Sep 30, 2008

ஹாரிசுக்கும் தாமரைக்கும் ஒரு நன்றி..


    நேற்று இரவு வழக்கம்போல் மெல்லிய சத்தத்தில் பாடல்கள் ஒலிக்க தூங்கப் போன்னே. வழக்கமாய் கேட்ட பாடல்களே வந்துக் கொண்டிருக்க, திடிரென இது வரை கேட்டிராத பாடல் ஒன்று வந்தது. ஆரம்பமே ஏனோ வெகுவாய் கவர்ந்தது. பாம்பே ஜெயஷ்ரீயின் குரலோ என் நினைக்கத் தோண்றியது.. பாடலிலும் ஹாரீஸின் வாசனை அடித்தாலும் ஒரு சந்தேகம். பின் என் ஐபோடை எடுத்துப் பார்த்தால் "வாரணம் ஆயிரம்" என‌த் தெரிந்தது.இன்னோரு முறை கேட்கலாம் என ரிப்பீட் செய்தேன். சுகமா சோகமா எனப் புரியாமால் அந்த இசையில் லயிக்கத் தொடங்கிய நேரம், என் நண்பரின் குறட்டை இடைஞ்சல் செய்ய, இருட்டில் தட்டு தடுமாறி ஹெட்ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். வேகமாக காதில் சொருகி 'play' பொத்தானை அழுத்தினேன்.

"அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி 

எதற்காக‌ தடை இனி....."

     கண் மூடி கேட்டேன். யாரோ ஒருவர் இதயத்தை கசக்கி ரத்தத்தை பிழிவது போல் ஒரு வலி. கண்திறந்தேன். மயான அமைதி. ஊர் முழுவதும் கண்ணயர்ந்த நேரம் ,வெகு நாட்களுக்கு பின் கண்கலங்கினேன். இது சோகமா சுகமா புரியவில்லை. எழுதியவர் மீது அளவில்லா கோபம். தாமரையாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணின் உணர்வை இத்துனை வீரியத்துடன் பதிவு செய்யும் ஆண்கவிஞன் இன்னும் வரவில்லை. இருந்தால் அது முத்துக்குமாராகத்தான் இருக்க முடியும். வலையில் வந்து மேய்ந்தால் தாமரைதான்.. ஆனால் குரல், சுதா ரகுனாதன். எத்துனை முறை ரிப்பீட் செய்தேன் என நினைவில்லை.

"எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ.. "

    சொக்கிப் போனேன். கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். தூரத்தில் நிலா என்னைபோல தனியாக.  யாரும் இல்லை என்றாலும் அழகாய் பொழிந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் எனதருகில் வந்து என்னை மடியில் ஏந்திக் கொண்டது. எனக்காக‌ ஒரு கதை சொன்னது. ஆறுதலாய் உணர்ந்தேன். பின் ஏனோ விலகி சென்றது. இத்தனை நாள் இந்த அழகிய இரவையும், நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன். இவை அழகா, இல்லை இந்தப் பாடல் எல்லாவற்றையும் அழகாக்கியதா? சுதாவின் குரலில் இன்னும் மயங்கியே இருந்தேன். அதிலும் அந்தப் பாடல் முடிவடையும் நேரம் ஒரு ஆண்குரல் அந்த மெட்டை ஹ‌ம் செய்யும்.. கேட்டுப் பாருங்கள். ரொம்ப நாளாச்சு.. தாங்க்ஸ் ஹாரீஸ் மற்றும் குழு...

பல்லவி

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி  

எதற்காக‌ தடை இனி....."

சரணம் -1

எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..

சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..

38 கருத்துக்குத்து:

Aruppukkottai Baskar on September 30, 2008 at 12:57 PM said...

//நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன்//

நேற்று அமாவாசை ஆச்சே !

Aruppukkottai Baskar on September 30, 2008 at 12:58 PM said...

me the first aa ?

கார்க்கி on September 30, 2008 at 1:05 PM said...

//me the first aa ?/

வாங்க பாஸ்கர்..

//நேற்று அமாவாசை //

அப்படியா? இது நடந்து ஒரு வாரம் மேல ஆச்சு..

வால்பையன் on September 30, 2008 at 1:21 PM said...

நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை,
கேட்டு உங்களைப் போல் இசை மழையில் நானும் நனைகிறேன்

ஜோசப் பால்ராஜ் on September 30, 2008 at 1:42 PM said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க தோழர்.
சீக்கிரம் பாட்ட கேக்கணும்.

கார்க்கி on September 30, 2008 at 1:48 PM said...

//நான் இன்னும் பாட்டு கேக்கவில்லை,
கேட்டு உங்களைப் போல் இசை மழையில் நானும் நனைகிறேன்//

கேளுங்க சகா.. என்ன சொல்ற‌துனே தெரியல.. அருமை..

கார்க்கி on September 30, 2008 at 1:48 PM said...

நன்றி ஜோசப்..

ஜோசப் பால்ராஜ் on September 30, 2008 at 1:51 PM said...

//கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். //

நல்ல வேளை கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக்கும் யாரும் இல்ல....

கார்க்கி on September 30, 2008 at 1:52 PM said...

//நல்ல வேளை கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக்கும் யாரும் இல்ல...//

அந்த தைரியத்தில் தான் பாடத் தொடங்கினேன் சகா..

பாபு on September 30, 2008 at 1:52 PM said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க
சீக்கிரம் பாட்ட கேக்கணும்.

கவிஞர் தாமரையுடன் ஏன் மற்றவர்கள் இணைந்து பணியாற்றுவதில்லை ?

கார்க்கி on September 30, 2008 at 1:55 PM said...

நன்றி பாபு.. நல்ல கேள்வி..

Anonymous said...

well written karki. nowadays u r writing only jokes and humor stuff. but i feel u r strong in this type of things. do write like this. all the best

LOSHAN on September 30, 2008 at 2:24 PM said...

உண்மையிலேயே அருமையான பாடல்கள்.. இந்தத் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களிலும் ஹாரிஸ் கலக்கி இருக்கிறார்..

அடியே கொல்லுது ராக் இசையில் பின்னி இருக்கிறார்

கார்க்கி on September 30, 2008 at 2:56 PM said...

நன்றி லோஷன்..

Balachander said...

super song! post also...

கார்க்கி on September 30, 2008 at 4:07 PM said...

நன்றி பாலசந்தர்..

//well written karki. nowadays u r writing only jokes and humor stuff. but i feel u r strong in this type of things. do write like this. all the பெச்ட்//

நன்றி நண்பரே..

நானும் ஒருவன் on September 30, 2008 at 6:12 PM said...

நானும் கேட்டேன். ந‌ல்ல பாடல்

ஜி on September 30, 2008 at 10:17 PM said...

ஒரு பாட்ட ரசிச்சத கூட இவ்வளவு அழகா எழுத முடியுமா?? கலக்கிட்டீங்க :))

பரிசல்காரன் on September 30, 2008 at 10:56 PM said...

சூப்பர் கார்க்கி!


கவனித்தீர்களா.. இந்தப் பாடலின் ஆரம்பத்தில் தபேலாவின் விளையாட்டை? ராஜாவின் பாடல்களில் கேட்பது போல அவ்வளவு டெப்த் அந்தத் தபேலாவில் இல்லாவிட்டாலும் சூப்பர்தான்!


இந்தப் படத்தில் அட்யே கொல்லுதேவும், முன்தினம் பார்த்தேனும் ஹிட்டாகப் போகின்றன. நான் ஏற்கனவே கேட்டபோது நினைத்தேன். இந்த அனல் மேலே பாடல் ஒரு அருமையான பாடல்!

கார்க்கி! உங்கள் ரசனைக்கு சல்யூட்!

thenali on October 1, 2008 at 8:13 AM said...

ஃபீலிங்கு?

பாட்டை கேட்க: http://www.youtube.com/watch?v=zBlrDnIEc44

செந்தழல் ரவி on October 1, 2008 at 8:57 AM said...

ரொம்ப பீலாவாத கண்ணு ?!!!

இன்னா எதுனா மாட்டீருச்சா ???

கார்க்கி on October 1, 2008 at 9:09 AM said...

@ஜி,

நன்றி ஜி...

@பரிசல்,

அனு அனுவாய் ரசித்தேன் பரிசல். அதேப் போல் இறுதியில் வர்ற பீட்டும் என்னை கவர்ந்தது. அடியே கொல்லுதே எனக்கென்னவோ உயிரின் உயிரே சாயல் தெரிந்தது. ஆனால் நிச்சயம் ஹிட்டாகும்.. ந‌ன்றி ப‌ரிச‌ல்..

கார்க்கி on October 1, 2008 at 9:10 AM said...

@தெனாலி,

நன்றி சகா..

@ரவி,

மாட்டுனா ஏன்னா ஃபீலிங்கு? போயிடுச்சு.. போயிந்தி.. போயே போச்சு..its gone

கார்க்கி on October 1, 2008 at 9:11 AM said...

நன்றி நண்பர்களே.. இந்தப் பதிவு சூடாகும் எனக் கனவிலும் நினைக்கவில்லை

பரிசல்காரன் on October 1, 2008 at 9:49 AM said...

//அனு அனுவாய் ரசித்தேன் பரிசல்.//

அனு யாரு? பக்கத்து வூட்டு பிகரா?

அணு-ன்னு சொல்லுப்பா!

கார்க்கி on October 1, 2008 at 9:57 AM said...

//அனு யாரு? பக்கத்து வூட்டு பிகரா?

அணு-ன்னு சொல்லுப்பா!//


ஹிஹிஹிஹி.. திருத்திக்கிறேன் சகா..

Anonymous said...

:)

கார்க்கி on October 1, 2008 at 11:38 AM said...

//ஒரு பாட்ட ரசிச்சத கூட இவ்வளவு அழகா எழுத முடியுமா?? கலக்கிட்டீங்க :))

September 30, 2008 10:17 PM/


நான் ரசித்த பாடல்கள் என்ற தலைப்புல நாலு பதிவு போட்டு இருக்கேன்.. அதையும் படிசிட்டு கருத்து சொல்லுங்க ஜி..

கார்க்கி on October 1, 2008 at 11:41 AM said...

வாங்க தூயா..

Karthik on October 1, 2008 at 1:45 PM said...

This one Rocks..
:)

கார்க்கி on October 1, 2008 at 2:08 PM said...

tanx karthick

Bleachingpowder on October 1, 2008 at 3:01 PM said...

என்னமோ தெரியல கார்க்கி தனிபட்ட முறையில் ஹாரிஸை எனக்கு பிடிக்கிறதே இல்லை. ஏ.ஆர்.ரகுமானின் ஜெராக்ஸ் மாதிரியே இருக்கும் அவருடைய எல்லா பாடல்களும், மின்னலே, லேசா லேசா தவரித்து.

நீங்க இவ்வளவு சொல்றீங்க அப்ப நல்லா தான் இருக்கும் கேட்டுட்டு சொல்றேன்.

கார்க்கி on October 1, 2008 at 4:00 PM said...

அவரின் எல்லாப் பாடல்களிலும் வேறு ஒருப் பாடலின் சாயல் தெரியும். இருந்தும் அவரின் பிண்ணனி இசை எனக்கு பிடிக்கும். இந்தப் பாடல் கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

கும்க்கி on October 1, 2008 at 6:04 PM said...

வயசுப்புள்ள தன்னந்தனியா பாட்டெல்லாம் கேட்டு.....கன்னுல தன்னியெல்லாம் விட்டு கெட்டுப்போகுது..., யாரும் கண்டுகிடமாட்டேங்கிறாங்க...
என்னத்தே சொல்ல போங்க.

கும்க்கி on October 1, 2008 at 6:12 PM said...

ஒரு காலத்துல (A Long Long Ago ) ஜென்சி குரலை கேட்டு சொத்தெல்லாம் எலுதி வைக்க முயற்சி செய்ததுண்டு..அவிங்க அட்றெஸ் கிடைக்கல ..பாவம். (எவ்வளவு சொத்துன்லாம் கேக்கபிடாது)

கார்க்கி on October 2, 2008 at 9:44 AM said...

@கும்க்கி,

ஆமாண்ணே.. யாரும் இல்ல... அப்புறன் ஜென்ஸி இப்போது ஒரு பாடல் பாடியிருக்கிறார்.. விரைவில் வரும்.. எனகு அவர் முகவரி தெரியும்.. சொத்துக்களை என்னிடம் கொடுங்கள்..

தமிழ்ப்பறவை on November 3, 2008 at 3:07 PM said...

நன்றி கார்க்கி நல்ல பாடல் அறிமுகத்திற்கு...இப்போதுதான் கேட்டு முடித்தேன்.பொதுவாக ஹாரிஸ் பாடல்கள் ஓரளவு கேட்பேன்.அவர் பாடல்கள் மெலோடியாக இருந்தாலும், இசைக்கருவிகள் காதைப் பதம் பார்ப்பது போல் உணர்வு...(முந்தினம் பார்த்தேனில் வரும் எலெக்ட்ரிக் கிட்டார் போல்).
அதனால் இப்பாடலைக் கூடக்கேட்க வில்லை. தற்பொழுது மென்மையை உணர்கிறேன்.தாமரையின் வரிகள் இதம்...ஹாரிஸின் இசையும் சுகம் இதில்.
//அழித்துவிட்டேன் மயக்கத்திலே//
அது "அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே..".. என வருகிறது.
உங்கள் வரியும் சரியாகத்தான் பொருந்துகிறது...

கார்க்கி on November 3, 2008 at 4:26 PM said...

// தமிழ்ப்பறவை said...
நன்றி கார்க்கி நல்ல பாடல் அறிமுகத்திற்கு...இப்போதுதான் கேட்டு முடித்தேன்.பொதுவாக ஹாரிஸ் பாடல்கள் ஓரளவு கேட்பேன்.அவர் பாடல்கள் மெலோடியாக இருந்தாலும், இசைக்கருவிகள் காதைப் பதம் பார்ப்பது போல் உணர்வு...(முந்தினம் பார்த்தேனில் வரும் எலெக்ட்ரிக் கிட்டார் போல்).
அதனால் இப்பாடலைக் கூடக்கேட்க வில்லை. தற்பொழுது மென்மையை உணர்கிறேன்.தாமரையின் வரிகள் இதம்...ஹாரிஸின் இசையும் சுகம் இதில்.
//அழித்துவிட்டேன் மயக்கத்திலே//
அது "அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே..".. என வருகிறது.
//

ஹாரீசைப் பற்றி சரியாய்தான் சொன்னீர்கள்.. இசைத்தட்டோடு கொடுக்கப்பட்ட பாடல் புத்தகத்தில் அழித்திவிட்டேன் என்றுதான் இருக்கு சகா...

 

all rights reserved to www.karkibava.com