Sep 6, 2008

ஜே.கே ரித்திஷை இனியும் நக்கலடிப்பீர்களா?வலையில் மேய்ந்து கொண்டிருதபோது என் கண்ணில் பட்டது இந்த செய்தி. இதற்காகவாது நாயகன் படத்தை ஒரு முறை திரையரங்கில் காண வேண்டும் என்று பதிவ்ர்களை அகில உலக ஜே.கே.ரித்திஷ் ரசிகர் மன்றம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்."நாயகன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்திருக்கும் ஜே.கே.ரித்தீஷ், கோடம்பாக்கத்து 'குவார்ட்டர்' கோவிந்தன்களுக்கு மட்டுமல்ல, நலிந்த சினிமா கலைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகனாகவே இருக்கிறார். இந்த அதிரடி பார்ட்டியின் அதிரி புதிரி அமர்க்களங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டாலும், சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம், 'வெல்டன் சாரே...' என்று வாழ்த்த வைக்கிறது. காரைக்கால் பகுதியில் மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் தியாகராஜன் என்பவர், தமிழ் சினிமாவில் ஐம்பது படங்களுக்கு மேலாக இணை இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, கலைஞர், பாலசந்தர் கைகளால் விருதுகள் வாங்கியவர். 'மாருதி' என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த பதினைந்து வருடங்களாக இப்படிதான் வாழ்ந்து வருகிறாராம். இவரது மனைவி ஷீலாதேவி கூலி வேலைக்கு போகிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் இருவருக்கும் சாப்பாடு மற்றும் மருத்துவ தேவைக்கு. இதையெல்லாம் ஒரு பத்திரிகையில் பார்த்த ரித்தீஷ், உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் தருவதாகவும் எப்படியாவது அவரை குணப்படுத்துங்கள் என்றும் ஆறுதல் கூறியிருக்கிறார். சம்பாதிக்கிற பணத்தை எதிர்கால வைப்புத் தொகையாக வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், இது போன்ற புண்ணியங்களை எதிர்கால வைப்பு தொகையாக வைக்கும் ரித்தீஷூக்கு ஒரு 'ஜே...' போடுவோமா? நன்றி தமிழ்சினிமா.காம்

44 கருத்துக்குத்து:

வெண்பூ on September 6, 2008 at 9:25 PM said...

நல்ல செய்தி கார்க்கி.

இது தற்போதைய செய்தி. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பே ஒரு வார இதழ் (ஜீ.வி. அல்லது ரிப்போர்டர்) ரித்தீஷிடமிருந்து ஒரு மாணவனுக்கு நிதியுதவி வாங்கித்தந்தது.

அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

வெண்பூ on September 6, 2008 at 9:26 PM said...

ஆனா அதுக்காகவெல்லாம் அவர நக்கலடிக்காம இருக்கமுடியாது :)

நல்ல காரியத்துக்கு பாராட்டுவோம். ஹிட் குடுத்ததுக்கு வாழ்த்துவோம்.

நடிக்கறதுக்கு நக்கல் அடிப்போம். என்னா சொல்றீங்க???

கார்க்கி on September 6, 2008 at 9:33 PM said...

எங்கப்பா ராப்,ச்சின்னப்பையன், தாமிரா எல்லாம்? சிக்கிரம் பஸ்ச கொளுத்துங்க.. கடைய உடைங்க.. ஆட்டோ ரெடி பண்ணுங்க.. வெண்பூவ தப்பூனு சொல்ல வைக்கனும்...

Mahesh on September 6, 2008 at 9:46 PM said...

யாருங்க நக்கலடிக்கிறது? செல்லமா கொஞ்சுறாங்க...

Mahesh on September 6, 2008 at 9:47 PM said...

இன்னமே யாரு நாக்கு மேல பல்ல போட்டு பேசக்கூடாது...ஆம்ம்மா

Mahesh on September 6, 2008 at 9:47 PM said...

என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

Mahesh on September 6, 2008 at 9:49 PM said...

ரித்தீஸ் தம்பி எம்புட்டு நல்ல காரியம் செய்யுது... அதெயெல்லாம் உட்டாங்க.... தம்பி நடிப்பப் போயி.... அட என்னங்க....

Mahesh on September 6, 2008 at 9:50 PM said...

இனிமே தளபதி, பாட்சா, அண்ணாமலை, படயப்பா யாரு வந்தாலும் கவல இல்ல... தம்பி எப்பொவோ "பெரியார்" ஆயிருச்சு

Mahesh on September 6, 2008 at 9:51 PM said...

இதார்ரா புது ஆளு இங்க வந்து கும்மிக்கிட்டிருக்கறது? ஏன் நாங்கள்லாம் பஸ்ஸ கொளுத்தமாட்டமா?

Mahesh on September 6, 2008 at 9:52 PM said...

நாங்களும் ரௌடி, ரௌடி....

கார்க்கி on September 6, 2008 at 9:53 PM said...

ஹேய் சங்கத்துக்கு இன்னொரு ஆள் கிடைச்சாச்சு.. அண்ணன் வேகத்த பார்த்தா சீகிரம் நம்ம தலைவர் ஆயிடுவாரு போல... சகா நாயகன் பார்த்துடிங்களா?

கார்க்கி on September 6, 2008 at 9:55 PM said...

மண்ணிச்சுக்கோங்க ரொளடி. நானெல்லாம் சும்மா..

புதுகை.எம்.எம்.அப்துல்லா on September 6, 2008 at 9:58 PM said...

எங்கப்பா ராப்,ச்சின்னப்பையன், தாமிரா எல்லாம்? சிக்கிரம் பஸ்ச கொளுத்துங்க.. கடைய உடைங்க.. ஆட்டோ ரெடி பண்ணுங்க.. வெண்பூவ தப்பூனு சொல்ல வைக்கனும்...

//

அண்ணன குறை சொன்னா பஸ் என்ன அகில உலகத்தையே கொளுத்துவோம். ஆனா வெண்பூவும் நம்ப மன்றத்தோட புரவலர்கள்ல ஓருத்தரு..அதால மன்னிச்சு விட்டுருவோம்.

அப்துல்லா
பொருளாளர்
அண்ணன் ரித்தீஷ் மன்றம்

புதுகை.எம்.எம்.அப்துல்லா on September 6, 2008 at 10:00 PM said...

அண்ணன் நடிப்ப யாரு குறை சொல்ல முடியும்.அண்ணன் ரித்தீஷ் - A man with identitiy :))

Mahesh on September 6, 2008 at 10:01 PM said...

ம்ம்ம்ம்ம்...அந்த பயம் இருக்கட்டும்...:)

புதுகை.எம்.எம்.அப்துல்லா on September 6, 2008 at 10:09 PM said...

என்ன மகேஷ் அண்ணே!
இன்னைக்கி கும்மி இங்கயா?

கார்க்கி on September 6, 2008 at 10:17 PM said...

//அண்ணன் ரித்தீஷ் - A man with identitiy :))//

தமிழகத்துக்கே அவருதான் identity ஆகப் போறாரு பாருங்க‌.

கார்க்கி on September 6, 2008 at 10:19 PM said...

வாங்க அப்துல்லா... நம்ம சங்கத்து ஆளா? மண்ணிச்சுக்கோங்க வெண்பூ.. ஆட்டோ ரிட்டர்ன்...

புதுகை.அப்துல்லா on September 6, 2008 at 10:22 PM said...

தமிழகத்துக்கே அவருதான் identity ஆகப் போறாரு பாருங்க‌.
//

சொற்பிழை இருக்கிறது...தயவு செய்து உலகத்திற்கே என்று மாற்றவும் :)

கார்க்கி on September 6, 2008 at 10:25 PM said...

//சொற்பிழை இருக்கிறது...தயவு செய்து உலகத்திற்கே என்று மாற்றவும் :)//
அது அடுத்த வருடம் தல... இப்போதைக்கு தலைவர் டார்கெட் தமிழகம்தான்

புதுகை.அப்துல்லா on September 6, 2008 at 10:36 PM said...

அது அடுத்த வருடம் தல... இப்போதைக்கு தலைவர் டார்கெட் தமிழகம்தான்
//

அதுசரி! தலைவர் தமிழகம்ங்கிற கண்ணாடி வழியா உலகத்தைப் பார்கிறதால ரெண்டும் ஓன்னுதான் :))

வெண்பூ on September 6, 2008 at 10:38 PM said...

தலைப்பை இப்படி வெச்சிட்டு நீங்க எல்லாம் இப்படி கும்மிட்டு இருக்கீங்களே!!! இது நியாயமா????

//அதுசரி! தலைவர் தமிழகம்ங்கிற கண்ணாடி வழியா உலகத்தைப் பார்கிறதால ரெண்டும் ஓன்னுதான் :)) //

அவரு போட்டிருக்குற கூலிங் கிளாஸ் பேரு தமிழகமா அண்ணே???

புதுகை.அப்துல்லா on September 6, 2008 at 10:41 PM said...

தலைப்பை இப்படி வெச்சிட்டு நீங்க எல்லாம் இப்படி கும்மிட்டு இருக்கீங்களே!!! இது நியாயமா????
//
வாங்கண்ணே!வாங்க!

வெண்பூ on September 6, 2008 at 10:45 PM said...

//கார்க்கி said...
அது அடுத்த வருடம் தல... இப்போதைக்கு தலைவர் டார்கெட் தமிழகம்தான்
//

இத படிச்ச உடனே இரு அரத பழசான ஜோக் ஞாபகத்துக்கு வருது

நிருபர்: ரஜினி சார், உங்க குசேலன் 100 நாள் ஓடும்?

ரஜினி: இல்லங்க 200 நாள் ஓடும்

நிருபர்: ஹி..ஹி.. ஜோக்கடிக்கிறீங்களா சார்?

ரஜினி: ங்கொய்யாலா!!! யார்றா மொதல்ல ஜோக் அடிச்சது?

கார்க்கி on September 6, 2008 at 10:47 PM said...

மறுபடியும் வாங்க வெண்பூ.. இந்த ஜோக் முதல்ல ஆழ்வார் படம் வந்த போது வந்தது.. அப்புறம் டாக்டர் படம் எல்லாம் போய் இப்போ குசேலனுக்கு சொல்றாங்க‌

கார்க்கி on September 6, 2008 at 10:49 PM said...

//அவரு போட்டிருக்குற கூலிங் கிளாஸ் பேரு தமிழகமா அண்ணே???//

அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா தமிழகம் புண்ணியம் செஞ்சிருக்குனு அர்த்தம்

வெண்பூ on September 6, 2008 at 10:52 PM said...

//மறுபடியும் வாங்க வெண்பூ.. இந்த ஜோக் முதல்ல ஆழ்வார் படம் வந்த போது வந்தது.. அப்புறம் டாக்டர் படம் எல்லாம் போய் இப்போ குசேலனுக்கு சொல்றாங்க‌ //

இல்லீங்க நான் வரல :) :)

ஜோக்கோவிக்கும் ஃபெடரரும் நல்லா ட்ரீட் குடுத்துட்டு இருக்காங்க. முடிஞ்சா பாருங்க.... டென் ஸ்போர்ட்ஸ்...

கார்க்கி on September 6, 2008 at 10:59 PM said...

அந்த ஆட்டத்த பார்த்துகிட்டேதான் ஆடிக்கிட்டுருக்கேன்.. முத முதல்ல நம்ம கடைக்கு கும்மியடிக்க வந்திருக்கிங்க.. அதான் கூட ஆடலாம்னு வந்தேன்.. எங்க‌ பரிசல் வரலையா? மின்தடையா?

விஜய் ஆனந்த் on September 6, 2008 at 11:27 PM said...

்ஹலோ...

யாரு அது அம்மாந்தில்லோட மோதிப்பாக்குது???

வேணாம்....நல்லால்ல...

சொல்லிட்டேன்.........

கார்க்கி on September 6, 2008 at 11:34 PM said...

நானும் அதேதான் சொன்னேன்..கடைசில அவரும் மன்றத்து ஆளாம்ப்பா

பரிசல்காரன் on September 6, 2008 at 11:37 PM said...

//எங்க‌ பரிசல் வரலையா? மின்தடையா?//

இணையம் பக்கம் வரமுடியாம கொஞ்சம் பிஸி ரெண்டு நாளா.. அதான் நண்பா...

கார்க்கி on September 6, 2008 at 11:43 PM said...

தல உங்களுக்கு எதிர் பதிவு ஒன்னு போட்டிருக்கேன்..படிச்சிங்களா?

முரளிகண்ணன் on September 6, 2008 at 11:48 PM said...

உண்மையிலேயே நல்ல செய்தி. வாழ்க ரித்தீஷ்

கார்க்கி on September 6, 2008 at 11:53 PM said...

உருப்படியா எங்க தலய வாழ்த்தினது நீங்கதான்.. சாருக்கு ஒரு மசால் தோச பார்சல்

KA.... said...

evaloo periya alah evareh?? nenga avar rasigan ah?

கார்க்கி on September 7, 2008 at 12:39 AM said...

ஹிஹிஹி..அவருக்கு எல்லோரும்தான் ரசிகர்கள்

rapp on September 7, 2008 at 1:31 AM said...

எங்க தலயப் பத்தி பதிவு, அதுக்கு நானே இவ்ளோ தாமதமா வந்திட்டேனே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................................

rapp on September 7, 2008 at 1:33 AM said...

அவர் இந்த நல்ல காரியம் மட்டுமா செஞ்சார்? இவரோட சூறாவளி நடிப்பால, சும்மா டாக்குடரு,ஆஞ்சநேயரு, சொம்பு, ஏரோ எல்லாம் சும்மா அதிரி புதிரியாகிக் கெடக்கறாங்கல்ல:):):)

rapp on September 7, 2008 at 1:36 AM said...

2016 இல் நாங்க ஆட்சிக்கு வரும்போது, ஒரு இன்ஜினியரிங் காலேஜும், நாலஞ்சு மெட்ரிக்குலேஷன் இஸ்கோலும் கட்ட உங்களுக்கு அனுமதி கொடுக்கறோம்:):):)

கார்க்கி on September 7, 2008 at 9:13 AM said...

வாங்க ராப்... நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்..அவர் இப்போஒது உங்க ஆளு இல்ல...ந‌ம்மாளு

Mahesh on September 7, 2008 at 11:13 AM said...

விஜய், கார்க்கி, அப்துல்லா....மத்த எல்லோருக்கும்.... இன்னாமோ கும்மி கும்மி இன்றாங்களே இன்னாது அது எப்டி கீதுன்னு பாக்க சொல்லோ இப்பிடித்தான் ரீஜண்டா இருக்கும்னு கிளியர் ஆச்சு... செரி வெட்டியாதானெ கீறோம் லைட்டா கும்மி அட்ச்சுதான் பாப்பமேன்னு... அப்றம் பாத்தா ஆட்டோ வருது, இன்னொரு தாதாமுண்டா தட்றாரு.... நான் ஜகா வாங்கிகினேம்பா..... அவ்வ்வ்வ்.... பேஸ்மென்ட் வீக்....

இவன் on September 8, 2008 at 4:45 AM said...

தலைவர் இப்பட் பல நல்ல காரியம் பண்ணி இருக்காரு... அதாவது நலிவடைந்த தியட்டர் ஓனர்களுக்கு பணம் கொடுத்து படத்த ஓட வைக்கிறது அப்படி இப்படி என்னு ஆனா வலக்கை செய்யுறது இடக்கைக்கு தெரியக்கூடாது எங்கிற ஒரே காரணத்துக்காக வெளிய சொல்லிக்கிறதில்ல

கார்க்கி on September 8, 2008 at 11:20 AM said...

ஆமாம் அவரு பண்ற‌ ஒரே கெட்ட செயல்னா அது நடிக்கிறது மட்டும்தான் நம்ம எதிரணியே சொல்றாங்க..மத்ததெல்லாம் நல்ல மேட்டர்தான்.. வந்தமைக்கு நன்றி இவண்

yuva said...

so nice of him, perumaiyavum irukkupa, ippa avar padathai paathalei achu, nallathukku udhava namma pangu anil alavukkathu irukkanumliya?

 

all rights reserved to www.karkibava.com