Sep 6, 2008

கரிசல்காரனின் துவையலும்,டரியலும் பின்னே மக்கின மட்டன் பீஸும்


பரிசலுக்கு அடுத்தவர்களின் பதிவுக்கு எதிர் பதிவு என்பதில் ஒரு அலாதி சுகம்.இது ஒரு வித நோய் என்று நேற்று குசும்பனும் லக்கியும் கவலைபட்டார்கள். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்து நான் செயலில் இறங்கி விட்டேன். முதலில் போய் பரிசலின் இந்த வார அவியல் பதிவை இங்கே படித்துவிட்டு வாருங்கள்.

*************************
தலைப்பு எனக்கே சமர்ப்பணம்!
*************************
நீங்களும் கூட இதே மாதிரி அனுபவம் பெற்றிருக்கக் கூடும். அதாவது நான் எந்த பாருக்கு போனாலும் என்னிடம் யாராவது ஒரு வாடிக்கையாளர்(?) உதவி கேட்பார்! 95% இடங்களில் எனக்கு இந்தமாதிரி நடக்கிறது! நேற்று ஒரு டாஸ்மாக்கிற்கு போனபோது ஒரு வாடிக்கையாளர் என்னிடம் ஒரு பாட்டிலை திறந்து தரச் சொன்னார். ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறை அவர் குவார்ட்டர் வாங்கும் போதும், அதை திறப்பதற்கு என்னை அழைத்தார். வெறுத்துப் போய் திட்டலாமா என்று நினைத்தேன். நாலைந்து முறைக்குப் பின் சொன்னார்...
" என் ஃபிகர இன்னொருத்தன் கரெக்ட் பண்ணிட்டான் சார்.அவன் பார்ப்பதற்கு உங்கள மாதிரியே இருப்பான்.அவன் தானா நீ பார்க்கதான் அடிக்கடி கூப்டேன்.எனக்கு சரியா தெரில.. நீங்களே சொல்லுங்க."

எனக்கு பயம் வந்துவிட்டது.

************************
இந்த மாதிரி அனுபவங்களில் பெஸ்ட், ஒருமுறை டப்லினுக்கு போனபோதுதான். காரை நிறுத்திவிட்டு காரிடாரில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவசர அவசரமாய் பின்னால் வந்த ஒருவர் “சிம்பு சார், ஏன் நயந்தாராவை ஏமாத்திட்டிங்க? ” என்று கேட்டார். கொஞ்சநேரம் அதை சந்தோஷமாய் கேட்டுவிட்டு அப்புறம்தான் நான் சிம்பு இல்லை என்றேன்!

**********************
கோவி.கண்ணனுக்கு மணவாழ்த்துச் செய்தி சொல்லச் சொல்லி ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தேன். நல்லாயிரு தலைவான்னு 48 பேரும் (57%), மாட்டிக்கினியான்னு 29 (34%) பேரும், இனி நிறைய எழுதுவீங்களான்னு 15 (17%) பேரும், எப்ப பார்ட்டின்னு 33 (39%) பேரும் ஓட்டுப் போட்டிருக்காங்க. இதுல மூணாவது அண்ணி கைலதான் இருக்கு. நாலாவதுக்கு அவரே கூப்பிடுவாரு. தலைவா.. நல்லாயிருங்க சொல்ல ஃபோன் பன்னா தங்கமணி எடுத்தாங்க.அவங்களுக்கு கல்யானம் ஆகி சில வருடம் ஆயிடுச்சாம். நான் வேற "இதுல மூணாவது அண்ணி கைலதான்" சொன்னத, அவங்க மூனாவதா ஒரு அண்ணி ,அப்படினு நினைச்சு டின்னு கட்டினுதுலதான் அண்ணன் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்திருக்காரு. அப்போ கல்யானம் ஆனது யாருக்கு?
*********************
இன்னொரு ஓட்டுப் பெட்டி வெச்சு, மேல படத்துல இருக்கறது யாருன்னு கேட்டேன். மாளவிகான்னு 3 (4%) பேரும், சோனான்னு 34 (48%) பேரும், நமீதானு 19 (27%) பேரும், மல்லிகா ஷெராவத்னு 14 (20%) பேரும் சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு நாள் முழுசா இருந்தாலும் வாக்கு நிறுத்தப்படுகிறது. காரணம் வேற ஒண்ணுமில்லை. நானே மூணு நாலு ஓட்டுப் போட்டும் நமீதாவை ஜெயிக்க வைக்க முடியல.  கண்டுபிடிங்க மச்சான்ஸ்ன்னு கேட்டத வச்சாவது அவருக்கு ஓட்டுப் போட்டிருக்கலாம்!

ஆமாம்.. அது நமீதா! அந்த 19 பேருக்கு நன்றி!


***********************
இரண்டு நாட்கள் கொஞ்சம் ஃப்ரீ! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா பின்னூட்டமே எவனும் எழுதறது இல்ல..ஃப்ரீயா இருக்கற நாட்கள்ல இந்த மாதிரி பதிவெழுத மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!


*********************
ரொம்ப நாளாகலை.. இருந்தாலும் விடப்போறதில்லை.. எனக்குப் பிடிக்காத க(வி)தை...

இந்த வாரம் மங்களூர் சிவா,


இந்த கும்மி அடிக்கிறவன்

குசும்பனோடு

வால்பையனோடு

ராப்போடு

அடித்த கும்மியில்

கோடியில் ஒரு பங்காவது

அடித்திருப்பானா என் வலையில்?.

39 கருத்துக்குத்து:

கார்க்கி on September 6, 2008 at 11:46 PM said...

கோவியாரும் இதில் குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களும் கோச்சிக்க மாட்டாங்கனு ஒரு தைரியம்.. தப்பா இருந்தா சொல்லிடுங்க அப்பு.. மாத்திடுறேன்.. லாரி ஆட்டோ எல்லாம் எனக்கு அதிகம்.. மங்களூர் சிவாகிட்ட இருக்கிற மூனு சக்கர வண்டில ஒருத்தற அனுப்பிச்சாலே போதும்.

விஜய் ஆனந்த் on September 6, 2008 at 11:48 PM said...

அடடே!!!

அவனா நீங்க???

வாங்கய்யா ரீமேக்கு கிங்ங்ங்கு!!! (இத கிங்காங்குன்னு படிக்கிறவங்களே...அதுக்கு காரணம் நானோ, நம்ம கார்க்கியோ இல்ல!!!)

கார்க்கி on September 6, 2008 at 11:52 PM said...

நான் அவனில்லை.. இது ஒரு வித மருத்துவம்.. நான் டாக்டர்.. அய்யோ அவரு இல்லப்பா

விஜய் ஆனந்த் on September 7, 2008 at 12:03 AM said...

அதானே....

நீங்க அவரு இல்ல...

நா அவரு இல்ல...

அட...அவரே அவரு இல்லப்பா...

அது சரி on September 7, 2008 at 12:14 AM said...

நேத்து நம்ம கடையில கரிசல்காரன்னு ஒருத்தரு ஒரு லாரி கருங்கல்லு ஆர்டர் பண்ணாரு. அது இதுக்கு தானா?? :0)

கார்க்கி on September 7, 2008 at 12:37 AM said...

@ அதுசரி,

அதுசரி...அதுக்குதான்...வந்தமைக்கு நன்றி

@விஜய்,

ஆமா, நீங்க யாரு?

முரளிகண்ணன் on September 7, 2008 at 12:53 AM said...

பிரதியைவிட எதிர்பிரதி அபாரம்.

கார்க்கி on September 7, 2008 at 12:55 AM said...

அப்படியா?????????????????

rapp on September 7, 2008 at 1:26 AM said...

ஹா ஹா ஹா, கார்க்கி, கலக்கலோ கலக்கல். நல்ல டைமிங் சென்ஸ்(அய்யய்யோ இந்த வார்த்தைய எல்லாம் உபயோகப்படுத்த வெச்சிட்டீங்களே).

rapp on September 7, 2008 at 1:27 AM said...

//பிரதியைவிட எதிர்பிரதி அபாரம்.//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :):):)

rapp on September 7, 2008 at 1:30 AM said...

//கோவியாரும் இதில் குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களும் கோச்சிக்க மாட்டாங்கனு ஒரு தைரியம்//

யாருமே கோச்சுக்கமாட்டாங்க. முதல் ஆளா படிச்சி சிரிப்பாங்க. நீங்களும் கலக்கலா எழுதியிருக்கீங்க. நீங்க இப்படி எழுதினா பரிசல்காரன் மூத்த பதிவர்னு அர்த்தமாகிடுது:):):) இதுக்காக வேணா அவர் கடுப்பாகலாம்:):):)

கார்க்கி on September 7, 2008 at 9:16 AM said...

வாங்க ராப்... ஏன் டைமிங் சென்ஸ் ஆங்கிலம் என்பதாலா?

கார்க்கி on September 7, 2008 at 9:17 AM said...

அவர் நிச்சயம் மூத்த பதிவர்தான்... வய‌து 34

பரிசல்காரன் on September 7, 2008 at 11:30 AM said...

என்னை அடிச்சுத் துவைச்சு காயப் போடறதுல
உங்களுக்கு அப்படி என்ன ஒரு ஆசை?

பரிசல்காரன் on September 7, 2008 at 11:32 AM said...

//பரிசலுக்கு அடுத்தவர்களின் பதிவுக்கு எதிர் பதிவு என்பதில் ஒரு அலாதி சுகம்.//

அது நேரத்தை மிச்சப்படுத்தும். ரீச்சும் ஆகும் என்பதால் மட்டுமே!

//இது ஒரு வித நோய் என்று நேற்று குசும்பனும் லக்கியும் கவலைபட்டார்கள்.//

அப்படியா? நெஜமாவா? எங்க?

குசும்பன் on September 7, 2008 at 12:01 PM said...

சூப்பர்!

குசும்பன் on September 7, 2008 at 12:02 PM said...

//இரண்டு நாட்கள் கொஞ்சம் ஃப்ரீ! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா பின்னூட்டமே எவனும் எழுதறது இல்ல..ஃப்ரீயா இருக்கற நாட்கள்ல இந்த மாதிரி பதிவெழுத மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!//

அவ்வ்வ்வ்வ் பரிசலுக்கு எதிர் பதிவுதானே எனக்கு இல்லையே?:(((

குசும்பன் on September 7, 2008 at 12:04 PM said...

நீங்க இப்படி எழுதினா பரிசல்காரன் மூத்த பதிவர்னு அர்த்தமாகிடுது:):):) இதுக்காக வேணா அவர் கடுப்பாகலாம்:):):)//

இன்னும் ஆகலையா? என்ன கொடுமைங்க இது? இரண்டு புள்ளைங்களுக்கு அப்பாவேற! அவரை எல்லாம் நம்மைபோன்ற இளம் புதியவர்கள் லிஸ்டில் இருப்பது ஆபத்து!

குசும்பன் on September 7, 2008 at 12:06 PM said...

//கோவி.கண்ணனுக்கு மணவாழ்த்துச் செய்தி சொல்லச் சொல்லி ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தேன். //

என்னது கோவிக்கு கல்யாணம் ஆச்சா?
பச்சபுள்ளய்யா அவரு!அதுக்குள்ளேயேவா?

கார்க்கி on September 7, 2008 at 3:16 PM said...

@பரிசல்

நீங்க இன்னும் மூத்த பதிவர் ஆகவில்லை என நினைக்கிறேன்.. கஷ்டபட்டு எழுதிய இந்த பதிவு இன்னும் சூடாகவில்லை.. ஆனால் எங தல பதிவு ரொம்ப சூடாயிடிச்சு...

கார்க்கி on September 7, 2008 at 3:17 PM said...

//என்னை அடிச்சுத் துவைச்சு காயப் போடறதுல
உங்களுக்கு அப்படி என்ன ஒரு ஆசை?//

நமக்கு ரொம்ப புடிச்சவங்கள தானே கலாய்க்க முடியும்.. லக்கி உண்மைத்தமிழன செய்யுற மாதிரி :)

கார்க்கி on September 7, 2008 at 3:20 PM said...

//அது நேரத்தை மிச்சப்படுத்தும். ரீச்சும் ஆகும் என்பதால் மட்டுமே!//

எல்லாம் சரி பரிசல்... பதிவு பாஸா ஃபெயிலானு சொல்லவே இல்லையே?

கார்க்கி on September 7, 2008 at 3:23 PM said...

//அவரை எல்லாம் நம்மைபோன்ற இளம் புதியவர்கள் லிஸ்டில் இருப்பது ஆபத்து!//

மண்ணிக்கனும் குசும்பன்... உங்களையே எங்க லிஸ்ட்ல சேர்த்துக்க மாட்டோம்... நாங்க எல்லாம் பேச்சுலர்ஸ்... ச்சுலர்ஸ்.. சுலர்ஸ்.. லர்ஸ்.. ர்ஸ்...ஸ்

கார்க்கி on September 7, 2008 at 3:24 PM said...

//என்னது கோவிக்கு கல்யாணம் ஆச்சா?
பச்சபுள்ளய்யா அவரு!அதுக்குள்ளேயேவா?//

தல, நாங்க அறுபதாம் கல்யாணத்த பத்தி பேசல..

கோவி.கண்ணன் on September 7, 2008 at 5:08 PM said...

என்ன கொடுமை இது, வரிக்கு வரி...அட்டகாசம் !

:)

கோவி.கண்ணன் on September 7, 2008 at 5:10 PM said...

// rapp said...
//கோவியாரும் இதில் குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களும் கோச்சிக்க மாட்டாங்கனு ஒரு தைரியம்//

யாருமே கோச்சுக்கமாட்டாங்க. முதல் ஆளா படிச்சி சிரிப்பாங்க. நீங்களும் கலக்கலா எழுதியிருக்கீங்க. நீங்க இப்படி எழுதினா பரிசல்காரன் மூத்த பதிவர்னு அர்த்தமாகிடுது:):):) இதுக்காக வேணா அவர் கடுப்பாகலாம்:):):)
//

rapp,
கடுப்பாகறதா ? இதெல்லாம் ரொம்ப கற்பனை, இதுக்குதான் கடுப்பு வருது !
:)

கார்க்கி on September 8, 2008 at 11:17 AM said...

நன்றி கோவியாரே....

வால்பையன் on September 8, 2008 at 11:26 AM said...

முதல் மேட்டர் ஒருவகையான சமாளிப்புகேஷன்.
இல்லை பயமுறுத்துதல் ஆகவும் இருக்கலாம்.

வால்பையன் on September 8, 2008 at 11:27 AM said...

இரண்டாவது ஒருவகையான சாடிஸ்ட் தனம்.
நீங்கள் என்னை வந்து பார்ப்பது நல்லது
(நான் பார்ப்பதற்கு பைத்தியக்கார டாக்டர் மாதிரி இருப்பேன்)

கார்க்கி on September 8, 2008 at 11:40 AM said...

எத சொல்றீங்க வால்பையன்? எனக்கு புரியல..அப்படி ஏதவது ஏடாகூடமா இருந்தா ஒரிஜினல் பரிசல் தான் அது.. நான் இல்லப்பா

வால்பையன் on September 8, 2008 at 11:51 AM said...

அங்கே குத்துன கும்மி தான் இங்கே மறுபதிவு செய்யப்பட்டது

கார்க்கி on September 8, 2008 at 12:08 PM said...

ஓ அதானா மேட்டர்.. வந்ததுக்கு தாங்க்ஸ்ப்பா

ஜோசப் பால்ராஜ் on September 8, 2008 at 12:21 PM said...

என்ன கார்க்கி, இப்ப எல்லாம் விஜய் படம் மாதிரி ஆயிடுச்சு உங்க பதிவு.
நல்ல கதையெல்லாம் எழுதுனீங்க. மொக்கை நல்லா இருக்கு. ஆனா மொக்கை மட்டுமே வேண்டாமே.

yuva said...

Ungala simbunu sollikura alavukku
Nayanthara mela ivlo paasama?
Auto varuthu bathirama irungapa

சரவணகுமரன் on September 8, 2008 at 12:27 PM said...

//" என் ஃபிகர இன்னொருத்தன் கரெக்ட் பண்ணிட்டான் சார்.அவன் பார்ப்பதற்கு உங்கள மாதிரியே இருப்பான்.அவன் தானா நீ பார்க்கதான் அடிக்கடி கூப்டேன்.எனக்கு சரியா தெரில.. நீங்களே சொல்லுங்க.//

:-)

கார்க்கி on September 8, 2008 at 12:35 PM said...

//நல்ல கதையெல்லாம் எழுதுனீங்க. மொக்கை நல்லா இருக்கு. ஆனா மொக்கை மட்டுமே வேண்டாமே.//

வாங்க பால்ராஜ்.. உங்க அக்கறைக்கு நன்றி.. என் தொடர்கதைக்கு கிடைத்த சில வாசகர்களில் நீங்களும் ஒருவர்.. என்ன செய்வது, நான் ஒரு நல்ல பதிவு ஒரு மொக்கை பதிவு (அது மட்டும்தான் நல்ல இருக்கு)என்ர ரீதியில் தான் எழுதுகிறேன்..பரிசல் சொல்வது போல் இதற்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கிறது.. நான் எழுதிய இறவாமழை என்ர கவிதைக்கு பின்னூட்டமே இல்லை.. முதலில் மொக்கை எழுதவே வேண்டாம் என் நினைத்தேன்.. கோவியார் போன்ற சிலர்தான் அதுவும் தேவை என்பதை எனக்கு உண‌ர்த்தினார்கள். எனக்கு நகைச்சுவை இயல்பாய் வருவதாய் இன்னும் சில நண்பர்களும் கூறினார்கள்.இனி நல்ல பதிவுகளும் வரும்படி பார்த்துக் கொள்கிறேன்.உங்கள் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. (அட இவ்ளோ பெருசா,இதையும் ஒரு பதிவா போட்டிருக்கலாமோ)

கார்க்கி on September 8, 2008 at 12:37 PM said...

வாங்க சரவனகுமாரன்.. வெறும் சிரிப்புதானா? :(

பரிசல்காரன் on September 9, 2008 at 8:17 PM said...

//ஜோசப் பால்ராஜ் said...

என்ன கார்க்கி, இப்ப எல்லாம் விஜய் படம் மாதிரி ஆயிடுச்சு உங்க பதிவு.
நல்ல கதையெல்லாம் எழுதுனீங்க. மொக்கை நல்லா இருக்கு. ஆனா மொக்கை மட்டுமே வேண்டாமே./

யாருய்யா அது.. கூட்டத்து ஆள் சேர்த்தீட்டிருக்கும்போது கட்சி மாத்தி கூட்டீட்டு போறது?

கார்க்கி on September 10, 2008 at 9:25 AM said...

அதானே.... யாருப்பா கட்சி மாறி போறது?

 

all rights reserved to www.karkibava.com