Aug 16, 2008

என்னை யாராவது கொலை செய்யுங்களேன்!!!


சில நாட்களை நாம் குறித்துக் கொள்ள விரும்புகிறோம்.சில நாட்களை நம் வாழ்க்கை நாட்குறிப்பிலிருந்து கிழித்து விட விரும்புகிறோம்.அப்படி ஒரு நாளாய்த்தான் நேற்று ஆகிவிட்டது எனக்கு. எதற்கு, என்ன காரணம் என பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் நானில்லை. தீயினார் சுட்ட புண் எனத் தொடங்கும் வள்ளுவர் வாக்கு உண்மையென அனைவர்க்கும் தெரிந்தாலும் இத்தகைய தருணங்களில் அது ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. நான் பேசியதும், என்னை நோக்கி பேசப்பட்டதும் அவ்வகையே. என் வார்த்தைகள் எதிர்வாதியின் பேச்சுக்கான பதில் தான் என்ற போதும் அப்படி செய்திருக்க கூடாதுதான்.என்ன செய்யலாம்? என்ன நடந்தது என்று சொல்லாமல் உங்களிடம் புலம்புவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? போகட்டும் என்னை ஏதவாது யாராவது செய்யுங்கள்.
மெல்ல என் நரம்புகளை மட்டும் என் உடலலிருந்து வெளியெடுத்து துண்டுதுண்டாய் நறுக்குங்கள். இன்னுமொருவர் கறி வெட்டுபவன் கோழியின் தலையை பக்குவமாக திருகுவதைப் போல் அல்லாமல் பச்சாதாபமில்லாமல் திருப்புங்க‌ள்.என் கையை ஒரு கட்டையின் மீது வைத்து சமையற்கலைஞர் கொத்தவரங்காய் நறுக்குவது போல் வெட்டுங்கள்.உங்களில் பலமானவர் யாரேனுமிருந்தால் ஒரு பெரிய கல்லை என் காலின் மீது போடுங்கள். ஜனா, ரெட் போன்று படங்களைப் பார்த்து மெல்ல சாக நான் விரும்பவில்லை. IRREVERSIBLE படத்தில் வருவதைப் போல் தீயணைப்பானைக் கொண்டு என் முகத்தை அடையாளம் தெரியாமல் சிதையுங்கள்.என் முகம் தரை மட்டும் ஆகும் வரை அடித்துக் கொண்டே இருங்கள். என் கை நகங்களைக் கொறடாக் கொண்டு தனியே எடுத்து விடுங்கள். முடிந்தால் ஒரு கத்திக் கொண்டு சிதைந்த தலையைத் தனியே எடுத்து என்னை முண்டமாக்கி விடுங்கள். இன்னும் வேறுக் கொடூர முறைத் தெரிந்தால் சொல்லுங்களேன்... வேண்டாம் செய்யுங்களேன்..என்ன சொல்கிறேன் என்றால் 'அய்யோஎன்னை யாராவது கொலை செய்யுங்களேன்!!!.. நிஜமாய்த்தான் சொல்கிறேன்..

10 கருத்துக்குத்து:

sridhar said...

என்னடா இது?

கிரி on August 16, 2008 at 10:23 AM said...

கார்க்கி என்ன ஆச்சு? பொறுமையா இருங்க :-(

Anonymous said...

oru naal leavelai ennapa aachu inthalavukku?

Aruna on August 16, 2008 at 11:32 AM said...

ஏனப்பா இந்தக் கொலை வெறி?sorry......தற்கொலை வெறி...???கொஞ்சம் அமைதி...
அன்புடன் அருணா

கார்க்கி on August 16, 2008 at 2:28 PM said...

உங்கள் அன்புக்கு நன்றி கிரி,அருணா.வேறு எதுவும் சொல்வதற்கில்லை

KA.... said...

Karki,oru paadel than enaku nyabagem varugarathu. athu ungalluku samarpanem seigiren..

'vaalkai endraal aaiyarem erukum...vaasaltorum veetanai erukum...vantae tunbam ethu vendralum... vaadi nindral ooduvathu illai...unaku kile ullavar koodi..ninaithu paatu nimmadi nadhu...nalai polutai eraivanaku alitu..nadekum valyil amaiti teedu...'

KA...

KA.... said...

unggal 'valkai' (July 21st 2008) yendra kavitahi tirimbi padigal Karki..

KA...

மங்களூர் சிவா on August 16, 2008 at 11:50 PM said...

ஹெள கேன் ஐ எல்ப் யு?

:))))))))))))

கார்க்கி on August 17, 2008 at 8:27 AM said...

//ஹெள கேன் ஐ எல்ப் யு?//

அடிக்கடி வாங்க...ஆதரவு தாங்க...என்னால தீர்க்க முடியாத பிரச்சனைகளை என் அண்ணன்கிட்ட விட்டுருவேன்..அவரு பார்த்துப்பாரு..யார்ரா? நெப்போலியன் :)))))))

Bleachingpowder on August 19, 2008 at 2:06 PM said...

பி ஹப்பி...கூல் டெளன்.. கூல் டெளன்...கூல் டெளன்..

 

all rights reserved to www.karkibava.com