Sep 1, 2008

நாளைக்கு இப்படி கூட நடக்கலாம்


முந்தாநேத்து : (வாஜ்பாய்,வெங்காய விலை உயர்வின் போது) வெங்காயத்தில் எந்த சத்துமில்லை...அதை தவிர்க்க வேண்டும்.

நேத்து : (ப.சிதம்பரம்) பண வீக்கம் தவிர்க்க முடியாதது.மக்கள் இதை எதிர்த்து வாழ பழகிக்க வேண்டும்

இன்று :(ஆற்காடு வீராசாமி) மக்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் மின் தடை இல்லாமல் போகும். அதுவரை பொறுமை வேண்டும்.

  இப்படியே போனால் நாளை இப்படியெல்லாம் சொல்லுவார்களோ??????

ரஜினி : குசேலன் போன்ற படங்களைப் பார்க்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.இது என் தவறு அல்ல என்பதை உணர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும்.

சச்சின் : எங்களுக்கும் வயதாகிறது. எனவே எங்கள் தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மேட்ச் பார்க்க வேண்டும். அத்றகாக அணியை விட்டு வெளியே போக சொல்லுவது அநியாயம்.

ஜே.கே.ஆர்:   வெறும் மொக்கை படம் மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள் என்றாலும்,மக்கள் எப்போவாது வருகின்ற "நாயகன்" போன்ற உலக சினிமாக்களை ஆதரிக்க வேண்டும்.அடுத்த படத்திற்கு நீங்கள் கொடுக்க போகும் ஆதரவை வைத்துதான் நான் 2011 போட்டியில் கலந்து கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

டி.ஆர் : அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் அத‌
                     இவங்க சொல்றது எல்லாம் குழந்தைங்க கத‌
                    சிம்புவப் பத்தி பேசினா இனிமே விழும் உத‌
                    இப்போ சொல்லு, டி.ஆறு தொடாம விட்டது எத?

சோனியா காந்தி : நம் முன்னோர்கள் என்ன பென்ஸ் காரையா பயன்படுத்தினார்கள்? அவர்களைப் போல் நாமும் நடந்து போக பழகிக் கொள்ள வேண்டும். பெட்ரோல் உபயோகத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல் என்பது அரசியல் கட்சித் தலைவர்கள் பாதுகாப்பாக போவதற்கு என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

மோடி : இந்த நவீன யுகத்தில் குண்டு வெடிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்று. அதை எல்லாம் குஜராத் மக்கள் பெரிது படுத்தாமல் வாழ வேண்டும்.

லக்கிலுக் : இப்போ எல்லாம் ஆனி அதிகமாகி விட்டது.எனவே வாசகர்கள் மீள்பதிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதையும் ஒரு புதுப் பதிவு போலவே கருத வேண்டும்.

பாலபாரதி : மனம் தளரக்கூடாது நண்பர்களே!!! இதோ "அவன் அவள் அது "வின் இரண்டாம் பதிப்பு. இந்த முறையாவது முழுவதுமாக படிக்க முயற்சி செய்ய வேண்டும்.இல்லாது போனால் மூன்றாம் பதிப்பு வரக்கூடும்.

19 கருத்துக்குத்து:

உருப்புடாதது_அணிமா on September 1, 2008 at 9:48 PM said...

மொத போனி ஆஜர்...

மொத போனி ஆஜர்...

மொத போனி ஆஜர்...

உருப்புடாதது_அணிமா on September 1, 2008 at 9:49 PM said...

இன்னிக்கு நான் தான் மொத போனியா ??
நம்பவேமுடில..

உருப்புடாதது_அணிமா on September 1, 2008 at 9:51 PM said...

கலக்கல் ,,, கலக்கலோ கலக்கல்

Sundar on September 1, 2008 at 9:56 PM said...

நல்லா இருக்கு!

மங்களூர் சிவா on September 1, 2008 at 10:23 PM said...

:)))

KA.... said...

Nice :)

கார்க்கி on September 2, 2008 at 9:51 AM said...

@ உருப்படாதது,

மொத போனியா வந்ததது எனக்கு உருப்படியான விஷயம்..அப்புறம் எப்படி நான் உங்கள உருப்படாததுனு கூப்பிடறது நண்பரே!!!

@ சுந்தர்,

வந்தமைக்கு நன்றி சுந்தர்..என்ன ஆச்சு உங்க ஷேர் ப்ளாக்?

கார்க்கி on September 2, 2008 at 9:54 AM said...

@ சிவா,

என்ன தல, ரிப்பீட்டேய் காணோம் கமெண்ட்ஸும் காணோம்? அடுத்த தடவ உண்மைத்தமிழன் அளவுக்கு இல்லைனாலும் ராப் அளவுக்கு எழுதனும்னு ஆர்டர் போட்றேன்

@ கலை,

நன்றி கலை....

Bleachingpowder on September 2, 2008 at 10:21 AM said...

//ரஜினி : குசேலன் போன்ற படங்களைப் பார்க்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.இது என் தவறு அல்ல என்பதை உணர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும்.//

வர வர தலைவர ரொம்ப தான் நக்கலடிக்கீறீங்க (காமெடிக்கு தான் என்றாலும்).

வியாபார ரீதியாக மட்டுமே குசேலன் தோல்வி படம்.

தாமிரா on September 2, 2008 at 10:24 AM said...

நல்ல டெவலப்மென்ட்.!

கார்க்கி on September 2, 2008 at 11:04 AM said...

@ப்ளீச்சிங் பவுடர்

எங்க தலைவா ரொம்ப நாளா காணோம்? நகைச்சுவைக்காகத்தான்னு புரிந்து கொண்டமைக்கு நன்றி... எங்கு வேண்டுமென்றாலும் உரக்க சொல்லத் தயார், நான் நடிகர் ரஜினியின் வெறியன்..

@தாமிரா,

எதுல, மொக்கை போடுறதுலயா?

yuva said...

Rajiniyai rombathaan keli panreenga, robo varattum appuram pesuraen

Bleachingpowder on September 2, 2008 at 2:12 PM said...

//எங்க தலைவா ரொம்ப நாளா காணோம்? நகைச்சுவைக்காகத்தான்னு புரிந்து கொண்டமைக்கு நன்றி... //

அத ஏன் கேட்குறீங்க, ஆணி புடுங்குற இடத்தில எப்பயாச்சும் வேலையும் செய்யனும்னு உயரதிகாரி ஸ்டிரிட்டா சொல்லீட்டாரு :((

எங்கு வேண்டுமென்றாலும் உரக்க சொல்லத் தயார், நான் நடிகர் ரஜினியின் வெறியன்..

அதுதான் எனக்கு தெரியுமே :))

கார்க்கி on September 2, 2008 at 2:45 PM said...

அப்படிபட்ட நேரத்தில் நாம்ளே ஆனியை சுவத்துல பதமா இறக்கி அது வெளியே வராத மாதிரி பாவலா பண்ணி அப்புறம் நாமலே எடுத்தோம்னா ஆனி புடிங்கின மாதிரியும் ஆச்சு, எல்லாம் தெரியும்னு பாவ்லா காட்டிய மாதிரியும் ஆச்சு...

rapp on September 2, 2008 at 6:16 PM said...

ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர், ஒவ்வொன்னுமே கலக்கல். குறிப்பா பாலா சார், சோனியா மேடம், டி ஆர், எங்க தல கமெண்ட்ஸ் கலக்கலோ கலக்கல்

கார்க்கி on September 3, 2008 at 12:32 PM said...

நன்றி ராப்

கிரி on September 3, 2008 at 2:29 PM said...

//Bleachingpowder said...
//ரஜினி : குசேலன் போன்ற படங்களைப் பார்க்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.இது என் தவறு அல்ல என்பதை உணர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும்.//

வர வர தலைவர ரொம்ப தான் நக்கலடிக்கீறீங்க (காமெடிக்கு தான் என்றாலும்).

வியாபார ரீதியாக மட்டுமே குசேலன் தோல்வி படம்.//

வழிமொழிகிறேன்.

கார்க்கி on September 3, 2008 at 2:36 PM said...

அப்படியே நான் ரஜினி ரசிகந்தான்னு சொன்னதையும் வழிமொழிங்க கிரி :)

கார்க்கி on September 3, 2008 at 2:38 PM said...

//எங்க தல கமெண்ட்ஸ் கலக்கலோ கலக்கல்//

கடுமையான கண்டங்கள் ராப்..அவரு உங்க‌ தல இல்ல ,ந‌ம்ம தலையாகி சில நாட்கள் ஆகிவிட்டது

 

all rights reserved to www.karkibava.com