Sep 16, 2008

கவிதை எழுதுவது எப்படி?டிப்ஸ் பதிவு


     

   இதுக்கும் இந்த ப‌திவுக்கும் தொடர்ப் இருக்கானு படிச்சிட்டு சொல்லுங்க‌

   எல்லோரும் நினைப்பது போல் கவிதை எழுதுவது அவ்வளோ ஈசி இல்லை, கவிதை எழுத ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.இதில் நல்லது,கெட்டது என்று வித்தியாசம் கிடையாது. யார் வேண்டும் என்றாலும் கவிதை எழுதலாம், என்ன எழுத‌ தனி தில் வேண்டும்.

    நான் சொல்லப்போவது அய்யனாரின் கவிதை பற்றி அல்ல, டீ.ஆர் அல்லது மொக்கை கவிதை எழுதுவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் அங்க இங்க,தம்பி கம்பி போட்டு எழுதிவிடலாம் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி புதிதாய் வார்த்தைகள் உபயோகித்து எழுதினால்தான் ஒரு கிக் இருக்கும்.

       கவிதைகள்.. அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை,  காதல்னாலும் சரி, காமம்னாலும் சரி, பதிவானாலும் சரி கவிதைகள் எனக்கு பிடித்தவை. பதிவில் "மங்களூர் சிவாவை டீ.ஆர் கவிதையால் வாழ்த்தினார்" என்று எழுதியது செம ஹிட் ஆனது, அதை போல் ஜே.கே.ஆர். என்னும் கவிதையை 10 விதமாக போட்டோ புடிச்சு போட்டது சூடான இடுகைக்கு அழைத்து சென்றது இப்படி என் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட கவிதையை பற்றிய கதை!!!

       முன்பே சொன்னது போல் கவிதை எழுதுவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.

      எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் கவிதை போட்டி சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்து முகத்தை மூடி விடுவார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து கவிதை எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .

      உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடுத்த தலைப்பை கேட்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள முதல் கவிதைய முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த தலைப்ப‌ கேட்கும் அந்த புள்ள.

      இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடுத்த கவிதை தலைப்பு  வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு பட்டாம்பூச்சி என்று இருக்கும் தலைப்புக்கு 
"பட்டர்ஃப்லைனு ஒரு சமையல் குக்கர்
அது எப்பவும் பன்னாது மக்கர்
அதுல இருக்கும் ஒரிஜினலு ஸ்டிக்கர்
அதுல சமைச்சா டேஸ்ட் டாப் டக்கர்"

என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிர‌ப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி இருக்கானே முதல் தலைப்புக்கு  என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் அடுத்த தலைப்பு என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடுத்தடுத்த தலைப்ப கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.

கவிதை எழுத‌ நான் செய்த டெக்னிக்ஸ்

1) ஒன்னுங்கீழ ஒன்னு எழுதனும் (அதானே கவிதை)

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்

இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) தலைப்ப மட்டும் எழுத வேண்டும்.

4)ஆங்காங்கே டன்டனக்க டனக்குடக்க என்றும் எழுத வேண்டும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு பரிசு கொடுக்கும் பொழுது மொக்கை கவிதை எழுதிய நீ எதுக்குடா இத்தனை கவிதை எழுதின‌ என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.

31 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on September 16, 2008 at 8:46 PM said...

:-)))...

கவித கவித!!!!

ஆனாலும் இது ரொம்ப கெட்ட பழக்கங்க...கண்டிப்பா நீங்க இத வுட்டுட முயற்சி பண்ணனும்...

அதிக கவுஜ உடம்புக்காவாது...

ச்சின்னப் பையன் on September 16, 2008 at 8:50 PM said...

இல்லே... இல்லே.. கொஞ்சம் கூட சம்மந்தமேயில்லே.... அது வேறே.. இது வேறே...

rapp on September 16, 2008 at 9:00 PM said...

me the third

rapp on September 16, 2008 at 9:02 PM said...

ஆஹா போட்டி எக்கச்சக்கமாகிட்டே போகுதே, அவ்வ்வ்வ்வ்வ்வ்....................

இராம்/Raam on September 16, 2008 at 9:22 PM said...

இதையும் படிச்சிருங்க... :)

VIKNESHWARAN on September 16, 2008 at 9:30 PM said...

:-)

KA.... said...

Unggal kavithai kalai pinnaley ethan muthal todarkam ragisayam ah.
:))

Epadi eruntha nenggal, ippa eppadi kavithai ellunturingaley...vazhtukkal.

KA.... said...

//கவிதை எழுதுவது ஒரு கலை//

Rite.
Kavithai mozhi'a rasika terivatukum oru kalai vaendum.

கார்க்கி on September 17, 2008 at 9:03 AM said...

@விஜய்,

யாரு உடம்புக்குங்க?

@ச்சின்னப்பயைன்,

அப்படியா? .. வந்தமைக்கு நன்றி..

கார்க்கி on September 17, 2008 at 9:04 AM said...

@ராப்,

ஆமாம் ராப்.. நீங்களும் ஏதாவது எடுத்து விடுங்க.. அடுத்து வசந்த் டீவியும் நானும் எழுதலாம்னு நினைக்கிறேன்

@ராம்,

படிச்சிட்டேன் ராம்

கார்க்கி on September 17, 2008 at 9:06 AM said...

@விக்கி,

வந்தமைக்கு நன்றி நண்பரே...

@கலை,

நன்றி கலை

பரிசல்காரன் on September 17, 2008 at 10:39 AM said...

நமீதா பச்சைக்குதிரையில் நன்றாக நடித்திருந்தாலும் அது பேசப்படவில்லை!

பரிசல்காரன் on September 17, 2008 at 10:39 AM said...

ஆனாலும், நமீதா நல்ல நடிகைதான்!

நானும் ஒருவன் on September 17, 2008 at 10:39 AM said...

முடியல....சாமீ

நானும் ஒருவன் on September 17, 2008 at 10:40 AM said...

//நமீதா பச்சைக்குதிரையில் நன்றாக நடித்திருந்தாலும் அது பேசப்படவில்லை//

அப்படியா????

நானும் ஒருவன் on September 17, 2008 at 10:41 AM said...
This comment has been removed by the author.
கார்க்கி on September 17, 2008 at 10:42 AM said...

என்ன பரிசல்,எனக்கு புரியல‌

கார்க்கி on September 17, 2008 at 10:43 AM said...

வாங்க ஒருவன்.. உங்க பேரு?

கார்க்கி on September 17, 2008 at 10:44 AM said...

//ஆனாலும், நமீதா நல்ல நடிகைதான்/

???????????

sridhar said...

குசும்பன் எங்கு இருந்தாலும் உடனே இங்கே வரவும்..இவனை கும்மவும்

குசும்பன் on September 17, 2008 at 1:48 PM said...

அண்ணே என் கடைய காலி செய்வது என்று முடிவே செஞ்சுட்டீங்களா?

சொல்லிட்டு செய்யுங்கப்பு வேற எதாவது இடம் வேலைப்பார்க்க சரி வருதான்னு பார்க்கனும்:)))

கார்க்கி on September 17, 2008 at 2:16 PM said...

//அண்ணே என் கடைய காலி செய்வது என்று முடிவே செஞ்சுட்டீங்களா?

சொல்லிட்டு செய்யுங்கப்பு வேற எதாவது இடம் வேலைப்பார்க்க சரி வருதான்னு பார்க்கனும்:)))
//

கோழி மிதிச்சே குஞ்சு சாகாது.. இதுல குஞ்சு மிதிச்சா கோழிக்கு என்ன ஆகப் போது?

அகநாழிகை on September 17, 2008 at 4:01 PM said...

கார்க்கி !
கவிதை எழுதுவதை பற்றி நீங்கள் நகைச்சுவையாக எழுதி இருக்கீங்க ! கவிதை என்பது வேறு. கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, தானே உருவாகிறான் என கூறி மொக்க போடற சமாசாரத்திற்கு நான் வரல ! கவிதை, கதை, கட்டுரை, பதிவுகள் எழுதுவது என்று எல்லாமே ஒரு மனோ நிலை. நான் கவிஞன் என்பது ஒரு மன உணர்வு. அதே மன நிலை இருந்தால் தான் கவிதை எழுதவோ, கவிதையை வச்சிக்கவோ முடியும், இது கவிதைக்கு மட்டுமில்ல ! சினிமா, நாடகம், மேடை பேச்சு எல்லாத்துக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.

கார்க்கி on September 17, 2008 at 5:08 PM said...

வாங்க அகநாழிகை.. ஏதோ பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க.. வந்தமைக்கு நன்றி..

ARUVAI BASKAR on September 17, 2008 at 8:19 PM said...

//கவிதை எழுத‌ நான் செய்த டெக்னிக்ஸ்//
கவிதையை வாசிக்கும் போது இரண்டுமுறை வாசிக்கவேண்டும் .
இந்தவிதியை விட்டுவிட்டீர்களே !
அன்புடன்,
பாஸ்கர்

கார்க்கி on September 17, 2008 at 8:28 PM said...

அட ஆமாம் மறந்துவிட்டேன்..

yuva on September 18, 2008 at 11:11 AM said...

nachunu sonnalei vilangathu
ithula katturaiya ivlo perusa
eluthi vecha padikarathukullayei
thookam vanthruchu,
ini engernthu kavithai eluthurathu??

risk on March 4, 2010 at 8:00 PM said...

கவிதை கவிதை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆஹா என்ன அழகு

suri on April 23, 2010 at 5:10 PM said...

romba ethir pathen, nenga etho sola poriganu. but ok tamilavathu theliva eluthuringaley ok ok good..

priya on September 8, 2011 at 3:05 PM said...

inum eathir parkeran ungaledam!!!!!!!!!!!

veera on September 10, 2011 at 5:26 PM said...

chinna pullathanam

 

all rights reserved to www.karkibava.com