Sep 8, 2008

என்னைப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டியது


      என்னால் நம்பவே முடியவில்லை. அப்துல் கலாமை நான் சந்திக்க போகிறேன் என்று நினைத்த போதே எனக்குள் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது.அவரின் அலுவலகத்தை நான் அடைந்த போது மணி 10. என்னையும் என் திட்டத்தையும் பார்த்த அவர் எழுந்து நின்று என்னைப் பாராட்டினார்

 

        ஒன்னுமில்ல தமிழ்மண முகப்புல முதல் ரெண்டு வரிகள் தெரிவதால் அதை படிச்சிட்டு அப்படியே அப்பீட் ஆகுறவங்கள உள்ள வரவைக்க ஒரு சின்ன ஏற்பாடு. இனி நிஜமான பதிவ படீங்க. (நோ நோ நோ இதுக்கெல்லாம் அழக்கூடாது.. ஏன்னா வலையில இதெல்லாம் சாதரண‌ம்ப்பா)

என்னை பத்தி சுருக்கமா சொல்றேன் கேளுங்கோ

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே --  இது நான் பொண்ணுங்கள பார்த்து             சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா   -- இது எதிரிகள் சொல்வது(பரிசல்,கோவி இல்லப்பா)

அடுத்த முதல்வர்    --   இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

      இப்போ நீங்க என்ன சொல்றீங்க? அப்படியே பின்னூட்டத்துல சொல்லிடுங்க.. ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க..

19 கருத்துக்குத்து:

yuva said...

Dubukku

கார்க்கி on September 8, 2008 at 12:38 PM said...

ஹாஹாஹா ..உங்க கிட்ட சொல்லாம ஏதோ பண்ணேனு நினைச்சிங்களா?

Anonymous said...

what is this nonsense of the idiot of the fool! bloody waste fellow!

கார்க்கி on September 8, 2008 at 12:52 PM said...

யாருப்ப இது என்ன இங்கிலீஷ்ல பாராட்டுற‌து? எது சொன்னாலும் தமிழ்ல சொன்ன எனக்கு புரியும்... அப்புறம் பேர சொல்லலாமில்ல?


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் குசும்பனா?

பரிசல்காரன் on September 8, 2008 at 2:10 PM said...

நான் ஏன் உங்கள எதிரின்னு சொல்லணும்?

என்னதான் என்னை நீங்க தொடர்ச்சியா கிண்டல் பண்ணிகிட்டே இருந்தாலும், நீங்க என் நண்பர்தான் கார்க்கி!

(இது என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது!)

புதுகை.அப்துல்லா on September 8, 2008 at 2:25 PM said...

ஏய்! அந்தளுக்கு எதுக்குடா ஆட்டோ? சைக்கிள எடு!

கார்க்கி on September 8, 2008 at 2:57 PM said...

என்ன பரிசல், சீரியஸ் ஆயிட்ட மாதிரி தெரியுது? நான் சும்மா சொன்னேன் சகா...

கார்க்கி on September 8, 2008 at 2:58 PM said...

அண்ணே!! சைக்கிள் போதும்னு நானே போன பதிவின் பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்.. அதுவும் மூணு சக்கர சைக்கிள்னு

yuva said...

Cha Cha !!
sollama seiya theriyathei intha karkiku , athukuthaan intha pattapeyar
he he he

KA.... said...

//அடுத்த முதல்வர்//
nenggalum arambachitingala....vedammeh.

//அண்ணே -- இது ரசிகர்கள் சொல்வது//
Aasai??

KA.... said...

//அடுத்த முதல்வர்//
nenggalum arambachitingala....vedammeh.

//அண்ணே -- இது ரசிகர்கள் சொல்வது//
Aasai??

கிரி on September 9, 2008 at 2:20 AM said...

//புதுகை.அப்துல்லா said...
ஏய்! அந்தளுக்கு எதுக்குடா ஆட்டோ? சைக்கிள எடு!//

:-))))

கார்க்கி on September 9, 2008 at 10:18 AM said...

வாங்க கிரி.. ரொம்ப நாளா ஆளையே காணோம்?

yuva said...

Appo 2011 il ethanai muthalvarpa namma naatuku?????????

குசும்பன் on September 9, 2008 at 5:24 PM said...

//கார்க்கி said...
யாருப்ப இது என்ன இங்கிலீஷ்ல பாராட்டுற‌து? எது சொன்னாலும் தமிழ்ல சொன்ன எனக்கு புரியும்... அப்புறம் பேர சொல்லலாமில்ல?


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் குசும்பனா?
//

நண்பரே நான் அனானியா பெயர் இல்லாமல் யாருக்கும் கமெண்டுவது இல்லை.

அதர் ஆப்சனில் வேறு வேறு பெயர்களில் கும்மினால் சம்மந்தபட்டவருக்கு மெயில் சென்றுவிடும்.

குசும்பன் on September 9, 2008 at 5:26 PM said...

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? அப்படியே பின்னூட்டத்துல சொல்லிடுங்க.. ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க..//

பின்னாடி தென்னை மரம் தான் இருக்கு, அதுவும் கீழே விழுந்துடும் போல நீங்க நகர்ந்தா!!! ரொம்ப நேரமா தென்னை மரத்துக்கு முட்டு கொடுத்துக்கிட்டு நிற்க்கிறீர்கள், நகருங்க முதுகு வலிக்கப்போவுது.

கார்க்கி on September 9, 2008 at 5:31 PM said...

அதான் குசும்பன்.. வாய்ப்புகளே இல்லப்பா...

rapp on September 16, 2008 at 1:53 PM said...

//அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது//
எங்க தல, அகிலாண்ட நாயகனுக்கு எவ்வளவு போட்டிகள்? அவ்வ்வ்வ்வ்வ்..............

//அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது//
பெண்களின் அளப்பரிய நகைச்சுவை உணர்ச்சிக்கு அருமையான சான்று

கார்க்கி on September 16, 2008 at 2:23 PM said...

////அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது//
பெண்களின் அளப்பரிய நகைச்சுவை உணர்ச்சிக்கு /

எங்க ஊர் "கார்க்கி மகளிர் ரசிகர் மன்றம்" சார்பா ஆட்டோ ஏதாவது வந்தா நான் பொறுப்பில்லை

 

all rights reserved to www.karkibava.com