Sep 23, 2008

சில தகவல்களும் விஜய்காந்த் ஜோக்ஸும்


     ரொம்ப நாளாச்சு.. இப்படி என் பிறந்த நாள் தொடங்கி. யாரும் கூட இல்லை.. ஆனாலும் இருப்பது போல் நினைக்க வைத்து விட்டார்கள் நம் பதிவுலக நண்பர்கள். இங்கே வாழ்த்தியது மட்டுமில்லாமல் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளை சொல்லி என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். வேறு என்ன சொல்ல முடியும், ரொம்ப நன்றிங்க.. உங்களை மகிழ்விக்க "இனி நான் பதிவெழுத போவதில்லை" என சொல்ல ஆசைதான். ஆனாலும், சாரிங்க..

********************************************************

    பரிசலுக்கு எதிர் பதிவு எழுதி வறுத்ததில் சிறந்தவர் யார் என ஒரு ஓட்டுப்பொட்டி வைத்திருந்தேன். எதிர்பார்த்தது போல் குசும்பன் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நானும் அப்துல்லாவும் தலா 18 வாக்குகளும், தாமிரா 15 வாக்குகளும் பெற்றோம். இருந்தும் பரிசலின் பொறுமைக்கு இது எல்லாம் பத்தாது, இன்னும் வீரியத்துடன் யாராவாது ஏதாச்சும் செய்யனும் பாஸ் ( நர்சிம்மை கேட்கணும்) என்பதே வாசகர்கள் தீர்ப்பாக இருக்கிறது. ஏனெனில் 15 நாட்கள் நடைபெற்ற இதில் வெறும் 66 பேரே வாக்களித்துள்ளனர்.

********************************************************

     ஓ!!!! தலைப்பு வச்சதே மறந்து போச்சு. கடந்த தேர்தலில் நான் தே.மு.தி.க விற்குதான் வாக்களித்தேன்.(சொல்லக்கூடாதோ). ஏன்டா என்ற பாலஜியிடம் அப்பவாது இவன் நடிக்கிறத நிறுத்தட்டும்டா" என்றேன். பின் அது ஒரு பிரபலமான எஸ்.ம்.எஸ்ஸாக வலம் வந்தது. சொன்ன நம்பவா போறிங்க?

  மற்றொரு ஜோக்.(ஃபர்ஸ்ட் சொன்னது ஜோக் இல்லையா???). விஜய்காந்த் தனியாளாக சட்டமன்றத்தில் நுழைவதை கண்ட கலைஞர் " என்னப்பா. தனியாவா வந்திருக்க?" என்றாராம். அதுக்கு நம்ம புரட்சி கலைஞர் " பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் தனியாத்தான் வரும்" என்றாராம்.  கோவப்படாதீங்க லக்கி,  இந்த ஜோக் ஜூ.வில தான் படிச்சேன்.(இப்போ என்ன பண்ணுவீங்க)

   சட்டமன்ற தேர்தல் சிவாஜிக்கு முன்னாடியே வந்துச்சே, அப்போ எப்படி விஜய்காந்த் இந்த வசனம் பேசினார் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், இரண்டு விஷயத்திற்கு நீங்கள் பெருமை கொள்ளலாம்.

1) சிவாஜிக்கு முன்னாடியே தேர்தல் வந்தது என்ற சந்தேகம் உங்கள் ஞாபக சக்தியையும், நாட்டின் மேல் கொண்ட‌ அக்கறையையும் காட்டுகிறது. பெருமைப்படுங்க..

2) அப்படி இல்லைனா, இந்த வசனத்தை ரஜினிக்கு முன்பே கிரி படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேசினார் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் தமிழ்சினிமா குறித்த உங்கள் அபார ஞானத்திற்கு பெருமைப்படுங்கள். (சேலைதான் என்றாலும் நமீதா கட்டுவதற்கும் கெளசல்யா கட்டுவதற்கும் வித்தியாசம் இருக்குதில்ல?)

********************************************************

   டிஸ்கி: இன்று ஆனி புடுங்க ஆஃபிஸ் வந்திருந்தாலும், ஒரே குஜாலா இருப்பதால் அடுத்தடுத்து பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். பொருத்தருள்க.

41 கருத்துக்குத்து:

rapp on September 23, 2008 at 11:59 AM said...

me the first

rapp on September 23, 2008 at 12:02 PM said...

ஆஹா, இன்னிக்கு எக்கச்சக்க குபீர் பதிவுகள் இருக்கா:):):)

கார்க்கி on September 23, 2008 at 12:02 PM said...

தமிழ்மண‌த்தில் போடுமுன்னே வந்துட்டீங்க.. நன்றி ராப்.. படிச்சிட்டு வந்து சொல்லுங்க..

கார்க்கி on September 23, 2008 at 12:04 PM said...

//ஆஹா, இன்னிக்கு எக்கச்சக்க குபீர் பதிவுகள் இருக்கா:):)//

பீர் பதிவு போட்டாச்சு.. குபீர்னா? ஒரு வேளை குளிர்ந்த பீரைத்தான் கு.பீர்னு சொல்றீங்களோ?

rapp on September 23, 2008 at 12:06 PM said...

இங்கிருக்க எல்லா விஜயகாந்த் ஜோக்சையும் விட, அவர் கட்சி ஆரம்பிச்சப்போ வந்துச்சே, சன்டிவி விளையாட்டு செய்திகள் ஜோக், அதுதான் டாப்:):):)

rapp on September 23, 2008 at 12:08 PM said...

//
பீர் பதிவு போட்டாச்சு.. குபீர்னா? ஒரு வேளை குளிர்ந்த பீரைத்தான் கு.பீர்னு சொல்றீங்களோ?//

நல்லாத்தான் யோசிக்கறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............................வருங்காலத்தைப் பத்தி கனவு காணுங்கன்னு பெரியவங்க சொல்றதை இப்டியா எடுத்துக்கறது? ஈவ்னிங் பார்ட்டியப் பத்தி மத்தியானமேவா இப்படி கனவு கானுவீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................

rapp on September 23, 2008 at 12:10 PM said...

//இன்று ஆனி புடுங்க ஆஃபிஸ் வந்திருந்தாலும், ஒரே குஜாலா இருப்பதால் //

இப்படித்தாங்க இருக்கணும். சூப்பர் :):):) மறுபடியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன ட்ரீட்? ஹைதராபாத் பிரியாணியா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............................

கார்க்கி on September 23, 2008 at 12:14 PM said...

//இங்கிருக்க எல்லா விஜயகாந்த் ஜோக்சையும் விட, அவர் கட்சி ஆரம்பிச்சப்போ வந்துச்சே, சன்டிவி விளையாட்டு செய்திகள் ஜோக், அதுதான் டாப்:):):)//

சரியா சொன்னீங்க.. அதே மாதிரி அவருடைய "ஜூம் பண்ணுங்க" காமெடியும் நல்லயிருக்கும்.

//ஈவ்னிங் பார்ட்டியப் பத்தி மத்தியானமேவா இப்படி கனவு கானுவீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................//

அட ட்ரீட் கொடுக்க நான் ரெடி.. ஆனா யாருமே இல்லைங்க.. நான் தனியா தண்ணியடிக்கிறது இல்ல..

கார்க்கி on September 23, 2008 at 12:16 PM said...

//இப்படித்தாங்க இருக்கணும். சூப்பர் :):):) மறுபடியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன ட்ரீட்? ஹைதராபாத் பிரியாணியா//

நான் சைவம்ங்க..(

yuva on September 23, 2008 at 12:23 PM said...

ரொம்ப நாளாச்சு.. இப்படி என் பிறந்த நாள் தொடங்கி. யாரும் கூட இல்லை.. ஆனாலும் இருப்பது போல் நினைக்க வைத்து விட்டார்கள் நம் பதிவுலக நண்பர்கள்...

Thanks for considering as we'r with you

yuva on September 23, 2008 at 12:28 PM said...

"இனி நான் பதிவெழுத போவதில்லை" என சொல்ல ஆசைதான். ஆனாலும், சாரிங்க..

enakkum comments podrathai ithoda niruthikalamnu aasaithaan..... so ithai mattum unga B'day gifta vachukonga dear

வால்பையன் on September 23, 2008 at 12:30 PM said...

// பரிசலுக்கு எதிர் பதிவு எழுதி வறுத்ததில் சிறந்தவர் யார் என ஒரு ஓட்டுப்பொட்டி வைத்திருந்தேன். //

நான் கூட ஒரு பதிவு எழுதியிருந்தேன்
என் பெயரை சேர்த்தீர்களா?
ஒரு ஓட்டு கூடவா யாரும் போடவில்லை

rapp on September 23, 2008 at 12:34 PM said...

//அதே மாதிரி அவருடைய "ஜூம் பண்ணுங்க" காமெடியும் நல்லயிருக்கும்//
அது எந்த ஜோக்குங்க கார்க்கி. எனக்கு தெரியலயே


//அட ட்ரீட் கொடுக்க நான் ரெடி.. ஆனா யாருமே இல்லைங்க.. நான் தனியா தண்ணியடிக்கிறது இல்ல..//
ஏங்க தாமிரா சார் வந்தப்ப டீல்ல விட்டுட்டு இப்ப புலம்பினா எப்படி:):):)(ஜாலியா போட்ட பின்னூட்டம், தப்பா எடுத்துக்காதீங்க, நோ சீரியஸ் விளக்கம் ப்ளீஸ் :):):))

கார்க்கி on September 23, 2008 at 12:42 PM said...

//ஏங்க தாமிரா சார் வந்தப்ப டீல்ல விட்டுட்டு இப்ப புலம்பினா எப்படி:):):)

சும்மா விட்டுட்டேனு யார் சொன்னது? அது பெரிய கதைங்க....

//(ஜாலியா போட்ட பின்னூட்டம், தப்பா எடுத்துக்காதீங்க, நோ சீரியஸ் விளக்கம் ப்ளீஸ் :):):))//

ஹாஹாஹாஹா.. ராப், நீங்க சீரியஸா சொன்னாதான் டிஸ்கி. போடனும்...

விஜய் ஆனந்த் on September 23, 2008 at 12:42 PM said...

:-))))...

many more happy returns of the day!!!

god bless you!!!

கார்க்கி on September 23, 2008 at 12:43 PM said...

//நான் கூட ஒரு பதிவு எழுதியிருந்தேன்
என் பெயரை சேர்த்தீர்களா?
ஒரு ஓட்டு கூடவா யாரும் போடவில்லை/

போட்டியில் பங்கெடுத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு உங்கள் பெயர் கோவியார் மற்றும் சிலரின் பெயர்கள் கொடுக்கவில்லை தல..

கார்க்கி on September 23, 2008 at 12:45 PM said...

//-))))...

many more happy returns of the day!!!

god bless you!!!//

thanks vijay

(எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்.. தெரியும்..தெரியும்..
ச்சும்மா)

Sen22 on September 23, 2008 at 12:51 PM said...

:)))))

செம மூடுல இருப்பீங்க போல.....

விஜய் ஆனந்த் on September 23, 2008 at 12:52 PM said...

// கார்க்கி said...

(எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்.. தெரியும்..தெரியும்..
ச்சும்மா) //

:-)))...

அப்ப இனிமே ஹீப்ருல கமெண்ட் போடறேன்...

கார்க்கி on September 23, 2008 at 12:57 PM said...

//செம மூடுல இருப்பீங்க போல....//

ஆமாம் சகா... மீஸிக் ஸ்டார்ட்டட்..(அட ஒரு டி.ஆர் கவிஜ எழுதலாமா?)

//அப்ப இனிமே ஹீப்ருல கமெண்ட் போடறேன்..//

ஏங்க, இங்கேயே கமென்ட் போடுங்க..

rapp on September 23, 2008 at 1:05 PM said...

//அதே மாதிரி அவருடைய "ஜூம் பண்ணுங்க" காமெடியும் நல்லயிருக்கும்//

அது எந்த ஜோக்குங்க கார்க்கி. எனக்கு தெரியலயே

கார்க்கி on September 23, 2008 at 1:11 PM said...

அது ஒரு படத்துல‌ வருங்க.. எல்லோரும் மானிட்டர பார்ப்பாங்க.. தலைவரு ஸ்டைலா ட்ரெஸெல்லாம் போட்டுகிட்டு சொல்லுவாரு "அத ஜூம் பண்ணுங்க"

SK on September 23, 2008 at 1:38 PM said...

ஒரு மார்கமா தான் இருக்கீங்க இன்னைக்கு..

ராப் அண்ட் கார்க்கி, அது என்ன சன் டிவி விளையாட்டு செய்திகள் ஜோக், நாள் கேள்வி பட்டது இல்லையே ?

ராப், :( :(

rapp on September 23, 2008 at 2:22 PM said...

எஸ்கே, அவர் கட்சி ஆரம்பிச்சப்போ சன்டிவி நியூஸ்ல இதை சொல்லச் சொல்லி பயங்கரமா கெஞ்சிக்கிட்டு இருந்தார். ஆனா வழக்கம்போல இவரையும் அப்போ சன்டிவில கண்டுக்கலை. ஆனா ஒரு பேமஸ் எஸ்எம்எஸ் வந்துச்சி. அதென்னன்னா, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சதை சன்டிவி விளையாட்டுச்செய்திகள்ல சொன்னாங்கன்னு:):):)

rapp on September 23, 2008 at 2:22 PM said...

25 :):):)

புதுகை.அப்துல்லா on September 23, 2008 at 2:23 PM said...

innaapaa rendaam idam vathathukku ethuna prize tharuviyapa? :))

கார்க்கி on September 23, 2008 at 2:26 PM said...

அட, தலைவரு கட்சி ஆரம்பிச்ச அன்னைக்கே சோகம இருந்தாராம்.. ஏன்னு தொண்டர்கள் கேட்டதுக்கு, "நாம கட்சி ஆரம்பிச்ச செய்திய சன் டி.வில விளையாட்டு செய்திகள்ல சொல்லியிருக்காங்கனு சொன்னாராம்..

கார்க்கி on September 23, 2008 at 2:27 PM said...

//innaapaa rendaam idam vathathukku ethuna prize tharuviyapa? :))//

கொடுத்துட்டா போச்சு.. உங்களுக்கு 1000 பாயின்ட்ஸ்..

கார்க்கி on September 23, 2008 at 2:28 PM said...

//25 :):):)//

என்ன‌ங்க மேடம், பரிசல் தொகுதில ரெண்டே மணி நேரத்தில் 132 ஆச்சு.. இங்க நாம 25க்கே கொண்டாடினா எப்படி?

SK on September 23, 2008 at 2:44 PM said...

உங்களுக்கு நூறு தானே வேணும். ராபோட கடைசி பதிவ பொய் பாத்துட்டு வந்து சொல்லுங்க. ஆட்டத்துக்கு நான் தயார் நீங்க தயாரா :)

narsim on September 23, 2008 at 2:52 PM said...

Good afternoon Saarrrrrr..

atnds.

narsim

கார்க்கி on September 23, 2008 at 2:55 PM said...

பார்த்துட்டு வரேன் எஸ்.கே.

வாங்க நர்சிம்.. மதிய வணக்கம்.

SK on September 23, 2008 at 2:59 PM said...

எல்லாம் சாப்டு ரொம்ப கலைச்சு பொய் வர்றீங்க.. வாங்க நரசிம்

யாரு எனக்கு கம்பெனி தர ரெடி.. தலைவரி 100 அடிக்கணும்னு ஆசை படுறாரு.

கார்க்கி on September 23, 2008 at 3:05 PM said...

இப்பத்தான் ராபோட பதிவ பார்த்தேன்... நீங்களும் கும்மி அடிப்பீங்களா?????????????

SK on September 23, 2008 at 3:07 PM said...

மீ கும்மி
நோ நோ நோ ஜஸ்ட் லேர்னிங் பிரம் ராப் யு நோ

SK on September 23, 2008 at 3:08 PM said...

இப்படி ஒரு நாளைக்கு நாலு அஞ்சு பதிவு போடா எங்கிட்டு 100 பதில் போடறது எல்லாரும்..

கார்க்கி on September 23, 2008 at 4:10 PM said...

//இப்படி ஒரு நாளைக்கு நாலு அஞ்சு பதிவு போடா எங்கிட்டு 100 பதில் போடறது எல்லாரும்../

நீங்க 100 கமென்ட் போட்டா நான் ஏன் நாலஞ்சு பதிவு போடப் போறேன்

கார்க்கி on September 23, 2008 at 4:15 PM said...

பார்த்தீங்களா.. என் கணக்கு தப்பல.. எப்படியாவது நம்ம பொறந்த நாளன்னைக்கு சூடாயிடுனும் நினைச்சேன்.. அதான் இப்போதைய ட்ரெண்ட் படி விஜய்காந்த் பேர தலைப்புல வச்சேன்.. சூடாயிடிச்சு.. இதுவும் ஆகாமா இருந்தா "வடிவேலுவின் வீட்டின் மீது பாம் வீசுவேன் ‍ விஜய்காந்த்..." அப்படினு தலைப்ப வச்சு, உள்ள அவருடைய ரசிகன் சொன்னதா போடலாம்னு நினைச்சேன். தப்பிச்சிட்டீங்க..

நானும் ஒருவன் on September 23, 2008 at 4:44 PM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்க்கி on September 23, 2008 at 5:08 PM said...

நன்றி ஒருவன்..

நானும் ஒருவன் on September 24, 2008 at 12:15 PM said...

அப்புறம் நேத்து நைட் என்ன செஞ்சீங்க கார்க்கி?

 

all rights reserved to www.karkibava.com