Sep 9, 2008

இத இன்னும் படிக்கலையா????????


       பெரியவங்களே சின்னவங்களே நடுவுல இருக்கிறவங்களே,  திமுக அதிமுக பாமக தேமுதிக எல்லா கட்சிகாரங்களே, ரஜினி கமல் விஜய் விக்ரம் எல்லாருடைய‌ ரசிகர்களே, முருகன்,சிவன்,விஷ்னு,யேசு, அல்லா எல்லாருடைய பக்த கோடிகளே , லக்கி பரிசல் அய்யனார் குசும்பனோட விசுவாசிகளே, அப்பாலிக்கா என் கடைக்கும் வர்றவங்களே மேட்டர் என்னன்னா...

      நான் இந்த வலையை தொடங்குமுன் இதை என்னைத் தவிர வேறு யாரும் படிக்க போவதில்லை. எனக்கே எனக்கான ஒன்று என்றுதான் எண்ணிணேன். அதனால் தான் வலையின் முகப்பில் "When we feel there is no one to listen us,we start writing" என்று எழுதி வைத்தேன். எனக்கு தமிழ்மணம் அறிமுகம் ஆனபின் நடந்தது எல்லாம் வேறு. இப்போதெல்லாம் நான் புது பதிவு எழுதாத நாளில் கூட பல நண்பர்கள் வருகை தருகிறார்கள். அப்போதெல்லாம் நான் எழுதி வைத்த வரிகளை மாற்றலாம் என நினைத்தேன். ஏனோ மனம் வரவில்லை. இன்று குசும்பன் அதை மாற்றுமாறு கேட்ட போது தான் உரைத்தது. உடனே மாற்ற வேண்டும் என்று தோண்றியதால் நல்லதாய் ஒரு பெயரை யோசிக்க கூட நேரமில்லாததால் "சாளரம்" என்று நினைவுக்கு வந்ததை வைத்து விட்டேன். இதைப் பற்றிய‌ உங்களின் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

    ஆவ்வ்வ்வ்வ் மறந்துட்டேன்.. இந்த பெயர் குசும்பனுக்கும் தமிழ்மணத்தை எனக்கு அறிமுகம் செய்த பாலாஜிக்கும் சமர்ப்பணம்.

    அப்புறம், நான் தொடர்ந்து எழுதலாமானு கேட்டு ஒரு ஓட்டு பொட்டி வைத்திருந்தேன். 71 பேர் எழுது ராசா எழுது என்றும், 20 பேர் வேணாம் சாமீ என்றும், 14 பேர் உன் இஷ்டம் என்றும், 11 பேர் என் வாயால் சொல்ல மாட்டேன்ப்பா என்றும் சொல்லி இருக்கிறீர்கள். வேணாம் சாமீ என்று வாக்களித்த 20 பேருக்காக தொடர்ந்து எழுதலாம்னு இருக்கிறேன்.

      காசு வாங்காம வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

டிஸ்கி : இதற்கு எல்லாமா பதிவு எழுதுவாங்கனு கர்ஜிக்கிற‌வங்க இத ஒரு தடவ படிச்சிட்டு வந்துடுங்க...

23 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on September 9, 2008 at 7:13 PM said...

டிஸ்கி போட்டதுனால தப்பி்ச்சீங்க...

இல்லாங்காட்டி...

:-)))...

வால்பையன் on September 9, 2008 at 7:33 PM said...

//சாளரம்//

இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க!
அப்போ தான் கருத்து சொல்லமுடியும்.

கார்க்கி on September 9, 2008 at 7:35 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on September 9, 2008 at 7:36 PM said...

//இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க!
//
அட, ஜன்னல் மாதிரி ஓட்டை ஓட்டையா இருக்குமே!!! அதான்...

கார்க்கி on September 9, 2008 at 7:37 PM said...

//டிஸ்கி போட்டதுனால தப்பி்ச்சீங்க...

இல்லாங்காட்டி.../

நமக்கு தெரியாதா? அதான் பரிசல கோத்துவிட்டுட்டேன்.. இனி யார் என்ன சொன்னாலும் அவருக்குதாம்ப்பா

பரிசல்காரன் on September 9, 2008 at 7:45 PM said...

//நான் தொடர்ந்து எழுதலாமானு கேட்டு ஒரு ஓட்டு பொட்டி வைத்திருந்தேன்.//

ஃப்ரண்டு... (கூப்பிடலமா அப்ப்டி?) என்னமோ பண்ணித் தொலைங்க. ஆனா உடன்பிறப்புக்கு பதில்ங்கறா மாதிரி சீரியஸா எல்லாம் தொடர்ந்து எழுதினா நானெல்லாம் எஸ்கேப் ஆகிடுவேன்.. ஆமா..

கார்க்கி on September 9, 2008 at 8:07 PM said...

//ஃப்ரண்டு... (கூப்பிடலமா அப்ப்டி?) //

எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம் சகா.. ஆனா தயவு செஞ்சு மரியாதையா மட்டும் கூப்பிடாதீங்க... ஆமா சொல்லிபுட்டேன்..

கார்க்கி on September 9, 2008 at 8:09 PM said...

//உடன்பிறப்புக்கு பதில்ங்கறா மாதிரி சீரியஸா எல்லாம் தொடர்ந்து எழுதினா நானெல்லாம் எஸ்கேப் ஆகிடுவேன்.. ஆமா..//

என்ன செய்யுறது? அவங்க பதில் என்ற பேர்ல ஏதோ எழுதுறாங்க.. இனிமேல பதில் இல்லப்பா

KA.... said...

quite shocking 2 c the changes (both the title and ur profile intro)

புதுகை.அப்துல்லா on September 10, 2008 at 3:27 AM said...

பரிசல் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.
(ஏன்...உனக்கு சொந்த சரக்கு இல்லையான்லாம் பப்ளிக்ல கேக்கப்படாது! ஓ.கே? )
:)

கார்க்கி on September 10, 2008 at 9:28 AM said...

@கலை,

அப்பிடியா??????? நல்லாயில்லையா?

@அப்துல்லா,

ரைட் சகா...

yuva said...

Window ku Thamizh vaarthai maranthu romba naal aachu, gnyabaga paduthiyathukku nandri karki..

yuva said...

Appadina eluthu rasa eluthunu sonnavangalukkaga eluthrathai stop panniruveenglo????????????

yuva said...

kaatrai eppothu?
thendralai eppothu?
puyalai eppothu?
Any idea?

குசும்பன் on September 10, 2008 at 10:57 AM said...

என்னையும் ஒரு ஆளாக மதிச்சு நான் சொன்னதையும் கேட்டு உங்க பிளாக் பேரை மாற்றிய உங்களை நினைச்சு அழுவதா? சிரிப்பதா?

(சும்மாச்சுக்கும்)

குசும்பன் on September 10, 2008 at 11:00 AM said...

//வால்பையன் said...
//சாளரம்//

இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிடுங்க!
அப்போ தான் கருத்து சொல்லமுடியும்.//

சாள + ரம் = சாள ரம்

சாள என்பதற்கு யஜூர் வேதத்தில் குதிரை என்று ஒரு அர்த்தம் இருக்கு,
(ரம் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவை இல்லை வால்) குதிரைக்குக்கு கொடுக்கும் ரம் போன்று கிக்காக இருக்கும் என்பதாலேயே இந்த பெயர்.

கார்க்கி on September 10, 2008 at 11:08 AM said...

@யுவா,

எழுது ராசானு சொன்னவங்க‌ எல்லாம் ரொம்ப்ப நல்லவங்க..அவங்கள பத்தி கவலப்பட தேவயில்லை

கார்க்கி on September 10, 2008 at 11:09 AM said...

//என்னையும் ஒரு ஆளாக மதிச்சு நான் சொன்னதையும் கேட்டு உங்க பிளாக் பேரை மாற்றிய உங்களை நினைச்சு அழுவதா? சிரிப்பதா?/

ஹிஹிஹி.. குசம்பனுக்கு அழ கூடத் தெரியுமா????????

கார்க்கி on September 10, 2008 at 11:12 AM said...

//சாள + ரம் = சாள ரம்

சாள என்பதற்கு யஜூர் வேதத்தில் குதிரை என்று ஒரு அர்த்தம் இருக்கு,
(ரம் என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவை இல்லை வால்) குதிரைக்குக்கு கொடுக்கும் ரம் போன்று கிக்காக இருக்கும் என்பதாலேயே இந்த பெயர்.//

யஜூர் வேதம் என்பது ஒரு மொழியா? நிஜமா தெரியாமத்தான் கேட்கறேங்க...

நான் இப்போ இருக்கிறது ஆந்திராவில்.. இங்கே சாள என்றால் நிறைய அல்லது மிகுந்த என்று அர்த்தம்.. அதனால் அதிக போதை தரும் ப்ளாக் என்றும் சொல்லலாம்..
(சாள பாக உந்தியா)

கார்க்கி on September 10, 2008 at 11:16 AM said...

//kaatrai eppothu?
thendralai eppothu?
puyalai eppothu?
Any idea?//

அத எப்படி சொல்ல முடியும்? அது அது அப்பப்ப நடக்கும் போது படிச்சு தெரிஞ்சிக்குங்க‌

yuva said...

kaathu nadakkuma????
(veesumnu thaan kelvi patrukaen)
athayum padichu therinjukanuma???
vilangala sami!!!!

Bleachingpowder on September 11, 2008 at 9:52 PM said...

// வேணாம் சாமீ என்று வாக்களித்த 20 பேருக்காக தொடர்ந்து எழுதலாம்னு இருக்கிறேன்.//

ச்சே...போட்ட இருபது ஓட்டு வீனா போச்சே

கார்க்கி on September 12, 2008 at 9:19 AM said...

//ச்சே...போட்ட இருபது ஓட்டு வீனா போச்சே//

ஹிஹிஹி.. நாங்க எல்லாம் பாலைவன‌த்துல போய் பால் பாயாசம் காய்ச்சி குடிக்கிறவங்க..

 

all rights reserved to www.karkibava.com