Sep 12, 2008

நாயகன் Vs நாயகன் (J.K.ரித்தீஷ் ஸ்பெஷல்)


       வீரத்தளபதி ஜே.கே.ஆரின் "நாயகன்" உலகெமங்கும் வெற்றி ஓட்டம் ( நமக்கு வெற்றி நடை எல்லாம் சும்மாங்க)ஓடிக்கொண்டிருக்கிறது.நமது சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து பதிவர்கள் பலரும் (லக்கி, உண்மைத்தமிழன், கோவி.கண்ணன் ஆகியோர் அதில் முக்கியமானோர்) விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக சங்கத்தலைவி ராப் அறிவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் "நாயகனை" 1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாயகனோடு ஒப்பீட்டு அலசுவதே இந்த பதிவின் நோக்கம்,

  முதலில் இந்த இரு படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பார்ப்போம்.

1) இரண்டு படங்களுமே ஹிட் என்பது முதல் ஒற்றுமை.

2) இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவின் மைல்கல் என்பது விமர்சகர்களின் கருத்து.

3)இந்த படங்களுக்கு பின் இருவரின் ரசிகர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்தது.

4)இரண்டு படங்களுமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிறார்கள்.

5) இரண்டு படங்களுக்கும் சமீபத்தில் தான் நம்ம தல லக்கி விமர்சனம் எழுதினார்

6) இந்த படத்திற்காக கமல் அவர்கள் தேசிய விருது பெற்றார். அடுத்த ஆண்டு எங்க தல ஜே.கே.ஆரும் தேசிய விருது பெறுவார் என்பது தமிழக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

7) நிலா நிலா ஓடி வா க்கு இணை இல்லையென்றாலும் நிலா அது வானத்து மேலே வும் ஹிட்டான பாடல்தான்.இரண்டு படத்தின் இசையும் உலகதரத்தில் அமைந்தது மற்றுமொரு ஒற்றுமையாகும்.

8) கதைக்கேற்ப இருவருமே பல்வேறு கெட்டப்களில் தோண்றினார்கள்

     இனி இருக்கும் ஒரு சில வேற்றுமைகளை பார்ப்போம்.

1) ஜே.கே.ஆரின் நடனம் புதிய நாயகனின் ஒரு சிறப்பம்சமாகும். கமலின் நாயகனில் அது ஒரு குறை.

2) இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே. ஆனால் அந்த நாயகனின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி.

3) கமலால் இன்னொமொரு நாயகன் இது வரை தர முடியவில்லை. ஆனால் அடுத்து படமே வீரத்தளபதியின் தளபதி பட்டைய கிளப்ப வருகிறது.

4) கமலுக்கு சமமாக ரஜினி அப்போது இருந்தார், ஆனால் எங்க தலைக்கு இணையாக யாருமில்லை. அத்னால் இந்த வெற்றியை குறைத்து மதிப்பிட்டு சிலர் கூறுகிறார்கள்.

32 கருத்துக்குத்து:

yuva on September 12, 2008 at 11:43 AM said...

Ada ada ada
ithukku paer thaan
"Vanjap pugazhchi"

கோவி.கண்ணன் on September 12, 2008 at 11:54 AM said...

சூப்பரோ சூப்பர் ஸ்டார் ஜேகேஆரின்
ரசிகர் மன்ற கொடியில் ஒன்றை சிங்கைக் கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ரசிகர்கள் கூட்டமாக கொடி ஏற்ற ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம், ஏமாற்றி விடாதீர்கள்.

ரஜினிக்கு சத்தியநாராயணன்
ஜேகேஆருக்கு கார்க்கி தான் வீரத் தளபதி

முரளிகண்ணன் on September 12, 2008 at 11:57 AM said...

என்னத்த சொல்ல?

கார்க்கி on September 12, 2008 at 12:11 PM said...

//சூப்பரோ சூப்பர் ஸ்டார் ஜேகேஆரின்
ரசிகர் மன்ற கொடியில் ஒன்றை சிங்கைக் கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்//

பொருள் குற்றம் கோவியாரே... நீங்கள் சொல்வதை படித்தால் ஏதோ எங்க தலை நாலஞ்சு விதமான கொடி வச்சிருக்கிற மாதிரி தோணுது.. இப்படி மாத்துங்க..

சூப்பரோ சூப்பர் ஸ்டார் ஜேகேஆரின்
ரசிகர் மன்ற கொடி ஒன்றை சிங்கைக் கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

கார்க்கி on September 12, 2008 at 12:13 PM said...

//ரஜினிக்கு சத்தியநாராயணன்
ஜேகேஆருக்கு கார்க்கி தான் வீரத் தளபதி//


எங்கள் தலையை ரஜினியோடு ஒப்பிட்ட கோவியாரின் நுண்ணரசியலை கண்டித்து சிங்கப்பூருக்கே ஒரு ஆட்டோ அனுப்புமாறு சங்கத்தின் அடாவடி அணி தலைவர் தாமிராவை கேட்டுக்கொள்கிறேன்

கார்க்கி on September 12, 2008 at 12:17 PM said...

//என்னத்த சொல்ல?//


உண்மைய சொல்லுங்க...

நிஜத்த சொல்லுங்க..

ஜே.கே.ஆர் வாழ்கனு சொல்லுங்க..

நாயகன் சூப்பர்னு சொல்லுங்க..

அட இவரு வெள்ளை எம்.ஜி.ஆருனு சொல்லுங்க..

ஆனா குள்ள எம்.ஜி.ஆருனு சொன்னா ஆட்டோ வரும்..

Sen22 on September 12, 2008 at 12:24 PM said...

//சூப்பரோ சூப்பர் ஸ்டார் ஜேகேஆரின்
ரசிகர் மன்ற கொடியில் ஒன்றை சிங்கைக் கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். ரசிகர்கள் கூட்டமாக கொடி ஏற்ற ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம், ஏமாற்றி விடாதீர்கள்.

ரஜினிக்கு சத்தியநாராயணன்
ஜேகேஆருக்கு கார்க்கி தான் வீரத் தளபதி//

repeattaaiiiiiiii...

narsim on September 12, 2008 at 12:45 PM said...

வேற்றுமைல 2 வது பாயிண்ட்.. "பாயிண்ட்டையே" பிடிச்ச மாதிரி இருக்கு தலைவா..

நர்சிம்

கார்க்கி on September 12, 2008 at 12:52 PM said...

@ சென்,

உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா தோழரே?

@ நர்சிம்,

//வேற்றுமைல 2 வது பாயிண்ட்.. "பாயிண்ட்டையே" பிடிச்ச மாதிரி இருக்கு தலைவா.//

ஹிஹிஹிஹி

விஜய் ஆனந்த் on September 12, 2008 at 1:05 PM said...

// கார்க்கி said...
@ சென்,

உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா தோழரே? //

:-))))...

உங்களுக்குதான அடுத்தது..
டைம் சொல்லிட்டீங்க..தேதி???

பதிவு தானத்தலைவன பத்தி இருக்கறதால நோ கமெண்ட்ஸ்...அவரு கருத்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரு!!!

கார்க்கி on September 12, 2008 at 1:24 PM said...

//உங்களுக்குதான அடுத்தது..
டைம் சொல்லிட்டீங்க..தேதி???//

அதுக்கென்னங்க இப்போ அவசரம்... எல்லாம் 2 3 வருஷம் கழிச்சு செஞ்சிக்கலாம்..

sridhar said...

ஒரு நாள் உனக்கு உண்மையிலே ஆட்டோ வரப்போது.. அன்னைக்கு இருக்குடி உனக்கு கச்சேரி

பரிசல்காரன் on September 12, 2008 at 3:39 PM said...

கார்க்கி,

:-(

இந்தப் பதிவு குறித்த ஒரு வருத்தம் எனக்குண்டு. தனி மின்னஞ்சலில் அதைச் சொல்கிறேன்.

Bleachingpowder on September 12, 2008 at 4:00 PM said...

//இந்தப் பதிவு குறித்த ஒரு வருத்தம் எனக்குண்டு. தனி மின்னஞ்சலில் அதைச் சொல்கிறேன்//

அது என்னவென்று எனக்கு தெரியும்.

//நமது சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து பதிவர்கள் பலரும் (லக்கி, உண்மைத்தமிழன், கோவி.கண்ணன் ஆகியோர் அதில் முக்கியமானோர்) விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக சங்கத்தலைவி ராப் அறிவித்திருக்கிறார்//

எப்படி நீங்க நம்ம பரிசல்காரரை இந்த லிஸ்ட்ல சேக்காம விட்டீங்க.


இதுக்கு எதுக்கு பரிசல்காராரே தனிமடல் எல்லாம், ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுங்க

பரிசல்காரன் on September 12, 2008 at 4:10 PM said...

//
எப்படி நீங்க நம்ம பரிசல்காரரை இந்த லிஸ்ட்ல சேக்காம விட்டீங்க.//

அதெல்லாம் அல்ல பவுடரே..

உண்மையாகவே வருத்தமான விஷயம். அவருக்கு சொல்லியாச்சு!

என்னா சகா.. சரிதானே?

கார்க்கி on September 12, 2008 at 4:40 PM said...

//உண்மையாகவே வருத்தமான விஷயம். அவருக்கு சொல்லியாச்சு!//

சொன்னது தப்பே இல்ல... என்னன்னு நீங்களே சொல்லிடுங்க :(

Anonymous said...

:))))

Bleachingpowder on September 12, 2008 at 5:19 PM said...

//உண்மையாகவே வருத்தமான விஷயம். அவருக்கு சொல்லியாச்சு!//

சூதுவாது தெரியாத புள்ள பாத்து பக்குவமா சொல்லுங்க பரிசல்காரரே

Bleachingpowder on September 12, 2008 at 5:24 PM said...

//சொன்னது தப்பே இல்ல... என்னன்னு நீங்களே சொல்லிடுங்க :(
//

மன்னிக்கவும். நீங்க எதோ சீரியஸான மேட்டர பத்தி பேச்சிகிட்டு இருக்கற மாதிரி தெரியுது. நான் வேற இடம், பொருள், ஏவல் தெரியாம கும்மி அடிச்சிட்டிருக்கேன்.

ஜோசப் பால்ராஜ் on September 12, 2008 at 5:42 PM said...

என்னமா தூங்குறாருப்பா நம்ம கார்க்கி, யாராவது அவரப்போயி எழுப்பிவிடுங்கப்பா.

கார்க்கி, தன்னம்பிக்கை ரொம்ப நல்லது. ஆனாலும் இது ரொம்ப அதிகமா தெரியலை?

வால்பையன் on September 12, 2008 at 9:26 PM said...

கலக்கிட்டீங்க!
கோவிஜி சொல்வதை போல் நாயகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் நீங்கள் தான்

கார்க்கி on September 13, 2008 at 9:47 AM said...

நன்றி வால்பையன்.. இன்றிலிருந்து நான் "வீரத்தளபதியின் போர்படை தளபதி" என்று அழைக்கபடுவேன்..

கார்க்கி on September 13, 2008 at 9:48 AM said...

@பால்ராஜ்,

தூங்கறேனா? புரியல தோழரே

கார்க்கி on September 13, 2008 at 9:49 AM said...

@ப்ளீச்சிங் பவுடர்

அட, கும்மிக்கு ஏது எல்லை? நீங்க அடிங்க சகா

புதுகை.அப்துல்லா on September 13, 2008 at 4:32 PM said...

என்ன கார்க்கி அண்ணே.... நம்ம தலய இந்த கமல் மாதிரி சோதா ஆளுங்களோட ஓப்பிடுறீங்க. உங்களூக்கே இது நல்லா இருக்கா?
:))))))


அப்துல்லா
பொருளாளர்
அண்ணன் ரித்தீஷ் மன்றம்

கார்க்கி on September 13, 2008 at 6:19 PM said...

அப்துல்லாவின் கருத்து ஏற்கபட்டு விட்டது.. இனிமேல் தலைவரை டாம் க்ரூஸ் ,சாமுவேல் ஜாக்சன், அல் பசினோ வுடன் ஒப்பிட்டு எழுதுமாறு சங்கத்து சிங்கங்களை(அட நல்லாயிருக்கு இல்ல?) கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு,

வீரத்தளபதியின் போர்படை தளபதி கார்க்கி

rapp on September 16, 2008 at 2:27 PM said...

அற்புதமானப் பதிவு. ஆழமானக் கருத்துக்கள். மேன்மையான அலசல். அகமகிழ்ந்தேன் என நம்ம தல சொல்லச் சொன்னார். வழிப்போக்கன் அவர்களின் பதவியை சந்தில் சிந்து பாடி லவுட்டிட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

கார்க்கி on September 16, 2008 at 2:44 PM said...

//வழிப்போக்கன் அவர்களின் பதவியை சந்தில் சிந்து பாடி லவுட்டிட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................//

என்ன?????? பதவியா?????? யாருக்கு வேணும்? நான் அவரின் போர்படை தளபதி.. எனக்கு எந்த பதவியும் வேண்டாம்..

Balaji said...

யப்பா முடியல!!!!!!!! விட்டுடுங்க Please.................

Chuttiarun on November 26, 2008 at 12:02 PM said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

முரளிகண்ணன் on November 26, 2008 at 3:33 PM said...

addakaasam

RAMASUBRAMANIA SHARMA on November 26, 2008 at 3:34 PM said...

GOOD "MARK ANTONY" KARKY AVARKALE VARUKA...VARUKA....THODARNTHU UNGALTHU NAKKAL PATHIVUKALAI ITTU, SUMMA PINNUGA....

 

all rights reserved to www.karkibava.com