Sep 27, 2008

டக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை பாகம் 2


   

    இதன் முதல் பகுதியை இங்கே சென்று படிக்கலாம்.   

Margarita_glass_300x441

      டக்கீலாவை எப்படி அடிப்பது என்பதில்தான் ஒரு அலாதி சுகமே இருக்கிறது. மெக்சிகோ நாட்டுக்காரர்கள் அதை அப்படியே ராவக அடிப்பதில் தான் சுகம் என்று சொல்கிறனர். ஆனால் சிலர், டக்கீலாவை இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழச்சாருடன் அடிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால், ஆசியா நாட்டுகாரர்கள் இதை வேறு மாதிரி சொல்கின்றனர். டக்கீலா குவளையை வலது கையில் ஏந்தி, இடது கையில் கட்டை விரலுக்கும் எட்டப்பன் விரலுக்கும்(அதாங்க, ஆள்காட்டி விரல்) இடையில் 90 டிகிரி சரியாக இருக்கும்படி வைத்துக்கொண்டு அதன் நடுவில் உப்பும், எலுமிச்ச சாறும் கலந்த கலவையை வைத்துவிட வேண்டும். பின், டக்கீலாவை ஒரே "கல்ப்பில்" அடித்து பின் கலவையை நாக்கால் நக்கி சாப்பிட வேண்டும். இது என்னடா நாய் பொழப்பு என்பர்கள் நக்காமல் சாப்பிடலாம். பின் அந்தக் கலவையை புறங்கையில் வைத்தும் சுவைத்து மகிழ்ந்தனர். ஆனால், எனக்கு மிகவும் பிடித்த முறை இவையல்ல. டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை  சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை டக்கீலா அடிக்கும் போதும், வெறும் டக்கீலாவையே தருவதால் இதை இன்னும் முயற்சி செய்து பார்க்க வில்லை. டக்கீலா லார்ஜ், ஸ்மாலில் எல்லாம் கிடப்பது இல்லை. ஒரு ஷாட் தான். டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள். ஷகீலாவை எப்படி குடிக்க வேண்டும் என்றும் சொல்லுவேன் என‌ எதிர்பார்த்து நீங்கள் படித்தால் , நான் பொறுப்பல்ல. அவர் பார்ப்பதற்கு மட்டுமே.

     தமிழ் சினிமாவில் டக்கீலா பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. நினைவிருக்கும் வரை படத்தில் பிரபுதேவா "ஆயா ஒன்னு அடம்புடிக்குது" என்ற தத்துவப்பாட்டில் "அண்ணே டக்கீலா அண்ணே" என்று சொல்லுவார். புதுக்ககோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷும் அபர்ணாவும் தப்பித்து ஓடும் காட்சியில் டக்கீலா அடிப்பதையும், அதைத் தொடர்ந்து கிஸ் அடிப்பதையும் காட்டுவார்கள். போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ் விரல்களுக்கு இடையில் உப்பை வைத்து டக்கீலா அடிப்பார். அருகில் டக்கராக ஒரு ஃபிகர் இருந்தும் ஏன் அவர் அந்த முறையைக் கையாளவில்லை என்பது எனக்கு ஒரு பெருத்த சந்தேகமே. அதேப் போல், தமிழ் படங்களில் ஷகீலா பல முறை வந்துள்ளார். விவேக்கும் விஜயும் இவரின் பெயரை பலப் படங்களில் உபயோகபடுத்தி இருக்கிறார்கள். தூள் படத்தில் நடிகை ஷகீலாவாகவே வந்து அந்தப் படந்த்தின் வெற்றின் பேருதவியாக இருந்தார். உலகம் முழுவதும் டக்கீலா ஃபேமஸ் என்றாலும் தமிழ் படங்களை பொறுத்தவரை ஷகீலா டக்கீலாவை மிஞ்சியவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

25 கருத்துக்குத்து:

Raam on September 27, 2008 at 4:26 PM said...

me the firstu,,,

Rajaraman on September 27, 2008 at 4:26 PM said...

உப்பை கையில் வைத்துக்கொள்ளாமல் கிளாஸ் இன் மேல் நுனியில் இரு பக்கமும் apply செய்து பின், அப்படியே இரண்டு கல்ப்பில் ஏற்ற வேண்டும்... Lime கூடாது.. அது டக்கீலாவின் சுவையை மாற்றி விடும்...

இந்த புட்டி கதைகளை சூப்பராக தொடர்கீறிர்கள்... ஜமாய்க்கவும்

கார்க்கி on September 27, 2008 at 4:37 PM said...

என்ன சகா, இப்படி சொல்றீங்க? அடிச்சிட்டு கண்டிப்பா லைம் எடுக்கனும்..

Saravana Kumar MSK on September 27, 2008 at 4:38 PM said...

கலக்கலான பதிவு..

Saravana Kumar MSK on September 27, 2008 at 4:40 PM said...

//ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும்.//

அடடா.. என்னே ஒரு சிந்தனை.. நோட் பண்ணிக்கிறேன்.. மைன்டில வச்சிக்கிறேன்..

முரளிகண்ணன் on September 27, 2008 at 5:01 PM said...

அடிக்காமலேயே ஏறிடுச்சு

நான் ஆதவன் on September 27, 2008 at 5:03 PM said...

//டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள். //

ஒத்துக்கிறேன்..நீங்க எனக்கு சீனியர் தான்...(நான் அதிகபட்சம் 4)

தாமிரா on September 27, 2008 at 5:27 PM said...

ட‌க்கீலா இங்கே கிடைக்காதா? நானும் இந்த 15 வருச அனுபவத்தில் மட்டையில் ஆரம்பிச்சு ஸ்காட்ச் வரைக்கும் ஒண்ணு விடாம ட்ரை பண்ணியிருக்கேன் (அனைத்தும் நைன்டி என்பது மறைபொருள்) இந்த டக்கீலாவை மட்டும் கேள்வி மட்டும்தான் பட்டிருக்கேன். என்ன யாதுன்னு சொல்லவும். முடிந்தால் ஏற்பாடு பண்ணவும். மேலும் 1 ஷாட் என்பது நைன்டியை விடவும் அதிகமா என்பதையும் கூறவும்.

தாமிரா on September 27, 2008 at 5:29 PM said...

அதோட இதன் சைட்டிஷ் விவகாரங்களும் வித்தியாசமாக இருக்குதே.! சிக்கன் 65 நல்லாருக்காதா? //உப்பையும் எலுமிச்சை சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் // ஒரே கிளுகிளுப்பா இருக்கே..ஈஈஈ..

கார்க்கி on September 27, 2008 at 6:09 PM said...

//அடடா.. என்னே ஒரு சிந்தனை.. நோட் பண்ணிக்கிறேன்.. மைன்டில வச்சிக்கிறேன்..//

முதல் பாகம் படிச்சிங்களா?

//அடிக்காமலேயே ஏறிடுச்சு//

அப்போ காச ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க.. ஹிஹிஹி.. நன்றி முரளி.

கார்க்கி on September 27, 2008 at 6:10 PM said...

//ஒத்துக்கிறேன்..நீங்க எனக்கு சீனியர் தான்...(நான் அதிகபட்சம் 4)//

ஆவ்வ்வ்வ்வ்வ்.. அப்போ அண்ணே சொல்லு அண்ணே சொல்லு..

கார்க்கி on September 27, 2008 at 6:11 PM said...

//மேலும் 1 ஷாட் என்பது நைன்டியை விடவும் அதிகமா என்பதையும் கூறவும்.//

அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது சகா.. நம்ம ஊரில் 30ml தான் ஒரு ஷாட்.. ஆனால் ராவக இருப்பதாலும், நல்ல சரக்கு என்பதாலும் அது 90ஐ விட மேலானது என சொல்லலாம்..

கார்க்கி on September 27, 2008 at 6:13 PM said...

//ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் // ஒரே கிளுகிளுப்பா இருக்கே..ஈஈஈ..//

இன்னும் பல மேட்டர் இருக்கு தல‌.. சரக்கையே எங்க வைப்பாங்கன்னா...வேணாம் மின்னஞ்சலில் சொல்கிறேன்.. தெரிஞ்சிக்க விரும்புவர்கள் 100 ரூபாய்க்கான டிடியை அனுப்பவும்..

விஜய் ஆனந்த் on September 27, 2008 at 9:20 PM said...

:-)

Dravidan on September 28, 2008 at 8:04 AM said...

Nalla Muyarchi, Vaalthukkal

கார்க்கி on September 28, 2008 at 12:04 PM said...

@விஜய்,

:((((((

@திராவிடன்,

நன்றி நண்பரே..

Kalai M on September 29, 2008 at 6:10 AM said...

This week theme is Alcohol Week ah?

Illa bday'ley adicha mappu unnum erangalaya?

Indian on September 29, 2008 at 6:41 AM said...

நம்ம ஸ்கோர் 6 ஷாட்டுங்ண்ணா. அதுக்கப்புறம், சரக்கு தீர்ந்திடிச்சு :( அடிச்சதிலேயே பிடிச்சது ஹொசே குவெர்வோ 1800 அன்யேஹோ ப்ராண்டுதான்.

கார்க்கி on September 29, 2008 at 9:17 AM said...

@கலை,
அப்படி இல்லை கலை.. அடிக்கிறத விட்டுட்டேன்.. அதான் ஆசைய தீர்த்துக்க எழுதறேன்.. ஹிஹிஹி

@இந்தியன்,

நான் இன்னும் அதை அடிக்க வில்லை சகா.. விட்டுட்டேன்..

வால்பையன் on September 29, 2008 at 11:23 AM said...

ஷகிலா மன்றத்துல ஏதாவது பொறுப்புல இருக்குங்கிங்க்களா

கார்க்கி on September 29, 2008 at 11:29 AM said...

@வால்பையன்,
ஓ ஷகீலாக்கு மன்றம் இருக்கா?

Anonymous said...

last friday i took 14 rounds with //ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும்.//. super method . but it is very famous here.
thai-tamilan
bangkok

கார்க்கி on September 29, 2008 at 1:23 PM said...

//last friday i took 14 rounds wit//

அண்ணே நீங்க பெரியாளுங்க.

//. super method . but it is very famous here.
thai-tamilan
bangkok//

அந்த நாட்டுலயா இருக்கிங்க? கொடுத்து வச்சவரு... வந்தமைக்கு நன்றி சகா..

Kalai M on September 30, 2008 at 7:02 PM said...

//அடிக்கிறத விட்டுட்டேன்//

Nambithen :)

கார்க்கி on October 1, 2008 at 9:21 AM said...

நீங்களுமா??????

 

all rights reserved to www.karkibava.com