Aug 25, 2008

மொக்கமாமியும் குருவியும்


ஒரு தடவை நம்ம மொக்கசாமியின் கனவில் கடவுள் வந்து "உனக்கென்ன வரம் வேண்டும் கேள் மகனே" என்றாராம். மொக்கசாமியும் எனக்கு சாவே வரக்கூடாது என்றானாம்."அப்படியே ஆகட்டும்" என்றார் கடவுள்.

மறுநாள், இனி நான் ஆயிரம் வருடம் தாண்டியும் உயிரோடிருப்பேன். கடவுள் வரம் தந்தார் என்று எல்லாரிடமும் சொன்னான் மொக்கசாமி.யாரும் நம்பத் தயாரில்லை. ஒரு பத்திரிக்கை நண்பர் மட்டும் இவனிடம் வந்து நான் உங்களை நம்புகிறேன்.உங்கள் பெயர் என்ன என்றார்.

"மொக்கமாமி" என்றான் மொக்கசாமி.

-----------------------------------------------------------------------------

ஒருநாள் ஹெல்மெட்டை மறந்து வைத்துவிட்டு வண்டியில் சென்றான் மொக்கசாமி.பாதி வழியில் ஞாபகம் வர,வீட்டுக்குத் திரும்பினான்.வழியில் டிராஃபிக் போலிஸ் மடக்கினார்.

"எங்கப்பா ஹெல்மெட்" என்றார் போலிஸ்.

"மறந்துட்டேன் சார். எடுக்கத்தான் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன் சார்"

"ஃபைன் கட்டிட்டு போய் எடுத்திட்டு வா"

எந்த சமாளிப்பும் எடுபடாமல் கடைசியாக 20ரூபாய் லஞ்சம் கட்டிவிட்டு எஸ்கேப் ஆனான் மொக்கசாமி. கிளம்பும்போது "வழியில் வேறு போலிஸ் மடக்கினால் காக்கா என்று சொல்,விட்டுவிடுவார்கள்" என்றார் போலிஸ்.

வேறொரு நாள் இதே போல் மொக்க போலிஸில் மாட்டினான்.என்ன செய்வது என்று யோசித்து " காக்கா" என்றான் மொக்கசாமி.

அந்தப் போலிஸ் சிரித்துக் கொண்டே "இன்று குருவி " என்றார்.

15 கருத்துக்குத்து:

sridhar said...

அடடே பேஷ் பேஷ்..ரொம்ப நன்னா இருக்கு...மொக்கமாமி புரிய கொஞ்ச நேரம் ஆச்சு...

ஆனந்த் குமார் on August 25, 2008 at 3:01 PM said...

சூப்பர்.மொக்கமாமி 3 தடவை படிச்சதக்கு அப்புறந்தான் புரிஞ்சது.

குசும்பன் on August 25, 2008 at 3:03 PM said...

ஹி ஹி சூப்பர், முதல் பகுதி இன்னும் புரியவில்லை

கார்க்கி on August 25, 2008 at 3:23 PM said...

//சூப்பர்.மொக்கமாமி 3 தடவை படிச்சதக்கு அப்புறந்தான் புரிஞ்சது./

வருகைக்கு நன்றி நண்பரே!!!

கார்க்கி on August 25, 2008 at 3:25 PM said...

ஹி ஹி சூப்பர், முதல் பகுதி இன்னும் புரியவில்லை

அப்படியாஆஆஆஆஆஆ? குசும்பனே நிஜமாவா???????????????? அவருக்கு "சா" வே வராது...அதான் மொக்க"சா"மிக்கு பதில் மொக்கமாமினு சொன்னாரு...

சுல்தான் on August 25, 2008 at 4:18 PM said...

மறுநாள் தனக்கு 'சா'வே வராது என்று சைகையால் காட்டி இருப்பானோ?

Anonymous said...

நக்கல் அதிகமாகி கொண்டே போது மச்சி...கலக்கு...

கார்க்கி on August 25, 2008 at 4:25 PM said...

//மறுநாள் தனக்கு 'சா'வே வராது என்று சைகையால் காட்டி இருப்பானோ?//

இது ஒரு நல்ல கேள்வி.. மறுபடியும் படியுங்கள்..ஹிஹிஹி

Anonymous said...

மொக்கமாமி புரியவே இல்ல‌

Anonymous said...

நல்லா இருக்கு தம்பி..சொந்த சரக்கா?

Anonymous said...

"எங்கப்பா ஹெல்மெட்" என்றார் போலிஸ்.

"மறந்துட்டேன் சார். எடுக்கத்தான் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன் சார்"

"ஃபைன் கட்டிட்டு போய் எடுத்திட்டு வா" ///

"மறந்துட்டேன் சார்." Itula mattum eppadi "சா" vanthuchu.....?????

கார்க்கி on August 26, 2008 at 2:32 PM said...

//மறந்துட்டேன் சார்." Itula mattum eppadi "சா" vanthuchu.....?????//

அய்யோ அய்யோ..அது வேறு இது வேறு

உருப்புடாதது_அணிமா on August 27, 2008 at 8:00 PM said...

ஐயோ ..
டமாசு டமாசு...

கார்க்கி on August 27, 2008 at 8:11 PM said...

ஐயோ ..
டமாசு டமாசு...

ஆமா ஆமா.... வந்ததுக்கு நன்றிங்கோ

உருப்புடாதது_அணிமா on August 27, 2008 at 8:14 PM said...

நன்றி சொன்னதுக்கு நன்றிங்கோ

 

all rights reserved to www.karkibava.com