Oct 25, 2008

ஒன்பது என்பது சரியா?


நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

இதைப் பற்றி முன்னரே யாரவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

32 கருத்துக்குத்து:

Anonymous said...

Naan aaraichi pannirukkaenpa, innum enakku 900 ai thonnoorunu thaan solla varum

கார்க்கி on August 5, 2008 at 3:02 PM said...

//Naan aaraichi pannirukkaenpa, innum enakku 900 ai thonnoorunu thaan solla varum//

பரவாயில்லையே!!!! நல்லது நண்பரே! வந்தமைக்கும் தகவலுக்கும் நன்றி. உங்கள் பெயர் சொல்ல மற‌ந்து விட்டீரே

Anonymous said...

peyara mukkiyam? solla ninaithathai sonnaen avalavei thaan

கார்க்கி on August 5, 2008 at 3:22 PM said...

//peyara mukkiyam? solla ninaithathai sonnaen avalavei thaan//

right vidu

Anonymous said...

//// நான் யார்? ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பயணத்தின் முதல் தேடல்...//////
தேடல் முழுமைபெற வாழ்த்துக்கள் நண்பரே.

நானும் யோசிச்சிருக்கேன். ஆனாஅந்த விடை தேடனும்னு யோசிக்கல. ஹிஹி

அநேகமா இன்னிக்கு நைட் அல்லது காலைல தெரியவரும்னு நெனக்கறென்.

ஜ்யோவ்ராம் சுந்தர் on August 5, 2008 at 5:12 PM said...

நல்லாத்தான் யோசிக்கிறீங்க :)

கார்க்கி on August 5, 2008 at 7:40 PM said...

//நானும் யோசிச்சிருக்கேன். ஆனாஅந்த விடை தேடனும்னு யோசிக்கல. ஹிஹி//
காலைல சொல்றீங்களா??????????? சரி சரி அதிகம் ஏறாம பார்த்துக்கோங்க‌ :)

கார்க்கி on August 5, 2008 at 7:42 PM said...

//நல்லாத்தான் யோசிக்கிறீங்க//

வாங்க சுந்தர்..உங்கள் வருகை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது

Bleachingpowder on August 6, 2008 at 2:21 PM said...

ரூம் போட்டு யோசிபீங்களோ... முடியல...நீங்க இப்ப யோசிகறதெல்லாமே நாளைக்கு சரித்திரத்ல வரும்...ஸுடண்ட்செல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க...

சுருக்கமா சொன்னா, அண்ணே நீங்க அறிவு கொழுந்துன்னே

கார்க்கி on August 6, 2008 at 2:37 PM said...

//சுருக்கமா சொன்னா, அண்ணே நீங்க அறிவு கொழுந்துன்னே//

அப்போ கிள்ளி வாயில போட்டுக்க..ஹிஹிஹி

Anonymous said...

http://valavu.blogspot.com/

இராம.கி ஐயாவிடம் கேட்டுப் பார்க்கலாமே?

KRP on August 10, 2008 at 1:44 PM said...

இது மிக பழைய ஆராய்ச்சி . இது சம்மந்தமாக கட்டுரைகளும் புத்தகங்களும் உண்டு.

ஒன்பது என்பது பத்துக்கு முந்தையது என அர்த்தம்.
தொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.

ரோமன் என்னைப்போல்
ஒன்பது - IX
பத்து - X

அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/

KRP said...

ஒன்பது என்றால் ஒன்பத்து . தொன்மையான பத்து . தொன்மை என்றால் முந்தைய .

அன்புடன்
கே ஆர் பி

கார்க்கி on August 10, 2008 at 3:08 PM said...

வந்தமைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!!!

//ரோமன் என்னைப்போல்
ஒன்பது - IX
பத்து - X//

சரி...

//தொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.//

அப்படியா?????

Harime on August 14, 2008 at 11:18 AM said...

An Empty mind is a devil's Workshop, Hope you Dont mind writing comment on ur post

கார்க்கி on August 14, 2008 at 12:26 PM said...

//An Empty mind is a devil's Workshop, Hope you Dont mind writing comment on ur post//

u r welcome friend..keep on sending comments

சுந்தர் on August 14, 2008 at 9:37 PM said...

informative!

விஜய் ஆனந்த் on October 25, 2008 at 2:26 PM said...

:-)))...

ஜோசப் பால்ராஜ் on October 25, 2008 at 3:04 PM said...

சகா, எனக்கு உடனே அம்மாவோட தொலைபேசி எண்ண மின்னஞ்சல் செய்யிங்க.
இத இப்டியே விடக்கூடாது, ஒரு ஏற்பாடு செஞ்சுரணும்.
நான் அம்மாக்கிட்ட பேசுறேன். மின்னஞ்சல் அனுப்புங்க உடனே.

வெண்பூ on October 25, 2008 at 4:20 PM said...

கணித மேதை கார்க்கி வால்க..

Karthik on October 25, 2008 at 5:24 PM said...

சனிக்கிழை அன்னிக்கு உட்கார்ந்து ப்ளாக் படிக்கிறது ஒரு தப்பா?
என்ன கொடுமை கார்க்கி இது???
:)

தாமிரா on October 25, 2008 at 6:18 PM said...

சனிக்கிழமை சாந்திரம்னா இப்பிடிதான் முன்னாடி பேக்குத்தனமா திங்க் பண்ணிட்டிருப்பேன். என்ன மாதிரியே இருக்கியே ராசா.? பாத்து பாத்து, எதுக்கும் கொஞ்சம் லெமன் ஜூஸ் அப்பப்ப குடிக்கவும்.!

புதுகை.அப்துல்லா on October 25, 2008 at 6:23 PM said...

ஏம்பா வெய்யில் கூட இல்லையே??? மழைதான பெய்யுது???

கும்க்கி on October 25, 2008 at 9:14 PM said...

ரெம்ம்ம்ம்ப முத்திப்போச்சி..
இத இப்படியே விடப்படாது..
என்க்கும் உங்க வீட்டு போன் நெம்பர் வேண்டும்...

கார்க்கி on October 26, 2008 at 11:16 AM said...

@விஜய்,

:((((((((

@பால்ராஜ்,

ஆஹா... வேணாம் விட்டுடுங்க சகா.. நான் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்...

@வெண்பூ,

அது வாழ்க சகா..

.:: மை ஃபிரண்ட் ::. on October 26, 2008 at 11:23 AM said...

நான் ஒன்றாம் வகுப்பு-இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே இந்த கேள்வி எனக்கு தோணுச்சு.. டீச்சர்ட்ட போய் கேட்டேன். அதுக்கு டீச்சர் “இப்படியெல்லாம் அறிவாளித்தனமா கேள்வி கேட்கக்கூடாதும்மா.. மத்த பசங்க மாதிரி நான் சொல்லித்தரது மட்டும்தான் படிக்கணும்”ன்னு சொல்லிட்டாங்க..

அது மட்டுமல்லாமல் w என்பதை நான் double Uன்னு சொல்றோம். ஏன் double Vன்னு சொல்ல மாட்றோம்? இதை என் ஆங்கில வாத்தியாரிடம் கேட்டேன். “shut up and sit down"ன்னு சொல்லிட்டாரு. :-(... சின்ன பசங்கள அப்பவே இப்படி கண்ட்ரோல் பண்ணா பசங்க எப்படி அறிவாளியா வளர்வாங்க? :-(

கார்க்கி on October 26, 2008 at 11:25 AM said...

@கார்த்திக்,

நல்ல விஷயம் சொன்னா இந்தக் காலத்து பசங்களுக்கு புடிக்கலப்பா..

@தாமிரா,

லெமன் ஜூஸா? அப்ப நீங்க அதானா? அய்யோ பாவம்..

@அப்துல்லா,


இது தாமிராக்கு//புதுகை.அப்துல்லா said...
ஏம்பா வெய்யில் கூட இல்லையே??? மழைதான பெய்யுது???

இது தாமிராக்குத்தானெ?

@கும்க்கி,

நீங்களும் தாமிராவாத்தானே கேட்கறீங்க? சொல்லுங்க சகா

குசும்பன் on October 26, 2008 at 11:45 AM said...

புதுகை.அப்துல்லா said...
ஏம்பா வெய்யில் கூட இல்லையே??? மழைதான பெய்யுது???//

டைட் ஆகி முறுக்கிக்கிட்டு:)////

****************************

பிளாக் எழுதுற புள்ளைக்கு இம்புட்டு அறிவான்னு மக்களுக்கு பொறாமை ராசா!!!

ஆக்காண்ணே (கவுண்டர், செந்தில் ஸ்டைலில் படிக்கவும்)

புருனோ Bruno on October 26, 2008 at 11:56 AM said...

//இது மிக பழைய ஆராய்ச்சி . இது சம்மந்தமாக கட்டுரைகளும் புத்தகங்களும் உண்டு.

ஒன்பது என்பது பத்துக்கு முந்தையது என அர்த்தம்.
தொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.

ரோமன் என்னைப்போல்
ஒன்பது - IX
பத்து - X

அன்புடன்
கே ஆர் பி//

வழிமொழிகிறேன்

கார்க்கி on October 26, 2008 at 12:01 PM said...

//பிளாக் எழுதுற புள்ளைக்கு இம்புட்டு அறிவான்னு மக்களுக்கு பொறாமை ராசா!!!//

இத மட்டும்தான் நீங்க சொலனும்..


//ஆக்காண்ணே//

இத நான் சொல்லனும்

கார்க்கி on October 26, 2008 at 12:02 PM said...

//புருனோ bruno said...
//இது மிக பழைய ஆராய்ச்சி . இது சம்மந்தமாக கட்டுரைகளும் புத்தகங்களும் உண்டு.

ஒன்பது என்பது பத்துக்கு முந்தையது என அர்த்தம்.
தொண்ணூறு என்பது நூறுக்கு முந்தையது.

ரோமன் என்னைப்போல்
ஒன்பது - IX
பத்து - X

அன்புடன்
கே ஆர் பி//

வழிமொழிகிறேன்

//


முதல் வருகைக்கு நன்றி நண்பரே.. அதேக் கேள்வியைக் கேட்கிறேன்.. 100க்கு முன்னாடி 99 தானே. எப்படி 90 வரும்?

LOSHAN on October 26, 2008 at 2:52 PM said...

அன்பின் கார்க்கி.. ஒரு நாளா இருந்து யோசித்ததில் (?) (முன்பு நானும் இப்படியெல்லாம் அறிவு ஜீவித் தனமாக யோசித்துள்ளேன்..)
9 - ஒந்பு
90- ஒன்பது
900- ஒண்னூறு
9000-ஒன்பாயிரம்
என்று வரலாமோ என்று தோன்றுகிறது.. சரியாக வந்தால் என் பெயரில் patent போட்டு விடவும்..

 

all rights reserved to www.karkibava.com