Sep 15, 2008

பரிசலின் திட்டம் எனக்கு தெரியும்


        நேற்று மாலை பரிசலை அவரது அலைபேசியில் அழைத்தேன். இதுதான் முதல் தடவை,அவரிடம் மட்டுமல்ல இதுவரை எந்த பதிவரிடமும் நான் பெசியதில்லை. அவரின் ஒல்லியான, சாந்தமான புகைப்படங்களை பார்த்து அவரின் குரல் "டாடி டாடி" என்ற ஜானகியம்மா குரலை போல் மிருதுவாக இருக்கும் என் நினைத்தேன். எதிர்புறத்தில் நான் நினைத்ததுக்கு மாறாக ஒரு வெண்கலகுரல்.. ஒரு நொடி பரிசல்தானா என்று கேட்க நினைத்தேன். பின் சுதாரித்து கொண்டு, எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று "அவள்" சொன்னது நினைவுக்கு வரவே கேட்காமல் விட்டுவிட்டேன்.

     பின் ஆரம்பித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சு ,45 நிமிடங்கள் நீடித்தது. திருப்பூரின் சாய தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை யாருக்கும் எந்த ஒரு தொல்லையுமில்லாமல் நகரை விட்டு வெளியேற்ற பரிசல் தயாரித்த திட்டத்தை பற்றி பேசினோம். விரைவில் அது நிறைவேற்ற ஆக வேண்டிய காரியங்களை பட்டியலிட்டார். அது மட்டுமில்லாமல், சென்னையின் கூவம் நதியை சுத்தப்படுத்துவது பற்றியும் ஒரு திட்டத்தை தயாரித்து கொண்டிருப்பதாக கூறினார்.

        இதற்கெல்லாம் அவரை பாராட்டிவிட்டு, வலையுலகத்தை பற்றிய பேச்சை தொடர்ந்தோம். வலை மூலம் தமிழ் வளர்ப்பதைப் பற்றியும்  ஒரு சில திட்டங்கள் கை வசம் வைத்திருக்கிறார். என்னைப் போன்றவர்கள் எழுதாமல் இருந்தாலே போதும், தமிழ் வளரும் என்ற அவரின் திட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை அவர் ஏற்று கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டார். பின் தமிழ் செம்மொழியானதில் அவரின் பங்கு குறித்து அவர் பேசியதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

       தற்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது குறித்த திட்டத்தை தயாரித்து கொன்டிருப்பதாக அவர் சொன்னதை கேட்டு நான் அகமகிழ்ந்தேன். இது போன்று பலவேறு பிரச்சனைக்கும் திட்டங்கள் தயாரிக்கும் திட்டத்தை எப்போது ஆரம்பித்தீர்கள் என்ற என் கேள்விக்கு "நினைவு தெரிந்த நாள் முதலாய்" என்ற‌ அரிய பதிலை சொன்னார் பரிசல். என்னதான் இருந்தாலும் வீரப்பனை பிடிக்கவும் ஒரு திட்டம் வைத்திருப்பதாய் அவர் சொன்னதை கேட்டு நான் சிரித்திருக்க கூடாது.அவர் இறந்து விட்டார் என் நான் சொன்னவுடன் " நிஜமாகவா" என்று வாய்பிள‌ந்த அவர், இந்த திட்டத்தை வீணாக்க கூடாது.எனவே இன்னொரு வீரப்பனை உருவாக்க ஒரு திட்டம் உருவாக்க போவதாக சூளுரைத்தார்.

       திட்டம் போட்டே அவர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறினார். ஒரு வேளை நான் அழைக்காமல் இருந்தால் அவரே என்னை அழைக்கவும் திட்டமிட்டு இருந்ததாக சொன்னார். அரசாங்கம் சட்டம் பொடுவதற்கு முன்னால் திட்டம் போட வேண்டும் என்பது அவரது வாதம். ஒருவரை திட்ட போவதற்கு முன்னால் கூட திட்டம் போட்டு செல்ல வேண்டும் என்ற பொன்மொழியையும் எனக்கு போதித்தார். அப்போதே நான் திட்டமிட்டு விட்டேன். அவரை திட்ட அல்ல. வலை தொடங்க வேண்டும் என்று அவர் திட்டமிட்ட கதையை அவர் சொல்லத் தொடங்கிய போது திட்டமிட்டே நான் அலையை துண்டித்தேன். நான் அப்படி செய்யக்கூடும் என அவர் ஏற்கனவே யூகித்து, அப்படி செய்யும் பட்சத்தில் மீண்டும் அவர் என்னை அழைக்க திட்டமிட்டு வைத்திருந்தாராம். அவரின் திட்டத்தை புரிந்த கொண்ட நான் வேறு திட்டம் போடும் வரை "ம்" போட்டு கொண்டே இருந்தேன்.

       நல்ல வேளையாக அவரின் அலைபேசியில் "சார்ஜ்" குறைந்தது. அவர் வீட்டில் அப்போது மின்வெட்டு இருக்குமாறு திட்டமிட்ட ஆற்காடு வீராசமிக்கு மனதுக்குள் ஒரு நன்றி சொன்னேன். மின் பற்றாக்குறையை போக்கவும் அவரிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதைப் பற்றி பின்னொரு நாள் பேசுவதாகவும் கூறினார். பேசும்போது மட்டும் திட்டமாக பேசாமல் விரிவாக பேசுவது ஏன் என்று நான் கேட்ட போது அவரின் செல்பேசி ஆஃப் ஆகிவிட்டது. அது குறித்தும் ஒரு பதிவு போட அவர் திட்டமிடுவார் என் நினைக்கிறேன்.

        பின்னுட்டமிட திட்டமிட்டு இருப்பவர்கள் உடனே கும்மியை ஆரம்பிக்கலாம். ஆனால் எழுதுவதற்கு முன் என்ன எழுத போகிறீர்கள் என திட்டமிட்டு கொல்லுங்கள்..மண்ணிக்கவும், கொள்ளுங்கள்.

26 கருத்துக்குத்து:

புதுகை.அப்துல்லா on September 15, 2008 at 2:31 PM said...

ரொம்ப திட்டம் போட்டு இந்தத் திட்டத்த நிறைவேத்தின மாதிரி இருக்கு :))

கார்க்கி on September 15, 2008 at 3:00 PM said...

ஹிஹிஹி... வருகைக்கு நன்றி.. திரும்ப வர மாதிரி ஏதாவது திட்டம் இருக்கா?

Bleachingpowder on September 15, 2008 at 3:08 PM said...

சும்மா இருக்கிற பரிசல்காரரை சொறிஞ்சு வுட்டுடீங்க. இனி உங்களுக்கு ஏழரை தான்.

அது எப்படீங்க கரெக்ட்டா அவர் வெளியூர் போயிருக்கிற நேரமா பாத்து இந்த பதிவ போட்டிருக்கீங்க

narsim on September 15, 2008 at 3:11 PM said...

நல்ல திட்டங்கள்.. அண்ணா நூற்றாண்டு தினத்தில் ஆரம்பித்து விடுங்கள்.

நர்சிம்

கார்க்கி on September 15, 2008 at 3:15 PM said...

@ நர்சிம்..
அட, இந்த‌ திட்டம் கூட நல்லாயிருக்கே.. திட்டினதுக்கு, சாரி திட்டத்துக்கு நன்றி நர்சிம்..


@ப்ளீச்சிங்,

அட என்னங்க, நான் அவர ஒரு பத்து நாளா சொரிஞ்சிகிட்டுதான் இருக்கேன்.. ஓட்டு போட்டிங்களா?

கார்க்கி on September 15, 2008 at 3:15 PM said...

//அது எப்படீங்க கரெக்ட்டா அவர் வெளியூர் போயிருக்கிற நேரமா பாத்து இந்த பதிவ போட்டிருக்கீங்க/

அதானே என் திட்டமே

விஜய் ஆனந்த் on September 15, 2008 at 4:04 PM said...

"ppplaaan pannaama ethuvum pannakkoodaathu..."

appo intha dialogue-a parisal kitta itunthuthaan vadivelu thittam pottu thirudittaaraa???

கார்க்கி on September 15, 2008 at 4:08 PM said...

அது அப்படி இல்லீங்கண்ணா.. அந்த மாதிரி ஆளுங்க எல்லாம் ஒரே மாதிரி யோசிப்பாங்க...

கார்க்கி on September 15, 2008 at 4:58 PM said...

//"ppplaaan pannaama ethuvum pannakkoodaathu..."

appo intha dialogue-a parisal kitta itunthuthaan vadivelu thittam pottu thirudittaaraa???/

அட, நிஜமா நீங்கதானா? ரெண்டு வரி டைப் பண்ணிட்டிங்க..

sridhar said...

//எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று//

இது எல்லாம் ரொம்ப ஓவரு...

கார்க்கி on September 15, 2008 at 5:31 PM said...

////எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று//

இது எல்லாம் ரொம்ப ஓவரு...//

உனக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்..

kumky on September 15, 2008 at 7:05 PM said...

ஏனுங்ணா இந்த இஸ்ரேல்- பாலஸ்தீனம்., ஆப்கானிஸ்தான்., கொசாவா.,இன்ன பிற ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது பற்றியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாச்சும் முடிவு எடுத்திருக்கீங்களா?

SK on September 15, 2008 at 7:07 PM said...

பரிசல் கிட்டே நானே திருப்பூர் சாயாபட்டறை கழிவு பத்தி ஒரு பதிவு போடசொல்லனும்னு இருந்தேன். அவரும் அதை பதியே யோசிச்சுகிட்டு இருகறதுலே ரொம்ப மகிழ்ச்சி.

கார்க்கி on September 15, 2008 at 7:12 PM said...

//ஏனுங்ணா இந்த இஸ்ரேல்- பாலஸ்தீனம்., ஆப்கானிஸ்தான்., கொசாவா.,இன்ன பிற ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது பற்றியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாச்சும் முடிவு //

இல்ல நண்பா.. இப்போது உலகம் அழியப்போகுதுனு சொல்றாங்க இல்ல அத பத்தி ஒரு திட்டம் தீட்ட இன்னைக்குதான் பரிசல் நாசாவுக்கு போயிருக்காரு.. வரட்டும் இந்த மேட்டர் எல்லாம் அவருக்கு ஜுஜூபி...

கார்க்கி on September 15, 2008 at 7:13 PM said...

//பரிசல் கிட்டே நானே திருப்பூர் சாயாபட்டறை கழிவு பத்தி ஒரு பதிவு போடசொல்லனும்னு இருந்தேன். அவரும் //

அப்புறம் அவங்க பாஸு அவர ப்ளாக் எழுதவே விட மாட்டாரு..

பிரேம்குமார் on September 15, 2008 at 7:51 PM said...

சில காலமாக உங்கள் பதிவுகளை ரீடரில் படித்து வந்தேன். இப்போது தான் பின்னூட்டமிட முடிந்தது :)


தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள். இது தான் லேட்டஸ்ட் பதிவு என்பதால் இங்கே பின்னூட்டம் இடுகிறேன். மத்தபடி இந்த பதிவு ~~ "முடியல"

முரளிகண்ணன் on September 15, 2008 at 8:23 PM said...

mudiyala mudiyala mudiyavee illai

rapp on September 15, 2008 at 8:56 PM said...

ஹா ஹா ஹா. ஆனா நிஜமாகவே அவர் திருப்பூர் கழிவுப்பத்தி சில திட்டங்களை போட்டு வெச்சிருக்கார்தானே. உங்க பதிவை படிச்சிட்டு ஒரு நிமிஷம் அதுவும் டூப்போன்னு நினைச்சிட்டேன்:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................

rapp on September 15, 2008 at 8:59 PM said...

//எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று//
உங்கள் நகைச்சுவை உணர்வு அருமையோ அருமை

தாமிரா on September 15, 2008 at 9:52 PM said...

பிரேம் :மத்தபடி இந்த பதிவு ~~ "முடியல"// ரிப்பீட்டேய்..

தாமிரா on September 15, 2008 at 9:52 PM said...
This comment has been removed by the author.
தாமிரா on September 15, 2008 at 9:52 PM said...
This comment has been removed by the author.
தாமிரா on September 15, 2008 at 9:55 PM said...

ஒண்ணுமில்லப்பா.. ரிப்பீட்டு கமென்டு பல தடவை ரிப்பீட்டாயிடுச்சு.!

கார்க்கி on September 16, 2008 at 9:28 AM said...

@பிரேம்குமார்,

நன்றி நண்பரே...

// மத்தபடி இந்த பதிவு ~~ "முடியல"//
முடிஞ்சிடுச்சு நண்பா.. இது தொடர் பதிவல்ல

@முரளி,

படிச்ச உங்களுக்கே இப்படின்னா லைவ்வா கேட்ட என் நிலமைய யோசிச்சு பாருங்க‌

கார்க்கி on September 16, 2008 at 9:29 AM said...

////எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று//

உங்கள் நகைச்சுவை உணர்வு அருமையோ அருமை//

சங்கத்து ஆளா நாமளே டேமேஜ் பண்ணலாமா?

கார்க்கி on September 16, 2008 at 9:30 AM said...

@தாமிரா,

சரி தலைவா... பிரேமுக்கு போட்ட அதே பதில் ரிப்ப்பீட்ட்ட்ட்டேய்

 

all rights reserved to www.karkibava.com