Sep 8, 2008

உடன்பிறப்பின் பதிலுக்கு என் பதில்


      உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி என்ற பதிவுக்கு சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்று ஒரு எதிர் பதிவு போட்டிருக்கார். பாராட்டுக்கள். இது கூட வராதுனு நினைத்தேன். விவாதத்தை நீட்ட விரும்பவில்லை. உங்கள் பதிலில் பதில்கள் தொடரும் என்று சொல்லி இருக்கிறீர்கள். தொடரட்டும்.. ஆனால் எனக்கு வேண்டியது எல்லாம் என் முதல் பதிவில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில்கள். உங்களுக்காக மீண்டும் ஒரு முறை. அடுத்த பதிவில் இதற்கு பதில்கள் எதிர்பார்க்கிறேன்.

1) ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?

2) இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா?

3) தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். உண்மைதானே?

4) உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்?

5) 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸா?

6) இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா?

      கேட்பதற்கு செல்வகணபதி, நெடுமாறன் என பெரிய பட்டியலே இருக்கு. முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.

  அது மட்டுமில்லாமல், உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் டோண்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நீங்கள் "நீ யாருய்யா கேள்வி கேட்க என்று பத்திரிக்கைகாரரை பார்த்து ஜெயலலிதா கேட்டது டோண்டுவுக்கு தெரியாதோ" எனக் கேட்டிருந்தீர்கள். அதற்கு பதிலாக நான் " சரியாய் சொன்னீர்கள்.அவர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்களா?" என்ற என் பின்னூட்டத்தை இன்னமும் நீங்கள் வெளியிடவில்லை.

12 கருத்துக்குத்து:

KA.... said...

Seriyana poothi...

வால்பையன் on September 8, 2008 at 6:18 PM said...

பகுத்தறிவு என்னும் வார்த்தை பழஞ்சொல் ஆகிவிட்டது கழகத்துக்கு.
இன்றைய உடன்பிறப்புகள் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெரியாமலேயே அந்த தவறை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் குடும்பமும் கடவுள் நம்பிக்கையோடு தான் இருந்தது.
ஆனால் அவர் எந்த சூழ்நிலையிலும் இம்மாதிரி தரம் தாழ்ந்து போகவில்லை

கார்க்கி on September 8, 2008 at 6:27 PM said...

மிகச்சரி.. வந்தமைக்கு ஆதரவிற்கும் நன்றி

ARUVAI BASKAR on September 8, 2008 at 7:52 PM said...

உடன்பிறப்பின் அனைத்து பதிவுகளிலும் ,
அவருக்கு தேவையான பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுவார் !
இது பதிவுலகில் அனைவருக்கும் தெரியும் !

Sundar on September 9, 2008 at 1:09 AM said...

//இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா? //

தனிமனித ஒழுக்கம் எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும், ஆணாதிக்க கருத்துக்கள், பகுத்தறிவு என்றால் இந்து மத உணர்வுகளை, பழக்கங்களை கொச்சை படுத்துதல் ....ம்ம் இன்னும் எவ்வளவு நாட்கள் இது போன்ற அரசியல்வாதிகள் பெரும்பான்மையில் இருப்பார்கள் என்று பார்ப்போம்.

உருப்புடாதது_அணிமா on September 9, 2008 at 4:55 AM said...

நெத்தி அடி .....

கார்க்கி on September 9, 2008 at 10:09 AM said...

@பாஸ்கர்,

அப்படியா? நான் புதுசு.. இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.. வந்தமைக்கு நன்றி நண்பரே

@சுந்தர்,

அது மாறாது என்றே நினைக்கிறேன்..வந்தமைக்கு நன்றி நண்பரே

@அணிமா,

வந்தமைக்கு நன்றி நண்பரே

கார்க்கி on September 9, 2008 at 2:53 PM said...

எங்க உடன்பிறப்ப காணோம்??????????

yuva said...

nachu nachunu irukku karki, nangooram mathiri.........

yuva said...

poi sera vendiya aatkalukku senthuchuna santhosham HHMM

ARUVAI BASKAR on September 10, 2008 at 10:34 AM said...

//அதற்கு பதிலாக நான் " சரியாய் சொன்னீர்கள்.அவர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்களா?" என்ற என் பின்னூட்டத்தை இன்னமும் நீங்கள் வெளியிடவில்லை. //
திரு வால் பையன் அவர்கள் பதிவில் இரண்டு பேர் என்னுடைய பின்னூட்டம் உடன்பிறப்பின் பதிவில் வெளியிடப்படவில்லை என்று கூறியிருப்பதை பார்க்கவும் !

கார்க்கி on September 10, 2008 at 11:14 AM said...

இப்போது தெரிந்து கொண்டேன் சகா.. ஆனால் இந்த பதிவிற்கு பின் என்னுடைய பின்னூட்டம் வந்துவிட்டது..

 

all rights reserved to www.karkibava.com