Sep 30, 2008

ஹாரிசுக்கும் தாமரைக்கும் ஒரு நன்றி..

38 கருத்துக்குத்து

    நேற்று இரவு வழக்கம்போல் மெல்லிய சத்தத்தில் பாடல்கள் ஒலிக்க தூங்கப் போன்னே. வழக்கமாய் கேட்ட பாடல்களே வந்துக் கொண்டிருக்க, திடிரென இது வரை கேட்டிராத பாடல் ஒன்று வந்தது. ஆரம்பமே ஏனோ வெகுவாய் கவர்ந்தது. பாம்பே ஜெயஷ்ரீயின் குரலோ என் நினைக்கத் தோண்றியது.. பாடலிலும் ஹாரீஸின் வாசனை அடித்தாலும் ஒரு சந்தேகம். பின் என் ஐபோடை எடுத்துப் பார்த்தால் "வாரணம் ஆயிரம்" என‌த் தெரிந்தது.இன்னோரு முறை கேட்கலாம் என ரிப்பீட் செய்தேன். சுகமா சோகமா எனப் புரியாமால் அந்த இசையில் லயிக்கத் தொடங்கிய நேரம், என் நண்பரின் குறட்டை இடைஞ்சல் செய்ய, இருட்டில் தட்டு தடுமாறி ஹெட்ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். வேகமாக காதில் சொருகி 'play' பொத்தானை அழுத்தினேன்.

"அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி 

எதற்காக‌ தடை இனி....."

     கண் மூடி கேட்டேன். யாரோ ஒருவர் இதயத்தை கசக்கி ரத்தத்தை பிழிவது போல் ஒரு வலி. கண்திறந்தேன். மயான அமைதி. ஊர் முழுவதும் கண்ணயர்ந்த நேரம் ,வெகு நாட்களுக்கு பின் கண்கலங்கினேன். இது சோகமா சுகமா புரியவில்லை. எழுதியவர் மீது அளவில்லா கோபம். தாமரையாகத்தான் இருக்க முடியும். ஒரு பெண்ணின் உணர்வை இத்துனை வீரியத்துடன் பதிவு செய்யும் ஆண்கவிஞன் இன்னும் வரவில்லை. இருந்தால் அது முத்துக்குமாராகத்தான் இருக்க முடியும். வலையில் வந்து மேய்ந்தால் தாமரைதான்.. ஆனால் குரல், சுதா ரகுனாதன். எத்துனை முறை ரிப்பீட் செய்தேன் என நினைவில்லை.

"எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ.. "

    சொக்கிப் போனேன். கண்ணுக்கு எட்டிய வரை யாருமில்லா இரவு. தவளைகளும் எனக்காக அமைதி காத்தன. சுவரில் சாய்ந்து நானும் பாடத் தொடங்கினேன். தூரத்தில் நிலா என்னைபோல தனியாக.  யாரும் இல்லை என்றாலும் அழகாய் பொழிந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் எனதருகில் வந்து என்னை மடியில் ஏந்திக் கொண்டது. எனக்காக‌ ஒரு கதை சொன்னது. ஆறுதலாய் உணர்ந்தேன். பின் ஏனோ விலகி சென்றது. இத்தனை நாள் இந்த அழகிய இரவையும், நிலாவையும் ரசிக்காமால் வீணடித்ததை நினைத்து நொந்தேன். இவை அழகா, இல்லை இந்தப் பாடல் எல்லாவற்றையும் அழகாக்கியதா? சுதாவின் குரலில் இன்னும் மயங்கியே இருந்தேன். அதிலும் அந்தப் பாடல் முடிவடையும் நேரம் ஒரு ஆண்குரல் அந்த மெட்டை ஹ‌ம் செய்யும்.. கேட்டுப் பாருங்கள். ரொம்ப நாளாச்சு.. தாங்க்ஸ் ஹாரீஸ் மற்றும் குழு...

பல்லவி

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி  

எதற்காக‌ தடை இனி....."

சரணம் -1

எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..

சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..

Sep 29, 2008

புட்டிக்கதைகள் - 5

51 கருத்துக்குத்து

    அட, என் கூட ஒருத்தர் தங்கியிருக்காருங்க..கொஞ்சம் வயசானவரு. சரக்கடிக்கவே பாதி சம்பளத்த எடுத்து வச்சிடுவாரு.அவரு சரக்கடிச்சிட்டு என்கிட்ட சொல்றத எல்லாம் கேட்டா எனக்கு அதிசயமாத்தான் இருக்கும். ஏன்னு நீங்க இதப் படிச்சு முடிக்கிறப்ப தெரிஞ்சிக்குவீங்க.

     நான் இங்க(ஹைதராபாத்) வந்த முத நாள் சொன்னாரு தமிழ்நாட்டோட வள‌ர்ச்சிய கெடுத்தது புலிகள்தானாம். ஏன் சார்னு கேட்டா அவங்க தான் ராஜீவ் காந்திய போட்டுத் தள்ளி, அந்த தேர்தல்ல அதிமுக ஆட்சிக்கு வர வழி பண்ணாங்களாம். அந்த அம்மா ஆட்சியாலாதான் தமிழ்நாடு அமெரிக்காவ மிஞ்ச முடியாம போச்சாம். இதிலிருந்தே அவரு மஞ்சள் துண்டு போடுற பகுத்தறிவுவாதினு தெரிஞ்சிட்டு இருப்பீங்க..

     இன்னொரு நாள் வந்து எங்க புது வீட்டுக்கு சிம்னி போடப்போறேனு சொன்னா, ஏம்ப்பா காசு வீணாக்குற. என்ன செஞ்சாலும் உங்க அம்மா திருப்தி அடைய மாட்டாங்கனு சொல்றாரு. அந்தக் காசு என்ன பண்ண சொல்லுவாரு, சர‌க்குதான். சரினு நான் கண்டுக்காம‌ விட்டேன்.அவரு நிறைய படம் பார்ப்பாருங்க. அதுவும் ஆங்கில படம்தான். சரி, தல பெரியாளுப் போலனு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் ஒரு நாளு சொல்றாரு தமிழ் சினிமாவுல கமலு, ரஜினி,மணிரத்னம், மாதவன் இவங்க எல்லாம் வேஸ்ட்டாம். ஒழுங்கா சொல்ற வேலைய சரியா செய்யுறது, நம்புங்க.. பிரசாந்தாம். அவருக்கு புடிச்ச நடிகர்கள் சிவாஜியும் பிராசந்துமாம்.. என்ன சொல்றது?

     சரினு அதையும் விட்டுடுங்க.. இன்னோரு நாள் வந்து, மின்வெட்ட தவிர்க்கவே முடியாது. ஆற்காடு வீராசாமி ஜகஜ்ஜால கில்லாடி. அவராலே முடியலைனா அவ்ளோதான்னு அர்த்தம்.அப்பிடின்னாரு. என்ன சொல்ல,  ஃபியூஸ் புடிங்கின பல்பு மதிரி நின்னேன். இப்படியெல்லாம் சொன்னவரு நேத்து ஒன்னு சொன்னாரு பாருங்க.. அதான் டாப்பே. தீவிரவாதத்த தடுக்க ஒரே வழிதானாம்.. இந்தியால இருக்கிற எல்லா தெருவுலையும் சர்வலைன்ஸ் காமிரா பொருத்தனுமாம். எப்படி சார் சாத்தியம்னு கேட்டா, முடியும்ங்கிறார்.. கேமிராவ அரசாங்கமே தயார் செய்து மாட்டனுமாம். அப்படி செஞ்சா ஈசியா புடிக்கலாமாம். வேற வழியே இல்லையாம்.என்னங்க செய்யட்டும் நான்.

    பொறந்த நாளுக்கு புது ட்ரெஸ் வாங்கினா நான் லூசுப்பையனாம். கிரிக்கெட் எனக்கு புடிக்கும்னா நான் கேனைப்பையனாம். நான் ப்ளாக் எழுதினா வெட்டிப்பையனாம். சென்னையில மனை வாங்கி வீடு கட்டினா கிறுக்குப்பையனாம். தண்ணியடிக்கலைனா வேஸ்ட்பையனாம். கலைஞர பத்தி தப்பா சொன்னா நான் மக்குப்பையனாம். உலகத்துல அவருக்கு தெரியாததே இல்லைங்க.. அவர்தான் அறிவாளியாம்.

    ஒரு தடவ ரபி பெர்னான்டஸ் வாஸ்து சாஸ்திர நிபுனர் ஒருத்தர பேட்டி எடுத்தாரு. அப்போ அந்த நிபுனர் சொன்னாரு, இந்தியாவோட ஜாதகப்படி வடக்கு திசையில வட்டமான கட்டிடத்துல பாராளுமன்றம் இருக்க கூடாதாம். சதுரமாத்தான் இருக்கனுமாம். ர‌பி சிரிச்சிக்கிட்டே என்ன சொல்றதுனே தெரியலனு விட்டுட்டாரு. அதுக்கப்புறம் அந்த மாதிரி ஒரு ஆள பார்க்க முடியுமானு நினைச்சேன். அத விட "பெட்டராவே" பார்த்துட்டேன். நீங்க யாரையாவது பார்த்திருக்கிங்களா?

Sep 27, 2008

டக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை பாகம் 2

25 கருத்துக்குத்து

   

    இதன் முதல் பகுதியை இங்கே சென்று படிக்கலாம்.   

Margarita_glass_300x441

      டக்கீலாவை எப்படி அடிப்பது என்பதில்தான் ஒரு அலாதி சுகமே இருக்கிறது. மெக்சிகோ நாட்டுக்காரர்கள் அதை அப்படியே ராவக அடிப்பதில் தான் சுகம் என்று சொல்கிறனர். ஆனால் சிலர், டக்கீலாவை இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழச்சாருடன் அடிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால், ஆசியா நாட்டுகாரர்கள் இதை வேறு மாதிரி சொல்கின்றனர். டக்கீலா குவளையை வலது கையில் ஏந்தி, இடது கையில் கட்டை விரலுக்கும் எட்டப்பன் விரலுக்கும்(அதாங்க, ஆள்காட்டி விரல்) இடையில் 90 டிகிரி சரியாக இருக்கும்படி வைத்துக்கொண்டு அதன் நடுவில் உப்பும், எலுமிச்ச சாறும் கலந்த கலவையை வைத்துவிட வேண்டும். பின், டக்கீலாவை ஒரே "கல்ப்பில்" அடித்து பின் கலவையை நாக்கால் நக்கி சாப்பிட வேண்டும். இது என்னடா நாய் பொழப்பு என்பர்கள் நக்காமல் சாப்பிடலாம். பின் அந்தக் கலவையை புறங்கையில் வைத்தும் சுவைத்து மகிழ்ந்தனர். ஆனால், எனக்கு மிகவும் பிடித்த முறை இவையல்ல. டக்கீலா அடிக்கும் போது ஷக்கீலா மாதிரி இல்லாமல், ஒரு நல்ல ஃபிகரோடு அடிக்க வேண்டும். உப்பையும் எலுமிச்சை  சாரையும் அந்த ஃபிகரின் உதட்டில் தடவி, டக்கிலாவை அடித்த வாயோடு ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸையும் அடிக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை டக்கீலா அடிக்கும் போதும், வெறும் டக்கீலாவையே தருவதால் இதை இன்னும் முயற்சி செய்து பார்க்க வில்லை. டக்கீலா லார்ஜ், ஸ்மாலில் எல்லாம் கிடப்பது இல்லை. ஒரு ஷாட் தான். டக்கீலாவை ஒரு இரவில் 8 ஷாட் மேல் அடித்தவர்கள் என்னை விட சிற‌ந்த குடிகாரர்கள். ஷகீலாவை எப்படி குடிக்க வேண்டும் என்றும் சொல்லுவேன் என‌ எதிர்பார்த்து நீங்கள் படித்தால் , நான் பொறுப்பல்ல. அவர் பார்ப்பதற்கு மட்டுமே.

     தமிழ் சினிமாவில் டக்கீலா பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. நினைவிருக்கும் வரை படத்தில் பிரபுதேவா "ஆயா ஒன்னு அடம்புடிக்குது" என்ற தத்துவப்பாட்டில் "அண்ணே டக்கீலா அண்ணே" என்று சொல்லுவார். புதுக்ககோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷும் அபர்ணாவும் தப்பித்து ஓடும் காட்சியில் டக்கீலா அடிப்பதையும், அதைத் தொடர்ந்து கிஸ் அடிப்பதையும் காட்டுவார்கள். போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ் விரல்களுக்கு இடையில் உப்பை வைத்து டக்கீலா அடிப்பார். அருகில் டக்கராக ஒரு ஃபிகர் இருந்தும் ஏன் அவர் அந்த முறையைக் கையாளவில்லை என்பது எனக்கு ஒரு பெருத்த சந்தேகமே. அதேப் போல், தமிழ் படங்களில் ஷகீலா பல முறை வந்துள்ளார். விவேக்கும் விஜயும் இவரின் பெயரை பலப் படங்களில் உபயோகபடுத்தி இருக்கிறார்கள். தூள் படத்தில் நடிகை ஷகீலாவாகவே வந்து அந்தப் படந்த்தின் வெற்றின் பேருதவியாக இருந்தார். உலகம் முழுவதும் டக்கீலா ஃபேமஸ் என்றாலும் தமிழ் படங்களை பொறுத்தவரை ஷகீலா டக்கீலாவை மிஞ்சியவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

டக்கீலாவும் ஷகீலாவும் - ஒரு ஆய்வுக் கட்டுரை

30 கருத்துக்குத்து

   

        டக்கீலா... பேரிலே ஒரு போதை இருப்பது போதை சூன்யங்களுக்கு தெரியாமல் போகலாம். இந்த சாயலில் பெயர் கொண்டதால்தான் ஷகீலாவும் புகழடந்தார் என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். என் உள்ளங்கவர் கள்வன் "டக்கீலா" வை பற்றி சிறப்பு "ஆய்வுக்கட்டுரை" எழுதுவதைப் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் பதிவு டக்கீலாவையும் ஷகீலாவையும் எனக்கு அறிமுகம் செய்த  பாரதிராஜாவுக்கு சமர்ப்பணம்.

Agave_tequilana0

       மெக்ஸிகோ நாட்டில் ஜலிஸ்கோ என்ற மாகானத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் தான் டக்கீலா. அந்த ஊரின் மண், மேலே படத்தில் காணும் "ப்ளூ ஏகேவ்" என்ற செடி வளர ஏற்றதாக இருந்தது. இதிலிருந்தே அந்தச் செடியில் இருந்துதான் டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் அந்த செடியிலிருந்துதான்  டக்கீலா தயாரிக்கப்படுகிறது என்பதை அறிக. கி.பி. 1608 ஆம் ஆண்டு தான் டக்கீலா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இன்றும் உலகில் உண்மையான டக்கீலா என்றால் அது மெக்சிகோ நாட்டில் இருந்துதான் வரும். மற்றவை எல்லாம் நம் டாஸ்மாக் தர கிங்ஃபிஷரே. எப்படி   மெக்ஸிகோ என்றால் டக்கீலாவோ அதே போல் கேரளா என்றால் ஷகீலா என்றால் அது மிகையல்ல.

    ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் செடிகள் வளர்க்கப்பட்டாலும்,  வளர்ந்து வரும் டக்கீலா ரசிகர்கள்  தேவையை பூர்த்தி செய்ய மெக்ஸிகோ நாட்டால் முடியவில்லை. எனவே டூப்ளிகேட் ரக டக்கீலாக்கள் உலா வரத் தொடங்கின. ஷகீலா கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் சர்மிளி போற இதர நடிகைகளை உருவாக்கியதை மேலே சொன்ன டக்கீலா கதையோடு ஒப்பீட்டு பார்ப்பது இந்த இடத்தில் சாலச்சிறந்தது.

        டக்கீலா பாட்டிலுக்குள் மண்புழு இருக்கும் என்பது பரவலாக சொல்லப்படும் ஒரு கதை. அது உண்மையல்ல. ஒரு முறை கவணக்குறைவின் காரணமாக செடியிலிருந்த புழு பாட்டிலுக்குள் வந்துவிட்டது. புழு இருக்கும் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டக்கீலா தரம் குறைந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு டக்கீலா தயாரிக்கப்பட்டு, அது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ($225000) விற்கபட்டது. அது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவாக கின்ன்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஒரு சமயத்தில் ஷகீலாவின் படங்கள் மலையாள சூப்பர் ஸ்டாரின் படங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து அதை எதிர்த்து மலையாள படவுலகமே சதிச் செய்ததை வரலாறு தெரிந்தவர்கள் அறிவர். அதுவும் கின்ன்ஸில் இடம் பிடித்திருக்க வேன்டும் என்றாலும் யாரோ செய்த சதியால் இடம்பெறாமல் போனது.

       இந்த ஆராய்ச்சிப் பதிவு நீண்டுக் கொன்டே போவதால் அடுத்தப் பாகத்தை பிறகு எழுதலாம் என நினைக்கிறேன். அடுத்த பதிவில்தான் டக்கீலாவை எப்படி அடிக்க வேண்டும் என்ற சுவையான தகவல்கள் இடம்பெறும்.மேலும், வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களைப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அவைகளுக்கும் அடுத்தப் பாகத்தில் பதில் எழுதப்படும் என்பதை "ஸ்டெடியாக" சொல்லிக் கொள்கிறேன்.

Sep 26, 2008

மப்பில்லாம உளறினா எப்படி இருக்கும்?

45 கருத்துக்குத்து

      

     நான் கடந்த வந்த பாதையை சற்று திரும்பி பார்க்க இந்த தனிமை எனக்கு பல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தது. நேற்றைய வார்த்தைகளால் என்னை உச்சரித்துக் கொள்வதும் உத்தமம் என்றே எனக்கும் தோண்றியது. யோசித்துப் பார்க்கையில்தான் நான் எத்தனை மோசமானவன் என்று எனக்கே தெரிந்தது.

     என் வண்டியில் அடிபட்ட நாய்க்குட்டி ஒன்று... இன்றும் என்னை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கல்லின் மீது மோதியது போல சென்றிருக்கிறேன் நான் அன்று.

      என் நெருக்கமான நண்பர்களின் பிறந்த நாளிற்கு வாழ்த்த மறந்திருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற பலரின் திருமணத்திற்கும் செல்லவில்லை. சென்ற திருமணங்களிலும் இருக்க வேண்டிய நேரங்களில் "முழுவதுமாய்" இருந்திருக்கிறேன்.

     உணவகங்களில் கை கழுவிய பின் தெறித்த நீர்த்துளிகள் பிறரின் மேல் பட்ட போதும் மெளனம் பேசியிருக்கிறேன்.

     என்னைப் பார்த்தும் சிரித்த சில குழந்தைகளை கொடூரமான சிரிப்புடன் பேயாகி பயமுறுத்தி இருக்கிறேன்.

    பள்ளி நாட்களில் செய்த நாச வேலைகளை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. கல்லூரி காலம். ம்ஹூம். வேண்டாம்.

    என்னை நம்பி வரத் தயாராயிருந்த என் தேவதையை அவள் பெற்றோரின் பெயராலே மனமாற்றி பிரிந்திருக்கிறேன். போதாதென்று உபயோகமில்லாத என் உயிரின் பெயரால் இன்னொருவருக்கு சொந்தமாக்கி இருக்கிறேன்.

     திரும்பி பார்த்தால் வெறும் பாலைவனமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. என்றாவது ஒரு நாள் புல்வெளியும் தெரியுமென நமபிக்கை இருக்கிறது.

Sep 24, 2008

புட்டிக்கதைகள்-3

21 கருத்துக்குத்து

       ஏழுமலையின் முதல் சாகசத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து விட்டு வாருங்கள்.

       படிப்படியாய் முன்னேறி ஏழுமலை பீரை ராவாக(?) அடிக்க ஆரம்பித்து காலம் அது. சனிக்கிழமை ஆனால் எப்படியாவது காசு ரெடி பண்ணிவிடுவான். அன்று ஒரு பப்பும் வேகாமல் மெஸ்சுக்கருகில் இருந்த கிணத்தின் மேல் அமர்ந்திருந்தோம். இரண்டு முதலாமாண்டு மாணவர்கள் எங்களை கண்டு பயந்து சென்ற விதம் எனக்கு சந்தேகம் வர ஏழுமலையை ஏவினேன். அவர்களை லபக்கென கவ்வி கொண்டு வந்தான்.

   "என எல்லாம் ரெடியா? முடிச்சிட்டிங்களா இல்லையா? என்றேன். அனைவரும் ஒன்றும் புரியாமல் முழிக்க பாலாஜி மட்டும் என் திட்டமறிந்து அவர்களை மிரட்ட தொடங்கினான். நாங்கள் வேறு எதற்கோ திட்டமிட, அவர்களோ எங்கள் வேலையை சுலபமாக்கினார்கள். " நான் வேணான்னு சொன்னேன் சார்( சீனியர்). இவன்தான் அடிக்கலாம்னு சொன்னான்" என்றான் அவன். இப்போது ஏழுமலையின் முகத்தில் ஆற்காடு வீராசாமி மின்வெட்டால் சேமித்த அத்துனை மின்சாரமும் மொத்தமாய் எரிவது போல் பிரகாசம்.

  "டேய் என்னடா அடிக்க போறீங்க" என்றான்.

   தண்ணி" என்று அவன் இழுக்க,

   "வாங்கிட்டீங்களா" என்றான் ஏழுமலை.

   சுரேஷ் வாங்கிட்டு வந்துட்டான் சார். ரூம்ல வெய்ட் பண்றான். நான் சாப்பாடு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்"

  "என்னடா வாங்கிட்டு வந்தான் குவார்ட்டரா ஆஃபா"?

  "சுரேஷுக்குதான் சார் தெரியும். எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா பெரிய பாட்டில்தான் சார். ஃபுல்லுதான்”

  " நீங்க மூணு பேரு ஃபுல் அடிப்பீங்களாடா?"

  இவன்தான் வச்சி வச்சி அடிக்கலாம்னு சொன்னான் சார்".

  ச‌ரி ஓக்கே. நாம எல்லாம் சேர்ந்து அடிக்கலாம்"

     மொத்தம் ஆறு பேர். அதில் மூணு பேர் புதுசு என்பதால் ஒரு ஃபுல் போதும் என்றேன் நான். ஏழுமலையோ குருபக்தியுடன் நடராஜையும் அழைத்து வர சென்றான். முதலில் அவர்களை அனுப்பிவிட்டு ஒவ்வொருத்தராக அந்த அறைக்குள் சென்றோம். அனவரும் வந்தபின் "எடுடா" என்றான் ஏழுமலை ஏகாந்தமாய்..

    பொட்டியை திறந்தான். உள்ளே ஒரு "ஃபுல்" கல்யானி பியர் அழகாய் இருந்தது. நடராஜ் சிரித்துக் கொண்டே வெளியேறி விட்டான். ஏழுமலை மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களை முறைத்துப் பார்த்தான். கோபமாக அவனிடம் " இதுதான் ஃபுல்லா? மிக்ஸ் பண்ண எதுவும் வாங்கலையாடா ?" என்றான்.

    சுரேஷ் சன்னமான குரலில் சொன்னான் " யாராவாது பீர் கூட தண்ணி கலந்து அடிப்பாங்களா சார் ?"

     நாங்கள் ஏழுமலையை பார்த்தோம். ஆழ்வார் அஜித் போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தான்.

Sep 23, 2008

புட்டிக்கதைகள் - 2

13 கருத்துக்குத்து

   நாங்க முதல்ல தண்ணியடிச்சத இங்க போய் பார்த்துட்டு வந்துடுங்க..

 

ஏழுமலை :  மச்சி, இன்னைக்கு என்ன ட்ரீட் உண்டா? எங்க?

 நான்:  மச்சி நீ என்ன பண்ணு, நம்ம நெப்போலியன கூட்டிக்கிட்டு அவனோட வின்டேஜ் கார்ல‌ நேரா நம்ம மானிட்டர் ரவி கிட்ட போ. அவரு 5000 தருவாரு. நான் 6000 கேட்டேனு சொல்லு. தந்தாருன்னா வாங்கிட்டு அதுல 2000 மட்டும் வர்ற வழியில டீச்சர் கல்யானிகிட்ட கொடுத்திடு. மீதி பணத்துக்கு ஒல்ட் மங்க் ரெண்டு ஃபுல், வோட்கா ஒரு ஆஃப், ஒரு கேஸ் கிங் ஃபிஷர் பியர் அப்புறம் சைட் டிஷ் எல்லாம் வாங்கிட்டு 8 pm க்குள்ள மேன்ஷன் அவுஸுக்கு வந்துடு. நான் நம்ம ஜானி வாக்கர கூட்டிக்கிட்டு அப்படியே நம்ம பையன் டகீலாவையும் பாம்பேயையும் பிக் அப் பண்ணிட்டு வந்துடுறேன்.. அபப்டியே நம்ம மார்க்கோபோலவ அவனோட புல்லட்டுல வர சொல்லிடுடா...

  ஏழுமலை: ங்கொய்யால எனக்கு ட்ரீட்டும் வேணாம் ஒன்னும் வேணாம்டா சாமி...

தொடரும்

Flash News :பதிவரை வாழ்த்திய டீ.ஆர்.

23 கருத்துக்குத்து

(இதுக்கெல்லாம் ஒரு அசாதாரணமான துணிச்சல் வேணுங்க.  அட  அவருக்கு இல்லைங்க, என் வலைல இது போடுறதுக்கு)

வந்துட்டேன்டா டீ.ஆரு‍
என்னை எதிர்க்க இங்க யாரு?
சொல்லப் போறேன்டா வாழ்த்த
நம்ம சகா கார்க்கிய பார்த்து..

நம்ம தம்பி பேரு கார்க்கி
ஏரியால பட்ட பேரு பொறுக்கி
ஐரோப்பால இருக்கு துருக்கி
ரைமிங்கா முடிக்கனும் நறுக்கி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

முதல்ல பார்த்தப்போ இவன் வயசு பதினாலு
ஆனா அப்பவே இவரு ரொம்ப பெரிய ஆளு..
சின்ன வயசுல இவன் என்ன விட ரொம்ப வாலு
புல்ல போட்டா போதும் மாடு த‌ரும்  பாலு..

பத்து வயசுல சொன்னாரு முதல் கவிதை
அது அவரு போட்ட காதலுக்கான விதை
இன்னைக்கு அவரு எழுதாம விட்டது எத?
அடுத்த முதல்வருதான் சொல்றாரு இத..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

"பகல்ல வெள்ளையடிக்கிறான்
நைட்ல‌ கொள்ளையடிக்கிறான்
கேட்டா பல்லுடைக்கிறான்.. "

இத எழுதனப்ப இவர் வயசு பத்து
அப்பவே சொன்னேன் இவர் முத்து
கவிதையுலகத்துக்கு பெரிய சொத்து
ஒத்துக்காதவங்க கொஞ்சம் ஒத்து...

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

சில தகவல்களும் விஜய்காந்த் ஜோக்ஸும்

41 கருத்துக்குத்து

     ரொம்ப நாளாச்சு.. இப்படி என் பிறந்த நாள் தொடங்கி. யாரும் கூட இல்லை.. ஆனாலும் இருப்பது போல் நினைக்க வைத்து விட்டார்கள் நம் பதிவுலக நண்பர்கள். இங்கே வாழ்த்தியது மட்டுமில்லாமல் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளை சொல்லி என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். வேறு என்ன சொல்ல முடியும், ரொம்ப நன்றிங்க.. உங்களை மகிழ்விக்க "இனி நான் பதிவெழுத போவதில்லை" என சொல்ல ஆசைதான். ஆனாலும், சாரிங்க..

********************************************************

    பரிசலுக்கு எதிர் பதிவு எழுதி வறுத்ததில் சிறந்தவர் யார் என ஒரு ஓட்டுப்பொட்டி வைத்திருந்தேன். எதிர்பார்த்தது போல் குசும்பன் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நானும் அப்துல்லாவும் தலா 18 வாக்குகளும், தாமிரா 15 வாக்குகளும் பெற்றோம். இருந்தும் பரிசலின் பொறுமைக்கு இது எல்லாம் பத்தாது, இன்னும் வீரியத்துடன் யாராவாது ஏதாச்சும் செய்யனும் பாஸ் ( நர்சிம்மை கேட்கணும்) என்பதே வாசகர்கள் தீர்ப்பாக இருக்கிறது. ஏனெனில் 15 நாட்கள் நடைபெற்ற இதில் வெறும் 66 பேரே வாக்களித்துள்ளனர்.

********************************************************

     ஓ!!!! தலைப்பு வச்சதே மறந்து போச்சு. கடந்த தேர்தலில் நான் தே.மு.தி.க விற்குதான் வாக்களித்தேன்.(சொல்லக்கூடாதோ). ஏன்டா என்ற பாலஜியிடம் அப்பவாது இவன் நடிக்கிறத நிறுத்தட்டும்டா" என்றேன். பின் அது ஒரு பிரபலமான எஸ்.ம்.எஸ்ஸாக வலம் வந்தது. சொன்ன நம்பவா போறிங்க?

  மற்றொரு ஜோக்.(ஃபர்ஸ்ட் சொன்னது ஜோக் இல்லையா???). விஜய்காந்த் தனியாளாக சட்டமன்றத்தில் நுழைவதை கண்ட கலைஞர் " என்னப்பா. தனியாவா வந்திருக்க?" என்றாராம். அதுக்கு நம்ம புரட்சி கலைஞர் " பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் தனியாத்தான் வரும்" என்றாராம்.  கோவப்படாதீங்க லக்கி,  இந்த ஜோக் ஜூ.வில தான் படிச்சேன்.(இப்போ என்ன பண்ணுவீங்க)

   சட்டமன்ற தேர்தல் சிவாஜிக்கு முன்னாடியே வந்துச்சே, அப்போ எப்படி விஜய்காந்த் இந்த வசனம் பேசினார் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், இரண்டு விஷயத்திற்கு நீங்கள் பெருமை கொள்ளலாம்.

1) சிவாஜிக்கு முன்னாடியே தேர்தல் வந்தது என்ற சந்தேகம் உங்கள் ஞாபக சக்தியையும், நாட்டின் மேல் கொண்ட‌ அக்கறையையும் காட்டுகிறது. பெருமைப்படுங்க..

2) அப்படி இல்லைனா, இந்த வசனத்தை ரஜினிக்கு முன்பே கிரி படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேசினார் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் தமிழ்சினிமா குறித்த உங்கள் அபார ஞானத்திற்கு பெருமைப்படுங்கள். (சேலைதான் என்றாலும் நமீதா கட்டுவதற்கும் கெளசல்யா கட்டுவதற்கும் வித்தியாசம் இருக்குதில்ல?)

********************************************************

   டிஸ்கி: இன்று ஆனி புடுங்க ஆஃபிஸ் வந்திருந்தாலும், ஒரே குஜாலா இருப்பதால் அடுத்தடுத்து பதிவு எழுதலாம் என்றிருக்கிறேன். பொருத்தருள்க.

Sep 22, 2008

நூறாவது பதிவும் மற்றுமொரு பிறந்த நாளும்

48 கருத்துக்குத்து

விளம்பரம் இல்லை.
விண்ணதிர
வாணவேடிக்கை இல்லை..
வழக்கமாய் வரும்
நண்பர்களின்
நள்ளிரவு வாழ்த்துச் செய்திகளுமில்லை..
உன்
நினைவுகளோடு என் காதலை மட்டும்
சுமந்து கொண்டு
நான் மட்டும்
தனியே பயணிக்கிறேன்
வாழ்க்கையில் பின்னோக்கி...

(இது கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது எழுதியது.)

  ஆம்.. நாளையோடு எனக்கு 26 வயதாகிறதாம்..அதோடு இதுதான் எனது நூறாவது பதிவும். எதற்காகவோ எழுத தொடங்கிய நான் இன்று பாதை மாறி போய்க் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை, சுகமான பயணம்தான்.

விழியெட்டும் தூரம்வரை
இலக்குகளற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னைத் தனியே நடக்க விட்டு
கையசைத்தவளே...

இதோ பார்..
என் பாதையில் ஒளி வந்துவிட்டது..

    ஒளி தந்த நல்உள்ளங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லி பயணத்தை தொடர்கிறேன். என் எழுத்துகளை படித்தும் பின்னூட்டமளித்தும் மற்றும் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அத்துனை பேருக்கும் நன்றி. மேலும் 20000 ஹிட்ஸை தொட உதவியதற்கு மற்றொரு நன்றி.

என்றென்றும் அன்புடன்,

கார்க்கி.

நான் எழுதியதில் எனக்கு பிடித்த சில பதிவுகளின் சுட்டி.

1) தற்கொலைகள்.

2) நான் நான்தான்

3) ஏதாவது செய்யனும் பாஸ்.

4) நான் ரசித்தப் பாடல்.

5) இட்லி சாம்பார்.

மரண மொக்கைனா என்னங்க?

56 கருத்துக்குத்து

        இதை முழுவதுமாய் படிப்பவர்களுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இலவசம். நான் போடும் மொக்கை எல்லாம் மரண மொக்கை என்ற தாமிரா, தயவு செய்து இதைப் படிக்காமால் இருந்துவிடுவது நல்லது.

     நான் கல்லூரியில் படித்த போது யாரவாது ஒருவனை சிரிக்காமல் ஒரு அரை மணி நேரம் மொக்கை போட வேண்டும் என ஆசை. என் நண்பன் ஒருவனின் திட்டப்படி முதலாமாண்டு மாணவன் ஒருவனை பகடிவதை செய்வதென முடிவு செய்தோம். துணைக்கு ஒரு குவார்ட்டரை எடுத்துக் கொண்டு ஐந்தாம் எண் அறைக்குள் நுழைந்தோம். எனக்கு தெரியாத மாதிரி என் நண்பன் ஒரு மாணவனிடம் "அவன் என்ன பேசினாலும் கேட்க வேண்டும். சிரிக்க கூடாது.போதும் என சொல்லக் கூடாது. அவன் முடிச்சதுக்கப்புறம், நான் கேள்வி கேட்பேன்" என்றான். பலியாடு போல அவன் தலையாட்ட சரக்கடிப்பதோடு என் உரையையும் துவங்கினேன்.

      ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா கார்க்கி ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற  ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும்  அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

       இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு நான் சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான். கதை முடிஞ்சது நினைச்சிட்டான் போல. இருடா போட்டா லைட்ட எல்லாம் நிறுத்த வேணாமானு கேட்டேன். பாவம் மயங்கி விழுந்துட்டான்.

     அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு......... (to be continued)

Sep 17, 2008

இப்படி பேசறதுக்கு தமிழ்ல என்ன பேரு?

52 கருத்துக்குத்து

kelivi

த‌ற்கொலை : 

     கோழைக‌ள் எடுக்கும் தைரிய‌மான‌ முடிவு

க‌ம‌ல் ப‌ட‌ம் :  

     வ‌ழ‌க்க‌ம் போல் வித்தியாச‌மாய் இருக்கும்.

ரித்தீஷ் படம் :

      நல்ல மொக்கை

பொன்மொழி : 

     மாற்ற‌ம் ஒன்றே மாறாத‌து.

டிராவிட் டாஸ் ஜெயிச்சா : 

     க‌ரெக்டா த‌ப்பான‌ முடிவு எடுப்பாரு..

என் இட்லி சாம்பருக்கு வந்த கமெண்ட் : 

     சீரியஸ் நகைச்சுவை

Sep 16, 2008

கவிதை எழுதுவது எப்படி?டிப்ஸ் பதிவு

31 கருத்துக்குத்து

     

   இதுக்கும் இந்த ப‌திவுக்கும் தொடர்ப் இருக்கானு படிச்சிட்டு சொல்லுங்க‌

   எல்லோரும் நினைப்பது போல் கவிதை எழுதுவது அவ்வளோ ஈசி இல்லை, கவிதை எழுத ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.இதில் நல்லது,கெட்டது என்று வித்தியாசம் கிடையாது. யார் வேண்டும் என்றாலும் கவிதை எழுதலாம், என்ன எழுத‌ தனி தில் வேண்டும்.

    நான் சொல்லப்போவது அய்யனாரின் கவிதை பற்றி அல்ல, டீ.ஆர் அல்லது மொக்கை கவிதை எழுதுவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் அங்க இங்க,தம்பி கம்பி போட்டு எழுதிவிடலாம் என்று, அதில் அத்தனை கிக் இருக்காது. நம் திறமையை காட்டி புதிதாய் வார்த்தைகள் உபயோகித்து எழுதினால்தான் ஒரு கிக் இருக்கும்.

       கவிதைகள்.. அவை என் வாழ்கையோடு பின்னிப்பினைந்தவை,  காதல்னாலும் சரி, காமம்னாலும் சரி, பதிவானாலும் சரி கவிதைகள் எனக்கு பிடித்தவை. பதிவில் "மங்களூர் சிவாவை டீ.ஆர் கவிதையால் வாழ்த்தினார்" என்று எழுதியது செம ஹிட் ஆனது, அதை போல் ஜே.கே.ஆர். என்னும் கவிதையை 10 விதமாக போட்டோ புடிச்சு போட்டது சூடான இடுகைக்கு அழைத்து சென்றது இப்படி என் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்ட கவிதையை பற்றிய கதை!!!

       முன்பே சொன்னது போல் கவிதை எழுதுவது ஒரு கலை, அந்த கலை சிறுவயது முதலே என்னிடம் இருந்தது இதைதான் பார்ன் ஜீனியஸ் என்று சொல்லுவாங்க போல்.

      எங்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஒரு கெட்டப்பழக்கம் கவிதை போட்டி சமயத்தில் மட்டும் பெஞ்சின் இரு மூலைகளில் பசங்களையும், நடுவில் ஒரு பெண்ணையும் உட்காரவைத்து முகத்தை மூடி விடுவார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் பார்த்து கவிதை எழுத முடியாதாம், (அப்பவே குறிப்பா சொல்லி இருக்காங்க பெண்கள் வாழ்கையில் முன்னேற உதவமாட்டார்கள் என்று) .

      உட்காந்த பிறகு பார்த்தால் நாம ”உ” என்று பிள்ளையார் சுழி, முருகன் துனை எல்லாம் மேலே எழுதிவிட்டு பெயரை எழுதி, நம்பரை எழுதி முடிக்கும் முன்பே பக்கத்தில் இருக்கும் எனிமி(பொண்ணு), சார் என்று கூப்பிடும் என்னன்னு பார்த்தால் அடுத்த தலைப்பை கேட்கும், அடப்பாவி நாம இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள முதல் கவிதைய முடிச்சிட்டியா என்று நினைச்சுக்கிட்டு என்னத்த எழுத ஆரம்பிக்கலாம், என்று யோசிக்கும் முன் அடுத்த தலைப்ப‌ கேட்கும் அந்த புள்ள.

      இருந்தாலும் ஒரு கூடப்படிக்கும் புள்ளைய பக்கத்தில் வெச்சுக்கிட்டு எழுதாம எப்படி உட்காந்து இருப்பது? அது இழுக்கு என்று எழுத ஆரம்பிச்சா பேனாவுக்கு பேப்பரில் ஏதோ ஸ்பீட் பிரேக் இருப்பது போல் நகரவே நகராது.

இருந்தாலும் பேப்பரை நிறப்பி அடுத்த கவிதை தலைப்பு  வாங்கனுமே, அதுக்கு நான் கண்டு பிடித்த டெக்னிக் பேப்பரின் நான்கு புறமும் ஸ்கேல் மொத்தத்துக்கு இடம் விட்டு அழகாக ஸ்கெட்ச் வைத்து மார்ஜின் போட்டு பொட்டி கட்டினால்
எழுத வேண்டிய இடம் டக்குன்னு சின்னதாகிவிடும். எல்லோரும் எழுதி முடிச்சுதான் டெக்ரேட் செய்வாங்க ஆனா நாம எல்லாம் வெறும் பேப்பரையே டெக்ரேட் செஞ்சவோம். அதுபோல் எழுதும் பொழுது ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் ஒரு பத்தியே எழுதும் அளவுக்கு இடம் விடுவேன்.

டெக்ரேட் எல்லாம் செஞ்சு முடிஞ்ச பிறகு பட்டாம்பூச்சி என்று இருக்கும் தலைப்புக்கு 
"பட்டர்ஃப்லைனு ஒரு சமையல் குக்கர்
அது எப்பவும் பன்னாது மக்கர்
அதுல இருக்கும் ஒரிஜினலு ஸ்டிக்கர்
அதுல சமைச்சா டேஸ்ட் டாப் டக்கர்"

என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் எழுதி பேப்பரை நிர‌ப்புவேன். பக்கத்தில் இருக்கும் புள்ள அடே இவனும் என்னமோ எழுதி இருக்கானே முதல் தலைப்புக்கு  என்று பார்க்கும். அப்ப நம்ம கெத்தா எழுந்திருச்சு சார் அடுத்த தலைப்பு என்று கேட்கும் பொழுது அப்படியே கிளாசே நம்ம திரும்பி பார்க்கும் பாருங்க! நொம்ப பெருமையாக இருக்கும், இதுக்காகவே என்ன என்னமோ எழுதி அடுத்தடுத்த தலைப்ப கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்துவேன்.

கவிதை எழுத‌ நான் செய்த டெக்னிக்ஸ்

1) ஒன்னுங்கீழ ஒன்னு எழுதனும் (அதானே கவிதை)

2) ஒருவரிக்கும் அடுத்தவரிக்கும் இடையில்

இம்புட்டு கேப்பாவது இருக்கனும்.

3) தலைப்ப மட்டும் எழுத வேண்டும்.

4)ஆங்காங்கே டன்டனக்க டனக்குடக்க என்றும் எழுத வேண்டும்.

இப்படி கஸ்டப்பட்டு எல்லா டெக்னிக்கையும் உபயோகித்து எழுதிய பிறகு பரிசு கொடுக்கும் பொழுது மொக்கை கவிதை எழுதிய நீ எதுக்குடா இத்தனை கவிதை எழுதின‌ என்று அடி விழும் பொழுதுதான் கொஞ்சம் வெட்கமாக இருக்கும், பிறகு அதுவும் பழக்கம் ஆகிவிட்டது.

தலைவலிக்கு பக்க விளைவுகள் இல்லாத ஒரு மருந்து(100% உத்தரவாதம்)

41 கருத்துக்குத்து

         எனக்கு தெரிஞ்ச ஒருவர் தலைவலிக்கும்  முதுகுவலிக்கும் ஒரு வைத்தியம் சொன்னார். அதை என் நண்பன் ஒருவனிடம் சொன்னேன். அப்படி செய்த அவனுக்கு தலைவலி சுத்தமாக போய்விட்டதாக கூறினான்.  அதைக் கேட்ட இன்னொரு நண்பன் அவனுக்கும் அந்த வைத்திய முறையை சொல்லுமாறு வந்தான். அவனிடம் பேசியது அப்படியே இதோ...    

மச்சி, உனக்கு ஏதோ வைத்தியம் தெரியுமாமே? எனக்கு தலைவலி உயிர் போதுடா... ஏதாவது செய்..

       வேணாம் சாமீ.. நான் சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிக்க வருவ..

        டேய், உன் வைத்தியம் வொர்க் அவுட் ஆவுதுனு பாலாஜி சொன்னான்.. ப்ளீஸ் மச்சி.. தாங்க முடியல...

        காலைல, அஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்? பரவாயில்லையா?

        இந்த வலியால நான் தூங்கறதே இல்ல... நீ மேல சொல்லு 

      அஞ்சு மணிக்கு எழுந்த உடனே...

      பல் தேய்க்கணுமா?

      அவ்ளோ கஷ்டபடதேவயில்ல... எதுவும் செய்ய கூடாதுனு சொல்ல வந்தேன்... எழுந்து‌ அப்ப‌டியே க‌ட்டிலே நின்னு க‌ண்ணு ரெண்டையும் மூடிக்கிட்டு ,ஒரு கைய‌ நெஞ்சு மேல‌ வ‌ச்சிக்கிட்டு இன்னொரு கைய‌ த‌லைக்கு மேல‌ தூக்க‌ணும்.

         டேய் என்ன‌ க‌லாய்க்கிறியா?

       இதுக்குதான் நான் சொல்ல‌ மாட்டேனு சொன்னேன். போடா போ இந்த‌ த‌லைவ‌லியோடு ஏக‌ன் வ‌ரும்.. போய் பாரு..

        அப்புற‌ம் நீ சொல்ற‌த‌ கேட்டா அப்ப‌டித்தான் இருக்கு.. கோச்சிக்காம‌ மேல‌ சொல்லு...

        இப்ப‌டி நின்னுக்கிட்டு எந்த இடம் வலிக்குதோ அந்த இடத்த மனுசுல நினைச்சிக்கிட்டு இந்த‌ ம‌ந்திர‌த்த‌ சொன்னா வ‌லி சும்மா ச‌த்ய‌ம் விஷால் மாதிரி ப‌ற‌ந்து போயிடும்..

         ச‌ரி, அந்த மந்திரத்த சொல்லு...யார்க்கிட்டேயும் சொல்ல‌க்கூடாதா?

      சொல்றேன்டா.. இதுல என்ன ரகசியம்.. இத நீ யார்கிட்ட வேணா சொல்லலாம்.. எத்தணை பேர் கிட்ட நீ சொல்றீயோ அவ்ளோ நல்லது..

       அட‌, அப்ப‌டியா? த‌லைவ‌லி நின்னா போதும்..

         ம்ம்ம்... ச‌ரி,ரொம்ப‌ மொக்க‌ போடுறேன்.. மந்திர‌த்த‌ சொல்றேன்..


வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் வாழ்க...முகவை மைந்தன் மென்மேலும் வளர்க..

    என்ன ஒன்னும் தெரியலையா? அப்படியே செலக்ட் பண்ணி பாருங்க.. மந்திரத்த இந்த அளவுக்கு கூட ஒளிச்சு வைக்கலைனா எபப்டி?

Sep 15, 2008

பரிசலின் திட்டம் எனக்கு தெரியும்

26 கருத்துக்குத்து

        நேற்று மாலை பரிசலை அவரது அலைபேசியில் அழைத்தேன். இதுதான் முதல் தடவை,அவரிடம் மட்டுமல்ல இதுவரை எந்த பதிவரிடமும் நான் பெசியதில்லை. அவரின் ஒல்லியான, சாந்தமான புகைப்படங்களை பார்த்து அவரின் குரல் "டாடி டாடி" என்ற ஜானகியம்மா குரலை போல் மிருதுவாக இருக்கும் என் நினைத்தேன். எதிர்புறத்தில் நான் நினைத்ததுக்கு மாறாக ஒரு வெண்கலகுரல்.. ஒரு நொடி பரிசல்தானா என்று கேட்க நினைத்தேன். பின் சுதாரித்து கொண்டு, எல்லோருக்கும் என்னைப் போல எல்லாமும் அழகாய் அமையாது என்று "அவள்" சொன்னது நினைவுக்கு வரவே கேட்காமல் விட்டுவிட்டேன்.

     பின் ஆரம்பித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சு ,45 நிமிடங்கள் நீடித்தது. திருப்பூரின் சாய தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை யாருக்கும் எந்த ஒரு தொல்லையுமில்லாமல் நகரை விட்டு வெளியேற்ற பரிசல் தயாரித்த திட்டத்தை பற்றி பேசினோம். விரைவில் அது நிறைவேற்ற ஆக வேண்டிய காரியங்களை பட்டியலிட்டார். அது மட்டுமில்லாமல், சென்னையின் கூவம் நதியை சுத்தப்படுத்துவது பற்றியும் ஒரு திட்டத்தை தயாரித்து கொண்டிருப்பதாக கூறினார்.

        இதற்கெல்லாம் அவரை பாராட்டிவிட்டு, வலையுலகத்தை பற்றிய பேச்சை தொடர்ந்தோம். வலை மூலம் தமிழ் வளர்ப்பதைப் பற்றியும்  ஒரு சில திட்டங்கள் கை வசம் வைத்திருக்கிறார். என்னைப் போன்றவர்கள் எழுதாமல் இருந்தாலே போதும், தமிழ் வளரும் என்ற அவரின் திட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை அவர் ஏற்று கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டார். பின் தமிழ் செம்மொழியானதில் அவரின் பங்கு குறித்து அவர் பேசியதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

       தற்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பது குறித்த திட்டத்தை தயாரித்து கொன்டிருப்பதாக அவர் சொன்னதை கேட்டு நான் அகமகிழ்ந்தேன். இது போன்று பலவேறு பிரச்சனைக்கும் திட்டங்கள் தயாரிக்கும் திட்டத்தை எப்போது ஆரம்பித்தீர்கள் என்ற என் கேள்விக்கு "நினைவு தெரிந்த நாள் முதலாய்" என்ற‌ அரிய பதிலை சொன்னார் பரிசல். என்னதான் இருந்தாலும் வீரப்பனை பிடிக்கவும் ஒரு திட்டம் வைத்திருப்பதாய் அவர் சொன்னதை கேட்டு நான் சிரித்திருக்க கூடாது.அவர் இறந்து விட்டார் என் நான் சொன்னவுடன் " நிஜமாகவா" என்று வாய்பிள‌ந்த அவர், இந்த திட்டத்தை வீணாக்க கூடாது.எனவே இன்னொரு வீரப்பனை உருவாக்க ஒரு திட்டம் உருவாக்க போவதாக சூளுரைத்தார்.

       திட்டம் போட்டே அவர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறினார். ஒரு வேளை நான் அழைக்காமல் இருந்தால் அவரே என்னை அழைக்கவும் திட்டமிட்டு இருந்ததாக சொன்னார். அரசாங்கம் சட்டம் பொடுவதற்கு முன்னால் திட்டம் போட வேண்டும் என்பது அவரது வாதம். ஒருவரை திட்ட போவதற்கு முன்னால் கூட திட்டம் போட்டு செல்ல வேண்டும் என்ற பொன்மொழியையும் எனக்கு போதித்தார். அப்போதே நான் திட்டமிட்டு விட்டேன். அவரை திட்ட அல்ல. வலை தொடங்க வேண்டும் என்று அவர் திட்டமிட்ட கதையை அவர் சொல்லத் தொடங்கிய போது திட்டமிட்டே நான் அலையை துண்டித்தேன். நான் அப்படி செய்யக்கூடும் என அவர் ஏற்கனவே யூகித்து, அப்படி செய்யும் பட்சத்தில் மீண்டும் அவர் என்னை அழைக்க திட்டமிட்டு வைத்திருந்தாராம். அவரின் திட்டத்தை புரிந்த கொண்ட நான் வேறு திட்டம் போடும் வரை "ம்" போட்டு கொண்டே இருந்தேன்.

       நல்ல வேளையாக அவரின் அலைபேசியில் "சார்ஜ்" குறைந்தது. அவர் வீட்டில் அப்போது மின்வெட்டு இருக்குமாறு திட்டமிட்ட ஆற்காடு வீராசமிக்கு மனதுக்குள் ஒரு நன்றி சொன்னேன். மின் பற்றாக்குறையை போக்கவும் அவரிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதைப் பற்றி பின்னொரு நாள் பேசுவதாகவும் கூறினார். பேசும்போது மட்டும் திட்டமாக பேசாமல் விரிவாக பேசுவது ஏன் என்று நான் கேட்ட போது அவரின் செல்பேசி ஆஃப் ஆகிவிட்டது. அது குறித்தும் ஒரு பதிவு போட அவர் திட்டமிடுவார் என் நினைக்கிறேன்.

        பின்னுட்டமிட திட்டமிட்டு இருப்பவர்கள் உடனே கும்மியை ஆரம்பிக்கலாம். ஆனால் எழுதுவதற்கு முன் என்ன எழுத போகிறீர்கள் என திட்டமிட்டு கொல்லுங்கள்..மண்ணிக்கவும், கொள்ளுங்கள்.

Sep 12, 2008

நாயகன் Vs நாயகன் (J.K.ரித்தீஷ் ஸ்பெஷல்)

32 கருத்துக்குத்து

       வீரத்தளபதி ஜே.கே.ஆரின் "நாயகன்" உலகெமங்கும் வெற்றி ஓட்டம் ( நமக்கு வெற்றி நடை எல்லாம் சும்மாங்க)ஓடிக்கொண்டிருக்கிறது.நமது சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து பதிவர்கள் பலரும் (லக்கி, உண்மைத்தமிழன், கோவி.கண்ணன் ஆகியோர் அதில் முக்கியமானோர்) விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக சங்கத்தலைவி ராப் அறிவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் "நாயகனை" 1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாயகனோடு ஒப்பீட்டு அலசுவதே இந்த பதிவின் நோக்கம்,

  முதலில் இந்த இரு படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பார்ப்போம்.

1) இரண்டு படங்களுமே ஹிட் என்பது முதல் ஒற்றுமை.

2) இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவின் மைல்கல் என்பது விமர்சகர்களின் கருத்து.

3)இந்த படங்களுக்கு பின் இருவரின் ரசிகர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்தது.

4)இரண்டு படங்களுமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிறார்கள்.

5) இரண்டு படங்களுக்கும் சமீபத்தில் தான் நம்ம தல லக்கி விமர்சனம் எழுதினார்

6) இந்த படத்திற்காக கமல் அவர்கள் தேசிய விருது பெற்றார். அடுத்த ஆண்டு எங்க தல ஜே.கே.ஆரும் தேசிய விருது பெறுவார் என்பது தமிழக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

7) நிலா நிலா ஓடி வா க்கு இணை இல்லையென்றாலும் நிலா அது வானத்து மேலே வும் ஹிட்டான பாடல்தான்.இரண்டு படத்தின் இசையும் உலகதரத்தில் அமைந்தது மற்றுமொரு ஒற்றுமையாகும்.

8) கதைக்கேற்ப இருவருமே பல்வேறு கெட்டப்களில் தோண்றினார்கள்

     இனி இருக்கும் ஒரு சில வேற்றுமைகளை பார்ப்போம்.

1) ஜே.கே.ஆரின் நடனம் புதிய நாயகனின் ஒரு சிறப்பம்சமாகும். கமலின் நாயகனில் அது ஒரு குறை.

2) இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் ஜே.கே.ஆர் மட்டுமே. ஆனால் அந்த நாயகனின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி.

3) கமலால் இன்னொமொரு நாயகன் இது வரை தர முடியவில்லை. ஆனால் அடுத்து படமே வீரத்தளபதியின் தளபதி பட்டைய கிளப்ப வருகிறது.

4) கமலுக்கு சமமாக ரஜினி அப்போது இருந்தார், ஆனால் எங்க தலைக்கு இணையாக யாருமில்லை. அத்னால் இந்த வெற்றியை குறைத்து மதிப்பிட்டு சிலர் கூறுகிறார்கள்.

Sep 11, 2008

Flash news-ம‌ங்க‌ளூரு சிவாவை வாழ்த்தினார் டீ.ஆர்

28 கருத்துக்குத்து

வந்துட்டேன்டா டீ.ஆரு
அடுத்த முதலவர நீ பாரு
காசு கேட்கிறான்டா சாரு
அவன் எழுத்து ஒரே போரு

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

அழகான பொண்ணுக்கு பெங்களூரு
அறிவான பையனுக்கு மங்களூரு
கல்யாணம் நடந்தது நம்மஊரு
இங்க இருக்கிறவங்க போய்பாரு

மங்களூரு அண்ணன் பேரு சிவா டா
அவருக்கு காத‌ல்மேல ஒரு அவா டா
ஜெர்மனி  அண்ணி பேரு பூங்கொடி
ர‌சிகைக‌ள் மேல‌ போட்டாங்க‌ ஒரு இடி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

உருப்ப‌டாம‌ போய்ட்டான்  சிம்பு
வாழ்க்கையில் ப‌ண்ணாதீங்க‌ வ‌ம்பு
த‌ண்ணிய‌ மேல‌ கொண்டுவ‌ரும் ப‌ம்பு
நீங்க‌தான் வில்லு,அவ‌ரு வெறும் அம்பு

இனிமேல‌ யாரு அடிப்பா கும்மி
தல ஆயிட்டாரு  வெறும் ட‌ம்மி
குழ‌ந்தை வ‌ந்து சொல்லும் ம‌ம்மி
அதுக்க‌ப்புற‌ம் த‌ல‌ ந‌ட‌ப்பாரு ப‌ம்மி

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

Sep 10, 2008

நாங்களும் போடுவோம்ல.....

28 கருத்துக்குத்து

 

முதல் முயற்சி.. கொஞ்சம் பார்த்து கும்முங்க...

kuselan run

நீங்களா குசேலனு நினைச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது..

surya ajith

charu

robot

கிரி,ப்ளீச்சிங் பவுடர் மற்றும் இன்னபிற ரஜினி ரசிகர்கள் பொருத்தருள்க.. இது ச்சும்மா.. உல்லலாய்க்கு

Sep 9, 2008

இத இன்னும் படிக்கலையா????????

23 கருத்துக்குத்து

       பெரியவங்களே சின்னவங்களே நடுவுல இருக்கிறவங்களே,  திமுக அதிமுக பாமக தேமுதிக எல்லா கட்சிகாரங்களே, ரஜினி கமல் விஜய் விக்ரம் எல்லாருடைய‌ ரசிகர்களே, முருகன்,சிவன்,விஷ்னு,யேசு, அல்லா எல்லாருடைய பக்த கோடிகளே , லக்கி பரிசல் அய்யனார் குசும்பனோட விசுவாசிகளே, அப்பாலிக்கா என் கடைக்கும் வர்றவங்களே மேட்டர் என்னன்னா...

      நான் இந்த வலையை தொடங்குமுன் இதை என்னைத் தவிர வேறு யாரும் படிக்க போவதில்லை. எனக்கே எனக்கான ஒன்று என்றுதான் எண்ணிணேன். அதனால் தான் வலையின் முகப்பில் "When we feel there is no one to listen us,we start writing" என்று எழுதி வைத்தேன். எனக்கு தமிழ்மணம் அறிமுகம் ஆனபின் நடந்தது எல்லாம் வேறு. இப்போதெல்லாம் நான் புது பதிவு எழுதாத நாளில் கூட பல நண்பர்கள் வருகை தருகிறார்கள். அப்போதெல்லாம் நான் எழுதி வைத்த வரிகளை மாற்றலாம் என நினைத்தேன். ஏனோ மனம் வரவில்லை. இன்று குசும்பன் அதை மாற்றுமாறு கேட்ட போது தான் உரைத்தது. உடனே மாற்ற வேண்டும் என்று தோண்றியதால் நல்லதாய் ஒரு பெயரை யோசிக்க கூட நேரமில்லாததால் "சாளரம்" என்று நினைவுக்கு வந்ததை வைத்து விட்டேன். இதைப் பற்றிய‌ உங்களின் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

    ஆவ்வ்வ்வ்வ் மறந்துட்டேன்.. இந்த பெயர் குசும்பனுக்கும் தமிழ்மணத்தை எனக்கு அறிமுகம் செய்த பாலாஜிக்கும் சமர்ப்பணம்.

    அப்புறம், நான் தொடர்ந்து எழுதலாமானு கேட்டு ஒரு ஓட்டு பொட்டி வைத்திருந்தேன். 71 பேர் எழுது ராசா எழுது என்றும், 20 பேர் வேணாம் சாமீ என்றும், 14 பேர் உன் இஷ்டம் என்றும், 11 பேர் என் வாயால் சொல்ல மாட்டேன்ப்பா என்றும் சொல்லி இருக்கிறீர்கள். வேணாம் சாமீ என்று வாக்களித்த 20 பேருக்காக தொடர்ந்து எழுதலாம்னு இருக்கிறேன்.

      காசு வாங்காம வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

டிஸ்கி : இதற்கு எல்லாமா பதிவு எழுதுவாங்கனு கர்ஜிக்கிற‌வங்க இத ஒரு தடவ படிச்சிட்டு வந்துடுங்க...

Sep 8, 2008

உடன்பிறப்பின் பதிலுக்கு என் பதில்

12 கருத்துக்குத்து

      உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி என்ற பதிவுக்கு சாய்பாபா காலில் விழுந்து வணங்குவது தான் பகுத்தறிவா? என்று ஒரு எதிர் பதிவு போட்டிருக்கார். பாராட்டுக்கள். இது கூட வராதுனு நினைத்தேன். விவாதத்தை நீட்ட விரும்பவில்லை. உங்கள் பதிலில் பதில்கள் தொடரும் என்று சொல்லி இருக்கிறீர்கள். தொடரட்டும்.. ஆனால் எனக்கு வேண்டியது எல்லாம் என் முதல் பதிவில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில்கள். உங்களுக்காக மீண்டும் ஒரு முறை. அடுத்த பதிவில் இதற்கு பதில்கள் எதிர்பார்க்கிறேன்.

1) ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?

2) இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா?

3) தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். உண்மைதானே?

4) உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்?

5) 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸா?

6) இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா?

      கேட்பதற்கு செல்வகணபதி, நெடுமாறன் என பெரிய பட்டியலே இருக்கு. முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.

  அது மட்டுமில்லாமல், உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் டோண்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நீங்கள் "நீ யாருய்யா கேள்வி கேட்க என்று பத்திரிக்கைகாரரை பார்த்து ஜெயலலிதா கேட்டது டோண்டுவுக்கு தெரியாதோ" எனக் கேட்டிருந்தீர்கள். அதற்கு பதிலாக நான் " சரியாய் சொன்னீர்கள்.அவர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்களா?" என்ற என் பின்னூட்டத்தை இன்னமும் நீங்கள் வெளியிடவில்லை.

என்னைப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டியது

19 கருத்துக்குத்து

      என்னால் நம்பவே முடியவில்லை. அப்துல் கலாமை நான் சந்திக்க போகிறேன் என்று நினைத்த போதே எனக்குள் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது.அவரின் அலுவலகத்தை நான் அடைந்த போது மணி 10. என்னையும் என் திட்டத்தையும் பார்த்த அவர் எழுந்து நின்று என்னைப் பாராட்டினார்

 

        ஒன்னுமில்ல தமிழ்மண முகப்புல முதல் ரெண்டு வரிகள் தெரிவதால் அதை படிச்சிட்டு அப்படியே அப்பீட் ஆகுறவங்கள உள்ள வரவைக்க ஒரு சின்ன ஏற்பாடு. இனி நிஜமான பதிவ படீங்க. (நோ நோ நோ இதுக்கெல்லாம் அழக்கூடாது.. ஏன்னா வலையில இதெல்லாம் சாதரண‌ம்ப்பா)

என்னை பத்தி சுருக்கமா சொல்றேன் கேளுங்கோ

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே --  இது நான் பொண்ணுங்கள பார்த்து             சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா   -- இது எதிரிகள் சொல்வது(பரிசல்,கோவி இல்லப்பா)

அடுத்த முதல்வர்    --   இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

      இப்போ நீங்க என்ன சொல்றீங்க? அப்படியே பின்னூட்டத்துல சொல்லிடுங்க.. ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க..

Sep 6, 2008

கரிசல்காரனின் துவையலும்,டரியலும் பின்னே மக்கின மட்டன் பீஸும்

39 கருத்துக்குத்து

பரிசலுக்கு அடுத்தவர்களின் பதிவுக்கு எதிர் பதிவு என்பதில் ஒரு அலாதி சுகம்.இது ஒரு வித நோய் என்று நேற்று குசும்பனும் லக்கியும் கவலைபட்டார்கள். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்து நான் செயலில் இறங்கி விட்டேன். முதலில் போய் பரிசலின் இந்த வார அவியல் பதிவை இங்கே படித்துவிட்டு வாருங்கள்.

*************************
தலைப்பு எனக்கே சமர்ப்பணம்!
*************************
நீங்களும் கூட இதே மாதிரி அனுபவம் பெற்றிருக்கக் கூடும். அதாவது நான் எந்த பாருக்கு போனாலும் என்னிடம் யாராவது ஒரு வாடிக்கையாளர்(?) உதவி கேட்பார்! 95% இடங்களில் எனக்கு இந்தமாதிரி நடக்கிறது! நேற்று ஒரு டாஸ்மாக்கிற்கு போனபோது ஒரு வாடிக்கையாளர் என்னிடம் ஒரு பாட்டிலை திறந்து தரச் சொன்னார். ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட ஒவ்வொரு முறை அவர் குவார்ட்டர் வாங்கும் போதும், அதை திறப்பதற்கு என்னை அழைத்தார். வெறுத்துப் போய் திட்டலாமா என்று நினைத்தேன். நாலைந்து முறைக்குப் பின் சொன்னார்...
" என் ஃபிகர இன்னொருத்தன் கரெக்ட் பண்ணிட்டான் சார்.அவன் பார்ப்பதற்கு உங்கள மாதிரியே இருப்பான்.அவன் தானா நீ பார்க்கதான் அடிக்கடி கூப்டேன்.எனக்கு சரியா தெரில.. நீங்களே சொல்லுங்க."

எனக்கு பயம் வந்துவிட்டது.

************************
இந்த மாதிரி அனுபவங்களில் பெஸ்ட், ஒருமுறை டப்லினுக்கு போனபோதுதான். காரை நிறுத்திவிட்டு காரிடாரில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவசர அவசரமாய் பின்னால் வந்த ஒருவர் “சிம்பு சார், ஏன் நயந்தாராவை ஏமாத்திட்டிங்க? ” என்று கேட்டார். கொஞ்சநேரம் அதை சந்தோஷமாய் கேட்டுவிட்டு அப்புறம்தான் நான் சிம்பு இல்லை என்றேன்!

**********************
கோவி.கண்ணனுக்கு மணவாழ்த்துச் செய்தி சொல்லச் சொல்லி ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தேன். நல்லாயிரு தலைவான்னு 48 பேரும் (57%), மாட்டிக்கினியான்னு 29 (34%) பேரும், இனி நிறைய எழுதுவீங்களான்னு 15 (17%) பேரும், எப்ப பார்ட்டின்னு 33 (39%) பேரும் ஓட்டுப் போட்டிருக்காங்க. இதுல மூணாவது அண்ணி கைலதான் இருக்கு. நாலாவதுக்கு அவரே கூப்பிடுவாரு. தலைவா.. நல்லாயிருங்க சொல்ல ஃபோன் பன்னா தங்கமணி எடுத்தாங்க.அவங்களுக்கு கல்யானம் ஆகி சில வருடம் ஆயிடுச்சாம். நான் வேற "இதுல மூணாவது அண்ணி கைலதான்" சொன்னத, அவங்க மூனாவதா ஒரு அண்ணி ,அப்படினு நினைச்சு டின்னு கட்டினுதுலதான் அண்ணன் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்திருக்காரு. அப்போ கல்யானம் ஆனது யாருக்கு?
*********************
இன்னொரு ஓட்டுப் பெட்டி வெச்சு, மேல படத்துல இருக்கறது யாருன்னு கேட்டேன். மாளவிகான்னு 3 (4%) பேரும், சோனான்னு 34 (48%) பேரும், நமீதானு 19 (27%) பேரும், மல்லிகா ஷெராவத்னு 14 (20%) பேரும் சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு நாள் முழுசா இருந்தாலும் வாக்கு நிறுத்தப்படுகிறது. காரணம் வேற ஒண்ணுமில்லை. நானே மூணு நாலு ஓட்டுப் போட்டும் நமீதாவை ஜெயிக்க வைக்க முடியல.  கண்டுபிடிங்க மச்சான்ஸ்ன்னு கேட்டத வச்சாவது அவருக்கு ஓட்டுப் போட்டிருக்கலாம்!

ஆமாம்.. அது நமீதா! அந்த 19 பேருக்கு நன்றி!


***********************
இரண்டு நாட்கள் கொஞ்சம் ஃப்ரீ! பின்னூட்டத்துக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா பின்னூட்டமே எவனும் எழுதறது இல்ல..ஃப்ரீயா இருக்கற நாட்கள்ல இந்த மாதிரி பதிவெழுத மேட்டர் கிடைக்குதுங்கறது சந்தோஷம்!


*********************
ரொம்ப நாளாகலை.. இருந்தாலும் விடப்போறதில்லை.. எனக்குப் பிடிக்காத க(வி)தை...

இந்த வாரம் மங்களூர் சிவா,


இந்த கும்மி அடிக்கிறவன்

குசும்பனோடு

வால்பையனோடு

ராப்போடு

அடித்த கும்மியில்

கோடியில் ஒரு பங்காவது

அடித்திருப்பானா என் வலையில்?.

ஜே.கே ரித்திஷை இனியும் நக்கலடிப்பீர்களா?

44 கருத்துக்குத்து

வலையில் மேய்ந்து கொண்டிருதபோது என் கண்ணில் பட்டது இந்த செய்தி. இதற்காகவாது நாயகன் படத்தை ஒரு முறை திரையரங்கில் காண வேண்டும் என்று பதிவ்ர்களை அகில உலக ஜே.கே.ரித்திஷ் ரசிகர் மன்றம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்."நாயகன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்திருக்கும் ஜே.கே.ரித்தீஷ், கோடம்பாக்கத்து 'குவார்ட்டர்' கோவிந்தன்களுக்கு மட்டுமல்ல, நலிந்த சினிமா கலைஞர்களுக்கும் நம்பிக்கை நாயகனாகவே இருக்கிறார். இந்த அதிரடி பார்ட்டியின் அதிரி புதிரி அமர்க்களங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டாலும், சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம், 'வெல்டன் சாரே...' என்று வாழ்த்த வைக்கிறது. காரைக்கால் பகுதியில் மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் தியாகராஜன் என்பவர், தமிழ் சினிமாவில் ஐம்பது படங்களுக்கு மேலாக இணை இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, கலைஞர், பாலசந்தர் கைகளால் விருதுகள் வாங்கியவர். 'மாருதி' என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த பதினைந்து வருடங்களாக இப்படிதான் வாழ்ந்து வருகிறாராம். இவரது மனைவி ஷீலாதேவி கூலி வேலைக்கு போகிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் இருவருக்கும் சாப்பாடு மற்றும் மருத்துவ தேவைக்கு. இதையெல்லாம் ஒரு பத்திரிகையில் பார்த்த ரித்தீஷ், உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் தருவதாகவும் எப்படியாவது அவரை குணப்படுத்துங்கள் என்றும் ஆறுதல் கூறியிருக்கிறார். சம்பாதிக்கிற பணத்தை எதிர்கால வைப்புத் தொகையாக வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், இது போன்ற புண்ணியங்களை எதிர்கால வைப்பு தொகையாக வைக்கும் ரித்தீஷூக்கு ஒரு 'ஜே...' போடுவோமா? நன்றி தமிழ்சினிமா.காம்

லக்கிக்கு சில‌ யோசனைகள்

12 கருத்துக்குத்து

லக்கியின் ஒவ்வோரு விமர்சணத்தின் முடிவிலும் ஒரு பன்ச் சொல்லுவார்.அதற்கு ஒரு பெரிய ரசிக கூட்டமே உண்டு.இனி வரப்போகும் படங்களுக்கு அவர் என்னவெல்லாம் சொல்லுவார் என யோசித்த கண நேரத்தில் உருவானது இந்த பதிவு.இத அவருக்கு என் யோசனையாகவும்(?) எடுத்துக்கலாம் அல்லது இப்படி எல்லாம் அவர் சொல்லுவார் என்ற என் கற்பனையாகவும் எடுத்து கொள்ளலாம்.

ஏகன் மைக்கில்லா "மோகன்"(வேலைக்காவாது)

படிக்காதவன் இதில் தனுஷ் "நடிக்காதவன்"

வாரணம் ஆயிரம் பார்க்காமலிருக்கு உண்டு "காரணம் ஆயிரம்"

ஐயன் தரத்தில் ச்சின்னப்பையன் (பதிவர் இல்லப்பா)

சிலம்பாட்டம் ரொம்ப "ஆட்டம்"

மர்ம யோகி இது பொங்கலில்லை,"போகி"

பேராண்மை காட்டுக்கு "நாட்டாமை"

கந்தசாமி பார்த்தவர்கள் "நொந்தசாமி"

வில்லு கண்களுக்கு "ஜில்லு"

ரோபோ சீக்கிரம் தியேட்டருக்கு "போபோ"

லக்கி கமல் மற்றும் அஜித் ரசிகர் என்பதால் ஒரு சேஞ்சுக்கு ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு மட்டும் நல்ல முறையில் சொல்லியுள்ளேன்.

Sep 4, 2008

உடன்பிறப்புகளிடம் ஒரு கேள்வி

23 கருத்துக்குத்து

      நேற்று ஒரு உடன்பிறப்பு, கலைஞர் தொலைக்காட்சி எதற்காக விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது என்பதற்கு அவர்கள் தலைவரைப் போலவே(?) ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் தன்னை வேறு பகுத்தறிவுவாதி என சொல்லிக் கொள்கிறார்.

      உடன்பிறப்பே, பகுத்தறிவாளர்களான உங்களுக்கு விநாயக சதூர்த்தி கிடையாது.எனவே விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினீர்கள். இதே போல் தீபாவளி,கிறிஸ்துமஸ் அன்றும் விடுமுறை நாள் என்று சொல்வீர்களா? சாய்பாபாவின் காலில் விழுந்த நீங்கள் பகுத்தறிவுவாதிகளா? ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?

    உடன்பிறப்புகளில் ஒருவரான நடிகர் சந்திரசேகர் தன் மகனுக்கு சிவனின் பெயரை(அதுவும் நம் வாயில் நுழையாத இந்தி பெயர்) வைத்தார்.அது பற்றி அவரிடம் கேட்ட போது என் தலைவரிடம் கேட்டுதான் வைத்தேன்.அவரும் அப்படியே செய் என்றாராம். இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா? பாவம்,உங்கள் தலைவர் தான் உங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு கூட பெயர் வைக்க வேண்டும். கின்டலுக்கு அல்ல,உண்மையாய் சொல்கிறேன் அந்த 85 வயது இளைஞர் செய்யும் வேலையில் ஒரு சதவீதம் கூட உடன்பிறப்புகளால் செய்ய முடியாது.

     தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். இதுவே ஜெயலலிதா சொல்லட்டும்.அதன் பின் ந‌டப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தன் கட்சித் தொண்டர்களையே ஆளத் தெரியாத இவரை ராமதாசும், திருமாவளவனும், ஏன் 2001ஐ போல கண்ணப்பனும், ஏ.சி.எஸும் ஏறி மிதித்து கொண்டுதானிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்? இப்போது சொல்கிறேன், உங்கள் தலைவரை துவைத்து காயப்போடும் ம.தி.மு.க வோடு உங்கள் தலைமை மீண்டும் கூட்டணி வைக்கும். நீங்களும் அன்பு அண்ணன் வை.கோ என சொல்லத்தான் போகிறீர்கள்.அதுவரை உளியின் ஓசையை கேட்டு கொன்டிருங்கள்

       நாறிகிடக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் திமுக ஓரளவிற்கு சுமாரான கட்சிதான்.அதற்காக நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும் போது நிச்சயம் ஞானிகளும், விசயகாந்துகளும் தேவை என்றே தோண்றுகிறது. ரத்தத்தின் ரத்தங்கள் பரவாயில்லை, அவர்கள் தலைமை ரொம்ப யோக்கியமானது என்று நம்பி ஏமாறுகிறார்கள்.ஆனால் உடன்பிறப்புகள் அவர்கள் கட்சி செய்யும் அத்தனை மோசடிகளும் அறிந்தவர்கள். அது பற்றி தெரிந்தும் அதற்கு சப்பை கட்டு கட்டுபவர்கள். அதில் ஒன்றுதான் இந்த விளக்கம். எனக்கென்னவோ இவர்கள் தான் அபாயமானவர்கள் என்று தோண்றுகிறது. 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸ். ஒரு பதினான்கு வயது சிறுவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா? எனக்கும் வரலாறு தெரியாது. தெரிந்த உடன்பிறப்புகள் அவன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

Sep 1, 2008

நாளைக்கு இப்படி கூட நடக்கலாம்

19 கருத்துக்குத்து

முந்தாநேத்து : (வாஜ்பாய்,வெங்காய விலை உயர்வின் போது) வெங்காயத்தில் எந்த சத்துமில்லை...அதை தவிர்க்க வேண்டும்.

நேத்து : (ப.சிதம்பரம்) பண வீக்கம் தவிர்க்க முடியாதது.மக்கள் இதை எதிர்த்து வாழ பழகிக்க வேண்டும்

இன்று :(ஆற்காடு வீராசாமி) மக்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் மின் தடை இல்லாமல் போகும். அதுவரை பொறுமை வேண்டும்.

  இப்படியே போனால் நாளை இப்படியெல்லாம் சொல்லுவார்களோ??????

ரஜினி : குசேலன் போன்ற படங்களைப் பார்க்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.இது என் தவறு அல்ல என்பதை உணர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும்.

சச்சின் : எங்களுக்கும் வயதாகிறது. எனவே எங்கள் தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மேட்ச் பார்க்க வேண்டும். அத்றகாக அணியை விட்டு வெளியே போக சொல்லுவது அநியாயம்.

ஜே.கே.ஆர்:   வெறும் மொக்கை படம் மட்டுமே பார்த்து வளர்ந்தவர்கள் என்றாலும்,மக்கள் எப்போவாது வருகின்ற "நாயகன்" போன்ற உலக சினிமாக்களை ஆதரிக்க வேண்டும்.அடுத்த படத்திற்கு நீங்கள் கொடுக்க போகும் ஆதரவை வைத்துதான் நான் 2011 போட்டியில் கலந்து கொள்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

டி.ஆர் : அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் அத‌
                     இவங்க சொல்றது எல்லாம் குழந்தைங்க கத‌
                    சிம்புவப் பத்தி பேசினா இனிமே விழும் உத‌
                    இப்போ சொல்லு, டி.ஆறு தொடாம விட்டது எத?

சோனியா காந்தி : நம் முன்னோர்கள் என்ன பென்ஸ் காரையா பயன்படுத்தினார்கள்? அவர்களைப் போல் நாமும் நடந்து போக பழகிக் கொள்ள வேண்டும். பெட்ரோல் உபயோகத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல் என்பது அரசியல் கட்சித் தலைவர்கள் பாதுகாப்பாக போவதற்கு என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

மோடி : இந்த நவீன யுகத்தில் குண்டு வெடிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்று. அதை எல்லாம் குஜராத் மக்கள் பெரிது படுத்தாமல் வாழ வேண்டும்.

லக்கிலுக் : இப்போ எல்லாம் ஆனி அதிகமாகி விட்டது.எனவே வாசகர்கள் மீள்பதிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதையும் ஒரு புதுப் பதிவு போலவே கருத வேண்டும்.

பாலபாரதி : மனம் தளரக்கூடாது நண்பர்களே!!! இதோ "அவன் அவள் அது "வின் இரண்டாம் பதிப்பு. இந்த முறையாவது முழுவதுமாக படிக்க முயற்சி செய்ய வேண்டும்.இல்லாது போனால் மூன்றாம் பதிப்பு வரக்கூடும்.

ஜே.கே.ரித்திஷின் வலைப்பூவ‌ கண்டுபிடிச்சேட்டங்க..

14 கருத்துக்குத்து

வீரத்தளபதியின் ரசிகர்களுக்காக ஒரு தளம்... அதுவும் வலை அல்ல, இணையத்தளம்... நாயகனின் நடிகன்,அரசியல்,சமூக சேவை என‌ மூன்று முகத்தை பற்றிய தெளிவான விவரங்களோடு சும்மா பட்டய கிளப்புதுங்க... இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் படிக்க போறதில்ல... போங்க, இங்க க்ளிக்கி தலைவர் தரிசனம் பாருங்க...

டிஸ்கி 1: குழந்தைகள், வயது முதிர்ந்தோர், இதய பலவீனம் உடையவர்கள் (ஆட்டோ வருதா,அப்போ இப்படி மாத்திடலாம்) என எல்லோரும் கண்டு ரசிக்கலாம்...

டிஸ்கி 2 :எதுக்கு தலைப்புல வலைப்பூனு போட்டேன் தெரியுமா? சில பேருக்கு ஏற்கனவே இந்த தளம் தெரிஞ்சி இருக்கும்..அவங்களையும் நம்ம கடைக்குள்ள வர வைக்கனுமில்ல...வலைனு சொன்ன நம்ம மக்கள் வந்துடுவாங்க இல்ல?

 

all rights reserved to www.karkibava.com