Sep 4, 2008

உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி


      நேற்று ஒரு உடன்பிறப்பு, கலைஞர் தொலைக்காட்சி எதற்காக விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது என்பதற்கு அவர்கள் தலைவரைப் போலவே(?) ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் தன்னை வேறு பகுத்தறிவுவாதி என சொல்லிக் கொள்கிறார்.

      உடன்பிறப்பே, பகுத்தறிவாளர்களான உங்களுக்கு விநாயக சதூர்த்தி கிடையாது.எனவே விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினீர்கள். இதே போல் தீபாவளி,கிறிஸ்துமஸ் அன்றும் விடுமுறை நாள் என்று சொல்வீர்களா? சாய்பாபாவின் காலில் விழுந்த நீங்கள் பகுத்தறிவுவாதிகளா? ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?

    உடன்பிறப்புகளில் ஒருவரான நடிகர் சந்திரசேகர் தன் மகனுக்கு சிவனின் பெயரை(அதுவும் நம் வாயில் நுழையாத இந்தி பெயர்) வைத்தார்.அது பற்றி அவரிடம் கேட்ட போது என் தலைவரிடம் கேட்டுதான் வைத்தேன்.அவரும் அப்படியே செய் என்றாராம். இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா? பாவம்,உங்கள் தலைவர் தான் உங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு கூட பெயர் வைக்க வேண்டும். கின்டலுக்கு அல்ல,உண்மையாய் சொல்கிறேன் அந்த 85 வயது இளைஞர் செய்யும் வேலையில் ஒரு சதவீதம் கூட உடன்பிறப்புகளால் செய்ய முடியாது.

     தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். இதுவே ஜெயலலிதா சொல்லட்டும்.அதன் பின் ந‌டப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தன் கட்சித் தொண்டர்களையே ஆளத் தெரியாத இவரை ராமதாசும், திருமாவளவனும், ஏன் 2001ஐ போல கண்ணப்பனும், ஏ.சி.எஸும் ஏறி மிதித்து கொண்டுதானிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்? இப்போது சொல்கிறேன், உங்கள் தலைவரை துவைத்து காயப்போடும் ம.தி.மு.க வோடு உங்கள் தலைமை மீண்டும் கூட்டணி வைக்கும். நீங்களும் அன்பு அண்ணன் வை.கோ என சொல்லத்தான் போகிறீர்கள்.அதுவரை உளியின் ஓசையை கேட்டு கொன்டிருங்கள்

       நாறிகிடக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் திமுக ஓரளவிற்கு சுமாரான கட்சிதான்.அதற்காக நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும் போது நிச்சயம் ஞானிகளும், விசயகாந்துகளும் தேவை என்றே தோண்றுகிறது. ரத்தத்தின் ரத்தங்கள் பரவாயில்லை, அவர்கள் தலைமை ரொம்ப யோக்கியமானது என்று நம்பி ஏமாறுகிறார்கள்.ஆனால் உடன்பிறப்புகள் அவர்கள் கட்சி செய்யும் அத்தனை மோசடிகளும் அறிந்தவர்கள். அது பற்றி தெரிந்தும் அதற்கு சப்பை கட்டு கட்டுபவர்கள். அதில் ஒன்றுதான் இந்த விளக்கம். எனக்கென்னவோ இவர்கள் தான் அபாயமானவர்கள் என்று தோண்றுகிறது. 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸ். ஒரு பதினான்கு வயது சிறுவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா? எனக்கும் வரலாறு தெரியாது. தெரிந்த உடன்பிறப்புகள் அவன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

23 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on September 4, 2008 at 9:03 PM said...

ஹெ ஹெ ஹெ...

நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி!!!!

Nellaiaasi on September 4, 2008 at 9:05 PM said...

Vankkam, Neengal solvathellam unmaithaan, irunthaalum avarai ponra thalaivargal iruppathu kadinam. yenenil thannai polave ellarum irukka vendum enru yaaraiyum varpurutha villai. athuthaan antha periyavaruku ulla thanithanmai, neengal sonnathu pola avar oru 85 vayathu valibarthaan enbathil iyamillai.

வால்பையன் on September 4, 2008 at 9:09 PM said...

கேள்விகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு!
ஆனா இங்கே கேள்வி கேட்டா ஆட்டோ வருமே

ஜோசப் பால்ராஜ் on September 4, 2008 at 9:15 PM said...

என்ன கார்க்கி, நீங்களும் என் கட்சியில சேர்ந்துட்டீங்க போல இருக்கு?

வெண்பூ on September 4, 2008 at 10:05 PM said...

செம எதிர்கேள்வி.. ஹையா ஜாலி இன்னும் ரெண்டு நாளைக்கு மாத்தி மாத்தி அறிக்கை..ச்சீய்..பதிவு போட்டுகுவாங்க. நமக்கு நல்லா பொழுது போவும்.

//ஜோசப் பால்ராஜ் said...
என்ன கார்க்கி, நீங்களும் என் கட்சியில சேர்ந்துட்டீங்க போல இருக்கு?
//

அப்ப நீங்க ரெண்டு பேருமே அ.தி.மு.க.வா?

Bleachingpowder on September 4, 2008 at 11:09 PM said...

பட்டயை கிளப்பீட்டீங்க கார்க்கி :-) சமீபத்துல நீங்க எழுதுனதுலேயே இதான் பெஸ்ட். ஒவ்வொரு கேள்வியும் செருப்படி.

பகுத்தறிவுன்ற பேர்ல இவங்க பண்ற காமெடி தாங்க முடியல. எவனோ ஒரு ஜோசியர் சொன்னானு இன்னமும் அந்த மஞ்ச துண்ட போட்டு கிட்டு இருக்கிற கொடுமையை பார்த்து எங்க போய் முட்டிகிறதுன்னே தெரியில.

நடு ராத்திரியில் கரண்ட புடுங்கினால் குழந்தைகள் எப்படி தூங்கும் மறுநாள் எப்படி பள்ளிக்கு போவார்கள் என்பதை பற்றியெல்லாம் என்றைக்காவது யோசித்திருப்பார்களா

Bleachingpowder on September 4, 2008 at 11:11 PM said...

//அப்ப நீங்க ரெண்டு பேருமே அ.தி.மு.க.வா?
//

அதெல்லாம் இல்ல, எதிரிக்கு எதிரி அப்படிதானே கார்க்கி :-)

Bleachingpowder on September 4, 2008 at 11:22 PM said...

//neengal sonnathu pola avar oru 85 vayathu valibarthaan enbathil iyamillai.//


Not anymore atleast physically. கடலில் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேனு அவர் மேடையில் வீர முழக்கமிடுவதை வைத்து சொல்கிறீர்களா நெல்லை ஆசி? இல்லை கார்க்கி சொல்வதை போல பொழுது சாய்ந்தால் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நடக்கும் ஆபாச நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கி ரசிப்பதை வைத்து சொல்கீறீர்களா?

நல்லதந்தி on September 5, 2008 at 9:35 AM said...

இப்பத்தான்யா சூடு பிடிக்குது இணைய உலகம்! :)

கார்க்கி on September 5, 2008 at 10:02 AM said...

@ விஜய் ஆன‌ந்த்

இது ஏதோ கேட்க வேன்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததல்ல விஜய்..ஒரு ஆதங்கம் தான்..வந்தமைக்கு நன்றி

@ நெல்லை ஆசி,

அவருக்கு பல சிறப்புக்கள் இருக்கலாம்.. ஆனால் அதை எல்லாம் மறைத்து விடுவது போலிருக்கிறது அவரது சமீபத்திய அரசியல்..வந்தமைக்கு நன்றி

கார்க்கி on September 5, 2008 at 10:05 AM said...

@ விஜய் ஆன‌ந்த்

ஆட்டோ வருமா???????? நான் வீரத்தளபதியின் புகழ் பரப்பும் மன்ற‌த்தின் உறுப்பிணர்.. பதிலுக்கு எங்க‌ ஆளுங்க லாரியவே அனுப்புவாங்க..தளபதியும் திமுக என்ற போதிலும் ரசிகர்களை காப்பாற்றுவார்,, :)

@ பால்ராஜ்,

உங்க கட்சி எதுங்க???? வந்தமைக்கு நன்றி

கார்க்கி on September 5, 2008 at 10:07 AM said...

@ப்ளீச்சிங் ப‌வுட‌ர்,
வந்தமைக்கு நன்றி :)
//அதெல்லாம் இல்ல, எதிரிக்கு எதிரி அப்படிதானே கார்க்கி :-)//

ச‌ரிதான்...


@ நல்லதந்தி,

அப்படியா? தந்திதான் இலைக்காரன் என்று பேச்சு... உண்மையா நண்பரே? வந்தமைக்கு நன்றி

கார்க்கி on September 5, 2008 at 10:10 AM said...

@வெண்பூ,

வாங்க வெண்பூ.. இவரையே சகித்து கொள்ள முடியாத என்னால் அதிமுக பற்றி எல்லாம் நினைக்கவே முடியாது...

லக்கிலுக் on September 5, 2008 at 10:37 AM said...

நல்ல பதிவு கார்க்கி :-)

நல்லதந்தி on September 5, 2008 at 11:16 AM said...

//@ நல்லதந்தி,

அப்படியா? தந்திதான் இலைக்காரன் என்று பேச்சு... உண்மையா நண்பரே? வந்தமைக்கு நன்றி//
சத்தியமா,இயற்கையின் மேல் ஆணையா இல்லீங்க! :)

Anonymous said...

all are vottuporukigal and doing political buissnes

nandhan said...

மனைவி துர்கா, பெரும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். திருத்தணி, அவருக்குச் சொந்த வீடு மாதிரி

nandhan said...

மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, பெரும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். திருத்தணி, அவருக்குச் சொந்த வீடு மாதிரி

கார்க்கி on September 5, 2008 at 11:56 AM said...

@லக்கிலுக்,

என்ன தல, நக்கல் மாதிரி தெரியுது? வந்தமைக்கு நன்றி

@ நந்தன்,

அட நீங்க வேற, உதயனிதி மனைவிக்கு தமிழ் படிக்கவே தெரியாதாம்... இந்தி எதிர்ப்புக்கு பலரும் உயிர் நீத்த காலத்தில் பிறந்த தயானிதி அப்பவே இந்தி டியுஷன் போனாரு.. கனிமொழி சர்ச்பார்க் கான்வென்டில் படித்தவர்கள்... தமிழ் படத்திற்கு த‌மிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னவருடைய பேரனின் சினிமா கம்பெனியின் பெயர் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ...அப்பா மூச்சு வாங்குது இருங்க...

வந்தமைக்கு நன்றி

கோவை சிபி on September 5, 2008 at 1:17 PM said...

உடன்பிறப்புகளிடம் இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் வரவே வராது.
அண்ணா ஆரம்பித்த கட்சி அவர் நூற்றாண்டு முடியும் முன்னரே முடிவு கண்டுவிடும் நிலையில் உள்ளது.

கார்க்கி on September 5, 2008 at 1:50 PM said...

வந்தமைக்கு நன்றி சிபி...

ஜோசப் பால்ராஜ் on September 5, 2008 at 3:59 PM said...

/அப்ப நீங்க ரெண்டு பேருமே அ.தி.மு.க.வா? //

//@ பால்ராஜ்,

உங்க கட்சி எதுங்க???? வந்தமைக்கு நன்றி //


அய்யா, திமுக ஆட்சிய எதிர்த்து கேள்வி கேட்டா அதிமுகவாத்தான் இருக்கனுமா? ஏன் பாமக, கம்யூனிஸ்ட் எல்லாம் கூடத்தான் கேள்வி கேட்க்குறாங்க. நான் எந்த கட்சியும் இல்ல சாமி. தப்புன்னு தோணுறத கேள்விக்கேட்குறது.

நானும் ஏற்கனவே என் பதிவுல கலைஞருக்கு கேள்விகள்னு எழுதியிருக்கேன். அதுக்கு லக்கி ஒரு பதில் போட்டாரு, அபி அப்பா ஒரு பதில் போட்டாரு. அதுக்கு அப்றம் நான் ரெண்டு பேருக்கும் பதில் பதிவு போட்டதுக்கு இன்னைய வரைக்கும் பதில் இல்ல.

இப்ப கார்க்கியும் கேள்வி கேட்டதுனால நான் என் கட்ச்சியான்னு கேட்டேன். அம்புட்டுத்தேன்.

உமா கிருஷ்ணமூர்த்தி on March 4, 2011 at 10:33 PM said...

மனதில் இருந்ததை அப்படியே பிரதிபலிதிருக்கிறீர்கள் கார்க்கி வாழ்த்துகள்

 

all rights reserved to www.karkibava.com