Sep 23, 2008

Flash News :பதிவரை வாழ்த்திய டீ.ஆர்.


(இதுக்கெல்லாம் ஒரு அசாதாரணமான துணிச்சல் வேணுங்க.  அட  அவருக்கு இல்லைங்க, என் வலைல இது போடுறதுக்கு)

வந்துட்டேன்டா டீ.ஆரு‍
என்னை எதிர்க்க இங்க யாரு?
சொல்லப் போறேன்டா வாழ்த்த
நம்ம சகா கார்க்கிய பார்த்து..

நம்ம தம்பி பேரு கார்க்கி
ஏரியால பட்ட பேரு பொறுக்கி
ஐரோப்பால இருக்கு துருக்கி
ரைமிங்கா முடிக்கனும் நறுக்கி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

முதல்ல பார்த்தப்போ இவன் வயசு பதினாலு
ஆனா அப்பவே இவரு ரொம்ப பெரிய ஆளு..
சின்ன வயசுல இவன் என்ன விட ரொம்ப வாலு
புல்ல போட்டா போதும் மாடு த‌ரும்  பாலு..

பத்து வயசுல சொன்னாரு முதல் கவிதை
அது அவரு போட்ட காதலுக்கான விதை
இன்னைக்கு அவரு எழுதாம விட்டது எத?
அடுத்த முதல்வருதான் சொல்றாரு இத..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

"பகல்ல வெள்ளையடிக்கிறான்
நைட்ல‌ கொள்ளையடிக்கிறான்
கேட்டா பல்லுடைக்கிறான்.. "

இத எழுதனப்ப இவர் வயசு பத்து
அப்பவே சொன்னேன் இவர் முத்து
கவிதையுலகத்துக்கு பெரிய சொத்து
ஒத்துக்காதவங்க கொஞ்சம் ஒத்து...

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

23 கருத்துக்குத்து:

SK on September 23, 2008 at 3:05 PM said...

me the firstuuuuu

video avasiyam paakanumaa ??

rapp on September 23, 2008 at 3:11 PM said...

me the second

rapp on September 23, 2008 at 3:12 PM said...

//புல்ல போட்டா போதும் மாடு த‌ரும் //
உங்க ஊர்ல மாடு 'புல்' போட்டா பால் தருமா? :):):)

விஜய் ஆனந்த் on September 23, 2008 at 3:14 PM said...

முடியல சாமி...

நா ஒத்துக்கறேன்...

rapp on September 23, 2008 at 3:14 PM said...

உங்க பிறந்தநாள் பரிசாக விசுவின் 'வா மகளே வா' பட டிவிடி அனுப்பி வைக்கப்படும்னு தெரிவித்துக்கொள்கிறேன்.

SK on September 23, 2008 at 3:22 PM said...

ராப் அந்த படம் அவளோ கேவலமா??

நீங்க சமிபத்துலே TR பேட்டி பாத்தீங்களா

SK on September 23, 2008 at 3:23 PM said...

karki,

http://in.youtube.com/watch?v=583A2jqmnIw

rapp on September 23, 2008 at 3:31 PM said...

//ராப் அந்த படம் அவளோ கேவலமா??
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................... நான் பரிசுன்னு சொன்னா அது மோசமான படமாத்தானா இருக்கணும்? ஹி ஹி, எப்படி கண்டுபிடிச்சீங்க:):):)

SK on September 23, 2008 at 3:32 PM said...

வா மகளே வா நான் பாத்து இல்லைன்னு நினைக்குறேன்.

ஒரு படத்த முழுசா பாத்து ரொம்ப நாள் ஆச்சு

தமிழ்நெஞ்சம் on September 23, 2008 at 3:33 PM said...

supernga..

Sen22 on September 23, 2008 at 3:35 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாபாபாபாபாபா

இப்பவே கண்ண கட்டுதே...

இன்னும் என்னவெல்லாம் ஸ்டாக் இருக்கோ...

SK on September 23, 2008 at 3:39 PM said...

இப்போ தான் மணி 3:30 ஆகுது.. எத்தனை மணி வரைக்கும் வேலை இன்னைக்கு தலை

கார்க்கி on September 23, 2008 at 4:03 PM said...

மண்ணிச்சுக்கோங்க தோழர்களே.. நான் வேலை செய்ய போகல.. கேக் கட் பண்ண கூட்டிட்டு போயிட்டாங்க.. முன்ன பின்ன என்ன பார்த்து வணக்கம் சொல்லாதவன் கூட ஒரு பீஸு கேக்குக்காக என்ன தூக்கி சுத்தாறானுங்க.. கொடுமைடா சாமி...

கார்க்கி on September 23, 2008 at 4:05 PM said...

//உங்க ஊர்ல மாடு 'புல்' போட்டா பால் தருமா? :):)//

புல் போட்டா பால் தருங்க. full போட்டாதான் உதை தரும்.
.
//உங்க பிறந்தநாள் பரிசாக விசுவின் 'வா மகளே வா' பட டிவிடி அனுப்பி வைக்கப்படும்னு தெரிவித்துக்கொள்கிறேன்.//

அந்த சிடி எங்கிட்ட இருக்கு.. வேற படம் அனுப்புங்க‌

கார்க்கி on September 23, 2008 at 4:06 PM said...

//முடியல சாமி...

நா ஒத்துக்கறேன்..//

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் கரடியை சாரும்..

//ராப் அந்த படம் அவளோ கேவலமா?? //

யார் சொன்னா? யார் சொன்னா அத படம்னு

கார்க்கி on September 23, 2008 at 4:07 PM said...

//http://in.youtube.com/watch?v=583A2jqmnIw//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

@தமிழ்நெஞ்சம்,

நன்றிங்க‌

கார்க்கி on September 23, 2008 at 4:09 PM said...

//sen22 said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாபாபாபாபாபா

இப்பவே கண்ண கட்டுதே...

இன்னும் என்னவெல்லாம் ஸ்டாக் இருக்கோ...
//

அது சஸ்பென்ஸ்...


//sk said...
இப்போ தான் மணி 3:30 ஆகுது.. எத்தனை மணி வரைக்கும் வேலை இன்னைக்கு தலை

/

ஏழு மணிக்கு போலாம்னு நினைக்கிறேன்

ஜோசப் பால்ராஜ் on September 23, 2008 at 4:29 PM said...

ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே, இன்னும் என்ன கெரகமெல்லாம் இருக்குன்னு தெரியலையே...
பேசாமா தமிழ்மணத்த மூடிட்டு வெளியில போயி சாப்புட்டுட்டு நாளைக்கு வரைக்கும் கம்ப்யூட்டர் பக்கமே போவாம இருந்துர வேண்டியதுதான்.

கார்க்கி on September 23, 2008 at 4:39 PM said...

//ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே, இன்னும் என்ன கெரகமெல்லாம் இருக்குன்னு தெரியலையே...
பேசாமா தமிழ்மணத்த மூடிட்டு வெளியில போயி சாப்புட்டுட்டு நாளைக்கு வரைக்கும் கம்ப்யூட்டர் பக்கமே போவாம இருந்துர வேண்டியதுதான்.//

ஆட்டோ இல்ல, லாரியே வரும்.. பரவாயில்லையா சகா?

tamilraja on September 24, 2008 at 12:19 AM said...

நல்லா பாட்டு எழுத வருது தம்பி உங்களுக்கு மனசில வச்சிக்கறேன்!

கார்க்கி on September 24, 2008 at 9:22 AM said...

@தமிழ்ராஜா,

/நல்லா பாட்டு எழுத வருது தம்பி உங்களுக்கு மனசில வச்சிக்கறேன்!//

அண்ணே.. காபி, டிஃபன் ஏதாவது வேணுமாண்ணே...

வந்தமைக்கு நன்றி நண்பரே..

வால்பையன் on September 24, 2008 at 8:53 PM said...

//சின்ன வயசுல இவன் என்ன விட ரொம்ப வாலு //

வெறும் வார்த்தைகளை ஒத்து கொள்ளமுடியாது.
விளக்கம் தேவை!
அப்படியே என் பெயரை உபயோகித்ததற்கு ராயல்டி தேவை
(ராயல் சேலஞ் ஒரு ஃபுல் அனுப்பினால் போதும்)

கார்க்கி on September 25, 2008 at 9:40 AM said...

//வெறும் வார்த்தைகளை ஒத்து கொள்ளமுடியாது.
விளக்கம் தேவை!
அப்படியே என் பெயரை உபயோகித்ததற்கு ராயல்டி தேவை
(ராயல் சேலஞ் ஒரு ஃபுல் அனுப்பினால் போதும்)/

ராயல் டீயாக(எனக்கெல்லாம் சிங்கிள் டீயே அதிகம்ங்க) இல்லையென்றாலும் ஒரு பதிவெழுத தலைப்பு கொடுத்தற்காக நிச்சயம் உண்டு..

 

all rights reserved to www.karkibava.com