Aug 26, 2008

என் செல்ல‌க்குட்டியின் மூன்றாவ‌து நினைவு நாள்


         செல்லக்குட்டி..உனக்கு நான் ஆசையாய் வைத்த பெயர்..இன்றும் யாரவது தங்கள் குழந்தையையோ காதலியையோ செல்லம் என்று அழைக்கும்போது ஒரு கணம் சலனமற்று போவேன்.உன் மீது எனக்கிருந்த அன்பு அப்படி. நீயும் உன் அன்பை உன் செய்கைகள் மூலம் பல தடவை வெளிப்படுத்தியதுண்டு. வார்த்தைகளில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லை.  இன்றோடு நீ என்னை விட்டு பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. உன் நினைவுகள் அவ்வபோது நச்சரித்தாலும் நீ இல்லாமல் எப்படி என்னால் இயல்பாக இருக்க முடிகிறது என்பது புரியாத புதிராகவே இன்னும் இருக்கிற‌து.

   2004 திசம்பர் 12 வது நாள்.உன்னை உன் குடும்பத்திடம் இருந்து நான் பிரித்து வந்த நாள்.அன்று உன் அம்மா கத்தியதை எல்லாம் இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கிறது.உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக உன்னை நான் கடத்திக் கொண்டு வந்தது தவறு என்பதை நீ இறந்தப் பிறகுதான் நான் உணரத் தொடங்கினேன். செல்லக்குட்டி!!! உன்னை நான் வேறு பெயர் கொண்டு அழைத்தாக நினைவில்லை. ஒரு நாளும் நீ உன் குடும்பத்தை பார்க்க சென்றது கிடையாது.  நானும் அதைப் ப‌ற்றி யோசித்த‌து கிடையாது.  என் அன்பை நீ புரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியசாலிதான்.

        உன்னுடன் நான் என் வீட்டுக்கு வந்த அன்று என் அம்மாவும் நம்மை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நீ உயர்ந்த ஜாதி இல்லையாம். நீ அவருக்கு சுமையாம். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. உன்னை என் அறைக்கு அழைத்து சென்று போது ஏதொ பெரும் பாவத்தை செய்ததைப் போல் பார்த்தார்கள் என் அம்மா.என் விருப்பத்தை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. நீயும் நானும் என் படுக்கையில் அன்று ஒன்றாய் படுத்திருந்ததை என் வீட்டு வான்டுகளும் ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்ததை நான் பார்த்து விட்டு,ஜன்னலை மூடிய பின் உன் நெற்றியில் நான் தந்த முத்தம் ஏதோ நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.

         நான் தினமும் வெளியே செல்லத் தயாராகும்போது உன் முகம் சுருங்கி விடும். எனக்குத் தெரியும்... என் வீட்டில் உள்ளவர்கள் உன்னிடம் பேசுவதில்லை. உன்னை கவணித்துக் கொள்வதில்லை என்பது எனக்குத் தெரியும். உனக்காகவே நான் மாலையில் சீக்கிரம் திரும்பி விடுவேன்.எனக்காகவே நீ கதவின் அருகில் நின்று நான் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாய். உன்னைக் கண்ட சந்தோஷத்தில் நான் உன்னை தூக்கி செல்வேன்.என் அம்மா தலையில் அடித்துக் கொள்வாள். உன்னால் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் சில உறவினர்கள் வருவது இல்லை  என்று அம்மா ஆரம்பிப்பாள்.உன்னால் எனக்கு நடந்த மற்றொரு நன்மை அது என நினைத்துக் கொள்வேன். உன்னைப் போய் இவர்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது?

       ஒரு நாள் நான் மாலையில் என் புதுக் காருடன் திரும்பும்போது உன்னை வாசலில் காணவில்லை. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தேன். என் அம்மாவிடம் நீ எங்கே என்றேன்.உனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நம் அறையை விட்டு நீ வெளியே வரவே இல்லை என்றும் சொன்னார்கள். உன்னை என் புது காரில் மருத்துவமனைக்கா அழைத்து செல்ல வேண்டும்? என் அம்மா காரில் கோவிலுக்கு முதலில் செல்லலாம் எனத் தயாராகி இருந்தாள். நான் உன்னுடன் சென்றுவிட்டேன். ஏதேதோ சொன்னார்கள். புரியவில்லை. முழுசாய் தந்த உன்னை வெட்டி வெட்டி துண்டாக்கி விட்டார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.ஒரு வாரம் நம் அறையை விட்டு வெளியே வரவே இல்லை நான். அதற்குள் என் அம்மா உனக்கு மாற்றாக  வெளிநாட்டுக்காரி ஒருத்தியின் படத்தை காண்பித்து என் அனுமதி கேட்டார்கள். வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதோ உன் மூன்றாவது நினைவு நாள்.என்ன செய்யப் போகிறேன் செல்லக்குட்டி....????

       உன்னைப் போல் வேறொரு நாய்க்குட்டி கிடைக்கும் என‌ என‌க்குத் தோண்ற‌வில்லை.

14 கருத்துக்குத்து:

yuva said...

aenpa intha kola veri?
ini yaarayum chellamnu koopida koodathoo?

Anonymous said...

ஹிஹிஹி வேற எதுவும் சொல்றதுக்கில்ல.

கார்க்கி on August 26, 2008 at 11:46 AM said...

வாங்க யுவா..இந்த தடவ பேரோட வந்துட்டீங்க‌

yuva said...

enna panrathu, neengathaan kandu pidichidreenglae

sridhar said...

நீ திருந்த மாட்டடா...திருந்தவே மாட்ட...

raj said...

ok..nowadays more comedies karki.expecting ur kaithaikal

கார்க்கி on August 26, 2008 at 3:51 PM said...

ok..nowadays more comedies karki.expecting ur kaithaikal//

adadadaeeeeeee..nijamaava?

உருப்புடாதது_அணிமா on August 26, 2008 at 9:36 PM said...

நல்ல ஒரு அருமையான காதல் மற்றும் சோக கதையாக வந்து இருக்க வேண்டியது,..
இப்படி மொக்கை ஆக்கி விட்டீர்களே நண்பரே..
நியாயமா??

உருப்புடாதது_அணிமா on August 26, 2008 at 9:37 PM said...

முடியல...
வேணாம்...
விட்டுடுங்க..
அழுதுடுவேன்..

இதுக்கு மேல என்னாலையும் முடில..

கார்க்கி on August 27, 2008 at 10:36 AM said...

//நல்ல ஒரு அருமையான காதல் மற்றும் சோக கதையாக வந்து இருக்க வேண்டியது,..
இப்படி மொக்கை ஆக்கி விட்டீர்களே நண்பரே..
நியாயமா??//

அய்யோ அய்யோ இன்னுமா இந்த ஊர் என்ன நம்புது? நிஜமாவே நீங்க உருப்படாததுதான்...

வந்தமைக்கு நன்றி நண்பரே!!!

கோவி.கண்ணன் on August 28, 2008 at 12:18 PM said...

நல்லா இருக்கு, ஆரம்ப வரிகளிலேயே தெரிந்துவிட்டது... !

KA.... said...

:)) 2nd paragraph...good.

இராகவன், நைஜிரியா said...

//அன்று உன் அம்மா கத்தியதை எல்லாம் இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கிறது.//

இந்த வரி படிக்கும் போதே.. நாய்குட்டி என புரிந்து விடுகின்றது. இருந்தாலும், மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.

maduraikkaran on December 5, 2008 at 4:50 PM said...

Nambi Vandhene!!! Ippadiya kuthi Kolrathu!!! SSSSH yappa....yaravathu thanni kodungappa!!!

 

all rights reserved to www.karkibava.com