Aug 20, 2008

சோக்கான ஜோக்குகள்


  உன்னை வருடத்தானோ
  என்னவோ
  வருடாவருடம் புயல்
  வங்கக்கடலில்
  சென்னையின் அருகே
  மையம் கொள்கிறது...

  என்னைக் கண்டு பயந்ததோ
  என்னவோ ??????????
  பின்
  ஆந்திராவை நோக்கி
  நகர்ந்து விடுகிறது...
 ___________________________________________________
  நாம்
  ஒன்றாய் எடுத்துக் கொண்ட‌
  புகைப்படங்களில்
  நம்
  இருவருக்குமிடையே உள்ள‌
  இடைவெளியில் அமர்ந்திருக்கிறது
  நம்முடைய காதல்...

___________________________________________________

உன்
வீட்டுக் கண்ணாடியை
பார்க்க வேண்டும் நான்..

உன்
மொத்த அழகையும்
உள்வாங்கிக் கொண்டு
இன்னும் எப்படி உடையாமலிருக்கிறது?
 ___________________________________________________

கவிதை எழுதுவது எளிது என்றேன்..

அப்படியா என்றாய்..

உன் அப்பனுக்கே அது தெரிந்திருக்கிறதே!!!!

___________________________________________________

     தலைப்பு எதுக்குனு கேட்கிறீங்களா? என் நண்பன் ஒருவனிடம் என் கவிதைய படிடானு சொன்னேன்... "ஜோக்கடிக்காதடா..இதப் போய் கவிதைனு" சொன்னான்..அதான் அப்படி வச்சிட்டேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க?

13 கருத்துக்குத்து:

Sundar on August 20, 2008 at 3:29 PM said...

//உன்னை வருடத்தானோ
என்னவோ
வருடாவருடம் புயல்
வங்கக்கடலில்
சென்னையின் அருகே
மையம் கொள்கிறது...

என்னைக் கண்டு பயந்ததோ
என்னவோ ??????????
பின்
ஆந்திராவை நோக்கி
நகர்ந்து விடுகிறது...
//
:) நல்லா இருக்கு. கவிதையான்னு எனக்கு தெரியாது.

கார்க்கி on August 20, 2008 at 3:39 PM said...

அட ஏதோ ஒன்னுங்க நல்ல இருக்குல்ல? அது போதும்... சரியா வந்துடறீங்க சுந்தர்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே...

Anonymous said...

he he he inga engalapathu bayanthu, anga ungala pakka varuthupa

கார்க்கி on August 20, 2008 at 3:54 PM said...

//he he he inga engalapathu bayanthu, anga ungala pakka varuthupa//
யுவா,இத நான் எழுதும்போது சென்னையிலதான் இருந்தேன்..இப்பொதான் ஹைதராபாத் வந்தேன்..

Bleachingpowder on August 20, 2008 at 4:37 PM said...

நாங்கெல்லாம் உங்க ப்ளாகிற்கு வரது பிடிக்கலைனா நேரடியா சொல்லிடுங்க...அதுக்காக இப்படியெல்லாம் பழிவாங்காதீங்க கார்க்கி :)

கார்க்கி on August 20, 2008 at 5:00 PM said...

//நாங்கெல்லாம் உங்க ப்ளாகிற்கு வரது பிடிக்கலைனா நேரடியா சொல்லிடுங்க...அதுக்காக இப்படியெல்லாம் பழிவாங்காதீங்க கார்க்கி :)//

அதுக்காகத்தானே ஜோக்குகள் என்று சொல்லியிருக்கிறேன்...உங்களுக்கு சிரிப்பு வரலயா? அப்படின்னா கவிதைனு நினைச்சுக்கோங்க... வந்தமைக்கு நன்றி நண்பரே!!

KA.... said...

//நாம் ஒன்றாய் எடுத்துக் கொண்ட‌ புகைப்படங்களில்
நம் இருவருக்குமிடையே உள்ள‌
இடைவெளியில் அமர்ந்திருக்கிறது நம்முடைய காதல்... //

Superb... entha varigalai unggal verai kavithai'il paditha nyabaken eruku. Rite thana Karki???

KA...

KA.... said...

//கவிதை எழுதுவது எளிது என்றேன்..
அப்படியா என்றாய்..
உன் அப்பனுக்கே அது தெரிந்திருக்கிறதே!!!!//

Hahaha...kavithai manen, nengga sollunga ethu enna kavithai ah??

KA...

கார்க்கி on August 20, 2008 at 5:54 PM said...

//
Superb... entha varigalai unggal verai kavithai'il paditha nyabaken eruku. Rite thana Karki???/

இருக்கக் கூடும்..ஆனால் பிளாகில் இல்லை...

ஜி on August 21, 2008 at 2:11 AM said...

//கவிதை எழுதுவது எளிது என்றேன்..

அப்படியா என்றாய்..

உன் அப்பனுக்கே அது தெரிந்திருக்கிறதே!!!!

//

Superu...

கார்க்கி on August 21, 2008 at 10:03 AM said...

வந்தமைக்கு நன்றி ஜி!!

KA.... said...

Nenga eppothum kadhal patti than eluturingal.
Oru matralku...'Malai' patti oru kavidhai elutungal Karki.
Illa nah malai n kadhal sethu oru kavidhai elutungal.

விக்னேஷ்வரி on August 24, 2009 at 8:28 AM said...

என்ன இது.... :(((

 

all rights reserved to www.karkibava.com