Sep 24, 2008

புட்டிக்கதைகள்-3


       ஏழுமலையின் முதல் சாகசத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து விட்டு வாருங்கள்.

       படிப்படியாய் முன்னேறி ஏழுமலை பீரை ராவாக(?) அடிக்க ஆரம்பித்து காலம் அது. சனிக்கிழமை ஆனால் எப்படியாவது காசு ரெடி பண்ணிவிடுவான். அன்று ஒரு பப்பும் வேகாமல் மெஸ்சுக்கருகில் இருந்த கிணத்தின் மேல் அமர்ந்திருந்தோம். இரண்டு முதலாமாண்டு மாணவர்கள் எங்களை கண்டு பயந்து சென்ற விதம் எனக்கு சந்தேகம் வர ஏழுமலையை ஏவினேன். அவர்களை லபக்கென கவ்வி கொண்டு வந்தான்.

   "என எல்லாம் ரெடியா? முடிச்சிட்டிங்களா இல்லையா? என்றேன். அனைவரும் ஒன்றும் புரியாமல் முழிக்க பாலாஜி மட்டும் என் திட்டமறிந்து அவர்களை மிரட்ட தொடங்கினான். நாங்கள் வேறு எதற்கோ திட்டமிட, அவர்களோ எங்கள் வேலையை சுலபமாக்கினார்கள். " நான் வேணான்னு சொன்னேன் சார்( சீனியர்). இவன்தான் அடிக்கலாம்னு சொன்னான்" என்றான் அவன். இப்போது ஏழுமலையின் முகத்தில் ஆற்காடு வீராசாமி மின்வெட்டால் சேமித்த அத்துனை மின்சாரமும் மொத்தமாய் எரிவது போல் பிரகாசம்.

  "டேய் என்னடா அடிக்க போறீங்க" என்றான்.

   தண்ணி" என்று அவன் இழுக்க,

   "வாங்கிட்டீங்களா" என்றான் ஏழுமலை.

   சுரேஷ் வாங்கிட்டு வந்துட்டான் சார். ரூம்ல வெய்ட் பண்றான். நான் சாப்பாடு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்"

  "என்னடா வாங்கிட்டு வந்தான் குவார்ட்டரா ஆஃபா"?

  "சுரேஷுக்குதான் சார் தெரியும். எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா பெரிய பாட்டில்தான் சார். ஃபுல்லுதான்”

  " நீங்க மூணு பேரு ஃபுல் அடிப்பீங்களாடா?"

  இவன்தான் வச்சி வச்சி அடிக்கலாம்னு சொன்னான் சார்".

  ச‌ரி ஓக்கே. நாம எல்லாம் சேர்ந்து அடிக்கலாம்"

     மொத்தம் ஆறு பேர். அதில் மூணு பேர் புதுசு என்பதால் ஒரு ஃபுல் போதும் என்றேன் நான். ஏழுமலையோ குருபக்தியுடன் நடராஜையும் அழைத்து வர சென்றான். முதலில் அவர்களை அனுப்பிவிட்டு ஒவ்வொருத்தராக அந்த அறைக்குள் சென்றோம். அனவரும் வந்தபின் "எடுடா" என்றான் ஏழுமலை ஏகாந்தமாய்..

    பொட்டியை திறந்தான். உள்ளே ஒரு "ஃபுல்" கல்யானி பியர் அழகாய் இருந்தது. நடராஜ் சிரித்துக் கொண்டே வெளியேறி விட்டான். ஏழுமலை மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களை முறைத்துப் பார்த்தான். கோபமாக அவனிடம் " இதுதான் ஃபுல்லா? மிக்ஸ் பண்ண எதுவும் வாங்கலையாடா ?" என்றான்.

    சுரேஷ் சன்னமான குரலில் சொன்னான் " யாராவாது பீர் கூட தண்ணி கலந்து அடிப்பாங்களா சார் ?"

     நாங்கள் ஏழுமலையை பார்த்தோம். ஆழ்வார் அஜித் போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தான்.

21 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on September 24, 2008 at 3:17 PM said...

:-))))....

SK on September 24, 2008 at 3:19 PM said...

:-) :-)

ezhumalaiya romba kalaikareenga

கார்க்கி on September 24, 2008 at 3:25 PM said...

@விஜய்,

:(((((((

@எஸ்.கே,

அட, நடந்ததாங்க சொல்றேன் :)))))

Rajaraman on September 24, 2008 at 4:03 PM said...

ஓவர் ரவுசு ஆகா இருக்கே. தாங்காது சாமி. நான் அப்பிட் ஆவுகிறேன்.

Anonymous said...

suuper.

Have you read vettipayal's kozhi series?

No less humorous than your ezhumalai

கார்க்கி on September 24, 2008 at 4:09 PM said...

@ராஜாராமன்,

இதுக்கே இப்படியா?

தலைப்ப மாத்தலாமா சகா?

@அனானி,

படிச்சிருக்கேன் நண்ப‌ரே...

கார்க்கி on September 24, 2008 at 4:10 PM said...

//No less humorous than your ezhumalai//

அட அது சூப்பர இருக்கும் தல..

Bleachingpowder on September 24, 2008 at 5:25 PM said...

//ஆழ்வார் அஜித் போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தான்.//

ஹா..ஹா..ஹா.. இது சூப்பர் கார்க்கி :-).

கார்க்கி on September 24, 2008 at 5:47 PM said...

////ஆழ்வார் அஜித் போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தான்.//

ஹா..ஹா..ஹா.. இது சூப்பர் கார்க்கி :-).//

வாங்க ப்ளீச்சிங்..

yuva on September 24, 2008 at 5:53 PM said...

Orei thanni mayama irukkae
rendu naaala!!!!!
over mabboo???
ennaiku theliyum??

sridhar said...

//ஏழுமலையின் முகத்தில் ஆற்காடு வீராசாமி மின்வெட்டால் சேமித்த அத்துனை மின்சாரமும் மொத்தமாய் எரிவது போல் பிரகாசம்//

கலக்கல்

கும்க்கி on September 24, 2008 at 6:43 PM said...

காலேஜ் கதை ஒவ்வொன்னும் கலக்கலா இருக்கே..கைவசம் இன்னும் எத்தனை மாதங்களுக்கு இஸ்ட்டாக் வைச்சிக்கிறீங்க????

rapp on September 24, 2008 at 7:10 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............மீ த 13th

கார்க்கி on September 24, 2008 at 7:17 PM said...

// sridhar said...
//ஏழுமலையின் முகத்தில் ஆற்காடு வீராசாமி மின்வெட்டால் சேமித்த அத்துனை மின்சாரமும் மொத்தமாய் எரிவது போல் பிரகாசம்//

கலக்கல்
/

வாடா.. நேத்து எங்க போன?

கார்க்கி on September 24, 2008 at 7:18 PM said...

@கும்க்கி,

அட அது நிறைய இருக்குங்க..

@ராப்,

எப்படியோ வந்துட்டிங்க இல்ல...

தாமிரா on September 24, 2008 at 8:11 PM said...

யோவ்.. இந்த‌ வேக‌த்துல‌ ப‌திவு போட்டியானா.. பின்னூட்ட‌ம் போட‌ற‌தா? வாணாமா? அதில‌யும் எந்த‌ ப‌திவ‌ உருப்ப‌டியா போட்டிருக்கேனு தேடிவேற‌ பார்க்க‌ர‌தா இருக்குது. (கிட‌க்க‌ மாட்டேங்குது என்ப‌து வேறு விஷ‌ய‌ம்)

கார்க்கி on September 24, 2008 at 8:20 PM said...

//யோவ்.. இந்த‌ வேக‌த்துல‌ ப‌திவு போட்டியானா.. பின்னூட்ட‌ம் போட‌ற‌தா? வாணாமா? அதில‌யும் எந்த‌ ப‌திவ‌ உருப்ப‌டியா போட்டிருக்கேனு தேடிவேற‌ பார்க்க‌ர‌தா இருக்குது. (கிட‌க்க‌ மாட்டேங்குது என்ப‌து வேறு விஷ‌ய‌ம்)//

விளக்கம் சொல்றேன் கேளுங்க...

நேத்து எனக்கு பொறந்த நாளு.. அதான் குஜாலா நாலு போட்டேன்.. டிஸ்கி போட்டுதான் செஞ்சேன்..

இன்னைக்கு காலைல ஆணி புடிங்க வந்தா சாரு மேட்டர்.. அதான் வுட முடியல.. இந்த ஒன்னுதான் நான் இன்னைக்கு போடுறதா திட்டம்...

இது நல்லா இல்லைன்னா சொல்லுங்க.. முடிஞ்சத தானே எழுத முடியும்? நாளைல இருந்து ஒன்னுதான்...( அய்யோ என் ரசிகர்கள் அழுவறத பாருங்க)

வால்பையன் on September 24, 2008 at 8:50 PM said...

"புட்டி கதைகள்" என்று தலைப்பை மாத்தவும்

எனக்கு கல்லூரி அனுபவமில்லாததால் வெகுவாக ரசிக்க முடிகிறது
"கண்டினியூ" சரக்க சொல்லலப்பா கதையை சொன்னேன்

கார்க்கி on September 25, 2008 at 9:45 AM said...

//புட்டி கதைகள்" என்று தலைப்பை மாத்தவும்

எனக்கு கல்லூரி அனுபவமில்லாததால் வெகுவாக ரசிக்க முடிகிறது
"கண்டினியூ" சரக்க சொல்லலப்பா கதையை சொன்னேன்//

அண்ணனின் ஆணைக்கிணங்க "புட்டிக்கதைகள்" என்று பெயர் மாற்றம் செய்வது மட்டுமில்லாமல் வாரம் ஒரு கதை எழுதப்படும் என அறிவிக்கிறேன்.

நான் மட்டும் on September 25, 2008 at 10:50 AM said...

Super....waiting for next episode

கார்க்கி on September 25, 2008 at 11:38 AM said...

//நான் மட்டும் said...
Super....waiting for next episode//

வாங்க.. சீக்கிரம் எழுதிடலாம்.. நன்றி

 

all rights reserved to www.karkibava.com