Sep 22, 2008

மரண மொக்கைனா என்னங்க?


        இதை முழுவதுமாய் படிப்பவர்களுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இலவசம். நான் போடும் மொக்கை எல்லாம் மரண மொக்கை என்ற தாமிரா, தயவு செய்து இதைப் படிக்காமால் இருந்துவிடுவது நல்லது.

     நான் கல்லூரியில் படித்த போது யாரவாது ஒருவனை சிரிக்காமல் ஒரு அரை மணி நேரம் மொக்கை போட வேண்டும் என ஆசை. என் நண்பன் ஒருவனின் திட்டப்படி முதலாமாண்டு மாணவன் ஒருவனை பகடிவதை செய்வதென முடிவு செய்தோம். துணைக்கு ஒரு குவார்ட்டரை எடுத்துக் கொண்டு ஐந்தாம் எண் அறைக்குள் நுழைந்தோம். எனக்கு தெரியாத மாதிரி என் நண்பன் ஒரு மாணவனிடம் "அவன் என்ன பேசினாலும் கேட்க வேண்டும். சிரிக்க கூடாது.போதும் என சொல்லக் கூடாது. அவன் முடிச்சதுக்கப்புறம், நான் கேள்வி கேட்பேன்" என்றான். பலியாடு போல அவன் தலையாட்ட சரக்கடிப்பதோடு என் உரையையும் துவங்கினேன்.

      ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா கார்க்கி ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற  ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும்  அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

       இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு நான் சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான். கதை முடிஞ்சது நினைச்சிட்டான் போல. இருடா போட்டா லைட்ட எல்லாம் நிறுத்த வேணாமானு கேட்டேன். பாவம் மயங்கி விழுந்துட்டான்.

     அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு......... (to be continued)

56 கருத்துக்குத்து:

கும்க்கி on September 22, 2008 at 10:31 AM said...

அய்யோ அம்மா செத்தேன்...

yuva on September 22, 2008 at 10:32 AM said...

nalla mokkai poteenga ponga

yuva on September 22, 2008 at 10:33 AM said...

Aacharyam, vantha freshnessoda appadiyei irukaenae, ethum aagaliyei, Thank god......

கும்க்கி on September 22, 2008 at 10:35 AM said...

அசரீரீ said : இனிமே ஆர்வக்கோளாறுல கார்திக் ப்ளாக் பக்கம் வருவியா வருவியா வருவி..வரு...வ..........

கார்க்கி on September 22, 2008 at 10:45 AM said...

@கும்கி,
கும்கி முழுசா படிச்சீங்களா? அப்புறம் என் பேரு கார்க்கி, கார்த்திக் இல்ல..

@யுவா,

இது ஸ்லோ பாய்சன் மாதிரி.. இன்னும் ஒரு வாரத்துக்கு கண்ட நேரத்துல ஞாபகம் வந்து தொல்லை பண்ணும் பாருங்க..

narsim on September 22, 2008 at 10:46 AM said...

//பகடிவதை//

வார்த்தைப் பிரோயகங்கள் கலக்கல்.. தொடரட்டும்!

நர்சிம்

கார்க்கி on September 22, 2008 at 10:47 AM said...

நன்றி நர்சிம். இந்த பதிவுக்கு என்ன பாராட்டின ஒரே ஆளா நீங்கதான் இருப்பீங்கனு நினைக்கிறேன்..

Bleachingpowder on September 22, 2008 at 10:50 AM said...

அப்ப தமிழ்நாட்டுல மின் வெட்டுக்கு காரணம் நீங்க தானா?

கார்க்கி on September 22, 2008 at 10:53 AM said...

அதையும் சேர்த்து எழுதலாம்னு நினைச்சேன்.. எதுக்கு வம்புனு விட்டுட்டேன்.. வருகைக்கு நன்றி ப்ளீச்சிங்

நானும் ஒருவன் on September 22, 2008 at 11:01 AM said...

// (to be continued)//

இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா.

விஜய் ஆனந்த் on September 22, 2008 at 11:09 AM said...

இது மரண மொக்கையெல்லாம் இல்ல...

அதையும் தாண்ண்ண்ண்டிடிடிடி மொக்கையானது...

கார்க்கி on September 22, 2008 at 11:14 AM said...

@ நானும் ஒருவன்,

சும்மா வாங்க.. இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்ட விட இந்த விளையாட்டு நல்லாயிருக்கும்.

@விஜய்,

பாராட்டுக்கு நன்றி :))))

Sen22 on September 22, 2008 at 11:18 AM said...

அப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா உங்க மொக்கையை...

பாவங்க அந்த 1st Year பையன்...

Sen22 on September 22, 2008 at 11:22 AM said...
This comment has been removed by the author.
Sen22 on September 22, 2008 at 11:25 AM said...

//உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

என்கிட்ட போட்டோ இல்லீங்கோ... ஆனா கமெண்ட் கண்டிப்பா போடுவேன்...

கார்க்கி on September 22, 2008 at 11:28 AM said...

@சென்,
ஹிஹிஹி.. அவன் அப்புறமா சொன்னான், இத விட கொடுமையா யாராலையும் ராகிங் பண்ண முடியாதுனு..

கார்க்கி on September 22, 2008 at 11:29 AM said...

////உங்களுக்கு பிடிச்சா கமெண்ட் போடுங்க.. உங்களுக்கு பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க.. நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்...//

என்கிட்ட போட்டோ இல்லீங்கோ... ஆனா கமெண்ட் கண்டிப்பா போடுவேன்...//

தல, நான் ஃபோட்டோனு சொல்லலயே "போட்டா" தானே சொன்னேன்..

ஜோசப் பால்ராஜ் on September 22, 2008 at 11:29 AM said...

உலக வெப்பமயமாக்கலை தடுக்க அவன் அவன் 5 நிமிசம் லைட் நிறுத்துங்கன்னு கத்திக்கிட்டு இருக்கானுங்க, இவரு என்னடான்ன செவ்வாய் கிரகம் வரைக்கும் லைட் போட வைச்சுருக்காருப்பா.

உம்ம தூக்கி, அண்டார்டிகாவுல போடணும்யா.

Sundar on September 22, 2008 at 11:37 AM said...

the happening படம் பார்த்ததும் இப்படி ஒன்னு போட தோணிச்சா உங்களுக்கு. உங்களை ஒரு ரூம்ல அடச்சு வச்சு the happening படத்தை 4 தடவை பார்க்க வைக்கணும்!

கார்க்கி on September 22, 2008 at 11:38 AM said...

அட அப்ப எல்லாம் அப்படின்னா என்னனான்னே எனக்கு தெரியாதுங்கண்ணா.. அன்டார்டிக்கல‌ என்ன பொடுறதுக்கு முன்னாடி லைட் போட்டுறுங்க..

கார்க்கி on September 22, 2008 at 11:51 AM said...

@சுந்தர்,

சரிங்க.. ஆனா படம் முடிஞ்சதுக்கப்புறம் லைட்ட போட்டுத்தானே ஆகனும்?

Rajaraman on September 22, 2008 at 11:55 AM said...

வார துவக்கத்திலேயே இப்படி என்றால் அய்யோ எப்படி தான் முடிப்பிர்கள் என்று தெரிய வில்லையே. கஷ்டம்டா சாமி.

கார்க்கி on September 22, 2008 at 12:02 PM said...

@ராஜாராமன்,

வாங்க வாங்க.. புதுசா இருக்கீங்க.. வருகைக்கு நன்றி.. அப்புறம் நமக்கு முதல் கடைசி எல்லாம் கிடையாதுங்க.. போட்டுட்டே இருப்போம் மொக்கைய...

நான் ஆதவன் on September 22, 2008 at 12:28 PM said...

மொக்கை பதிவுகளுக்கு "மொக்கை" என்று பெயர் வைத்துவிட்டதனால், இப்பதிவு மொக்கையை விட கொடுமையாக இருப்பதினால் இப்பதிவிற்கு வேறு பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

yuva on September 22, 2008 at 12:51 PM said...

Athayum thaan paarpomei........

yuva on September 22, 2008 at 12:52 PM said...

20k hitsku verum thanks oda niruthiteenga...
treat enga??????

பரிசல்காரன் on September 22, 2008 at 1:09 PM said...

மிகச் சிறந்த பதிவு!

இதை அப்படியே கல்வெட்டில் எழுதி வெச்சுடுங்க. வருங்கால சந்ததிகளுக்கு உதவும்!

கார்க்கி on September 22, 2008 at 1:12 PM said...

@ஆதவன்,

அதனால தானே மரணமொக்கைனு சொன்னேன்..

@பரிசல்,

அட கல்வெட்ட விட ப்ளாக் ரொம்ப சேஃப் சகா.. அதான் இதுல எழுதிட்டோம்ல.. உங்களுக்கு மட்டும் சொல்றேன் காத கொடுங்க.. (இது மாதிரி இன்னும் நாலஞ்சு மேட்டர் இருக்கு)

கார்க்கி on September 22, 2008 at 1:14 PM said...

//20k hitsku verum thanks oda niruthiteenga...
treat enga??????//

சீக்கிரம் வச்சிடலாம்.. சாயுங்காலம் ஹைதரபாத் வந்துடுங்க..

yuva on September 22, 2008 at 1:18 PM said...

Athu seri,
up and down flight book pannunga.......

கும்க்கி on September 22, 2008 at 1:45 PM said...

மன்னிக்கவும்.. கார்க்கி அவர்களே......படித்த பயத்தில்(?) பெயர் குழம்பி விட்டது.

கும்க்கி on September 22, 2008 at 1:48 PM said...

ஹைதராபாத் வந்து வுங்கல துழாவிக்கிட்டிருந்தாரே ஒருத்தர்....கைக்கு ஆப்பிட்டீங்களா..இல்லையா?(i said THAMIRA)

கார்க்கி on September 22, 2008 at 2:17 PM said...

//மன்னிக்கவும்.. கார்க்கி அவர்களே......படித்த பயத்தில்(?) பெயர் குழம்பி விட்டது.//

அந்த பயம் இருக்கட்டும்.

//ஹைதராபாத் வந்து வுங்கல துழாவிக்கிட்டிருந்தாரே ஒருத்தர்....கைக்கு ஆப்பிட்டீங்களா..இல்லையா?(i said THAMIRA)//

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறேன். விரைவில் வரும்.. உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி..

sridhar said...

யப்பா... முடியல..

ARUVAI BASKAR on September 22, 2008 at 3:30 PM said...

கார்க்கி ,
அந்த பையன் காலையில் உயிரோட இருந்தாரா ?
கோர்ஸ் முடிச்சாரா?

கார்க்கி on September 22, 2008 at 4:19 PM said...

//யப்பா... முடியல.//

ஆமாம் மச்சி.. இன்னும் முடியல‌

@பாஸ்க‌ர்,

உயிரோடு இருன்தான்.. ஆனா கோர்ஸ் முடிச்சானானு தெரிய‌ல‌ ஜி

syed on September 22, 2008 at 4:36 PM said...

.........to be continued...


i am waiting...really super

கார்க்கி on September 22, 2008 at 4:39 PM said...

@சயீத்,
அண்ணே.. நீங்க அவ்ளோ நல்லவரா?????? ரொம்ப நன்றிண்ணே

Anonymous said...

ஆனாலும் நல்லாத்தான் இருக்கு!!!!!!!!!

குசும்பன் on September 22, 2008 at 6:16 PM said...

நண்பரே நல்லா இருக்கீங்களா?

Tharuthalai on September 22, 2008 at 6:31 PM said...

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Tharuthalai on September 22, 2008 at 6:31 PM said...

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Tharuthalai on September 22, 2008 at 6:32 PM said...

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பழமும் பாலும் கைகலில் ஏந்தி


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

கார்க்கி on September 22, 2008 at 6:43 PM said...

//நண்பரே நல்லா இருக்கீங்களா?//

நான் நல்லாத்தான் இருக்கேன்.. எங்க ஆளையேக் காணோம்?

கார்க்கி on September 22, 2008 at 6:44 PM said...

@தறுதலை,

நீங்க அஜித் ஃபேனுங்களாண்ணா?

LOSHAN on September 22, 2008 at 7:42 PM said...

ஓஓஓஓ இது தான் மொக்கையா?நானும் என்னவோ எதோன்னு நினைச்சேன்.. இந்தியா, இலங்கை அரசியல் வாதிகளோட அறிக்கைகளை விடப் பரவாயில்லையே.. ;) ஆனா TO BE CONTINUEDஆ? செத்தோம்டா சாமி
நல்லாவே சிரிச்சேன்..

ச்சின்னப் பையன் on September 22, 2008 at 8:27 PM said...

மரண மொக்கைன்னா.... இந்த பதிவுதான்....:-))))

ச்சின்னப் பையன் on September 22, 2008 at 8:27 PM said...

நல்லா வாய் விட்டு சிரிச்சேன்..... :-))))

ச்சின்னப் பையன் on September 22, 2008 at 8:27 PM said...

49

ச்சின்னப் பையன் on September 22, 2008 at 8:27 PM said...

50

வால்பையன் on September 22, 2008 at 10:54 PM said...

இனிமே நான் லைட்டையே போட மாட்டேன்

கார்க்கி on September 23, 2008 at 9:37 AM said...

@லோஷன்,

புதுசா இருக்கிங்க சகா.. வந்தமைக்கு நன்றி..

@ச்சின்னப்பையன்,

//மரண மொக்கைன்னா.... இந்த பதிவுதான்....:-))))//

வசிஷ்டர் வாயால கேட்ட மாதிரி இருக்கு.. ரொம்ப நன்றிங்க..
அப்ப‌டியே 50 அடிச்ச‌துக்கு இன்னொரு தாங்க்ஸ்


@வால்பைய‌ன்,


போடுங்க‌ ஜி.. ஆனா உட‌னே நிறுத்திடிங்க‌..

பொய்யன் on September 23, 2008 at 10:47 AM said...

இதை ஒரு முக்கியமான பதிவாக நான் கருதுகிறேன். விளக்கைப் போடுதல் என்பது நம் இந்திய மரபில் ஒரு புனித நிகழ்வாகவே கருதப்பட்டு வருகிறது. அது மங்கலத்தின் குறியீடு. விளக்கு என்பது விளக்குவது, அதாவது இருளை விலக்கி, இதுதான் ஒளி என்பதை விளக்குவது. ஆங்கிலத்தில் அதை லைட் என்று கூறி விஷயத்தின் கனத்தை எளிமைப்படுத்தி விட்டனர். அது எப்போதும் லைட்டான காரியம் அல்ல என்பதே என் எண்ணம். விரிந்த இந்த பாரதவர்ஷத்திலே விளக்குக்கான அர்த்த அடர்வும் அது மனத்தில் எழுப்பும் சலனங்களும் அலாதியானவை.
விளக்கை போட்டதும் மற்றவர்கள் தொடர்ந்து விளக்கிட அது அந்த விடுதி என்னும் பரப்பில் இருந்து பரவி எதிர் விடுதிக்கு விரிந்து அங்கிருந்தும் தொடர்ந்து மாவட்டம், மாநிலம், நாடு, சர்வதேசியம் எனப் பரவி வளிமண்டலத்தையும் கடந்து செவ்வாய்க்கிரகம் உள்ளிட்ட பிரபஞ்ச சூழலுக்கு பல்கிப் பரவிய கட்டத்தை வாசிக்கும்போது உண்மையிலேயே என் கண்ணில் நீர் தாரைதாரையாக வழிந்தது. தால்ஸ்தோயின் கவித்துவ செறிவுள்ள மொழியை உங்களிடம் காண்கிறேன். இது பயிற்சியினால் கைகூடுவது அல்ல, கருவிலே திருவாவது.
தத்துவச் சாயலும் நுண்நோக்கும் கொண்ட உங்களின் இப் பதிவுக்கு என் வாழ்த்துகள்

கார்க்கி on September 23, 2008 at 11:06 AM said...

@பொய்யன்,

அடுத்த அய்யணார் ரெடியா??????????? தலைப்புக்கும் பதிவுக்கும் ஏத்த மாதிரி வந்த ஒரே பின்னூட்டம் இதுதாம்ப்பா.. பொய்யனு பேரு இருந்தும் மெய்ய சொல்லிட்டீங்க.. அப்படியே நீங்க எந்த ஊருனு சொல்லிட்டா அந்த பக்கமே வர மாட்டேண்ணா..

dravidian on September 23, 2008 at 5:25 PM said...

மரண மொக்கைனா இது தனா நான் பார்த்ததே இல்லையே. இதெல்லாம் என்ன மொக்கை, ஏன் நண்பன் கிட்ட உங்க mobile numbera கொடுத்து பாருங்க அவன் சரக்கடிச்துகப்புரம் போடுவன் மொக்கை. அப்போ சொல்லுவீங்க எது மரண மொக்கைனு.

அவரோட Orkut communitya பாருங்க.
http://www.orkut.co.in/Community.aspx?cmm=48007666

உணமைலையே அலுதுருவீக தெர்யுமா..

கார்க்கி on September 23, 2008 at 5:53 PM said...

வந்தமைக்கும் அரிய தகவலுக்கும் நன்றி நண்பரே..

 

all rights reserved to www.karkibava.com