Dec 2, 2008

சூப்பர் ஸ்டாருடன் லக்கிலுக் மற்றும் வலையுலக நண்பர்கள்


டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு.

*****************************      

 குசேலன் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

லக்கிலுக் : மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட டமாரு கொமாருனு ஒரு கேரக்டர் கீது..அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க விகடன் மூவிஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் இன்&ஆஸ் "டமாரு கொமாரு" (மயிலாப்பூர் தமிழன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

  அதான்டா இதான்டா டமாரு கொமாரு நாந்தான்டா..
  மயிலாப்பூர் ஏரியாவுல அனைவருக்கும் காவல்டா..
  டாஸ்மாக்கில் படுத்துக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  துண்டு பீடி பிடிச்சுக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  குவார்ட்டர் வாங்கி தந்த ஆள மறப்பதில்லடா..
  ஆனா வாட்டர் பாக்கெட் வாங்க மறந்துபுட்டேன்டா

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீதாம்ப்பா

அய்யனார்: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே முள்ளும் ம‌ல‌ரும் காலத்து ரஜினியாக காட்டும்....

லக்கி : என்ன சொல்றப்பா நீ?ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? குசேலனும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ டமாரு கொமாருதான்.

சத்தி : (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் சார்..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

பரிசல்காரன் : வணக்கம் சார்.அந்த திண்டல்மலை முருகன் ஆசியோடு படத்த ஆரம்பிக்கலாம் சார்.கதை என்னனா, உங்களுக்கு, நாட்ட திருத்துற வேலய விட்டுடுனும்னு வில்லன் ஒரு லெட்டர் எழுதறாரு. நீங்களும் அதை ஏத்துக்குற மாதிரி பதில் லெட்டர் எழுதுறீங்க..அப்போ இன்டெர்வெல். அதுக்கு அப்புறம் அந்த லெட்டர மாத்தி அவரு அசர நேரமா பார்த்து பூந்து வெளயாடுறீங்க..அப்பப்போ மத்த நாட்டு நடப்ப பத்தி நான் எழுதி தர வசனத்த பேசுறீங்க.. இது பன்ச் டயலாக் இல்ல,அவியல் டயலாக் சார்..

ஏ!! லெட்டர் போடு லெட்டர் போடு
தாத்தாவுக்கும் லெட்டர் போடு
தங்கமணிக்கும் லெட்டர் போடு
லதானந் அங்கிளுக்கு லெட்டர் போடு
கயல்விழி ஆன்டிக்கி லெட்டர் போடு

அப்படியே போட்டு தாக்கினிங்கனா அவ்ளோதாண்ணா

ரஜினி : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

ச்சின்னப்பையன் : தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க.லதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

ர‌ஜினி : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.தாமிரானு சொல்லுவாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யான‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ளீச்சிங் ப‌வுட‌ர் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...வேணும்னா கிரிய‌ கேளுங்க‌..

கிரி: ஆமாம் த‌லைவா.. நாளைக்கே ஆளுக்கொரு மொக்க‌ ப‌திவு இதை ப‌த்தி எழுதி சூடாக்கிடுவானுங்க‌..

ம‌ங்க‌ளூர் சிவா: ரிப்பீட்டேய்...

ர‌ஜினி :என்ன‌ப்பா? திருப்பி ச‌ந்திர‌முகி 2 எடுக்க‌லாம்னு சொல்றீயா?

ம‌ங்க‌ளூர் சிவா: இது எங்க‌ பாஷை

ர‌ஜினி:  அட‌ப்பாவி..இது நான் சொன்ன‌துடா

நிஜமா நல்லவன் : எனக்கொரு ஐடியா தலைவா. இதுதான் நீங்க நடிக்க போற கடைசிப் படம்னு டைட்டில்ல போட்டுடுவோம்.படம் முடியும் போது அனைவருக்கும் நன்றி சொல்லிடுங்க... உங்க கடைசி படம்னு எல்லோரும் பார்ப்பாங்க..படம் ஓடினதுக்கப்புறம் அது டைரக்டர் எழுதிக் கொடுத்தது அத நம்பினா நீ உருப்புட மாட்டனு அறிக்கை விட்டுட்டு அடுத்த படம் ஆரம்பிச்சிடலாம்.

ர‌ஜினி: நல்லவனாடா நீ!!!!!!

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். படத்தின் பெயர் உண்மைகன்னடன்/தமிழன்/மராத்தி 5698741259635871.. இதற்கு வரிவிலக்கு நிச்சயம் உண்டு.கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

ர‌ஜினி: ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.க‌ண்ண‌ன் : கால‌ம் மாறும்.உங்க‌ள் செல்வாக்கு உய‌ரும்.எந்த‌ விதியும் கால‌த்தில் அட‌க்க‌ம்.

ர‌ஜினி : ச‌ரியா சொன்னீங்க‌.க‌தைய‌ சொல்லுங்க‌.

கோவி.க‌ண்ண‌ன் : உங்க‌ ப‌ட‌த்த‌ வ‌ச்சு நாலு பேர் கிண்ட‌ல் செஞ்ச‌ மாதிரிதான் என்னையும் செஞ்சாங்க‌. நான் க‌வ‌ல‌ப‌ட‌ல‌யே.. போட்டிக்கு நானும் ஒரு க‌மென்ட் அனுப்பி ந‌டுவ‌ரோட‌ பாராட்டையும் வாங்கிட்டேன்.அதே மாதிரி குசேல‌ன‌ கிண்ட‌ல் ப‌ன்னி ஒரு ட‌ய‌லாக் எழுதி விவேக்க‌ பேச‌ வ‌ச்சுடுவோம்.

"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்"

"பதினேழு முறை படையெடுத்து ஜெயிச்சவன் கஜினி
பன்னாட பீ.வாசுவ நம்பி தோத்தவன் இந்த ரஜினி"

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குசேலன் ஏன் ஓடலனா பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. சிவாஜி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " மொக்க போடுறா மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு பல்லேலக்கா மெட்டில் போட்டோம்னா கர்னாடக காவிரி மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி சூப்பர்ஸ்டார் தற்போது இமயமலையில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க பால்ராஜ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பாலபாரதியின் "அவன்,அவள்,அது" புத்தகம் ஆசிப் அண்ணாச்சியின் கைகளால் பரிசளிக்கப்படும்.

61 கருத்துக்குத்து:

கார்க்கி on August 26, 2008 at 7:50 PM said...

நான் ஒரு அக்மார்க் ரஜினி ரசிகன்.எனவே இந்த ஆட்டோ அனுப்ப நினைக்கும் ரசிகர்கள் மண்ணிக்க....

கார்க்கி on August 26, 2008 at 7:51 PM said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்!! மறந்துட்டேன்.. மீ த முதலாவது

கிரி on August 26, 2008 at 8:10 PM said...

ஹா ஹா ஹா கார்க்கி தற்போதைய நிலைமைய வைத்து எல்லோரையும் கலாய்க்கறீங்க .... நல்லா இருக்கு

எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியல :-))))))

கிரி on August 26, 2008 at 8:19 PM said...

//கிரி: ஆமாம் த‌லைவா.. நாளைக்கே ஆளுக்கொரு மொக்க‌ ப‌திவு இதை ப‌த்தி எழுதி சூடாக்கிடுவானுங்க‌..//

சரி இது நான் சொல்வதா ..இல்ல என் பேரை கூறி நீங்க சொல்ல நினைத்ததா ஹா ஹா ஹா ஹா

கோவி.கண்ணன் on August 26, 2008 at 8:25 PM said...

குசேலன் ஏன் ஓடலனா பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. சிவாஜி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க. //

இது சூப்பர்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)

கோவி.கண்ணன் on August 26, 2008 at 8:26 PM said...

//அய்யனார்: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம். எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.//

அய்யோ கொல்றாங்களே....ரஜினி இமயமலைக்கே ஓடிவிடுவார்

கோவி.கண்ணன் on August 26, 2008 at 8:27 PM said...

//அதான்டா இதான்டா டமாரு கொமாரு நாந்தான்டா..
மயிலாப்பூர் ஏரியாவுல அனைவருக்கும் காவல்டா..
டாஸ்மாக்கில் படுத்துக்குவேண்டா (ஹோய் ஹோய்)
துண்டு பீடி பிடிச்சுக்குவேண்டா (ஹோய் ஹோய்)
குவார்ட்டர் வாங்கி தந்த ஆள மறப்பதில்லடா..
ஆனா வாட்டர் பாக்கெட் வாங்க மறந்துபுட்டேன்டா //

வாவ்...மனதுக்குள் பாடிபார்த்தேன்......சூப்பர்

குசும்பன் on August 26, 2008 at 8:38 PM said...

ஹி ஹி செமகலக்கல்!

பெரும் தளைகளுக்கு மத்தியில் என்னையும் சேர்த்ததுக்கு நன்றி!

குசும்பன் on August 26, 2008 at 8:39 PM said...

//பாலபாரதியின் "அவன்,அவள்,அது" புத்தகம் ஆசிப் அண்ணாச்சியின் கைகளால் பரிசளிக்கப்படும். //

ஹி ஹி ஆக மொத்தம் போட்டியில் யாரும் பங்கு பெற கூடாது அதுதானே உங்க எண்ணம்:)))

ஜோசப் பால்ராஜ் on August 26, 2008 at 9:06 PM said...

நான் நண்பர் கார்கியால் நடுவராக நியமிக்கப்பட்டதால் எந்த பின்னூட்டங்களையும் போட்டி அமைப்பாளர் கார்க்கி சொல்லும் வரை படிக்க மாட்டேன்.

கார்க்கி, எனக்கும் அந்த புத்தகம் ஒன்னு அனுப்பி வையுங்க‌

விஜய் ஆனந்த் on August 26, 2008 at 9:09 PM said...

அடடே!!!!

இது செம வெயிட்டு!!!

ஹா ஹா ஹா ஹா ஹா!!!!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி !!!

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ !!!

பாரிஸ் திவா said...

சூப்பரு, எப்பிடீங்க உங்களால மட்டும் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியுது

பாரிஸ் திவா said...

கலக்கீட்டீங்க

ச்சின்னப் பையன் on August 26, 2008 at 9:40 PM said...

:-))))))

கும்கி said...

எல்லோரின் போக்கையும் ஓரளவு சரியாகவே கனித்திருக்கிறீர்கள்.. வ்வாவ்...(ரூம் போட்டு நாள் கனக்கில் யோசிப்பாய்ங்களோ)

கும்கி said...

இவிங்க அய்டியா அல்லாம் வேனாம் சூப்பரு ..,உடனே இமயமலைக்கு கிளம்புங்கன்னு அனுப்பி வைச்சது கார்க்கி தானே!

தமிழன்... on August 26, 2008 at 10:41 PM said...

:))

தமிழன்... on August 26, 2008 at 10:43 PM said...

கார்க்கி said...
\
நான் ஒரு அக்மார்க் ரஜினி ரசிகன்.எனவே இந்த ஆட்டோ அனுப்ப நினைக்கும் ரசிகர்கள் மண்ணிக்க....
\

இதுதான் மேட்டரு...

தமிழன்... on August 26, 2008 at 10:44 PM said...

கார்க்கி said...
\
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்!! மறந்துட்டேன்.. மீ த முதலாவது
\

இதென்ன இது...

Syam on August 26, 2008 at 11:24 PM said...

soooober :-)

மதுவதனன் மௌ. on August 26, 2008 at 11:53 PM said...

அய்யனாரின் வார்த்தை ஜாலம் அருமை...

கார்க்கி on August 27, 2008 at 10:13 AM said...

@கிரி,

உண்மைய சொல்லுங்க கிரி,இந்த ஆதங்கம் உங்களுக்கு இல்ல? வந்தமைக்கு நன்றி

@கோவி.கண்ணன்,

பாட்டு மெட்டுக்குள் வந்ததா?வந்தமைக்கு நன்றி

கார்க்கி on August 27, 2008 at 10:16 AM said...

@குசும்பன்,

என்ன தல,மொக்கசாமிகளுக்கு தலயே நீங்கதான்... புத்தகதுக்காக இல்லைனாலும் அண்ணாச்சிக்காக எழுத மாட்டங்களா?வந்தமைக்கு நன்றி

@பால்ராஜ்,

நிச்சயம் நண்பரே!!! நடுவருக்கு சிறப்பு பரிசு உண்டு..வந்தமைக்கு நன்றி

கார்க்கி on August 27, 2008 at 10:20 AM said...

@விஜய் ஆனந்த்,

மொக்கை போட சொல்லித் தரத்தான் நிறைய பதிவர்கள் இருக்காங்களே...அவங்க சொல்லி தந்ததுதான்...வந்தமைக்கு நன்றி


@பாரீஸ் திவா,

அதுக்கெல்லாம் லிவர் வேணும் சார்(எத்தனை நாள்தான் கிட்னியே சொல்றது:) வந்தமைக்கு நன்றி

கார்க்கி on August 27, 2008 at 10:23 AM said...

@ச்சின்னப்பையன்,

அய்யா ஜாலி ச்சின்னப்பையன் சிரிச்சிட்டாரு... நாயகன் ஹிட்டாண்ணா? வந்தமைக்கு நன்றி

@கும்கி,

உங்க‌ பேரே இதான்னா? இல்ல‌ என்ன‌ கலாய்க்க‌ போட்டிருக்கிங்க‌ளா? ந‌ம்புங்க‌ த‌ல 45 நிமிஷத்துல‌ யோசிச்சு த‌ட்ட‌ச்சும் ப‌ண்ணிட்டேன்... வந்தமைக்கு நன்றி

கார்க்கி on August 27, 2008 at 10:27 AM said...

@தமிழன்,

அட நிஜம்மா நான் ரஜினி ரசிகன்தாங்க... மீ த ஃபர்ஸ்ட் தெரியாதா? உங்கள தமிழ் மணத்துல எப்படி சேர்த்தாங்க?வந்தமைக்கு நன்றி

@ஸ்யாம்,

தாங்க்ஸ்ப்பா...வந்தமைக்கு நன்றி

@மதுவதனன்,

ஹிஹிஹி...வந்தமைக்கு நன்றி

லக்கிலுக் on August 27, 2008 at 11:06 AM said...

அய்யனார் மிமிக்ரி அருமை :-))))

sridhar said...

//"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்"

"பதினேழு முறை படையெடுத்து ஜெயிச்சவன் கஜினி
பன்னாட பீ.வாசுவ நம்பி தோத்தவன் இந்த ரஜினி"
//

மவனே ஊருக்கு வா..கொத்து பரோட்டாதான்டி..

கார்க்கி on August 27, 2008 at 11:08 AM said...

//அய்யனார் மிமிக்ரி அருமை :-))))/

வாங்க லக்கி... டமாரு கொமாரு பாட்ட பத்தி எதுவும் சொல்லலயே? வந்தமைக்கு நன்றி

Anonymous said...

சூப்பர் காமெடி, எல்லாரோட பஞ்ச் டயலாக்கையும் சரியா உபயோகிச்சு இருக்கீங்க, ஆட்டோ எல்லாம் யாரும் அனுப்ப மாட்டாங்க, பதிவு தான் சூப்பரா இருக்கே

பரிசல்காரன் on August 27, 2008 at 12:06 PM said...

இன்னும் படிக்கலை.

வந்து வெச்சுக்கறேன் கச்சேரியை...

குரங்கு on August 27, 2008 at 12:28 PM said...

====
நிஜமா நல்லவன் : எனக்கொரு ஐடியா தலைவா. இதுதான் நீங்க நடிக்க போற கடைசிப் படம்னு டைட்டில்ல போட்டுடுவோம்.படம் முடியும் போது அனைவருக்கும் நன்றி சொல்லிடுங்க... உங்க கடைசி படம்னு எல்லோரும் பார்ப்பாங்க..படம் ஓடினதுக்கப்புறம் அது டைரக்டர் எழுதிக் கொடுத்தது அத நம்பினா நீ உருப்புட மாட்டனு அறிக்கை விட்டுட்டு அடுத்த படம் ஆரம்பிச்சிடலாம்.
====

superb

கார்க்கி on August 27, 2008 at 12:44 PM said...

@பரிசல்காரன்,

வாங்க வாங்க..வரும்போது வால்பயனையும் வெண்பூவையும் கூட்டிட்டு வந்து ஒரு செஞ்சுரி போடுங்க...

@ சின்ன அம்மனி,

உங்கள மாதிரியே எல்லோரும் நல்லவங்கள இருந்தா பரவா இல்ல அம்மனி...ஆட்டோ அனுப்புறவங்க அப்படியா? வந்தமைக்கு நன்றி

@குர‌ங்கு,

உங்க‌ல‌ மாதிரி ந‌ம்ம‌ ப‌திவ‌ர்க‌ளும் அடிக்க‌டி தாவிக்கிட்டே இருக்காங்க‌ப்பா... வந்த‌மைக்கு ந‌ன்றி..கைவ‌ச‌ம் வாழைப்ப‌ழ‌ம் இல்ல‌...அப்பாலிக்கா தர்றேன்...

மங்களூர் சிவா on August 27, 2008 at 1:31 PM said...

:)))

கார்க்கி on August 27, 2008 at 1:50 PM said...

இந்த சிரிப்பு எதுக்கு சிவா? பதிவப் பார்த்தா இல்ல என்னைப் பார்த்தா? வந்தமைக்கு நன்றி

yuva said...

ArumaiyaaaaaaaaaaaaaaaaannnnnnnnaaaAsathalaaaaaaaaaaaaaaaaaaaaaannnnaa
Arputhamaaaaaaaaaaaaaaaaaaaaannnnna

MOKKAI

பரிசல்காரன் on August 27, 2008 at 4:42 PM said...

//கார்க்கி said...

@பரிசல்காரன்,

வாங்க வாங்க..வரும்போது வால்பயனையும் வெண்பூவையும் கூட்டிட்டு வந்து ஒரு செஞ்சுரி போடுங்க...
///

அப்படித்தான் நெனைச்சேன்..

வெறும் ஒரே டயலாக்கோட என்னை ஓரமா நிக்கச் சொல்லீட்டீங்கள்ல என் தலைவன் கிட்ட பேசவிடாம?

அதனால உங்க கூட கா!

கார்க்கி on August 27, 2008 at 4:45 PM said...

என்ன ஒரு டயலாக்கா? கேட்டுக்கோங்கப்பா

//: வணக்கம் சார்.அந்த திண்டல்மலை முருகன் ஆசியோடு படத்த ஆரம்பிக்கலாம் சார்.கதை என்னனா, உங்களுக்கு, நாட்ட திருத்துற வேலய விட்டுடுனும்னு வில்லன் ஒரு லெட்டர் எழுதறாரு. நீங்களும் அதை ஏத்துக்குற மாதிரி பதில் லெட்டர் எழுதுறீங்க..அப்போ இன்டெர்வெல். அதுக்கு அப்புறம் அந்த லெட்டர மாத்தி அவரு அசர நேரமா பார்த்து பூந்து வெளயாடுறீங்க..அப்பப்போ மத்த நாட்டு நடப்ப பத்தி நான் எழுதி தர வசனத்த பேசுறீங்க.. இது பன்ச் டயலாக் இல்ல,அவியல் டயலாக் சார்.. ஏ!! லெட்டர் போடு லெட்டர் போடு
தாத்தாவுக்கும் லெட்டர் போடு
தங்கமணிக்கும் லெட்டர் போடு
லதானந் அங்கிளுக்கு லெட்டர் போடு
கயல்விழி ஆன்டிக்கி லெட்டர் போடு அப்படியே போட்டு தாக்கினிங்கனா அவ்ளோதாண்ணா//

இது ஒரு டயலாக்காம்... :(((

இராம்/Raam on August 27, 2008 at 5:07 PM said...

கலக்கல்...


ரஜினியை கைப்புள்ள ரேஞ்சு'க்கு ஆக்கி வைச்சாச்சு போலே... :))

கார்க்கி on August 27, 2008 at 5:18 PM said...

@ராம்
அது எல்லாம் கிடையாது தல..அவரு குதிர... யானை கிடையாது.. அடுத்த படத்துல பாருங்க.. சும்மா எப்படி வர்றார்னு.. வந்தமைக்கு நன்றி

தமிழ்நெஞ்சம் on August 29, 2008 at 10:33 AM said...Ahaa... Semma varuval..

Thaangala saami...

கார்க்கி on August 29, 2008 at 11:25 AM said...

@தமிழ்நெஞ்சம்

அப்படியா???????? வந்தமைக்கு நன்றி நண்பரே!!!

மணிவண்ணன் on August 29, 2008 at 12:22 PM said...

அசத்துறீங்க போங்க!

கார்க்கி on August 29, 2008 at 12:35 PM said...

வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி நண்ப‌ரே!!!

வெண்பூ on December 2, 2008 at 7:21 PM said...

கார்க்கி கலக்கல்.. மத்த எல்லா வகை பதிவுகளை விட (உங்க காதல் பதிவுகள விடக்கூட) இந்த பதிவர் நையாண்டி பதிவுகள் சூப்பரா வருது.. பாராட்டுக்கள்..

சென்ஷி on December 2, 2008 at 8:10 PM said...

:))

அசத்தல் நகைச்சுவை

கார்க்கி on December 2, 2008 at 8:12 PM said...

நன்றி வெண்பூ..

கார்க்கி on December 2, 2008 at 8:13 PM said...

/ சென்ஷி said...
:))

அசத்தல் நகைச்சுவை//

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

கபீஷ் on December 2, 2008 at 8:19 PM said...

நல்ல பதிவு கார்க்கி! நீங்க இது மாதிரியே நிறைய எழுதுங்க

rapp on December 2, 2008 at 8:43 PM said...

me the 50th:):):)

அருண் on December 2, 2008 at 9:19 PM said...

me the 51st,

புதுகை.அப்துல்லா on December 2, 2008 at 9:38 PM said...

நல்லவேளைடா தம்பி என்னைய உட்டுட.. நல்லா இரு

மீ த எஸ்கேப்பு :))))))

வித்யா on December 2, 2008 at 9:48 PM said...

ROTFL:))

கார்க்கி on December 2, 2008 at 10:57 PM said...

நன்றி கபீஷ்

நன்றி ராப்

நன்றி அருண்

நன்றி அண்ணே..

நன்றி வித்யா

cable sankar on December 3, 2008 at 12:02 AM said...

கலக்கல் பதிவு.. :) :):):)

கருப்பன்/Karuppan on December 3, 2008 at 11:31 AM said...

என்ன கொடும சார் இது... "லக்கிலுக்" "சூப்பர் ஸ்டார்" அப்படீனு தலைப்பு பாத்த உடனே, ஏதோ லக்கிலுக்கோட எழுத்துலக சூப்பர்ஸ்டார் பத்தின பதிவோனு பதறிப்போய் வந்தா... (இதுக்கு மேல வார்த்தை வரமாட்டேங்குது துக்கம் தொண்டைய அடைக்குதுப்பா) அவ்வ்வ்வ்.....

பி.கு: எந்த ஹோட்டல் எந்த ரூம் நம்பர்னு கொஞ்சம் பெர்சனாலா துப்பு குடுத்தீங்கனா... நானும் அதே ரூம்முல படுத்துக்கிட்டே யோசிச்சு இதேமாதிரி கலக்கல் பதிவு ஒன்னு போட்டுருவோம்ல.

தாமிரா on December 3, 2008 at 2:39 PM said...

நான் க‌வ‌னிக்க‌வேயில்லையே, மீள்ப‌திவா இது.? உண்மைத்தமிழன், நிஜமா நல்லவன் பகுதிகள் அருமை.!

கவிப்ரியன் on December 3, 2008 at 8:55 PM said...
This comment has been removed by the author.
கவிப்ரியன் on December 3, 2008 at 8:58 PM said...

மன்னிக்கவும். இந்தப் பதிவில் உள்ள அனைத்து கதைகளும் எங்கள் அண்ணன் திருவாளர் விசயகாந்துக்கும் பொருந்தும்.. அவர் ஒன்னும் ரசினிகாந்துக்கு சளைச்சவரில்ல தெரிஞ்சிக்கங்க..அக்காங்..

கார்க்கி on December 4, 2008 at 11:51 AM said...

//cable sankar said...
கலக்கல் பதிவு.. :) :):)://

நன்றி சங்கர்..

**************************

//பி.கு: எந்த ஹோட்டல் எந்த ரூம் நம்பர்னு கொஞ்சம் பெர்சனாலா துப்பு குடுத்தீங்கனா... நானும் அதே ரூம்முல படுத்துக்கிட்டே யோசிச்சு இதேமாதிரி கலக்கல் பதிவு ஒன்னு போட்டுருவோம்ல//

ஹிஹிஹி.. ஹைதராபாதுக்கு வாங்க.. நன்றி

*******************************

//தாமிரா said...
நான் க‌வ‌னிக்க‌வேயில்லையே, மீள்ப‌திவா இது.? உண்மைத்தமிழன், நிஜமா நல்லவன் பகுதிகள் அருமை.!//

அதுக்குதான் மறுபடியும் போட்டேன் சகா..

****************************

//கவிப்ரியன் said...
மன்னிக்கவும். இந்தப் பதிவில் உள்ள அனைத்து கதைகளும் எங்கள் அண்ணன் திருவாளர் விசயகாந்துக்கும் பொருந்தும்.. அவர் ஒன்னும் ரசினிகாந்துக்கு சளைச்சவரில்ல தெரிஞ்சிக்கங்க..அக்காங்//

உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றிங்கண்ணா..

அத்திரி on December 4, 2008 at 4:45 PM said...

))))))))))))))))))))))

 

all rights reserved to www.karkibava.com