன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கியது.

Oct 7, 2008

காக்டெயில்

33 கருத்துக்குத்து

   பரிசலின் அவியல், வடகரை வேலனின் கதம்பம், லக்கியின் கூட்டாஞ்சோறு போன்றவற்றை படிக்கும் போது அவையெல்லாம் அவ்வபோது நாம் சொல்ல நினைக்கும் சிறுசிறு விஷயங்களை சொல்ல வசதியாக இருப்பதை கவணித்திருக்கிறேன்.அது போல் நான் எழுதினால் பரிசல் உப்யோகப்படுத்திய " நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்" என்ற தலைப்பை அவரிடம் இருந்து ஒரு விலைக்கு வாங்கி விடுவது என்று முடிவு செய்திருந்தேன். திடிரென நேற்று இரவு(அட, ட்ரெயினல வரும்போதுங்க) காக்டெயில் என்பதும் பொருத்தமாக இருக்கும் எனத் தோண்றியது. பாவம் பரிசலுக்குதான் சில ஆயிரம் நட்டம்.

*************************************************  "சாளரம் என்ற பெயரை மாத்துடானு" என் நண்பன் சொன்னதைக் கேட்டு ஓட்டுப் பொட்டியெல்லாம் தொறந்தா நாலாப்பக்கத்தில் இருந்தும் அம்புகள் பாய்ந்தன. சாளரமே இருக்கட்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. அப்படி சொல்லியப் பிறகும் தேர்தலை மதித்து வாக்கும் அளிக்க அவர்கள் மறக்கவில்லை. கிட்டத்தட்ட் 80வாக்குகள் பதிவாயின. அதிலும் என் பெயர் கார்க்கிக்கு 20 வாக்குகள் பதிவாயிருக்கின்றன. நெஞ்சார்ந்த நன்றி நண்பர்களே.. சத்தியமாய் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

*************************************************

     சென்னை பதிவர் சந்திப்பை பற்றிய‌ விரிவான விவரங்கள் ஏற்கனவே பலரால் தரப்பட்டுள்ளது. பல மூத்த பதிவர்களையும் என்னைப் போன்ற புதிய பதிவர்களையும் நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியே. இருந்தும் இன்னும் கொஞ்சம் தெளிவான திட்டத்தோடு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோண்றியது.(எதையும் ப்ளான் பண்ணி பண்ணனுமோ) அதிலும் ஞானி அவர்கள் வந்தவுடன் அனைவரும் அவரிடம் சென்று கைகுலுக்கி தங்களை அறிமுகம் செய்துக் கொள்வதில் காட்டிய ஆர்வம் ஏனோ எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல் அவரிட‌ம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் "சரியான" பதில் தர இன்னும் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தேன். பாலபாரதி சொன்னது போல் பதிவர் சந்திப்பில் வேற என்ன நடக்கும் மொக்கைதான் என்பது தெரியாமல் வேறு மாதிரி எதிர்பார்த்து போனது என் தவறோ?

*************************************************

     சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிஷா என்னிடம் எப்படி ஒரு நாளைக்கு நாலு பதிவு போடுறப்பா என்றார். இந்தக் கேள்வியை தாமிர உட்பட சிலர் ஏற்கனவே கேட்டிருந்ததால் ஆச்சரியப்படவில்லை. நிஜமாக சொன்னால் என் பிறந்த நாள் அன்று மட்டும்தான் நாலு பதிவு போட்டேன். அதுவும் அன்று முழுவதும் வேலையே செய்யக் கூடாதென்ற முடிவு எடுத்திருந்ததால் வேறு வழியில்லாமல்(?) செய்த ஒன்று அது.சில நாட்கள் இரண்டு பதிவு போட்டதுண்டு என்றாலும் அதற்கு மேல் போட்டதில்லை. இனிமேல் ஒன்றுதான். பயப்பட வேண்டாம்

*************************************************

     என் வலையை என் அண்ணனும் அக்காவும் படிப்பதுண்டு. ஏதோ எழுதுகிறேன் என்று என் அம்மாவிற்கு தெரிந்தாலும் படித்ததில்லை.  ஐரோப்பாவில் உள்ள என் அண்ணனுடன் நாங்கள் வீட்டில் இல்லாத போது சாட்டிங் செய்ய கற்றுக் கொண்டார். ஜிடாக்கில் என் பெயருக்கு நேராக www.iamkarki.blogspot.com என்று இருப்பதை பார்த்து அதை கிளிக்கி படித்திருகிறார். என் நேரம், அன்று நான் எழுதியிருந்தது "டக்கீலாவும் ஷகீலாவும்‍ ஒரு ஆய்வுக் கட்டுரை”

Oct 3, 2008

மூக்கு கண்ணாடி

26 கருத்துக்குத்து

      அந்த ஒரு மழைக்கால மாலையில் கடைவீதியில் பார்த்தேன் அவளை. சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக, ஆர்ப்பரிக்கும் கடற்கரை சத்தத்தில் " விதியிருந்தா மறுபடியும் பார்ப்போம்" என்று சொல்லி விடைபெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருந்தது எனக்கு. அவள் பேரைக் கேட்டாலே மனம் கணக்கும். நேரில் பார்த்தால்.. விரட்ட விரட்ட சேரும் தூசியைப் போல்தான் அவள் நினைவு. இந்த சந்திப்பை மறக்க இன்னும் எத்தனைக் காலமோ? அவள்தான் வீட்டிற்கு அழைத்தாள். என் உயிர் அழைக்க உடல் பின்னாலே சென்றது.

     விடாமல் பேசினாள். அவள் கணவனின் சமீபத்திய பதவி உயர்வு, மாமியாரின் கணிவு, பிள்ளையின் அறிவு என எல்லாம் நல்லபடியாக இருப்பதாக பெருமைப்பட்டாள். அவள் எப்படி இருக்கிறேன் என்றோ நான் எப்படி இருக்கிறேன் என்றோ மறந்தும் பேசவில்லை. லேசாக வலித்தது என் சிறு இதயம்.

     சாப்பிட சொன்னாள். "மனசு நிறைஞ்சுடுச்சு" என்று சொல்லி வந்துவிட்டேன். தூறல் என்னை நனைத்தது. எனக்காக வானம் அழுவதாய் நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போதுதான் என் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டதைக் கண்டேன். திரும்ப அவளின் வீட்டிற்குச் சென்றேன். என் கண்ணாடியை அணிந்துக் கொன்டு க‌ண்ணாடி முன் நின்றுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் வெடுக்கென கழட்டி தந்தாள். வார்த்தை பேசாமல் வெளியே வந்த போதுதான் பார்த்தேன். மூக்கு கண்ணாடியின் இரு முனைகளிலும் முத்து முத்தாய் தேங்கியிருந்தது அவளின் இரு சொட்டுக் கண்ணீர். வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது.

Oct 2, 2008

முதல் முத்தம்

47 கருத்துக்குத்து

 

   முதன்முறை எப்போது..

   ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

    அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு.

      மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

     மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம்  சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரிய்வில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

     மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்று உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடிரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

     உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருனத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சினுங்கினாய்.

      நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

     அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன்.  “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய். நீ சென்ற பின் அமைதியாய்த்தான் இருந்தது ஃப்ரெஞ்சு வீதி. என் மனம்தான் ஏனோ, அதிவேக ரயில் ஒன்று சற்று முன் கடந்த தண்டவாளம் போல் அதிர்ந்து கொண்டே இருந்தது. இன்னமும்தான்.

     இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது..

‘‘குழந்தையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...

சிரிக்கும் குழந்தையை
தேடித்தேடி ரசிக்கிறேன்...

நீதானடி என் தெய்வம்..’’

Oct 1, 2008

உலக யுத்தம்

27 கருத்துக்குத்து

 

    "எதையோ நான் கிறுக்கிட்டு இதுவும் கவிதை என்பேன். அதையும் நீ படித்து விட்டு புரிந்துக் கொள்ள பட்ட சிரமங்கள் எத்துனை அழகு தெரியுமா?

    கடற்கரை சாலையில் நாம் நடை பயின்ற போது வானம் தூறியது. உனக்கு குடை விரித்தாய். தூறல் மழையான போது எனக்குப் பிடித்தாய். இருந்தும் நான் நனைந்தேன், உன் அன்பில்.

     மழையில் நனைந்துக் கொண்டே நாம் ஐஸ்கீரிம் உண்டோம். அதிலென்ன ஆச்சரியம்? அந்தக் குச்சியை உன் தோட்டத்தில் நட்டு வைத்தாயே, அது?

   மழையோடு மழையாக நாமும் பூங்காவிற்கு சென்றோம். எதிர்பாராதவிதமாய் நீ அளித்த முத்தத்திற்கு நாள் முழுவதும் ஒரு ஆனந்த மெளனம் காத்தேன். நீயோ இனிமேல் என்னைப் பேச வைக்காமல் இருப்பதிலே கண்ணாய் இருந்தாய்.

     ஒரு நாள் உன் வீட்டில் விருந்தாளிகள் வந்திருந்தார்கள். நான் அழைத்தபோது ஏதோ ஒரு பரபரப்பில் எடுக்காமல் விட்டுருப்பாய்.

    அடுத்த நாள் நான் குளியலறையில் இருந்த போது நீ அழைத்தாய். அடித்தடித்து ஓய்ந்தது. அன்றே நான் உன்னை அழைத்தபோது பழிக்குப் பழி வாங்குவதாய் நினைத்து துண்டித்தாய்.

     மாலையில் நீ என்னைப் பார்த்த போது தீப்பிடித்த திமிர் என்னைத் திசை திருப்பி விட்டது. அதன் பின் ஆண்டுகள் பல உருண்டு விட்டன.

    இன்று வரை நாம் எந்த வித தொடர்புமின்றி கிடப்பதை நினைக்கும் போது "மனித இனப் பரிணாமத்தில் மிருகம் என்ற ஒன்று கலையப்பட்ட ஒன்றல்ல, கரைக்கப்பட்ட ஒன்று".

 

all rights reserved to www.karkibava.com