Aug 16, 2008

மாஸ் Vs கிளாஸ்..


இதற்கு முதலில் அய்யனார் Vs லக்கிலுக் என்றுதான் பெயரிட்டிருந்தேன். ஆனால் சூடான இடுகைக்கான என் இன்னொரு முயற்சியோ(?) என்று நீங்கள் அப்படியே ஓடிட கூடாதென்று மாற்றினேன்.ஆம்,வலையுலகில் என்னை கவர்ந்த இரு பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய என் கருத்துக்களே இந்த பதிவு.

தனிமையின் இசை என்ற வலையின் பெயரிலே முதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அய்யனார்.சற்றும் சளைத்தவர் அல்ல எங்கள் லக்கி.தனக்கான வாசகர்களை "சும்மா டைம் பாஸ் மச்சி" என்று வாயிலிலே ஃபில்டர் செய்கிறார். இருவரும் தன்னை நம்பி வரும் வாசகர்களை ஏமாற்றாமல் பதிவிடுகின்றனர்.

அய்யனாரின் "நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா" என்ற பதிவை படித்த பிறகு இத்தனை இயல்பாய் எழுத முடியுமா என்ற ஆச்சரியம் வராமல் போக வாய்ப்பில்லை.தெருவிற்கு நான்கு காதல் இந்தக் கதையைப் போல் இருப்பதால் இதைப் படிக்கும் போது நம் வாழ்க்கையைப் பற்றியதோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நமக்கோ இல்லை நமக்கு தெரிந்த யாருக்கோ நிச்சயம் இந்த அனுபவம் இருந்திருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரின் அனைத்து பதிவையும் படித்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ள எனக்கு,இதுவரை இதுதான் சிறப்பான பதிவாக தெரிகிறது.

கணத்த இதயத்தோடு வெளிவருகிறோம் அய்யனாரின் வலையைவிட்டு. எத்துனை துயரமாக இருந்தாலும் நமக்கு மருந்து வைத்திருக்கிறார் லக்கி.அவரின் சமீபத்திய சாதனையான(?) டமாரு கொமாருவை ரசிக்க முடியாதவர்கள், ப்ளீஸ் சிரிக்க சீக்கிரம் கத்துகோங்க.. குறிப்பாக சென்னை தமிழின் மேல் காதல் உள்ளவர்கள் டமாரு கொமாருக்காக லக்கிக்கு மடிப்பாக்கத்தில் ஒரு கிரவுண்டு நிலத்தை பரிசாக தரவும் தயங்க மாட்டார்கள். அய்யனாரை வாசிக்கும் போது நமக்கு பரிச்சயமில்லாத வழமைகள்,பின்நவீனத்துவம் போன்ற பல புரியாத தமிழ் வார்த்தைகள் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் லக்கியின் பல வார்த்தைகள் தமிழே இல்லை என்ற போதும் புரிந்து விடுகின்றன.

இரண்டு லட்சம் ஹிட்ஸ் அடித்ததற்காக ஒரு பெரிய (?) எழுத்தாளர் பெங்களூரில் தன் வாசகர்களுடன் கொண்டாடினாராம்.ஆனால் எங்க லக்கி எட்டு லட்சத்தை இன்னும் ஒரே மாதத்தில் தொடப்போகிறார்.எங்களுக்கு எங்கே பார்ட்டி லக்கி? இங்கே தான் மாஸ் அல்ல கிளாஸ் என்று நிரூபிக்கிறார் அய்யனார்.அவர் வலையில் ஹிட்ஸ் கவுண்டரே கிடையாது. அவரின் வெற்றியைப் பறை சாற்ற அவரின் படைப்புக்களே போதும் என்று நினைத்து விட்டார் போலும்.

வலையின் மூலம் தமிழை வளர்ப்பது அய்யனாரின் வேலை என்றால் வலைக்கான வாசகர்களை சேர்ப்பது லக்கியின் வேலை.இவ்விரு கரையின் இடையில் தமிழ்மணம் என்ற நதி வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.அப்போதுதான் அதில் பல புதிய பரிசல்களை காண முடியும். லக்கியின் பதிவுகள் நகைச்சுவை மட்டும்தான் என் சொல்லிவிட முடியாது.அவரின் மிகப் பெரிய பலம் என அதைச் சொல்லலாம்.
மனித எண்ணங்களின் அதிர்ச்சியூட்டும் முகங்களை தன் எழுத்தின் மூலம் முகத்தில் அறைவதுப் போல் சொல்வது அய்யனாரின் பாணி என்றால், "வெட்கப்படாதீங்க பாஸ்" என்று அதையே நக்கலாய் சொல்வது லக்கியின் ஸ்டைல்.இவ்விரு தூண்களை ஒரே தராசில் வைத்து எடை போடுவது நியாயமாகாது.எனினும் வெவ்வேறு தராசில் எடை போட்டு பார்த்தாலும் இருவரும் ஒரே எடையாய்த்தான் இருக்க கூடும்.
இருந்த‌ போதும்,அய்யனாரை நான் வாசித்த வரையில், விமர்சணம் செய்யும் போது அது சம்பந்தபட்டவர்கள் மீது தனக்குள்ள அபிப்பிராயத்தினால் விமர்சணம் செய்யும் போக்கை நான் கண்டதில்லை.ஆனால் லக்கியின் பில்லா பட விமர்சணத்தை படித்த போது அவர் அஜித் ரசிகர் என்பது போலவும்,அந்த ஒரு காரணத்தால் அந்தப் படத்தை போற்றுவது போலவும் எனக்குள் தோண்றியது.அது நிஜமா இல்லையா என்பதை லக்கியோ அல்லது லக்கியின் வாசகர்கள் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

23 கருத்துக்குத்து:

மஞ்சூர் ராசா on August 16, 2008 at 9:33 PM said...

லக்கியையும் அய்யனாரையும் ஒப்பிட்டுப்பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இருவரும் எழுத்தில் இருவேறு துருவங்களாக இருந்தாலும்.... அதாவது இருந்தாலும் ஒரே அலைவரிசையில் உள்ளவர்கள் தான் என எனக்கு ஏனோ படுகிறது.

அய்யனார் on August 16, 2008 at 10:10 PM said...

கார்க்கி
தொடர்ச்சியான உங்களின் அன்பிற்கு நன்றி..வலையில் என்ன பெரிதாய் கிழித்திருக்கிறோம் ரீதியிலான வெறுமையான யோசிப்புகளில் சில நண்பர்களை ஈர்க்க முடிந்திருக்கிறது என ஆறுதல் படுத்திக் கொள்ள முடிகிறது..

நன்றி...

கார்க்கி on August 16, 2008 at 10:32 PM said...

//.... அதாவது இருந்தாலும் ஒரே அலைவரிசையில் உள்ளவர்கள் தான் என எனக்கு ஏனோ படுகிறது.
//

மிகச் சரியாய் சொன்னீர்கள்...லக்கியின் இன்னொரு முகத்தை நாம் முழுமையாக இன்னும் காணவில்லை என்றே நினைக்கிறேன்.வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

கார்க்கி on August 16, 2008 at 10:41 PM said...

//வலையில் என்ன பெரிதாய் கிழித்திருக்கிறோம் ரீதியிலான வெறுமையான யோசிப்புகளில்//

என்ன???????????

விடைபெறும் தருணத்தில்
அவளிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கி வந்தேன்
திருப்பித் தர வேண்டிய நிர்பந்தங்களில்
வைத்த இடம் மறந்துபோயிற்று
மாடிப்படி
கழிவறை
கொல்லை மரத்தடி
ஓடு வேய்ந்த கூரைத் திட்டு
பாட்டியின் பழைய பெட்டி
உரல்
அம்மிக்கல்
மரக்கிளை
வாயில்படியென
எந்த இடுக்கிலும் இல்லை
தேடிப்பிடித்த கனமான சுத்தியலொன்றைக் கொண்டு
என் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தேன்
உள்ளே வழு வழுப்பான அட்டையுடன்
மிக வசீகரமான தாள்களோடு
தூங்கிக் கொண்டிருந்தது
அதே புத்தகம்...

இது போதாதா?..

நான் கொண்டாடும் உங்கள் கவிதைகளில் ஒரு உதாரணம்..
படித்த நாள் முதலாய்
என் மனதில் ரணம்...

மங்களூர் சிவா on August 16, 2008 at 11:41 PM said...

அய்யனார் பதிவெல்லாம் படிக்கிறீங்களா? பெரிய ஆளுதான் நீங்க
:)

Sundar on August 17, 2008 at 1:07 AM said...

நல்ல ரசனையோட ஒப்பிட்ருகீங்க. லக்கி இப்பதான் படிக்க ஆரம்பிச்சேன். அய்யனாரை இனிமேல் தான் பொய் பார்க்கணும்.

கார்க்கி on August 17, 2008 at 8:15 AM said...

//அய்யனார் பதிவெல்லாம் படிக்கிறீங்களா? பெரிய ஆளுதான் நீங்க
:)//

பெரிய ஆளுங்க எல்லாம் அய்யனாரை வாசிப்பாங்க..ஆனா அவர படிக்கிற எல்லோரும் பெரிய ஆளுங்க இல்லைப்பா.. நான் ரெண்டாவது வகை.. வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

கார்க்கி on August 17, 2008 at 8:17 AM said...

நல்ல ரசனையோட ஒப்பிட்ருகீங்க. லக்கி இப்பதான் படிக்க ஆரம்பிச்சேன். அய்யனாரை இனிமேல் தான் பொய் பார்க்கணும்.//

அப்படியா? நான் உருப்படியா ஒன்னும் எழுதலைனாலும் உங்க ஒருவருக்காவது உருப்படியான எழுத்தை அறிமுகம் செய்த சந்தோஷம் இருக்கு நண்பரே!!! கருத்திற்கு நன்றி..

Chitra on August 17, 2008 at 5:36 PM said...

karki ungal muyarchiku vaazhthukal.
niraya tamizh vaarthaigal katru kolla vendum, innum siru pillai pol vazhakathil ulla vaarthaigalai ubayogika vendam.niraya padikum pozhuthu niraya therinthu kolla mudiyum, nalla blogs padinga, ayyanaar rasigana iruntha mattum pothathu,avar pol ezhuthil oru nalinam vendum.

கார்க்கி on August 17, 2008 at 6:30 PM said...

thanks for ur comment chitra...muyarachi seygiren

லக்கிலுக் on August 18, 2008 at 10:34 AM said...

நன்றி கார்க்கி :-)

அய்யனார் போன்ற டப்ளின் பார்களோடெல்லாம் இந்த டாஸ்மாக்கை ஒப்பிடுவது அநியாயம் :-(

எனிவே, நான் அஜித் ரசிகன் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய், விக்ரம், ஜே.கே.ரித்தீஷ், மற்றும் பலருக்கும் கூட ரசிகன்!!!

Chitra on August 18, 2008 at 10:47 AM said...

karki & ndash??????????

கார்க்கி on August 18, 2008 at 11:56 AM said...

//அய்யனார் போன்ற டப்ளின் பார்களோடெல்லாம் இந்த டாஸ்மாக்கை ஒப்பிடுவது அநியாயம் :-(//

கடல் புறா என்ற படத்தில் ஒரு அற்புதமான பாடல் உண்டு.. அதில் வரும் ஒரு வரி "கஞ்சா என்ன சப்பி என்ன கலக்கல் என்ன சாராயம் என்ன..எல்லாமே உள்ளே போனா ஒரே போதை தான்டா"..

கார்க்கி on August 18, 2008 at 11:57 AM said...

//எனிவே, நான் அஜித் ரசிகன் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய், விக்ரம், ஜே.கே.ரித்தீஷ், மற்றும் பலருக்கும் கூட ரசிகன்!!!/

பார்த்தால் அப்படி தெரியவில்லை லக்கி..உண்மையாக பில்லா உங்களுக்கு பிடித்ததா? அதுவும் அஜித் நடிப்பு???????????????

கார்க்கி on August 18, 2008 at 11:57 AM said...

//karki & ndash??????????//

ennathithu?????

கிரி on August 18, 2008 at 2:24 PM said...

//சூடான இடுகைக்கான என் இன்னொரு முயற்சியோ(?) என்று நீங்கள் அப்படியே ஓடிட கூடாதென்று மாற்றினேன்//

:-))))

கார்க்கி நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

கார்க்கி on August 18, 2008 at 2:29 PM said...

//கார்க்கி நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.//

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி கிரி.. பின்னூட்ட பிதாமகன்கள் வரிசையில் நீங்கள்தான் முதலிடம்...

Bleachingpowder on August 19, 2008 at 1:58 PM said...

காரணமே இல்லாம லக்கி குசேலனை பத்தி ரொம்ப மட்டமா எழுதுறாரு. அதனாலதானோ என்னவோ தெரியல இப்பெல்லாம் அவரொட வலைதளத்திற்கு போகறதுக்கே பிடிக்கறதுல்ல கார்க்கி. அதோட அவர் கூட இருக்கிற காக்கா கூட்டத்தோட தொல்ல தாங்க முடியல.

கார்க்கி on August 19, 2008 at 2:03 PM said...

அப்படியா???? என்னையும் அதில் ஒருவனாக நினைத்து விடாதிர்கள் :))) கருத்திற்கு நன்றி நண்பரே!!!

Bleachingpowder on August 19, 2008 at 2:41 PM said...

//என்னையும் அதில் ஒருவனாக நினைத்து விடாதிர்கள் :)))//

:)) Anti Kuselan என்ற வகையில் தான் அவர் மேல் எனக்கு கோவம், மற்றபடி அவர் எழுத்தை நானும் அவ்வபோது ரசித்திருக்கிறேன்.

ஆனா பத்து பத்து குசேலனை விட நூறு மடங்கு தரம்னு அவர் சொன்னத மட்டும் மண்ணிக்கவே மாட்டேன் :)

கார்க்கி on August 19, 2008 at 4:31 PM said...

அவர் சோனாவையும் நயன்தாராவையும் எடைப் போட்டு அப்படி சொல்லி இருப்பார் :)))

அனுஜன்யா on August 25, 2008 at 7:58 PM said...

வித்தியாசமான பதிவு கார்கி.

லக்கி எழுத்துக்களைப் பார்க்கையில் 'அமுக்கி வாசிக்கிறார் மனுஷன்' என்றே தோன்றும். அதுவே அவரின் பலம். மெல்லிய நகைச்சுவை எப்போதும். Never gets carried away. கொஞ்சம் முனைப்பாக செயல்பட்டால் பிரபலமான எழுத்தாளராக வருவார் என்று நினைக்கிறேன்.

அய்யனார், Heavy duty stuff. உண்மையில் அவர் கமல் போல (லக்கி கமல் ரசிகராக இருப்பினும் அவர் ரஜினி மாதிரி). Class act. வயதிற்கும் வாசிப்பு/எழுத்துக்கும் சம்பந்தமே இல்லை. பதிவுலகத்தின் மிகப்பெரும் பயன்களுள் அய்யனார் போன்றவர்களின் எழுத்துக்கள் நமக்கு சுடச்சுட கிடைத்து, பின்னூட்டம் போடவும் வாய்ப்பு கிடைப்பது.

மொத்தத்தில் Mass Vs Class என்பது சரியான தலைப்பு. Mass லக்கிக்கு class இம் இருக்கு. Class அய்யனாருக்கு mass இல் ஈர்ப்பு கிடையாது.

அனுஜன்யா

கார்க்கி on August 26, 2008 at 10:15 AM said...

சரியாய் சொன்னீர்கள் அனுஜன்யா..உங்கள் பெயர் அழகாக இருக்கிறது...வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி

 

all rights reserved to www.karkibava.com