Sep 29, 2008

புட்டிக்கதைகள் - 5


    அட, என் கூட ஒருத்தர் தங்கியிருக்காருங்க..கொஞ்சம் வயசானவரு. சரக்கடிக்கவே பாதி சம்பளத்த எடுத்து வச்சிடுவாரு.அவரு சரக்கடிச்சிட்டு என்கிட்ட சொல்றத எல்லாம் கேட்டா எனக்கு அதிசயமாத்தான் இருக்கும். ஏன்னு நீங்க இதப் படிச்சு முடிக்கிறப்ப தெரிஞ்சிக்குவீங்க.

     நான் இங்க(ஹைதராபாத்) வந்த முத நாள் சொன்னாரு தமிழ்நாட்டோட வள‌ர்ச்சிய கெடுத்தது புலிகள்தானாம். ஏன் சார்னு கேட்டா அவங்க தான் ராஜீவ் காந்திய போட்டுத் தள்ளி, அந்த தேர்தல்ல அதிமுக ஆட்சிக்கு வர வழி பண்ணாங்களாம். அந்த அம்மா ஆட்சியாலாதான் தமிழ்நாடு அமெரிக்காவ மிஞ்ச முடியாம போச்சாம். இதிலிருந்தே அவரு மஞ்சள் துண்டு போடுற பகுத்தறிவுவாதினு தெரிஞ்சிட்டு இருப்பீங்க..

     இன்னொரு நாள் வந்து எங்க புது வீட்டுக்கு சிம்னி போடப்போறேனு சொன்னா, ஏம்ப்பா காசு வீணாக்குற. என்ன செஞ்சாலும் உங்க அம்மா திருப்தி அடைய மாட்டாங்கனு சொல்றாரு. அந்தக் காசு என்ன பண்ண சொல்லுவாரு, சர‌க்குதான். சரினு நான் கண்டுக்காம‌ விட்டேன்.அவரு நிறைய படம் பார்ப்பாருங்க. அதுவும் ஆங்கில படம்தான். சரி, தல பெரியாளுப் போலனு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் ஒரு நாளு சொல்றாரு தமிழ் சினிமாவுல கமலு, ரஜினி,மணிரத்னம், மாதவன் இவங்க எல்லாம் வேஸ்ட்டாம். ஒழுங்கா சொல்ற வேலைய சரியா செய்யுறது, நம்புங்க.. பிரசாந்தாம். அவருக்கு புடிச்ச நடிகர்கள் சிவாஜியும் பிராசந்துமாம்.. என்ன சொல்றது?

     சரினு அதையும் விட்டுடுங்க.. இன்னோரு நாள் வந்து, மின்வெட்ட தவிர்க்கவே முடியாது. ஆற்காடு வீராசாமி ஜகஜ்ஜால கில்லாடி. அவராலே முடியலைனா அவ்ளோதான்னு அர்த்தம்.அப்பிடின்னாரு. என்ன சொல்ல,  ஃபியூஸ் புடிங்கின பல்பு மதிரி நின்னேன். இப்படியெல்லாம் சொன்னவரு நேத்து ஒன்னு சொன்னாரு பாருங்க.. அதான் டாப்பே. தீவிரவாதத்த தடுக்க ஒரே வழிதானாம்.. இந்தியால இருக்கிற எல்லா தெருவுலையும் சர்வலைன்ஸ் காமிரா பொருத்தனுமாம். எப்படி சார் சாத்தியம்னு கேட்டா, முடியும்ங்கிறார்.. கேமிராவ அரசாங்கமே தயார் செய்து மாட்டனுமாம். அப்படி செஞ்சா ஈசியா புடிக்கலாமாம். வேற வழியே இல்லையாம்.என்னங்க செய்யட்டும் நான்.

    பொறந்த நாளுக்கு புது ட்ரெஸ் வாங்கினா நான் லூசுப்பையனாம். கிரிக்கெட் எனக்கு புடிக்கும்னா நான் கேனைப்பையனாம். நான் ப்ளாக் எழுதினா வெட்டிப்பையனாம். சென்னையில மனை வாங்கி வீடு கட்டினா கிறுக்குப்பையனாம். தண்ணியடிக்கலைனா வேஸ்ட்பையனாம். கலைஞர பத்தி தப்பா சொன்னா நான் மக்குப்பையனாம். உலகத்துல அவருக்கு தெரியாததே இல்லைங்க.. அவர்தான் அறிவாளியாம்.

    ஒரு தடவ ரபி பெர்னான்டஸ் வாஸ்து சாஸ்திர நிபுனர் ஒருத்தர பேட்டி எடுத்தாரு. அப்போ அந்த நிபுனர் சொன்னாரு, இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம். ர‌பி சிரிச்சிக்கிட்டே என்ன சொல்றதுனே தெரியலனு விட்டுட்டாரு. அதுக்கப்புறம் அந்த மாதிரி ஒரு ஆள பார்க்க முடியுமானு நினைச்சேன். அத விட "பெட்டராவே" பார்த்துட்டேன். நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா?

51 கருத்துக்குத்து:

rapp on September 29, 2008 at 5:31 PM said...

me the first

கார்க்கி on September 29, 2008 at 5:35 PM said...

அட எப்படிங்க???????

வால்பையன் on September 29, 2008 at 5:35 PM said...

அம்மாடி ராப்பு பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட வர்றவங்கள இப்படி கேவலப்படுத்த கூடாது

வால்பையன் on September 29, 2008 at 5:37 PM said...

//சரக்கடிக்கவே பாதி சம்பளத்த எடுத்து வச்சிடுவாரு//

நானெல்லாம் சம்பாதிக்கிறதே அதுக்கு தான்

வால்பையன் on September 29, 2008 at 5:40 PM said...

//அவரு சரக்கடிச்சிட்டு என்கிட்ட சொல்றத எல்லாம் கேட்டா எனக்கு அதிசயமாத்தான் இருக்கும்//

நீங்களும் சரக்கடிச்சிட்டு கேட்டா சாதாரணமா இருக்கும்

வால்பையன் on September 29, 2008 at 5:43 PM said...

//அம்மா ஆட்சியாலாதான் தமிழ்நாடு அமெரிக்காவ மிஞ்ச முடியாம போச்சாம்//

இப்போ மிஞ்சிருச்சோ

வால்பையன் on September 29, 2008 at 5:44 PM said...

//இதிலிருந்தே அவரு மஞ்சள் துண்டு போடுற பகுத்தறிவுவாதினு தெரிஞ்சிட்டு இருப்பீங்க..
//

நக்கல் தெரியுது

வால்பையன் on September 29, 2008 at 5:45 PM said...

//ஒழுங்கா சொல்ற வேலைய சரியா செய்யுறது, நம்புங்க.. பிரசாந்தாம். //

நல்ல ரசனை, அவரு மானிட்டர் தானே குடிப்பாரு

வால்பையன் on September 29, 2008 at 5:46 PM said...

//மின்வெட்ட தவிர்க்கவே முடியாது. ஆற்காடு வீராசாமி ஜகஜ்ஜால கில்லாடி. //

இப்பவே கண்ணா கட்டுதே

வால்பையன் on September 29, 2008 at 5:46 PM said...

//ஃபியூஸ் புடிங்கின பல்பு மதிரி நின்னேன்.//

அங்கேயும் மின் வெட்டா

வால்பையன் on September 29, 2008 at 5:48 PM said...

//இந்தியால இருக்கிற எல்லா தெருவுலையும் சர்வலைன்ஸ் காமிரா பொருத்தனுமாம். //

முழிச்சிகிட்டு இருக்கும் போதே டவுசர அவுத்துருவானுங்க நம்ம தீவிரவாதிங்கன்னு சொல்ல வேண்டியது தானே

வால்பையன் on September 29, 2008 at 5:48 PM said...

//கேமிராவ அரசாங்கமே தயார் செய்து மாட்டனுமாம்.//

குண்டு வைக்கிறதே அவனுங்க தானாமே

வால்பையன் on September 29, 2008 at 5:51 PM said...

//என்னங்க செய்யட்டும் நான். //

குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துகோங்க

வால்பையன் on September 29, 2008 at 5:51 PM said...

//பொறந்த நாளுக்கு புது ட்ரெஸ் வாங்கினா நான் லூசுப்பையனாம்.//

அவருக்கும் வாங்கி கொடுங்க நல்ல பையன்னு சொல்லுவார்

வால்பையன் on September 29, 2008 at 5:52 PM said...

//உலகத்துல அவருக்கு தெரியாததே இல்லைங்க.. அவர்தான் அறிவாளியாம்.//

நிறைய அறிவாளிங்க இப்படி தான் ஒலகத்துல சுத்துறானுங்க

வால்பையன் on September 29, 2008 at 5:53 PM said...

//இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம். //

இந்தியாவுக்கே ஜாதகம் எழுதிட்டானுங்க்களா!

வால்பையன் on September 29, 2008 at 5:54 PM said...

//நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா?//

நாங்க வேற அந்த கொடுமையை அனுபவிக்கனுமா

வால்பையன் on September 29, 2008 at 5:55 PM said...

நன்றி வணக்கம்
இத்துடன் கும்மி கொடுமை முடிந்தது
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் ஸாரி சந்திப்போம்

கார்க்கி on September 29, 2008 at 6:15 PM said...

இதாம்ப்பா பிரிச்சு மேயுறது.. நன்றி வால்..

நானும் ஒருவன் on September 29, 2008 at 6:27 PM said...

எனக்கென்னவோ அவருதான் பாவம்னு தோணுது

நானும் ஒருவன் on September 29, 2008 at 6:41 PM said...

//வால்பையன் said...
//இதிலிருந்தே அவரு மஞ்சள் துண்டு போடுற பகுத்தறிவுவாதினு தெரிஞ்சிட்டு இருப்பீங்க..
//

நக்கல் தெரியுது
//

மாட்டுனடி நீ

வால்பையன் on September 29, 2008 at 6:44 PM said...

//நானும் ஒருவன் said...
மாட்டுனடி நீ//

ஆட்டோ அனுப்ப அட்ரஸ் வேணுமா

நானும் ஒருவன் on September 29, 2008 at 6:53 PM said...

//ஆட்டோ அனுப்ப அட்ரஸ் வேணுமா//

சென்னை வந்தா வச்சிக்கிறேன்.. இவன் ஜாதகமே தெரியும்ங்க எனக்கு.

வால்பையன் on September 29, 2008 at 6:54 PM said...

//சென்னை வந்தா வச்சிக்கிறேன்.. இவன் ஜாதகமே தெரியும்ங்க எனக்கு. //

ஜாதகம் தெரிஞ்சி பொண்ணா கொடுக்க போறிங்க

நானும் ஒருவன் on September 29, 2008 at 6:55 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on September 29, 2008 at 6:57 PM said...

////நானும் ஒருவன் said...
மாட்டுனடி நீ//
//

அடங்குடா... நான் ஜே.கே.ஆர் மன்றத்த சேர்ந்தவன் தெரியுமில்ல..

நானும் ஒருவன் on September 29, 2008 at 6:58 PM said...

////சென்னை வந்தா வச்சிக்கிறேன்.. இவன் ஜாதகமே தெரியும்ங்க எனக்கு. //

ஜாதகம் தெரிஞ்சி பொண்ணா கொடுக்க போறிங்க//


ஆஹா.உங்க கூட எல்லாம் நான் பெசினா அவ்ளோதான்.கும்மிட மாட்டிங்க.நான் கார்க்கிக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு எஸ்கேப்

கார்க்கி on September 29, 2008 at 7:00 PM said...

//ஜாதகம் தெரிஞ்சி பொண்ணா கொடுக்க போறிங்க/

ஜாதகம், சாதகமா இல்லைன்னாலும் பாதகமா இல்லாம இருந்தா பொண்ணு தருவாங்களா?

வால்பையன் on September 29, 2008 at 7:07 PM said...

25

கார்க்கி on September 29, 2008 at 7:08 PM said...

அண்ணே நீங்க போட்டது 29வது கமெண்ட்.. 25 அல்ல‌

கார்க்கி on September 29, 2008 at 7:09 PM said...

வீட்டுக்கு போலயா இன்னும்????

வால்பையன் on September 29, 2008 at 7:10 PM said...

பரவாயில்லை விடுங்க

வால்பையன் on September 29, 2008 at 7:11 PM said...

நான் போக இரவாயிடும்

வால்பையன் on September 29, 2008 at 7:11 PM said...

அமெரிக்கா மார்கெட் மூடும் போது தான் எனக்கு வேலை முடியும்

Rajaraman on September 29, 2008 at 7:17 PM said...

அந்த பெருசை லக்கிலுக் கிட்டக் கோர்த்து விடவும்.. பொருத்தமாக இருக்கும்/

கார்க்கி on September 29, 2008 at 7:22 PM said...

//அமெரிக்கா மார்கெட் மூடும் போது தான் எனக்கு வேலை முடியும்/

அப்போ காலைல எத்தனை மணிக்கு வருவீங்க சகா?

கார்க்கி on September 29, 2008 at 7:23 PM said...

//rajaraman said...
அந்த பெருசை லக்கிலுக் கிட்டக் கோர்த்து விடவும்.. பொருத்தமாக இருக்கும்/
//

அப்படியா???????????????

வால்பையன் on September 29, 2008 at 7:41 PM said...

//அப்போ காலைல எத்தனை மணிக்கு வருவீங்க சகா? //

காலை ஒன்பது மணிக்கு
இரவு பதினோரு மணி வரை
சனி ஞாயிறு விடுமுறை
ஆளிருந்தால் மதியம் இரண்டு மணி நேரம் ஒய்வு

கார்க்கி on September 29, 2008 at 7:59 PM said...

//காலை ஒன்பது மணிக்கு
இரவு பதினோரு மணி வரை
சனி ஞாயிறு விடுமுறை
ஆளிருந்தால் மதியம் இரண்டு மணி நேரம் ஒய்வு//

என்ன சகா இவ்ளோ நேரம் வேலை செய்யுறீங்க? உடம்ப பார்த்துக்கோங்க.. ( உடனே காமிச்சா பார்ப்போம்னு சொல்லாதீங்க)

வால்பையன் on September 29, 2008 at 8:11 PM said...

வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லை!
இணையத்தில் உலாவுதல்,
மடிக்கணினியில் "ஏஜ் ஆப் எம்பயர்" கேம் விளையாடுதல்
மெயில் பார்த்தல்
டி.வீ பார்த்தல்
அலைபேசியில் கடலை வறுத்தல்
அவ்வபோது வேலையையும் பார்த்தல்

இதுக்கு என்னத்த உடம்ப பாத்துக்குறது

கார்க்கி on September 29, 2008 at 8:33 PM said...

//வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லை!
இணையத்தில் உலாவுதல்,
மடிக்கணினியில் "ஏஜ் ஆப் எம்பயர்" கேம் விளையாடுதல்
மெயில் பார்த்தல்
டி.வீ பார்த்தல்
அலைபேசியில் கடலை வறுத்தல்
அவ்வபோது வேலையையும் பார்த்தல்

இதுக்கு என்னத்த உடம்ப பாத்துக்குறது//

அப்படியில்ல சகா... சும்ம இருந்தாக்கூட தூங்கனும்.. 11 மணிக்கு போய் எப்போ தூங்கி காலைல 9 மணிக்கெல்லாம் வருவிங்க? ஏதோ இயந்திரத்தனமா இல்ல?

வால்பையன் on September 29, 2008 at 8:41 PM said...

//அப்படியில்ல சகா... சும்ம இருந்தாக்கூட தூங்கனும்.. 11 மணிக்கு போய் எப்போ தூங்கி காலைல 9 மணிக்கெல்லாம் வருவிங்க? ஏதோ இயந்திரத்தனமா இல்ல? //

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தால் தான் இயந்திரதனமாக தோன்றும். சந்தையை பொறுத்தவரை தினம் தினம் புதிதாக இருப்பதால் பரபரப்பாக தான் இருக்கிறது.

காலை எட்டு மணிக்கு தான் எழுந்திருப்பேன். மூன்று நாளுக்கு ஒரு முறை தான் குளிப்பேன், அலுவலகத்தில் தான் பல்லே விளக்குவேன்.


இங்கே எனக்கு எந்த கட்டுபாடும் இல்லை,
அலவலகத்தில் தண்ணி அடிக்க கூடாது,
தண்ணியடித்து விட்டு வரக்கூடாது
என்பது மட்டுமே கட்டுப்பாடு

Aruppukkottai Baskar on September 29, 2008 at 8:49 PM said...

கார்க்கி,
உங்கள் நண்பர் பதிவு எழுதினால் தமிழ்மணத்தில் எப்பொழுதும் சூடான இடுகையில் இருப்பார்.
நிறைய திறமை இருக்கும் போல இருக்கே ! எல்லாத்தையும் பிரிச்சு மேய்கிறார் !!!!

கார்க்கி on September 30, 2008 at 9:09 AM said...

//ங்கே எனக்கு எந்த கட்டுபாடும் இல்லை,
அலவலகத்தில் தண்ணி அடிக்க கூடாது,
தண்ணியடித்து விட்டு வரக்கூடாது
என்பது மட்டுமே கட்டுப்பாடு//

அடச்சே.. அதுத் தவிர வேற என்ன வேணும்னாலும் சொல்லியிருக்கலாம்..

கார்க்கி on September 30, 2008 at 9:10 AM said...

@பாஸ்கர்,
சரியா சொன்னீங்க.. ஆனா நீங்க சொல்றத பார்த்தா அடிக்கடி சூடான இடுகைல வர்றவங்களா உள்குத்து குத்துற மாதிரி இருக்கே

Karthik on October 1, 2008 at 1:54 PM said...

////இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம்

ROFL.
:)

நானும் ஒருவன் on October 1, 2008 at 4:38 PM said...

47

நானும் ஒருவன் on October 1, 2008 at 4:38 PM said...

48

நானும் ஒருவன் on October 1, 2008 at 4:38 PM said...

49

நானும் ஒருவன் on October 1, 2008 at 4:38 PM said...

50 byeeeeeeeeeeee

Anonymous said...

நல்லாயிருக்கப்பூ.

 

all rights reserved to www.karkibava.com