Sep 16, 2008

தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத ஒரு மருந்து(100% உத்தரவாதம்)


         எனக்கு தெரிஞ்ச ஒருவர் தலைவலிக்கும்  முதுகுவலிக்கும் ஒரு வைத்தியம் சொன்னார். அதை என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன். அப்படி செய்த அவனுக்கு தலைவலி சுத்தமாக போய்விட்டதாக கூறினான்.  அதைக் கேட்ட இன்னொரு நண்பன் அவனுக்கும் அந்த வைத்திய முறையை சொல்லுமாறு வந்தான். அவனிடம் பேசியது அப்படியே இதோ...    

மச்சி, உனக்கு ஏதோ வைத்தியம் தெரியுமாமே? எனக்கு தலைவலி உயிர் போதுடா... ஏதாவது செய்..

       வேணாம் சாமீ.. நான் சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிக்க வருவ..

        டேய், உன் வைத்தியம் வொர்க் அவுட் ஆவுதுனு பாலாஜி சொன்னான்.. ப்ளீஸ் மச்சி.. தாங்க முடியல...

        காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

        இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு 

      அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

      பல் தேய்க்கணுமா?

      அவ்ளோ கஷ்டபடதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுனு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

         டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

       இதுக்குதான் நான் சொல்ல‌ மாட்டேனு சொன்னேன். போடா போ இந்த‌ த‌லைவ‌லியோடு ஏக‌ன் வ‌ரும்.. போய் பாரு..

        அப்புற‌ம் நீ சொல்ற‌த‌ கேட்டா அப்ப‌டித்தான் இருக்கு.. கோச்சிக்காம‌ மேல‌ சொல்லு...

        இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா ச‌த்ய‌ம் விஷால் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

         ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

      சொல்றேன்டா.. இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தணை பேர் கிட்ட நீ சொல்றீயோ அவ்ளோ நல்லது..

       அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்..

         ம்ம்ம்... ச‌ரி,ரொம்ப‌ மொக்க‌ போடுறேன்.. மந்திர‌த்த‌ சொல்றேன்..


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க...முகவை மைந்தன் மென்மேலும் வளர்க..

    என்ன ஒன்னும் தெரியலையா? அப்படியே செலக்ட் பண்ணி பாருங்க.. மந்திரத்த இந்த அளவுக்கு கூட ஒளிச்சு வைக்கலைனா எபப்டி?

41 கருத்துக்குத்து:

rapp on September 16, 2008 at 3:47 PM said...

me the first

rapp on September 16, 2008 at 3:53 PM said...

ரொம்ப ரொம்ப நல்லப் பதிவு. போற போக்கை பார்த்தா நீங்க மன்றத்து தலைவர் பதவியை வாங்காம விடமாட்டீங்க போலருக்கே. அவ்வ்வ்வ்வ்..............

Sundar on September 16, 2008 at 4:05 PM said...

ஐயோ.. உங்களை நம்பி போன் போட்டு வாங்கிகட்டிகிறதுக்கும் ஆள் இருக்கா?

கார்க்கி on September 16, 2008 at 4:07 PM said...

வாங்க ராப்... மறுபடியும் சொல்றேன்.. எனக்கு பதவி ஏதும் வேணாம்.. இந்தப் பட்டத்த சங்க எனக்கு கொடுத்ததா அதிகார பூர்வமா அறிவிச்சா போதும்..

வீரத்தளபதியின் போர்படை தளபதி.. சொல்லும்போதே பூமி நடுங்குது இல்ல?

கார்க்கி on September 16, 2008 at 4:09 PM said...

//ஐயோ.. உங்களை நம்பி போன் போட்டு வாங்கிகட்டிகிறதுக்கும் ஆள் இருக்கா?//

ஹிஹிஹிஹி.. வாங்க சுந்தர்..

sridhar said...

ங்கொய்யால... சென்னைக்கு வா.. உனக்கு இருக்கு..

sridhar said...

//வீரத்தளபதியின் போர்படை தளபதி.. சொல்லும்போதே பூமி நடுங்குது இல்ல?//

ரெண்டு மொக்கைகளும் சேர்ந்தா அப்படித்தான்

கார்க்கி on September 16, 2008 at 4:47 PM said...

//ரெண்டு மொக்கைகளும் சேர்ந்தா அப்படித்தா//

சங்கத்தி சிங்கங்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.. இவனை நான் கவணித்துக்கொள்கிறேன்

தமிழ்நெஞ்சம் on September 16, 2008 at 5:18 PM said...

semma komedy

கார்க்கி on September 16, 2008 at 5:20 PM said...

வாங்க தமிழ்நெஞ்சம்.. 17 பேரு ஆன்லைன்ல இருந்தாங்க.. ஆனா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடவே இல்லையே பார்த்துக்குனே இருந்தேன்...

ka.. said...

இப்ப எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. அதுக்கு என்ன பண்ணனும்?

புதுகை.அப்துல்லா on September 16, 2008 at 5:34 PM said...

சங்கத்துலேந்து அதிகாரப்பூர்வமாவே அறிவிக்கிறோம்.

இனி நீங்க அதிகாரப்பூர்வமா அண்ணனின்
"போர்ப் படைத் தளபதி"

ராப்
தலைவர்

ச்சின்னப்பையன்
துணைத்தலைவர்

அப்துல்லா
பொருளாளர்

அண்ணன் ரித்தீஷ் மன்றம்

கார்க்கி on September 16, 2008 at 5:36 PM said...

மக்களே இது எனக்கு புடிக்கவே இல்ல.. இன்னைக்கு காலைல நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.. அத மொத்தம் 50 பேர்தான் படிச்சாங்க.. நம்ம இடுகை சூடாகி ரொம்ப நாள் ஆச்சு.. பரிசல் பேர் கொன்டு எழுதியும் சூடாகவில்லை.. உடனே வீறு கொண்டு எழுந்து எழுதிய பதிவுதான் இது.. இப்போ இது சூடாகிவிட்டது.. என்னத்த சொல்ல?

ஆக, வலையுலகின் சூப்பர் ஸ்டார் (இருங்க,அதுக்குள்ள என்ன அவசரம்) ஜே.கே.ஆர் தான்னு சொல்ல வந்தேன்..

Bleachingpowder on September 16, 2008 at 5:36 PM said...

அடச்சே...இதுக்கு தலவலியே பரவாயில்ல.

நாள பின்ன வந்து போற இடமாச்சேனு பாக்குறேன். இல்லைனா நடக்கறதே வேற

கார்க்கி on September 16, 2008 at 5:39 PM said...

//இனி நீங்க அதிகாரப்பூர்வமா அண்ணனின்
"போர்ப் படைத் தளபதி"

ராப்
தலைவர்

ச்சின்னப்பையன்
துணைத்தலைவர்

அப்துல்லா
பொருளாளர்
/

ஹேய்.... நான் பொறந்தது வீணாகல... ஸ்டார்ட் மீஸிக்..

இருந்தாக்கா அள்ளிக்கொடு
தெரிஞ்சாக்கா சொல்லிக்கொடு...


அப்துல்லா அண்ணே, பொருளாளர் நீங்கதானே, பாட்டு போட்டதுக்கு கொஞ்சம் செலவு ஆச்சு.. வவுச்சர் தரட்டுமா?

கார்க்கி on September 16, 2008 at 5:43 PM said...

//அடச்சே...இதுக்கு தலவலியே பரவாயில்ல.

நாள பின்ன வந்து போற இடமாச்சேனு பாக்குறேன். இல்லைனா நடக்கறதே வேற//


ப்ளீச்சிங்க் பவுடர், எங்க தல உங்க தலைவருக்கு போட்டியா வந்துடுவாருனு நீங்க பயப்படுறது தெரியுது... "நாங்க பார்க்கத்தான் குள்ளம்.. ஆனா உள்ள இருக்கு வெள்ளை உள்ளம்"( நோட் பண்ணுங்கப்பா)‌

விஜய் ஆனந்த் on September 16, 2008 at 5:55 PM said...

:-)))...

முகவை மைந்தன் சண்டைக்கு வரப்போறாரு!!!(பதிவரச்சொன்னேன்!!!!)

ஆமா தலைவா, நீங்க என்ன வேல பாக்குறீங்க???(பாக்குறீங்களா???)

விஜய் ஆனந்த் on September 16, 2008 at 5:58 PM said...

// புதுகை.அப்துல்லா said...
சங்கத்துலேந்து அதிகாரப்பூர்வமாவே அறிவிக்கிறோம்.

இனி நீங்க அதிகாரப்பூர்வமா அண்ணனின்
"போர்ப் படைத் தளபதி"

ராப்
தலைவர்

ச்சின்னப்பையன்
துணைத்தலைவர்

அப்துல்லா
பொருளாளர்

அண்ணன் ரித்தீஷ் மன்றம் //

எங்களுக்கெல்லாம் எந்தப்பதவியும் வாணாம்...தானைத்தலைவன் பேரச்சொல்லி புகழப்பரப்புற சந்தோஷம் மட்டும் போதும்!!!

கார்க்கி on September 16, 2008 at 6:01 PM said...

//முகவை மைந்தன் சண்டைக்கு வரப்போறாரு!!!(பதிவரச்சொன்னேன்!!!!)//

அவர் பேர நான் ஒன்னும் கெடுக்கலையே.. சந்தோஷம்தான் படுவாரு

//ஆமா தலைவா, நீங்க என்ன வேல பாக்குறீங்க???(பாக்குறீங்களா???//

உங்கள் நுண்ணரசியல் புரியுது..working as a functional consultant-oracle Apps (oracle coroparation,hyderabad) (அட நம்புங்க)

கார்க்கி on September 16, 2008 at 6:03 PM said...

//எங்களுக்கெல்லாம் எந்தப்பதவியும் வாணாம்...தானைத்தலைவன் பேரச்சொல்லி புகழப்பரப்புற சந்தோஷம் மட்டும் போதும்!!!//

இப்படியே வள‌ர்ந்து இன்னும் சில வருஷத்துல எல்லா தமிழர்களும் தல ரசிகர்கள் ஆகனும்.. அது வரைக்கும் நான் ஓய மாட்டேன்..

பரிசல்காரன் on September 16, 2008 at 6:39 PM said...

ப்ரசண்ட் சார்...

கார்க்கி on September 16, 2008 at 6:42 PM said...

வாங்க சகா...

ஜோசப் பால்ராஜ் on September 16, 2008 at 7:05 PM said...

கார்க்கி,
என்னைய சங்கத்துல சேர்த்துக்க முடியாதுன்னு பொருளாளர் அண்ணண் சொல்லிட்டாரு. தலைவர் ராப் விடுமுறையில போயிருந்ததால என்னால அவரோட தீர்ப்ப எதிர்த்து முறையீடு செய்ய முடியல. நீங்க தான் போர்படைத் தளபதியாச்சே, எனக்கு நியாயம் கிடைக்க உதவுங்க.

கார்க்கி on September 16, 2008 at 7:38 PM said...

கவலைய விடுங்க.. உறுப்பினர் அட்டை சிங்கைக்கே வரும்..

ச்சின்னப் பையன் on September 16, 2008 at 8:05 PM said...

:-)))))

ச்சின்னப் பையன் on September 16, 2008 at 8:06 PM said...

எல்லோருடைய தலைவலியையும் போக்கும் எங்கள் அண்ணன் ஜே.கே.ஆரும் புதிய போர்ப் படை தளபதி கார்க்கியும் வாழ்க வாழ்க!!!

கார்க்கி on September 16, 2008 at 8:23 PM said...

யாரங்கே.. யாரங்கே.. யாரடா அங்கே... அண்ணனுக்கு ரெண்டு ஷாட் டகீலா சொல்லு..

Anonymous said...

தயவுசெய்து பிகார் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்யவும்.

Anonymous said...

//கார்க்கி said...

வாங்க தமிழ்நெஞ்சம்.. 17 பேரு ஆன்லைன்ல இருந்தாங்க.. ஆனா ஒருத்தர் கூட பின்னூட்டம் போடவே இல்லையே பார்த்துக்குனே இருந்தேன்...//

எப்படிப் போடுவாங்க இந்தக் கடி கடிச்சா. பின்னங்கால் பிடரியில பட விழுந்தடிச்சு ஓடீருப்பாங்க.

KA.... said...

Hahaha. Pavem unggal nanbar..thalai vali vera ethulah nengga vera...pavem avar.

KA.... said...

//ka.. said...
இப்ப எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. அதுக்கு என்ன பண்ணனும்?//

Ethu yar pa??

கார்க்கி on September 17, 2008 at 9:00 AM said...

@வேலன்,

வாங்க வேலன்.. நீங்க ஓடாம பின்னூட்டமிடலையா..அந்த தைரியம் எல்லோருக்கும் வரணும் சகா..


@கலை,


தெரியல கலை.. நான் நீங்கதானெ நினைச்சேன்..

r.selvakkumar on September 17, 2008 at 9:19 AM said...

எழுதிய விஷயம் காமெடிதான்
ஆனாலும்
எழுதிய விதம் நல்ல சஸ்பென்ஸ்

KA.... said...

//தெரியல கலை.. நான் நீங்கதானெ நினைச்சேன்..//

Naa illa Karki. Ungal blog visit panni few days achi. Afterall, i dont have tamil font in my laptop now pa..deleted it accidently :(

கார்க்கி on September 17, 2008 at 9:41 AM said...

@செல்வகுமார்,

நன்றி நண்பரே...

@கலை,

சரி கலை.. முடிந்தால் blogger account open செய்து போடுங்கள்..

Sen22 on September 17, 2008 at 10:49 AM said...

:)))))

கார்க்கி on September 17, 2008 at 10:52 AM said...

வாங்க சென் :))))))))))

kumky on September 17, 2008 at 8:09 PM said...

ஹும் ..ஒன்னுமே புரியலே இந்த உலகத்திலே.என்னமோ நடக்குது.மர்மமாய் இருக்குது..(மீண்டும் முதல் வரி)

கார்க்கி on September 18, 2008 at 9:55 AM said...

ஆமாம் கும்கி...

yuva on September 18, 2008 at 11:27 AM said...

ithai mothallayei solliruntha
wasteaa hospitallai 2 naal admit aayrukka maataenla!!!!!!!!!

கார்க்கி on September 18, 2008 at 11:57 AM said...

இப்பதான் தெரிஞ்சுது யுவா

 

all rights reserved to www.karkibava.com