Sep 26, 2008

மப்பில்லாம உளறினா எப்படி இருக்கும்?


      

     நான் கடந்த வந்த பாதையை சற்று திரும்பி பார்க்க இந்த தனிமை எனக்கு பல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தது. நேற்றைய வார்த்தைகளால் என்னை உச்சரித்துக் கொள்வதும் உத்தமம் என்றே எனக்கும் தோண்றியது. யோசித்துப் பார்க்கையில்தான் நான் எத்தனை மோசமானவன் என்று எனக்கே தெரிந்தது.

     என் வண்டியில் அடிபட்ட நாய்க்குட்டி ஒன்று... இன்றும் என்னை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கல்லின் மீது மோதியது போல சென்றிருக்கிறேன் நான் அன்று.

      என் நெருக்கமான நண்பர்களின் பிறந்த நாளிற்கு வாழ்த்த மறந்திருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற பலரின் திருமணத்திற்கும் செல்லவில்லை. சென்ற திருமணங்களிலும் இருக்க வேண்டிய நேரங்களில் "முழுவதுமாய்" இருந்திருக்கிறேன்.

     உணவகங்களில் கை கழுவிய பின் தெறித்த நீர்த்துளிகள் பிறரின் மேல் பட்ட போதும் மெளனம் பேசியிருக்கிறேன்.

     என்னைப் பார்த்தும் சிரித்த சில குழந்தைகளை கொடூரமான சிரிப்புடன் பேயாகி பயமுறுத்தி இருக்கிறேன்.

    பள்ளி நாட்களில் செய்த நாச வேலைகளை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. கல்லூரி காலம். ம்ஹூம். வேண்டாம்.

    என்னை நம்பி வரத் தயாராயிருந்த என் தேவதையை அவள் பெற்றோரின் பெயராலே மனமாற்றி பிரிந்திருக்கிறேன். போதாதென்று உபயோகமில்லாத என் உயிரின் பெயரால் இன்னொருவருக்கு சொந்தமாக்கி இருக்கிறேன்.

     திரும்பி பார்த்தால் வெறும் பாலைவனமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. என்றாவது ஒரு நாள் புல்வெளியும் தெரியுமென நமபிக்கை இருக்கிறது.

45 கருத்துக்குத்து:

yuva on September 26, 2008 at 10:10 AM said...

Nam nambikkaithaan
theerpum kooda....

yuva on September 26, 2008 at 10:10 AM said...

போதாதென்று உபயோகமில்லாத என் உயிரின் பெயரால் இன்னொருவருக்கு சொந்தமாக்கி இருக்கிறேன்.

Puriyaliyei!!

Sen22 on September 26, 2008 at 10:14 AM said...

இப்ப என்னதான் சொல்ல வரீங்க நீங்க???????

வால்பையன் on September 26, 2008 at 10:17 AM said...

// "முழுவதுமாய்" இருந்திருக்கிறேன்.//

நேக்கு புரிஞ்சிருச்சு

வால்பையன் on September 26, 2008 at 10:18 AM said...

கொஞ்சமா ஊத்திகிட்ட இப்படி தான் ஏதோதோ தோணும்,
புல்லா அடிச்சிட்டு மட்டையாயிட்டா பிரச்சனையே இல்ல

கார்க்கி on September 26, 2008 at 10:39 AM said...

//Puriyaliyei!!/

அதான் உளறேன்னு தலைப்பே வச்சிட்டேன் இல்ல.. அப்புறம் எப்படி புரியும்..

//இப்ப என்னதான் சொல்ல வரீங்க நீங்க???????//

ஹிஹிஹி.. அது தெரியாமத்தான் சின்னதா முடிச்சிட்டேன்.. (சின்னதுனா ஸ்மாலானு வால்பையன் கேட்பாரு பாருங்க)

கார்க்கி on September 26, 2008 at 10:40 AM said...

//நேக்கு புரிஞ்சிருச்சு//

அது மேட்டரு...

என்ன சகா காலைல மூட் அவ்ட் பண்ணிட்டீங்க.. உங்க 100வது பதிவ படிச்சதில இருந்து ஒரு மாதிரியா இருக்கு.

நான் ஆதவன் on September 26, 2008 at 11:01 AM said...

//என்னைப் பார்த்தும் சிரித்த சில குழந்தைகளை கொடூரமான சிரிப்புடன் பேயாகி பயமுறுத்தி இருக்கிறேன்//

அட அதுக்கெல்லாம் நீங்க கவலப்படக்கூடாது. நீங்க சாதாரணமா சிரிச்சாலே குழந்தைங்க பயப்படும். நீங்க பயமுறுத்தித்தான் குழந்தை அழுவுதுன்னு தப்பா நினைச்சு இப்ப கவலைப் பட வேண்டாம்

கார்க்கி on September 26, 2008 at 11:42 AM said...

//
அட அதுக்கெல்லாம் நீங்க கவலப்படக்கூடாது. நீங்க சாதாரணமா சிரிச்சாலே குழந்தைங்க பயப்படும். நீங்க பயமுறுத்தித்தான் குழந்தை அழுவுதுன்னு தப்பா நினைச்சு இப்ப கவலைப் பட வேண்டாம்//

10 9 8 7 6 5 4 ...

என்ன பார்க்கிறீங்க? எனக்கு கோவம் வரும்போது இப்படி செய்ய சொல்லி எங்க பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி சொல்லியிருக்காங்க..

டம்பி said...

"மப்பில்லாம உளறினா எப்படி இருக்கும்?"

ஒரு வித்தியாசமும் தெரியல.
இனிமே மப்பா இல்லையானு பதிவழுதும்போது கவலைப்படவேணாம்.

Bleachingpowder on September 26, 2008 at 12:02 PM said...

கவலை வேண்டாம் கார்க்கி. எல்லாருடைய கடந்த காலமும் இப்படி தான் இருக்கும்.

கார்க்கி on September 26, 2008 at 12:07 PM said...

//ஒரு வித்தியாசமும் தெரியல.
இனிமே மப்பா இல்லையானு பதிவழுதும்போது கவலைப்படவேணாம்.//

நீங்க மப்புல இருக்கிங்களா இல்லையானு நான் ஏண்ணே கவலைப்படனும்?

கார்க்கி on September 26, 2008 at 12:08 PM said...

//கவலை வேண்டாம் கார்க்கி. எல்லாருடைய கடந்த காலமும் இப்படி தான் இருக்கும்.///

அப்படியா????? நன்றி வால்பையன்..

narsim on September 26, 2008 at 12:14 PM said...

ஒரு ஃபுல்லா தலைவா பதிவுக்கு முன்னால..

நர்சிம்

கார்க்கி on September 26, 2008 at 12:17 PM said...

//ஒரு ஃபுல்லா தலைவா பதிவுக்கு முன்னால..

நர்சிம்//

ஃபுல்லா? ஹலோ பதிவ போட்டது வால்பையன் இல்ல.. கார்க்கி.. நான் பியரே ஃபுல்லா அடிக்க மாட்டேன்.. என்ன போய்? போங்க சார்...

வால்பையன் on September 26, 2008 at 12:20 PM said...

//ஃபுல்லா? ஹலோ பதிவ போட்டது வால்பையன் இல்ல..//

நான் கட்சி ஆரம்பிச்சா உங்களுக்கு தான் கொள்கை பரப்பு செயலாளர் பதவி

டம்பி said...

//நீங்க மப்புல இருக்கிங்களா இல்லையானு நான் ஏண்ணே கவலைப்படனும்?//

ஆமாண்ணே! கவலைப்பட்டு உங்க மப்பு எறங்கிடப்போவுது. பாத்துக்கிடுங்க!

கும்க்கி on September 26, 2008 at 12:56 PM said...

ஹும்.......................

தாமிரா on September 26, 2008 at 1:04 PM said...

வால் :கொஞ்சமா ஊத்திகிட்ட இப்படி தான் ஏதோதோ தோணும்,
புல்லா அடிச்சிட்டு மட்டையாயிட்டா பிரச்சனையே இல்ல..// ஹிஹி.. ஓஹோ..ஆஹா ஹஹ.. ரிப்பீட்டேய்..

கார்க்கி on September 26, 2008 at 1:15 PM said...

//நான் கட்சி ஆரம்பிச்சா உங்களுக்கு தான் கொள்கை பரப்பு செயலாளர் பதவி//

அண்ணே.. அப்படியே ஆட்சில் வந்தா தகவல் தொழில்னுட்பத்துறை கொடுங்கண்ணே.. இந்த பதிவர்கள ஒரு வழி பண்ணனும்..

கார்க்கி on September 26, 2008 at 1:16 PM said...

//ஆமாண்ணே! கவலைப்பட்டு உங்க மப்பு எறங்கிடப்போவுது. பாத்துக்கிடுங்க!/

அட ஏறுனா தாங்க இறங்கும்..

கார்க்கி on September 26, 2008 at 1:17 PM said...

//வால் :கொஞ்சமா ஊத்திகிட்ட இப்படி தான் ஏதோதோ தோணும்,
புல்லா அடிச்சிட்டு மட்டையாயிட்டா பிரச்சனையே இல்ல..// ஹிஹி.. ஓஹோ..ஆஹா ஹஹ.. ரிப்பீட்டேய்.//

சத்தம் பலமா இருக்கு.. நைட் ம‌ட்டும் "ம்ம்" மட்டும்தான் கேட்குது..

@கும்க்கி,

என்ன‌ சகா, சலிச்சுக்கிறீங்க?

rapp on September 26, 2008 at 1:33 PM said...

23

rapp on September 26, 2008 at 1:33 PM said...

24

rapp on September 26, 2008 at 1:33 PM said...

25

rapp on September 26, 2008 at 1:33 PM said...

ஓகே, இப்போ பதிவுக்கு போவோம்

rapp on September 26, 2008 at 1:40 PM said...

//என்னைப் பார்த்தும் சிரித்த சில குழந்தைகளை கொடூரமான சிரிப்புடன் பேயாகி பயமுறுத்தி இருக்கிறேன்//

அப்போ இப்போ சிரிக்கறதே இல்லையா?:):):)
ஆனாலும் நல்லாத்தான் அந்தக் குழந்தைகளா கலாய்ச்சிருக்கீங்க, பின்ன உங்கள பார்த்து அவங்க அம்மா அப்பால்லாம் சிரிப்ப அடக்கிட்டு போறப்ப, இவங்க மட்டும் சிரிச்சா, அப்படித்தான் செய்யணும்:):):)

rapp on September 26, 2008 at 1:41 PM said...

//
நேக்கு புரிஞ்சிருச்சு
//

செய்வதை திருந்தச் செய்யவும், நேக்கு புரிஞ்சிடுத்து அப்படின்னு இருக்கணும்

rapp on September 26, 2008 at 1:42 PM said...

// உணவகங்களில் கை கழுவிய பின் தெறித்த நீர்த்துளிகள் பிறரின் மேல் பட்ட போதும் மெளனம் பேசியிருக்கிறேன்//

ஹா ஹா ஹா, இப்படில்லாம் ஏங்க பண்ணீங்க?

rapp on September 26, 2008 at 1:44 PM said...

//ள்ளி நாட்களில் செய்த நாச வேலைகளை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. கல்லூரி காலம். ம்ஹூம். வேண்டாம்//
அங்க எல்லாம் திரும்பி போய் படிக்கச் சொல்ல மாட்டாங்கன்னுதான இப்படிஎல்லாம் எழுதறீங்க?:):):)

கார்க்கி on September 26, 2008 at 2:20 PM said...

//அப்போ இப்போ சிரிக்கறதே இல்லையா?:):):)
ஆனாலும் நல்லாத்தான் அந்தக் குழந்தைகளா கலாய்ச்சிருக்கீங்க, பின்ன உங்கள பார்த்து அவங்க அம்மா அப்பால்லாம் சிரிப்ப அடக்கிட்டு போறப்ப, இவங்க மட்டும் சிரிச்சா, அப்படித்தான் செய்யணும்:):):)

September 26, 2008 1:40 PM//

ம்ம்.. எப்பதான் இந்த உல‌கத்துக்கு உண்மை தெரிய போதோ?( என்ன உண்மையா, நான் ரொம்ப அழகு)

கார்க்கி on September 26, 2008 at 2:21 PM said...

////
நேக்கு புரிஞ்சிருச்சு
//

செய்வதை திருந்தச் செய்யவும், நேக்கு புரிஞ்சிடுத்து அப்படின்னு இருக்கணும்//

வால்பையனை குற்றம் சொல்லும் ராப் நிச்சயம் வாலுக்கு எதிர் குழுவை சேர்ந்தவர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது..

கார்க்கி on September 26, 2008 at 2:22 PM said...

//அங்க எல்லாம் திரும்பி போய் படிக்கச் சொல்ல மாட்டாங்கன்னுதான இப்படிஎல்லாம் எழுதறீங்க?:):):)//

ஹிஹிஹி ஆமாம்..

தாமிரவின் தங்கமணி பதிவில் தங்கமணிகளை ஆதரித்து பேசியிருக்கிறேன். பார்த்தீர்களா ராப்?

விஜய் ஆனந்த் on September 26, 2008 at 3:07 PM said...

:-)))...

குடி குடியை கெடுக்கும்...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..

கார்க்கி on September 26, 2008 at 5:00 PM said...

//:-)))...

குடி குடியை கெடுக்கும்...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..//

அட என்னாச்சு சக? உங்களையே நீங்க இப்படி சொல்றீங்க?

ARUVAI BASKAR on September 26, 2008 at 5:37 PM said...

உளறினா தான் உண்மைவரும்ன்னு உண்மையை ஒத்துகிட்டீங்களே !

கார்க்கி on September 26, 2008 at 5:41 PM said...

//உளறினா தான் உண்மைவரும்ன்னு உண்மையை ஒத்துகிட்டீங்களே !//

நான் உண்மைய சொல்றேனு சொன்னது உளறல் இல்லைங்க.. ஆனா உளறேனேனு சொல்றது உண்மைதாங்க. உண்மையா சொல்லனும்னா நான் அடைக்கடி உளறுவேன்.. இப்போ உளற‌ சொன்னிங்கனா உண்மைய சொல்லுவேன்.. உண்மையா நான் எப்ப் உளறுவேன்னா, உளறுபோதெல்லாம் உண்மைய சொல்றதால, நான் எப்போ உளறுவேன்ற உண்மைய நான் உளறுபோது சொல்றேங்க.. ரொம்ப உளறிட்டேனோ, உண்மைய சொல்லுங்க..

sridhar said...

////உளறினா தான் உண்மைவரும்ன்னு உண்மையை ஒத்துகிட்டீங்களே !//

நான் உண்மைய சொல்றேனு சொன்னது உளறல் இல்லைங்க.. ஆனா உளறேனேனு சொல்றது உண்மைதாங்க. உண்மையா சொல்லனும்னா நான் அடைக்கடி உளறுவேன்.. இப்போ உளற‌ சொன்னிங்கனா உண்மைய சொல்லுவேன்.. உண்மையா நான் எப்ப் உளறுவேன்னா, உளறுபோதெல்லாம் உண்மைய சொல்றதால, நான் எப்போ உளறுவேன்ற உண்மைய நான் உளறுபோது சொல்றேங்க.. ரொம்ப உளறிட்டேனோ, //


இத சொன்னவரு இனிமேல உன் ப்ளாக் பக்கமே வர மாட்டாரு

இளைய பல்லவன் on September 26, 2008 at 6:23 PM said...

இப்படி தெளிவா உண்மைய உளறிட்டீங்களே..

அது சரி,

ப்ளீசிங்க் பவுடர் கமென்டுக்கு, வால் பையனுக்கு நன்றி சொல்றீங்க?

தெளிவா இருக்காப்பல இருக்கு ;-)

இல்லைன்னா ரெண்டு பேரும் ஒண்ணா ?

உண்மைய ஒளறிடுங்க

கார்க்கி on September 26, 2008 at 6:50 PM said...

//ப்ளீசிங்க் பவுடர் கமென்டுக்கு, வால் பையனுக்கு நன்றி சொல்றீங்க?

தெளிவா இருக்காப்பல இருக்கு ;-)

இல்லைன்னா ரெண்டு பேரும் ஒண்ணா ?

உண்மைய ஒளறிடுங்க

September 26, 2008 6:23 PM//


இந்த நுண்ணரசியல் புரியனும்னா போய் வால்பையனோட நூறாவது பதிவுல் இருக்கிற 100 பின்னூட்டத்தையும் படிங்க..

இளைய பல்லவன் on September 26, 2008 at 7:44 PM said...

கார்க்கி said...
//
இந்த நுண்ணரசியல் புரியனும்னா போய் வால்பையனோட நூறாவது பதிவுல் இருக்கிற 100 பின்னூட்டத்தையும் படிங்க..
//

இப்போ 120. மொத்தத்தையும் படிச்சு ஒரு வழியா தெளிவாயிட்டுது.

இப்படி விளக்கமாச் சொன்னாத்தானே புரியும்.

நானெல்லாம் புதிய பதிவருங்க.

ARUVAI BASKAR on September 26, 2008 at 7:46 PM said...

//இத சொன்னவரு இனிமேல உன் ப்ளாக் பக்கமே வர மாட்டாரு//
என்ன சகா , இப்படி சொல்லிட்டீங்க ,
நாம அப்படியா பழகியிருக்கோம் ?

கார்க்கி on September 27, 2008 at 10:42 AM said...

//இப்போ 120. மொத்தத்தையும் படிச்சு ஒரு வழியா தெளிவாயிட்டுது.

இப்படி விளக்கமாச் சொன்னாத்தானே புரியும்.

நானெல்லாம் புதிய பதிவருங்க.//

ஓக்கே பல்லவன், இனிமேல விளக்கத்த பாருங்க..

கார்க்கி on September 27, 2008 at 10:43 AM said...

//என்ன சகா , இப்படி சொல்லிட்டீங்க ,
நாம அப்படியா பழகியிருக்கோம் ?//

நல்ல பாருங்க தல.. நான் சொல்லல ஒரு வீனாப்போனவன் சொல்லியிருக்கான்.. (என் ஃப்ரெண்ட்தான், என் கூட சேர்ந்து வீணாப்பானவன்)

sinthu on December 15, 2008 at 4:19 PM said...

so sad ending...............anna.......

 

all rights reserved to www.karkibava.com