Feb 4, 2009

ஏதாவது செய்வோம் பாஸ்


நர்சிம் ஏதாவது செய்வோம் பாஸ் தொடர் பதிவை புதிப்பிச்சிருக்கார். அதனால

அதுல என் பதிவுக்கு சுட்டி கொடுக்க மறந்துட்டார். அதனால

அலுவலகத்தில் ஆணிகள் கடப்பாறை ஆகிவிட்டன. அதனால

போன மாதமே 23 பதிவுதான் போட்டேன்.அதனால

நிறைய அதனால் சொல்லிட்டேன். அதனால

இந்த ஒரு மீள்பதிவை மட்டும் போட்டுக்கறேன். ஹிஹிஹி

********************************************

    நர்சிம்மின் இந்த பதிவுக்கு லக்கி,பரிசல்கோவி.கண்ணன் எல்லாம் பதிவெழுதி விட்டார்கள். வெகு காலமாய்(என் பள்ளி காலத்திலிருந்தே) நான் நினைத்துக் கொண்டிருக்கும் விடயத்தை இப்போது சொல்வது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன். இதையும் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்ததலே ஒரு வாரம் போய்விட்டது. இதை எழுத தொடங்கிய போதெல்லாம் நான் ஏன் இதை முன்பே எழுதவில்லை என்ற கேள்வி என் முன்னே வந்து அப்போதும் எழுத முடியாமல் போனது.பரிசல் சொன்னதைப் போல காரணம் தெரியவில்லை.

  சரி,மேட்டர் இதுதான். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்க‌ள் அறிவியல் ஆசிரியர் சில குழுக்களாய் பிரித்து ஒரு தலைவனையும்(அடியேனும் ஒரு குழுவின் தலைவன்)நியமித்தார். நாங்களாக புதுசாக ஏதாவது செய்து காட்ட வேண்டும்.ஒவ்வொரு குழுவின் எல்லா முயற்சிக்கும் மதிப்பெண்கள் தந்து ஆண்டிறுதியில் வென்ற அணிக்கு பரிசுகள் தந்தார்.

      அப்போது என் குழுவில் இருந்த சில மாணவர்கள்   " இதற்கு மார்க் கொடுத்தாவது பரவா இல்ல. வீணாப் போன பேனாவையும் ஸ்கேலையும் வாங்க இவ்ளோ கஷ்டபடுனுமா" அப்படினு சொன்னார்கள். அப்போது என் மூளையின் ஒரு மூலையில் மணி அடித்தது. (ஹும்,மொழி படத்தில் வருவதைப் போல அடித்தலாவது தேவலை). வெட்டியாக ரெக்கார்ட் வொர்க் என்ற ஒன்றிர்க்கு  50 மதிப்பெண்கள் தருவதை விட, ஏதாவது சமுதாயத்திற்கும் அல்லது பள்ளிக்கும் தேவையான ஒன்றை செய்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம் என்பதே அந்த மணி சொன்ன மேட்டர்.

  நான் மட்டும் கல்வி அமைச்சர் ஆனால்(சரியாக படிக்கவும்,கல்வி அமைச்சர்) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் படிப்புக்கேற்ப அவர்கள் தரும் சிறந்த ,உபயோகமான திட்டங்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணும், சான்றிதழும் வழங்குவேன். இந்த சான்றிதழ்கள் அவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற உதவும்.சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதைப் போல இவ்வாறு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் " நல்ல சாதியாக" கண‌க்கில் கொண்டு அவர்களுக்கு தனி பங்கீடும் அளிக்கலாம்.

       உதாரணமாக, எங்கள் குழுவில் நான் செய்ததை சொல்கிறேன். அப்போது எல்லாம் அடிக்கடி நான் விளையாடும்போது(வீட்டுக்குள்ளேதான்) அடிபடும். உடனே போட்டுக் கொள்ள பேன்டேஜோ அல்லது டிஞ்சரோ வீட்டில் இருக்காது.மருந்துக் கடைக்கு சென்று ஒரு பாட்டில் டிஞ்சர்,பஞ்சு,பேன்டேஜ் மற்றும் சில முக்கியமான பொருட்களை வாங்கி ,மளிகை கடையில் ஒரு சிறு அட்டைப் பெட்டி வாங்கி அதுனுள் எல்லாவற்றையும் போட்டு மேலே காகிதத்தால் சுற்றி "முதுலுதவிப் பெட்டி" என எழுதி வைத்தேன்.இதை எங்கள் ஆசிரியரிடம் காட்டிய போது ,அதைப் போல மேலும் 50 பெட்டிகள் செய்ய அவரே காசு தந்தார். நாங்களும் சந்தோஷத்தோடு செய்து கொடுத்தோம்.அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அடக்க விலையில் விற்றார்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்,மாணவர்களுக்கும் பல நல்ல யோசனைகள் தோண்றும்.அதை நாம் எப்படி செயலபடுத்துவது என்பதில்தான் இருக்கு மேட்டர்.

     ஒரு வாரம் விசுவின் மக்கள் அரங்கில் வந்த சில மாணவர்கள் அவர்கள் ஊரில் கழிவு நீர் வெளியேற்றதிற்கு ஒரு மாற்று வழியை சொன்னார்கள். அதை ஆராய்ந்த சில வல்லுனர்கள் அதை மிகவும் நல்ல திட்டம் என்று சான்றளித்து அதை இப்போது நடைமுறைபடுத்த போகிறார்கள். சென்னையில் ராஜ்பவன் அருகே சாலையை ஒரு வழி சாலையாய் மாற்றிய பிறகு ட்ராஃபிக் வெகுவாக குறைந்தது.அது ஒரு பள்ளி மாணவனின் யோசனைதான் என்பது பலருக்கு தெரியாது.இதைப் போல அவர்கள் வாழும் ஊருக்கு தேவையானது மற்றும் பொதுவாக சில நல்ல திட்டங்களை தரும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்தால் நிச்சயம் நமக்கு ஆயிரமாயிரம் நல்ல திட்டங்கள் கிடைக்கும்.அதை நடைமுறைபடுத்துவதும் எளிது.

     சென்னையில் இப்போதெல்லாம் போக்குவரத்து காவலர்களோடு சில இளைஞர்கள் நீல நிற உடையில் நிற்பதை காணலாம்.அவர்களுக்கு சம்பளம் தருவது ஹுன்டாய் கார் நிறுவனம்.அது மட்டுமின்றி 1000 கார்களையும் தந்துள்ளது.டி.வி.எஸ். நிறுவனம் ஃபியரோ ரக இரு சக்கர வாகணங்களை இலவசமாக தந்துள்ளது.இதேப் போல் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பெரிய நிறுவன‌ங்களை மாணவர்கள் தரும் திட்டங்களை செயல்படுத்த உதுவுமாறு அழைக்கலாம்.அவர்களும் விளம்பரத்திற்காகவும், மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் நிச்சயம் உதுவுவார்கள்.

      ஒருவழியாக என் திட்டத்தை புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன்.எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்துவதுதான் பெரிய சவால். ஆனால் இந்த திட்டம் ஒரு அளவுக்கு சுலபமானதுதான் என நினைக்கிறேன். இது கட்டாயம் எல்லா மாணவர்களும் செய்ய வேண்டியதில்லை.செய்பவர்களுக்கு ஐந்தே ஐந்து கூடுதல் மதிப்பெண்கள் தந்தாலே பல்லயிரம் திட்டங்கள் குவியும். என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே?

50 கருத்துக்குத்து:

வால்பையன் on September 3, 2008 at 1:57 PM said...

சரிதான்,

அதுவரை அரசியல் பள்ளிக்குள்ளே போகாமல் இருந்தால் சரி

கார்க்கி on September 3, 2008 at 2:19 PM said...

வாங்க வால்பையன்..முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்.. வந்தமைக்கு நன்றி

கோவி.கண்ணன் on September 3, 2008 at 2:20 PM said...

நீங்கள் சொல்வது சரிதான்...புதிய சிந்தனைகள், புதுத்திட்டம்ம் எல்லாம் பள்ளி மாணவர்களுக்கு பளிச் சென்று ஏற்படும்.

நல்ல பதிவு !

பாராட்டுக்கள் கார்க்கி !

Sundar on September 3, 2008 at 2:28 PM said...

அருமையான, எளிமையான யோசனைகள்!

கார்க்கி on September 3, 2008 at 2:33 PM said...

மிக்க நன்றி கண்ணன்

கார்க்கி on September 3, 2008 at 2:33 PM said...

மிக்க நன்றி சுந்தர்

ஜோசப் பால்ராஜ் on September 3, 2008 at 3:08 PM said...

அருமையானத் திட்டம் கார்க்கி.
தற்போது நமது நாட்டில் உள்ள படிப்பு முறையானது, புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து, எழுதி மதிப்பெண் பெறும் முறையில்தான் உள்ளது. மாணவர்களின் யோசனைத்திறனை ஊக்குவிக்கும் விதமாய் இது இல்லை. எனவே நீங்கள் சொல்வது போல் மாணவர்களை ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்களையே ஏதாவது புதிதாய் கண்டு பிடிக்கச் சொல்வது அல்லது ஊருக்கு உபயோகமாய் ஏதாவது செய்யச் சொன்னால் நம் இளைய தலைமுறையினர் நிச்சயம் சாதனைகள் பல செய்வார்கள்.
நீங்கள் சொல்வது போல் அதற்கு என்று தனி மதிப்பெண்கள் அளித்தால் கட்டாயம் பெற்றோரும் மாணவர்களை ஊக்கப்படுத்துவார்கள். அந்த மதிப்பெண் மேற்படிப்பில் சேர உதவும் என்று சொன்னால் மட்டுமே இத்திட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இல்லையேல் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பை தவிர வேறெதிலும் கவனம் செலுத்த விடமாட்டார்கள். இது மிக அருமையான யோசனை.

மாணவர்களின் செயல்திறன், குழு மனப்பான்மை, கண்டுபிடிக்கும் ஆர்வம் எல்லாம் வளரும். சமூகத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் எனக் கேள்விப்பட்டேன். நம் ஊரிலும் இதை செயல்படுத்த வேண்டும்.

நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம்.தென்னரசு ஒரு பொறியியல் பட்டதாரி, பள்ளிக்கல்வி முன்னேற்றத்தில் தீவிரமாக செயல்படுகின்றவர். அவரது கவனத்துக்கு இத்திட்டத்தை கொண்டு செல்ல முயற்சிப்போம். வாழ்த்துக்கள்.

உருப்புடாதது_அணிமா on September 3, 2008 at 3:41 PM said...

நல்ல பதிவு !

அருமையான யோசனைகள்!

கார்க்கி on September 3, 2008 at 3:47 PM said...

மிக்க நன்றி பால்ராஜ்.. விளக்கமான உங்கள் பின்னூட்டம் என் பதிவிற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது...

கார்க்கி on September 3, 2008 at 3:51 PM said...

நன்றி அணிமா...

narsim on September 3, 2008 at 3:55 PM said...

கார்க்கி,

அருமையான,எளிமையான யோசனை.. செயல்படுத்தக்கூடிய திட்டம்..

பார்ப்போம்.. இன்னும் நிறைய வரும்..

நன்றி!

நர்சிம்

கார்க்கி on September 3, 2008 at 4:02 PM said...

வந்தமைக்கும் தூண்டியதற்கும் நன்றி நர்சிம்...

KA.... said...

Nazha yosaney.

Entha matiri elective test india'il illai ya??

பரிசல்காரன் on September 3, 2008 at 4:12 PM said...

யோவ்.. சீரியஸா சொல்றேன்.. உங்ககிட்ட சரக்கிருக்குய்யா!

நீங்க சொன்னது எளிமையான, செயல்படுத்த முடிகிற, நல்ல யோசனை!

சூப்பர் நண்பா!

ஒவ்வொருத்தரும் சொன்னதை வெச்சு ஏதாவது செய்யணும்ன்னு நர்சிம்மை கேட்டுக்கறேன். (ஒட்டுமொத்தமா சேர்த்து ஒரு பதிவா போடட்டும்!)

கார்க்கி on September 3, 2008 at 4:40 PM said...

நன்றி பரிசல்... நிச்சயம் அவர் ஏதவாது செய்வார்,நாமும் உதுவுவோம்... நீங்க வாங்க எல்லாம் வேண்டாம்..என் வயது 25 தான்... யோவ் என்பதில் இருக்கும் உரிமை இதில் அடிபட்டு போவதால் சொல்கிறேன்...

sridhar said...

நீயாடா இப்படி எல்லாம் எழுதுற?

yuva said...

nalla sinthanai karki, seyal paduthinal perumitham kollalam

ரிதன்யா மஹி on September 6, 2008 at 8:11 PM said...

நல்ல திட்டங்கள் நிறைய உண்டு கார்க்கி. இரயில்வெயில் லல்லு வின் வெற்றிக்கு காரணம் இரு I A S அதிகாரிகளின் எண்ணங்களை நடைமுறைப்டுத்த லல்லு மாடு மாதிரி தலையாட்டியாது தான் இரயில்வெ லாபத்தில் செல்ல காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.

கார்க்கி on September 6, 2008 at 8:18 PM said...

சரிதான்.. என்ன செய்ய? நாம‌ திட்டங்கள் வேண்டுமென்றால் சொல்ல முடியும்.. நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தான் மனது வைக்க வேண்டும்... நிறைவேற்றுபவர்களை ஆட்சியில் நாம்தான் வைக்க வேண்டும் என்று பதில் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.வந்தமைக்கு நன்றி

rapp on September 7, 2008 at 1:52 AM said...

ரொம்ப ரொம்ப நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க. நான் இந்த வகை தொடரில் படிச்சதிலேயே இதுதான் உபயோகமான விஷயமா எனக்குப் படுத்து. குறைந்தபட்சம் அந்தந்த பள்ளிகளாவது உங்க ஆசிரியர் போல மாணவர்களின் நல்ல யோசனைகளை ஏற்று செயல்படுத்தப்பார்க்கலாம்:):):)

கார்க்கி on September 7, 2008 at 9:20 AM said...

//நான் இந்த வகை தொடரில் படிச்சதிலேயே இதுதான் உபயோகமான விஷயமா எனக்குப் படுத்து.//

மிக்க நன்றி ராப்...

வித்யா on February 4, 2009 at 10:17 AM said...

சூப்பர் பதிவு கார்க்கி. நான் +2 படிக்கும்போது internal marksகாக ஒரு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்தின் அவசியம் பற்றிக்கூறி குழந்தைகளை முகாமிற்க்கு அழைத்து வந்து சொட்டு மருந்து கொடுக்க வைத்தோம். இது மாதிரி நிறைய விஷயங்களை பண்ணோம் (ஆஹா பதிவுக்கான மேட்டர் சிக்கிடுச்சு).

முரளிகண்ணன் on February 4, 2009 at 10:18 AM said...

super ideas karki. hats off

narsim on February 4, 2009 at 10:35 AM said...

சகா..லிங்க் அங்க போட்டாச்சு போட்டாச்சு

கார்க்கி on February 4, 2009 at 10:44 AM said...

கலக்குங்க வித்யா மேடம்..

நன்றி முரளி

தல, நீங்க போடாததும் நல்லதுதான். ஒரு மீள்பதிவுக்கு நீங்க காரணமாயிட்டிங்க.. கிகிகி

prakash on February 4, 2009 at 10:57 AM said...

நல்ல முயற்சி...
வாழ்த்துகள்...

prakash on February 4, 2009 at 11:02 AM said...

//நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்க‌ள் அறிவியல் ஆசிரியர் //

புனித அன்னாள் மேல் நிலை பள்ளி தானே
யார் அந்த ஆசிரியர்?

கார்க்கி on February 4, 2009 at 11:06 AM said...

//prakash said...
//நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எங்க‌ள் அறிவியல் ஆசிரியர் //

புனித அன்னாள் மேல் நிலை பள்ளி தானே
யார் அந்த ஆசிரியர்//

அதேதான்.. ஜெரோமியஸ் (ஞாபகம் இருக்கா)

prakash on February 4, 2009 at 11:43 AM said...

அந்த பள்ளியில் என்னுடைய முதல் ஆசிரியர் ஜெரோமியஸ்
நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த பொழுது எங்களின் வகுப்பாசிரியர்
மிக நல்ல மனிதர்.
பழைய பள்ளி நிகழ்வுகளை நினைவுபடுத்தினாய் கார்க்கி. நன்றி :))

prakash on February 4, 2009 at 11:58 AM said...

ஆசிரியர் மரிய ஐசக்கிடம் படித்திருக்கிறாயா?

அவர் மாணவர்களிடம் ஒரு நல்ல பழக்கத்தை கொண்டுவர முயற்சித்தார்...

பொதுவாக ஆசிரியர் வகுப்புக்கு வரும்போது மாணவர்கள் Good morning sir என்று கூற பதிலுக்கு தலையசைப்போ அல்லது Good morning என்றோ சொல்வார்கள்

ஐசக் வகுப்பறையில் நுழையும் பொழுது மாணவர்களிடம் நடக்கும் உரையாடல்

students: Good morning sir
Isac :Good morning. How are you?
Students: Fine sir. How are you sir?
Isac: fine. Please sit down.

இதை அவர் மிக விரும்பி பயிற்றுவித்தார். மிகச்சிறிய விஷயம் தான் என்றாலும் அந்த சிறுவயதில் அவரிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திய விஷயம் அது. ஒழுங்காக படிக்கவில்லையென்றால் டின் கட்டிவிடுவார் என்பது வேறு விஷயம்:))

நீ கல்வி அமைச்சரானால் எல்லா ஆசிரியர்களும் இது போல் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டுவரலாம் :))

கார்க்கி on February 4, 2009 at 12:11 PM said...

கேள்விப்பட்டிருக்கிறேன்.. நல்ல மனிதர்.. எனக்கு பிடித்தவர் திவ்யனாதனும், ஜெரோமொயசும்தான்

விக்னேஷ்வரி on February 4, 2009 at 12:26 PM said...

நல்ல பதிவு. செயல்படுத்த முடிகிற அருமையான யோசனை.

ஆனா, எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. ஒரு மாசத்துல இத்தனை பதிவு எழுதுறீங்களே, இதுக்கெல்லாம் எங்கேருந்துங்க நேரம் கிடைக்குது.

கார்க்கி on February 4, 2009 at 2:16 PM said...

// விக்னேஷ்வரி said...
நல்ல பதிவு. செயல்படுத்த முடிகிற அருமையான யோசனை.//

நன்றி

//ஆனா, எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. ஒரு மாசத்துல இத்தனை பதிவு எழுதுறீங்களே, இதுக்கெல்லாம் எங்கேருந்துங்க நேரம் கிடைக்கு//

தினமும் ஒன்னுதாங்க.. அதுவும் இப்பஎல்லாம் குறைஞ்சு போச்சு.. ஆனா இருக்கிற நேரத்துல எழுதினாலே தினமும் நாலு பதிவு போடலாம்.. நான் ரொம்ப ஃப்ரீ .(ஹார்லிக்ஸ் விளம்பர சிறுவன் போல படிக்கவும்)

தங்கம் on February 4, 2009 at 4:04 PM said...

இன்றைய இளைய தலைமுறை கணனியின் பின்னும் சினிமாவின் பின்னும் என்று முடக்கிவிடப்பட்டுள்ள போது, இது ஒரு நல்ல யோசனை.

smile on February 4, 2009 at 6:39 PM said...

சூப்பர் திட்டம் கார்க்கி

அன்புடன் அருணா on February 4, 2009 at 7:25 PM said...

நீங்கள் ஆசிரியராகியிருக்கவேண்டும் கார்க்கி.....ஒரு நல்ல ஆசிரியரை கல்வியுலகம் இழந்துவிட்டதுப்பா....
அன்புடன் அருணா

dharshini on February 4, 2009 at 10:46 PM said...

பேனா, பென்சில், ஸ்கேல் இத தவிற இந்த டீச்சர்களுக்கு வேற ஒண்ணும் தெரியாதா?
அதே மாதிரி காம்பிடிஷன் கலந்துக்கனாலும் ஒதவாத புக்ஸ், ஃபைல் இப்படி... எப்ப தான் மாற போறாங்களோ..
// அப்போது எல்லாம் அடிக்கடி நான் விளையாடும்போது(வீட்டுக்குள்ளேதான்) அடிபடும். // நீங்களுமா?

first time உருப்படியா யோசிச்சீங்கன்னு சொல்லுங்க.

தாரணி பிரியா on February 4, 2009 at 10:47 PM said...

சூப்பரா இருக்கே !

இப்படி நல்லவிதமா கூட யோசிப்பிங்களா :)

dharshini on February 4, 2009 at 10:51 PM said...

உண்மையிலே ரொம்ப நல்ல யோசனை.பாராட்டுக்கள் அண்ணா.

முத்து on February 5, 2009 at 12:02 AM said...

எப்படியோ உருப்படியான ஒரு பதிவு போட்டுவிட்டீர்.வாழ்த்துக்கள் தொடரட்டும்::::::::::::::::::

கார்க்கி on February 5, 2009 at 8:22 AM said...

//தங்கம் said...
இன்றைய இளைய தலைமுறை கணனியின் பின்னும் சினிமாவின் பின்னும் என்று முடக்கிவிடப்பட்டுள்ள போது, இது ஒரு நல்ல யோசனை.
//

நன்றி தங்கம்

******************8

//smile said...
சூப்பர் திட்டம் கார்க்கி//

நன்றி புன்னகை

***********************

//நீங்கள் ஆசிரியராகியிருக்கவேண்டும் கார்க்கி.....ஒரு நல்ல ஆசிரியரை கல்வியுலகம் இழந்துவிட்டதுப்பா....
அன்புடன் அருணா//

ஆஹா!!! காமெடி பண்னாதீங்க

கார்க்கி on February 5, 2009 at 8:24 AM said...

//தாரணி பிரியா said...
சூப்பரா இருக்கே !

இப்படி நல்லவிதமா கூட யோசிப்பிங்களா :)//

அட இந்த மாதிரி நல்ல பதிவுகள கூட படிபிங்களா????? :))

******************

//dharshini said...
உண்மையிலே ரொம்ப நல்ல யோசனை.பாராட்டுக்கள் அண்ணா.//

நன்றி தங்ககககககச்ச்சீ

*******************

// முத்து said...
எப்படியோ உருப்படியான ஒரு பதிவு போட்டுவிட்டீர்.வாழ்த்துக்கள் தொடரட்டும்::::::::::::::::::
//\

:(((((((((((

பாபு on February 5, 2009 at 8:55 AM said...

நல்ல யோசனைதான்,வயசாக வயசாக புது சிந்தனைகள் குறைந்துகொண்டு வரும் (நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையால்)
அதனால் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களை இதுபோன்ற புதிய சிந்தனைகளுக்கு ஊக்குவிப்பதுதான் மிக சரியாக இருக்கும்

Raரா on February 5, 2009 at 8:56 AM said...

//ஒரு வாரம் விசுவின் மக்கள் அரங்கில் வந்த சில மாணவர்கள் அவர்கள் ஊரில் கழிவு நீர் வெளியேற்றதிற்கு ஒரு மாற்று வழியை சொன்னார்கள். //
அது என்ன விசயம்ன்னு சொன்னிங்கன்னா நல்லாயிருக்கும்.
மொத்தத்தில் இது ஒரு Excellent பதிவு....

கார்க்கி on February 5, 2009 at 6:41 PM said...

நன்றி பாபு

நன்றி ராra

அதைப் பற்றி இன்னொரு பதிவில்தான் சொல்ல முடியும். கொஞ்சம் விரிவானது

தாமிரா on February 5, 2009 at 9:20 PM said...

ரிப்பீட்டுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாது.!

கார்க்கி on February 6, 2009 at 9:58 AM said...

முதல்ல போட்டப்ப பின்னூட்டம் போட்டா இப்படி சொல்லலாம். அப்பயும் நீங்க ஏன் போடல?

விஜய் on February 17, 2009 at 3:20 PM said...

48 th

விஜய் on February 17, 2009 at 3:20 PM said...

49th

விஜய் on February 17, 2009 at 3:20 PM said...

YEEEEH 50th

 

all rights reserved to www.karkibava.com