Sep 27, 2008

டக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை


   

        டக்கீலா... பேரிலே ஒரு போதை இருப்பது போதை சூன்யங்களுக்கு தெரியாமல் போகலாம். இந்த சாயலில் பெயர் கொண்டதால்தான் ஷகீலாவும் புகழடந்தார் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். என் உள்ளங்கவர் கள்வன் "டக்கீலா" வை பற்றி சிறப்பு "ஆய்வுக்கட்டுரை" எழுதுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் பதிவு டக்கீலாவையும் ஷகீலாவையும் எனக்கு அறிமுகம் செய்த  பாரதிராஜாவுக்கு சமர்ப்பணம்.

Agave_tequilana0

       மெக்ஸிகோ நாட்டில் ஜலிஸ்கோ என்ற மாகானத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் டக்கீலா. அந்த ஊரின் மண், மேலே படத்தில் காணும் "ப்ளூ ஏகேவ்" என்ற செடி வளர ஏற்றதாக இருந்தது. இதிலிருந்தே அந்தச் செடியில் இருந்துதான் டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் அந்த செடியிலிருந்துதான்  டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை அறிக. கி.பி. 1608 ஆம் ஆண்டு தான் டக்கீலா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இன்றும் உலகில் உண்மையான டக்கீலா என்றால் அது மெக்சிகோ நாட்டில் இருந்துதான் வரும். மற்றவை எல்லாம் நம் டாஸ்மாக் தர கிங்ஃபிஷரே. எப்படி   மெக்ஸிகோ என்றால் டக்கீலாவோ அதே போல் கேரளா என்றால் ஷகீலா என்றால் அது மிகையல்ல.

    ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் செடிகள் வளர்க்கப்பட்டாலும்,  வளர்ந்து வரும் டக்கீலா ரசிகர்கள்  தேவையை பூர்த்தி செய்ய மெக்ஸிகோ நாட்டால் முடியவில்லை. எனவே டூப்ளிகேட் ரக டக்கீலாக்கள் உலா வரத் தொடங்கின. ஷகீலா கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் சர்மிளி போற இதர நடிகைகளை உருவாக்கியதை மேலே சொன்ன டக்கீலா கதையோடு ஒப்பீட்டு பார்ப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது.

        டக்கீலா பாட்டிலுக்குள் மண்புழு இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் ஒரு கதை. அது உண்மையல்ல. ஒரு முறை கவணக்குறைவின் காரணமாக செடியிலிருந்த புழு பாட்டிலுக்குள் வந்துவிட்டது. புழு இருக்கும் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டக்கீலா தரம் குறைந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு டக்கீலா தயாரிக்கப்பட்டு, அது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ($225000) விற்கபட்டது. அது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவாக கின்ன்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஒரு சமயத்தில் ஷகீலாவின் படங்கள் மலையாள சூப்பர் ஸ்டாரின் படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து அதை எதிர்த்து மலையாள படவுலகமே சதிச் செய்ததை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். அதுவும் கின்ன்ஸில் இடம் பிடித்திருக்க வேன்டும் என்றாலும் யாரோ செய்த சதியால் இடம்பெறாமல் போனது.

       இந்த ஆராய்ச்சிப் பதிவு நீண்டுக் கொன்டே போவதால் அடுத்தப் பாகத்தை பிறகு எழுதலாம் என நினைக்கிறேன். அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்.மேலும், வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களைப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவைகளுக்கும் அடுத்தப் பாகத்தில் பதில் எழுதப்படும் என்பதை "ஸ்டெடியாக" சொல்லிக் கொள்கிறேன்.

30 கருத்துக்குத்து:

தாமிரா on September 27, 2008 at 12:51 PM said...

நாந்தான் முதல். படிச்சிட்டு அப்பால வர்றேன்..

தாமிரா on September 27, 2008 at 12:58 PM said...

ஆரம்பிக்குமுன்னரே முடிச்சா மாதிரி ஒரு பீலிங். தொடரும் இந்த இடத்துல போட்டா கடுப்பாயிரும் தல.. நல்ல டாபிக், நல்லா ஆரம்பிச்சுக்கிற.. ஆனாலும் ஏதும் குற சொல்றா மேரி வெச்சுக்கிறயே..

தாமிரா on September 27, 2008 at 12:58 PM said...

ஆமா, பச்ச பேக் ரவுன்ட்ல பிரவுன் எழுத்துகள். என்னா ரசனை உன்னுது. உன் தலைல இடி விழ.. படிக்கிறவனுக்கு பளிச்சுனு தெரிய வேணாம்.?

கார்க்கி on September 27, 2008 at 1:01 PM said...

//ஆரம்பிக்குமுன்னரே முடிச்சா மாதிரி ஒரு பீலிங். தொடரும் இந்த இடத்துல போட்டா கடுப்பாயிரும் தல.. நல்ல டாபிக், நல்லா ஆரம்பிச்சுக்கிற.. ஆனாலும் ஏதும் குற சொல்றா மேரி வெச்சுக்கிறயே..

//

முழுசாதான் போட்டேன்.. ரொம்ப பெருசா தெரிஞ்சதால் வெட்டிட்டேன்..

கார்க்கி on September 27, 2008 at 1:02 PM said...

//ஆமா, பச்ச பேக் ரவுன்ட்ல பிரவுன் எழுத்துகள். என்னா ரசனை உன்னுது. உன் தலைல இடி விழ.. படிக்கிறவனுக்கு பளிச்சுனு தெரிய வேணாம்.?

//

மாத்தியாச்சு

பரிசல்காரன் on September 27, 2008 at 1:05 PM said...

நன்லாத்ல்யான்தா சிக்கயோறாங்க கபசங்!

விஜய் ஆனந்த் on September 27, 2008 at 1:07 PM said...

நல்ல ஆய்வு...

நல்ல ஒப்பீடு..

கார்க்கி on September 27, 2008 at 1:08 PM said...

//நன்லாத்ல்யான்தா சிக்கயோறாங்க கபசங்!//

இதான் நம்ம பாஷை சகா.. (குடிகாரங்க பாஷைனு யார்ரா சொன்னது, புடி அவன‌)

கார்க்கி on September 27, 2008 at 1:09 PM said...

/நல்ல ஆய்வு...

நல்ல ஒப்பீடு..//

அடுத்த பாகத்தில் எப்படி அடிக்கிறது சொல்லப்போறேன் நண்பரே..

விஜய் ஆனந்த் on September 27, 2008 at 1:10 PM said...

// பரிசல்காரன் said...
நன்லாத்ல்யான்தா சிக்கயோறாங்க கபசங்! //

மாரல் ஆஃப் த பின்னூட்டம் : மதிய நேரத்தில், டாஸ்மாக்கோ, டக்கீலாவோ, அல்லது ஷகீலாவோ...மனநலத்திற்கு தீங்கானது...

விஜய் ஆனந்த் on September 27, 2008 at 1:13 PM said...

// கார்க்கி said...

அடுத்த பாகத்தில் எப்படி அடிக்கிறது சொல்லப்போறேன் நண்பரே. //

அய்யய்யோ...எனக்கு வேண்டாம்பா...கெட்ட பசங்க...இந்த பச்சப்புள்ளைக்கு தப்பான மேட்டரெல்லாம் சொல்லிக்குடுத்து கெடுக்கப்பாக்கறாங்களே...

லக்கிலுக் on September 27, 2008 at 1:44 PM said...

நல்ல ஒப்பீடு :-)

Raam on September 27, 2008 at 2:06 PM said...

Karki.. Ungal sevai.. Nattukku thevai....

Nanum takila piriyan thaan..

utkollum murai muthal vithyaasam thaan pongal..

Raam

கார்க்கி on September 27, 2008 at 2:18 PM said...

//மாரல் ஆஃப் த பின்னூட்டம் : மதிய நேரத்தில், டாஸ்மாக்கோ, டக்கீலாவோ, அல்லது ஷகீலாவோ...மனநலத்திற்கு தீங்கானது.../

அது பரிசல் போன்ற சிறுவர்களுக்கு. நாங்க எல்லாம்.. ஹே..ஹேஹே

//அய்யய்யோ...எனக்கு வேண்டாம்பா...கெட்ட பசங்க...இந்த பச்சப்புள்ளைக்கு தப்பான மேட்டரெல்லாம் சொல்லிக்குடுத்து கெடுக்கப்பாக்கறாங்களே...//

ஹிஹிஹிஹி.. நான் ஏதவாது சொன்னா வலையுலகம் என்ன கும்மிடும். சோ, ஐ கீப் கொய்ட்

கார்க்கி on September 27, 2008 at 2:19 PM said...

//லக்கிலுக் said...
நல்ல ஒப்பீடு :-)//

நன்றி நண்பரே..

//Karki.. Ungal sevai.. Nattukku thevai....

Nanum takila piriyan thaan..

utkollum murai muthal vithyaasam thaan pongal..

Raam//

நம்ம கட்சிக்கு ஆள் கிடைச்சுட்டாருப்பா..

முரளிகண்ணன் on September 27, 2008 at 2:32 PM said...

:-)))))))))))))

விஜய் ஆனந்த் on September 27, 2008 at 2:48 PM said...

// கார்க்கி said...

ஹிஹிஹிஹி.. நான் ஏதவாது சொன்னா வலையுலகம் என்ன கும்மிடும். சோ, ஐ கீப் கொய்ட் //

என்னாது??? கொய்ட்-ன்னு கீப் வச்சிருக்கீங்களா??? சொல்லவேயில்ல!!!!

இன்னும் கல்யாணமே ஆகலியாம்...அதுக்குள்ளவேவா???

புதுகை.அப்துல்லா on September 27, 2008 at 3:01 PM said...

வாங்க விஞ்ஞானி :))

yuva on September 27, 2008 at 3:02 PM said...

Buthisalithanamum
Komalithanamum
kalanthu seitha
kalavaiya neengal???

கார்க்கி on September 27, 2008 at 3:25 PM said...

வாங்க முரளி..

//என்னாது??? கொய்ட்-ன்னு கீப் வச்சிருக்கீங்களா??? சொல்லவேயில்ல!!!!

இன்னும் கல்யாணமே ஆகலியாம்...அதுக்குள்ளவேவா???//

விஜய் இந்த ஜோக்க, எங்க அப்பா வழி தாத்தாவோட தாத்தாக்கிட்ட அவரு தாத்தவோட தாத்தா சொன்னதா எங்க அம்மா வழி தாத்தவோட தாத்தா சொல்லுவாரு..

கார்க்கி on September 27, 2008 at 3:27 PM said...

//புதுகை.அப்துல்லா said...
வாங்க விஞ்ஞானி :))
//

அட.. அப்போ நானும் டாக்டர் ஆகலாமா?

/Buthisalithanamum
Komalithanamum
kalanthu seitha
kalavaiya neengal??//

என்ன சொல்றீங்க? புரியல யுவா.. நான் புத்திசாலி தெரியும்..

yuva on September 27, 2008 at 3:33 PM said...

Buthisaali means,
puriyanumae!!!!!

Rajaraman on September 27, 2008 at 3:50 PM said...

எப்படி அடிப்பது என்று நான் இப்பவே சொல்லவா.... டக்கீலா சூப்பர் சரக்கு பாஸ்.. சும்மா நின்னு விளையாடும்...

கார்க்கி on September 27, 2008 at 4:02 PM said...

//எப்படி அடிப்பது என்று நான் இப்பவே சொல்லவா.... டக்கீலா சூப்பர் சரக்கு பாஸ்.. சும்மா நின்னு விளையாடும்..//

சரியா சொன்னிங்க பாஸ்..

பையா, சாருக்கு ரெண்டு ஷாட் டக்கீலா பார்சல்..

நாமக்கல் சிபி on September 28, 2008 at 1:17 PM said...

//அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்//

ஒப்பீடு!????????????????????????????????

:(

கார்க்கி on September 28, 2008 at 1:26 PM said...

///அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்//

ஒப்பீடு!????????????????????????????????

:(//

என்ன சொல்ல வர்றீங்கனு புரியல தோழரே...

Kalai M on September 29, 2008 at 6:08 AM said...

Potai kudukum rendu mukiyama items in india vechi enna oru comparison.

கார்க்கி on September 29, 2008 at 9:19 AM said...

//kalai m said...
Potai kudukum rendu mukiyama items in india vechi enna oru comparison.//

நன்றி... நன்றி...

வால்பையன் on September 29, 2008 at 11:20 AM said...

அந்த செடியை பார்த்தால் நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி மாதிரி இருக்கு

கார்க்கி on September 29, 2008 at 11:27 AM said...

//அந்த செடியை பார்த்தால் நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி மாதிரி இருக்கு//

அப்படியும் ஒரு புரளி இருக்குனு விக்கிபீடியால போட்டு இருக்கு ச்கா..

 

all rights reserved to www.karkibava.com